Home Blog Page 5825

உபன்யாசத்தில் கேட்டு ரசித்தது

உபன்யாசத்தில் கேட்டு ரசித்தது :

        ஸ்ரீ.பராசர பட்டர், ஸ்ரீ.கூரத்தாழ்வானின் திருக்குமாரர்.  ஸ்ரீரங்கத்தில் வாசம் செய்து கொண்டிருந்த பட்டருக்கு, ஸ்ரீரங்கநாதனை விட, ஸ்ரீ.ரங்கநாச்சியாரிடம் தான் மிகுந்த ஈடுபாடு ,பக்தி.
         இதைக் கண்ணுற்ற அரங்கனுக்கு ஒரே பொருமல்.’ நம்மிடம் இல்லாத எந்த தனித்தன்மை நம் பிராட்டியிடம் இவர் கண்டு விட்டார் ? சரி நேரம் வரும்போது அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வோம்’….. எனக் காத்திருந்தார்.
      அதற்கான நேரமும் வந்தது .’ அத்யயன உத்சவம் ( வைகுண்ட ஏகாதசி) ஆரம்பமாயிற்று.வைகுண்ட ஏகாதசி அன்று முதல் நாள் எப்பொழுதும் ஸ்ரீ.நம்பெருமாள், ‘ நாச்சியார் திருக்கோலம்’ சாற்றிக் கொண்டு , அதி அற்புதமான ‘ மோஹினி அலங்காரத்துடன்’ பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
        அன்றும் அதே போல ‘ மோஹினி அலங்காரம் ‘ அழகுற சாற்றிக் கொண்டு, புறப்பாட்டுக்கு எழுந்தருளும் முன்பாக , அர்ச்சகரை அழைத்து , ஸ்ரீ.பராசர பட்டரை தனிமையில் தன்னிடம் அழைத்து வரும்படியாக ஆஞ்ஞாபித்தார்.
             அர்ச்சகர் விண்ணப்பத்திற்கிணங்க, ஸ்ரீ.பட்டரும் திரைக்கு பின்பாக எழுந்தருளி இருந்த ஸ்ரீ.நம்பெருமாள் முன்பு  சென்று அவரைப் பணிந்தார்.
              ஸ்ரீ.நம்பெருமாள் பட்டரிடம்” என்ன பட்டரே! நம் நாச்சியார் திருக்கோலம் எப்படி ? உம்முடைய நாச்சியாரைப் போலவே நாமும்  அழகுற இருக்கிறோம் இல்லையா ? பதலளியுங்கள்”…… என்று வினவ,
        ஸ்ரீ.பட்டரும் பெருமாளை ஒரு முறை அவருடைய திருமுடி முதல் திருவடி பரியந்தம் ஏற இறங்க பார்வையிட்ட பின்பு ” தேவரீர் இந்த நாச்சியார் திருக்கோலத்தில் அதி சௌந்தர்யத்துடன் தான் சேவை சாதிக்கிறீர்.ஆனாலும் …….. என்று  இழுத்த மாதிரி நிறுத்தினார்.
         பெருமாள் ” என்ன பட்டரே! ஏன் சொல்ல வந்ததை பாதியிலேயே நிறுத்தி விட்டு மென்று விழுங்குகிறீர்? உம் நாச்சியாரைப் போலவே தானே இருக்கிறேன்? சொல்ல  வந்ததை முழுமையாகச் சொல்லுங்கள்”…. என்று கேட்க,
     பட்டர் பெருமாளிடம்,” ஸ்வாமி! தங்கள் நாச்சியார் திருக்கோலம் அதி அற்புதம் தான்.அதில் எள்ளளவும் எனக்கு  சந்தேகம் இல்லை, ஆனால் எம்முடைய நாச்சியாரின் கருணையைப் பொழியும் பார்வை உம்மால் பார்க்க இயலாது.உம்முடையப் புருஷப் பார்வை உம்மை எம் நாச்சியாரிடமிருந்து வேறு படுத்திக் காட்டி விடுகிறதே! நீவிர் என்ன முயன்றாலும் எம் நாச்சியாரின் கருணையை அப்படியே பொழியும் பார்வையை உம்மால் பார்க்க  இயலாது”……. என்று  சொல்லி முடித்தாராம்.
        இதைக் கேட்ட பெருமாளுக்கு உள்ளூர பெருமகிழ்ச்சி.தம் நாச்சியாரின் பெருமை ஒரு பக்தனின் வாயிலாக வெளிப்பட்டதில் பரமாத்மா பேருவகை அடைந்தார் என்பது சரித்ரம்.
        எனவே நாம் திருக் கோயில்களுக்கு செல்ல நேர்கையில், பெருமாளின் சன்னதி முன்பு தாயாரின் ப்ரபாவங்களைச் சொல்லும்  ஸ்தோத்திரங்களையும், தாயாரை சேவிக்கும் போது, அவள் முன்பு பெருமாளின் ஸ்தோத்திரங்களையும் சொல்லும் போது இருவரும்  ஒருவர் மற்றவரின் ப்ரபாவங்களைக் கேட்டு மனமுவந்து நம்மை அனுக்ரஹிக்கிறார்கள் என்பது சான்றோர் வாக்கு .
       அவ்வாறே நாமும் பின்பற்றி , திவ்யதம்பதிகளின் கருணா கடாக்ஷத்திற்கு பாத்திரர்களாவோம்.
          ஸ்ரீ.ரங்கநாதன் ஸ்ரீ.ரங்கநாச்சியார் திருவடிகளே சரணம்.

மகாராஷ்டிராவில் சோகம்: 13 மாணவர்கள் கடலில் மூழ்கி பலி

மும்பைக்கு தெற்கே சுமார் 140 கிமீ தொலைவில் முருத் கடற்கரை உள்ளது. இது கொன்கன் கடற்கரைப்பகுதியில் உள்ளது இங்கு சுமார் 12 கடற்கரைகள் உள்ளன. கோவாவுக்குப் பதிலாக இந்த இடத்திற்கு சுற்றுலாப்பயணிகள் அதிகமாக வருவது வழக்கம். இந்த பகுதிக்கு புனேயில் உள்ள அபேதா இனாம்தார் கலைக்கல்லூரியைச் சேர்ந்த 155 மாணவர்கள் சுற்றுலா சென்றுள்ளனர். இதில் கடலில் குளிக்க சென்ற 13 பேர் கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் அனைவரும் 19 முதல் 23 வயதுடையவர்கள் என்றும் இதில் 3 பெண்கள் அடங்குவர் என்றும் தெரிய வந்துள்ளது.

கொழுப்பைக் குறைக்கும் கத்தரிக்காய்!

 

• உலகம் முழுவதும் உள்ள வெப்ப மண்டல பகுதிகளில் கத்தரிக்காய் பயிரிடப்படுகிறத ு.

• ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைப்பதில் கத்தரிக்காய் முக்கியப் பங்கு வகிக்கிறது.

• 100 கிராம் கத்தரிக்காயில் 24 சதவிதம் கலோரிகள், 9 சதவிதம் நார்ச்சத்து உள்ளது.

• அடர்நீலம் அல்லது பழுப்பு நிற கத்தரிக்காயின் தோலில் ஆந்தோசயானின் எனப்படும் திரவப் பொருள் உள்ளது.

• ஆந்தோசயான் உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் நோய்எதிர்ப்புப் பொருளாகும்.

• “பி’ காம்ப்ளக்ஸ் வகையான வைட்டமின்களான பான்டோதெனிக் ஆசிட், பைரிடமாக்சின், தயமின் மற்றும் நியாசின் ஆகிய உயிர்ச்சத்துகளும் கத்தரிக்காயில் அடங்கியுள்ளன.

• மாங்கனீசு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் போன்ற தாது உப்புக்கள் அதிக அளவில் உள்ளன.

• கத்தரிக்காயில் உள்ள சத்துக்கள் உடற்செயலின் மாற்றங்களுக்கும ், வளர்சிதை மாற்றத்திற்கும் மிகவும் உகந்தவை

தேசியக் கொடியை எரித்த நபரைக் கைது செய்யக் கோரி பால் முகவர் சங்கம் புகார்

சென்னை:

நமது தேசியக் கொடியை எரித்து ஆணவமுடன் அதனை தனது முகநூல் பக்கத்திலும் பதிவிட்ட கயவனை தேச துரோக சட்டத்தில் கைது செய்யக் கோரி தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் கடந்த 30.01.2016 சனிக்கிழமை அன்று சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் அவர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக புகார் அளிக்கப்பட்டது. அதே புகாரினை எழுத்து பூர்வமாக சென்னை மாநகர காவல்துறை ஆணையாளரை இன்று (01.02.2016) திங்கட்கிழமை காலை 11 மணி அளவில் நேரில் சந்தித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க மாநிலத் தலைவர் எஸ்.ஏ.பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

1

2

டி.என்.பி.எஸ்.சி.,யை அ.தி.மு.க. துணை அமைப்பாக மாற்றுவதா?: ராமதாஸ் கேள்வி

சென்னை:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சியை அதிமுகவின் துணை அமைப்பாக மாற்றுவதா என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
 
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக இருந்த இடங்களை நிரப்பும் நோக்குடன் 11 புதிய உறுப்பினர்களை தமிழக அரசு நியமித்திருக்கிறது. அவர்கள் அனைவரும் தீவிர அ.தி.மு.க. உறுப்பினர்கள் ஆவர். அரசு ஊழியர்களை தேர்ந்தெடுத்து நியமிப்பதற்கான அரசியல் சட்ட அதிகாரம் கொண்ட ஆணையத்தை அ.தி.மு.க.வின் துணை அமைப்பாக மாற்றும் முயற்சிகள் கண்டிக்கத் தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தலைவரும், 14 உறுப்பினர்களும் இருக்க வேண்டும். 11 உறுப்பினர் பணியிடங்கள் காலியாக இருந்ததையடுத்து அவற்றை நிரப்புவதற்காக 11 பேரை அரசு நியமித்துள்ளது. அவர்களில் இ.ஆ.ப. அதிகாரி இராஜாராம் உள்ளிட்ட நால்வர் தவிர மீதமுள்ள 7 பேரும் ஆளுங்கட்சி வழக்கறிஞர் அணியைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்ற சட்டப்பூர்வ ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்படும் தார்மீக தகுதி அவர்களுக்கு இல்லை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கான நடைமுறைகள் குறித்து இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 316 ஆவது பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதில் உள்ள சில ஓட்டைகளை பயன்படுத்திக் கொண்டு அ.தி.மு.க.வினர் இப்பதவிகளில் திணிக்கப்பட்டுள்ளனர். அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு உறுப்பினர்களாக நியமிக்கப்படுபவர்களில் பாதி பேர், அவர்கள் பணி நியமனம் செய்யப்படும் நாளில் மத்திய அல்லது மாநில அரசு பணிகளில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது. அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தற்போதைய உறுப்பினர்கள் 3 பேரும் அரசு ஊழியர்களாக இருந்தவர்கள். இப்போது நியமிக்கப்பட்டுள்ள 11 பேரில்  இராஜாராம் உள்ளிட்ட 4 பேர் அரசு பணிகளில் இருந்தவர்கள். இவர்களைச் சேர்த்தால் மொத்த உறுப்பினர்களில் பாதிப் பேர் அரசு ஊழியர்களாக இருப்பார்கள் என்பதால், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு மீதமுள்ள 7 இடங்களில் அ.தி.மு.க. வழக்கறிஞர்களை நியமித்திருக்கிறது ஆட்சி மேலிடம். அதுமட்டுமின்றி, தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் 14 உறுப்பினர்களில் ஒருவர் கூட மகளிர் இல்லை.   பெண்களுக்காக நடைபெறும் ஆட்சி என்று பெருமை பேசிக்கொள்ளும் ஜெயலலிதா ஆட்சியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் மகளிருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.

பணியாளர் தேர்வாணையம் என்பது தமிழகத்தின் அரசு நிர்வாகத்திற்கு தேவையான எழுத்தர்கள் முதல் மாவட்ட துணை ஆட்சியர்கள், மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் வரையிலான அனைத்து பணிகளுக்கும் ஆட்களை தேர்வு செய்யும் முக்கிய அமைப்பாகும். இந்த பணிக்கு விருப்பு, வெறுப்பு இல்லாத, நெருப்புக்கு நிகரான நேர்மை கொண்டவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும். ஆனால், தங்களுக்கு துதி பாடுவோருக்கு பதவி வழங்குவதற்கான அமைப்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தை மாற்றி அதன் பெருமையை அதிமுகவும், திமுகவும் சீரழித்து விட்டன.

புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இ.ஆ.ப. அதிகாரியான தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை  செயலாளரான மு. இராஜாராம் கரை வேட்டி கட்டாத அ.தி.மு.க. உறுப்பினராவார். செய்தித்துறை செயலர் என்ற முறையில், ஊடக நிர்வாகங்களை கெஞ்சியும், சில நேரங்களில் மிஞ்சியும் ஊடகங்களில் அரசுக்கு எதிரான செய்திகள் வராமல் பார்த்துக் கொண்டது தான் இவரது சாதனை. வெள்ளத்தின்போது வெளியில் வராத ஜெயலலிதாவை வாட்ஸ்&அப்பில் பேச வைத்ததும் இவர் தான். அரசுத்துறை செயலாளர் பணியை பார்த்தாரோ இல்லையோ, ஜெயா தொலைக்காட்சியின் ஊதியம் வாங்காத மனிதவளத்துறை மேலாளராக  பணியாற்றி அந்நிறுவனத்திற்கு தேவையான செய்தியாளர்களை தேர்வு செய்யும் தொண்டூழியம் பார்த்தவர். இதன்மூலம் ஆட்சியாளர்களிடம் ஏற்பட்ட நெருக்கத்தை பயன்படுத்தி பல கோடி ஊழல் செய்த இவர், இம்மாதத்துடன் ஓய்வு பெறவிருப்பதால், இவரது விசுவாசத்துக்கு பரிசாக இப்பதவி வழங்கப்பட்டிருக்கிறது.

அ.தி.மு.க. ஆட்சியில் இதற்கு முன் இப்பதவியில் நியமிக்கப்பட்டவர்களும் இவரைப் போன்றவர்கள் தான். காவல்துறை தலைமை இயக்குனராக இருந்தபோது காட்டிய விசுவாசத்திற்காக ஆர். நட்ராஜ் இந்த ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். பதவிக்காலம் முடிந்தவுடன் தன்னையே அதிமுகவில் இணைத்துக் கொண்டார். அவருக்குப் பிறகு ஜெயலலிதாவின் ஊழல் வழக்குகளை நடத்திய அதிமுக வழக்கறிஞர்கள் அணி நிர்வாகியான நவநீதகிருஷ்ணன் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். இப்படியாக பணியாளர் தேர்வாணையம் திட்டமிட்டு அ.தி.மு.க. துணை அமைப்பாக மாற்றப்பட்டிருக்கிறது.

தகுதியும் நேர்மையும் இல்லாமல் விசுவாசத்தின் அடிப்படையில் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதால் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் ஊழல் ஆணையமாக மாறி வருகிறது. லஞ்சம் கொடுத்து பணியில் சேர்பவர்களின் முதன்மை நோக்கம் லஞ்சம் வாங்குவதாகத் தான் இருக்கும் என்பதால் அரசு நிர்வாகத்தில் ஊழல் தலைவிரித்தாடும். எனவே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு 11 புதிய உறுப்பினர்கள் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, இப்பதவிக்கு தகுதியான ஆட்களை பரிந்துரை செய்வதற்காக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் அப்பழுக்கற்ற வரலாறு கொண்ட சமூக ஆர்வலர்களைக் கொண்ட தேர்வுக் குழுவை அமைக்க வேண்டும்.

மெட்ராஸ் ஃபிலிம் சொசைட்டிக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு

 

சென்னை:

60 வருட பாரம்பரியம் கொண்ட மெட்றாஸ் பிலிம் சொசைட்டியின் பொதுச் செயளாராக வி.சுபாஷ் சந்திரன் பதவி ஏற்றுள்ளார்.  அபிராமி ராமநாதன் தலைவராகவும் டாக்டர் பத்மஸ்ரீ நல்லிகுப்புசாமி செட்டியார் உப தலைவராகவும், ருஸ்வெல்ட் நிர்வாக துணைத் தலைவராகவும் உள்ளனர்.

மெட்ராஸ்  பிலிம்  சொசைட்டிக்கு புது நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் கூட்டம் 24-01-16 சென்னையில்  நடந்தது. இந்த வருடாந்திர  பொதுக்குழுக் கூட்டத்தில்  புது நிர்வாகிகள்  தேர்ந்தெடுக்கபட்டார்கள்
நிர்வாகிகள் விவரம்:
அபிராமி ராமநாதன் – தலைவர்
பத்மஸ்ரீ நல்லிகுப்புசாமி – உப தலைவர்
ரூஸ்வெல்ட் – நிர்வாக  உபத்தலைவர்
சுபாஷ் சந்திரன் – பொதுச் செயலாளார்
சிஎன் ஜெகதீசன் – துணை செயலாளர்
ஷெரீப் – துணை செயலாளர்
வெங்கடசுப்ரமணியன் – பொருளாளர்
சி சிற்சபேசன் – துணைபொருளாளர்
 
நிர்வாகக் குழு உறுப்பினர்கள்:
ரகுபதி
கமலநாபன்
ஜெயக்குமார்
மனோகரன்
சுந்தரம்  

1956ஆம் ஆண்டு துவங்கப்பட்டது மெட்ராஸ் ஃபிலிம் சொசைட்டி. இது தற்போது 60ஆம் ஆண்டைக் கொண்டாட உள்ளது. இதனை முன்னிட்டு, 60 ஆம் ஆண்டு விழா மிகச் சிறப்பான  முறையில் நடத்தப்படும் என்று சொசைட்டியில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச் செயலர் சுபாஷ் சந்திரன் கூறினார்.

பெருமைக்குரிய இந்தப் பதவியில் திறம்படச் செயலாற்றிய அறிஞர்கள் பெருமக்கள் வழியில் நானும் செயல்படுவேன் என்று கூறினார் சுபாஷ் சந்திரன். சிறந்த உலக சினிமா திரையிடப்படும் என்றும், வருடாந்திர  சந்தா ரூ/1000 மட்டுமே என்றும், இங்கே நூற்றுக்கணக்கான  திரைப்படங்கள்  திரையிடப்படும். மேலும் தகவல் பெற தன்னை 93806 00035 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கூறினார்.

பலம் கூட்டும் பழைய சோறு!

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில்  நமது ஒரு சிறந்த உணவை வைத்து ஆராய்ச்சி செய்தார்கள்.

அந்த ஆராய்ச்சி முடிந்து வந்த ஆய்வறிக்கையை பார்த்து விட்டு அவர்கள் சொன்னது என்ன என்று தெரியுமா?
 “தென்னிந்தியர்கள் மனிதர்கள் அல்ல…அவர்கள் கடவுள்களாகத் தான் இருக்க வேண்டும்”…!!!
அதாவது, அந்த நம் சிறந்த உணவு “பழைய சோறு…!”

பழையசோற்றின் பலன்கள்:

1.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது
2.வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது
3.உடல் சோர்வை போக்குகிறது
4.உடலில் உள்ள அணுச்சிதைவுகளை தடுக்கிறது
5.உடல் சூட்டை தணிக்கிறது
6.வயிற்றிலுள்ள பழைய கழிவுகளை விரைந்து வெளியேற்றுகிறது
7.உற்சாகமான மனநிலையைத் தருகிறது
8.வெயில் காலங்களில் மட்டுமல்ல அனைத்து நாட்களிலும் சாப்பிடுவதற்கேற்ற அருமையான உணவு பழைய சோறு
என்று பலவிதமான நன்மைகளைப் பட்டியலிட்டனர்…!

இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்ததும்  “HOW to make PALAYA
SORU? என்று அமெரிக்கர்கள் இந்திய நண்பர்களிடமும் இணையத்தில்.கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனர்!

ஆனால், நாம் தான் இதை திண்ணால் சளி பிடிக்கும், உடல் குண்டாகி விடும் என்றெல்லாம் சொல்லி இன்றைக்கு “பழையதை” பழித்து வருகிறோம் அது பெரிய தவறு…!!!
சரி…
“பழைய சோற்றை” எப்படி முறையாகச் செய்வது?
1. நாம் சாப்பிட்டு மீதம் உள்ள சாதத்தில்  சுமார் ஒரு மணிநேரம் கழித்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி மூடிவைத்து  6 முதல் 8 மணிநேரம் கழித்து திறந்து பார்த்தால் அமிர்த உணவு தயார்…!
2. இதில் தேவையான அளவு சாதத்தை ஒரு மண்சட்டியில் எடுத்து அதனுடன் தயிர் கலந்து சின்னவெங்காயம், வெண்டைக்காய் ஆகியவற்றையும் சிறிது சிறிதாக வெட்டிப் போட்டு, தேவைப்பட்டால் சிறிது உப்பையும் ஒரு பச்சை மிளகாவையும் கலந்து நன்றாக பிசைந்து சாப்பிட்டு பாருங்கள்…!!!

ஆகா!!!  இதுதான் தேவாமிர்தம் என்பதை நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்…

இந்த உணவு முறையை வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமாவது கடைபிடியுங்கள் நண்பர்களே!
பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்தவர்கள் தேவர்கள், அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்களான தமிழர்கள்…!!!
இனியாவது  குப்பை உணவான பர்கரையும், பீட்சாவையும், புரோட்டவையும் தேடி அலைவதை நிறுத்துவோம், உடல் நலத்தை பேணுவோம்! “பழையசோறு உண்போம்!

“போக்கிரி ராஜா” படத்திற்காக ராஜஸ்தான் அரங்கமைப்பில் ஜீவா-ஹன்சிகா நடனம்

ஜீவா, சிபிராஜ் மற்றும் ஹன்சிகா மோத்வானி இணைந்து நடித்திருக்கும் படம் ’போக்கிரி ராஜா’. இது ஜீவாவிற்கு 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ புகழ் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ளார்.

PTS FILM INTERNATIONAL சார்பில், P.T.செல்வக்குமார் வழங்க, T.S.பொன்செல்வி தயாரித்துள்ளார். D.இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்துள்ளது.

இப்படத்தின் ஒரு பாடலுக்கு பூந்தமல்லி அருகில் ராஜஸ்தான் கலை நுணுக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட பிரம்மாண்டமான அரங்கமைப்பில் 100 நடனக் கலைஞர்கள் மற்றும் ராஜஸ்தானிலிருந்து வரவழைக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட துணை நடிகர்கள் பங்கேற்க நடன இயக்குனர் பிருந்தா அவர்களின் நடன இயக்கத்தில் ஜீவா மற்றும் ஹன்சிகா இருவரும் மிகவும் அந்நியோன்யமாகவும், கிளாமராகவும், கிளுகிளுப்பாகவும் நடனமாடியுள்ளனர்.

இப்பாடல் ”பப்ளி பப்ளி(Bubbly Bubbly)” என்று தொடங்குவதால் அரங்கத்தில் ஜீவா, ஹன்சிகாவை செல்லமாக “பப்ளி பப்ளி(Bubbly Bubbly)” என்று கிண்டல் செய்துள்ளார்கள். இப்பிரம்மாண்டமான அரங்கமைப்பின் நடுவே ஓர் பெரிய நீச்சல் குளம் அமைக்கப்பட்டது கூடுதல் சிறப்பம்சமாகும். இப்படத்தின் டீஸரை YouTubeல் இன்றுமுதல் கண்டுகளிக்கலாம்

இப்படத்தை ”ரோமியோ ஜூலியட்”, “நாய்கள் ஜாக்கிரதை” மற்றும் ”ஈட்டி” போன்ற வெற்றிப்படங்களை வெளியிட்ட COSMO VILLAGE சிவக்குமார் தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.

மோடியிடம் ரொக்கக் கையிருப்புத் தொகை ரூ.4,700 மட்டும் தான் இருக்காம் !

 
மார்ச் 31, 2015 நிதியாண்டு முடிவில் பிரதமர் மோடியின் ரொக்கக் தொகை கையிருப்பு ரூ.4,700 மட்டுமே என்று பிரதமர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.
மோடியின் சொத்து விபரங்கள் குறித்து பிரதமர் அலுவலக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விவரங்களாவது :-
மார்ச் 31, 2015 நிதியாண்டு முடிவில் மோடியின் ரொக்கக் கையிருப்பு ரூ.4,700 மட்டுமே. ஆகஸ்ட் 18, 2014-ல் அறிவிக்கப்பட்ட ரொக்கக் கையிருப்புத் தொகையான ரூ.38,700 என்பது ரூ.4,700 ஆகக் குறைந்துள்ளது.
இந்தக் காலக்கட்டத்தில் பிரதமர் மோடியின் அசையும், அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ. 1,26,12,288 என்பதிலிருந்து ரூ.1,41,14,893 ஆக மார்ச் 2015-ல் இருந்தது.
மோடி பிரதமராகப் பதவியேற்ற தினம் மே 26, 2014 என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெளிப்பாடுகளின் படி, மோடியிடம் மோட்டார் வாகனங்கள், விமானம், படகு, கப்பல் என்று எதுவும் இல்லை. அவர் தனது வங்கிக் கணக்குகளை இன்னும் குஜராத்தில்தான் வைத்துள்ளார். டெல்லியில் மோடிக்கு வங்கிக் கணக்கு இல்லை.
கடன்களும் அவர் பெயரில் இல்லாத நிலையில், 4 தங்க மோதிரங்கள் மட்டும் அவரது சொத்துகளில் உள்ளது. இதன் எடை 45 கிராம். இதன் மதிப்பு ரூ.1.19 லட்சம்.
எல்&டி இன்ஃப்ரா பத்திரங்கள் (வரி சேமிப்பு) ரூ.20,000, தேசிய சேமிப்பு சான்றிதழ்கள் வகையில் ரூ.5.45 லட்சம், ஆயுள் காப்பீட்டு பாலிசிக்கள் மதிப்பு ரூ.1.99 லட்சம் ஆகியவை சேர்ந்து பிரதமர் மோடியின் அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.41.15 லட்சம்.
அசையாச் சொத்தில் காந்திநகர் வீட்டில் இவரது கால் பங்கான 3,531 சதர அடி பரப்பில் 169.81 சதுர அடி கட்டுமான பகுதியுடன் கூடிய இடம் அடங்கும். இது வழிவழியாக வந்த சொத்தல்ல என்பது குறிப்பிடப்பட்டுள்ளதோடு, இது அக்டோபர் 25, 2002-ல் வாங்கப்பட்டது என்ற தேதியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சொத்தை வாங்கிய விலை ரூ.1,30,488 என்றும், கட்டுமானப் பணிகளுக்கான செலவு ரூ.2,47,208 என்றுபிரதமர் அலுவலக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

விஜய் சாந்திக்கு கண்டிப்பா பெருமை சேர்ப்பேன்: அருந்ததி

நாய்கள் ஜாக்கிரதை படத்தின் மூலம் கவனம் கவர்ந்த நடிகை அருந்ததி. இவர் ஆக்க்ஷன் காட்சிகளில் அதிரடியாக அசத்தும் புதிய படம் அர்த்தநாரி.

கிருத்திகா பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஏ எஸ் முத்தமிழ் தயாரிக்கும் இந்தப் படத்தை இயக்கியுள்ளவர் சுந்தர இளங்கோவன். இயக்குனர் பாலாவிடம் அசோசியேட் இயக்குனராகப் பணியாற்றியவர் இவர்.

படத்தைப் பற்றி உற்சாகமாகப் பேசும் அருந்ததி “அர்த்தநாரி படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் அமைந்த ஒரு முழுமையான ஆக்க்ஷன் படம். அந்த உண்மை சம்பவங்கள் எனக்கு பர்சனலாகவே மிகவும் உத்வேகம் அளித்தன.

இதில் நான் சவால்கள் நிறைந்த ஒரு அண்டர் கவர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இது வழக்கமான அண்டர் கவர் அதிகாரி கேரக்டர் அல்ல. மிக கஷ்டமான ஒன்று. இந்த கேரக்டருக்காக நான் நிறையவே ஹோம் வொர்க் செய்து என்னை முழுமையாகத் தயார் செய்து கொண்டேன்.

துப்பாக்கியைப் எப்படி பிடிப்பது ? ட்ரிக்கரை எப்படி அழுத்துவது என்பது வரை எல்லாமும் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு போலீஸ் அதிகாரியிடம் இரண்டு வாரம் பயிற்சி எடுத்துக் கொண்டேன்.

சண்டைக்காட்சிகளில் ஒரு நிஜ போலீஸ் வீராங்கனை போலவே குதிப்பது, உதைப்பது எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என்பதற்காக, சண்டைப் பயிற்சியும் எடுத்துக் கொண்டேன். அவை எல்லாம் மிக சிரமமாக இருந்தாலும் இன்டரஸ்டிங்காகவும் இருந்தது.

இப்படி ‘இந்தப் படத்துக்குத் தேவையான சண்டைக் காட்சிகள் மட்டுமின்றி, டான்ஸ் காட்சிகளிலும் நான் பொருத்தமான முறையில் கற்றுக் கொண்டு நடிக்க வேண்டும்’ என்பதில் இயக்குனர் ரொம்பவும் உதுதியாக இருந்தார். காரணம் படத்தின் ஸ்கிரிப்ட் அப்படி.

அது மட்டுமா?

இந்த கேரக்டரை நான் மிக சிறப்பாக செய்ய வேண்டும் என்பதற்காக The Blue Steel, The Bone Collector, and Mardhani ஆகிய படங்களையும் பார்க்க வைத்தார். அந்தப் படங்களை பார்த்த பிறகு எனக்குள் ஒரு சக்தியே வந்தது என்ற உண்மையை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.

இப்போது அர்த்தநாரி படத்தை முழு மையாகப் பார்த்த போது எனக்குள் வந்த அந்த சக்தி அப்படியே நினைத்து விட்டது போலவே உணர்கிறேன்.

படத்தில் நடிக்கும்போது எனது கணுக்கால் முட்டியில் அடிபட்டு பலத்த காயம் ஏற்பட்டது. ஆனால் அப்போது பட யூனிட் என்மீது காட்டிய அக்கறையையும், துணிச்சலான நடிப்புகாகக் கொடுத்த பாராட்டையும் பார்த்த போது அந்த வலி பறந்தே போனது.

இப்படி கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படம் கிடைத்ததற்காக கடவுளுக்கும் இயக்குனருக்கும் என்றென்றும் நான் நன்றி சொல்ல வேண்டும்.

சின்ன வயசிலிருந்தே நான் விஜய சாந்தியின் தீவிர ரசிகை. இந்தப் படத்தில் நான் ஏற்று நடித்திருக்கும் கேரக்டரும் நடித்திருக்கும் ஆக்க்ஷன் காட்சிகளும், விஜய சாந்தி மேடத்துக்கு அவரது ரசிகையான நான் சேர்க்கும் பெருமையாகவே இருக்கும் என்று மனப் பூர்வமாக நம்புகிறேன்” என்கிறார் அருந்ததி.