Home Blog Page 5823

கெயில் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ்

தமிழகத்தில் கெயில் திட்டம் செயல்படுத்த உச்ச நீதிமன்றத்தில் அனுமதியளித்துள்ளது குறித்து கருத்து ராமதாஸ் கருத்து தெரிவிக்கையில், கெயில் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் அல்லது சாலையோரத்தில் பதிக்கும்படி ஆணையிட மத்திய அரசை ஜெயலலிதா வலியுறுத்த வேண்டும்” என்று கூறினார்.

மோடிக்கு கறுப்பு கொடி காட்ட முயற்சித்த 213 பேர் கைது

கோவையில் பிரதமர் மோடிக்கு கறுப்பு கொடி காட்ட முயற்சித்த 213 பேர் கைது செய்யப்பட்டனர் . பிரதமர் மோடி இன்று கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். ஐதரபாத் பல்கலை மாணவன் தற்கொலை செய்தமைக்கு மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கோவை அவினாசி ரோடு லட்சுமி மில் அருகே தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மற்றும் மாணவ, அமைப்பினர் கறுப்புக்கொடி காட்ட ஒன்று திரண்டனர் போலீசார் அவர்களை தடுத்து கைது செய்தனர்.

கெயில் எரிவாயு திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி

தமிழகத்தில் கெயில் எரிவாயு திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும் கெயில் எரிவாயு திட்டத்தை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்ய மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. விளைநிலைங்கள் வழியாக எரிவாயு குழாயை பதிக்க எந்தவித தடையும் கிடையாது என குறிப்பிட்டுள்ள உச்சநீதிமன்றம், எரிவாயு குழாயை பதிக்கும் பாதையை மாற்றி அமைக்க தமிழக அரசிற்கு எந்தவித உரிமையும் கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தற்போதைய சந்தை விலையை கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு 40 சதவிகிதம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருச்சியில் அன்பு மணி ராமதாஸ் தலைமையில் மது ஒழிப்பு ஆர்ப்பாட்டம்

திருச்சியில் நடந்த மது ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் பாமக முதல் வேட்பாளர் அன்பு மணி ராமதாஸ் பங்கேற்றார். இந்த போராட்டத்தில் கட்சியின் மகளிர் அணியினர் பங்கேற்றனர். பெண்கள் மத்தியில் சென்ற அன்பு மணிராமதாஸ், நடுவில் நின்று கொண்டு மது ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக போட்டியிட விருப்ப மனு தாக்கல் நாளையுடன் முடிகிறது.

அ.தி.மு.க.வில் விருப்ப மனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நாளை(புதன்கிழமை) மாலை 5.30 மணியுடன் முடிவடைய உள்ளது. தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்பும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் இருந்து கடந்த 20-ந்தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வந்தது. இது நாளையுடன் முடிகிறது.

வாக்குச் சாவடியில் கூட்டம் உள்ளதை எஸ்.எம்.எஸ். மூலம் தெரிந்து கொள்ளலாம்

வாக்காளர்கள் வீட்டில் இருந்து கொண்டே தங்கள் வாக்களிக்கும் வாக்குச் சாவடியில் கூட்டம் எவ்வளவு உள்ளது? வரிசையில் எத்தனை பேர் உள்ளனர்? என்பதை தெரிந்து கொள்வதற்காக, வாக்காளர்கள் தங்கள் செல்போனில் ‘கியூ’ என்று டைப் செய்து, சற்று இடைவெளி விட்டு தங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை டைப் செய்து, ‘1950’ என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால், தங்கள் வாக்குச்சாவடியில் வரிசையில் எத்தனை பேர் இருக்கிறார்கள், எப்போது வந்தால் சீக்கிரமாக வாக்களித்துவிட்டு செல்ல முடியும் என்ற தகவலை பெற முடியும். இந்த வசதி சென்னையில் முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

மோடி-கமல் சந்திப்பு ரத்து

இன்று கோவை வந்திருக்கும் பிரதமர் மோடியை நடிகர் கமல் சந்திப்பார் என்று கூறப்பட்ட நிலையில் அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. நடிகர் கமல் பிரதமரை சந்திக்க தன்னோடு நடிகர் சங்கத்தினரும் சந்திக்க பிரதமரிடம்  நேரம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் பிரதமர் இன்று கோவையைச் சேர்ந்தவர்களை மற்றும் இன்று சந்திக்க இருப்பதால் கமல் மோடி சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் தேசிய சப் ஜுனியர் கூடைபந்து போட்டி பயிற்சியில் ஈடுபட்ட பிரியாங்கா மகள் மிராயா

புதுச்சேரியில் தேசிய சப் ஜுனியர் கூடைபந்து போட்டி போட்டிகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி இன்று மாலை துவக்கி வைக்க உள்ளார். இந்த போட்டிகளில் அரியான அணியில் காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தியின் மகளான பிரியங்காவின் மகள் பங்கேற்கிறார். இதற்காக பிரியங்கா தனது மகன் ரேகன் வதேரா, மகள் மெய்ரா வதேரா ஆகியோருடன் நேற்று புதுச்சேரி வந்தார். டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவர்கள் கார் மூலம் புதுச்சேரிக்கு வந்தனர். இங்கு பழைய கோர்ட்டு வளாகம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் அவர்கள் தங்கியுள்ளனர்.
பிரியங்காவின் வருகை குறித்து புதுவை காங்கிரஸ் தலைவர்கள் யாருக்கும் தகவல் தெரிவிக்கப்படவில்லை. தனிப்பட்ட முறையில் பிரியங்கா வந்துள்ளதால் அவரை சந்திக்க காங்கிரசாருக்கும் அனுமதியில்லை என்று கூறப்படுகிறது.
.

குறுகிய கால கடன் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்

வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மும்பையில் நடந்த கடன் கொள்ளை ஆய்வுக் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்துள்ளார்.

ராஜ்கோட் அணிக்கு பயிற்சியாளராக பிராட் ஹாட்ஜ் நியமனம்

ஐபிஎல் ராஜ்கோட் அணிக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாட்ஜ் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.  இந்த அணியில் ரெய்னா, அஜிங்க்ய ரஹானே, அஸ்வின், ஸ்டீவ் ஸ்மித், டுபிளெஸ்ஸி ஆகியோர் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது