Home Blog Page 5935

சகாயம் குழுவின் பரிந்துரைகளை அரசு ஏற்க வேண்டும்: ராமதாஸ்

images politics RAMADOSS pmk - 2026

சென்னை:
கிரானைட் ஊழல் விவகாரத்தில் சகாயம் குழுவின் பரிந்துரைகளை அரசு ஏற்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் கொள்ளை குறித்து உயர்நீதிமன்றத்தின் ஆணைப்படி விசாரணை நடத்திய சட்ட ஆணையர் சகாயம், அவரது விசாரணை அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்திருக்கிறார். அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்ற போதிலும், 1991&ஆம் ஆண்டு முதல் நீடிக்கும் கிரானைட் கொள்ளை குறித்து வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன.

மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் கொள்ளையை ஆதாரங்களுடன் அரசுக்கு தெரிவித்தவர் அம்மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம் தான். இந்த உண்மையை கண்டறிந்ததற்காக தான் மதுரை மாவட்ட ஆட்சியர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டார். சகாயம் கண்டறிந்த கிரானைட் கொள்ளை குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவு அல்லது உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று முதன்முதலில் குரல் கொடுத்தது நான் தான். அதைத் தொடர்ந்து இந்த சிக்கல் குறித்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஆணைப்படி சட்ட ஆணையராக நியமிக்கப்பட்டு கடந்த ஆண்டு திசம்பர் மாதத்தில் விசாரணையைத் தொடங்கிய இ.ஆ.ப. அதிகாரி சகாயம் ஓராண்டில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.

1991 முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலான அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆட்சியில் பல லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கிரானைட் கொள்ளை நடைபெற்று இருப்பதாகவும், இந்த கொள்ளைக்கு அரசு உயரதிகாரிகள் பலரும் உடந்தையாக இருந்திருக்கின்றனர் என்றும் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் உயரதிகாரிகள் பலரும் இந்த முறைகேட்டுக்கு துணையாக இருந்திருப்பதால் இந்த ஊழல் குறித்து தமிழ்நாட்டை சாராத பல்துறை அதிகாரிகள் அடங்கிய மத்திய புலனாய்வுப் பிரிவின் சிறப்பு புலனாய்வுப் படையைக் கொண்டு விசாரிக்க வேண்டும். அதில் தெரியவரும் தகவல்களின் அடிப்படையில் சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்தி ஊழலில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கும்படியும் அக்குழு பரிந்துரைத்துள்ளது. இந்த விசாரணைக்கு உதவிய அதிகாரிகள், முன்னாள் அதிகாரிகள் மற்றும் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட மேலும் பல பரிந்துரைகளையும் சகாயம் குழு முன்வைத்துள்ளது.

ஆனால், விசாரணைக்கு உதவியவர்களுக்கு பாதுகாப்பு வழங்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததில் இருந்தே இந்த விஷயத்தில் தமிழக ஆட்சியாளர்களின் நிலைப்பாடு என்ன? என்பதை புரிந்துகொள்ள முடியும். இந்த வழக்கு அதன் இயல்பான முடிவை நோக்கி செல்வதையோ, இதில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவதையோ தமிழகத்தின் இப்போதைய ஆட்சியாளர்களும் விரும்ப மாட்டார்கள்; முன்நாள் ஆட்சியாளர்களும் ரசிக்க மாட்டார்கள். கிரானைட் கொள்ளை பற்றி சகாயம் விசாரணை நடத்துவார் என்ற சென்னை உயர்நீதிமன்ற ஆணைக்கு தடை வாங்க தமிழக அரசு துடித்தது, சகாயம் குழுவின் விசாரணைக்கு தேவையில்லாமல் முட்டுக்கட்டை போட்டது ஆகியவற்றில் இருந்தே இவ்விஷயத்தில் தமிழக அரசின் மனநிலை என்னவாக இருக்கும் என்பதை எளிதில் யூகிக்க முடியும். இந்த ஊழலுக்கு அரசு அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளனர் என்ற சகாயம் குழுவின் பரிந்துரை பாதி உண்மை மட்டுமே. கடந்த 20 ஆண்டுகளாக தமிழகத்தை மாறிமாறி ஆட்சி செய்து வரும் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்கும் இந்த ஊழலில் தொடர்பு உள்ளது என்பது தான் முழுமையான உண்மை.

இந்தியாவையே உலுக்கிய 2ஜி ஊழல், கர்நாடகத்தில் அமைச்சர்கள் முதல் முதலமைச்சர் வரை சிறை செல்வதற்கு காரணமாக இருந்த இரும்புத் தாது ஊழல் ஆகியவற்றை விட மிக மோசமான ஊழல் கிரானைட் ஊழல் என்பது விரைவில் நிரூபிக்கப்படும். தமிழகத்தை ஆட்சி செய்த அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்கும் இந்த ஊழலில் தொடர்பிருக்கும் நிலையில் உள்ளூர் புலனாய்வுத் துறையோ, வழக்கமான நீதிமன்றங்களோ இவ்வழக்கை விசாரித்தால் முழுமையான நீதி கிடைக்காது. எனவே, சகாயம் குழுவின் பரிந்துரைப்படி இந்த வழக்கின் புலன் விசாரணையை பல்துறை அதிகாரிகள் அடங்கிய மத்திய புலனாய்வுப் பிரிவின் சிறப்பு புலனாய்வுப் படையிடம் தமிழக அரசு தானாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும். இவ்வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தையும் அமைக்க வேண்டும்.

அதற்கெல்லாம் மேலாக கிரானைட் ஊழலில் யாருக்கெல்லாம் தொடர்பு இருப்பதாக சகாயம் குழு அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறதோ, அவர்கள் அனைவர் மீதும் உடனடியாக வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். கிரானைட் கொள்ளை மூலம் பல்வேறு தரப்பினரும் குவித்து வைத்துள்ள சொத்துக்களை பறிமுதல் செய்யவும் தமிழ்க அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

நன்கொடைகளால் கட்டிய பாழடைந்த பள்ளிக் கட்டிடத்தை முடிக்க திணறும் தமிழக அரசு பள்ளி ஆசிரியை !

தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒன்றியத்தில் துளுவபுஷ்பகிரி எனும் கிராமத்தில் பாழடைந்த பள்ளி கட்டிடத்தை பலரிடம் நன்கொடைக ளைப் பெற்று தமிழக அரசு பள்ளி ஆசிரியையான மீனா ராஜன் என்பவர் புதிய கட்டிடம் வருவதாக அவரது முகனூல் பதிவின் மூலமாக தெரிவித்து இருந்தார்.

மேலும் அவர் பள்ளிக் கட்டிடத்தை நிறைவு செய்து தமிழக அரசாங்கத்திடம் விரைவில் ஒப்படைக்க இருப்பதாகவும் பள்ளிக் கட்டிடத்தை நிறைவு செய்ய நன்கொடையா ளர்கள் முன்வர வேண்டும் என்றும் கூறி யிருந்தார்.

பொதுநல நோக்கத்தைக் கருத்தில் கொண்டு செய்தி வெளியிடும் https://dhinasari.com இணைய தமிழ்ச் செய்தி தளம், தமிழகம் கல்வியில் சிறந்து திகழவேண்டும் என்றும் கல்விப் பணிக்காக ஏதேனும் உதவிட வேண்டும் எனும் நோக்கில் மட்டுமே தமிழக அரசு ஆசிரியை மீனா ராஜன் கூறியவற்றை செய்தி யாக வெளியிடுகிறது.

நமது செய்தியாளரிடம் ஆசிரியை மீனா ராஜன் கூறியதாவது :-

துளுவபுஷ்பகிரி எனும் கிராமத்தில் 1952-ம் வருடம் கல்நார் ஆன ஓட்டினால் இரண்டு வகுப்பு அறைகளுடன் கட்டப்பட்ட கட்டிடத்தில் தமிழக அரசு நிதி உதவி பெறும் தொடக்கப் பள்ளியாக தொடங்கப்பட்ட பள்ளி இது.

62 ஆண்டுகள் கடந்த நிலையிலும்கூட அந்த பள்ளியில்
எவ்விதமான அடிப்படை வசதிகளும் இல்லை. இருந்தபோதிலும் மிகுந்த சிரமத்திற்கிடையே அந்த கிராமத்தை சேர்ந்த பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளை அந்த பள்ளியில் படிக்க வைத்து வருகின்றனர்.

தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த பள்ளியை நடத்தி வந்த நிர்வாகிகள் பள்ளியை தொடர்ந்து நடத்த முடியாது என அரசாங்கத்திடம் ஒப்படைக்க முடிவு செய்தனர்.

ஆனால் அந்த பள்ளியில் சரியான கட்டிட வசதிகள் இல்லாததால் விதிமுறைகளின்படி பள்ளியை அரசாங்கம் ஏற்க மறுத்தது. தமிழக அரசு நிதி உதவி பெறும் மற்றும் அரசு ஆசிரியர்கள் பணியாற் றும் பள்ளியாக இருந்தாலும் அந்த பள்ளிக்கு அரசாங்க விதிமுறைகளின்படி அந்த பள்ளியின் மேம்பாட்டு பணிக்காக அரசால் எந்த உதவியும் செய்ய இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் 17-02-1982 ஆம் வருடம் அரசு ஆசிரியர்க ளையும் பள்ளியின் நிர்வாகத்தையும் மட்டும் தமிழக அரசு தொடக்க கல்வி அதிகாரியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது.

இந்த நிலையில் நானும் திருவண்ணாமலை மாவட்டத்தில் கட்டுளாம்பட்டு கிராமத்தில் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து சிரமப்பட்டு படித்து தமிழக அரசு ஆசிரியையானவர். எனக்கு வயது 47. எனது கணவர் பெயர் ராஜன், அவர் அச்சுத் தொழில்நுட்ப தொழில் செய்து வருகிறார். எங்களுக்கு கீதம், நிஷாந்த், எனும் இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். அவர்கள் இருவரும் தொழில் நுட்பப் படிப்பு பயின்று வருகின்றனர்.

சென்னையில் குடும்பத்துடன் வசித்து வரும் நான் கடந்த 2001- ம் வருடம் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள திருவானை முகம் துவக்கப்பள்ளியிலிருந்து பணி இடமாற்றம் செய்யப்பட்டு மேற்படி பள்ளியில் ஆசிரியையாக ( தலைமை ஆசிரியர் பொறுப்பு) தற்போது பணியாற்றி வருகிறேன்

பாழடைந்த பள்ளிக் கட்டிடத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால் இங்கு கல்வி பயிலும், நடுத்தட்டு குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்ற நோக்கில் வகுப்பறைகள் மட்டுமின்றி கணினி வசதியுடன் கூடிய அறை அமைக்கவும் முயற்சிகள் எடுத்துள்ளேன்.மேலும் பள்ளிக்காக புதிய கட்டடம் கட்ட முயற்சிகள் மேற்கொண்டபோது துளுவபுஷ்பகிரி கிராமத்தை சேர்ந்த பணி ஓய்வு ஆசிரியர் கோவிந்தசாமி அவரது 20 செண்ட் நிலத்தை தானமாக பள்ளிக்கு கொடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து என்னால் 2425 சதுர அடியில் 5 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டு பள்ளிக் கட்டிடம் 90% வரை கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. பள்ளி கட்டிட பணிக்கான மொத்த செலவு மதிப்பீட்டு தொகை ரூ.40 லட்சம் ஆகும். இதுவரை பலரால் நன்கொடை யாக ரூ.36 லட்சம் கிடைத்துள்ளது. கட்டிட பணியை நிறைவு செய்ய ரூ.4 லட்சம் தேவைப்படுகிறது. நன்கொடையாகப் பெறப்படும் தொகையை பாரத ஸ்டேட் வங்கி மூலம் நானும் வார்டு உறுப்பினர் ராஜன் என்பவரும் கையாண்டு வருகிறோம். கட்டிட பணியானது பெற்றோர்- ஆசிரியர் சங்கத்தினர் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.

துளுவபுஷ்பகிரி கிராமத்தை சுற்றியுள்ள ஏழு கிராமங்களில் 1500 க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இப்பள்ளி கட்டி முடிக்கப் பட்டபின் 150 மாணவர்களுக்கு மேல் பயன் பெறுவார்கள். கிராமக் குழந்தைகள் மட்டுமே அரசுப் பள்ளிகளில் படிக்கின்றனர் என்ற நிலை மாறி அனைத்து தரப்பினரும் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் பள்ளியின் தரத்தை மேம்படுத்தவும் முயற்சிக்கப்படுகிறது எனக் கூறுவது மிகையாகாது.

கிராமக் குழந்தைகளின் தரத்தை மேம்படுத்தவும் பள்ளியின் தரத்தை உயர்த்தவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. கட்டிடப் பணியை நிறைவு செய்ய தேவைப்படும் ரூ.4 லட்சம் நன்கொடையாக கிடைத்து விட்டால் கட்டிடப் பணியை முடித்து உடனடியாக தமிழக அரசாங்கத்திடம் கட்டிட ம்
ஒப்படைக்கப்படும் என்று தமிழக அரசு பள்ளி ஆசிரியை மீனா ராஜன் கூறியுள்ளார்.

மேலும் உள்கட்டமைப்பு பள்ளி சுற்றுச் சுவர் , மதிய உணவு சமையலறை போன்றவைகள் கட்டி முடிக்க நன்கொடை தேவைப்படுவதினால் நல்ல உள்ளம் கொண்டோர் இயன்ற அளவு பண உதவியோ, கட்டிட பொருள் உதவியோ அளிக்க ஆசிரியை மீனா ராஜன் கோரிக்கை விடுத்து கீழ் காணும் தொடர்பு விபரங்களாக தெரிவித்ததாவது :-

பணம் செலுத்துவதற்கான வங்கி கணக்கு விபரம் :-

SSA AIDED PRIMARY SCHOOL, THULUVAPUSHPAGIRI,
வங்கி கணக்கு எண் :32417332164
STATE BANK OF INDIA, SANTHAVASAI BRANCH,
IFSC CODE NO; SBIN0004879

cheques can be made in the name of SSA Aided Primary School, Thuluvapushpagiri,

வங்கி காசோலை மற்றும் வரைவோலை வேண்டிய முகவரி :-

D.Meenarajan, 28/2,12th Avenue, Vaigai Colony, Ashok Nagar,
Chennai -600 083 Mobile Number : 096001 42437

நாட்டில் பெரும்பாலான தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு கல்வியை போதிக்க நன்கொடை மற்றும் கல்வி கட்டணம் என்று பொது மக்களிடம் வசூல் வேட்டை நடத்தி கோடி கோடியாக கொள்ளையடித்து சொத்து சேர்த்து கல்வி கொள்ளையர்கள் கல்வித் தந்தை என கூ றிக்கொண்டு உலகில் வலம் வருவது அனைவரும் அறிந்ததே!

இந்த நிலையில் தமிழக மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு அரசு பள்ளி ஆசிரியையான மீனா ராஜன் என்பவர் அவரது சொந்த முயற்சியால் பாழடைந்த பள்ளி கட்டிடத்தை பலரிடம் நன்கொடைகளைப் பெற்று கட்டிட பணியை முடித்து உடனடியாக தமிழக அரசாங்கத்திடம் கட்டிடத்தை ஒப்படைக்க இருப்பதாக அறிவித்து கட்டிட பணியை 90% வெற்றிகரமாக முடித்து இருக்கும் செயலை செய்தமைக்கு ஆசிரியை மீனா ராஜன் அனைவராலும் பாராட்டப்பட வேண்டியவரே! அவரது முயற்சியை https://dhinasari.com இணைய தமிழ்ச் செய்தி தளம் வாழ்த்தி பாராட்டுகிறது.

இந்த செய்தி வெளியீட்டால் ஆசிரியை மீனா ராஜ னுக்கு பள்ளி கட்டிட பணியை நிறைவு செய்ய தேவைப்படும் ரூ.4 லட்சம் நன்கொடை யாக கிடைக்க தமிழக மாணவர்கள் நலனில் அக்கறை கொண்ட பலர் முன்வருவார்கள் என்ற நம்பிக்கையோடு கல்வி பணிக்காக ஏதேனும் உதவிட வேண்டும் எனும் நோக்கில் மட்டுமே https://dhinasari.com இணைய தமிழ்ச் செய்தி தளம் இந்த செய்தியை வெளியிடுகிறது.

மேலும் மேற்படி பள்ளி கட்டிட பணிக்காக நன்கொடைகளை அளித்தோர்கள், நன்கொடைகள் அளிக்க இருப்பவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ! பாராட்டுக்கள்!

திமுக தலைவர் கருணாநிதி வீட்டிற்குள் புகுந்த வெள்ளம்

சென்னையில் கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டிற்குள் புகுந்தது. சென்னை முழுதுவதும் வெளுத்து வாங்கும் மழை கோபாலபுரம் பகுதியையும் விட்டுவைக்கவில்லை.

இதனால், அந்த பகுதியில் மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் அதிகரித்தது திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிற்குள் வெள்ளம் புகுந்தது. ஆங்காங்கே வெள்ள நீர் அப்படியே நின்றது. இதை அகற்ற அவரது வீட்டில் உள்ளவர்கள் முயன்றனர்.

இந்த தகவல் அறிந்த திமுக தொண்டர்கள் கருணாநிதி வீட்டிற்கு உதவ சென்றனர். ஆனால் அவர்கள் உதவியை மறுத்த கருணாநிதி ஏழை, எளிய மக்களுக்கு சென்று வெள்ள நிவாரணப் பணிகளை செய்ய அறிவுரை கூறி அனுப்பிவைத்தார்.

திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டிற்குள் வெள்ளம் புகுந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது .

வெள்ளத்தில் நல்ல வெள்ளம்!

images cinema events karnan - 2026

வெள்ளத்தில் சென்னை வெள்ளம்
வடியாதென்பது வல்லவன் வகுத்தடா – வருணா
எம்மிடம் அருள் செய்யடா…

குடியேற இடம்தேடி
கூடாத செயல் செய்து
ஏரிகள் தூர்த்தோமடா – வருணா
உன்னிடம் தோற்றோமடா…

கால்வாய்க்கு வழியில்லை
நீர்வடிய வழியுமில்லை
வீடுகள் மிதக்குதடா – நீயும்
தண்டித்தல் அறமல்லடா…

மழைவெள்ளம் வடியாமல்
மனம்நொந்த மக்களுக்கு
தாயுள்ளம் காட்டிடடா – வருணா
ரேஷனில் மழை பெய்யடா…

***
கவிதை: பெ. கருணாகரன்

நாங்க அப்படி சொல்லவே இல்லை: நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை!

நடிகர் சங்கம் பற்றி புரளி  கிளப்பி பரப்பப்படுவதாக  நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது;

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் சங்கத்தால் எந்த நிவாரணமும் செய்ய இயலாது, அரசு தான் அதை செய்ய வேண்டும் என்று நடிகர் சங்கத்தை சேர்ந்த யாரோ  பேட்டி அளித்ததாக கூறி ஒரு புரளி பரவி வருவதாக தெரியவந்துள்ளது. அது முற்றிலும் தவறான தகவல், நடிகர் சங்கத்தை சேர்ந்த யாரும் யாருக்கும் பேட்டி அளிக்கவில்லை. மழையால் பாத்திக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் சங்கம் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர்மாவட்டத்தைச் சார்ந்த, சிதம்பரம் தாலுக்காவில் அமைந்துள்ள கரிவேட்டை என்ற கிராமத்தைச் சார்ந்த மக்களுக்கு “The Environmentalist Foundation of India “ என்ற NGO மூலமாக நமது தென்னிந்திய நடிகர் சங்கம் முதற்கட்ட பணியாக சில உதவிகளை மேற்கொண்டுள்ளது.

அதில் அடிப்படை பொருட்களான அரிசி, பருப்பு ,உப்பு,சர்க்கரை போன்ற சமையல் பொருட்களும் கரண்டி, தட்டு மற்றும் சமையல் பாத்திரங்களும் வழங்குவதற்கு தேவையான பாய், பெட்ஷீட் போன்றவையும் மாற்றுத்துணிகளுக்காக புடவை, வேட்டி மற்றும் டி.சர்ட் போன்ற பொருட்களும் அனுப்பப்பட்டுள்ளன. இதற்காக நடிகர் சங்கத்தோடு கைகோர்த்து திரு.எஸ்.வி.சேகர், திரு.பூச்சிமுருகன், திரு.மனோபாலா மற்றும் திருமதி.ரோகிணி அவர்கள் உதவியுள்ளனர். மேலும் , நடிகர் திரு. அருள்நிதி அவர்கள் 1,000 பெட்சிட்டுகள் அந்த மக்களுக்காக வழங்கியுள்ளார்.

இந்த நிகழ்சிக்காக கடந்த மூன்று நாட்களாக நமது சங்கத்தைச் சார்ந்த திருமதி.குட்டிபத்மினி, செல்வி.கோவைசரளா, திருமதி.லலிதகுமாரி, திருமதி.சோனியா, திரு.மனோபாலா, திரு.பசுபதி, திரு.உதயா, திரு.ஹேமச்சந்திரன், திரு.அயுப்கான் மற்றும் சங்க நிர்வாகிகள், அலுவலக மேலாளர் திரு.வி.பாலமுருகன் மற்றும் அலுவலக ஊழியர்கள் ஆகியோர் பாடுபட்டுள்ளானர் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் சென்னையில் கோட்டூர்புரத்தை சார்ந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நமது நடிகர்சங்க செயற்குழுஉறுப்பினர்கள் திரு.அயுப்கான் மற்றும் திரு.ஹேமச்சந்திரன் மூலமாக உதவிகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சென்னை – பாலங்களின் அவல நிலை

fly over - 2026காலை … அலுவலகத்துக்கு ‘பைக்’கில் புறப்பட்டேன். அங்கங்கே ஏரி நீர் சாலைகளில் தேங்கி, வழிந்து சென்று, வடிந்து, சாலையைப் பெயர்த்தெடுத்து… நெடுஞ்சாலைகளின் தரம் கடுஞ்சோதனையில் உள்ளது. 

ஊரப்பாக்கம் தொடங்கி… வரிசை கட்டி நின்றன வாகனங்கள். நெரிசல். இடமின்மை. அங்கங்கே கிடைத்த சந்து பொந்துகளில் பைக் சாகசங்கள் (ம்… நானுந்தான்!)

சைக்கிள் சந்துகளில் பைக் முந்த, பைக் செல்லும் இடப்புற சிறிய இடைவெளியில் ஆட்டோ, கார்கள் முட்டிமோத… விட்டேனா பார் என்று சில மாநகர மற்றும் அரசுப் பேருந்துகள் விர் விர் என்று தெறிக்க…

நிச்சயமாக ஒவ்வொரு வாகன ஓட்டிக்கும் மூளைக்குள் சோர்வும் நெஞ்சுக்குள் படபடப்பும் வந்திருக்கும்.
10 நிமிட தொலைவை 40 நிமிடங்களில் கடந்து… பெருங்களத்தூர் கழிந்து பார்த்தால்… அத்தனை நெரிசலுக்கும் காரணம் அந்த ரயில்வே லைன் மேம்பாலம்தான்… என்பது புரிந்தது.

சென்னைக்குள் வரும் பாதையில் பாலத்தில் பல ஓட்டைகள். குண்டு குழிகள். ஒவ்வொரு வண்டியும் ஏறி இறங்கும்போது, பாலம் எப்போது உடையுமோ என்ற அச்ச நிலை.

இதனை போன வாரம் பைக்கில் வந்த நானே உணர்ந்தேன். ஆனால், இத்தனை நாள் மெத்தனமாக இருந்துவிட்டு, அலுவலக நாளான இன்று காலை போக்குவரத்து போலீஸார் கல்லையும் மண்ணையும் சுமந்து, குழிகளில் இட்டு நிரப்பி… நெடுஞ்சாலைத்துறை வேலையை, அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

மேல் சட்டையைக் கழற்றி, பனியனுடன் நாலைந்து போக்குவரத்து போலீஸ் கான்ஸ்டபிள்கள்… சித்தாள் கணக்காக சட்டியை எடுத்துக் கொண்டு, குழிகளை நிரப்பிக் கொண்டிருந்தார்கள்.
எனவே, இருவழித் தடத்தை ஒருவழியாக்கி… ஒரு வழியாக்கி விட்டிருந்தார்கள். அந்த நெரிசல்… ஊரப்பாக்கம் வரை எதிரொலித்தது.
***
பின்குறிப்பு:

1. பனியனுடன் அவர்கள் நின்ற கோலத்தை போட்டோ எடுக்க மனசில்லாமல் அப்படியே திரும்பிவிட்டேன்… *** காலம் கடந்து, அகாலத்தில் செய்தாலும், வாழ்க அவர்களின் ஈகோ பார்க்காத தொண்டுப் பணி.

2. சென்னை விமான நிலையம் முன்னுள்ள பாலம், அண்மையில் கட்டப்பட்டதுதான். மேலும், சென்ற மாதம்தான் பாலத்தின் மேல் புற தார்ச் சாலையில் மேல்புறத்தை இயந்திரம் கொண்டு சுரண்டி.. பின்னர் அதன் மேல் சல்லிக் கற்களைக் கொட்டி, தார்ச் சாலை அமைத்தார்கள். அதுவரையில் சிரமப்பட்டுதான் வாகனம் ஓட்டினோம். இப்போது… அந்த தார்ச் சாலை, தார் பிடிக்காமல் டைவர்ஸ் செய்துவிட்டு… கற்களெல்லாம் சிதறிக் கிடக்கின்றன. அதன் விளைவு… இரு இடங்களில் பெரும் பள்ளம். ஒவ்வொரு முறை கன ரக வாகனம் ஏறி இறங்கும்போதும் டம் டம் என்று சத்தம். பாலம் கீழிறங்குகிறது போல் தோன்றுகிறது. சென்னைக்கு மீனம்பாக்கம் என்ற பேர், பின்னர் டம் டம் என்று மாறிவிடப் போகிறது… பார்த்துக் கொள்ளுங்கள்!
(இப்போது பஸ்களை அதன் மேல் அனுமதிப்பதில்லை என்று தெரிகிறது…)

3. சாலையின் இடது புறம் உள்ள கொஞ்சூண்டு வழியைக் கூட மாநகர பேருந்துகளும், ஆட்டோ, வேன், ஷேர் ஆட்டோக்களும் ஆக்கிரமித்து, பைக் ஓட்டிகளின் பாதையை தடை செய்து வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறார்கள். அதனால்தான், பைக் ஓட்டிகள், சாலைக்குள் கிடைக்கும் சந்து பொந்துகளுக்குள் சர் சர் என்று புகுந்து சாகசம் காட்டுகிறார்கள்.

விஜய்காந்த்தை நடிக்க சொல்லி வற்புறுத்தினது யாரு?

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது மகன் சண்முகபாண்டியன் நடிப்பில் வெளிவந்த ‘சகாப்தம்’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்திற்கு பிறகு தனது மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் ‘தமிழன் என்று சொல்’ என்கிற புதிய படத்திலும் விஜயகாந்த் நடிக்கவுள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் அருண் பொன்னம்பலம் இயக்கவிருக்கிறார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கவுள்ளார்.

இப்படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில், நடிகர் விஜயகாந்த், சண்முகபாண்டியன், இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி, தேமுதிக இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மற்றும் படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர்.

இதில், சண்முகபாண்டியன் பேசும்போது, என்னுடைய அடுத்த படத்துக்காக 50-60 கதைகளை கேட்டேன். இறுதியில் ‘தமிழன் என்று சொல்’ படத்தின் கதை பிடித்துப் போனதும் இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்று கூறினார்.

இயக்குநர் அருண் பொன்னம்பலம் பேசும்போது, ”முதலில் நான் விஜயகாந்தை சந்தித்து பேசுவதற்கு மிகவும் பயந்தேன். ஆனால், அவர் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதும் மிகவும் சந்தோஷமடைந்தேன் ”என்றார்.

விஜயகாந்த் பேசும்போது, ”இந்தப் படத்தின் கதையை முதலில் எனது மகன் பிரபாகரன்தான் கேட்டார். அவர் என்னிடம் வந்து இந்த கதையில் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார். பிறகு, கதையை கேட்டேன், நன்றாக இருந்தது.

இருப்பினும், அரசியலுக்கு நுழைந்த பிறகு மீண்டும் சினிமாவில் நடித்தால் நன்றாக இருக்குமா? என தயக்கமாக இருந்தது. எனது மகன்கள், மனைவி ஆகியோர் தொடர்ந்து என்னை நடிக்க வலியுறுத்தவே, இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன் ”என்று கூறினார்.

தமிழக அரசு செலவில் ஜெயலலிதா விளம்பரம் : துரைமுருகன் வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு

 
 
சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் ஒரு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:–
 
ஒரு பொதுநல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அரசு செலவில் ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகள் சுயவிளம்பரம் செய்யக் கூடாது. தங்களை முன்னிருந்தி விளம்பரம் செய்யக் கூடாது. அரசு விளம்பரத்தில் ஆட்சியாளர்கள் தங்களது கட்சியின் சின்னங்களை இடம் பெற செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
 
ஆனால், இந்த உத்தரவுகளை மீறி தமிழக ஜெயலலிதா ஜெயலலிதாவின் புகைப்படத்துடன் விளம்பரங்கள் செய்யப்படுகிறது. மேலும் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில் நிரந்தர முதலமைச்சர்ஜெயலலிதா என்ற வாசகங்களுடன் துண்டு பிரசுரங்கள், ராட்சஷ விளம்பர பலகைகள் வைக்கப்படுகின்றன.
 
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உள்ளது. எனவே, இந்த வகை விளம்பரங்களை வெளியிட தடை விதிக்கவேண்டும் என்று துரைமுருகன் வழக்கு ஒன்றை தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
 
அந்த மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜனி, மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், நீலகண்டன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள்.
 
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வில்சன் வாதம் செய்யும் போது, ‘அண்மையில் சேலத்தில் மழை பெய்தது. இதுகுறித்து அந்த மாவட்ட ஆட்சியர் ஊடகங்களுக்கு பேட்டிக் கொடுக்கிறார். அதில், தமிழக முதலமைச்சர் அம்மாவின் உத்தரவின்படி, சேலத்தில் கன மழை பெய்துள்ளது என்று கூறுகிறார். இப்படிப்பட்ட ஆட்சியர்கள் இருக்கும்போது, உச்ச நீதிமன்ற தீர்ப்பை எப்படி தீவிரமாக அமல்படுத்துவார்கள்?’ என்று கூறினார்.
 
இதையடுத்து, மனுவுக்கு 2 வாரத்துக்குள் பதிலளிக்கும்படி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தமிழக அரசு தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கை அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

சகாயம் குழு சென்னை உயர்நீதிமன்றத்தில் கிராணைட் முறைகேடு அறிக்கை தாக்கல்

தமிழகத்தில் நடை பெற்ற கிராணைட் முறைகேடு தொடர்பான சகாயம் குழுவின் விசாரணை அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா முன்னிலையில் சகாயம் குழு சார்பில் வழக்கறிஞர் சுரேஷ் 23-11-2015 இன்று தாக்கல் செய்தார்.

சுமார் 7 ஆயிரம் பங்கங்கள் கொண்ட ஆவணங்கள், 600 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த 2014ம் வருடம் டிசம்பர் மாதத்தில் தொடங்கிய கிரானைட் முறைகேடு விசாரணை 11 மாதங்கள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்திற்கு உடனடி வெள்ள நிவாரண நிதி ரூ.940 கோடி ஒதுக்கீடு : பிரதமர் மோடி உத்தரவு

தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.8,481 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் ரூ.2 ஆயிரம் கோடி உடனடி நிவாரண உதவியாக வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில் தமிழகத்தில் உடனடி வெள்ள நிவாரண நிதியாக ரூ.940 கோடி பிரதமர் மோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்ற முதற்கட்டமாக ரூ.940 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய அரசின் குழு வெள்ள சேதங்களை பார்வையிட்ட பிறகு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.