Home Blog Page 5832

நாட்டு விடுதலைக்காக போராடிய தியாகிகளுக்கு மரியாதை செலுத்துவதை தேசிய நடவடிக்கையாகவே அரசு கருதுகிறது: மோடி

வானொலி வாயிலாக நாட்டு மக்களுடன் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலமாக உரை நிகழ்த்தும் பிரதமர் நரேந்திர மோடியின் 16-வது வானொலி உரை இன்று காலை 11 மணிக்கு ஒலிபரப்பானது.

இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, “காதி” தற்போதைய அளவில் நமது தேசிய சின்னமாக மாறியுள்ளது. இதன்மூலம், கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது. காதி பொருட்களிலேயே, நமது சுதந்திரம் அடங்கியுள்ளதாக சர்தார் வல்லபாய் படேல் கூறியுள்ளார். ஹரியானாவில், பெண் குழந்தைகளை காக்க புதிய திட்டம் கொண்டுவந்துள்ளதற்கு அம்மாநில அரசிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என கூறினார்

இறுதிச்சுற்று – IRUTHI SUTRU – ஜெயிக்கும் …

அலைபாயுதே வில் அறிமுகமாகி மின்னலே , ரன் வெற்றிகளின் மூலம் தனக்கென்று ஒரு தனி மார்க்கெட்டை ஏற்படுத்திக்கொண்டவர்மாதவன். ஹீரோவாக மட்டும் வளம்  வர நினைக்காமல் பீக்கில் இருக்கும் போதே ஆயுத எழுத்து படத்துக்காக மொட்டை போட்டுக்கொண்டு வில்லனாக நடித்து மற்ற கமர்சியல் ஹீரோக்களை விட பல படிகள் மேலே சென்றவர் . ஆனால் அப்படிப்பட்டவரை மன்மதன்அம்பு , வேட்டை படங்களில் ஒரு ஜோக்கர் போல பார்க்க நேர்ந்தது காலக்கொடுமை . இதோ அதற்கு பிராயச்சித்தம் போல இத்தனை வருட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கிறதுஇறுதிச்சுற்று…

தன்னால் சாதிக்க முடியாததை தனது மாணவி மூலம் சாதிக்க நினைக்கும் ஒரு குத்துச்சண்டை வீரனின் கதை தான் இறுதிச்சுற்று . ஏற்கனவே பார்த்துப்பழகிய ( வெற்றி மேல் வெற்றி , குமரன் S / O மகாலட்சுமி etc …) கதைக்கு யதார்த்தமான அதேசமயம் க்ரிப்பான திரைக்கதையால் மெருகேற்றியிருக்கிறார் இயக்குனர்சுதா கோங்குரா…

மாதவன்அழகாக இருந்தாலும் அவரிடம் உள்ள  சாக்லேட் பாய் இமேஜ் நெருடும் . வெறும் உடம்புடன் வரும் முதல் சீனிலேயே அதை சுத்தமாக உடைத்தெறிந்து நம்மை உள்வாங்குகிறார் மேன்லி மாதவன் . இந்த உடற்கட்டுக்காக வருடக்கணக்கில் அவர் போட்ட உழைப்பு வீண்போகவில்லை .  மனைவி ஓடிப்போனதை சொல்லும் போது காட்டும் ஆதங்கம் , மாணவி வேண்டுமென்றே தோற்கும் போது காட்டும் கோபம் , நீ அவ்ளோ தாண்டா என்று சொல்லும் போது காட்டும் நக்கல் என படம் முழுவதும் கோபக்கார கோச் பிரபு வாக வியாபித்து நிற்கிறார் மாதவன் . இனிமேல் இது போன்ற படங்களில் அவர் கவனம் செலுத்துவார்  என்று நம்புவோமாக …

மதி ரோலுக்கு பாக்சர்ரித்திகா சிங்கை தேர்ந்தெடுத்ததோடு விட்டு விடாமல் அவர் முதல் படம் என்றே தெரியாத அளவுக்கு நடிக்க வைத்திருக்கும் இயக்குனருக்கு ஒரு பூச்செண்டு . பொண்ணு பின்னி பெடெலெடுத்திருக்கு . மாதவனுக்கு ஈக்குவலாக ஏன் ஒரு படி மேலாகவே ரித்திகா நம்மை கவர்கிறார் என்றால் மிகையாகாது . வேண்டுமென்றே தோற்று விட்டு மாதவனை பார்த்து நக்கலாக சிரிக்கும் இடம் ஒன்றே போதும் இந்த பொண்ணோட திறமைக்கு சான்று …

மதியின் அக்கா லக்ஸ் (மும்தாஸ்) கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்ததன் மூலம் ஸ்போர்ட்ஸ் டெம்ப்ளேட் டிலிருந்து  சற்று விலகி நிற்கிறது படம் . எனக்கு ஏன் மாஸ்டர் நீங்க அவள  மாதிரி கோச்சிங் கொடுக்கல என்று அவர் ஆதங்கப்படுவதும் , அதற்கு மாதவன் பதிலளிப்பதும் உருக்கம் . காளி வெங்கட் , ராதா ரவி குறிப்பாகநாசர்என எல்லோருமே இறுதிச்சுற்றில் நம்மை இறுக்கிப்பிடிக்கிறார்கள் . ஏற்கனவே லீ படத்தில் பார்த்த அதே ரோலில் ஜாகிர் ஹுசைன் . இவர் மாதவனிடம் பேச்சோடு பேச்சாக ஐடி கார்டை வாங்கும் இடம் படத்துக்கு ஹைலைட் . சந்தோஷ் நாராயணின் இசை , சிவகுமார் சூரியனின் ஒளிப்பதிவு , சதீஷ் சூரியா வின் எடிட்டிங் என எல்லாமுமே படத்துக்கு மேலும் பலம் சேர்க்கின்றன . அருண் மகேஸ்வரனின் கவுச்சியான வசனங்கள் கவுதம் மேனன் படங்களை சில நேரம் நினைவு படுத்தினாலும் நிறைவு …

உலக அளவில் நிறைய படங்களில் பார்த்த வாழ்ந்து கெட்ட கோச்சின் கதை , அதில் வழக்கமான அரசியல் பண்ணும் வில்லன் , மாஸ்டரின் பேரைக் காப்பாற்றும் மாணவி என கதையில் எதுவுமே புதுசாக இல்லாமல் போனாலும் கேரக்டர்களுக்குள் நம்மை கொண்டு செல்லும் டீட்டைளிங்கிலும், ( குறிப்பாக மாதவன் வரும் முதல் சீனிலேயே அவர் எப்படிப்பட்டவர் என்பதை சொன்ன விதம் ) ப்ரெசெண்டேசனிலும் தான் மணிரத்னத்தின் மாணவி என்று நிரூபிக்கிறார் சுதா கோங்குரா . இது போன்ற கதைகளில் கிளைமேக்சில் ஒரு சண்டை வரும், அதில் முதலில் அடி வாங்கும் லீட் கேரக்டர் பிறகு எதிராளியை வீழ்த்தி ஜெயிக்கும் என்று தெரிந்த சீனாக இருந்தாலும் இதில் மதி ஜெயிக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பை நம்முள் விதைத்த விதத்தில் ஜெயிக்கிறார் இயக்குனர் . விளையாட்டுத் துறையில் இருக்கும் அரசியல் , ஆணாதிக்கம் , அதிகார துஷ்பிரயோகம் இவற்றை அழுத்தமாக சொன்ன விதத்திலும் , இரண்டு மணி நேர படம் முடிந்த பிறகும்  பிரபு , மதி இருவரையும் பற்றி நம்மை நினைக்க வைத்த வகையிலும் இறுதிச்சுற்று ஜெயிக்கும் …

ரேட்டிங்  :3.5 * / 5 *

ஸ்கோர் கார்ட் :44

விமர்சனம் – பேசலாம் ப்ளாக்கலாம் அனந்து

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மறுப்பதா?: ராமதாஸ் ஆவேசம்

சென்னை:

அரசு ஊழியர் ஆசிரியர் கோரிக்கைகளை நிறைவேற்ற மறுப்பதா என பாமக நிறுவுனர் ராமதாஸ் ஆவேசத்துடன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:

முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசுக்கு சமத்துவம் காக்கும் அரசு என்று விருது  வழங்கலாம். ஒரு பிரிவினருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி, இன்னொரு பிரிவினருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருக்கும் பாரபட்சமான அணுகுமுறையை பின்பற்றக்கூடாது  என்பதில் ஜெயலலிதா உறுதியாக இருக்கிறார். அதனால் தான் 5 ஆண்டுகளாக எந்த பிரிவினருக்கும் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத மக்கள் விரோத ஆட்சியை ஜெயலலிதா நடத்தி வருகிறார்.

ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும், புதிய ஓய்வூதிய முறையை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய முறையை நடைமுறைப்படுத்த வேண்டும், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் தேவை என்பன உள்ளிட்ட 15 அம்ச  கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ கடந்த பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகிறது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த அமைப்பினர் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி சென்னையில் உண்ணாநிலை போராட்டம் நடத்தினர். அப்போராட்டத்தில் நான் பங்கேற்று ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தேன். அதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர்  மாதம் 8ஆம் தேதி இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டனர். அதன்பிறகும் அவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை. அதனால் ஆசிரியர்கள் நேற்று முதல் 3 நாட்களுக்கு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அதுமட்டுமின்றி, நாளை ஒரு நாள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டமும் நடத்தவுள்ளனர். இதனால் தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சுமார் ஒரு கோடி மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும்.

அதேபோல், புதிய ஓய்வூதிய முறையை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய முறையை நடைமுறைப்படுத்த வேண்டும், ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட 60 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் பிப்ரவரி  8&ஆம் தேதி சென்னையில் உண்ணாநிலை போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். அந்த போராட்டத்திற்கு பலன் கிடைக்கவில்லை என்றால் போராட்டத்தை தீவிரப்படுத்தவும் அரசு ஊழியர்கள் திட்டமிட்டுள்ளனர். அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டால் ஒட்டுமொத்த நிர்வாகமும்  நிலைகுலைந்து விடும். தமிழகத்திற்கோ, தமிழக மக்கள் நலனுக்கோ இது எந்த வகையிலும் நல்லதல்ல.

தமிழக மக்களின் நலனில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அக்கறை இருந்தால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து பேசி தீர்வு கண்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்ய தமிழக அரசு தவறிவிட்டது. மாறாக அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை  காவல்துறை மூலம் கைது செய்திருக்கிறது. அதேபோல், தங்கள் கோரிக்கைகள் பற்றி விளக்குவதற்காக சந்திக்க வந்த அரசு ஊழியர்களை நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும், தலைமைச் செயலாளர் ஞானதேசிகனும் பல மணி நேரம் காத்திருக்க வைத்து சந்திக்காமல் திருப்பி அனுப்பியுள்ளனர். பல  கட்ட முயற்சிகளுக்கு பிறகு தங்களை சந்தித்த அரசு ஊழியர்களிடம் எந்த வாக்குறுதியும் அளிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால் அரசு ஊழியர்களின் உண்ணாநிலை போராட்டம் உறுதியாகியுள்ளது.

2011&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில்,‘‘அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு, பணி வரன்முறை உள்ளிட்ட அனைத்து குறைபாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் அவ்வப்போது நிறைவு செய்யப்படும். அரசு நிர்வாகத்தில் இருக்கும் துறை மற்றும் நிர்வாக ரீதியான பணி சிக்கல்கள் ஆராயப்பட்டு அவற்றை சீராக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்பின் தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிமுக ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதிய முறைக்கு பதிலாக பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். ஆனால், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றவில்லையோ, அதேபோல் அரசு ஊழியர்களுக்கு தந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல் ஏமாற்றி விட்டார். முந்தைய ஆட்சியின் போது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வேலைநிறுத்தம் மேற்கொண்ட அரசு ஊழியர்களை நள்ளிரவில் கைது செய்ததுடன், ஒரே கையெழுத்தில் 2 லட்சம் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்த ஜெயலலிதா, இன்னும் திருந்தவில்லை என்பதையே அவரது செயல்கள் காட்டுகின்றன. அப்படிப்பட்ட ஜெயலலிதா வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்ற மாட்டார்.

தமிழக அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என பா.ம.க. விரும்புகிறது. அவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் பா.ம.க. வரைவுத் தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளை பா.ம.க. முதலமைச்சர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அடுத்த சில நாட்களில் சந்தித்து பேசி, சமூக ஒப்பந்தம் செய்து கொள்ளவுள்ளார். பா.ம.க. ஆட்சிக்கு வந்தவுடன் சமூக ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து கோரிக்கைகளும் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்று உறுதி அளிக்கிறேன்.

வாக்குறுதியை நிறைவேற்றாத ஜெ. அரசுக்கு சமத்துவம் காக்கும் விருது: ராமதாஸ் பரிந்துரை

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசுக்கு சமத்துவம் காக்கும் அரசு என்று விருது வழங்கலாம். ஒரு பிரிவினருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி, இன்னொரு பிரிவினருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருக்கும் பாரபட்சமான அணுகுமுறையை பின்பற்றக்கூடாது  என்பதில் ஜெயலலிதா உறுதியாக இருக்கிறார். அதனால் தான் 5 ஆண்டுகளாக எந்த பிரிவினருக்கும் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத மக்கள் விரோத ஆட்சியை ஜெயலலிதா நடத்தி வருகிறார்.

ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும், புதிய ஓய்வூதிய முறையை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய முறையை நடைமுறைப்படுத்த வேண்டும், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் தேவை என்பன உள்ளிட்ட 15 அம்ச  கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ கடந்த பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகிறது.

தமிழக அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என பா.ம.க. விரும்புகிறது. அவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் பா.ம.க. வரைவுத் தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளை பா.ம.க. முதலமைச்சர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அடுத்த சில நாட்களில் சந்தித்து பேசி, சமூக ஒப்பந்தம் செய்து கொள்ளவுள்ளார். பா.ம.க. ஆட்சிக்கு வந்தவுடன் சமூக ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து கோரிக்கைகளும் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார்.  

ஜிகா பாதிப்புள்ள நாடுகளில் இருந்து இந்தியா வருவோரை விமான நிலையத்திலேயே சோதனை செய்ய மத்திய அரசு உத்தரவு

ஜிகா பாதிப்புள்ள நாடுகளில் இருந்து இந்தியா வருவோரை விமான நிலையத்திலேயே சோதனை செய்ய மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கர்ப்பத்தில் வளரும் குழந்தைகளை தாக்கும், கொடிய ‘ஜிகா’ (zika virus) வைரஸ், கரீபியன் மற்றும் அமெரிக்க நாடுகளில் வெகுவேகமாக பரவி வருகிறது.

இந்த வைரசால், கர்ப்பத்தில் வளரும் குழந்தைகளுக்கு நரம்பியல் தொடர்பான கோளாறுகள் ஏற்படும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், ‘ஜிகா’ வைரஸ் பாதிப்புள்ள 24 நாடுகளுக்கு செல்வதை கர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், இந்தியாவில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும், கரீபியன் மற்றும் அமெரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகள் காய்ச்சல், உடல் அரிப்பு, விழி வெண்படல அழற்சி மற்றும் தசை வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் அது குறித்து தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

செல்ஃபி சூழ் உலகு – குறும்படம்

ன்னை முன் நிறுத்த வழி தேடிக் கொண்டேயிருக்கிறது மனது. அப்படிச் செய்யாது போனால் காணாது போய்விடுவோமோ எனப் பதறுகிறது. நாளின் நகர்வை, பெருமை பேசும் மணித்துளிகளை, பரவச நொடிகளை சோஷியல் மீடியாக்களில் பகிர்வது ஒருவகை உற்சாகத்தை அளிப்பதாக நம்புகிறது. சுய விளம்பரங்களில் தவறில்லை என்கிறது. நல்லது செய்வதை நான்கு பேர் அறியச் செய்வது மேலும் பலரைச் சிந்திக்க வைக்குமல்லவா என்று சமாதானம் சொல்கிறது. அது உண்மையாவும் இருக்கலாம். ஆனால் இவற்றைத் தாண்டி ஒரு அழகான உலகம் இருக்கிறது என்பதை அருமையாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர் உழவன் (நவநீத்) இந்தக் குறும்படத்தில்.

கேமரா, பின்னணி இசை, காட்சிகளைத் தொகுத்த விதம் (எடிட்டிங்) அனைத்தும் அருமை. செருப்புகள் இல்லாததை ஒரு பொருட்டாக எண்ணாமல் வெற்றுப் பாதங்களுடன் துள்ளிச் செல்லும் சிறுமியும், அவள் மனதில் இடம் பிடித்து அழகியதொரு பரிசைப் பெறும் சிறுமியும் மனதில் நிற்கிறார்கள். உதவும் குணம், இருக்கிறவருக்கு மட்டுமேயானது அல்ல, இல்லாதவர் மனதிலும் இருக்கிறது இருமடங்கு ஈரம். தனக்கே இல்லாத நிலையிலும் தானம். சிந்தித்து அமைக்கப்பட்ட திரைக்கதை.

 

எதிர்பார்ப்புகள் இல்லாமல் நல்லன செய்தலை வாழ்வின் ஒரு இயல்பாக கொண்டு வாழ்பவருக்கு சமர்ப்பிக்கப் பட்டிருக்கும் இக்குறும்படத்தை உருவாக்கிய M Pictures குழுவினருக்குப் பாராட்டுகள். செல்ஃபி சூழ் உலகு, 2015 கோயம்புத்தூர் குறும்பட விழாவில் முதல் பத்தில் தேர்வாகி விருது பெற்ற படம் என்பது கூடுதல் தகவல்.

தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் ஆர்பாட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு

தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 22 ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த 3000 க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டில் மாபெரும் ஆர்பாட்டம்.2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு பாதிக்கப்பட்டது.

2-க்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்யா விட்டால் சிறை தண்டனை: எரித்திரியா அரசு எச்சரிக்கை

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எரித்திரியாவில் உள்ள ஒவ்வொரு ஆணும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்றும், மீறினால் சிறை தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.  இந்த திருமணத்திற்கு ஆகும் செலவுகள் மற்றும் புதிய வீடுகளில் குடியேறுவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கமே செலவு செய்யும் எனவும் அந்த அரசு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஆயுள் தண்டனைக்கூட விதிக்க வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  எரித்திரியா நாட்டில் ஆண்களை விட பெண்களே அதிக எண்ணிக்கையில் இருப்பதால் இந்த அதிரடி உத்தரவிற்கு காரணம் என கூறப்படுகிறது.

ஈரான் அதிபருக்கு எதிராக தூக்கு கயிற்றில் தொங்கி போராட்டம்

பிரான்ஸ் நாட்டிற்கு சென்றுள்ள ஈரான் அதிபர் ஹசன் ருஹானி கண்டித்து பெண்ணுரிமை அமைப்பை சேர்ந்த பெண்மணி ஒருவர் போலியான தூக்கு கயிற்றில் தொங்கியவாறு அரைநிர்வாணமாக போராட்டம் நடத்தியுள்ளார்.

இந்த போராட்டம் குறித்து அவர் கூறியதாவது, ஈரான் நாட்டில் மனித உரிமை மீறல்கள் அதிகமாக நடக்கின்றன, ஒவ்வொரு ஆண்டும் 800 பேருக்கும் அதிகமானோருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படுகின்றன, இது தொடர்பான வன்முறைகளுக்கு எதிரான தீர்வுகள்  ஈரான் அதிபர் ஹசன் ருஹானி ஆட்சியில் மேம்படுத்தப்படவில்லை.

மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில், பெண்ணுரிமைவாதிகள், பெண்கள், ஓரினச்சேர்க்கையாளர்களும் அடங்குவர், தனிப்பட்ட சிந்தனையுடையவர்கள் என்ற காரணத்தினாலேயே இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஈரான் ஜனாதிபதியை வரவேற்றுள்ள, பிரான்ஸ் ஜனாதிபதி ஹோலண்டேவுக்கு மனித உரிமை மீறல்கள் முக்கியமில்லை, அவருக்கு பொருளாதார ஒப்பந்தங்கள் மட்டுமே முக்கியமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

கிப்ரால்டரில் செஸ் போட்டி: விஸ்வநாதன் ஆனந்த் 2-வது சுற்றில் டிரா

இங்கிலாந்து நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள கிப்ரால்டரில் நடந்து வரும் நான்காவது மாஸ்டர்ஸ் ஓபன் செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், ரஷ்யா கிராண்ட் மாஸ்டர் கிரிகோரி ஒப்ரின் (Grigoriy Oparin) இடையேயான போட்டி டிராவில் முடிந்தது. இந்த வகையிலான போட்டி யில் 23 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கிய விஸ்வநாதன் ஆனந்த் டிரா செய்த 2-வது ஆட்டம் இதுவாகும். ஆனந்த் தனது முதல் சுற்றில் ஹங் கேரி வீராங்கனை வஜ்டா எதிர் கொண்டார். இந்த ஆட்டமும்  டிராவில் முடிவ டைந்தது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஆறு சுற்றுக்குள் உள்ள நிலையில் ஆனந்த் மற்றும் நாகமுரா இருவரும் 14-வது இடத்தில் உள்ளனர்.