Home Blog Page 5877

பெருந்துறைமுகம் அமைய மத்திய அமைச்சருக்கு துணை நிற்கும் நுகர்வோர் சங்கம்!

 

       கன்னியாகுமரி மாவட்டத்தில்  குளச்சல் வர்த்தக  பெருந்துறைமுகம் அமைய மாவட்ட மக்கள் அனைவரும் மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் எடுக்கும்

அனைத்து முயற்சிகளுக்கும் பொது மக்கள் துணை நிற்க்க  வேண்டு என்று கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சங்கத் தலைவர் எஸ்.ஆர்.ஸ்ரீராம் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்ததுள்ளார்.

 இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்   தெரிவித்துள்ளதாவது :-

                              இந்தியாவில் 13 பெரிய துறைமுகங்கள் உள்ளன. மும்பை, ஜவஹர்லால் நேரு துறைமுகம், கொல்கத்தா, சென்னை, விசாகப்பட்டிணம், கொச்சி, பிரதீப், புதிய மங்களூர் துறைமுகம், மார்கோவா, எண்ணூர், தூத்துக்குடி, கண்ட்லா மற்றும் போர்ட் பிளேயர் ஆகியன மத்திய அரசின் கீழ் உள்ளன. 60 கோடி டன் சரக்குகளை கையாலும் திறமை கொண்டது. மேலும் நாடு முழுவதும் 176 சிறிய துறைமுகங்களும் உள்ளன. 2020ம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கையை 350 ஆக உயர்த்த மத்திய அரசு முயற்சி எடுத்து வருகின்றது.

விரிவாக்கம்

                               உலகில் ஒவ்வொரு நாட்டின் தென்கோடியிலும், ஒரு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகங்கள் அமைந்துள்ளன. குறிப்பாக, தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் துறைமுகம், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் துறைமுகம், சிங்கப்பூரின் சிங்கப்பூர் துறைமுகம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இத்தகைய சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகம் இந்தியாவின் தென்கோடியில் அமையாததால், இலங்கையின் கொழும்பு துறைமுகம் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகமாகத் திகழ்கிறது. புதிதாக ர்யஅடியவொழவ என்ற புதிய துறைமுகத்தை சீன உதவியுடன் நிர்மானித்துள்ளது. இங்கே சீன கப்பல்படை படகுகள் வரும் நிலை உள்ளது. அல்லாமல் சீன மாலதீவில் நீர்மூழ்கி கப்பல் தளம் அமைக்க உள்ளது. இந்து மகா சமுத்திரத்தில் சீன ஆதிக்கம் செலுத்துவது நமது நாட்டின் பாதுகாப்பிற்க்கு இடையூராக அமையும். குளச்சல் துறைமுகத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், இந்தியாவின் தென்கோடியில் அமைந்த சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகமாக திகழ்வதுடன், சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, ஜப்பான், அரபு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடனான வர்த்தகம் மிகப்பெரிய அளவில் விரிவடையும்.

மீன்வளம்

                          கன்னியாகுமரி மாவட்ட கடற்கரைப் பகுதி 68 கிமீ நீளமுடையது. 45 கடற்கரை கிராமங்கள் உள்ளன. மீனவ மக்கள் தொகை 2001-ன்படி 1,53,514. இங்கு 510 இயந்திர படகுகளும் 12,737 நாட்டுப் படகுகளும் உள்ளன. ஆண்டுக்கு 62,400டன் மீன் உற்பத்தியாகின்றன. இது மாநில அளவில் 25 சதவீதமாகும்.

குளச்சல் துறைமுகம், பன்னெடுங்காலமாக பயன்பாட்டில் உள்ள துறைமுகமாகும். இயற்கையாகவே, பெரிய கப்பல்கள் வந்து செல்லும் அளவிற்கு போதுமான ஆழம் கொண்ட இயற்கைத் துறைமுகமாகும். குளச்சல் துறைமுகத்தின் மாபெரும் தனிச்சிறப்பு என்னவென்றால், அது சர்வதேச கப்பல் போக்குவரத்துப் பாதையில் (International Shipping Lane) அமைந்துள்ளது. குமரி மாவட்டத்தில் மீன்பிடித் துறைமுகம் சின்ன முட்டம், முட்டம், ராஜாக்கமங்கலம், தேங்காய்பட்டினம் போன்ற இடங்களில் உள்ளன. இந்த கடற்கரையை அடுத்து கடல் உள்மேடு (Wedge Bank) உள்ளது.

வெட்ஜ் பாங்க் (கடல் உள்மேடு)

                       இங்குள்ள கடல் உள்மேட்டுப் பகுதி முக்கடலும் சேரும் இடத்தில் குமரியின் தெற்கில் 56 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. வடக்கு 70.20’ மற்றும் கிழக்கு  770.52′ பாகைகளில் சுமார் 10000 சதுர கி.மீ பரப்பளவில் 90 மீட்டர் ஆழத்தில் கடல் உயிரிகள் வாழச்சிறந்த சூழலோடு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கு கடலில் தங்கியிருந்து மீன்பிடிப்பது சுலபம். மீன்வளமும் அதிகம். குறிப்பாக செப்டம்பர் மாதத்தில் அதிக மீன்கள் கிடைக்கும். இந்தப் படகும் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை பகுதியில் 34 நாட்டிக்கல்மைல் தொலைவில் உள்ளது. International Board-ல் உள்ளது. நாட்டில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் அளவு அடிப்படையில் 90 சதவீதமும், மதிப்பின் அடிப்படையில் 70 சதவீதமும் கடல் போக்குவரத்து வாயிலாகவே மேற்கொள்ளப்படுகிறது. ஆக நாட்டில் வர்த்தக மேம்பாட்டில் துறைமுகங்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

அமைவிடச் சிறப்பு

                 இதில் குளச்சல் இனயம் கடற்கரை பகுதி தென் தமிழகத்தில் இந்தியாவின் தென்மேற்கு கடற்கரையில் உலகிலே மிகவும் அதிக கப்பல் போக்குவரத்து கொண்ட கடற்பாதையில் அமைந்துள்ளது. இந்த கடற்பாதை ஐரோப்பா வளைகுடா நாடுகள், வட ஆப்பிரிக்கா முதலிய நாடுகளிலிருந்து சூயஸ் கால்வாய் வழியாக சீனா, ஜப்பான் மற்றும் பசிபிக் சமுத்திரத்தின் கரையோர நாடுகளுக்கு செல்லும் கடற்பாதையாகும். இந்த கடற்கரை பூகோள ரீதியில் இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரை துறைமுகங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது. இந்த கடற்கரையின் மேற்கு பகுதியில் கொச்சி, மங்களூர், மார்கோவா, மும்பாய், காண்டலா துறை முகங்களும், கிழக்கு பகுதியில் தூத்துக்குடி, சென்னை, விசாகபட்டிணம், பரதீப், கொல்கத்தா துறைமுகங்களும் அமைந்துள்ளன. இதன் காரணமாக இந்திய துறைமுகங்களுக்கு நடுநாயகமாக பண்டக மற்றும் சரக்கு பரிமாற்றம் செய்ய தலைச்சிறந்த துறைமுகமாக, குளச்சல் இனயம் பெருந்துறைமுகமாக மாறும் வாய்ப்புகள் மிகச்சிறப்பாக உள்ளன.

இடைநிலை துறைமுகம்

                   மேலும், இந்தியாவின் மேற்குக்கரை துறைமுகங்களிலிருந்து, கிழக்குக் கடற்கரை துறைமுகங்களுக்கு செல்லும், 80% கப்பல்கள், கொழும்பு துறைமுகத்தையே இடைநிலை துறைமுகமாக (Transshipment Port) பயன்படுத்துவதால், கொழும்பு துறைமுகம் பொருளாதாரத்தில் சிறந்து விளங்குகிறது. அதாவது, இந்தியாவின் மேற்குக்கரை துறைமுகங்கள் இயற்கைத் துறைமுகங்களாகவும், ஆழமான துறைமுகங்களாகவும் இருக்கின்றன. கிழக்குக்கரை துறைமுகங்கள் பெரிய கப்பல்கள் வந்து செல்லும் அளவிற்கு போதுமான ஆழம் கொண்டதாக இல்லை. எனவே, இந்தியாவின் மேற்குக்கரை துறைமுகங்களிலிருந்து கிழக்குக்கரை துறைமுகங்களுக்கு, சரக்குகளை கொண்டு செல்லும் பெரிய கப்பல்கள், கொழும்பு துறைமுகத்தில் அவற்றை இறக்கிவைக்கும். அங்கிருந்து, அச்சரக்குகளை, சிறிய கப்பல்கள் மூலம், கிழக்குக்கரை துறைமுகங்களுக்கு எடுத்துச் செல்லப்படும்.    தற்சமயம் நம்நாடு, வெளிநாடுகளில் உள்ள கொழும்பு, துபாய் மற்றும் சிங்கப்பூர் துறைமுகங்களின் உதவியுடன் நமது பொருட்கள் மற்றும் கண்டெய்னர்கள் பரிமாற்றம் செய்து வருகின்றது.

60 அடி ஆழம்

                     சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதையிலிருந்து துறைமுகத்திற்கு கப்பல் வரும் பாதை குறைந்த பட்சம் ஆழம் 18மீட்டராவது இருக்கவேண்டும். ஆனால் இனயம் பகுதியில் 60மீட்டர் ஆழம் உள்ளது. பெரிய துறைமுகங்கள் அமையும் கடலில் உள் நீளச்சுவர் (ஜட்டி) கடல் பகுதிக்குள் அமைக்கப்படும் போது சுற்று வட்டாரக் கரைப்பகுதிகள் பாதுகாக்கப்படும்;.

5,00,000 டன்

           நம் நாட்டுத் துறைமுகங்கள் அனைத்தும் ஆழம் குறைந்தவைகள். 1,00,000 டன்களுக்கு குறைவான எடையுள்ள கப்பல்களே இந்திய துறைமுகங்களில் பொருட்கள் ஏற்றி இறக்க முடியும். பண்டக பரிமாற்றம் செய்யும் பெருந்துறைமுகம் ஒன்று இனையத்தில் அமைவது மிகவும் தேவை. இங்கு 5,00,000 டன்களுக்கு மேலான எடையுள்ள கப்பல்களும் வந்து செல்லும், ஆழமும் அதற்கேற்ற அனைத்து வசதிகளும் உள்ளன.

ஆய்வுகளும் அறிக்கைகளும்

                   குளச்சல் கடற்கரையை 1995ம் ஆண்டு இந்தியகடல் போக்குவரத்து வல்லுநர்கள் ஆய்வு செய்து பெருந்துறைமுகமாக மாற்றிட தீர்மானம் நிறைவேற்றினர். 1998-ம் ஆண்டு டெசிட் என்ற துறைமுக அமைப்பு பரிந்துரையும் செய்தது. மேலும் தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் 2001-ம் ஆண்டு மலேசியாவில் துறைமுக அமைப்பு ஆய்வுகள் மேற்கொண்டு சாலைகள், ரயில் பாதை அமைப்பு, சம்பந்தமான மேம்பாடு பரிசோதனை செய்த அறிக்கை தமிழக அரசு நெடுஞ்சாலைத்துறையிடம் உள்ளது.

குளச்சல் துறைமுகம் இந்தியாவில் மிகவும் ஆழம் உள்ளதாகவும், கடற்கரையில் இனயம் பகுதியில் 60 மீட்டர் ஆழம் உள்ளதால் இயற்கை துறைமுகம் அமையும் வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டுதல், இயக்குதல், ஒப்படைத்தல் திட்டத்தின்படி (BOT system)உலகளாவிய டெண்டர் விட்டு அரசு, தனியார் கூட்டு முயற்சியால் அமைக்கப்படும் திட்டமாக பரிந்துரைக்கப் பட்டுள்ளதுகடந்த 2006ம் ஆண்டு அப்போதைய முதல்வர்.கருணாநிதி முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களை நேரில் சந்தித்து திட்டம் நிறைவேற்ற வலியுறுத்தினார்கள். கழிந்த 18- 07- 2006ம் ஆண்டு முன்னாள் இந்திய கப்பல்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு அவர்கள் இடத்தை பார்வையிட்டு குளச்சல் சிறு துறைமுகமாக இருப்பதை பெருந்துறைமுகமாக்க கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்று நேரில் கூறினார். 18-04-2008 அன்று ஆண்டு மத்திய அரசின் கப்பல்துறை அமைச்சக அதிகாரிகள் இடத்தை பார்வையிட்டு அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஜோதிநிர்மலா அவர்களுடன் ஆலோசனை செய்துவாப்கோஎன்ற மத்திய அரசு நிறுவனம் வாயிலாக குளச்சல் பண்டக பரிமாற்றம் துறைமுகத்திற்கு ஆய்வு மற்றும் திட்ட அறிக்கைகள் மூன்று மாதத்தில் தயாரிப்பதாக அறிவிப்புக்கள் வெளியாகின. ஏனைய மாநிலங்களில் முழு ஆர்வத்துடனும், முழு உற்சாகத்துடனும் பல துறைமுகங்களைக் கட்டி முடித்துள்ளனர். இந்திய கப்பல்துறை முன்னாள் அமைச்சர் ஜி.கே.வாசன் அவர்களும் 21.07.2009-ல் இந்த திட்டம் மாநில அரசுதான் செயல்படுத்த வேண்டும் என்றும், மத்திய அரசு ஒத்துழைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

சட்டம் கூறுவது என்ன?

                  இந்திய துறைமுக சட்டம் 1908-ன் படி சிறிய மற்றும் மைனர் துறைமுகங்களை மேம்படுத்தி பெருந்துறைமுகங்களாக மாற்றிட உள்ள திட்டம் மாநில அரசையே சார்ந்தது. மத்திய அரசு நிறுவனமான சேது சமுத்திர கார்ப்பரேசனிடம் தமிழக அரசு பொறுப்புகளை ஒப்படைத்தது. அதே வேளையில் துறைமுகத்தினை பல்வேறு நிலைகளில் மேம்படுத்துவது தொடர்பாக திருவாளர்கள் மேரிடைம் கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்திடம் இருந்தும் அறிக்கை அரசு பெற்றள்ளது. 2011-ம் ஆண்டு தமிழக அரசு அதிகாரிகள் TANGED Co வாயிலாக இடத்தை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் துறைமுகத்தில் திரவ பெட்ரோலிய ஏற்றுமதி இறக்குமதி செய்யும் (LNG BASED) துறைமுகமாக மேம்பாடுகள் செய்யலாம் எனவும் உத்தேசிக்கப்பட்டது.

மாநிலங்கள் தீவிரம்:-

இந்தியாவில் துறைமுகம் அமைக்க பூர்வாங்க அறிக்கைகள் பெறவும் அதன்பிறகு உள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படாததால், வேறு பல மாநிலங்கள் கீழ்க்கண்ட புதிய பெருந்துறைமுகங்களைத் தாங்களே தங்கள் மாநிலங்களில் கட்டி எழுப்பியுள்ளனர்.

1.    குஜராத் மாநிலம்    முந்திரா துறைமுகம்

2.    ஆந்திரா மாநிலம்  1.காக்கிநாடா 2.கங்காவரம்  3. கிருஷ்ணபட்டிகை துறைமுகங்கள்.

3.    கேரளா மாநிலம்  விழிஞ்ஞம் துறைமுகம் கட்டப்பட்டு வருகின்றது.

4.    புதுச்சேரி மாநிலம்; 1.காரைக்கால் 2.புதுச்சேரி துறைமுகங்கள்.

5.    மேற்கு வங்காளம்    ஹால்டியா துறைமுகம்

6.    மகாராஷ்டிரா மாநிலம்    1. டிக்கி  2. ராவரா

போன்றவைகள் புதிய துறைமுகங்களாகும்.

                 தமிழக அரசு, துறைமுகம் அமைக்க சேது சமுத்திர கார்ப்பரேசனில் கொடுத்த அனுமதியை 10.10.2006ல் ரத்து செய்து உலக புகழ் பெற்ற துறைமுகங்கள் கட்டுமானம் செய்யும் நிறுவனங்களான துபாய் போர்ட் டிரஸ்ரே லார்சன் டியுப்ரோ கட்டுமான நிறுவனம், கிறியேடிவ் இன்பரோ பெடிரக்டர் டேவலப்பர், லாங்கோ இன்டர்டெக் லிமிடட் போன்ற நிறுவனங்களிடம் ஆய்வு அறிக்கை மற்றும் திட்ட அறிக்கைகள் தயாரித்து கொடுத்து கட்டுதல், இயக்குதல், ஒப்படைத்தல் (பி..டி) முறையில் செய்து முடிக்க ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் ஒப்படைக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு பெருகும்!

                      மேற்படி துறைமுகம் தன் முழு அளவு சிறப்பாக செயல்படும் காலத்தில் 7,000 தொழில் நுணுக்க வல்லுனர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதுடன் மறைமுகமாக 15 இலட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்பு  மற்றும் பொருளாதார மேம்பாடு அளிப்பதுடன் 30,000 கோடி ரூபாய்களுக்கு மேல வெளிநாட்டு மூலதனம் துறைமுகம் மற்றும் சாலை, ரயில்வே பாதை மற்றும் தொழில்துறைகளில் முதலீடு செய்யப்படும். மாநில அரசு இதனை கவனிக்க தமிழக அமைச்சரவையில் தனியாக ஓர் அமைச்சருக்கு பொறுப்பு கொடுத்து திட்டமிடல் வேண்டும்.

                 நாகர்கோவில்திருவனந்தபுரம் ரயில் பாதையில் 10 கி.மீ. தூரத்தில் குளச்சல் கடற்கரை பகுதி இனையம் உள்ளது. இதனை ரயில் பாதையுடன் இணைக்க மலேசியன் துறைமுக கட்டிட கம்பெனி 01.12.2006ல் திட்டம் தயாரித்துக் கொடுத்துள்ளனர். ரயில்வே இலாகாவும் திட்டத்தை உடன் துவங்க தயாராக உள்ளனர். Port Connectivity Fund-லும் பணம் உள்ளது. அவர்களும் திட்டத்தை உடன் ஆரம்பிக்கத் தயாராக உள்ளார்கள். தமிழ்நாட்டில், சென்னையில் சென்னை துறைமுகம், எண்ணூர் துறைமுகம் மற்றும் கட்டப்பள்ளி துறைமுகம் உள்ளன. விழிஞ்ஞம் துறைமுகம் இங்கிருந்து 38 கி.மீ.தூரத்தில், கேரளா மாநிலத்தில் அமைந்து உள்ளது. இந்த துறைமுகங்களை 2013, 2014-ம் ஆண்டுகளில் லார்சன் அன்ட் டியூபரோ துறைமுக கட்டுமான கம்பெனியே கட்டியுள்ளது. இதனால் அந்த பகுதி முன்னேற்றம் அடைந்துள்ளது. குறிப்பாக அந்த பகுதி மீனவ மக்கள் எவ்வளவு முன்னேற்றம் அடைந்துள்ளனர் என்பதை நேரில் பார்வையிட்டால் தெரியவரும். ஏதாவது ஒரு தொழிலுக்காக வெளி மாநிலம், வெளிநாடு செல்வது தவிர்க்கப்பட்டு உள்@ரிலே பலவிதமான வேலை வாய்ப்புகள் உருவாகும்.

கப்பல் கட்டும் தொழில்

                        குளச்சல்இனயத்தில் துறைமுகம் அமையுமானால் கப்பல்கட்டும் துறையிலும் சிறு ஓடங்கள் தயாரிப்பது போன்று, பெரிய கப்பல்களை நம் உள்@ரிலே தயாரிக்கவும், பழுது பார்க்கவும் கப்பல் கட்டும் நிறுவனங்கள் புதிதாக உருவாகும் மாவட்டத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் அளவிற்கு வேலைவாய்ப்புகள் பெருகும். நமது மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும்ஏற்கனவே இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள எந்த துறைமுகத்தாலும் தடுப்புச்சுவர் அமைத்ததால் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றது.

அந்நியச் செலவாணி

                        குளச்சல் இனயம் துறைமுகத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், இந்தியாவின் மேற்குக்கரை மற்றும் கிழக்குக்கரை துறைமுகங்களுக்கு இடையே, குளச்சல் இனயம் துறைமுகம் இடைநிலை துறைமுகமாக செயல்படும். எனவே, இலங்கை நாட்டின் கொழும்பு துறைமுகத்திற்குச் செல்லும் இந்தியாவின் அனைத்து அந்நியச் செலாவணி மிச்சமாகும்.

பயப்பட வேண்டாம்

                     குளச்சல் துறைமுகத்திட்டம் செயல்படுத்தப்படுவதால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பது முற்றிலும் தவறானது. தூத்துக்குடி, சென்னை, கொச்சி போன்ற முக்கிய துறைமுகங்களை ஒட்டியுள்ள அனைத்து ஊர்களிலும், மீனவர்கள், மீன்பிடித் தொழிலை செய்கின்றனர், என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஒரு மாபெரும் திட்டம் செயல்படுத்தப்படும்போது, அதில் உருவாகும் வேலைவாய்ப்புகளில், அப்பகுதி மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவது வழக்கம். குளச்சல் துறைமுகம் சர்வதேச துறைமுகமாக மலர்வதால், மீனவ மக்களுக்கு சிறந்த எதிர்காலம் அமையும். குடிசைகளில் வாழும் மக்கள், மாளிகைகளில் வாழும் நிலை ஏற்படும். எவ்வாறு கேரள மாநிலத்தின் கொச்சி துறைமுக நகரம், கேரளாவின் பொருளாதார நகரமாக தற்பொழுது விளங்குகிறதோ, அதுபோல குளச்சல் இனயம் துறைமுகத் திட்டத்திற்குப்பின், குளச்சல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் விளங்கும். வருங்காலத்தில், இந்தியாவின் மற்ற அனைத்து மாவட்டங்களையும் விட பொருளாதாரத்தில் தலைசிறந்த மாவட்டமாக கன்னியாகுமரி மாவட்டம் உருவெடுக்கும். நமது நாடும் முன்னேறும், நாமும் முன்னேறுவோம். எனவே, மக்கள் நலனுக்காக மத்திய கப்பல் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் அவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும், மாவட்ட மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று  நுகர்வோர் பாதுகாப்புச் சங்கத் தலைவர் எஸ்.ஆர்.ஸ்ரீராம் வெளியிட்டுள்ள அறிக்கையில்   தெரிவித்துள்ளார்.

 

2015 சினிமா – ஒரு பார்வை

2015 தமிழ் சினிமா  வுக்கு நல்ல  காலம் எனலாம் . வழக்கத்தை விட அதிகமான படங்கள் வெற்றி பெற்றிருப்பதோடு காக்கா முட்டை , குற்றம் கடிதல் , உத்தம வில்லன் போன்ற வை சர்வதேச அங்கீகாரத்தை பெற்றிருக்கின்றன . மணிகண்டன் , அஸ்வின் போன்ற புதுமுக இயக்குனர்கள் ஜொலித்தாலும் மணிரத்னம் , ஜெயம் ராஜா , கவுதம் மேனன் போன்ற பழைய இயக்குனர்கள் தங்கள் முத்திரையையை அழுத்தமாக பதித்திருக்கும் வருடமிது . இரண்டு வருடங்களுக்கு ஒரு படம் பண்ணும் உலக நாயகன் மூன்று படங்கள் நடித்திருப்பது ரசிகர்களுக்கு விருந்து . ஒரு பக்கம் ஐ , பாகுபலி போன்ற பிரம்மாண்டங்கள் உலகத்தரத்திற்கு நம்மை கொண்டு சென்றாலும் காக்காமுட்டை , டிமாண்டி காலனி போன்ற சிறு பட்ஜெட் படங்கள் பெரிய வெற்றியை பெறவும் தவறவில்லை . 2015 இல் இயக்குனர்களாக நல்ல அறிமுகத்தை கொடுத்த விஜய் மில்டன்  , வேல்ராஜ் , இருவரும் இந்த வருடம் சோபிக்க தவறியது கற்பனை வறட்சியை காட்டுகிறது. ரீ மேக் படங்களையே எடுத்துக்கொண்டிருந்த ஜெயம் ராஜா வின் படம் தனி ஒருவன் இன்று பல மொழிகளில் ரீ மேக் செய்யப்படவிருப்பது தமிழ் சினிமாவின் வளர்ச்சி . மனோரமா , எம்.எஸ்.வி போன்ற சிறந்த கலைஞர்களின்  மறைவு தமிழ் சினிமாவுக்கு பெரிய இழப்பு . ஐந்து படங்களில் நடித்த நயன்தாரா இன்றைய ஹீரோயின்களில் அல்டிமேட் . மூன்று வருடங்களுக்கு பிறகு ரிலீசான வாலு கொஞ்சம் ஓடினாலும் நடிகர் சங்க தேர்தலில் தோல்வி , பீப் பாடல் சர்ச்சைக்கு பிறகு சிம்பு  தனது வாலை சுருட்டிக்கொண்டிருப்பார் என்று நம்பலாம் . என்னை அறிந்தால் , வேதாளம் படங்களின் வசூல் மூலம்  அஜித் கோலிவுட்டின் வசூல் கிங்  என மீண்டும் நிரூபித்திருக்கிறார் .

முதல் ஆறு மாத சினிமா அலசல்களை  பற்றி அறிய காண்க : அரையாண்டு தமிழ் சினிமா 2015


இனி எனது பார்வையில் தமிழ் சினிமா 2015

கவர்ந்த படங்கள் 

  என்னை அறிந்தால்
  டிமாண்டி காலனி 
  ஓ.கே.கண்மணி 
  36 வயதினிலே 
  காக்கா முட்டை
  பாபநாசம் 
  பாகுபலி
  தனி ஒருவன்
  
மாயா
   குற்றம் கடிதல் 
  நானும் ROWDY தான்
  தூங்காவனம்

டாப் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்ஸ் 

     
    என்னை அறிந்தால்
   அனேகன்
   காஞ்சனா 2 
   காக்கிசட்டை 
   காக்கா முட்டை

   பாபநாசம் 
   பாகுபலி
   தனி ஒருவன்
   மாயா
   நானும் ROWDY தான்
   வேதாளம்


ப்ளாக்பஸ்டர்  : தனிஒருவன் 

டாப் டென் பாடல்கள்

1. என்னோடு நீ ( ஐ  )
2. மழை வர போகுதே ( என்னை அறிந்தால்   )
3. டங்கா  மாரி  ( அனேகன்  )
4. மெண்டல் மனதில்   ( ஒ.கே.கண்மணி  )
5. ஐம்  சோ கூல் ( காக்கிசட்டை )
6. காதல் கிரிக்கெட் ( தனிஒருவன்   )
7. கொஞ்சலாய் ( யட்சன் )
8. ஏண்டி ஏண்டி ( புலி )
9. உயிர் நதி ( வேதாளம் )
10.யார் அந்த  முயல்குட்டி ( பாயும் புலி  )

கவர்ந்தவர்கள் 

 கவர்ந்த படம் – காகாமுட்டை
 கவர்ந்த நடிகர் – கமல்ஹாசன்  ( உத்தமவில்லன்  )
 கவர்ந்த நடிகை – நயன்தாரா   ( மாயா / நானும் ரவுடி தான்  )
 கவர்ந்த குணச்சித்திர நடிகர் – சார்லி ( கிருமி  )
 கவர்ந்த குணச்சித்திர நடிகை – ஆஷா சரத்  ( பாபநாசம்   )
 கவர்ந்த காமெடி நடிகர் –  ரோபோ சங்கர்  ( மாரி  )
 கவர்ந்த வில்லன் நடிகர் –  அரவிந்த்சாமி ( தனிஒருவன்  )
 கவர்ந்த இசையமைப்பாளர் – ஆதி ( தனிஒருவன் )
 கவர்ந்த பின்னணி இசையமைப்பாளர் – ஜிப்ரான்  ( பாபநாசம்  )
 கவர்ந்த ஆல்பம் – என்னை அறிந்தால்   ( ஹாரிஸ் ஜெயராஜ்  )
 கவர்ந்த பாடல் – கொஞ்சலாய்  ( யட்சன்   )
 கவர்ந்த பாடகி –  ரேஷ்மா  ( காதல் கிரிக்கெட் )
 கவர்ந்த பாடகர் – ஹரிஹரன் ( தொடுவானம்   )
 கவர்ந்த பாடலாசிரியர் – தாமரை  ( உனக்கென்ன )
 கவர்ந்த வசனகர்த்தா – சுபா  ( தனிஒருவன்  )
 கவர்ந்த கதாசிரியர் – மணிகண்டன்  ( காக்காமுட்டை  )
 கவர்ந்த திரைக்கதையாசிரியர் – அஸ்வின் சரவணன்  ( மாயா )
 கவர்ந்த ஒளிப்பதிவாளர் –  சத்யன் சூரியன்  ( மாயா  )
 கவர்ந்த இயக்குனர் – ஜெயம் ராஜா ( தனிஒருவன் )


வசூல் ராஜாக்கள் 

அஜித் ( வேதாளம்  )
கமல்  ( பாபநாசம்   )
ராகவேந்திரா லாரன்ஸ்   ( காஞ்சனா 2  ) 
ஜெயம் ரவி ( தனி ஒருவன் ) 

ஏமாற்றங்கள்

மாசு 

புலி 
10 என்றதுக்குள்ள 

தமிழ் சினிமா 2015 

தமிழ் சினிமா 2015 

சினிமாவின் தகவல் களஞ்சியம் அமெரிக்க வாழ்க்கை வரலாறு கழகத்தினரால்   1997 ஆண்டின் ‘சிறந்த மனிதர்’ விருது பெற்ற,       ’ஆயிரம் பிறை கண்ட’‘கலைமாமணி’’ ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் தரும் 2015ஆம் ஆண்டின் தமிழ்ச்சினிமா உலகின் தகவல்கள்  இதோ!

2016 தமிழ் சினிமாவுக்கு வயது 100

‘‘கீசகவதம்’’ மௌனப் படத்தை எடுத்த முதல் தமிழர்       திரு ஆர்.நடராஜ முதலியார். 1917-ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், ஒளிப்பதிவாளர் இவர்தான்.

2015 – ஆம் ஆண்டின் திரைப்பட புள்ளி விவரம்     தொகுப்பு
2014 ல் வெளியான படங்கள் 213 
2015   ல் வெளியான படங்கள்   204   

2015 – ல் வெளியான படங்கள்
1.    அந்தாதீ – டியூ டிராப் பிக்சர்ஸ்
2.    அதிரடி – ராஜ் கென்னடி பிலிம்ஸ்
3.    அபூர்வமகான் – எம்.ஆர்.கிரியேஷன்ஸ்
4.    அழகே இல்லாத அழகான கதை – சாமிநாதன் கிரியேஷன்
5.    அகிலா முதலாம் வகுப்பு – தாய் திரையரங்கம்
6.    அதிபர் – கன்ஸ்டோரிடியம் ஸ்டுடியோஸ்
7.    அச்சாரம் – தாரு நிஷா மூவிஸ்
8.    அகத்திணை – ஸ்ரீஹாரினி பிக்சர்ஸ்
9.    அரூபம் – ராணா பிக்சர்ஸ்
10.    அனேகன் – ஏ.ஜி.எஸ். என்டர்டைமெண்ட்
11.    ஆரண்யம் – ஆகா ஓஹோ புரொடக்ஷன்ஸ்
12.    ஆத்யன் – ரத்தங் பிக்சர்ஸ்
13.    ஆவிக்குமார் – ஆக்‌ஷன் டேக் மூவிஸ்
14.    ஆரஞ்சு மிட்டாய் – விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்
15.    ஆயா வடை சுட்டக் கதை – பிக்சில் ஃபிலிம்
16.    ஆய்வுக்கூடம் – பங்காரு அம்மன் மூவிஸ்
17.    ஆம்பள – விஷால் ஃபிலிம் பேக்டரி
18.    இஞ்சி இடுப்பழகி – பி.வி.பி.சினிமா
19.    இஞ்சி முறப்பா – ராதாகிருஷ்ணா ஃபிலிம் சர்க்யூட்
20.    இளமை கொலை வெறி – அஸ்வின் ஸ்டூடியோஸ்
21.    இனிய உளவாக – பத்ரகாளியம்மன் பிலிம்ஸ்
22.    இவுங்க அலுச்சாட்டியம் தாங்க முடியல – நிஷா பிக்சர்ஸ்
23.    இது என்ன மாயம் – மேஜிக் பிரேம்ஸ், திங் பிக் ஸ்டுடியோ
24.    இந்தியா பாக்கிஸ்தான் – விஜய்ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன்
25.    இருவர் ஒன்றானால் – ரமணா ஆர்ட்ஸ்
26.    இன்று நேற்று நாளை – திருக்குமரன் என்டர்டைமன்ட்
27.    இரு காதல் ஒரு கதை – டி.ஜே.மூவிஸ் பிரசண்ட்
28.    இயக்குநர் – ஜெயலட்சுமி கோல்டன் ஜூப்ளி பிலிம்ஸ்
29.    இனிமே இப்படித்தான் – ஹேன்ட் மெட் ஃபிலிம்ஸ்
30.    இரிடியம் – குவாடாரா மூவிஸ்
31.    இசை – எஸ்.எஸ்.புரொடக்ஷன்ஸ்
32.    இரவும் பகலும் வரும் – ஸ்கை டாட் பிலிம்ஸ்
33.    இவனுக்கு தண்ணில கண்டம் – வி.வி.ஆர் சினி மாஸ்க்
34.    இளைஞர் பாசறை -ப்ரீடம் ஆர்ட்ஸ், சின்னம்மாள் பிலிம்ஸ்
35.    ஈட்டி – குளோபல் இன்போடைமன்ட்
36.    உப்புக்கருவாடு – ஃபர்ஸ்ட் காபி பிக்சர்ஸ்
37.    உனக்கென்ன வேணும் சொல்லு – ஜனா பிக்சர்ஸ்
38.    உயிர் வரை இனித்தாய் – கிரியேட்டிவ் சினி ஆர்ட்ஸ்
39.    உத்தமவில்லன் – திருப்பதி பிரதர்ஸ்
40.    உறுமீன் – ஆக்ஸெஸ் ஃபிலிம் பேக்டரி
41.    எப்போ சொல்ல போறே – மாருதி கிரியேஷன்ஸ்
42.    எலி – சிட்டி சினி கிரியேஷன்ஸ்
43.    எம்.ஜி.ஆர். சிவாஜி ரஜினி கமல் ரசிகர்கள் நற்பணி மன்றம் – வி.எப்.பி. வனிதா ஃபிலிம் புரொடக்க்ஷ்னஸ்
44.    எட்டுத்திக்கும் மதயானை – கே.எஸ்.தங்கசாமி பிலிம்ஸ்
45.    என் வழி தனி வழி – மக்கள் பாசறை
46.    எனக்குள் ஒருவன் – திருக்குமரன் என்டர்டைமண்ட்
47.    என்னை அறிந்தால் – ஸ்ரீசாய்ராம் கிரியேஷன்ஸ்
48.    ஐ – ஆஸ்கார் பிலிம்ஸ் இன்டெர்நேஷனல்
49.    ஐவராட்டம் – சுபசெந்தில் பிக்சர்ஸ்
50.    ஒரு நாள் இரவில் – திங் பிக் ஸ்டுடியோ
51.    9 திருடர்கள் – ஆர்.கோல்டன் ஆர்ட்ஸ்
52.    ஒரு தோழன் ஒரு தோழி – கதிர் பிலிம்ஸ்
53.    ஒரே ஒரு ராஜா மொக்க ராஜா – தேவகலா பிலிம்ஸ்
54.    ஓ காதல் கண்மணி – மெட்ராஸ் டாக்கீஸ்
55.    ஓம் சாந்தி ஓம் – பாயிண்ட் என்டர்டெய்மெண்ட்
56.    கண்கள் இரண்டால் – டி.வி.சினி கிரியேஷன்ஸ்
57.    கதிர்வேல் காக்கா – ஸ்ரீகாளியம்மன் பிலிம்ஸ்
58.    கத்துக்குட்டி – யு.என் புரொடக்ஷன்ஸ்
59.    கதம் கதம் – அப்பு மூவிஸ்
60.    கருத்தப் பையன் செவத்த பொண்ணு – மதுரை மீனாட்சி மூவிஸ்
61.    கள்ளப்படம் – இறைவன் பிலிம்ஸ், வி மூவிஸ்
62.    கமரகட்டு – ரீவ்ஸ் கிரியேஷன்ஸ்
63.    கடவுள் பாதி மிருகம் பாதி – செலிப்ஸ் அண்ட் ரெட் கார்பட்
64.    கலைவேந்தன் – எஸ்.கே.பிலிம்ஸ் இன்டர்நேஷனல்
65.    கங்காரு – வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ்
66.    காதல் அகதி – ராமய்யா சினி கிரியேஷன்ஸ்
67.    காதல் காவியம் – ரோஸ் மூவிஸ் மேக்கர்ஸ்
68.    காக்கி சட்டை – வுண்டர் பார் பிலிம்ஸ்
69.    காவல் – ஃபிலிம் பிரைவேட் லிமிடெட்
70.    காமபிசாசு – கே டியூப் கிரியேஷன்ஸ்
71.    காக்காமுட்டை – கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி
72.    காட்டுக் கோழி – முகேஷ் பிலிம்ஸ்
73.    காத்தம்மா – போகன் வில்லா பிலிம்ஸ்
74.    காஞ்சனா 2 – ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ்
75.    காதல் இலவசம் – சந்தியா கிரியேஷன்ஸ்
76.    காலகட்டம் – ஜெய் இந்திரா மூவிஸ்
77.    கிருமி – ஜே.பி.ஆர். பிலிம்ஸ்
78.    கில்லாடி – ஸ்ரீசரவணா கிரியேஷன்ஸ்
79.    கிழக்கே உதித்த காதல் – கவிபாரதி கிரியேஷன்ஸ்
80.    குபேரராசி – ஐ.என்.பி.மூவிஸ், ரைட் வியூ சினிமாஸ்
81.    குரங்கு கைல பூ மாலை – ஜி.கே.ஆர்.புரொடக்ஷன்ஸ்
82.    குற்றம் கடிதல் – ஜே.எஸ்.கே.ஃபிலிம் கார்ப்பரேஷன்
83.    குருசுக்ரன்  – ஜி.கே. குருகமலம் அசோசியேட்ஸ்
84.    கே.3 கதிர் கஞ்சா கருப்பு – மீடியா மேஜிக்
85.    கொக்கிரகுளம் – நிதின் பிலிம்ஸ்
86.    கொம்பன் – ஸ்டுடியோ கிரீன்
87.    சதுரன் – குபேரன் சினிமாஸ்
88.    சவாலே சமாளி – ஏ&பி குரூப் சினிமாஸ்
89.    சகலகலா வல்லவன் – லட்சுமி மூவி மேக்கர்ஸ் லிமிடெட்
90.    சண்டிவீரன் – பி.ஸ்டூடியோஸ்
91.    சட்டம் என் பையில் – ஸ்ரீ சுடலைமாடான் மூவிஸ்
92.    சரித்திரம் பேசு – அய்யனார் மூவிஸ்
93.    சகாப்தம் – கேப்டன் சினி கிரியேஷன்ஸ்
94.    சண்டமாருதம் – மேஜிக் பிரேம்ஸ்
95.    சாம்பவி – ஓம் ஸ்ரீ மகாலக்ஷ்மி பிக்சர்ஸ்
96.    சிக்கிக்கு சிக்கிக்கிச்சு – ஸ்டுடியோ 9
97.    சிவப்பு – முக்தா எண்டர்டைமெண்ட்
98.    சில்லுன்னு ஒரு பயணம் – ஜி.என்.மீடியாஸ்
99.    சார்லஸ் ஷாபிக் கார்த்திகா – எஸ்.எஸ்.ஃபிலிம் பேக்டரி
100.    சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது – கரியம்பட்டி ஸ்டூடியோஸ்
101.    சோன்பப்டி – கோல்டன் மூவி மேக்கர்
102.    சிறுவாணி – மருதமலை பிலிம்ஸ்
103.    சேர்ந்து போலாமா – ஐஸ்வர்யா எண்டர்டைய்மெண்ட்ஸ்
104.    சொன்னா போச்சு – எய்ம் ஹை கிரியேஷன்ஸ்
105.    டம்மி டப்பாசு – தகர டப்பா பிலிம்ஸ்
106.    டார்லிங் – கீதா ஆர்ட்ஸ், ஸ்டுடியோ கிரீன்
107.    டூரிங் டாக்கீஸ் – ஸ்டார் மேக்கர்ஸ்
108.    டிமாண்டி காலனி – மோகனா மூவிஸ்
109.    தங்க மகன் – வுண்டர்பார் பிலிம்ஸ், கோபுரம் பிலிம்ஸ்
110.    தரணி – மெலோடி மூவிஸ்
111.    தவறான பாதை – ஸ்ரீகாசி விஸ்வநாத் பிரசண்ட்ஸ்
112.    தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் – ராக் சினிமா
113.    தனி ஒருவன் – ஏ.ஜி.எஸ். என்டர்டைமெண்ட்
114.    தாக்க தாக்க – கலைப்புலி இன்டர்நேஷனல்
115.    திரைப்பட நகரம் – பாசத்தாய் மூவிஸ், உதயம் ஸ்கிரீன்ஸ்
116.    த்ரிஷா இல்லன்னா நயன்தாரா – கேமியோ பிலிம்ஸ்
117.    திருட்டு விசிடி – வி.பி.ஏ.மீடியாஸ்
118.    திலகர் – பிங்கர் பிரிண்ட் பிக்சர்ஸ்
119.    திறந்திடு சீசே – சுதா புரொடக்ஷன்ஸ்
120.    திருட்டு ரயில் – எஸ்.எஸ்.எஸ்.மூவிஸ் பிரசண்ட்
121.    திகார் – ஃபியோனா பிலிம்ஸ்
122.    திரு.வி.க. பூங்கா – காதல் கிரியேஷன்ஸ்
123.    துணை முதல்வர் – அனுகிரகதா ஆர்ட் பிலிம்ஸ்
124.    தூங்காவனம் – ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல்
125.    தேகம் சுடுது – கே.சீ.வி ஃபிலிம் பிரசண்ட்ஸ்
126.    தொப்பி – ராயல் ஸ்கிரீன்
127.    தொட்டால் தொடரும் – எஃப்.சி.எஸ்.கிரியேஷன்ஸ்
128.    நதிகள் நனைவதில்லை- சரஸ்வதி எண்டர்டைமெண்ட்
129.    நந்திவரம் – ராமானுஜம் பாக்யம் மூவிஸ்
130.    நண்பர்கள் நற்பணி மன்றம் – ஸ்ரீஅண்ணாமலையார் மூவிஸ்
131.    நண்பேன்டா – ரெட் ஜெயண்ட் மூவிஸ்
132.    நானும் ரவுடிதான் – வுண்டர்பார் பிலிம்ஸ்
133.    49 ஓ – ஜீரோ ரூல்ஸ்
134.    நானாக நானில்லை – திருநீலகண்ட விநாயகர் பிக்சர்ஸ்
135.    நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் – ஜே.எஸ்.கே.ஃபிலிம் கார்ப்பரேஷன்
136.    நிராயுதம் – எஸ்.பி.எம். கிரியேஷன்ஸ்
137.    நீதானே என் கோவில் – நாகு கிரியேஷன்ஸ்
138.    144 – திருக்குமரன் என்டர்டைமென்ட்
139.    பசங்க 2 -பசங்க புரொடக்ஷன்ஸ், 2டி என்டர்டைமென்ட்
140.    பள்ளிக் கூடம் போகாமலே – பெஸ்ட் ரீல்ஸ்
141.    10 எண்ணுறதுக்குள்ள – ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்ஷன்ஸ்
142.    பட்ற – ஜி.கே.சினிமாஸ்
143.    பரஞ்சோதி – ஐபிஎல் சினிமாஸ்
144.    பாயும் புலி – வேந்தர் மூவீஸ்
145.    பாபநாசம் – ராஜ்குமார் தியேட்டர்
146.    பானு – பசவா புரொடக்ஷன்ஸ், ஸ்ரீகமல் தீப் புரொடக்ஷன்ஸ்
147.    பாலக்காட்டு மாதவன் – எஸ்.எஸ்.எஸ்.எண்டர்டைமெண்ட்
148.    புலி – எஸ்.கே.டி. ஸ்டுடியோஸ்
149.    புத்தனின் சிரிப்பு – சக்காரியா புரொடக்ஷன்ஸ்
150.    புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் – ராவுத்தர் ஃபிலிம்ஸ்
151.    புலன் விசாரணை 2 –  ராவுத்தர் ஃபிலிம்ஸ்
152.    பூலோகம் -ஆஸ்கார் பிலிம்ஸ் பி லிட்
153.    பேபி – ஆர்.கே. எண்டர்டைமெண்ட்
154.    பொங்கி எழு மனோகரா – பான்யன்
155.    போக்கிரி மன்னன் – ஸ்ரீநிதி பிலிம்ஸ்
156.    புறம்போக்கு என்கிற பொதுவுடமை – யு.டி.வி
157.    பேயுடன் ஒரு பேட்டி பிசாசு – கே.டியூப் கிரியேஷன்ஸ்
158.    மலரும் கனவுகள் – பிஜின் ஸ்டூடியோஸ்
159.    மனதில் ஒரு மாற்றம் – கோடராக் பிலிம்ஸ்
160.    மகா மகா – சக்தி ஸ்கிரீன்ஸ்
161.    மனித காதல் அல்ல – பிளாக் சி மூவிஸ்
162.    மண்டோதரி – மைல் ஸ்டோன் பிலிம்ஸ்
163.    மணல்நகரம் – பி.ஜே.எம்.அசோசியேட்
164.    மரப்பாச்சி – ஜெம் பிக்சர்ஸ்
165.    மந்த்ரா 2 – எஸ்.எஸ்.எஸ்.பிலிம்ஸ்
166.    மய்யம் – ஹார்வெஸ்ட் என்டர்பிரைசர்ஸ், ஸ்கெட்ச் புக்
167.    மசாலாபடம் – அலின் பிக்சர்ஸ்
168.    மகாபலிபுரம் – கிளாப் போர்ட் மூவிஸ்
169.    மகாராணிக் கோட்டை – தனமலர் கிரியேஷன்ஸ்
170.    மாயா – பொட்டான்சியல் ஸ்டூடியோஸ்
171.    மாங்கா – ட்ரீம் ஸ்கோன்
172.    மாரி – மேஜிக் பிரேம்ஸ்
173.    மாசு என்கிற மாசிலாமணி – ஸ்டுடியோ ஸ்கிரீன்
174.    மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க – ஜமுனா இண்டெர்நெஷனால்
175.    36 வயதினிலே – 2டி என்டர்டைமெண்ட்
176.    மூணே மூணு வார்த்தை – கேபிடல் பிலிம் ஒர்க்ஸ்
177.    மூச் – ஜகநாதன் பிக்சர்ஸ்
178.    யட்சன் – விஷ்ணுவர்தன் பிலிம்ஸ், யு.டி.வி மார்டன் பிக்சர்ஸ்
179.    யாகாவராயினும் நாகாக்க   – ஆதர்ஷா சித்ராலயா
180.    யூகன் – டுவின்ஸ் புரொடக்ஷன்ஸ்
181.    ராஜதந்திரம் – பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ்
182.    ரொம்ப நல்லவன்டா நீ – ராண்டேவா மூவி மேக்கர்ஸ்
183.    ரோமியோ ஜூலியட் – மெட்ராஸ் என்டர்டைமெண்ட்
184.    லொடுக்கு பாண்டி – சாயாபுத்ரா புரொடக்ஷன்ஸ்
185.    வலியவன் – எஸ்.கே.ஸ்டூடியோஸ்
186.    வந்தா மல – ஜிஞ்சர் பிலிம்ஸ் புரொடக்ஷன்ஸ்
187.    வண்ண ஜிகினா – திருப்பதி பிரதர்ஸ்
188.    வஜ்ரம் – ஸ்ரீசாய்ராம் பேக்டரி
189.    வாலு – நிக் ஆர்ட்ஸ்
190.    வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க-ஷோதிபீப்பிள்
191.    வானவில் வாழ்க்கை – ஓசன்னா ஏ.ஜே.ஆர்.ஆர்ட்ஸ்
192.    விரைவில் இசை – திருமாருதி பிலிம்ஸ்
193.    விந்தை – அன்னை புதுமை மாதா பிலிம்
194.    விஷயம் வெளியே தெரியக் கூடாது -ஓப்பன்ஐ தியேட்டர்ஸ்
195.    விருதாலம்பட்டு – தமிழ்த் தாய் புரொடக்ஷன்ஸ்
196.    வெத்து வேட்டு – விவின் மூவிஸ்
197.    வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் – இன்கனைக்ட் பிலிம்ஸ்
198.    வேதாளம் – ஸ்ரீசாய்ராம் கிரியேஷன்ஸ்
199.    வேட்டையாடு விளையாட்டு – சவுந்தர்யன் பிக்சர்ஸ்
200.    வை ராஜா வை – ஏ.ஜி.எஸ். என்டர்டைமெண்ட்
201.    ஸ்ட்ரா பெரி – வில் மேக்கர்ஸ்
202.    ஜவ்வுமிட்டாய் – என் பிக்சர்ஸ், ஷெல்பி கிரியேஷன்ஸ்
203.    ஜிப்பா ஜிமிக்கி ஜிகுஜிகுன்னு – 3 பிரண்ட்ஸ் இண்டெர்நேஷனல்
204.    ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை – ட்ரீம் ஸ்டுடியோ

2015 குடியரசு தின விருது!

பத்மபூசன் – சுதா ரகுநாதன்
பத்மவிபூஷன் – அமிதாப் பச்சன், திலீப்குமார்

தேசிய விருதுள்!

சிறந்த துணை நடிகர்- பாபி சிம்ஹா (ஜிகர்தண்டா)
சிறந்த குழந்தை நட்சத்திரங்கள்- விக்னேஷ், ரமேஷ் (காக்கா முட்டை)
சிறந்த குழந்தைகளுக்கான படம் – காக்கா முட்டை
சிறந்த பிராந்திய மொழி படம் – குற்றங்கடிதல்
சிறந்த பாடலாசிரியர் – நா.முத்துக்குமார் (சைவம்)
சிறந்த பின்னணி பாடகி – உத்ரா (சைவம்)
சிறந்த படத்தொகுப்பாளர் – விவேக் ஹர்ஷன் (ஜிகர்தண்டா)
சிறந்த திரைப்படம் சார்ந்த புத்தகம் – ப்ரைடு ஆஃப் தமிழ் சினிமா (தனஞ்செயன்)

2015 – திரைப்பட விழா

*    கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் 2015-ஆம் ஆண்டுக்கான இந்திய திரையுலக ஆளுமை நூற்றாண்டு விருது இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது

*    கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிட தேர்வான ஒரே தமிழ்த் திரைப் படம் ரேடியோ பெட்டி.

சிறப்புச் செய்திகள்

*    சிவாஜி கணேசனின் 87 வது பிறந்த நாள் விழாவில் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், நடிகைகள் சாரதா, குசலகுமாரி, நடிகர் டைபிஸ்ட் கோபு, ஒளிப்பதிவாளர் எம்.சி.சேகர், பின்னணி பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி, ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

*    பின்னணிப் பாடகி ஆஷா போன்ஸ்லே அவர்களுக்கு மும்பையில் சிலை திறந்துள்ளனர்.

*    நடிகர் சங்க தேர்தலில் தலைவராக நாசர், செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி, துணைத்தலைவர்களாக கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

விருதுகள் – பட்டங்கள்!

*   அமெரிக்க பாரதிய வித்யாபவன், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்குசாதனையாளர் விருது வழங்கி கௌரவித்தனர்.

*    கணினித் தமிழ் சங்கம் தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்திக்கு ‘கணினித் தமிழ் விருது’ வழங்கி கௌரவித்தனர்.

*    பிரான்சில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் தீபன் திரைப்படம் சிறந்த படமாக தேர்வாகி விருது பெற்றது. அதில் நடித்த தமிழ் பெண் காளீஸ்வரி சிறந்த நடிகைக்கான விருது பெற்றார்.

*    அமெரிக்காவில் நடைபெற்ற விருது விழாவில் ஆரஞ்சு மிட்டாய் படத்திற்காக அதன் இயக்குநர் பிஜு விஸ்வநாத்  சிறந்த இயக்குநருக்கான விருது பெற்றார் .

*   குற்றங்கடிதல்ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பில் அனுப்பப்பட்டது

*    தமிழ் ஸ்டுடியோ சார்பாக, பூனேவிலுள்ள மத்திய அரசின் திரைப்பட சேமிப்பின் முன்னாள் அமைப்பாளர் பி.கே.நாயர், திரை இசைத் தட்டு சேகரிப்பாளரும், திரைப்பட ஆராய்ச்சியாளருமான சந்தான கிருஷ்ணன், பிலிம் நியூஸ் ஆனந்தன் ஆகியோருக்கு எடிட்டர் பி.லெனின் பெயரில் விருது வழங்கப்பட்டது விழாவில் கலந்து கொண்டு யூகி சேது, எடிட்டர் லெனின் ஆகியோர் பாராட்டுரை வழங்கினர்.

*   நார்வே உலகப்பட விழாவில் காவியத்தலைவன் நட்சத்திரங்கள் சித்தார்த், வேதிகா, நாசர், குயிலி, பாடகர் ஹரிகரன், இயக்குநர் வசந்த பாலன் ஆகியோரை பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டன.

*    அமிதாப்பச்சனுடன், தனுஷ் இணைந்து நடித்த படம் ஷமிதாப். இந்தப் படம்இளையராஜாவுக்கு ஆயிரமாவது படம்.

*பாடலாசிரியர் விந்தனின் நூறாவது ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

*    காமராஜ் என்று  ஏற்கனவே வெளியான படத்தை சில மாற்றங்களுடன் 2015 ஆம் ஆண்டில் மீண்டும் வெளியிட்டனர்.

டாக்டர் பட்டம்

*    சத்யபாமா பல்கலைக் கழகம் நடிகர் விவேக்குக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.

*    சென்னைப் பல்கலைக் கழகம் நடிகரும், விமர்சகருமான யூகி சேதுவுக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

சாதனை விருது!

*    மூத்தப் பத்திரிகையாளர்கள் ‘பேசும்படம்’ சம்பத்குமார், ‘பொம்மை’ சாரதி, ‘நவமணி’ நாகை தருமன், ராண்டார் கை, ‘பிலிம்நியூஸ்’ ஆனந்தன் ஆகியோருக்கு திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் பாராட்டு விழா நடத்தி சாதனையாளர் விருது வழங்கியது. விழாவில் கமல்ஹாசன், சிவக்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். சிறப்பு விருந்தினராக நடன இயக்குநரும், நடிகருமான ராகவேந்திரா லாரன்ஸ் கலந்து கொண்டார்.

நூல் வெளியீடு

*    ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரின் வாழ்க்கை வரலாற்று தமிழ் நூல், ஆங்கிலத்தில் மொழிப் பெயர்ப்பு செய்து வெளியிடப்பட்டது.

திரையுலகில் பெண்கள்

இயக்குநர்         
ஐஸ்வர்யா – வை ராஜா வை

படத்தொகுப்பு

முத்துலட்சுமி வரதன் (கதம் கதம்)
மதுமிதா – மூணே மூணு

உடைகள்

கௌதமி (உத்தமவில்லன்)

கதை – வசனம்      
வனிதா (எம்.ஜி.ஆர். சிவாஜி  ரஜினி கமல் ரசிகர்கள் நற்பணிமன்றம்)

வழக்கில் சிக்கிய படங்கள்

புலி, அநேகன்   , ஆம்பள  ,கத்துக்குட்டி  ,  வாலு

தணிக்கையில் சிக்கிய படம்

உறுமீன்

வரிவிலக்கு பெற்ற படம்;

இனிய உளவாக

பொது அரங்கில் வெளிவராமல் சிடியில் வெளியான படம் ;

ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை

ஓடும் ரயிலில் உருவான் படம்:

சிக்கிக்கு சிக்கிகிச்சு

இரண்டு கதைகள் கொண்ட படம்:

டூரிங் டாக்கீஸ்

2008 ஆம் ஆண்டு தணிக்கையான படம்

புலன் விசாரணை 2

   நா.முத்துக்குமார் : 2015 ஆம் ஆண்டில் அதிக படங்களுக்கு பாடல் எழுதியவர். 33 படங்கள். 94 பாடல்கள். தொடர்ந்து 12 ஆண்டுகளாக முதலிடம் வகிக்கிறார்.

*    தேசிகன்: ஒரு இந்தியக்கனவு தயாரிப்பாளர். தனது 80 வது பிறந்த நாளை கொண்டாடினார்

*    எஸ்.எஸ்.ராஜேந்திரன்: முதலாம் ஆண்டு நினைவு படத்திறப்பு விழா சென்னையில் நடைபெற்றது. பிலிம் நியூஸ் ஆனந்தன் படத்தை திறந்து வைத்தார்.

2015 ஆம் ஆண்டின் நூறு நாள் படங்கள்

லிங்கா ,         வெள்ளக்காரதுரை ,           அநேகன்       ,                            காக்கிச்சட்டை,   வஜ்ரம் ,      கத்தி ,
புலிபார்வை,            கொம்பன்    ,        காஞ்சனா 2   ,         தனி ஒருவன் .

கலைஞர்கள் திருமணம்
நடிகர் அருள்நிதி

நடிகர் விதார்த்
நடிகர் சாந்தனு

நடிகர் ஆரி
நடிகர் கணேஷ்வெங்கட்ரமன்

நடிகர் ஹரிஸ்
தயாரிப்பாளர் வாசு பாஸ்கர்

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு

நடிகை விஜயலட்சுமி – இயக்குநர் ஃபெரோஸ்
நடிகை மித்ரா குரியன் – பாடகர் வில்லியம்
நடிகை ஜானகிதேவி – ஒளிப்பதிவாளர் சதீஷ்குமார்
இசையமைபாளர் சைமன் – பாடகி ஷீபா

மறைந்த கலைஞர்கள்

தயாரிப்பாளர்                                      இயக்குநர்
டி. ராமாநாயுடு                       கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்
இப்ராஹிம் ராவுத்தர்                     வி.வி.ராஜேந்திர பிரசாத்
ஏடித நாகேஸ்வரராவ்                            சித்தலிங்கையா                                      ஜாக்பாட் டி.ஆர்.சீனிவாசன்                            அமீர்ஜான்
ஆர்.சி.சக்தி
நடிகர்
நடிகை மனோரமா                           இசையமைப்பாளர்
நவீன் கிருஷ்ணா                          எம்.எஸ்.விஸ்வநாதன்
வி.எஸ்.ராகவன்
எழுத்தாளர்
பத்திரிகையாளர்                                        ஜெயகாந்தன்
‘பேசும்படம்’ சம்பத்குமார்
‘திரைச்சுவை’ விக்னேஷ்ராஜா                           பாடகர்
மின்னல்                                                           நாகூர் அனிபா

ஒளிப்பதிவாளர்                                  படத்தொகுப்பாளர்
ஏ.வின்சென்ட்                                  எடிட்டர் கிஷோர்
சாதனை
06.03.2013  ,28.11.2013     ஒரு நாளில்     8 படங்கள் 12 படங்கள்
20.03.2015     ஒரு வாரம்     10 படங்கள்
மார்ச் 2015    ஒரு மாதம்     31 படங்கள்
2014     ஒரு வருடம்     213 படங்கள்

2015 – ல் தணிக்கை செய்யப்பட்டு விரைவில் வெளிவர இருக்கும் படங்கள்:  144
1    ரேடியோ பெட்டி
2    காதல் போல் வேறேது
3    எண்ணம் புது வண்ணம்
4    இனி அவனே
5     பந்து     28     அர்ஜுனன் சாட்சி
6    திருட்டுக் கல்யாணம்
7     சவரிக்காடு
8     சரவணப் பொய்கை
9    சூதனன்
10     போக போக புரியும்
11      சினிமா உலகம்
12     லட்டுக்குள்ள பூந்தி பூந்தி
13     ஒண்ணுமே புரியல
14     விடியும் வரை விண்மீன்களாவோம்
15     வெண்ணிலாவின் அரங்கேற்றம்
16     ஜெனிபர் கருப்பையா
17     கிடா பூசாரி மகுடி
18     சொகுசு பேருந்து
19     டாக்டர் சலீம்
20     ஆயிரத்தில் இருவர்
21     பொண்டாடிய காதலிங்க
22     சர்வேஸ்வர்
23     பிரபா
24     தகவல்

25    ஏமாளி

26     கள்ளச் சிரிப்பழகி

27     சாந்தம்

29     என்ன பிடிச்சிருக்கா

30     பணம் காய்க்கும் மரம்

31     என்று தணியும்

32     நமையாட மழையே

33     ரூ

34     சென்னை நகரம்

35     நானும் காதலிச்சேன்

36     மொக்கப்படம்

37     சொல்லுங்க அண்ணே சொல்லுங்க

38     நீயும் நானும் நிலவும்  வானும்

39     பஞ்சுமிட்டாய்

40     கனவு வாரியம்

41     சாப்ளின் சம்பந்தி

42     ஓட்டதூதுவன்

43     இருவர் ஒன்றானால்

44    நீ நான் நாம்

45     தலக்கால் புரியல

46     காசு பணம் துட்டு

47  சமூக வலைத்தளம்  68 வீரத்தின் மகன்
48     PYAASI HAWAS    69      ஜம்புலிங்கம்
49      வெள்ளை உலகம்    70      திகில்
50      பரிசல்     71      அஞ்சுக்கு ஒண்ணு
51      மூன்றாம் உலாப்போர்     72      வி
52      செவிலி     73    54321
53      பேய்கள் ஜாக்கிரதை     74     ரஜினி முருகன்
54      பி.டி.ஜெயராம்     75     மர்ம முடிச்சு
55      சேலஞ்ச்     76     சேது பூமி
56      இடம் பொருள் ஏவல்     77      பிரேமாலயம்
57      சாலையோரம்     78      சவார்
58      கதிரவனின் கோடை மழை     79     ஊருக
59      நாலு பேரு நாலுவிதமா பேசுவாங்க     80       சரியா ராத்திரி பனிரெண்டு மணிக்கு
60      பாதி உனக்கு பாதி எனக்கு     81       மாப்ள சிங்கம்
61      அவளுக்கென்ன அழகிய முகம்     82        தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்
62      முத்துக் குமார் வான்டட்     83     தப்பா யோசிக்காதீங்க
63      போயா வேலையைப் பாத்துக்கிட்டு     84      யோக்கியன் வாரான் சொம்பை தூக்கி வை
64      நாரதன்     85      கடல் குதிரைகள்
65      தங்கமே வைரமே     86      மஞ்சள் ரிப்பன்
66      எதுக்குடி காதலிச்ச     87      நிலாவுக்கு ரெண்டு சீட்டு
67      ஒன்பதில் இருந்து பத்து வரை

88     ஹலோ நான் பேய் பேசுகிறேன்     102     நாளை முதல் குடிக்க மாட்டேன்
89     பழைய வண்ணாரப்பேட்டை     103     காதல் காலம்
90     காகாகா ஆபத்தின் நிழல்குறி     104     நெஞ்சுக்குள்ள நீ நெறஞ்சிருக்க
91     இரண்டு மனம் வேண்டும்     105     காட்சிப் பிழை
92     சௌகார்ப் பேட்டை     106     வில் அம்பு
93     மாலை நேரத்து மயக்கம்    107     ஊதா
94     தண்டு பாளையம் அலஜடி     108     நவரச திலகம்
95     புகழ்     109    சூரத்தேங்காய்
96     மஞ்சள்     110     கரையோரம்
97     விசாரணை     111    மதிகா
98     வெற்றி     112     திரன்மாலை
99     சீனி     113     ராஜா மந்திரி
100     ஆவி பெண்
101     ஓ

நீங்களும் செய்தியாளர் ஆகலாம் !

dhinasari 6thyear copy - 2026

தினசரி இணைய தமிழ் செய்தித் தளத்தின் வாசகர்களாகிய நீங்களும் செய்தியாளர்களே!

அரசியல், விவசாயம், சிறுகதை, தொழில்நுட்பம், ஆன்மிகம், மருத்துவம், சுற்றுலா, விளையாட்டு, சினிமா, கவிதைகள், நகைச்சுவை, சமையல் குறிப்புகள், பொது தகவல்கள் மற்றும் உங்கள் பகுதி செய்திகள், கட்டுரைகள், போன்றவைகளை www.dhinasari.com எனும் தினசரி இணைய தமிழ்ச் செய்தித் தளத்தில் வெளியிட எங்களுக்கு அனுப்புங்கள்.

* ஜாதி, மத, அரசியல் வேறுபாடுகள் இன்றி பொதுநல நோக்கத்தை கருத்தில் கொண்டு எவர் மனதும் புண்படாமல் தவறுகளை சுட்டிக் காட்டும் நோக்கில் உங்களுடைய கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்து (முக நூல் பக்கத்தில் பயன்படுத்தப்படும் எழுத்துரு) புகைப்படத்துடன் அனுப்புங்கள்.

* தாங்கள் எங்களுக்கு அனுப்பும் கருத்துப் பதிவுடன் உங்கள் பெயர், கைப்பேசி எண் போன்ற விவரங்கள் அவசியம் இருத்தல் வேண்டும்.

* உங்களுடைய செய்திப் பதிவை கருத்து சுருக்கி வெளியிட தினசரி இணைய தமிழ்ச் செய்தித் தளத்தின் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.

* தகுதியான செய்திகள் மட்டுமே தினசரி இணைய தமிழ்ச் செய்தித் தளத்தில் உங்களுடைய பெயருடன் உடனடியாக வெளியாகும்!

* மிக முக்கியமாக எந்த செய்தி நிறுவணமும் வெளியிட்ட காப்புரிமை உடைய செய்திகளை எங்களுக்கு நீங்கள் கட்டாயமாக அனுப்ப கூடாது.

* நீங்கள் தெரிவிக்கும் கருத்துகள், புகைப்படங்கள், மற்றும் காப்புரிமை உடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி அதனால் சட்ட ரீதியான பிரச்சனை ஏற்ப்பட்டால் நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது.

செய்திகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : –
dhinasarinews@gmail.com

புதிய தலைமுறை பேட்டி எதிரொலி: நாஞ்சில் சம்பத் திடீர் நீக்கம்

சென்னை:
புதிய தலைமுறை டிவியில் கொடுத்த பேட்டியின் எதிரொலியாக, நாஞ்சில் சம்பத் திடீரென நீக்கப்பட்டுள்ளார்.

அதிமுகவின் துணை கொள்கை பரப்புச் செயலாளர் பதவியிலிருந்து நாஞ்சில் சம்பத் நீக்கப்பட்டதாக அதிமுக அறிவித்துள்ளது.

நாஞ்சில் சம்பத் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அக்னிப் பரிட்சை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறியதாகக் கூறப்படுகிறது.

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நெறியாளர் மது விலக்கு பிரச்னை குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு நாஞ்சில் சம்பத் தமிழகத்தில் மது விலக்கு அமல் படுத்த வேண்டுமானால் மக்கள் அனைவரும் மேலும் உரத்த குரல் கொடுக்க வேண்டும் என பதில் அளித்ததாக கூறப்படுகிறது.

அதன் காரணமாக நாஞ்சில் சம்பத்தை அதிமுக கட்சி பொறுப்பிலிருந்து நீக்கி இருக்கலாம் என்று சொல்லப் படுகிறது. மேலும் பல சர்ச்சைக்குரிய பதில்களை அவர் அளித்தார் என்றும், சொந்த கட்சிக்கு எதிராக அவரது கருத்துகள் அமைந்தது என்றும், பல கேள்விகளுக்கு அவர் கட்சியின் தரப்பு வாதத்தை முன்வைக்காமல் தயங்கி தடுமாறினார் என்றும் பரவலாக கருத்துகள் எழுந்துள்ளன.

மேலும், இன்று இரவு தந்தி டிவியில் ஒளிபரப்பாகவுள்ள நாஞ்சில் சம்பத்தின் பேட்டியில் சில பகுதிகளும் காலை முதல் டிவியில் ஒளிபரப்பாகி வந்தது. அதிலும், அவர் சர்ச்சைக்குரிய பல விஷயங்களைப் பேசியிருப்பதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. அதுவும் கூட அதிமுக., தலைமையை கோபப் படுத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

நீங்களும் செய்தியாளர் ஆகலாம் !

 
தினசரி இணைய தமிழ் செய்தித் தளத்தின் வாசகர்களாகிய நீங்களும் செய்தியாளர்களே!
 
அரசியல், விவசாயம், சிறுகதை, தொழில்நுட்பம், ஆன்மிகம், மருத்துவம், சுற்றுலா, விளையாட்டு, சினிமா, கவிதைகள், நகைச்சுவை, சமையல் குறிப்புகள், பொது தகவல்கள் மற்றும் உங்கள் பகுதி செய்திகள், கட்டுரைகள், போன்றவைகளை www.dhinasari.com எனும் தினசரி இணைய தமிழ் செய்தித் தளத்தில் வெளியிட எங்களுக்கு அனுப்புங்கள்.
 
* ஜாதி, மத, அரசியல் வேறுபாடுகள் இன்றி பொதுநல நோக்கத்தை கருத்தில் கொண்டு எவர் மனதும் புண்படாமல் தவறுகளை சுட்டிக் காட்டும் நோக்கில் உங்களுடைய கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்து (முக நூல் பக்கத்தில் பயன்படுத்தப்படும் எழுத்துரு) புகைப்படத்துடன் அனுப்புங்கள்.
 
* தாங்கள் எங்களுக்கு அனுப்பும் கருத்துப் பதிவுடன் உங்கள் பெயர், கைப்பேசி எண் போன்ற விவரங்கள் அவசியம் இருத்தல் வேண்டும்.
* உங்களுடைய செய்திப் பதிவை கருத்து சுருக்கி வெளியிட தினசரி இணைய தமிழ்ச் செய்தித் தளத்தின் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.
 
* தகுதியான செய்திகள் மட்டுமே தினசரி இணைய தமிழ் செய்தித் தளத்தில் உங்களுடைய பெயருடன் உடனடியாக வெளியாகும்!
 
* மிக முக்கியமாக எந்த செய்தி நிறுவணமும் வெளியிட்ட காப்புரிமை உடைய செய்திகளை எங்களுக்கு நீங்கள் கட்டாயமாக அனுப்ப கூடாது.
 
* நீங்கள் தெரிவிக்கும் கருத்துகள், புகைப்படங்கள், மற்றும் காப்புரிமை உடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி அதனால் சட்ட ரீதியான பிரச்சனை ஏற்ப்பட்டால் நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது.
 
செய்திகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : –
dhinreporter@gmail.com

வங்கிக் கணக்கில் மண்ணெண்ணெய் மானியம்: இளங்கோவன் சாடல்

சென்னை:
வெளிச்சந்தையில் மண்ணெண்ணெய்யை பயனாளிகள் வாங்க வேண்டும், அதற்கான மானியம் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்பது நடைமுறை சாத்தியமில்லாத திட்டமாகும் என்று மத்திய அரசை தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடுமையாக சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “மத்தியில் பாஜக அரசு அமைந்தவுடன் மானியங்களை ஒழித்துக் கட்டுவதில் தீவிர முனைப்பு காட்டுகிற பல நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தது. கடந்த 2014-ல் பாஜக ஆட்சி அமைந்தவுடன் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.5, ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் 50 பைசா என ஒவ்வொரு மாதமும் உயர்த்தினால் மானியங்களை காலப்போக்கில் முற்றிலும் ஒழித்துவிட முடியும் என்று முடிவு செய்யப்பட்டது.

ஆனால் இதற்கு எதிர்ப்பு அதிகரித்த காரணத்தால் அந்த நடவடிக்கையை தொடராத பாஜக அரசு இன்றைக்கு பொது விநியோக திட்டத்தின்கீழ் மண்ணெண்ணெய்க்கு வழங்கப்படும் மானியத்தை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதேபோல ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக வருமானம் உள்ளவர்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக வெளிச்சந்தையில் ரூ.43 விலையில் விற்கப்படும் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் பொது விநியோக திட்டத்தின்கீழ் ரூ.12 விலையில் வழங்கப்படுகிறது. இதனால் ஒரு லிட்டரில் ரூ.31 மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. சமீபகாலமாக மண்ணெண்ணெய் பயன்பாடு வெகுவாக குறைந்துவிட்டாலும் கிராமப்புறங்களில் குடிசைகளிலும், மலைப்பகுதிகளிலும் வாழ்கிற ஏழைஎளிய மக்கள் இன்றைக்கும் எரிபொருளாக பயன்படுத்திக் கொண்டுதான் வருகின்றனர். இவ்வகையில் ஆண்டுதோறும் 86.85 லட்சம் கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கி வருகிறது.

மத்திய அரசின் இத்திட்டத்தின்படி வெளிச்சந்தையில் மண்ணெண்ணெய்யை பயனாளிகள் வாங்க வேண்டும், அதற்கான மானியம் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்பது நடைமுறை சாத்தியமில்லாத திட்டமாகும். மேலும் மண்ணெண்ணெய் விற்பனை செய்பவர்கள் தனியார்துறையை சேர்ந்தவர்களே தவிர பொதுத்துறை நிறுவனங்கள் அல்ல. பொதுவாக மண்ணெண்ணெய்யை பயன்படுத்துகிற பயனாளிகள் வங்கிகள் இருக்கும் இடத்திற்கு மிகத் தொலைவில் வங்கிக் கணக்கு வைத்துக் கொள்ளாதவர்களாக இருப்பதை இந்த அரசு அறிந்து கொள்ளாமல் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது மிகுந்த கண்டனத்திற்குரியது. இந்த நடைமுறையோடு ஒத்துப்போவதற்கு பயனாளிகளால் சாத்தியமில்லாத போது இத்திட்டத்தை அவர்கள்மீது திணிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

கடந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பெட்ரோலியப் பொருட்களுக்கு மானியமாக ரூ.1 லட்சத்து 24 ஆயிரம் கோடி வழங்கிவந்த நேரத்தில் கூட மண்ணெண்ணெய் விலையை உயர்த்துகிற முயற்சியில் ஈடுபட்டதில்லை. ஆனால் 2014 இல் சர்வதேச சந்தையில் 140 டாலராக இருந்த கச்சா எண்ணெய் 35 டாலராக கடுமையாக வீழ்ச்சியடைந்த நிலையில் மானியங்களை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதும், பெட்ரோலியப் பொருட்கள் மீதான கலால் வரியை உயர்த்தி, வருமானத்தை பெருக்கிக் கொள்வதும் மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கையே வெளிப்படுத்துகிறது”

பதான்கோட் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனம்

பதான்கோட்:

பாகிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ள பஞ்சாப் மாநிலத்தின் பதன்கோட் விமானப் படைத்தளத்திற்குள் இன்று அதிகாலை 3.30 மணிக்கு ராணுவ வீரர்கள் உடையில் நுழைந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தச் சண்டையின் முடிவில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதில், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 3 பேர் வீர மரணம் அடைந்தனர். 6 வீரர்கள் காயம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், பதான்கோட் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மதிப்புமிக்க உயிர்கள் பலியானதற்குக் காரணமான இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதே செய்தி அந்நாட்டு அரசு வானொலியிலும் வெளியிடப்பட்டுள்ளது.

காவல்துறையினரை மிரட்டிய பாப்புலர் பிரண்ட் அமைப்பினர்

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த வள்ளல் சீதக்காதி சாலையில் நிறுத்தப் பட்டிருந்த வாகனங்களை அகற்றிய டி.எஸ்.பி மகேஸ்வரி மற்றும் காவல்துறையினரை எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாஅமைப்பினர் முஜீப், முர்சலி, அஸ்வத் கரீம், பீப் கடை அப்துல் மாலிக் ஆகியோர் ஒன்று திரண்டு அவதூறாகப் பேசி மிரட்டியதுடன், அவர்களை கெரோ செய்தனர். இது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடப்பது சந்தேகம்?

புது தில்லி:

இந்த ஆண்டு ஜல்லிகட்டு நடப்பது சந்தேகமே என தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, ஜல்லிகட்டு தொடர்பான தகவலால், அதன் நிர்வாகிகளை தில்லிக்கு அழைத்த பாஜக., நிர்வாகிகள், தற்போது அவர்களிடம் நீங்கள் அனைவரும் ஊருக்குத் திரும்புங்கள். ஏதாவது முன்னேற்றம் இருந்தால் பார்க்கலாம் என கூறிவிட்டனராம். இதை அடுத்து, இந்த வருடம் ஜல்லிக் கட்டு நடப்பது சந்தேகம் என்று அவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

ஜல்லிக்கட்டு குறித்து பிரதமர் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பேசி முடிவு எடுக்கப்படும் என்று தீவிரமாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் அது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் பேசவே இல்லை என்று தடாலடியாக அறிவித்தார். அது முதலே, ஜல்லிக்கட்டு குறித்த எதிர்பார்ப்பு பொசுங்கிப் போனது.

கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை உயர்வு

சென்னை:

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி மற்றும் பழங்கள் விலை கிடுகிடுவாக உயர்ந்துள்ளது. பீன்ஸ் மற்றும் கேரட் ரூ.60, தக்காளி ரூ.45, வெண்டைக்காய் ரூ.40க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அவரைக்காய் ரூ.45, முருங்கைக்காய் ரூ.100க்கும் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.