Home Blog Page 5942

பள்ளி மாணவியைக் கடத்தி பலாத்காரம்: இளைஞர்கள் இருவர் கைது

லக்னோ: 

உத்திரப் பிரதேச மாநிலத்தில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவியைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்திரப் பிரதேச மாநிலம் லோனி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 14 வயது பள்ளிச் சிறுமியை கடந்த 9ஆம் தேதி, அதே பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர்கள் இருவர் கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் மயக்க மருந்து கலந்த பானத்தை அச்சிறுமிக்கு கொடுத்து அவரை பலாத்காரம் செய்துள்ளனர்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட இளைஞர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியும், கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ள போலீஸார், அந்தப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

‘‘மூடு டாஸ்மாக்கை மூடு’’ பாடலை தொடர்ந்து ‘‘ஊரெங்கும் மழை வெள்ளம் தத்தளிக்குது தமிழகம்’’ எனும் பாடகர் கோவன் பாட்டு காணொளி வெளியீடு!

 

மக்கள் கலை இலக்கிய கழகம் என்ற அமைப்பினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். சமூக பிரச்சினைகளை வலியுறுத்தி வீதி நாடகங்களையும் இவர்கள் நடத்தி வருகிறார்கள்.

இந்த அமைப்பினர், ‘‘மூடு டாஸ்மாக்கை மூடு’’ என்ற தலைப்பில் டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிராக பாடல் ஒன்றை எழுதி அதனை ஆடியோ மற்றும் காணொளியாக தயாரித்து வெளியிட்டு இந்தனர். சுமார் 6 நிமிடங்கள் ஓடும் வீடியோவில் டாஸ்மாக் மதுவுக்கு எதிரான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. ‘‘ஊருக்கு ஊரு சாராயம்… தள்ளாடுது தமிழகம்’’ என்று தொடங்கும் இந்த பாடலை மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மைய கலை குழு பொறுப்பாளரும், பாடகருமான கோவன் (51) என்பவர் பாடியுள்ளார்.

இந்த பாடல் காணொளி  வாட்ஸ் ஆப், யூ.டியூப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் மிக வேகமாக வைரலாக பரவி வந்தது .

இதை தொடர்ந்து தமிழக அரசு  பாடகர் கோவன் மீது தேசதுரோக வழக்கு  உள்ளிட்ட பல்வேறு  சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தது. தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள பாடகர் கோவன்‘‘ஊரெங்கும் மழை வெள்ளம் தத்தளிக்குது தமிழகம்’’ எனும் பாட்டைபாடி காணொளியாக  வெளியிட்டு உள்ளார்.

பாடகர் கோவன் பாடிய  பாட்டு மற்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறிய பேட்டியுடன் கூடிய   காணொளி தற்போது வாட்ஸ் ஆப்பில் மிக வேகமாக வைரலாக பரவிவருகிறது.

வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவரும் காணொளி  இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

காணொளி வாட்ஸ்ஆப்பில் வைரலாக     

 தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது .

புகார் தெரிவித்த நபரை தள்ளி விட்ட தமிழக அமைச்சர்

விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்ட மழை பாதிப்புகளை தமிழக அமைச்சர் ப.மோகன் பார்வையிட்டு வருகிறார். அதன்படி கடந்த 14-11-2015 அன்று அம்மன் நகருக்கு வந்த அமைச்சர் மோகனை முற்றுகையிட்ட பொதுமக்கள் அவரிடம் பல்வேறு புகார்களை தெரிவித்தனர். அப்போது பொதுமக்கள் சார்பாக பேசிய ஒருவரை பேசவிடாமல் அமைச்சர் ப.மோகன் தடுத்து அவரை தள்ளி விட்டார்.

கழிப்பிடம் கட்டுவதற்காக அரசு கொடுக்கும் 12000 ரூபாயில் 2 ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு 10000 ரூபாய் மட்டுமே கொடுப்பதாக புகார் தெரிவித்த மக்களிடம், யார் என்று சொல்லுங்கள் இப்பவே கேட்கிறேன் என்று அமைச்சர் காட்டமாக கூறினார்.

அதற்கு பொது மக்கள்கணக்கு எடுக்க வருகிறவர்கள்தான் என்று தெரிவிக்கவே ”அந்த இடத்தை எல்லாம் நான் வரும்போதே பார்வையிட்டு தான் வருகிறேன் ‘நிறுத்துங்கள்’ என்று கூறினார். அப்போது பொதுமக்களில் இருந்த ஒருவர், எல்லோரும் ஒன்னா சேர்ந்து சொல்கிறோம் ஆனால் நீங்கள் நிறுத்துன்னு சொல்றீங்க? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்குள் அமைச்சர் மோகன் அந்த நபரை பேச விடாமல் பிடித்து தள்ளி விட்டார். இதையடுத்து, அங்கிருந்த காவல் துறையினர்அந்த நபரை அந்த இடத்தில் இருந்து வெளியே தள்ளிக்கொண்டு சென்று விட்டனர். இந்த காட்சிகள் அடங்கிய காணொளி வாட்ஸ்ஆப்பில் வைரலாக தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது .

வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவரும் அந்த காணொளி இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

COURTESY & VIDEO SOURCE : விகடன் 

நான் தவறு செய்திருந்தால் என்னைச் சிறையில் தள்ளுங்கள் : ராகுல் காந்தி மோடிக்கு சவால்

 

நான் தவறு செய்துள்ளேன் என்றால் என்னைச் சிறையில் தள்ளுங்கள் என்று பிரதமர் நரேந்திர மேடிக்கு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார்.

டெல்லியில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 98 ஆவது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது, காங்கிரஸ் தொண்டர்களிடையே பேசிய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி  நான் தவறு செய்துள்ளேன் என்று உங்களால் நிரூபிக்க முடியும் என்றால் என்னைச் சிறையில் தள்ளுங்கள் என்று பிரதமர் நரேந்திர மேடிக்கு சவால் விடுத்துள்ளார்.

மேலும் அவர் பேசிய கூறியுள்ளதாவது :-

முன்பு எனது பாட்டி மீது சேற்றை வாரி இறைத்தனர்.பிறகு எனது தந்தை மீதும், எனது தாய் மீதும் தவறான குற்றச்சாட்டுகளைக் கூறினர். இப்போது என் மீது வீண் பழி சுமத்துகின்றனர். பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒன்றைக் கூறிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.  என்மீது தேவையற்ற, பொய்யான குற்றச்சாட்டுகளை உங்கள் கட்சியினர் சுமத்தி வருகின்றனர். ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகள் மக்களிடையே பிளவை ஏற்படுத்தி வன்முறையைத் தூண்டி வருகின்றன. ஆர்எஸ்எஸ் அமைப்பால் சர்வதேச அளவில் நமது நாட்டுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது. பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சில தினங்னங்களுக்கு முன்னர் ராகுல் காந்தி இங்கிலாந்து குடியுரிமை பெற்றுள்ளதாக குற்றம் சாற்றினார். மேலும், அது தொடர்பாக பிரதமர் விசாரணை செய்யவேண்டும் என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிபடத்தக்கது.

 

அனைத்து விசாரணை அமைப்புகளும் உங்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. எனவே எனக்கெதிராக விசாரணை நடத்தி, நான் தவறு செய்துள்ளேன் என்று நிரூபிக்க முடிந்தால் என்னைச் சிறையில் தள்ளுங்கள். என்று ராகுல் காந்தி  தெரிவித்துள்ளார்

.

 

இந்தியாவில் பசுவை கொல்பவர்களுக்கு வாழஉரிமை கிடையாது : முதலமைச்சர்

 

உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் முதலமைச்சர் ஹரிஷ் ராவத் இந்தியாவில் பசுவை கொல்பவர்களுக்கு வாழஉரிமை கிடையாது என்று கூறிஉள்ளார். 

 உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் முதலமைச்சர்ஹரிஷ் ராவத் பசு இறைச்சி, பசுவதை தொடர்பாக பேசுகையில் சர்ச்சைக்குரிய கருத்தை ஹரித்துவாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெரிவித்து உள்ளார். பசுவை கொல்பவர்கள் எந்த சமூகத்தை சேர்ந்தவர்களாக இருப்பினும், அவர்கள் இந்தியாவின் மிகப்பெரிய எதிரிஅவர்களுக்கு இந்திய நாட்டில் வாழ உரிமை கிடையாது என்று  தெரிவித்துள்ளார்.

 மேலும்  உத்தரகாண்ட் மாநிலத்தில் பசுவை கொல்பவர்களை சட்டம் பார்த்துக் கொள்ளும், பசுக்களை பாதுகாக்க மாநில அரசு எதனையும் செய்யும் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.  பசுக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சில தனது அரசில் பரிந்துரைகளை தான் தாக்கல் செய்ததாகவும், நாட்டில் முதல்முறையாக உத்தரகாண்ட் மாநிலம் மட்டுமே பசுக்களுக்கு கொட்டகை அமைத்துதீவணமும் வழங்கிவருகிறது என்றும் முதலமைச்சர் ஹரிஷ் ராவத் கூறிஉள்ளார். 

 உத்தரபிரதேச மாநிலம் தாத்ரி என்னும் இடம் அருகே மாட்டிறைச்சியை சமைத்து சாப்பிட்டதாக கூறி இக்லாக் என்பவர் கிராமவாசிகளால் அடித்துக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை உருவாக்கியது. இதனையடுத்து நாட்டில் சகிப்புத்தன்மையின்மை பெருகி வருவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இவ்விவகாரம் தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் மற்றும் அறிவிப்புகளுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இவ்விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டிற்கு மாறாக உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் ஹரிஷ் ராவத் கருத்து அமைந்து உள்ளது.

 தாத்ரி சம்பவம் பற்றி, அரியானா முதலமைச்சர்கட்டார் அண்மையில் கூறும்போது முஸ்லிம்கள் இந்தியாவில் வசிக்க வேண்டும் என்றால் மாட்டிறைச்சி சாப்பிடுவதை கைவிடவேண்டும் என்று கூறியதாக தகவல் வெளியாயின. பின்னர் அவர் விளக்கம் அளிக்கையில் இரு பிரிவினரும் தங்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவேண்டும் என்று கூறியிருந்தார். மாட்டிறைச்சி பிரச்சினையில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த அரியானா முதலமைச்சர் கட்டாரை நேரில் வரவழைத்து அமித்ஷா கண்டனம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

பிரதமர் மோடியின் இலக்கு இல்லாத பொருளாதார கொள்கை : மன்மோகன் சிங்

 

டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளையொட்டி, நேற்று நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்டு பேசினார்.

 

அப்போது மன்மோகன் சிங் பேசியதாவது:–

 

முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு எதையும் செய்யவில்லை என்ற மோடியின் பிரசாரம், கெட்ட நோக்கம் கொண்டது. இந்தப் பொய்களை நாம் அம்பலத்துக்கு கொண்டு வரவேண்டும்.

 

இலக்கே இல்லாமல் சென்று கொண்டிருக்கும், தற்போதைய மத்திய அரசின் கொள்கைகளுடன் ஒப்பிடுகிறபோது, பொருளாதார வளர்ச்சிக்கு காங்கிரஸ் செய்த பங்களிப்பை சரித்திரம் சொல்லும்.

ஜவகர்லால் நேருவும், இந்திரா காந்தியும்தான் நாட்டின் விவசாயத்துறை வளர்ச்சிக்குக் காரணம். தற்போதைய நெருக்கடியான காலகட்டத்தில் அவர்களிடம் இருந்து பிரதமர்  மோடி பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

 இந்த நாட்டை ஒவ்வொரு விதத்திலும் இந்திரா காந்தி  முன்னேற்றப் பாதையில் அழைத்துச்சென்றவர் . அவர் பிரதமராக பதவி ஏற்றபோது நாட்டில் உணவுப் பற்றாக்குறை இருந்தது.

 

விவசாய துறையில் அக்கறை செலுத்தும்படி இந்திரா காந்தி  விஞ்ஞானிகளை அறிவுறுத்தினார். அப்படி பிறந்ததுதான் பசுமைப்புரட்சி.

 

வறுமையை ஒழிப்பதில், சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு கொள்கைகளில் குறிப்பிட்ட முக்கியத்துவம் தரவேண்டும்.

 

அந்த வகையில், வறுமையை ஒழிப்பதில் திட்டக் கமிஷன், முக்கிய பாதை வகுத்துத்தந்தது. ஆனால் இன்று திட்டக்கமிஷனையே ஒழித்துக்கட்டி விட்டார்கள்.

 

பிரதமர் நரேந்திர மோடி திட்ட கமிஷனை ஒழித்துக்கட்டியதின் மோசமான விளைவுகள் குறித்து மக்களிடம் தொண்டர்கள் எடுத்துச்சொல்ல வேண்டும். நரேந்திர மோடியின் பொருளாதார கொள்கைகள் இலக்கு இல்லாதவை. அவற்றை கவனித்து வாருங்கள்.

 

இளைஞர்களை, இளைஞர் காங்கிரசார் ஒன்று திரட்ட வேண்டும். ஒவ்வொரு தொகுதிக்கும் செல்ல வேண்டும். காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்று  மன்மோகன் சிங் முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.

 

 

ஷீனா போரா வழக்க்கில் பீட்டர் முகர்ஜியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறது சிபிஐ

 

மும்பையைச் சேர்ந்த இளம்பெண்  ஷீனா போரா கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது தாயார் இந்திராணியின் மூன்றாவது கணவரான பீட்டர் முகர்ஜியை கைது செய்த சிபிஐ இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளது.

இளம்பெண் ஷீனா போரா (இந்திராணி முகர்ஜிக்கும், அவரது முதல் கணவருக்கும் பிறந்தவர் ஷீனா போரா).கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவரது தாயார் இந்திராணி முகர்ஜி, இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னா, கார் டிரைவர் ஷியாம் ராய் ஆகியோரை மும்பை காவல் துறையினர்

 கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்தனர். பின்னர், இந்த வழக்கு சிபிஐக்கு கடந்த செப்டம்பர் மாதம் மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சிபிஐ கைது செய்யப்பட்ட மூவரையும் நீதிமன்றக் காவலில் வைத்து விசாரித்து வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ஷீனா போராவின் மூன்றாவது கணவரும் தனியார் தொலைக்காட்சி நிறுவன முன்னாள் உயரதிகாரியுமான (தற்போதைய கணவர்), பீட்டர் முகர்ஜியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

குற்றவாளிகளை பாதுகாக்க முயன்றக் குற்றத்துக்காக பீட்டர் முகர்ஜியை சிபிஐ போலீஸார் வியாழக்கிழமை திடீரென கைது செய்தனர். சிபிஐயின் இந்த நடவடிக்கை, இந்த வழக்கில் புதிய திருப்பமாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் து சிபிஐ உயரதிகாரி ஒருவர் செய்தியாளரிடம் கூறியதாவது : –

இந்திராணி, சஞ்சீவ் கன்னா, ஷியாம் ராய் ஆகியோரிடம் தனித்தனியே நடத்தப்பட்ட விசாரணையில், இந்தக் கொலையில் பீட்டர் முகர்ஜிக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. எனவே அவரைக் கைது செய்ய சிபிஐ முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து, மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை காலை முதல் சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, குற்றம் செய்ததற்கான முகாந்திரம் இருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, சிபிஐ அதிகாரிகள் பீட்டர் முகர்ஜியை கைது செய்தனர். அவர் மும்பை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்படுவார் என அந்த அதிகாரி கூறினார்.

முன்னதாக, இந்திராணி முகர்ஜி, அவரது முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னா, கார் டிரைவர் ஷியாம் ராய் ஆகியோர் மீது 1,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை மும்பை நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை தாக்கல் செய்தனர். அதில், அவர்கள் மூவரும் குற்றவாளிகள் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது என அந்த அதிகாரி கூறினார்.

 

 

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அமெரிக்க வெள்ளை மாளிகையை தகர்க்கப் போவதாக மிரட்டல்

 

ஐ.எஸ்., பயங்கரவாதிகள் குழு அமெரிக்க வெள்ளை மாளிகையை தகர்க்கப் போவதாக காணொளி மூலம் நேற்று புதிய மிரட்டல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. 6 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த காணொளி பாரீஸ்க்கு முன் ரோம் என தலைப்பிடப்பட்டுள்ளது.

 ஈராக்கில் இருந்து ஐ.எஸ் தயாரித்துள்ள அந்தகாணொளியில் தற்போதைப்படை மற்றும் கார் வெடிகுண்டுகள் மூலம் பிரான்ஸின் நினைவுச்சின்னங்கள் மற்றும் அமெரிக்க வெள்ளை மாளிகையை ஆகியவற்றை தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது கூறப்படுகிறது. மேலும் வெள்ளை மாளிகை தாக்குதல் என்பது ஒரு தொடக்கமாகவே இருக்கும் என தெரிகிறது.

 

 

வழிப்பறி செய்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறை

 

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ. ஆயிரம் அபராதமும் விதித்து விதித்து கோவை நீதிமன்றம் நீதிபதி என்.பிரபாகரன் தீர்ப்பளித்துள்ளார்.

 

மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சிராஜுதீன் மகன் ஜெய்னுலாபுதீன் (22).

அவர் மேட்டுப்பாளையம் காய்கறி மண்டியில் கணக்கராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், மேட்டுப்பாளையம் சிவன் திரையரங்கம் அருகே கடந்த 4.1.2014 அன்று நடந்து சென்ற இவரிடம், அதே பகுதியில் உள்ள எஸ்.எம். நகரைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் மகன் ஜெய்லானி (24) கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 500, கைப்பேசி ஆகியவற்றைப் பறித்துள்ளார்.

ஜெய்னுலாபுதீன் சப்தம் போட்டவுன் உதவ வந்த மக்களையும் கத்தியைக் காட்டி ஜெய்லானி மிரட்டினாராம். இதுகுறித்து ஜெய்னுலாபுதீன் அளித்த புகாரின் பேரில் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த மேட்டுப்பாளையம் காவல் துறையினர், ஜெய்லானியை கைது செய்தனர். இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்குரைஞராக எம்.கே.இளங்கோவன் ஆஜரானார்.

இந்த வழக்கு விசாரணை கோவை 3-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி என்.பிரபாகரன், ஜெய்லானிக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. ஆயிரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்தார்.

தமிழகத்திற்க்கு வெள்ள நிவாரண உதவி செய்ய மத்திய அரசிடம் முதலமைச்சர் ஜெயலலிதா தொலைபேசியில் வலியுறுத்தல்

 

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு, தாமதமின்றி உதவித் தொகையை பரிந்துரைக்க மத்தியக் குழுவை விரைந்து அனுப்ப வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா மத்திய உள்துறை அமைச்சர் . ராஜ்நாத் சிங்கை தொலைபேசியில் தொடர்புகொண்டு வலியுறுத்தியுள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய உள்துறை அமைச்சர். ராஜ்நாத் சிங்கை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தமிழக வெள்ள நிலைமை குறித்து எடுத்துரைத்தார். முன் எப்போதும் இல்லாத அளவில் பெய்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக தமிழகத்தில், குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் நேரிட்டுள்ள சேதங்கள் குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா விளக்கிக் கூறினார். தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், தமது தலைமையின் கீழ் அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் குழுவினர் வெள்ளம் பாதித்த மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு உடனடியாக மேற்கொள்ளப்பட்டுள்ள விரிவான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அமைச்சரிடம் விரிவாக எடுத்துக்கூறினார்.

தேசிய பேரிடர் மீட்புப் படை, ராணுவம், விமானப்படை, கடற்படை மற்றும் கடலோரக் காவல்படை உள்ளிட்ட மத்திய அரசு அமைப்புகளுடன், தமிழக அரசின் பல்வேறு அமைப்புகள் ஒருங்கிணைந்து நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதையும் முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தார். மத்திய அரசின் பல்வேறு அமைப்புகள் வழங்கிய உதவிக்காக முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

தமிழகம் முழுவதிலும் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் தற்போது மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாகவும், வரும் 23-ம் தேதி திங்கட்கிழமைக்குள் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும், மத்திய அரசிடமிருந்து பிற நிதியுதவியை கோரியும் விரிவான கோரிக்கை மனு மத்திய அரசிடம் அளிக்கப்படும் என்றும் முதலமைச்சர் அப்போது தெரிவித்தார்.

மழை வெள்ளச் சேத விவரங்களை நேரில் பார்வையிட்டு மதிப்பீடு செய்யவும், தாமதமின்றி மத்திய உதவியைப் பெற பரிந்துரை செய்யவும், மத்தியக் குழு ஒன்றை விரைவாக தமிழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அப்போது முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அமைச்சரை கேட்டுக்கொண்டார். தமிழக அரசிடமிருந்து விரிவான அறிக்கை கிடைத்தவுடன், உடனடியாக மத்தியக் குழு தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் உறுதி அளித்தாக கூறப்படுகிறது.