“மும்பை ஏற்கெனவே ஸ்மார்ட் சிட்டி தான்” எனவும், “ஆகவே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மும்பையை சேர்க்க வேண்டாம்” என்றும் சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது. “அதேசமயம் மும்பையில் வளர்ச்சித் திட்டங்களை நிறைவு செய்ய, 2,000 கோடி முதல் 5,000 கோடி ரூபாய் வரை மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த குஜராத்தில் மட்டும் விதி விலக்கா?: உச்சநீதிமன்றம் கேள்வி
பொது நல மனு மீதான விசாரணையின் போது “பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த குஜராத் போன்ற மாநிலங்கள் மறுப்பது ஏன்?” என்றும், “இந்தியா முழுவதும் இந்த சட்டம் அமல்படுத்தும் போது குஜராத்தில் மட்டும் விதி விலக்கு என்று சொல்லப்பட்டிருக்கிறதா?” என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. இது போல் “இந்திய குற்றவியல் சட்டம், இந்திய சிவில் சட்டம், சாட்சிகள் சட்டம் ஆகியனவற்றை நடைமுறைப் படுத்த மாட்டோம் என்று பிற மாநிலங்கள் சொன்னால் என்ன ஆவது ?” என்றும் உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது.
சென்னையில் வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை குறைந்து
சென்னையில் வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.84.50 குறைந்து ரூ.587 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வர்த்தக சிலிண்டர் விலை ரூ.1372.50 ஆக இருந்தது. இதன் விலை தற்போது ரூ.167 குறைந்து ரூ.1205 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப சிலிண்டர் விலையை நிர்ணயம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்றத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வந்த ஓ.பி.ராமசாமி ரெட்டியாரின் உருவப்படம்: வெங்கையா நாயுடு பரிந்துரை
சென்னை மாகாணத்தின் முதல், முதல்-அமைச்சர் ஓ.பி.ராமசாமி ரெட்டியாரின் 121-வது பிறந்த நாள் விழாவில் மத்திய மந்திரி வெங்கையா நாயுடு தெரிவித்ததாவது:
ஓ.பி.ராமசாமி ரெட்டியாரின் கடுமையான உழைப்பு, நேர்மை, சாதி மத, பேதமின்மை காரணமாகத்தான் அவரால் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் நாற்காலியில் அமர முடிந்தது. ஓ.பி.ராமசாமி ரெட்டியாரின் முயற்சியால் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் கோவிலுக்குள் சென்றுவர ஆலய நுழைவு சட்டம் நிறைவேற்றப்பட்டது. பூரண மதுவிலக்கை கொண்டு வந்தார்.
பாராளுமன்றத்தில் ஓ.பி.ராமசாமி ரெட்டியாரின் உருவ படத்தை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அதற்கான குழுவுக்கு அனுப்பி வைத்து பரிந்துரை செய்வேன்” என்றார்
“குயின்” திரைப்படத்தின் தமிழ், தெலுங்கில் ‘ரீமேக்’கை இயக்குகிறார் நடிகை ரேவதி
பிரபல நடிகையும் திரைப்பட தயாரிப்பாளருமான ரேவதி, தற்போது குயின் திரைப்படத்தை தமிழ், தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே “Mitr, My Friend” மற்றும் “Phir Milenge” படங்களை இயக்கியுள்ளவர் என்பது குறிப்பிடதக்கது.
செஞ்சிலுவை சங்க எரிவாயு தகன மேடை முறைகேடு
செஞ்சிலுவை சங்கத்தின் பராமரிப்பின் கீழ் எரிவாய்வு தகனமேடை திருநெல்வேலி சிந்துபூந்துறையில் செயல்படுகிறது.
அதில் அமரர்களை எரியூட்ட படிவம் 4, 4A. பெற வேண்டும் என மாநகராட்சி உத்திரவு இட்டுள்ளது. (படிவம் 4 என்பது இறந்தவர் பற்றிய விபரம், 4A என்பது எப்படி இறந்தார் என்ற விபரம் மருத்துவரால் வழங்கப்படும் சான்று)
ஆனால் 237 உடல்கள் எப்படி எரிக்கப்பட்டுள்ளது என்பது உங்கள் பார்வைக்கு ….( எந்த ஆவணமும் கிடையாது)
இப்போது புரியும் முருகேஷ்சன் முன் ஜாமீன் ஏன் கேட்கிறார் என்ற விபரம்.
4, 4A இல்லாமல் எரியூட்டது மிக பெரிய குற்றம்
ஆனாலும் மாநகராட்சி மற்றும் காவல்துறையின் உளவுபிரிவு கடமையாற்றிய விதம் எப்படியுள்ளது என்பது உங்கள் பார்வைக்கு….
எரிக்கப்பட்ட உடல்களில் காணாமல் போனவர்கள், தேடப்படும் குற்றவாளி, சட்டவிரோதமாக இறந்தவர்கள் யாரும் இருப்பார்களோ? என. நாம் யூகம் செய்ய வேண்டாம்.
காவல்துறையில் புகார் மனு கொடுக்கப்பட்டு 60 நாட்கள் கடந்துவிட்டது.
வழக்கு பதிவு செய்ய யோசனை செய்கிறது காவல் துறை.
எல்லாம் சரி எரிக்கப்பட்ட உடல் ஒன்றுக்கு ரூபாய் 2000/- வீதம் வசூல் செய்யப்பட்ட. சுமார் 5 லட்சம் எங்கே?
பிரபாகர், சொக்கலிங்கத்திற்கே வெளிச்சம்.
ஆதாரத்துடன்
செய்தி: அ.பிரம்மா, திருநெல்வேலி

என் உயிருக்கு ஆபத்து: நீதிபதி மீது குற்றம்சாட்டிய மதுரை வழக்குரைஞர் ‘வாட்ஸ்ஆப்’பில் அலறல்!
உயர் நீதிமன்ற நீதிபதி மீது வழக்குரைஞர் பீட்டர் ரமேஷ் என்பவர் குற்றம் சாட்டி வாட்ஸ்ஆப்பில் வைரலாகப் பரவிய ஒலிப்பதிவின் தொடர்ச்சியாக, அடுத்து இன்னொரு ஒலிப்பதிவையும் வாட்ஸ்அப்பில் உலவ விட்டுள்ளார். அதில், தன் உயிருக்கு ஆபத்து என்று அபயக் குரல் கொடுத்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பணியாற்றும் நீதியரசர் மீது பீட்டர் ரமேஷ் எனும் வழக்குரைஞர் பல்வேறு குற்றச்சாட்டுகளை ஒலிப்பதிவின் மூலம் கூறி அதை வாட்ஸ்ஆப்பில் வெளியிட்டார்.
வழக்குரைஞர் பீட்டர் ரமேஷ் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு தொடர்பான செய்திகளை செய்தி ஊடகங்கள் வெளியிடகூடாது என்று செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களிடம் உயர் நீதிமன்ற நீதியரசர் மிரட்டல் விடுப்பதாக பீட்டர் ரமேஷ் அந்த ஒலிப்பதிவில் கூறியிருந்தார்.
மேலும், உயர் நீதிமன்ற நீதியரசர் மீது பீட்டர் ரமேஷ் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் கூறியிருந்தார். அந்த ஒலிப்பதிவு வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவருகிறது.
இந்நிலையில், நீதியரசர்கள் மீது பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார் வழக்குரைஞர் பீட்டர் ரமேஷ். இது குறித்து தனியாக உலவவிட்டுள்ள ஒரு ஒலிப்பதிவுடன், நடிகை விஜயசாந்தி கையால் உதையா?” என்ற தலைப்பில் ஒரு செய்தியும் உலா வருகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தச் செய்தியில், “நீதியரசர்கள், அரசு வழக்கறிஞர்கள், காமகளியாட்டம், பாலியல் தொந்தரவு மற்றும் விபசாரத்தில் ஈடுபட்டு , நடிகை விஜயசாந்தியால் கட்டி வைத்து உதைப்பட்டனரா…???
நிம்மி என்ற பெண் வழக்கறிஞருக்கு நீதிபதி பதவி தருவதாக கூறி, ஏமாற்றி, வாழ்க்கையை சீரழித்தனரா???
உயிருக்கு ஆபத்து, அபயக் குரல் எழுப்பும் முன்னாள் மதுரை வழக்கறிஞர் சங்கத் தலைவர் வழக்கறிஞர் பீட்டர்ரமேஷ்…?
நீதிதுறை மாண்பு ,நேர்மையான நடவடிக்கைகள் மூலம் காக்கப்படுமா!!!!!காப்பாற்றப்படுமா?” – என்று பரப்பப்பட்டு வருகிறது.
நீதிபதிகள் மீது ‘பகீர்’ குற்றச்சாட்டை முன்வைக்கும் வழக்குரைஞர்கள் குறித்த செய்திகள் புதிதல்ல. சில நேரங்களில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் காரணமாகவும் இது போன்ற குற்றச்சாட்டுகள் வைரலாகப் பரவி சிலரின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படும் விதங்களில் அமைந்ததுண்டு.
இருப்பினும், பொதுவாக எந்த ஒரு குற்றச்சாட்டையும் அதுபோன்றதே என்று புறந்தள்ளி விடவும் முடியாது என்றும் சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
மேலும் அந்த ஒலிப்பதிவில் உயர் நீதிமன்ற நீதியரசர் மீது வழக்குரைஞர் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் கூறியுள்ளார். அந்த ஒலிப்பதிவு வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவருகிறது .
வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவரும் அந்த ஒலிப்பதிவுடன் வழக்குரைஞர் பீட்டர் ரமேஷின் புகைப்படம் இணைக்கப்பட்ட காணொளி இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநரசிம்மர் 40: தகவல்கள்
ஓம் ஸ்ரீநரசிம்ஹாய நம:
ஓம் ஸ்ரீமஹாசிம்ஹாய நம:
1. நரசிம்மரை தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும்.
2. நரசிம்மரை உபாசனா தெய்வமாக ஏற்றுக் கொள்பவர்களுக்கு 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.
3. நரசிம்ம அவதாரம் காரணமாகவே மறந்து போன வேதங்களும், பொருள் புரியாத மொழிகளும், விடுபட்ட யாகங்களும் சாதாரண நிலை நீங்கி, உயர் நிலையைப் பெற்றன.
4. நூற்றி எட்டு திவ்ய தேசங்களில் “சிங்கவேள்குன்றம்” என்பதும் ஒன்று. இத்தலம் மீது பாடப்பட்டுள்ள பதிகங்கள், பாசுரங்கள், செய்திகள் அனைத்தும் நரசிம்ம அவதாரம் மட்டுமே இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
5. நரசிம்ம அவதாரத்தின் முதல் குறிப்பு பரிபாடலில் காணப்படுகிறது.
6. நரசிம்மருக்கு நரசிங்கம், சிங்கபிரான், அரிமுகத்து அச்சுதன், சீயம், நரம் கலந்த சிங்கம், அரி, ஆனரி ஆகிய பெயர்களும் உண்டு.
7. திருமாலின் பத்து அவதாரங்களில் பரசுராமன், பலராமன் இருவரும் கோபத்தின் வடிவமாக திகழ்பவர்கள். இதனால் அந்த இரு அவதாரங்களும் வைணவர்களால் அதிகம் வணங்கப்படவில்லை. ஆனால் நரசிம்ம அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும் பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள்.
8. நரசிம்ம அவதாரம் பற்றி முதன் முதலில் முழுமையாக சொன்னவர் கம்பர்தான்.
9. திருத்தக்கதேவர் தனது சீவக சிந்தாமணியில், “இரணியன்பட்ட தெம்மிறை எய்தினான்” என்று நரசிம்ம அவதாரம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
10. இரணியனின் ரத்தத்தை குடித்ததால் சீற்றம் பெற்ற நரசிம்மரின் ரத்தத்தை சிவன் சரபப்பறவையாக வந்து குடித்தார். இதன்பிறகே நரசிம்மரின் சீற்றம் தணிந்ததாக சொல்வார்கள். இந்த தகவல் அபிதான சிந்தாமணியில் கூறப்பட்டுள்ளது.
11. சோளிங்கரின் உண்மையான பெயர் சோழசிங்கபுரம். நரசிம்மரின் பெருமையை பெயரிலேயே கூறும் இந்த ஊர் பெயரை ஆங்கிலேயர்கள் சரியாக உச்சரிக்க இயலாமல், அது சோளிங்கர் என்றாகிப் போனது.
12. சிங்க பெருமாள் கோவில், மட்டப்பள்ளி, யாதகிரிகட்டா, மங்கள கிரி ஆகிய தலங்களில் நரசிம்மர் சன்னதிகள் குகைக் கோவிலாக உள்ளன.
13. கீழ் அகோபிலத்தில் நாம் கொடுக்கும் பாகை நைவேந்தியத்தில் பாதியை நரசிம்மர் ஏற்றுக் கொண்டு மீதியை அவர் வாய் வழியே வழிய விட்டு நமக்கு பிரசாதமாக தருவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
14. நங்கநல்லூர் நரசிம்மர் ஆலயம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் இதை 1974-ம் ஆண்டு கண்டுபிடித்து வெளிப்படுத்தினார்கள்.
15. சிவனை கடவுளாக ஏற்ற ஆதிசங்கரர், ஸ்ரீலட்சுமி நரசிம்மரைப் போற்றித் துதித்ததும் அவருக்கு உடனே நரசிம்மர் காட்சி கொடுத்தார்.
16. நரசிம்ம அவதாரத்தை எப்போது படித்தாலும் சரி, படித்து முடித்ததும் பாகைம், பழவகைகள், இளநீரை நிவேதனமாக படைத்து வணங்குதல் வேண்டும்.
17. “எல்லா பொருட்கள் உள்ளேயும் நான் இருக்கிறேன்” என்பதை உணர்த்தவே பகவான், நரசிம்ம அவதாரம் எடுத்தார். எனவே நரசிம்மரை எங்கும் தொழலாம்.
18. திருமாலின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரமாகும்.
19. நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும், இடையில் புருவ மத்தியில் அக்னியும் உள்ளனர்.
20. நரசிம்மன் என்றால் ஒளிப்பிழம்பு என்று அர்த்தம்.
21. நரசிம்மனின் தேஜஸ்காயத்ரி மந்திரத்துக்குள்ளே இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
22. நரசிம்ம அவதாரம் பற்றி ஜெர்மன் அறிஞர் மாக்ஸ்முல்லர் கூறுகையில், `An Electric Phenomenon’ என்று கூறி உள்ளார்.
23. இரண்யகசிபுவை வதம் செய்த போது எழுந்த நரசிம்மரின் இம்ம கர்ஜனை 7 உலகங்களையும் கடந்து சென்றதாக குறிப்புகள் உள்ளது.
24. மகாலட்சுமிக்கு பத்ரா என்றும் ஒரு பெயர் உண்டு. இதனால் நரசிம்மனை பத்ரன் என்றும் சொல்வார்கள். பத்ரன் என்றால் மங்களமூர்த்தி என்று அர்த்தம்.
25. பகவான் பல அவதாரங்களை எடுத்தாலும், அவனுடைய நாமங்கள் இறுதியில் நரசிம்மரிடத்திலேதான் போய் முடியும் என்று கருதப்படுகிறது.
26. சகஸ்ரநாமத்தில் முதன் முதலாக நரசிம்ம அவதாரம்தான் இடம் பெற்றுள்ளது.
27. நரசிம்ம அவதாரத்தை எதைக் கொண்டும் அளவிட முடியாது என்ற சிறப்பு உண்டு.
28. ராமாயணம், மகாபாரதம், பாகவதம்,
18 புராணங்கள், உப புராணங்கள் அனைத்திலும் நரசிம்மருடைய சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.
29. நரசிம்ம மந்திரம் ஒரு எழுத்தில் தொடங்கி, ஒரு லட்சத்து நூற்றி முப்பத்திரண்டு என்று விரிந்து கொண்டே போய் பலன் தரக்கூடியது.
30. நரசிம்மர் எங்கெல்லாம் அருள் தருகிறாரோ, அங்கெல்லாம் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார்.
31. வேதாத்ரியில் உள்ள யோக நரசிம்மர் இடுப்பில் கத்தி வைத்துக் கொண்டிருக்கிறார். அறுவை சிகிச்சைக்கு செல்பவர்கள் இவரை வணங்கி சென்றால் நல்ல பலன் கிடைக்கும்.
32. வாடபல்லி தலத்தில் உள்ள நரசிம்மரின் மூக்குக்கு எதிரில் ஒரு தீபம் ஏற்றப்படும். அந்த தீபம் காற்றில் அசைவது போல அசையும், நரசிம்மரின் மூச்சுக் காற்று பட்டு அந்த தீபம் அசைவதாகக் கருதப்படுகிறது. அதே சமயத்தில் நரசிம்மரின் கால் பகுதியில் ஏற்றப்படும் தீபம் ஆடாமல் அசையாமல் நின்று எரியும்.
33. மட்டபல்லியில் உள்ள நரசிம்மரை வணங்கினால் மன சஞ்சலங்கள் நீங்கும்.
34. நரசிம்மரை வழிபடும் போது “ஸ்ரீநரசிம்ஹாய நம” என்று சொல்லி ஒரு பூ-வைப் போட்டு வழிபட்டாலே எல்லா வித்தையும் கற்ற பலன் உண்டாகும்.
35. “அடித்த கை பிடித்த பெருமாள்” என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது பக்தர்கள் உரிமையோடு அடித்து கேட்ட மறு வினாடியே உதவுபவன் என்று இதற்கு பொருள்.
36. நரசிம்மனிடம் பிரகலாதன் போல நாம் பக்தி கொண்டிருக்க வேண்டும். அத்தகைய பக்தி இருந்தால் அதைகொடு, இதை கொடு என்று கேட்க வேண்டியதே இல்லை.
37. எல்லா வற்றிலுமே நரசிம்மர் நிறைந்து இருக்கிறார். எனவே நீங்கள் கேட்காமலே அவர் உங்களுக்கு வாரி, வாரி வழங்குவார். நரசிம்மரை ம்ருத்யுவேஸ்வாகா என்று கூறி வழிபட்டால் மரண பயம் நீங்கும்.
38. ஆந்திராவில் நரசிம்மருக்கு நிறைய கோவில் இருக்கிறது. சிம்ஹசலம் கோவிலில் மூலவரின் உக்கிரத்தை குறைக்க வருடம் முழுவதும் சிலையின் மீது சந்தனம் பூசி மூடி வைத்திருப்பார்கள். வருடத்தில் ஒரு நாள் மூலவரை சந்தனம் இல்லாமல் பார்க்க முடியும்.
39. மங்களகிரி கோவிலில் உக்கிரத்தை குறைக்க பானகம் ஊற்றி கொண்டே இருப்பார்கள். மூலவரின் பெயரும் பானக லட்சுமி நரசிம்ம சுவாமி.
40. யோகா சொல்லி கொடுக்கும் நரசிம்மர் கோவில்கள் பல உண்டு. ஆமை அவதாரத்தில் உள்ள ஸ்ரீகூர்மம் கோவில் எதிரிலும் ஒரு யோகானந்த நரசிம்ம சுவாமி கோவில் உண்டு. வேதாத்ரி என்ற ஊரில் பஞ்ச நரசிம்ம மூர்த்தி தான் மூலவர்.
அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்தோர் மீது நடவடிக்கை கோரி போக்குவரத்துப் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
மதுரை:
மதுரை மாவட்டம் மேலூர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஜன.28 ஆம் தேதி, நடத்துனர் பாஸ்கரனை தாக்கிய அண்ணா தொழிற் சங்கத்தை சேர்ந்த 13 பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பேருந்துகளை இயக்காமல் போக்குவரத்துப் பணியாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்..
இந்நிலையில் உடனடி நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது,
உறுதியளித்தபடி நடவடிக்கை எடுக்காவிட்டால் , மாவட்டத்திலுள்ள அனைத்து கிளைகளிலும் போராட்டம் நடைபெறும் என மத்திய தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
திமுகவுக்கு பிரச்சாரம் செய்ய நடிகர் விஜய் முடிவு
கடந்த, 2011 சட்டசபை தேர்தலின் போது அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் பணியில் ஈடுபட்டார் நடிகர் விஜய். ஆனால், தேர்தலுக்கு பின்னர் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்காத அதிமுக அரசு, விஜய்யின் பல படங்களுக்கு அரசியல் கட்சிகளிடம் இருந்து எதிர்ப்புகள் ஏற்பட்டன.
இதனால் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க விஜய் அனுமதி கேட்டும் கிடைக்கவில்லை. அதிமுகவின் செயல்பாட்டால் அதிருப்தியடைந்த விஜய்யும் அவரது தந்தையும் திமுகவிற்காக பிரச்சாரம் செய்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. கத்தி திரைப்படத்தில் திமுகக்கு எதிராக வசனம் பேசி விஜய் சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது

