Home Blog Page 5821

அ.தி.மு.க. அரசு கிடப்பில் போட்டுள்ள திட்டங்களை நிறைவேற்ற மத்திய அமைச்சருக்கு கருணாநிதி கோரிக்கை !

தமிழ்நாட்டில் கிடப்பில் போடப்பட்டுள்ள ரெயில் திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு மு.க.கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். மத்திய அமைச்சருக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது :- புதிய வெளிப்புற உள்கட்டமைப்புகள் விரிவாக்கம் மற்றும் புதிய பகுதிகளுக்கு இணைப்பு தொடர்பாக தாங்கள் மேற்கொண்டுவரும் ஆற்றல் வாய்ந்த நடவடிக்கைகளை நான் அறிந்துள்ளேன். சில சவால்களை எதிர்கொண்டு தாங்கள் மேற்கொண்ட சில குறிப்பிட்ட முயற்சிகள் சேவையை மேம்படுத்தியுள்ளதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன். ரயில்வே துறையை மேலும் பொறுப்பு வாய்ந்த நிறுவனமாக உருவாக்குவதற்கு தாங்கள் மேற்கொண்டு வரும் அனைத்து முயற்சிகளிலும் தாங்கள் வெற்றிபெற நான் வாழ்த்துகிறேன். தமிழ்நாட்டில் ஏராளமான திட்டங்கள் தடைபட்டு நிற்பதை குறிப்பிடாவிட்டால் நான் என்னுடைய கடமையில் இருந்து தவறியவன் ஆவேன். இந்திய ரயில்வேயில் நீண்ட காலமாகவே தமிழ்நாட்டுக்கு அதற்குரிய பங்கு அளிக்கப்படாமலே இருந்து வருகிறது என்பதைக் குறிப்பிடுவதற்கு என் இதயம் வேதனை அடைகிறது. அதற்கு நிதி பற்றாக்குறை, ஒப்பந்தங்களை இறுதி செய்வதில் சிக்கல்கள், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் என்று அந்தத் திட்டங்களை கைவிடுவதற்கான நிரூபணங்கள் என்று காரணங்கள் கூறப்பட்டாலும், அவற்றுக்கு தீர்வே இல்லையா என்பதில் நான் முழுமையாக மனநிறைவு அடையவில்லை. சென்னை கடற்கரை – கொருக்குப்பேட்டை மூன்றாவது இருப்புப்பாதை சென்னை சென்டிரல்–பேசின்பிரிட்ஜ் 5–வது மற்றும் 6–வது இருப்புப்பாதைகள் அத்திப்பட்டு–புதூர் 88.3 கி.மீ. நீளமான புதிய இருப்புப்பாதை, சென்னை கடற்கரை – அத்திப்பட்டு நான்காவது இருப்புப்பாதை ஆகிய மேற்கண்ட திட்டங்கள் எல்லாம் ஏற்கனவே இணைப்புகளை மேம்படுத்தவும் அதன் மூலம் சென்னை புறநகர்ப் பகுதிகளில் நெரிசலைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டவை. ஆனால் அவை இப்போது திரும்பப்பெறப்பட்டுள்ளன. ரயில்வேயால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமுக்கிய திட்டங்களாவது :- கும்பகோணம்–திருவாரூர்–ஓமலூர்–மேட்டூர் அணை, ஈரோடு–பழனி, ஸ்ரீபெரும்புதூர்–கூடுவாஞ்சேரி, அருப்புக்கோட்டை வழியாக மதுரை–தூத்துக்குடி, பெங்களூரு–சத்தியமங்கலம், திண்டிவனம்–திருவண்ணாமலை, மதுரை–போடிநாயக்கனூர், மாமல்லபுரம் வழியாக சென்னை–கடலூர் மற்றும் திண்டிவனம்–நகரி ஆகியவையாகும். இவற்றுள் சில திட்டங்கள் 1996–1997 மற்றும் 1998–1999–ம் ஆண்டுகளில் அறிவிக்கப்பட்டவையாகும். இந்தத் திட்டங்கள் செயல்பாட்டுக்கு ஏற்ற நிலை சாத்தியமானதா என்ற ஆய்வுகள் தொடக்க நிலைப்பணிகள் அனைத்தும் அறிவிக்கப்படுவதற்கு முன்பே நிறைவு செய்யப்பட்டவையாகும். இத்தகையத் திட்டங்களை நிறுத்துவது எந்த அரசுக்கும் சரியானதாகாது. இது குழந்தையிடம் ஒரு பழத்தைக் காண்பித்துவிட்டு, அந்தக் குழந்தை மனம் வேதனையடையும் வகையில் அதைத் திடீரென்று மறைத்து வைப்பது போன்றதாகும். 2004–2009–ம் ஆண்டு காலத்தில் ஈரோடு–பழனி திட்டத்தை செயல்படுத்துவதற்கு நானே தனிப்பட்ட முறையில் முயற்சிகளை மேற்கொண்டேன் என்று இங்கு நான் குறிப்பிட்டால் அது பொருத்தமற்ற இடத்தில் கூறிய கருத்தாகாது. திருப்திகரமான முறையில் திட்டத்தைத் தொடங்குவதற்கான அனைத்து நடைமுறைகளும் நிறைவு செய்யப்பட்ட பிறகு, அப்பகுதியில் வாழும் மக்களுக்கு அதிருப்தி அளிக்கும் வகையில் அத்திட்டம் நிறுத்தப்பட்டது. மேற்கண்ட திட்டங்களை எல்லாம் மீண்டும் தொடங்குவதற்கு அன்புடன் தாங்கள் கவனம் செலுத்தி, அவற்றுக்குப் புத்துயிர் அளிக்க, வரவிருக்கும் ரெயில்வே நிதிநிலை அறிக்கையில் தீவிரமாக நடவடிக்கையை தாங்கள் மேற்கொண்டால் தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சியடைவதோடு தங்களுக்கு மிகுந்த நன்றியோடும் இருப்பார்கள். நான் தனிப்பட்ட முறையில் தங்களுடைய விரிவான கடிதத்திற்கு நன்றியுடையவனாக இருக்கிறேன் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார் .

அ.தி.மு.க. அரசு தான் மக்களின் வாழ்க்கை நாசமானதிற்க்கு முழு பொறுப்பு : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் அவரது முகனூல் பக்கத்தின் பதிவில் தெரிவித்துள்ளதாவது:–
சென்னையில் ஏற்பட்ட திடீர் கனமழை தான் வெள்ள பாதிப்புக்கு காரணம் என்று அ.தி.மு.க. அரசு பச்சை பொய் சொல்கிறது என நான் திரும்ப திரும்ப கூறி வந்திருக்கிறேன்.
இதை உறுதி செய்யும் விதத்தில் இப்போது மத்திய அரசு அறிக்கை வெளிவந்துள்ளது. அதில் கனமழை பெய்யும் என்று 48 மணி நேரத்திற்கு முன்பே தமிழக அரசுக்கு எச்சரிக்கை செய்தும் மாநில அரசு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதுதான் வெள்ள பாதிப்புக்கு காரணம் என்று வெளிப்படையாக குற்றம் சாட்டியிருக்கிறது மத்திய அரசு.
தமிழக அரசின் பொய்யினை இந்த அறிக்கை தகர்த்து விட்டது. இது இயற்கை பேரழிவு அல்ல என்ற உண்மையும் இப்போது வெளிவந்துவிட்டது. அ.தி.மு.க. அரசு உருவாக்கிய செயற்கை பேரிடர் இந்த மழை வெள்ள பாதிப்பு என்று தி.மு.க. கூறிவந்தது தற்போது நிரூபிக்கப்பட்டுவிட்டது. தி.மு.க. சொன்னதை இப்போது மத்திய அரசே உண்மை என்று உறுதி செய்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.
மத்திய அரசின் இந்த அறிக்கைக்கும் தன் தோல்விக்கும் அ.தி.மு.க. அரசு என்ன பதில் சொல்லப் போகிறது?. உரிய கால அவகாசம் கிடைத்தும் முன் அறிவிப்பு இன்றி செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீரை அ.தி.மு.க. அரசு திறந்துவிட்டதால் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை நாசமானது.
இதற்கு அ.தி.மு.க. அரசே முழு பொறுப்பு. ஆகவே உண்மையை மக்களுக்கு அறிவிக்க உடனடியாக நீதி விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துவதாக மு.க.ஸ்டாலின்அவரது முகனூல் பக்கத்தின் பதிவில் கூறியுள்ளார்.

மக்களை சந்திக்கும் பயணத்தின் முடிவில் தனித்தன்மை இழந்துவிடாமல் தேர்தல் கூட்டணி அறிவிப்பு : ஜி.கே.வாசன்

 
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் மக்களை சந்தித்து வரும் சுற்றுப் பயணத்தின் இறுதியில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்
 
சென்னையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தொண்டர் அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
அப்போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்ததாவது :-
 
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் த.மா.கா. சார்பில் போட்டியிட விரும்புவோர், தங்களது விருப்ப மனுக்களை வரும் 10–ந்தேதி முதல் 12–ந்தேதி வரை சமர்ப்பிக்கலாம். விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ள அந்தந்த மாவட்டங்களிலேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
எனது சுற்றுப்பயண முடிவில், அதாவது இந்த மாத இறுதியில் தேர்தல் கூட்டணி குறித்து இறுதி முடிவு வெளியாகும். கூட்டணி குறித்து கட்சி நிர்வாகிகளோடும், பொதுமக்களிடமும் பேசிவருகிறேன். த.மா.கா.வின் தனித்தன்மை இழந்துவிடாமல் தேர்தல் முடிவு எடுப்போம்.
 
தமிழ் மாநில கட்சி சார்பில் மக்களை சந்திக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறேன். இதுவரை 137 தொகுதி மக்களை சந்தித்துள்ளேன். இம்மாதம் இறுதி வரை சுற்றுப்பயணம் மேற்கொண்டு மீதமுள்ள தொகுதி மக்களை சந்திப்பேன்.
 
இந்த சந்திப்பின் இறுதியில் வரவிருக்கும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் தமாகா இடம் பெறும் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்.
 
தேர்தல் நேரத்தில் தொண்டர்களைத் திரட்டி வலிமையை காட்டும் மாநாடு நடத்துவதை தமாகா ஏற்கவில்லை.
தொண்டர் அணி நிர்வாகிகள் தேர்தல் நேரத்தில் மட்டுமல்ல, பிற நேரங்களிலும் பாராட்டும் வகையில் உழைத்து வருகிறார்கள். குறிப்பாக கடந்த மழை, வெள்ளத்தின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரிதும் உதவி செய்தார்கள். அவர்களைப் பாராட்டுகிறேன்.
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையா வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில் அதன் பயனை நுகர்வோருக்கு வழங்காமல் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தி வருகிறது. இதை திரும்பப்பெற்று, விலை குறைப்பின் பலன் நுகர்வோருக்கு சென்றடைய வேண்டும் என்று ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் .

நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பந்து வீச்சை தேர்வு செய்தது

நியூஸிலாந்து-ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையே ஆக்லாந்து நடந்து  வரும் முதல் ஒரு நாள் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது. சேப்பல்-ஹேட்லி கோப்பைக்கான இந்தத் தொடர், நியூஸிலாந்து கேப்டன் பிரென்டன் மெக்கல்லம் விளையாடும் கடைசி ஒரு நாள் தொடராகும். இந்தத் தொடருக்குப் பிறகு நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரோடு மெக்கல்லம் ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

அறிவுத் திறனை வளர்த்துக் கொள்ள ஐந்து எளிய வழிகள்

 

  1. 1.தொலைக்காட்சியைப் பார்ப்பதை குறைத்துக் கொள்ளுங்கள்.

மிகவும் கடினமான காரியம். தொலைக்காட்சி முன்னால் ஆடாமல் அசையாமல் நாள் முழுவதும் உட்காருவதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள். தொலைக்காட்சி பார்ப்பதில் என்ன தவறு என்பவர்களுக்கு: தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கும்போது  நமது மூளை மூடிக்கொண்டு விடுகிறது. அதீதமான கற்பனைகள், நடைமுறைக்கு ஒவ்வாத கதைக்களம் எல்லாம் மூளையை சோர்வடையச் செய்கின்றன. நமது மனமும் கெடுகிறது.  தொலைக்காட்சி பார்க்கும் அத்தனை நேரமும் எந்தவிதமான ஆரோக்கியமான பலனும் இல்லாமல் நமது உடலின் ஒரு பகுதியின் சக்தியை செலவழிக்கிறோம் நாம்.

 

 2.தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்

உடற்பயிற்சி செய்யும் நேரத்தில் வேறேதாவது உருப்படியாகச் செய்யலாமென்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் உடற்பயிற்சி செய்யும் நேரத்தில் நாம் நமது உடலைப் பற்றி பலவற்றைக் கற்கிறோம். உடற்பயிற்சிக்குப் பின் நமது வேலைத்திறன் பன்மடங்காக உயர்கிறது. நமது  மனஅழுத்தம் குறைந்து புதிய சக்தி உண்டாகிறது. நமது கவனம் அதிகரிக்கிறது. உடல் புத்துணர்வு பெறுகிறது.

 

 3.சவாலான புத்தகங்களைப் படியுங்கள்.

வழக்கமான, பிரபலமான புத்தகங்களைப் படிக்கவே பலரும் விரும்புகின்றனர். ஆனால் இந்த மாதிரியான புத்தகங்கள் உங்கள் புத்திசாலித்தனத்தை அதிகரிக்காது. உங்களது கற்பனையையும், எழுத்து வல்லமையையும் அதிகரிக்கச் செய்யும் புத்தகங்களை படியுங்கள். உங்கள் முழு கவனத்தையும் ஈர்க்கும் புத்தகங்களை வாசியுங்கள். இத்தகைய புத்தகங்கள் உங்களது உலகக் கண்ணோட்டத்தை மாற்றும். அழகான ஆங்கிலத்தில் உங்களை ஆழமாக சிந்திக்கவும் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கவும் உதவும்.  உங்களுக்குத் தெரியாத வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்து கொள்ளத் தயங்காதீர்கள். அடர்த்தியான வாசகங்களைக் கண்டு பயம் வேண்டாம். நிதானமாக புரியாத இடங்களை திரும்ப வாசிப்பதன் மூலம் ஒரு எழுத்தாளரின் நடை உங்களுக்கு பழகிவிடும்.

இப்படிப்பட்ட புத்தகங்களை வாசித்துப் பழகிவிட்டால், சும்மா பக்கங்களை திருப்பித்திருப்பி படித்துக் கொண்டே போகும் புத்தகங்களை மறுமுறை படிக்க மாட்டீர்கள். துப்பறியும் நாவல்களை விட புதிய சிந்தனைகளை பெருக்கும் புத்தகங்கள் படிக்க படிக்க அலுப்புத் தட்டாதவை.

 

 4.சீக்கிரம் தூங்கி சீக்கிரம் எழுங்கள்

நமது நினைவாற்றல் குறைய போதிய தூக்கமின்மையே காரணம். இரவு சீக்கிரம் தூங்க சென்று எட்டு மணிநேரத்திற்கு மேல் தூங்காமல் இருந்தால் மனம் உடல் இரண்டுமே புத்துணர்ச்சி பெறும். இரவு வெகு நேரம் கண்விழித்திருந்து, காலையில் நேரம் கழித்து எழுவது உங்களை சோம்பேறிகளாக்கும். விடியற்காலை பொழுது அமைதியைக் கொடுப்பதுடன், நமது உழைக்கும் திறனையும் அதிகரிக்கச் செய்யும்.

ஒரு பத்து அல்லது இருபது நிமிட குட்டித்தூக்கம் உங்கள் களைப்பைப் போக்கும். அதற்கு மேற்பட்ட நேரம் தூங்குவது சோம்பேறித்தனத்தை கொடுக்கும்.

 

  5.தனிமையில் இருங்கள்

நமது வாழ்க்கை வெகு வேகமாகப் நகர்ந்து கொண்டே இருப்பதால் பல சமயங்களில் நமக்கு தனிமை என்பதே கிடைப்பதில்லை. அதை நாம் உணருவதுமில்லை. பல விஷயங்களில் மனம் செல்லுவதால் கவனச் சிதறல் ஏற்படுகிறது. தனிமை நமக்கு யோசிக்கவும், வேண்டாத எண்ணங்களை விலக்கவும் உதவுகிறது. நமது நினைவுகளை ஒருங்கிணைக்க உதவுகிறது. நமது பொறுப்புகளை வரிசைப்படுத்தி எது முக்கியம் எது முக்கியமில்லை என்று பகுத்துணர வைக்கிறது. இதனால் அனாவசியமான விஷயங்கள் உங்களை தொந்திரவு செய்யாமல் இருக்கும். உங்கள் மனமும் இலேசாக இருக்கும்.

 

இதற்காக தனிமையில் காலை மடக்கி உட்கார்ந்துகொண்டு ஓம்ஜபிக்க வேண்டுமென்பதில்லை. உங்களுக்கு தனிமையைக் கொடுக்கும் உங்களைப் பற்றி சிந்திக்க வைக்கும் ஒரு வாய்ப்பு தேவை. தனியாக நடக்கலாம். மிகச் சிறந்த எண்ணங்கள் நடைப்பயிற்சியின் போது தோன்றுகின்றன. உங்களுக்கு எந்த முறை சிறந்தது எனப் படுகிறதோ அதை செய்யுங்கள்.

Experiences with Maha Periyava: Prayaschittam for going abroad!

Experiences with Maha Periyava: Prayaschittam for going abroad!

By the blessings of Sri Maha Periyava, I have been able to do brain operations in India continuously in the government General Hospital in Madras from 1964 to 1992 and after I retired from government service, I have been in private hospitals for more than a decade.

What is perhaps equally important is that I have been able to involve throughout these forty years in training several dozens of young doctors in neurosurgery in the General Hospital, Chennai from 1964 to 1992 and in Apollo Hospital, Chennai recognized for DNB qualification in neurosurgery from 1992 onwards.

In those days when a Brahmin boy went abroad and returned he was supposed to go to Rameswaram and have a bath in the ocean for purification. Somehow although we are an orthodox family, I could not do this. Soon after my return I had to undergo surgery for hernia. Then I got married. Later I became very busy in hospital work and I could never get the time to plan a trip to Rameswaram.

Sometime in 1975 I went to Kancheepuram with my younger sister and niece to have darsanam of Maha Periyava. By that time I had already been abroad several times. An elderly Brahmin gentleman who had just come from Nigeria was present too to have darshan. There was a crowd of about sixty or seventy persons and Maha Periyava talked for about an hour on my problem of going to Rameswaram.

I am giving below the gist of the conversation His Holiness had with me.

His Holiness, while addressing the crowd of devotees: “This elderly gentleman had come from Nigeria to ask me if he should do Prayaschittam for going abroad”. Turning to me he smiled “Probably, Kalyanaraman also had come because he has a selfish interest in this as to whether he should also go to Rameswaram”.

His Holiness: “How many versions of Ramayanam are there in India?”

SKR: “Probably about a hundred”.

His Holiness: “There are about 300 languages and dialects in this country and probably an equal number of versions of Ramayanam. How did Rama and Sita return from Lanka to Ayodhya?”

SKR: “By Pushpakavimanam”.

His Holiness: “That is right. It is very interesting that neither in Valmiki Ramayanam nor in any of the other 300 versions of Ramayanam there is any mention that Rama and others did prayaschittam after returning from Lanka. You may say that they travelled by air and prayaschittam is required only if you travel by sea.

Then He mentioned the name of a Frenchman and asked if I had heard about him. I replied in negative.

His Holiness: “This man was a historian. He lived in India at the time of early Chola kings. At that time one of the daughters of the reigning King could not get suitable bridegroom in India. In those days Hindu Kings were ruling over countries now known as Cambodia, Thailand, and Indonesia etc.” Have you been to Bangkok?

SKR: Yes.

HH: “Have you been to the famous Buddha temple there, which contains many pictures depicting the story of Ramayana in the prakarams of the temple?”

SKR: Yes.

HH: “So the Chola king in south India chose a prince in Cambodia as his son-in-law. The prince came to India and married the princess. The royal couple accompanied by a large retinue of purohits, maids in waiting and servants returned by ship to the bridegroom’s kingdom. After staying a few days there the purohits returned by ship to India. This French historian has given a very detailed day by day account of this marriage in his book. He has not mentioned that the purohits did Prayaschittam either on reaching Cambodia or on returning to India.

Then His Holiness asked me: “How long does it take to go to America nowadays?

SKR: It would take about eighteen hours and if there is a break of journey in London about twenty four hours.

Then His Holiness enlightened us:

That is the real point. In the Shastras it has been specifically stated that if one did not do nityakarmanushtanam (daily religious rituals like sandhya vandanam, samitadanam, agnihotram) for three days continuously one had to do prayaschittam. In those days practically everyone did their daily religious duties. The only time they could not do so was when they travelled by sea as pure fresh water was not available for bath. That is why if they travelled by sea (for more than three days), they had to do prayaschittam. Probably the purohits reached Cambodia in two days and Rama reached Ayodhya in a few hours. Therefore, there was no need for prayaschittam.

If you apply that rule today, then some people in the present audience will need to do prayaschittam several times a year for omitting to do sandhya vandanam for three days in succession! One need not go abroad to qualify oneself for doing prayaschittam!

This is again a remarkable example of how His Holiness interprets the scriptures and gives simple anecdotes step by step to illustrate the point discussed, to a lay audience. Needless to say I was very much relieved that I had not “sinned” by not going to Rameswaram! The occasion also reinforced my resolve never to omit Sandhya Vandanam or reciting the Gayathri manthram even for a single day.

His Holiness continued:
Some people say that you should do prayaschittam only if you go to another island. Is Africa an island?

SKR: Yes.

His Holiness: No, Africa and Asia form single large mass of land. Only about a hundred years ago when the Suez Canal was dug by the Englishman, it technically became an island.

In fact Australia, Asia, Africa and Europe were all one large land mass and in the millions of years that have gone by, the land mass drifted away from one another with the oceans coming in between them and formed individual continents.

Here again was another example of the vast knowledge of history, geography and geology that His Holiness had mastered.

He concluded by saying that neither the gentleman from Nigeria nor Dr. Kalyanaraman need to do prayaschittam because they have travelled for less than three days to reach India but everyone certainly had to do it if they had omitted Sandhya Vandanam for three days or more!

Author: Prof S.Kalyanaraman

பெண் காவல்துறை தலைவருக்கு 29 வருடங்களாக பாலியல் தொந்தரவு கொடுத்த காவல் ஆணையாளர் !

மாநிலத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி எனும் பெருமையை பெற்று கேரள காவல்துறையில் மாநில குற்ற ஆவணக் காப்பகத்தின் தலைவராக தற்போது ஸ்ரீலேகா,பணியாற்றி வருகிறார்.
 
அவருக்கு அந்த மாநிலத்தில் போக்குவரத்து ஆணையாளராக பணியாற்றிவரும் டோமின் தச்சங்கரி,எனும் அதிகாரி 29 வருடங்களாக பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக ஸ்ரீலேகா அவரது முகனூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 
மேலும் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஸ்ரீலேகா முகனூல் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
 
கடந்த 1987ஆம் ஆண்டு குடிமைப் பணிகள் தேர்வுக்கு நான் பயிற்சி பெற்ற காலத்தில் இருந்தே தச்சங்கரி எனக்கு தொல்லை கொடுத்து வருகிறார். அவரது தொல்லைகளைக் கடந்த 29 ஆண்டுகளாகத் தாங்கிக் கொண்டு பணியாற்றி வருகிறேன்.
 
 
இதனிடையே, எனக்கு எதிராக லஞ்ச வழக்கு விசாரணைக்கு ஊழல் கண்காணிப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்து ஆணையராக நான் பதவி வகித்த காலத்தில், தனியார் பள்ளிப் பேருந்து ஒன்றுக்கு உரிமம் வழங்கியபோது நான் லஞ்சம் வாங்கியதாக என் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இது, என்னை வழக்கில் சிக்கவைப்பதற்காக, தச்சங்கரி தீட்டியிருக்கும் சதித் திட்டமாகும்.
 
 
அதே நேரத்தில், அரசுக்கு எதிராகவோ, நீதிமன்றத்துக்கு எதிராகவோ அல்லது காவல் துறைக்கு எதிராகவோ எதுவும் நான் கூறவில்லை. இவ்வாறு அவர் பதிவு செய்துள்ளார்.
 
பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டு குறித்து போக்குவரத்து ஆணையாளர் டோமின் தச்சங்கரி செய்தியாளர்களிடம் கூறியதாவது :-
 
“யாருக்கு யார் தொல்லை கொடுக்கிறார்கள் என்பதை துறையில் உள்ள அனைவரும் அறிவார்கள்; ஸ்ரீலேகாவுக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு தலைமைச் செயலர் ஜீஜி தாம்சனுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறேன், என்று செய்தியாளர்களிடம் டோமின் தச்சங்கரி தெரிவித்துள்ளார்.
 
 
நாட்டின் பல பகுதிகளில் இதுபோன்ற புகார்கள் எழுந்தவன்னம் உள்ளது. காவல் துறையில் பெண் அதிகாரிகளுக்கு ஒரு சில உயர் அதிகாரிகள் பாலியல் தொந்தரவு கொடுப்பது தொடர்ந்துக்கொண்டே தான் இருக்கிறது.

அம்மா! அம்மா! எங்கள் குமுறலையும் கொஞ்சம் கவனியுங்க !

 
தமிழக காவல் துறையில் பணியாற்றும் பெரும்பாலோனர் காவலர்கள் காவலர்களாகிய எங்கள் குமுறலையும் முதலமைச்சர் அம்மா கண்டுகொள்ளவதே கிடையாது என எவரை பார்த்தாலும் சொல்லி செய்வது அறியாது வெகு வருடங்களாக புலம்பி கொண்டேதான் உள்ளனர்.
 
காவல் துறையில் பணியாற்றுபவர்கள் பணி தான் மிகவும் கடினமானது என்றாலும் அது மிகையாகாது. அந்த துறையில் பணியாற்றுபவர்களுக்கும் பல சொல்ல முடியாத பல துயரங்கள் இருந்து கொண்டு தான் உள்ளது.
 
இந்த நிலையில் தமிழக காவல் துறையை முழு கட்டுபாட்டில் வைத்து இருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் பல வருடங்களாக அவர்களது பிரச்னைகளை தீர்த்து வைக்க தொடர்ந்து பலமுறை கோரிக்கை விடுத்து கொண்டே தான் உள்ளனர். கோரிக்கை விடுத்தும் எவ்விதமான பலனும் கிடைக்காததால் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மீது வெறுப்பு அடைந்து சமூக ஊடகங்களை பயன் படுத்தி அவர்களது கோரிக்களை பொது மக்களுக்கு சுட்டி காட்டி தெரிவிக்கும் நோக்கில் வெளியிட ஆரம்பித்து விட்டனர்.
 
மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு காவலர்களின் பணிவான வேண்டுகோள்! எனும் தலைப்பில் கடந்த சில வாரங்களாக வாட்ஸ்அப்பில் வைரலாகப் பரவி வரும் தகவலில் கூறியுள்ளதாவது :-
 
‘‘10-ம் வகுப்பு தகுதி அடிப்படையில் வேலைக்குச் செல்லும் அரசு ஊழியர்களுக்கு தர ஊதியம் 2,400 ரூபாய் வழங்கப்படுகிறது. ஆனால், அதே தகுதியில் காவலர் பணியில் சேருபவர்களுக்கு 1,900 ரூபாய் மட்டுமே
வழங்கப்படுகிறது. இந்த ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும்.
 
காவலர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதவி உயர்வு வழங்கப்படுவதை 7 ஆண்டுகளாகக் குறைக்க வேண்டும். பயணப்படி 10 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாக உயர்த்த வேண்டும். உணவுப்படியை 200 ரூபாயிலிருந்து 400 ரூபாயாக உயர்த்த வேண்டும். 8 மணி நேர வேலை, அனைத்து மாவட்டங்களிலும் காவலர் நல அமைப்பு ஏற்படுத்த வேண்டும். ஒரு காவலருக்கு ஒரு வேலை’’ என தமிழக காவல் துறையினரின் 9 கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.
 
அதோடு, சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக டி.கே. ராஜேந்திரன் கடந்த அக்டோபர் 13-ம் தேதி பொறுப்பேற்றபோது, ‘காவலர்களின் குறைகள் கனிவோடு பரிசீலிக்கப்படும்’ என்று கூறினார். அந்த வாக்குறுதி என்னவாயிற்று’’ என்று வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவரும்’ காவல் துறையினரின் குமுறல் பதிவில் கூறப்பட்டுள்ளது.
 
மேற்படியான பிரச்னைகள் தமிழகக் காவல் துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு இருப்பது உண்மைதான் என காவல் துறை உயர் அதிகாரிகள் பலர் கூறுகின்றனர்
.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழக காவல் துறையில் பணியாற்றுவோரின் கோரிக்களையும் நிறைவேற்ற வேண்டிய காட்டாயம் அதிமுக அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது..
 
 
அதிமுக அரசாங்கம் காவல் துறையினரின் கோரிக்களை நிறைவேற்றாவிட்டால் காவலர் மற்றும் அவரது குடும்ப அங்கத்தினர்களின் வாக்குகளை அதிமுக இழக்கும் என்றே கருதலாம்.
 

“பெரியவாளின் குழந்தைத் தன்மையும் பூகோள ஞானமும்”

 

ஸ்வாரஸ்ய சம்பாஷணை (ஒரு பகுதி)

( இஸ்ரேல் என்று ஒரு நாடு இருக்கிறதே யூத நாடு.அதைச் சுற்றி எத்தனை முஸ்லீம் தேசங்கள் இருக்கின்றன? இருபத்தாறு தேசங்கள். சிறிய நாடான இஸ்ரேல் பயப்படுகிறதா?”)

சொன்னவர்-எஸ்.மீனாட்சிசுந்தரம்
தொகுப்பாளர்-கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

(1971-கார்வேட்-சித்தூர் மாவட்ட காம்ப்)
 
எங்கள் வீட்டில் பெரியவாளைத் தங்கும்படி நான் வேண்டியவுடன் பெரியவர்கள் சொன்னார்கள்; “இந்த ஊரில் புதிதாக வீடு கட்டி குடித்தனம் வராமல் இருக்கும் வீடு ஏதாவது இருந்தால் சொல்லு. அங்கு நான் தங்கிக் கொள்கிறேன்.”

உடனே என் நண்பர் முதலியாரின் வீடு ஞாபகத்துக்கு வந்தது.(வீட்டிற்குப் பின்னால்) “இருக்கிறது” “நான் அங்கேயே தங்குகிறேன்,”

முதலியார் அவர்கள் மகாபெரியவாள் மீது வைத்திருந்த அத்தியந்த பக்தி அந்த மகானை அவருடைடைய வீட்டுக்கே அழைத்து வந்துவிட்டது.
முதலியார் புளகாங்கிதமடைந்தார்.

சுவாமிகள் புது வீட்டுக்கு வந்து,அறையில்  வைக்கோல் பரப்பச்செய்து அதில் சிரமபரிகாரம் செய்யத் தொடங்கினார்.

ஊர்மக்கள் வெகு ஆவலுடன் பெரியவாளைப் பார்க்க திரண்டனர்.பெரியவர்களுக்கு சிரமம் கொடுக்காமல் ஆரவாரமின்றி வரிசையாக மக்களை நிற்க வைத்து சுவாமிகளை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தார்,அப்பகுதி எம்.எல்.ஏ.ஸ்ரீ தியாகராஜன் அவர்கள்.

அடுத்தநாள் விடியற்காலை நாலு மணி இருக்கும்  கிணற்றடியில் சத்தம் கேட்டது.எங்கள் வீட்டுப் பின்புறம் உள்ள கிணற்றில் மகாபெரியவாள் தன்னுடைய மரத்திலான பாத்திரத்தைக் கொண்டு தண்ணீர் நிறைத்துக் கொண்டிருந்தார்கள்.

உடனே நான் அருகில் சென்றேன்.

“இதோ பார்த்தாயா…இந்த மரச்செம்பு உடைந்திருக்கிற கையைக் கிழிக்கிறது..” குழந்தை மாதிரி  பேசிக்கொண்டிருந்தார்.

பின் பல விஷயங்களைப் பற்றிப் பேசினார். “கிழக்கு வங்காள ரேடியோவில் தினமும் பகவத்கீதை வைக்கிறாளாமே…உனக்குத் தெரியுமோ?”

நான் சொன்னேன்,”இந்துக்களுக்குப் பாதுகாப்புக்  குறைவாக இருக்கிறது.மற்ற மதங்கள், முக்கியமாக இஸ்லாமும்,கிறிஸ்துவமும் உலகம் பூரா பரவியிருக்கிறது.அவர்களுக்கு ஒரு நாட்டில் கஷ்டம் என்றால் மற்ற நாட்டிலுள்ளவர்கள் உதவ  முன் வருகிறார்கள்.இந்துக்கள் மாத்திரம் பயந்துகொண்டே தான் வாழ வேண்டியிருக்கிறது”

“அப்படியா? இஸ்ரேல் என்று ஒரு நாடு இருக்கிறதே யூத நாடு.அதைச் சுற்றி எத்தனை முஸ்லீம் தேசங்கள் இருக்கின்றன? இருபத்தாறு தேசங்கள். சிறிய நாடான இஸ்ரேல் பயப்படுகிறதா?”

நான் பிரமிப்பின் எல்லைக்கே போய்விட்டேன். ஆசிரியரான எனக்கு,இவ்வளவு துல்லியமான பூகோள ஞானம் கிடையாது என்பதை வெட்கத்தோடு ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

மகா பெரியவாளின் பரந்த அறிவையும் மனோ தைரியத்தையும் வியந்து என் அறியாமையை நினைத்து வெட்கப்பட்டேன்.

காலையில் ஓர் உதவி ஆசிரியரை திருப்பதிக்கு அனுப்பி புதிதாகக் கமண்டலு முதலிய மரப்பாத்திரங்களை வாங்கிவரச் செய்தேன்.

அன்று மாலை புதுப்பாத்திரங்களைப் பெற்றுக்கொண்டு ரொம்ப சந்தோஷப்பட்டு, ” என்ன வழவழப்பாக இருக்கிறது…” என்று ஒரு குழந்தை எவ்வாறு புது விளையாட்டு பொம்மையை வாங்கி  ஆனந்தமடையுமோ அந்த ஆனந்தத்தை  வெளிப்படுத்திக் காட்டினார். மகா பாக்கியம்!

ஸாமீ! எம் மவனை காப்பாத்துங்க ஸாமீ!

ஸாமீ! எம் மவனை காப்பாத்துங்க ஸாமீ!

அப்போது நம்முடைய ஸ்ரீமடம் கும்பகோணத்தில் இருந்த ஸமயம் ! ஒருநாள் ஸ்ரீ சந்த்ரமௌலீஶ்வர பூஜை முடிந்து, தீர்த்த ப்ரஸாதம் குடுத்துவிட்டு, சிலருடன் பேசிக் கொண்டிருந்தார் நம் பெரியவா.

“ஸாமீ!….தெய்வமே!…..எம் மவனை காப்பாத்துங்க ஸாமீ !…”

திடீரென்று ஒரு குடியானவ பக்தர் அலறிக் கொண்டே பெரியவாளிடம் ஓடிவந்து, பாதங்களில் விழுந்து அழுதார்!

“என்னப்பா?…என்னாச்சு?…..”

“ஸாமீ ! எனக்கு ஒரே ஒரு மவன்….கறியாப்பில [கறிவேப்பிலை] கொத்தாட்டம்! வயல்ல ஸாப்பாடு ஸாப்ட்டுகிட்டு இருந்தான் ஸாமீ! அவனை பாம்பு கடிச்சிருச்சு ஸாமீ !……”

“ஸெரியா சொல்லு…..பாம்பு கடிச்சுதா?…..”

“மயக்கம் போட்டு விளுந்துட்டான் ஸாமீ! பாம்புக் கடிக்கி, மந்திரிக்கிறவங்க யாருமே இங்க இல்லீங்க ஸாமீ! காப்பாத்துங்க தெய்வமே!…”

பெரியவா எதுவும் பேசாமல், அவருடைய கையில் விபூதியைப் போட்டார்.

“பையனோட நெத்தில பூசு…..”

“ஸெரிங்க….”

“வீட்டுல அரப்பு, சீயக்கா பொடி இருக்கா?…”

“இருக்குங்க ஸாமீ !……”

“பையனோட ஒதட்டை பிரிச்சு, அவனோட வாய்ல, அரப்பு பொடியை தடவு! அவன் கசக்கறது-ன்னு துப்பினா….பாம்பு கடிக்கலேன்னு அர்த்தம்; திதிக்கறது-ன்னு சொன்னா….பாம்பு கடிச்சிருக்குன்னு அர்த்தம்; அதுக்கான வைத்யம் பண்ணணும்….”

“கடவுளே! எம்மவன் பொளைப்பானா?…”

“மொதல்ல போய் அரப்பு பொடிய குடு…..”

குடியானவர் ஓடிப்போய், பையனின் வாயில் அரப்புப் பொடியை தடவினார்……

“ஐயே!….கசக்குதுப்பா…..!..”

துப்பினான்!

அப்பாக்காரருக்கு பெரிய நிம்மதி!

“பாம்பு கடிக்கலடா…!….ஸாமீ காப்பாத்திட்டாரு…”

உடனே பையன் நெற்றியில் பெரியவா குடுத்த விபூதியைப் பூசிவிட்டு, அன்று மாலையே, மனைவியையும், மகனையும் பெரியவாளை தர்ஶனம் பண்ண அழைத்துக் கொண்டு வந்தார்.

“இவனை பாம்பு கடிக்கல….பயப்டாதே! மேல ஏறி ஊர்ந்து போயிருக்கு! அவ்ளோதான்….பயத்ல மயக்கம் போட்டு விழுந்துட்டான்!….வீட்ல, தெனோமும் நல்லெண்ணெய் விட்டு, வெளக்கு ஏத்தி வை!…”

பையனின் அம்மாவிடம் சொன்னார்.

பாம்பு கடித்திருக்கிறதா? இல்லையா? என்பதை சுளுவாக, ஊர்ஜிதப்படுத்தப்படுத்திக் கொள்ள, என்ன ஒரு ஸிம்பிளான test! இந்தக் காலத்தில், shampoo-வை வாயில் விட்டு test பண்ண முடியுமா? அப்படிப் பண்ணினால், பாம்பு நிஜமாகவே கடித்திருக்காவிட்டால் கூட, கடித்த மாதிரி நுரை வந்து இன்னும் பயமுறுத்தும்.

நல்லபாம்பு நிறைய நடமாடும் இடத்தில், நல்லெண்ணெய் தீபம் ஏற்றினால், பாம்பு எதுவும் செய்யாது என்பதை பலமுறை பெரியவா சொல்லியிருக்கிறார்.