Home Blog Page 5892

பார்வை !

சாலை யோரம்
நின்று கொண்டிருக்கையில்
கடந்து சென்றாள் பாவை !

சென்றடைந்தேன்
காதலெனும் தீவை !

வாலிப கடல்
பொங்கிவழிந்தோடும் வேளை
ஒரு காதல் தேவை !

ஆதலினால்
தினம் வேண்டும்
உன் கண்களினால்
பார்வை எனும் சேவை !

கருவறை !

உன்னை
இதயத்தில் சுமந்த எனக்கு
இன்று பிரசவ நாள் !
இதோ
உன்னுடன் பழகின நினைவுகளை
ஈன்றெடுத்து கொண்டுள்ளது
என் மனக் கருவறை !

மூச்சு காற்று !

அவன் சொன்னான்
இறுதி வரை
நான் சுவாசிக்கும்
மூச்சு காற்று நீதான் !
உயிர் உள்ள வரை
உன் மீது கொண்ட
என் காதல் தீராது ! என்று
அதற்கு
அவள் சொன்னாள்
ஆமாம் ! ஆமாம் !
உன்னை தவிர
வேறு எவராலும் என்னை
அழகாகவும் சிறப்பாகாவும்
வாழ வைக்க முடியாது ! என்று
திடீரென அவன் பாரதி இறந்து விட்டான் !
அன்றிலிருந்து
அவள் தமிழ் !
மன (ண)ம் உடைந்து விட்டாள் !

விண்மீன் !

நீண்ட நாளைக்கு பின்பு
விண்மீன்
விளக்கு எரிந்து கொண்டிருந்தன!
இவ்வளவு நாளா எங்கே போனிங்க? என்று
ஒரு நட்சத்திரதிடம் கேட்டேன் !
மழை பேஞ்சதால
எங்க ஊருல கூட
மின்சாரத்தை துண்டிச்சிட்டாங்க ப்பா என்றது சோகமாக.!

குடிமகன் !

நான்
அன்றாடகாச்சிதான்
ஆனாலும்
தினக்கூலியில் சரி பாதியை
நாள் தவறாது
தமிழக அரசால்
தடுக்கி விழும் இடமெல்லாம் திறந்து வைக்க பட்டுள்ள
தமிழ்நாடு சில்லரை வணிப கழக அலுவலகத்தில் வருமான வரியை
கண்ணியம் தவறாமல் கட்டி விட்டு
அடுத்த வேளை சாப்பாட்டுக்கு
விட்டத்தை பார்த்து
விழித்து கொண்டுள்ள
தமிழ்நாட்டின்
மிக சிறந்த குடிமகன் நான்.

மௌனம் !

உன் மௌனம் தான்
என்னை அதிகமாக
காதல் கொள்ள வைக்கிறது !
ஏனென்றால் ?
இதழ் திறக்கும் பூக்களை விடவும்
இதழ் திறக்காத மொட்டுகளில்தான்
அதிக தேன் துளிகள்
இருக்குமென்பதால் !

எல்லாமும் நீதான் !

எல்லோருக்கும்
எல்லாமும் கிடைப்பதில்லை
எனக்கு
நீ மட்டும்
கிடைத்தால் போதும்
வேறெதும் வேண்டாம்
ஏனென்றால்
என்னுடைய
எல்லாமுமே நீதான் !
என்னுடைய எல்லாமுமே
உன்னில் மட்டுமே உள்ளது !

இதய கொள்ளை !

அம்மா முற்றத்தில்
அரிசி புடைத்து கொண்டிருந்தார் !

அப்பா தோட்டத்தில்
களை எடுத்து கொண்டிருந்தார் !

தங்கை துணிகளை
துவைத்து கொண்டிருந்தாள் !

தம்பி பற்களை
துலக்கி கொண்டிருந்தான் !

எதிர் வீட்டில்
நீயோ
கோலம் போடும் சாக்கில்
என் இதயத்தை
கொள்ளையடித்து கொண்டுள்ளாய் !

இளம் பெண்ணின் முடிவு !

நான் பட்ட படிப்பு முடித்தவன்
அவள் பள்ளிக்கூடத்தில் மேல் நிலை 2 மாண்டு படித்து கொண்டிருந்தாள்

பாடத்தில் சந்தேகம் என்னிடம்தான்
அருகருகே வீடு என்பதால்
என் வீட்டிற்கே புத்தகத்தோடு வந்து என்னிடம் பேசி கொண்டே படிப்பாள்

இதனால் நண்பர்கள் என்னை கிண்டல் பண்ண இதை அவளிடம் சொண்னேன்
அவள் சிரித்து கொண்டே அவர்கள் நமக்குள் இருப்பதைதானே சொண்னார்கள்
அதனால் என்ன உண்மை ஒரு நாள் ஊருக்கு தெரியதானே போகிறது பேசினால் பேசட்டும் என்றாள்

அவள் என்னை காதலிப்பதை சூசகமாக சொன்னாள்

அன்றுமுதல் நானும் அவளை காதலித்தேன்
ஆனால்
அதை வெளிபடையாக அவளிடம் சொல்ல வில்லை காரணம் அவள் வசதி மேன்மக்கள்
என் வீடு கூறை படிப்பிற்கு வாங்கிய கடன் கீழ்மக்கள் என பல காரணங்கள்
அவளும் காதலை வெளிபடையாக சொல்ல வில்லை

மௌனமாகவே எங்கள் காதல் தொடர்ந்தது

சில நாட்களாக அவள் என் வீட்டிற்கு வருவதில்லை என்னை பார்ப்பதில்லை
பேசுவதில்லை

ஓர்நாள் அவளிடம் கேட்டேன்
எனக்கு கல்யாணம் நிச்சயம் ஆகிடுச்சி
பன்னன்டாவாது படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் அண்ணா மாப்பிள்ளை குடும்பம் அவங்க ஊருலேயே பெரிய வசதி படைச்ச குடும்பம் அண்ணா
அதான் என் அப்பாம்மா யார் வீட்டுக்கும் போகத கண்டவங்க கூட பேசாத அப்படினுட்டாங்கண்ணா அதான் உன் கூட பேசலண்ணா என்றாள்

அவள் வார்த்தைக்கு வார்த்தை அண்ணா என்றது என்னை
வெகுவாய் காய படுத்தியது

ஒரு மாதம் கழித்து சிங்கப்பூர் சென்றேன்
சில மாதங்களில் அவளை எண்ணி வெறுப்பதை கூட மறந்து விட்டேன் முதல் வருடத்தில் கடனை அடைத்தேன் இரண்டாம் வருடத்தில் வீடு கட்டினேன்
மூன்றாம் வருடம் அனுப்பின பணத்தில் அப்பா அருகே உள்ள நகரில் பன்பொருள் அங்காடி துவங்கினார்

மூன்று வருடம் கழிந்து முதன்முறை ஊருக்கு வந்தேன்

ஊரும் என் வீடும் மாறி இருந்தது

ஆனால் அவள் மட்டும் மாறவில்லை
பெண்டிராக மாறி இருக்க வேண்டியவள்
கல்யாணம் ஆகாமல் இருந்தாள்

அம்மாவிடம் அது பற்றி கேட்டேன்

மாப்பிள்ளை பெரிய இடம் என்பதால் அவர்கள் கேட்ட வரதட்சணை கொடுக்கல அதான் கல்யாணம் நடக்கல என்றார் அம்மா

ஒரு வாரம் நானும் அவளும் பார்வை மட்டும்தான்
அவளாக பேசினாள்

ஏன் பேச மாட்டிங்களா என்றாள்

எனக்கு வீட்டுல பெண் பாக்குறாங்க தங்கச்சி அதான் கண்ட பொம்பள புள்ளைங்க கூட பேசினா தங்கச்சி என் வீட்டுல திட்டுவாங்க தங்கச்சி என்றேன்

தயவு செஞ்சி தங்கச்சின்னு மட்டும் சொல்லாதிங்க என்றாள்

நீங்கதானே தங்கச்சி முதலில் அண்ணன் என்று கூப்பிட்டிங்க என்றேன்

ஏதோ சொல்ல வந்தவள்

அழுதவாறே அவள் வீட்டுக்கு ஓடி விட்டாள்.

தண்ணீர் ஓடையை அடைத்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி எம்.எல் ஏ ராஜேந்திரனிடம் பொதுமக்கள் புகார்

தண்ணீர் ஓடையை அடைத்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி  எம்.எல் ஏ ராஜேந்திரனிடம் பொதுமக்கள் புகார்

தண்ணீர் ஓடையை அடைத்தவர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தியதை தொடர்ந்து பி.ஜி  ராஜேந்திரன் எம்.எல்.ஏ நேரில் ஆய்வு  
கீழப்பாவூர் பேரூராட்சிக்குட்ப்பட்ட  மருதடியூர் சாலையில் தனியார் ஒருவர் தனது நிலத்திற்கு மேல் புறம் உள்ள ஓடையில் இருந்து வரும் தண்ணீர் அவரது விளை நிலத்துக்குள் வந்துள்ளது இதனால் பயரிடுவது பாதிக்கப்பட்டுள்ளது இதையடுத்து  ஓடைவரும் பாலத்தை உடைத்து தண்ணீர் அவரது நிலத்திற்குள் வராமல் தடுத்துள்ளார் இதனால் ஓடை நீர்  அருகே உள்ள பூக்கள் விளையும் தோட்டத்திற்குள் புகுந்துள்ளது இதனால் பூ விளைச்சல் பாதிக்கபட்டது  மேலும்  மகிழ்வண்ண நாதபுரம் வழியாக நாகல்குளம்  செல்லும் நீர் தடைபட்டுள்ளது இதையடுத்து பொதுமக்கள் நீர் வழிப்பாதையை அடைத்தவர் மீது நடவடிக்கை கோரியும் அதே வழியில் தண்ணீர் செல்ல அனுமதிக்க கோரியும் பி.ஜி.ராஜேந்திரன்  எம்.எல்.ஏ விடம் கோரிக்கை வைத்தனர் இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த எம்.எல்.ஏ.,ஆலங்குளம் தாசில்தார் கோபி கிருஷ்ணன்,வருவாய் ஆய்வாளர் மாரிச் செல்வம் ,கிராம நிர்வாக அலுவலர் குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆக்கிரமிப்பு பகுதியை பார்வையிட்டனர் மேலும் பி.ஜி ராஜேந்திரன் எம்.எல்.ஏ தென்காசி கோட்டாசியர் வெங்கடேஷ்ஐ தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கூறினார் அவரும் உறுதியளித்ததை அடுத்து பொது மக்களிடம் பேசிய எம்.எல்.ஏ உடனே நடவடிக்கை அதிகாரிகள் எடுப்பார்கள் என்று கூறியதையடுத்து பொதுமக்கள் களைந்து சென்றனர் மேலும் சிவகாமிபுரம் 5 வது வார்டு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர் அதையும் நிறைவேற்றுவதாக உறுதியளித்தார் உடன் பேரூர் கழக செயலார் பாஸ்கர் உடனிருந்தார்