Home Blog Page 5875

கோவிலை அல்ல; குடும்ப அமைப்பை எதிர்க்கிறார்கள்

நம் கலச்சாரத்தில் குடும்பமே அடிப்படை, அதை ஒட்டியே அனைத்தும் கட்டமைக்கப்படுகிறது தேசம் எனும் வீட்டின் அஸ்திவாரமாக, சிறு சிறு செங்கற்களாக விளங்குவது நம் நாட்டின் குடும்ப அமைப்பு முறையே. என்று நம் நாட்டின் குடும்ப அமைப்பு முறை சீரழிகிறதோ அன்று நம் நாடும் பாழடையும், குடும்பமே இங்கு அனைத்துமாக உள்ளது. ஓர் உதாரணம் : உலகமெங்கும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபொழுது, மென்பொருள் துறை வீழ்ச்சி அடைந்த பொழுது உலக நாடுகளில் இதன் தாக்கம் எதிரொலித்த பொழுது நம் பாரத நாடு அசராமல் தைரியமாக இருந்தது, காரணம் நம் குடும்ப பெண்களிடம், தாய்மார்களிடம் இயல்பாகவே இருக்கும் சேமிக்கும் பழக்கம், நெருக்கடி நிலையில் பலர் வேலையை இழந்த பொழுது இந்த சேமிப்புப் பணம் பலரின் குடும்பங்களைக் காப்பற்றியது. சேமிக்கும் பழக்கம் இயல்பாகவே நமக்கு நம் முன்னோர்களால் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

ஒரு குழந்தையின் முதல் படிப்பிடம், பள்ளி, குடும்பம் அங்கு தான் அதன் வாழ்க்கையின் முதல் அத்தியாயம் செதுக்கப்படுகிறது, ‘முதல் கோணல் முற்றும் கோணல்’ என்பது போல முதல் செதுக்களில் ‘உழி’ தவறுதலாக விழுமாயின் வாழ்வும் தவறிவிடும். இதை உணர்ந்திருந்த நம் முன்னோர் நம்மை குடும்பம் எனும் அடைப்புகுறியில் ஆன்மிகம் எனும் அரண் அமைத்துக் காத்தனர். இன்று குடும்பமும் நம் அடிப்படை ஆன்மிகமும் சிலரால் கேள்விக்குறியாகப்படுவது வாடிக்கையாகிவிட்டது.

தனிமனித சுதந்திரம், நவீனத்துவம், நவீன நாகரிகம் எனும் பெயரில் அனைத்திற்கும் மாற்று என்று கொடி பிடிக்கும் காலம் இன்று. பாரதத்தின் வேர் ஆன்மிகத்தில் பலமாக ஊன்றி இருப்பதால் ஆன்மிக அடிப்படையை அழிப்பதாக நினைத்து கொண்டு; ஆன்மிகத்தின் வேரை அறுப்பதாக நினைத்துக் கொண்டு சிலர் செய்யும் காரியம் நம் குடும்ப வாழ்வியலை சிதைக்கிறது. நம்மைப் பொறுத்தவரையில் கோயில் என்பது நம் குடும்பத்தின் ஒரு அங்கம், எந்த ஒரு செயலும் நமக்கு கோயிலின் வாசற்படிகளில் இருந்தே தொடங்குகிறது. அந்தக் கோயிலின் அரவனைப்பில் இருந்து நம்மை அன்னியப்படுத்தும் நடைமுறையையே நவீனம் பற்றி, முற்போக்கு பற்றி பேசுபவர்கள் வைப்பது.

இவர்கள் எதிர்ப்பது கோயிலை அல்ல, மறை முகமாக நம் நாட்டின் குடும்ப அமைப்பை. காலம் காலமாக நம் முன்னோர் பின்பற்றி வந்த, கொண்டாடி வந்த நடைமுறைகளை , விழாக்களைக் கேலிபேசுவது, குறைத்து மதிப்பிடுவது நம்மை சிறுமைப் படுத்தி ஒதுக்குவது சிலரின் திட்டமிட்ட, நம் கலாச்சாரத்தை கேலிப் பொருளாக்குகிற வேலை.

தீபாவளியை விமர்சனம் செய்வது, பெண்களின் தாலியை கேலி செய்வது, இந்து தர்மக் கடவுளர்களை, நூல்களை, பழக்கவழக்கங்களை தவறாக விமர்சனம் செய்வது, இதன் மூலம் மக்களிடம் நம் கலாச்சாராம் தவறானது, பிற்போக்கானது என்று பொய் பிரச்சாரம் செய்வது, மக்களின் நம்பிக்கைகளை இம்மண்ணில் இருந்து பிரிப்பது, நம் புராதன வழிமுறைகளை விமர்சிப்பது, ஏதோ புதுமை, முற்போக்கு என்று பார்க்கப்படும் சிலரின் முட்டாள் தனம் நிறைந்த நடவடிக்கை.

நம் பண்பாடு அனைவரையும் அரவனைக்கும் தன்மை கொண்டதால், பிற நாகரிகங்கள், பிற கலாச்சாரங்கள், பிற வழிபாட்டு முறைகளில் நல்லவை, சிறப்பானவை என்று இருப்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம், ஆனால் அதே சமயம் நம்முடைய சொந்தமான, இம்மண்ணின் மரபுகளையும் மறக்காமல் இருப்பதே புத்திசாலித்தனம், நம் மண்ணின் வேர்களை மறந்து விட்டு அல்லது புரந்தள்ளி விட்டு மற்ற நாட்டின் வழி முறைகளைப் பின்பற்றுவது எப்படி சரியாகும் ?

ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு இயல்பு, ஒரு தனி தன்மை உண்டு அந்த இயல்பிலேயே அந்த நாடுகளை வளர்த்தெடுக்க வேண்டும், ஒருவருக்கு ஏற்றது பிறருக்கு ஒத்துவராது “மற்றவர்களுக்கு ஏற்ற ஒன்று, நமக்கு நஞ்சகலாம்” என்கிறார் சுவாமி விவேகானந்தர், பிறரின் வழிமுறைகளை நாம் அறிந்து கொள்ளலாம் அவற்றை வழிமொழிவது, பின்பற்றுவது நம் மண்ணிற்கு உகந்ததள்ள. நம் பாரத தேசியத்தின் அடிப்படையாக விளங்கும் நம் ஆன்மிக மரபுகளைப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாக உள்ளது, இந்த நாடு நமக்கு எவ்வளவோ கொடுக்கிறது, பதிலுக்கு நாமும் ஏதேனும் செய்ய வேண்டும், முக்கியமாக நம் ஆன்மிக வேர்களை, நம் கலாச்சார வெளிப்படுகளைப் பாதுகாக்க வேண்டும். நம் பழம்பெரும் பாரதத்தைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும், பாதுகாப்போம். ஜெய் ஹிந்த்.

கட்டுரையாளர்: அ.பரிவழகன்

ஊடகங்களை அவமதிப்பது என் நோக்கமல்ல : மனுஷ்ய புத்திரன்

 
திமுக தலைவர் கருணாநிதியும், பொருளாளர் ஸ்டாலினையும், மட்டும் கேள்வி கேட்கும் பத்திரிக்கையாளரை நாங்கள் காறி துப்ப நினைத்தோம்.
ஆனால் அதற்க்கு முன் விஜயகாந்த் காறி துப்பி விட்டார்.
விஜயகாந்த்தின் அந்த செயல் பாராட்டதக்கது என மதுரை மாவட்டம் திருமங்கலம் தேவர்திடலில் அதிமுக ஆட்சியின் அவலத்தை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொதுக்கூட்டத்தில் திமுக தலைமை கழக பேச்சாளர் மனுஷ்யபுத்திரன் பங்கேற்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் மனுஷ்ய புத்திரன் பத்திரிக்கையாளரை பற்றி பேசிய செய்தி சமூக ஊடகங்களின் வைரலாக பரவி வருகிறது .
இந்த நிலையில் மனுஷ்ய புத்திரன் கூறுவதாக வாட்ஸ்ஆப்பில் இன்று வெளியாகியுள்ள தகவலில் கூறப்படுவதாது :-
நேற்று நான் திருமங்கலத்தில் பத்திரிகையாளர்கள் மேல் விஜயகாந்த் முன்வைத்த விமர்சனம் குறித்து நான் பேசியதை கண்டித்து பத்திரிகையாளர்கள் அமைப்பு ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
நான் ஊடகங்களின் பாரபட்சமான அணுகுமுறையை சுட்டிக்காட்டுவதுதான் என் நோக்கமே தவிர எந்தவகையிலும் ஊடகங்களை அவமதிப்பது என் நோக்கமல்ல.
மேலும் கருத்துசுதந்திரத்திற்காகவும் ஊடகவியலாளர்களின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து வாதாடியும் போராடியும் வருபவன் என்ற முறையிலும் நானே ஒரு ஊடகவியலாளன் என்ற முறையிலும் ஒரு போதும் ஊடகங்களை அவமதிக்க விரும்பமாட்டேன்.
என் கருத்து யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன்.
மனுஷ்ய புத்திரன் என்று இன்று வாட்ஸ்ஆப்பில் வலம் வரும் தகவலில் கூறப்பட்டுள்ளது.

பிரளயநாத ராகு ஸ்தல சிவன் கோயிலில் ஜனவரி 8ல் ராகு, கேது பெயர்ச்சி விழா : பரிகார ஹோமங்கள்

 
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் காமராஜர் பாலம் அருகே அமைந்துள்ள அருள்மிகு பிரளயநாத சிவன் கோயிலில், ஜனவரி 8ம் தேதி மாலை 5 மணிக்கு
ராகு, கேது பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.
ராகு பகவானது கன்னியா ராசியிலிருந்து சிம்மராசிக்கும், கேது பகவான் மீனராசியிலிருந்து கும்ப ராசிக்கும் இம் மாதம் 8ம் தேதி பிற்பகல் 12. 40 மணிக்கு பெயர்ச்சி அடைகின்றனர்.
இதையொட்டி இக் கோயிலில் அன்று மாலை 5 மணிக்கு ராகு, கேது ப்ரீத்தி ஹோமங்கள் வேதியர்களால் நடத்தப்படுகிறது.
 
அதுசமயம் ராகுவுக்கு, மேஷம், ரிசபம், கடகம், சிம்மம், மகரம், தனுசு ராசி நேயர்களும், கேதுவுக்கு, துலாம், மகரம், விருச்சிகம், கடகம், கும்பம், மீனராசி நேயர்களுக்கு பரிகார அர்ச்சனைகள் செய்யப்படவுள்ளது. மேலும், இக் கோயிலானது ராகு ஸ்தலமாக கருதப்படுவதால், நவகிரகம், பிரளயநாத சுவாமி ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படும்.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் ப. லதா, தொழிலதிபர் எம். மணி, பள்ளித்தாளர் டாக்டர் எம். மருதுபாண்டியன், மற்றும் பிரதோஷ விழாக்குழுவினர், கோயில் கணக்கர் சி. பூபதி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர். மேலும் அர்ச்சனைகள் செய்ய விரும்புவோர் தொடர்புக்கு 7598428894, 8760919188 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1,100 கோடி ரூபாய்க்கு மது விற்பனை

 
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் கடந்த ஆண்டில், 1,100 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாவட்டம் முழுவதும் 297 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்தக் கடைகளில் புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் பண்டிகைகளில் வழக்கத்தை விட அதிகமான அளவு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது வழக்கம்.
அதன்படி, புத்தாண்டு தினத்துக்கு முந்தைய நாளான வியாழக்கிழமை பிற்பகல் முதலே மாவட்டத்தின் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை அதிகமாக இருந்தது. நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க வரிசையில் நிற்பதுபோல், மதுப்பிரியர்கள் ஏராளமானோர் வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கினர்.
மாவட்ட டாஸ்மாக் கடைகளில் புத்தாண்டை முன்னிட்டு, வியாழன், வெள்ளிக்கிழமைகளில் ரூ.4 கோடியே 87 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, டிசம்பர் 31-ஆம் தேதி ரூ.2 கோடியே 28 லட்சத்து 42 ஆயிரத்து 716 மதிப்புள்ள 4,864 பெட்டி பிராந்தி வகை மது பாட்டில்கள், ரூ.30 லட்சத்து 35 ஆயிரத்து 570 மதிப்புள்ள 2,120 பெட்டி பீர் வகை மது பாட்டல்கள் விற்பனை செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.2 கோடியே 58 லட்சத்து 78 ஆயிரத்து 286 ஆகும்.
இதேபோல், புத்தாண்டு தினமான ஜனவரி 1-ஆம் தேதி மாவட்டம் முழுவதும் ரூ.2 கோடியே 3 லட்சத்து 53 ஆயிரத்து 940 மதிப்புள்ள 4,352 பெட்டி பிராந்தி வகை மது பாட்டல்கள், ரூ.25 லட்சத்து 9 ஆயிரத்து 870 மதிப்புள்ள 1,760 பீர் வகை மது பாட்டல்கள் விற்பனை செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.2 கோடியே 28 லட்சத்து 63 ஆயிரத்து 810 ஆகும்.
ஆக மொத்தம் 2 நாள்களில் மொத்தம் ரூ.4 கோடியே 87 லட்சத்து 42 ஆயிரத்து 096 மதிப்புள்ள மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் கடந்த ஆண்டில், 1,100 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

பத்திரிக்கையாளரை நாங்கள் காறி துப்பம் முன் விஜயகாந்த் காறி துப்பி விட்டார் : மனுஷ்யபுத்திரன்

 

திமுக தலைவர் கருணாநிதியும், பொருளாளர் ஸ்டாலினையும், மட்டும் கேள்வி கேட்கும் பத்திரிக்கையாளரை நாங்கள் காறித் துப்ப நினைத்தோம். ஆனால் அதற்கு முன் விஜயகாந்த் காறி துப்பி விட்டார். பாராட்டதக்கது என திமுக தலைமை கழக பேச்சாளர் மனுஷ்யபுத்திரன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தேவர்திடலில் அதிமுக ஆட்சியின் அவலத்தை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொதுக்கூட்டத்தில் திமுக தலைமை கழக பேச்சாளர் மனுஷ்யபுத்திரன் பங்கேற்று சிறப்புரை ஆற்றியபோது பேசியதாவது :-

சென்னையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கடும் வெள்ளத்தில் சிக்கி பல லட்சம் மதிப்புள்ள பொருள் இழப்பு அடைந்த மக்களுக்கும் உயிரிழந்தவர்களுக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா ரூ.5000 வழங்கியது ஈமச்சடங்கிற்கா எனவும் மக்கள் இதற்கு தக்கபாடத்தை வரும் தேர்தலில் அதிமுகவின் முகத்திரையை கிழித்து வெளிப்படுத்துவார்கள் .இன்றைக்கு குற்றவாளி என்ற முத்திரையை அதிமுக மீது மக்கள் குத்தியுள்ளனர்.

அதிமுக ஆட்சியை மீண்டும் வரவழைத்தால் மக்கள் தங்களைத் தாங்களே தற்கொலை செய்து கொள்வதற்கும், தங்கள் முகத்தில் செருப்பா ல் அடித்துக் கொள்வதற்கும் சமம் எனவும் அதிமுக அரசுக்கு சாதகமாக மறைமுகமாக செயல்பட்டு வரும் 3வது அணியை மக்கள்தூக்கி எறிவார்கள் எனவும் ஜாதிக்கட்சியை வளர்த்து தாங்கள்தான் முதலமைச்சர் என தப்பட்டம் அடித்துவரும் கட்சியையும் மக்கள் விரட்டியடிப்பார்கள் எனவும் பேசினார்.

மேலும் சென்னையில் விஜயகாந்த் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தூ என காறி துப்பியது சரியானது எனவும் அவர் காறி துப்பவில்லை என்றால் நாங்களே காறிதுப்புவதாக இருந்தோம் எனவும் மனுஷ்யபுத்திரன் பேசினார்.

இக்கூட்டத்தில் முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா, தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், மாவட்ட துணை செயலளர் முருகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சாமிநாதன், லதாஅதியமான் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். கூட்த்தில் கலந்து கொண்டவர்களுக்கு திமுக நகர செயலாளர் நாகராஜன் நன்றி தெரிவித்தார்.

பத்திரிக்கையாளரை நாங்கள் காறி துப்பம் முன் விஜயகாந்த் காறி துப்பிவிட்டார் என திமுக தலைமை கழக பேச்சாளர் மனுஷ்யபுத்திரன் பேசிய காணொளி இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

சிவகுமார், செய்தியாளர்

 

தில்லியில் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: புரளி எனத் தெரிந்ததால் ரயில்கள் இயக்கம்

புது தில்லி:

தில்லி ரயில் நிலையத்துக்கு இன்று காலை இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் அனுப்பப்பட்டுள்ளது. அதில், தில்லி-கான்பூர் ரயிலை குண்டு வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் மும்பை பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து, லக்னோ சதாப்தி ரயில் காஜியாபாத் ரயில் நிலையத்தில் நிறுத்தப் பட்டு, முழுதும் சோதிக்கப்பட்டது. அதில் அச்சப்படும் படியான எந்தப் பொருளும் இல்லை என வடக்கு ரயில்வே சிஇஓ நீரஜ் சர்மா தெரிவித்தார்.

வெடிகுண்டு மிரட்டலை அடுத்து தில்லியில் பல ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. பல ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு, பின்னர் தாமதமாக இயக்கப்பட்டன. ரயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றால், பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

இந்நிலையில், இது புரளி எனத் தெரியவந்தது. இதை அடுத்து, ரயில்கள் வழக்கம்போல் குறித்த நேரத்தில் சென்றடைய ரயில்வே நிர்வாகம் முயற்சி எடுத்தது.

பதான்கோட் தாக்குதலை அடுத்து, இந்த மிரட்டல் வந்ததால், ரயில்வே துறை மிக கவனமாக இந்த மெயிலை அணுகி, சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

வைகை அணை நீர்மட்டம் தொடர் சரிவு

மதுரை:

வைகை அணையில் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது. வடகிழக்குப் பருவமழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 2 வது முறையாக 142 அடியை எட்டியது. அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வைகை அணையின் நீர்மட்டமும் உயர்த்தப்பட்டது. இதனால் வைகை அணையும் 4 ஆண்டுகளுக்கு பிறகு அதன் முழு கொள்ளளவை நெருங்கியது.

இந்த இரு அணைகளில் இருந்தும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு 5 மாவட்ட பாசனத்திற்கு பயன்படுத்தப்பட்டது. கடந்த 2 வாரங்களுக்கு மேலாக மழை முற்றிலும் நின்ற நிலையில் அணையில் இருந்து தொடர்ந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் அணையில் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

இன்று காலை நிலவரபடி பெரியாறு அணையின் நீர்மட்டம் 137.40 அடியாக உள்ளது. வைகை அணை நீர்மட்டம் 63.19 அடி. வரத்து 1531 கன அடியாகவும் திறப்பு 2160 கன அடியாகவும் இருந்தது.

நாஞ்சில் சம்பத் பதவிப் பறிப்பு: ஜெயலலிதா அதிரடி

சென்னை:

அதிமுக துணை கொள்கை பரப்புச் செயலாளர் பதவியிலிருந்து நாஞ்சில் சம்பத் நீக்கப்படுவதாக முதலமைச்சரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் பதவியிலிருந்து நாஞ்சில் சம்பத் விடுவிக்கப்படுகிறார் என தெரிவித்துள்ளார்.

நாஞ்சில் சம்பத் பதவி பறிப்புக்கு, அவர் தனியார் தொலைக்காட்சிகளில் பங்கேற்ற நேர்காணல் நிகழ்ச்சியில் கட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் விதமாக அளித்த சில பதில்களே காரணம் எனக் கூறப்படுகிறது.

அவர் புதிய தலைமுறை செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியின்போது, வெள்ளம் பாதித்த நிலையிலும், அதிமுக பொதுக்குழு கூட்டம் கோலாகலமாக நடைபெற்றதே என்ற கேள்விக்கு, சாவு வீட்டுக்காக கல்யாணங்கள் நடக்காமலா இருக்கிறது என்று அலட்சியமாக பதிலளித்துள்ளார்.

இந்நிலையில், தொடர்ந்து தந்தி தொலைக்காட்சி கேள்விக்கு என்ன பதில் நிகழ்ச்சிக்காக, ரங்கராஜ் பாண்டே கேள்விகளுக்கு, நாஞ்சில் சம்பத் பதில் கொடுத்துள்ளார். அதன் ப்ரமோ வீடியோ அத்தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டு வந்தது. இந்த டிவியிலும், நாஞ்சில் கூறிய பதில்கள் சர்ச்சைக்கு உரியதாக இருந்தது.

பெருவெள்ளம் புரட்டிப் போட்ட பிறகு பொதுக்குழு கூட்டம் கோலாகலமாக, கொண்டாட்டமாக நடக்கும்போது சரியா என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறதே என்று கேள்விக்கு நாஞ்சில் சம்பத், ‘எறும்புகள் சாகிறது என்பதற்காக யானை நடக்காம இருக்க முடியுமா’ என்று பதில் சொல்லும் காட்சியும் காண்பிக்கப்பட்டது.

வெள்ளத்தில் உயிரிழந்த 500 பேரை ஏன் கண்டுகொள்ளவில்லை, அதிமுக பொதுக்குழுவில் அதுதொடர்பாக ஏன் தீர்மானம் நிறைவேற்றவில்லை? என்ற கேள்விக்கு, தேவையில்லை, நிறைவேற்றவில்லை என்று நாஞ்சில் பதிலளிப்பது போல காட்சி ஒளிபரப்பானது.

இந்தப் பேட்டிகள் உண்டாக்கிய கசப்பு உணர்வுகள் பரவுவதற்கு முன்னரே, அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவே நாஞ்சில் சம்பத் பதவியைப் பறித்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது!

ஜெட் வேகத்தில் கட்சியில் பதவியைப் பிடித்த நாஞ்சில் சம்பத், ராக்கெட் வேகத்தில் அதை இழந்துள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.

முன்னர் மதிமுக., வில் இருந்தபோது, ஜெயலலிதாவை அதிகம் விமர்சித்தவர் இவர். பின்னர் வைகோ.,வுடன் ஏற்பட்ட கசப்புணர்வில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வெளியில் வந்தவர் அதிமுகவில் போய்ச் சேர்ந்தார். அவருக்கு கட்சியில் துணை கொள்கை பரப்புச் செயலர் பதவியும், ஒரு இன்னோவா காரும் வழங்கப்பட்டது. முதலமைச்சரின் கையால் அவர் பெற்றுக் கொண்ட இன்னோவா கார் சாவி குறித்த படங்கள் அப்போது சமூக வலைத்தளங்களில் பெரிதும் பகிரப்பட்டு, பலத்த விமர்சனத்துக்கு உள்ளானார் நாஞ்சில் சம்பத். 

ஆடு மேய்க்க சென்ற சிறுமியை கற்பழித்து கர்ப்பமாக்கிய முதியவர் கைது

 
சிவகங்கையில் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ஆடுமேய்க்க சென்ற 13வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவரை, மகளிர் காவல் நிலையஆய்வாளர் சாந்தி கைது செய்தனர்.
கடந்த சில தினங்களுக்குமுன் அந்த சிறுமிக்கு திடீர் வயிற்றுவலி ஏற்பட்டது. அவரது பெற்றோர் சிவகங்கை மருத்துவமனையில் சிறுமியை சேர்த்தனர்.மருத்துவர்கள் பரிசோதனையில் சிறுமி 5 மாத கர்ப்பிணியாக இருப்பதாக, தெரிவித்தனர்.
இது குறித்து மருத்துவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சிவகங்கை மாவட்ட மகளிர் காவல் நிலைய சாந்தி சம்பவம் குறித்து சிறுமியிடம் விசாரித்தார். அவரிடம் சிறுமி கூறுகையில் காட்டிற்குள் ஆடு மேய்க்க சென்றபோது, தமறாக்கி அருகே கொத்தங்குளத்தை சேர்ந்த சங்கையா,60, என்னை கற்பழித்து விட்டார் எனக்கூறினார். அதன் அடிப்படையில் மகளிர் காவல் நிலையஆய்வாளர் சாந்தி முதியவரை கைது செய்தா ர்.

பட்டய கிளப்பும் பசங்க

பிரபல இயக்குநர் வினயன் தமிழில் இயக்கிய “காசி” “என் மன வானில்” “அற்புதத் தீவு” ஆகிய படங்களில் துணை இயக்குநராக பணியாற்றியவர் அனூப்ராஜ். இவர் இயக்கும் முதல் படம் “பட்டய கிளப்பும் பசங்க”
 
திறமையுள்ள இளம் இயக்குனர்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களை ஊக்குவித்து வரும் வித்தியாசமான தயாரிப்பாளர் ரூபேஷ் குமார் இப்படத்தை தயாரிக்கிறார்.
 
புதுமுகங்களாக மூன்று ஹிரோ, மூன்று ஹிரோயின்கள் அறிமுகமாகிறார்கள். இப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் சஜின் வர்கீஸ், ’நியூ செந்தில்’ பாஷாணம் சாஜி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
 
இப்படம் குறித்து இய்க்குநர் அனூப்ராஜ் கூறுகையில், ‘சுயபுத்தி இல்லாமல் பிறர் சொல்புத்தியால் வாழ்க்கையத் தொலைத்த மூன்று இளைஞர்களைப் பற்றிய கதை இது. பணம் சம்பாதிக்கும் ஆசையில், கையில் இருக்கும் பணத்தையும், கடன் வாங்கிய பணத்தையும் பறிகொடுக்கிறார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு கோடி ரூபாய் பணத்தை ரிசார்ட் ஒன்றில் முதலீடு செய்து பண இழப்பு மட்டுமின்றி, பெரும் சிக்கலிலும் மாட்டிக் கொள்கிறார்கள்.
 
அதிலிருந்து இவர்கள் எப்படி மீண்டு வருகிறார்கள்? என்பதை நகைச்சுவையாகச் சித்தரிக்கும் படம்தான் ‘பட்டய கிளப்பும் பசங்க’ என்று அனூப்ராஜ் கூறினார். முழுநீள காமெடி, ரொமாண்டிக் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.
 
தயாரிப்பு – ரூபேஷ் குமார் புரொடக்‌ஷன்ஸ்
படத்தின் தலைப்பு – பட்டய கிளப்பும் பசங்க
பாடல்கள் – சோழன், விவேக் மனோகர்
இசை – ஷகீன் அப்பாஸ்
பின்னணி பாடகர்கள் – ஜோதி கிருஷ்ணா, அமிர்தா
மக்கள் தொடர்பாளர் – C.N.குமார்
கலை இயக்குனர் – அஜித் கிருஷ்ணா
நடன இயக்குனர் – போப்பி
சண்டைப்பயிற்சி – புரூஸ்லீ ராஜேஷ்
வசனம் – R.மோகன்
எடிட்டர் – A.R.ஜிபீஷ்
ஒளிப்பதிவு – ராரிஷ் G
தயாரிப்பு – ரூபேஷ் குமார்
கதை, திரைக்கதை, இயக்கம் – எம்.ஆர்.அனூப்ராஜ்
 
நடிகர்கள்
லிமு ஷங்கர்
மானவ்
ஷம்சீர்
சஜின் வர்கீஸ்
மனோபாலா
முத்துக்காளை
பாஷாணம் ஷாஜி
N.வேணு
ஜூபி
 
நடிகைகள்
கல்பனா
ரினிராஜ்
கனகலதா
ரேகா