செல்ஃபி எடுக்க முயன்ற மாணவர் மீது மின்சார ரயில் மோதி பலி !
காவிரி நதியில் கழிவுநீர் : கர்நாடக அரசாங்கம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
இது நம்ம ஆளு இசை உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்!
டி.ராஜேந்தரின் சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிலம்பரசன், நயன்தாரா, ஆன்டிரியா, சூரி நடித்திருக்கும் இது நம்ம ஆளு. இப்படத்தின் பாடல் இசை உரிமை ஒரு கோடி ஐம்பது லட்சம் விற்பனையாகியுள்ளது.
டி.ராஜேந்தரின் இளைய மகனும் சிலம்பரசனின் சகோதரருமான குறளரசன் இது நம்ம ஆளு படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை உரிமையை “லகரி” இசை நிறுவனம் வாங்கியுள்ளனனர். “லகரி” நிறுவனம் ஏ.ஆர்.ரஹ்மானின் முதல் படமான “ரோஜா” படத்தின் இசை உரிமையை வாங்கினர். இன்று ஏ.ஆர்.ரஹ்மான் புகழின் உச்சியில் உள்ளார்.
தற்போது குறளரசனின் முதல் படமான “இது நம்ம ஆளு” படத்தின் இசை உரிமையை (தமிழ்,தெலுங்கு) வாங்கியுள்ளனர். தமிழ் தெலுங்கு இரண்டும் சேர்த்து ரூபாய் ஒரு கோடி ஐம்பது லட்சம், என்பது குறிப்பிடத்தக்கது. இது நம்ம ஆளு படத்தின் பாடல்கள் சிலம்பரசனின் பிறந்த நாளான பிப்ரவரி 3ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
மத்திய அமைச்சர் உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சியினர் மீது நடவடிக்கை கோரி தமிழக காவல்துறையில் புகார் !
2ஜி உழல் முறைகேடு வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோரின் இறுதி வாதம் தொடக்கம்
இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான T20 தொடருக்கான இந்திய அணியில் கோலிக்கு ஓய்வு
இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விராத் கோலிக்கு இந்த தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கேப்டன் எம்.எஸ் தோனி, ரோஹித் சர்மா, ஷிகர் தவான், ரஹானே, மனிஷ் பாண்டே, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், ஹர்திக் பாண்டிய, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், ஜஸ்ப்ரிட் பும்ரா , ஆஷிஸ் நெஹ்ரா, ஹர்பஜன் சிங், புவனேஷ்வர் குமார், பவன் நேகி ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.
மறதியாக பாஸ்போர்ட்டை வீட்டில் விட்டு விட்டு விமான நிலையம் வந்த சூப்பர் ஸ்டார்
மலேசியாவுக்கு செல்ல திட்டமிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இன்று காலை சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு சென்றார். அங்கு வந்ததும் பாஸ்போர்ட்டை வீட்டிலேயே மறதியாக வைத்துவிட்டு வந்ததை உணர்ந்த அவர், பாஸ்போர்ட்டை வீட்டிலேயே மறதியாக வைத்துவிட்டு வந்ததை உணர்ந்தார் பின்னர் உதவியாளர்களில் ஒருவர் பாஸ்போர்ட்டை எடுத்து வந்து அளித்தும் விமானத்தில் ஏறி மலேசிய சென்றார். மத்திய அரசு தன்னை பத்ம விபூஷன் விருது செய்துள்ளதற்கு நன்றி தெரிவித்து கொள்வதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
டெட்டாலைப் போல மிகச் சிறந்த கிருமி நாசினி சிறுநீர்: லாலு விளக்கம்
பாட்னா:
டெட்டாலைப் போல சிறுநீரும் கிருமி நாசினிதான். அவசர காலங்களில் டெட்டலாலைப் போல சிறுநீரைப் பயன்படுத்தலாம். இவ்வாறு கூறியுள்ளவர் லாலு பிரசாத் யாதவ்.
பிகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற ஹோமியோபதி அறிவியல் மாநாட்டில் பேசிய, லாலு பிரசாத் யாதவ், மருத்துவ முறைகளிலேயே ஹோமியோபதி முறையில் அனைத்து நோய்களையுமே குணப்படுத்த முடியும். இதில் எந்த பக்கவிளைவும் கிடையாது. ஆனால், ஆங்கில முறையில் எதற்கெடுத்தலும் அறுவை சிகிச்சைதான். முன்பு நாம் சிறுவர்களாக இருந்த போது உடலில் ஏதேனும் காயம் பட்டால் அதன் மீது சிறுநீர் விடுவோம். இது சிறந்த கிருமி நாசினியாக செயல்பட்டு அது புண்ணாகாமல் தடுத்தது.
ஆனால், தற்போதோ நாம் டெட்டாலைத்தான் பயன்படுத்துகிறோம். அதைக் கொண்டு கை கழுவுகிறோம். இதுதான் தற்போதைய முன்னேற்றம். ஆனால், அவசர காலங்களில் கிருமி நாசினியாக சிறுநீரைப் பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், பிகார் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் லாலுவின் மகன் தேஜபிரதாப் பங்கேற்க வேண்டிய விழாவில், அவருக்கு பதிலாக லாலு பங்கேற்று பேசியதுதான் இந்தப் பேச்சு.
தென்காசி மருத்துவர் சென்னை அரசு மருத்துவமனையில் திடீர் மரணம்
சென்னை:
சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை நரம்பியல் அறுவைச் சிகிச்சைப் பிரிவின் இணைப் பேராசிரியர் கே.பி.திருமாறன் (47), ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென காலமானார்.
தி.நகரில் உள்ள தனது கிளினீக்கில் நோயாளிகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்தார். இவருக்கு காது-மூக்கு-தொண்டை மருத்துவரான மனைவி தேவி, மகன், மகள் ஆகியோர் உள்ளனர்.
இந்த நிலையில், அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரரும், முடநீக்கியல் மருத்துவருமான மணிமாறன் போலீஸில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, பிரேத பரிசோதனை சென்னை அரசு பொது மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்றது. பிறகு உடல் இறுதிச் சடங்குக்காக சொந்த ஊரான தென்காசிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
திருமாறனின் மறைவுக்கு சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.
கல்பனா சாவ்லா மறைந்த நாள் இன்று!
சர்மாவிற்கு பிறகு விண்வெளிப் பயணம் மேற்கொண்ட கல்பனா சாவ்லா இந்தியாவில் கர்னால் என்ற ஊரில் 1961-ம் ஆண்டு ஜனவரி 7-ம் நாள் பிறந்தார். ஆண்கள் மட்டுமே ஈடுபடும் விண்வெளித் துறையில் 1982 முதல் பெண் பொறியாளராய் கல்லூரியில் முதலிடம் பெற்றவர் கல்பனா. இந்தியப் பல்கலைக் கழகங்களில் விண்வெளி தொடர்பான சிறப்புத் துறைகள் இல்லாத காரணத்தால் வெளிநாட்டுக்குச் சென்றார்.
டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் (அமெரிக்கா) முதுகலைப் பட்டம் பெற்றார். 1988-ல் பொறியாளர் பட்டம் பெற்ற அவர் `பைலட்’டாக மட்டுமின்றி வான ஊர்தி மற்றும் விமானம் தாங்கிக் கப்பல்களுக்கு பயிற்சியாளராகவும் தகுதி பெற்றார். அமெரிக்கக் குடியுரிமை பெற்றபின் 1994-ல் நாசாவில் பலசுற்று நேர்முகத் தேர்வு மற்றும் பரிசோதனைகளுக்குப் பின் 2962 பேரில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
16 நாட்கள் விண்வெளிப் பயணம் கொலம்பியா விண்வெளி ஓடத்தில் மேற்கொள்ளப்பட்டது. `நாசா’வைப் பொறுத்தவரை கல்பனாவின் உடல் ஆரோக்கியம் மற்றும் கல்வித் தகுதிகள் போட்டியின்றி அவரைத் தேர்ந்தெடுக்கச் செய்தன. ஆறு விண்வெளி வீரர்களைக் கொண்ட அவ்விண் காலத்தில் இடம்பெற்ற இரு வல்லுனர்களில் கல்பனாவும் இருந்தார். அக்குழுவில் இருந்த ஒரே பெண்மணி அவர்.
அவ்விண்கலத்தின் 50 அடி நீள எந்திரக்கையைக் கட்டுப்படுத்துவதும், பிற வீரர்களுடன் ஆறுமணிநேர விண்வெளி நடைப் பயணத்தை ஒருங்கிணைப்பதுமே அவரது பணி. நேரத்தைக் கணக்கிட்டு, கலத்தை எங்கு செலுத்த வேண்டும் என்று அவர் வழி நடத்துவார். ஒரு சமயம் இரு விண்வெளி வீரர்கள் விண்வெளி ஓடத்தை அதன் இடத்துக்கு கொண்டுவர இயலாமல் தவித்துப் போனார்கள்.
கல்பனா சென்று விண்கலத்தை உறுதியாய் பற்றியிழுத்து சரியான நிலைக்குக் கொண்டு வந்தார். இது அவருடைய ஈடுபாட்டை, மன உறுதியைக் காட்டுகிறது. அவரது குழு இருபத்தைந்து சோதனைகளுக்கு மேல் மேற்கொண்டு பவுதிக ஆய்வுகளை நிறைவு செய்தது. விண்வெளியின் எடையற்ற சூழல், மண்ணுலக செயல்பாடுகளைப் பாதிக்கும் விதம் மற்றும் சூரியனின் வெளிப்புறச் சூழல் ஆகியவையே அப்பயணத்தின் முக்கிய சோதனை அம்சங்களாய் விளங்கின.
விண்வெளித்துறையில் வெற்றி கண்ட அமெரிக்கப் பிரஜையான கல்பனா ஜீன் பியரி என்னும் அமெரிக்கரை மணந்தார். அவரும் அத்துறையிலேயே பயிற்சியாளராய் பணியாற்றியவர். 2003 பிப்ரவரி 1-ம் நாள் கல்பனா சாவ்லா உள்பட ஏழு பேர் கொலம்பியா விண்கலத்தில் 16 நாள் ஆய்வை முடித்துத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
பூமியை வந்தடைய 15 நிமிடங்களே இருக்கும் பட்சத்தில் நான்காகப் பிளந்து வெறும் பழுப்புப் புகையாக துண்டு துண்டாக டல்லாஸ் நகரம் முழுவதும் சிதறி விழுந்தது. விலைமதிப்பற்ற ஏழு விஞ்ஞானிகளும் பலியாயினர். கல்பனாவின் மறைவுக்கு இந்தியாவே எழுந்து நின்று அஞ்சலி செலுத்தியது.

