வெடிக்கும் மக்கள் தொகை – சிக்கலில் இந்தியா
உயரத்தில் ஓர் உலா
ஒரு நடைபாதையை சுற்றுலாதலமாக மாற்ற முடியுமா..? முடியும் என்கிறார்கள் சீனர்கள். அங்குள்ள லூஜியாஸுய் சர்குலர் நடைமேடையைப் பார்த்தால் இது புரியும்.
இது ஒரு மிகப் பெரிய வட்ட வடிவ நடைபாதை பாலம், இது பாதைகளையும் சுற்றி இருக்கும் நிதி நிறுவனங்களையும் ஒன்றிணைக்கிறது. ஷாங்காய் பகுதியில் உள்ள புடோங் மாவட்டம் சமீபத்தில்தான் சிறப்பு பொருளாதார மண்டலமாக மாற்றப்பட்டது.
அதனால் இந்த பகுதியில் பல நிறுவனங்களும் வணிக மையங்களும் முளைத்தன. பாதசாரிகள் சிரமமின்றி போவதற்காக 20 அடி உயரத்தில் இந்த வட்டவடிவ பாலம் கட்டப்பட்டது. இதன் அகலம் 5.5 மீட்டர். 15 மனிதர்கள் பக்கவாட்டில் ஒருவருடன் ஒருவர் இடிக்காமல் நடந்து செல்லலாம்.
நடைபாதைக்கு செல்ல படிக்கட்டுகளும், நகரும் படிகளும் உள்ளன. இரவு நேரத்தில் வண்ண மின்விளக்குகளில் பாலம் ஜொலிப்பது கண்கொள்ளாக்காட்சி. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பார்வையிடும் இடமாக இது மாறியுள்ளது.
சரி, இங்கு எப்படி போவது? சென்னையிலிருந்து புடோங் விமான நிலையத்திற்கு டிராகன் ஏர், ஏர் இந்தியா விமான சேவைகள் உள்ளன. 12 மணி நேர பயணத்தில் சென்றடையலாம். ரிட்டர்ன் டிக்கெட்டுடன் கட்டணம் ரூ.57,040-ல் இருந்து தொடங்குகிறது.
ஷாங்காய் நகரில் உள்ள கிராண்ட் சென்ட்ரல் ஹோட்டல் தங்குவதற்கு ஏற்றது. ஒருவர் ஓர் இரவு தங்க கட்டணம் ரூ.8,990.
![]() |
| நடைப்பாலத்தின் மேலே |
![]() |
| நடைப்பாலத்தின் கீழே |
ஆரம்பத்தில் அல்லாடி, ஏற்றம் கண்ட ஏ.வி.எம்.
பேய், பிசாசுப் பற்றி கவலைப் படாத செட்டியாரும் அவரது பங்குதாரர்களும் அந்த மாளிகையை வாடகைக்கு எடுத்தார்கள். மாதம் 325 ரூபாய் வாடகை. அரண்மனை மாளிகை பிரகதி ஸ்டுடியோவாக மாறியது. முதன் முதலாக ஒரு தெலுங்கு படத்தை தயாரித்தார்கள்.
அன்றைக்கெல்லாம் நடிகர்களுக்கு மாத சம்பளம்தான். நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரனுக்கு மாதச் சம்பளம் 67 ரூபாய் 8 அணா. 1941-ல் ‘சபாபதி’ என்ற படத்தை தயாரித்து இயக்கினார் மெய்யப்ப செட்டியார். அதன்பின் 1945-ல் ‘ஸ்ரீவள்ளி’ படத்தை பிரகதி ஸ்டுடியோவில் தயாரித்து இயக்கி வெளியிட்டார். இந்த படத்தில் டி.ஆர்.மகாலிங்கம், ருக்மணி நாயகன் நாயகியாக நடித்திருந்தார்கள். படம் சூப்பர் டூப்பர் ஹிட்.
![]() |
| ஸ்ரீவள்ளி 1940 |
1934-ல் இருந்து 1940 வரை சினிமா துறையில் நஷ்டத்தையே சந்தித்து வந்த செட்டியாருக்கு ‘சபாபதி’ சிறிய ஏற்றத்தை தந்தது. ‘ஸ்ரீவள்ளி’யோ உச்சத்திற்கு கொண்டு போனது. அந்த மகிழ்ச்சியை கொண்டாட காஷ்மீர் சென்று வந்தார்.
சென்னை திரும்பிய செட்டியாருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அவரின் பங்குதாரர்கள் வேறு தொழிலில் ஈடுபட முடிவு செய்திருந்தார்கள். பேய் பங்களாவாக இருந்த மாளிகை பிரகதி ஸ்டுடியோவாக மாறியப் பின் செல்வாக்கு கூடியது. அதனால், அதை 7 லட்ச ரூபாய்க்கு விலை பேசிவிட்டார்கள்.
செட்டியாருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கடைசியாக தயாரித்த ‘ஸ்ரீவள்ளி’ வசூலை அள்ளிக் குவித்துக் கொண்டிருந்தது. இனி கூட்டு சேராமல் தனியாக தொழில் செய்வது என்று செட்டியார் தீர்மானித்தார்.
ஆனால், அப்போது உலக யுத்தம் தொடங்கி இருந்த நேரம். பிலிம் இறக்குமதியில்லை. இருந்தாலும் பிலிமுக்கு ஆர்டர் கொடுத்தார். யுத்தம் முடிந்ததும் அனுப்பி வைக்கச் சொன்னார். யுத்தம் முடிந்தது. பிலிம் மட்டுமல்லாமல் கேமரா, ஒலிப்பதிவு கருவி ஆகியவற்றை வாங்கினார்.
எல்லாம் வந்து விட்டது. ஆனால், சென்னை நகர் முழுவதும் மின்சாரம் இல்லை. யுத்தம் காரணமாக அமலில் இருந்த மின்வெட்டு நீக்கப் படாமலே இருந்தது. தொடர்ந்து இருளில் இருக்கும் சென்னையில் ஸ்டுடியோ ஆரம்பிக்க முடியாது என்ற முடிவுக்கு வந்த செட்டியார் சொந்த ஊரான காரைக்குடியில் புதிய ஸ்டுடியோவை தொடங்க நினைத்தார்.
காரைக்குடிக்கு வந்த செட்டியாருக்கு முதல் பிரச்சனையாக இருந்தது மின்சாரம்தான். இப்போது போல் அந்த காலத்தில் மின்சாரம் அவ்வளவு சுலபமாக கிடைக்கவில்லை. காரைக்குடி பகுதிக்கு மின்சார விநியோகம் செய்து கொண்டிருந்த ‘மீனாட்சி சுந்தரேஸ்வரர் கார்பரேஷன்’ என்ற நிறுவனம் 50 கிலோவாட் மின்சாரம் தருவதாக உறுதி தந்தது. அதுவும் நகருக்கு வெளியேதான் தர முடியும் என்றது.
செட்டியார் காரைக்குடிக்கு வெளியே இடம் தேடினார். தேவகோட்டை ரஸ்தா அருகே ஒரு நாடகக் கொட்டகை இருந்தது. அதை தேவகோட்டை ஜமீன்தார் சோமநாதன் செட்டியார் கட்டியிருந்தார். அந்த நாடகக் கொட்டகைக்கு ரூ.2,000-மும், சுற்றிலும் இருக்கும் வெறும் காலி இடத்திற்கு ரூ.1,000-மும் என மாத வாடகைக்கு அந்த இடத்தை பேசி முடித்தார், செட்டியார்.
இதுதான் ஏ.வி.எம்.மின் முதல் ஸ்டுடியோ. நாடகக் கொட்டகைதான் படப்பிடிப்பு தளம். சுற்றிலும் இருந்த வேற்று இடங்களில் சின்ன சின்ன குடிசைகள் அமைக்கப்பட்டன. அதில்தான் நடிகர், நடிகைகள் தனித்தனியாக தங்கிக் கொண்டார்கள். அங்கு மேகப் செய்வதற்கும், ஒத்திகைப் பார்ப்பதற்கும் தனித்தனி குடிசைகள் அமைக்கப் பட்டிருந்தன.
![]() |
| ‘நாம் இருவர்’. 1947 |
இங்கு முதன் முதலாக எடுத்தப் படம் ‘நாம் இருவர்’. 1947-ம் வருடம் பொங்கலன்று மதுரையில் வெளியிடப்பட்டது. மூன்று மாதங்கள் கழித்துதான் (மார்ச்) சென்னையில் வெளியானது. படம் மாபெரும் வெற்றி. மகாகவி பாரதியின் தேசப்பக்தி பாடல்களை முதன் முதலாக சினிமாவில் பாடலாக பயன்படுத்தியது இந்த படத்தில் தான். விடுதலை வேட்கை கொழுந்துவிட்டு எரிந்த நேரத்தில் இந்த பாடல்கள் பட்டி தொட்டிகளெல்லாம் ஒலித்தன.
![]() |
| நாம் இருவர் போஸ்டர் |
அடுத்த ஆண்டே ‘வேதாள உலகம்’ வெளிவந்தது. இந்த படமும் பிரமாண்டமான வெற்றி. தமிழ்நாட்டைக் கடந்து இந்தியா முழுவதும் செட்டியாருக்கு சினிமா உலகில் மதிப்பும் மரியாதையும் கூடியது.
தனது நாடகக் கொட்டகையில் எடுத்த இரண்டு படங்களும் வசூலை அள்ளிக் குவிப்பதைப் பார்த்த தேவகோட்டை ஜமீன்தாருக்கு மனம் மாறியது. 300 ரூபாய்க்குக் கூட பெறுமானம் இல்லாத அந்த இடத்திற்கு செட்டியார் 3,000 ரூபாய் வாடகையாக கொடுத்துக் கொண்டிருந்தார். அது போதாது தனக்கு 10,000 ரூபாய் வாடகை வேண்டும் என்றார். இது மாபெரும் கொள்ளை என்று நினைத்த செட்டியார் மீண்டும் சென்னைக்கே தனது ஸ்டுடியோவை கொண்டு செல்ல முடிவெடுத்தார்.
அதற்காக சென்னையில் இடம் தேடினார். அப்போது எஸ்.எஸ்.வாசன் தனது ஜெமினி ஸ்டுடியோவை விலைக்கு வாங்கிக் கொள்ளும்படி செட்டியாரிடம் கூறினார். “உங்கள் ஸ்டுடியோவோ மவுண்ட் ரோட்டில் நல்ல இடத்தில் இருக்கிறது. ஏராளமான பொருட்களும் இருக்கின்றன. அவ்வளவு பணம் என்னிடம் இல்லை. கேமரா, ரெக்கார்டிங் மெஷின் எல்லாம் என்னிடம் ஏற்கனவே இருப்பதால் எனக்கு காலி இடம் மட்டும் போதும்.” என்றார்.
வடபழனி கோயிலுக்கு சற்று தொலைவில் ஒரு முஸ்லிம், தோல் கிடங்கு ஒன்றை வைத்திருந்தார். அப்போது இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்த நேரம். நிறைய முஸ்லிம்கள் இந்தியாவில் வாழப் பிடிக்காமல் பாகிஸ்தானுக்கு சென்று கொண்டிருந்தார்கள். அப்படி சென்றவர்களில் ஒருவர்தான் தோல்ஷாப் சாயபு. அவருக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலம் அகதி சொத்தாக அறிவிக்கப்பட்டிருந்தது.
பாகிஸ்தான் பிரஜையாக மாறிவிட்ட தோல்ஷாப் சாயபுவின் 10 ஏக்கர் நிலத்தை ரூ.37,500-க்கு வாங்கினார். சென்னையில் ஏ.வி.எம். ஸ்டுடியோ உதயமானது. தேவகோட்டை ரஸ்தாவில் ஸ்டுடியோ இருந்த போது தொடங்கிய பட வேலைகளை மீண்டும் சென்னையில் தொடங்கி படத்தை வெளியிட்டார், செட்டியார். படத்தின் பெயர் ‘வாழ்க்கை’
ஜமீன்தாரின் பணத்தாசை மட்டும் குறுக்கிடாமல் இருந்திருந்தால் ஒருவேளை காரைக்குடியும் தேவகோட்டையும் மிகப் பெரிய திரைப்பட நகரங்களாக கூட மாறியிருக்கலாம்.
யார் கண்டது..?!
![]() |
| சிதிலமடைந்த நிலையில் ஏ.வி.எம்.ஸ்டுடியோவின் உட்பகுதி |
இலங்கை கடற்படையினர் எப்போதும் இப்படிதானா..?
![]() |
| என்.ஜே.போஸ் |
![]() |
| இலங்கைக் கடற்படையினர் |
![]() |
| இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீன்பிடி படகுகள் |
![]() |
| இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் |
![]() |
| விடுதலையாகி நாடு திரும்பும் மீனவர் |
![]() |
| மீன்பிடிக்க புறப்படும் மீனவர்கள் |
![]() |
| மீன்களுடன் கரை திரும்பும் மீனவர்கள் |
இந்த விஷத்தை குழந்தைகளுக்கு கொடுக்காதீர்கள்..!
ராமக்கல் மெட்டு – கோடையிலும் நடு நடுங்க வைக்கும் குளிர்
![]() |
| குலும்பன், குலும்பி தம்பதி |
கர்ப்பப்பையை காப்பாற்றுங்கள்..!
தியானத்துக்காக ஒரு சுற்றுலா
![]() |
| ஸ்வஸ்வரா |
தியானம் செய்வதற்கு அமைதியான இடமும் அழகான இயற்கை சூழலும் இருந்தால் போதும் என்பதைத்தான் நாம் இதுவரை கேள்விப் பட்டிருப்போம். ஆனால் அது மட்டும் போதாது, பர்ஸ் நிறைய பணம் வேண்டும் என்கிறது ஸ்வஸ்வரா..!
பெங்களூரிலிருந்து 480 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, கோகர்ணா என்ற இடம். அங்கிருக்கும் ஓம் கடற்கரையில் ஸ்வஸ்வரா ரிஸார்ட் அமைந்திருக்கிறது. இந்த இடத்திற்கு சாலையில் பயணிப்பது ஒரு சுகமான அனுபவம். சாலையின் இருபக்கமும் இயற்கை ஓவியன் கொட்டி தீர்த்த வண்ணங்கள் பசுமை வனமாகவும் நீலக் கடலாகவும் மாறி அழகு சேர்கின்றன.
பசுமை நிறைந்த இந்த இடம் சொக்க வைக்கும் அழகுக்கு சொந்தக்காரன். காலை நேரத்தில் தியானம் செய்வதற்கு இதை விட சிறந்த இடம் தேடினாலும் கிடைக்காது.
அலைகளின் இதமான தாலாட்டில் யோகா, தியானம், ஸ்பா போன்றவற்றிக்காகவே பிரத்யேகமாக அமைக்கப்பட்ட இடம் இது. இங்கு பரிமாறப்படும் உணவு முழுவதும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டவை.
இந்த இடத்தைச் சுற்றி அடர்ந்த காடுகள் உள்ளன. இங்கு அரிய வகை பறவைகள், பட்டாம்பூச்சிகள் காணப்படுகின்றன. பறவைகளின் ஒலியும், பட்டாம் பூச்சிகளின் வண்ணமும் நம்மை மேலும் சிலிர்படைய செய்யும்.
மலையேற்றமும் கடற்கரையில் உலாவுவதும் ஆனந்தமமான அனுபவம். இந்த கடற்கரையில் மண்ணால் ஆன பொம்மைகள் இருக்கின்றன. அவற்றை பார்வையிடுவதும் தனி அழகு.
ஸ்வஸ்வரா உணவு சிறப்பு மிக்கது. அதனால் இங்கு செல்பவர்கள் அதிகாலையில் கிளம்பி மதிய உணவுக்கு அங்கு சென்று விடுவது நல்லது. அருகில் உள்ள விமான நிலையம் கோவா. இது 170 கி.மீ. தொலைவில் உள்ளது.
ஸ்வஸ்வரா தியானத்திற்காக உருவாக்கப்பட்டதால் இங்கு குறைந்தபட்சம் 5 நாட்கள் தங்க வேண்டும். 5 நபர்கள் கொண்ட ஒரு குழு 5 இரவுகள் தங்குவதற்கு ரூ.55,000 கட்டணமாக பெறப்படுகிறது.
ஐந்து நாட்கள் கடந்து வீடு திரும்பும்போது மனமும் உடலும் புத்துணர்ச்சி பெற்றிருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த விடுமுறையை புத்துணர்ச்சியோடு கொண்டாடுங்கள். புத்துணர்ச்சிக்கு 08386-257132 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.
புதிதாக உருவாகும் பிரமாண்டமான கோயில்கள்
![]() |
| விரிந்தவன் சந்த்ரோதய மந்திர் வளாகம் |
சுற்றுலாவில் பெரும் பங்கை ஆன்மிகம் சம்பந்தமான இடங்களே பெற்றுள்ளன. கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், தர்ஹாக்கள், புனித யாத்திரை போன்றவைக்காக சுற்றுலா செல்பவர்கள் எண்ணிக்கை அதிகம். கிட்டத்தட்ட 70 % சுற்றுலா ஆன்மிகம் சம்பந்தப்பட்டதாகவே இருக்கிறது.
சுற்றுலாவில் இருந்து ஆன்மிகத்தை நீக்கிவிட்டால், மொத்த சுற்றுலாவும் படுத்துவிடும்.
தற்போது பழமையான கோயில்களுக்கு இணையாக புதிதாக கட்டிய கோயில்களும் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. டெல்லி அக்ஷர்தம், வேலூர் தங்கக் கோயில் போன்றவற்றை இதற்கு உதரணமாக சொல்லலாம்.
அந்த வகையில் மிகப் பிரமாண்டமான மூன்று கோயில்கள் இந்தியாவில் உருவாகி வருகின்றன. எதிர்காலத்தில் இந்தக் கோவில்கள் சுற்றுலாவின் மைல் கல்லாக திகழும் என்பது நிச்சயமே!
1. விராட் ராமாயண் மந்திர் – பிஹார்
கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் ஆலயம் முதலில் இந்துக் கோவிலாக கட்டப்பட்டது. தற்போது அது புத்தக் கோயிலாக மாற்றப் பட்டுள்ளது. அதனை மீண்டும் மீட்டெடுக்கும் விதமாக 2006-ம் ஆண்டு அதே வடிவமைப்பில் விராட் அங்கோர்வாட் என்ற ஆலயத்தை இந்தியாவில் உருவாகக் நினைத்தனர். இதற்கு கம்போடியா அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதனால் இந்த கோயிலின் வடிவமைப்பை சற்று மாற்றினர். புதிதாக வடிவமைப்பை நிர்மாணித்தனர்.
![]() |
| விராட் ராமாயண் மந்திர் மாதிரி தோற்றம் |
அதன்படி அங்கோர்வாட் கோயிலைவிட உயரமாக இது கட்டப்படுகிறது. 161 ஏக்கர் நிலப்பரப்பில் 2,800 அடி நீளமும், 1,400 அடி அகலமும் 405 அடி உயரமும் கொண்ட இந்த கோயில் கட்டி முடிக்கப் பட்டப்பின் இதுதான் உலகின் மிகப்பெரிய மத வழிப்பாட்டு தலமாக மாறும். இந்தக் கோயில் மண்டபத்தில் ஒரே நேரத்தில் 20,000 பேர் அமர்ந்து வழிபடலாம்.
இந்தக் கோயில் அங்கோர்வாட், மதுரை மீனாட்சியம்மன், ராமேஸ்வரம் கோயில்களின் பாணியை பின்பற்றி கட்டப்படுகிறது. இதன் கட்டுமானப் பணிகள் 2012-ல் தொடங்கியது. பட்ஜெட் ரூ.500 கோடி. எதிர்காலத்தில் இதுதான் உலகின் மிகப் பெரிய கோயிலாக இருக்கும்.
பிஹாரின் தலைநகர் பாட்னாவிலிருந்து 120 கி.மீ. தொலைவில் இருக்கும் கேசரியா என்ற இடத்தில் கட்டப்பட்டு வருகிறது. இது மிகப் பெரிய சுற்றுலா மையமாக மாறும் என்று இப்போதே உலக அளவில் பேசப்பட்டு வருகிறது.
2. ஓம் ஆஷ்ரம் – ராஜஸ்தான்
![]() |
| ஓம் அஷ்ரமத்தின் முன் பகுதி |
‘ஓம்’ என்ற சமஸ்கிருத எழுத்து வடிவில் ஒரு கோயில் உருவாகி வருகிறது. இது ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் உள்ள ஜடன் என்ற இடத்தில் கட்டப்பட்டு வருகிறது. 250 ஏக்கர் நிலப்பரப்பின் மையத்தில் காட்டப்படும் இந்த கோயில்தான் மனிதன் உருவாக்கிய எழுத்து வடிவிலான கட்டுமானங்களில் மிகப் பெரியது.
![]() |
| சம்ஸ்கிருத ‘ஓம்’ எழுத்து வடிவில் ஆஷ்ரம் |
இதில் பெரிய கோபுரம் 108 அடி உயரம் கொண்டது. இந்த கட்டுமானத்தில் 12 கோயில்கள் உள்ளன. அவற்றின் கோபுரங்கள் 90 அடி உயரம் கொண்டது. இதில் 108 குடியிருப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயில் சூரியனுக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்டப்படுகிறது.
![]() |
| கட்டுமானத்தில் ஓம் ஆஷ்ரம் |
3. விரிந்தவன் சந்த்ரோதய மந்திர் –
உத்தர பிரதேசம்
![]() |
| விரிந்தவன் சந்த்ரோதய மந்திர் |
உலகிலேயே மிக உயரமான கோயிலைக் கட்டி வருகிறது இஸ்கான் அமைப்பு. கிருஷ்ணர் பிறந்த மதுரவில்தான் இது நடைபெறுகிறது. 700 அடி உயரம் கொண்ட கோபுரத்தை கட்டி வருகிறது. 62 ஏக்கர் நிலப்பகுதியில் 12 ஏக்கர் அளவுக்கு ஒரு ஹெலிப்பெடும் வாகனங்கள் நிறுத்தும் இடமும் இருக்கிறது. 5 ஏக்கர் பரப்பளவில் கோயில் கட்டப்படுகிறது. 26 ஏக்கர் பரப்பில் 12 வகையான தோட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.
![]() |
| உலகிலேயே உயரமான 700 அடி கோபுரம் |
இதன் மதிப்பு ரூ.300 கோடி. கட்டுமானப் பணிகள் முடிந்து 2019-ல் பக்கதர்கள் இந்த கோயிலை தரிசனம் செய்யலாம்.
![]() |
| முன் பகுதியில் உருவாகி வரும் பூங்கா |
கேமரா கவிதை – சித்திரை திருவிழா
கொடியேற்றம்
முதல் நாள்
கர்ப்பக விருட்சம் மற்றும் சிம்ம வாகனம்
சங்கொலியுடன் ஊர்வலம் தொடக்கம்
சித்திரைத் திருவிழா முதல் நாள் அணிவகுப்பு…
யானை முகன் முன்னே போக…
காமதேனு பின் தொடர்கிறாள்!
சிறுமிகளின் கோலாட்டம்..
இசைப் பாடலுடன் இளம் பெண்கள்…
இது பெண்களின் தாண்டியா…
கள்ளர் வேடமிட்ட பக்தர்கள்
சிம்ம வாகனத்தில் மீனாட்சி
கற்பகவிருட்ச வாகனத்தில் சொக்கர் மற்றும் பிரியாவிடை
நோக்கம்
இறைவன் உலகின் ஆதாரம் என்பதை குறிக்கும் காட்சி இது. கர்ப்பக விருட்சகம் கேட்டதையெல்லாம் கொடுக்கும். மக்கள் எந்த வரம் கேட்டாலும் இங்கு கிடைக்கும் என்பதுதான் இதன் அர்த்தம். கேட்டதெல்லாம் கிடைத்துவிட்டால் மனிதனுக்கு ஆணவம் கூடிவிடும் என்பதால் அதை அடக்க அம்மன் சிம்ம வாகனத்தில் வருவதாய் இதன் நோக்கமாக உள்ளது.
இரண்டாம் நாள்
அன்ன வாகனம் மற்றும் பூத வாகனம்
மங்கள மேளத்துடன் இரண்டாம் நாள் வீதி உலா
கரகாட்டம்..
கையில் கிளியுடன் மீனாட்சி வேடத்தில் ஒரு பெண்
அன்ன வாகனத்தில் மீனாட்சி உலா..
சங்காரக் கோலத்தில் சிவபெருமான் பூத வாகனத்தில் வலம்
தள்ளாத வயதிலும் பக்தர்களின் வியர்வையை விசிறியால் விரட்டும் முதியவர்
சாமானியர்களின் பங்களிப்பு இல்லையென்றால் திருவிழா சுவைக்காது
ராவண கைலாச பர்வதம் – கேட்டதை தரும் காமதேனு
சப்பர உலா!
புறப்பாடு
ராவண கைலாச பர்வதம் வாகனத்தில்..
காமதேனு வாகனத்தில் மீனாட்சி
இராவணன் உடம்பின் மேல் உள்ள கைலாச பர்வதத்தில் சொக்கர் -பிரியாவிடையும் , காமதேனு வாகனத்தில் மீனாட்சியும் மாசி வீதி உலா…
நான்காம் நாள்
தங்கப் பல்லக்கில் பவனி
நான்காம் நாள் உற்சாகம் ஆரம்பம்..
வில்லாபுரம் பாவக்காய் மண்டபத்தில் தங்கப்பல்லக்கில் எழுந்தருளும் சொக்கர் ,பிரியாவிடை மற்றும் மீனாட்சி
தங்கப்பல்லக்கு உலா வரும் சொக்கர் , பிரியாவிடை மற்றும் மீனாட்சியின் அருளாசி ….
உள்ளம் உருக ஒரு பிரார்த்தனை.
நோக்கம்
இந்த பல்லக்கில், சாமியின் திரு உருவங்கள் திரை சீலை மறைந்திருக்கும்.. நமது எதிர் காலம் எப்படி இருக்கும் என்பது இறைவனை தவிர வேறு யாருக்கும் தெரியாது. அதை உணர்த்துவதுதான் இந்த திரைச்சீலை ..
குதிரை வாகனம்
மீனாட்சியும், சொக்கரும் குதிரை வாகனத்தில் வீதி உலா..
கம்பீரமான தங்க குதிரை
மதுரையின் அரசி.
தாயை கண்ட மகிழ்ச்சி மழலையிடம்…
மக்கள் வெள்ளத்தை கடக்கும் மகேசன்..
நோக்கம்
அறம், பொருள், இன்பம், வீடு பேறு என்பவை குதிரையின் நான்கு கால்களைக் குறிக்கும். தம் மனக் குதிரையை அடக்கி சரியான வழியில் செல்பவன், இறைவனை அடைவான் என்பதுதான் இதன் தத்துவம்.
ஆறாம் நாள்
ரிஷப வாகனம்
ஆறாம் நாள் வீதி உலா கோலாட்டத்துடன் ஆரம்பம்..
ஆன்மிகத்தை வளர்த்தவர்கள்
தர்மம் என்ற அறத்தினை நான்கு கால்களாகக் கொண்டு, எவ்வித மாசுமற்ற வெள்ளை நிறமுடைய ரிஷப வாகனத்தில் சொக்கர் – மீனாட்சி மாசி வீதி உலா…
சிவனாக சிறுவன்
வாள் பிடித்த சிறுவன்
கடவுளர்கள் வேடத்தில் சிறுமிகள்
நோக்கம்
அம்மனை தரிசிக்க அம்மன் வேடத்தில் ஒரு சிறுமி
உற்சாகமாக ஒயிலாட்டம் ஆடும் சிறுமியர்
பக்த்தர்களின் நேர்த்திக்கடன்
முன்னே செல்லும் யானை
யாழி மற்றும் நந்தி வாகனத்தில் பவனி
காவடி சுழற்றும் பக்த்தர்
நந்தி வாகனம்
யாழி வாகனம்
யாழிமீது அன்னை மீனாட்சி
ஊடல் உற்சவம்
மீனாட்சிக்கு பட்டாபிஷேக நிகழ்ச்சி அம்மன் சன்னதி ஆறுகால் மண்டபத்தில் நடைபெறும். அப்போது அம்மனுக்கு பரிவட்டம் சாத்தப்படும். மன்னர் திருமலை நாயக்கர் வழங்கிய இரத்தின கீரிடத்திற்கும் அபிஷேகம் நடைபெறும். கழுத்தில் பாண்டிய மன்னர்கள் காலத்தில் அவர்களின் மலரான வேப்பம்பூவை சிறப்பிக்கும் வகையில் வேப்பம்பூ மாலை அணிவிக்கப்படும். கையில் இரத்தின செங்கோல் அளிக்கப்படும். இன்றிலிருந்து சித்திரை,வைகாசி, ஆனி, ஆடி ஆகிய நான்கு மாதங்கள் அம்மன் ஆட்சி நடைபெறுவதாக ஐதீகம். மதுரையின் அரசி.
பட்டாபிஷேகம் முடிந்ததும் வெள்ளி சிம்மாசனத்தில் மாசி வீதிகளில் வலம் வரும் மதுரைக்கரசி.
ஒன்பதாம் நாள் – மீனாட்சி திருக்கல்யாணம்
மீனாட்சியம்மன் இந்திர விமானத்தில் திக் விஜயம் புரிகிறாள். பட்டம் கட்டிய மன்னர்கள் தமது ஆட்சியை நிலை நிறுத்த நாலாபுறம் படையெடுத்துச் செல்வது போல், பட்டாபிஷேகம் நடந்த மறுநாள் மீனாட்சி அம்மன் இனி இங்கு தன்னுடைய ஆட்சி என்பதை பக்தர்களுக்கு அறிவிக்கவே இந்த பவனி.
திக்விஜயம் தொடக்கம்
பாலகர்களின் போர்
அம்பு எய்த படுகிறது
வில் விடுபடுகிறது
மீனாட்சி திக்விஜயம் என்பது எட்டு திக்கும் உள்ள பாலகர்கள் எட்டு பேரையும் வெற்றி கொள்ளும் நிகழ்ச்சி. அதன்படி கீழமாசி வீதியில் இந்திரனையும், விளக்குத்தூண் அருகில் அக்னியையும், தெற்குமாசி வீதியில் எமனையும், தெற்குமாசி வீதி – மேலமாசி வீதி சந்திப்பில் நிருதியும், மேலமாசி வீதியில் வருணனையும், மேலமாசி வீதி – வடக்கு மாசி வீதி சந்திப்பில் வாயுவையும், வடக்குமாசி வீதியில் குபேரனையும், வடக்குமாசி வீதி – கிழக்குமாசி சந்திப்பில் ஈசானையும் வெற்றி கொண்டப் பின் நந்தி தேவரையும் மீனாட்சி வெற்றி கொள்கிறாள்.
இறுதியாக சொக்கநாதர் போருக்கு வருகிறார். அவரைப் பார்த்ததும் மீனாட்சி நாணம் கொள்கிறாள். உடனே அவரின் மூன்றாவது மார்பகம் மறைந்து போக ஸ்ரீ ரெங்கச்சந்திரத்தில் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருக்கல்யாண விருந்து ஏற்பாடு
சமையலில் உதவும் பக்த்தர்கள்
விடிய விடிய விருந்து தயாராகிறது
பத்தாம் நாள்
திருக்கல்யாணம் – பூப்பல்லக்கு உலா
உலகை வென்ற மீனாட்சி அம்மன் இறுதியாய் இறைவனையும் வென்றாள்.அதன் தொடர்ச்சியாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் குலசேகரப் பட்டர் வழிவந்த சிவாச்சாரியார் சுந்தரேஸ்வரரகவும், உக்கிரபாண்டிய பட்டர் வழிச் சிவாச்சாரியார் மீனாட்சியாகவும் வேடம் பூண்டு மாலை மாற்றி கொண்டபின் மீனாட்சிக்கு மங்கல நாண் அணிவிக்கப்படுகிறது.
அதன் பின்னர் ப்ரியா விடை அம்மனுக்கு பொட்டும், மாங்கல்யமும் அணிவிக்கப்படுகிறது. தொடர்ந்து திருமண சடங்குகள் நடைபெறுகிறது.
![]() |
| படம்: பரத் கார்லோஸ் |
![]() |
| படம்: காளிமுத்து |
![]() |
| படம்: காளிமுத்து |
![]() |
| படம்: பரத் கார்லோஸ் |
![]() |
| படம்: பரத் கார்லோஸ் |
![]() |
| படம்: பரத் கார்லோஸ் |
பூப்பல்லக்கில் அன்னை மீனாட்சி
கடந்த வருட பூப்பல்லக்கில் நான் எடுத்த படங்கள். கடைசி மூன்று படங்களில் பூப்பல்லக்கை காணலாம்.
படங்கள்: குணா அமுதன், காளிமுத்து, பரத் கார்லோஸ், எஸ்.பி.செந்தில்குமார்.












































































































































