Home Blog Page 5947

சிலுவை மலை திருப்பயணம்

 

 
நாகர்கோவில் பஸ் நிலையத்தில் எனது பஸ்சுக்காக காத்திருந்தேன். அப்போது ‘குருசுமலை விழா பேருந்து’ என்ற போர்டை தாங்கிக்கொண்டு பல பஸ்கள் போய்க்கொண்டு இருந்தன.

குருசுமலையை அதற்கு முன்பு நான் கேள்விப்பட்டதில்லை. அந்த பெயர் ஏதோ மந்திரம் போட்டதுபோல் என்னை இழுத்தது. இத்தனை மனிதர்கள் சாரை சாரையாக போகிறார்கள் என்றால் அது விசேஷம் மிக்கதாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன்.

நான் போக வேண்டிய ஊரைத் துறந்து குருசுமலைக்கு பஸ் ஏறினேன். குமரி மாவட்டத்தின் மிக உயரமான மலை அதுதான். கிட்டத்தட்ட கடல் மட்டத்திலிருந்து 3,600 அடி உயரம் கொண்டது.  தமிழக கேரள எல்லை பகுதியில் எல்லைக் கோடு போல் உயர்ந்து நிற்கிறது இந்த மலை.  இதற்கு காளி மலை, குரிசு மலை, கொண்டகெட்டி, கூனிச்சி, வரம்பொதி என்று ஏராளமான பெயர்கள் உள்ளன.

நான் சென்றிருந்த சமயம் குருசுமலையில் திருவிழா கூட்டம் கால்வைக்க இடமில்லை. வருடந்தோறும் புனித வெள்ளிக்கு முந்தைய இருவாரங்களுக்கு முன் வரும் புதன் கிழமையில் இந்த கடினமான கொண்டாட்டம் தொடங்குகிறது.  தொடர்ந்து 5 நாட்கள் நடக்கிறது.  அதன் பின் புனித வெள்ளி அன்று மீண்டும் கொண்டாட்டம் தொடங்கி முடிகிறது. இந்த 6 நாட்களில் லட்சக்கணக்கான மனிதர்கள் குருசுவை தரிசனம் செய்து மகிழ்கிறார்கள்.

4.bp.blogspot.com A4sZqlFcYzg VRvqiMg 4TI AAAAAAAADkY oII1h Q2vFc s1600 IMG 1669 - 2026
‘கெத்செமனே’  என்ற சிறிய குன்று

‘குருசு’ என்ற மலையாள வார்த்தைக்கு ‘சிலுவை’ என்று அர்த்தம். மலை உச்சியில் சிலுவை இருப்பதால் இந்த மலைக்கு ‘சிலுவை மலை’ என்று பெயர். தமிழக மலைகளின் உச்சியில் இந்துக் கோயில்கள் இருக்கும். சிலவற்றில் முஸ்லீம் தர்ஹாக்கள் இடம் பெற்றிருக்கும். மலையின்  மீது கிஸ்துவ ஆலயங்கள் இருப்பது அரிது. அப்படியொரு அரிதான மலைக்குத்தான் பயணித்துக் கொண்டிருந்தேன்.

என்னுடைய பஸ் தமிழகத்தைக் கடந்து கேரளாவுக்குள் நுழைகிறது. குருசுமலையில் ஏறவேண்டும் என்றால் கேரளாவில் உள்ள வெள்ளறடைக்குப் போயாக வேண்டும். அங்கிருந்துதான் மலைப்பயணம் தொடங்குகிறது. பஸ் வரும் பாதையெங்கும் விழாவின் அடையாளங்கள் சிறப்பாக இருந்தன. ஒலிபெருக்கியில் கிறிஸ்துவக் கீதங்கள் ஒலித்துக் கொண்டிருந்தன.  பக்தர்களை வரவேற்கும் அலங்கார வளைவுகள் எல்லா இடங்களிலும் சாலையில் அமைக்கப்பட்டு இருந்தன.  வெள்ளறடையை அடையும் முன்பே திருவிழா உற்சாகம் அனைவரையும் தொற்றிக் கொண்டது.

வெள்ளறடையில்  திரும்பிய பக்கமெல்லாம்  மனித முகங்கள்தான். அந்த மனித சமுத்திரத்தில் நீந்திதான் மலையேற வேண்டும். இதை ‘குருசு மலை திருப்பயணம்’என்கிறார்கள். பயணம் என்பது சந்தோஷ­த்துக்காக செல்வது. திருப்பயணம் என்பது ஆண்டவனுக்காக செல்வது. திருப்பயணம் எப்போதுமே கடினமானது தான். சபரிமலை பயணமோ, வெள்ளியங்கிரி மலை பயணமோ சாதாரணமானது அல்ல.

 குருசு மலையும் அப்படித்தான். இந்த மலையில் ஏறுவதே ஒரு சாகஸம்தான். கல்வாரி மலையில் ஏசுக்கிறிஸ்து சிலுவையைச் சுமக்கும்போது பட்ட வேதனைகளையும், வலிகளையும் நமக்கு உணர்த்தும் பயணம் இது. புனித வெள்ளிக்கு முன்பு இப்படி சிலுவை பாதையில் செல்வது பாரம்பரிய வழக்கம். அப்படியொரு பயணத்தில் தான் நானும் கலந்து கொண்டேன். அப்போது அது கடினமாகத் தானே இருக்கும்.

1.bp.blogspot.com nXARVO7mwd4 VRvqgYubWrI AAAAAAAADkM ZG5vJhPvJhg s1600 IMG 1676 - 2026
பிரார்த்தனை நிலையில் ஏசுநாதர் 

கற்களும் புழுதியும் நிறைந்த குறுகலான கடினமான பாதையில் மலையேறுவது திணற வைக்கும் அனுபவம். மலையேறும் முன் சமதளத்தில் 50 அடி உயரத்தில் சிறிய குன்று இருக்கிறது. இதுதான் பயணத்தின் முதல் இடம். பிரார்த்தனை கூடம். இதை ‘கெத்செமனே’என்கிறார்கள். இங்கு ஏசுவே பிரார்த்தனை செய்வது போல் ஒரு சிலை உள்ளது.

‘கவனியுங்கள்….! பிரார்த்தனை செய்யுங்கள். நீங்கள் விழமாட்டீர்கள்…! ‘ என்ற வசனத்தை அது நினைவுப் படுத்துகிறது.  மலை மீது ஏறும் இந்த பயணம் நல்லபடியாக நிறைவு பெறவேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கைதான் இங்கு வரும் எல்லோருக்கும் உதிக்கின்றன. இந்த பிரார்த்தனைக் கூடம் அருகில் பாதிரியார் ஜான் பாப்பிஸ்ட் சிலை உள்ளது. பெல்ஜியம் நாட்டில் பிறந்த இவர். நற்செய்தி அறிவிப்பதற்காக திருவிதாங்கூர் வந்தார். 1935 முதல் 1973 வரை கேரளாவில் இருந்தார்.

1.bp.blogspot.com 5Prgx3rjKak VRvqh Ao II AAAAAAAADkU 3ZaWFu1i4eg s1600 IMG 1682 - 2026
பாதிரியார் ஜான் பாப்பிஸ்ட் சிலை

உண்டன்கோடு தேவாலயத்தில் குருவாக இருந்தபோது கொண்டகெட்டி மலையின் உச்சியில் வாழ்ந்த மலைவாசிகளை காலரா, மலேரியா போன்ற கொள்ளை நோய்கள் எமனுக்கு உயிர்களைப் பலியாக அனுப்பிக் கொண்டிருந்தன. அவர்கள் நோய் வாய்ப்பட்டவர்களை இந்த தேவாலயத்துக்கு தூக்கி வந்தார்கள். அவர்களை சிலுவையின் அற்புதத்தால் ஜான் பாப்பிஸ்ட் குணப்படுத்தினார்.

1.bp.blogspot.com 28 C0rGKjPk VRvqwzDZ8AI AAAAAAAADkk r1nutTTQ ps s1600 IMG 1706 - 2026
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை

கையில் எந்த பாரமும் இல்லாமல் வெற்று ஆட்கள் ஏறுவதற்கே திணறிப் போகும் இந்த மலைப் பாதையில் எப்படி நோயாளியையும் தூக்கிக்கொண்டு இறங்கினார்களோ, தெரியவில்லை..! செங்குத்தான இந்த மலையில் இருந்து நோயாளிகளைத் தூக்கி வருவது மிகவும் சிரமமான ஒன்றாக இருக்கிறது என்பதை மலைவாசிகள் பாதிரியாரிடம் தெரிவித்தனர். “நீங்கள் இங்கு  வரவேண்டாம்  உங்கள் இடத்தை தேடி தேவனே வருவார்” என்று கூறிய பாப்பிஸ்ட் 1957 மார்ச் 27-ல் மலை உச்சியில் மரத்தாலான ஒரு சிலுவையை  நிறுவி திருப்பலி நடத்தினார். அந்த மலைக்கு ‘தெக்கன் குருசுமலை’ என்று பெயரிட்டார். அன்றிலிருந்து குருசுமலை திருப்பயணம் ஆரம்பமானது. அந்தப் புனிதரின் ஞாபகார்த்தமாக இங்கு சிலை வைத்திருக்கிறார்கள்.

1.bp.blogspot.com Fu3ckHW q 4 VRvr5JPQu I AAAAAAAADlU mEq2Xf2O0h8 s1600 IMG 1687 - 2026
கன்னிமேரி ஏசு கிறிஸ்துவை மடியில் ஏந்தியிருக்கும் சிலை

மலைப் பாதையின் தொடக்கத்தில் சங்கமாவேதி என்ற தியானக்கூடம் உள்ளது. இங்கு தியானம் செய்யலாம். இதன் அருகே கன்னிமேரி ஏசு கிறிஸ் துவை மடியில் ஏந்தியிருக்கும் சிலை உள்ளது. குழந்தையை தாய் பாதுகாப்பது போல் மலையேறும் நம்மை கன்னிமேரி பாதுகாப்பாள் என்பது ஐதீகம். அங்கிருந்து  மலையேற்றம் தொடங்குகிறது. முதலில் ஒரு அரை கிலோமீட்டர் தூரத்திற்கு நல்ல ரோடு இருக்கிறது.  அதன்பின் தொடங்கும் கடினமான பாதை மலை உச்சி வரை இடைவெளி இல்லாமல் தொடர்கிறது.  குறிப்பிட்ட தூரத்திற்கு ஒன்றாக மொத்தம் 14 சிலுவைகள் இந்த பாதையில் உள்ளன.

1.bp.blogspot.com pUqQJSn4 - 2026
14 – வது சிலுவை

ஐந்தாவது சிலுவை உள்ள இடம் ஓய்வு எடுத்துக் கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது.  இந்த இடம் குளுமையான காற்றை சுவாசிக்கும் விதமாக உள்ளது. களைத்து வரும் பக்தர்களுக்கு அற்புதமான இடம்.

ஒன்று முதல் ஏழாவது சிலுவை வரை கேரள பகுதியில் உள்ளது.  அதற்கு பின் தமிழ்நாட்டுப் பகுதி ஆரம்பமாகிறது.  7 – 14 சிலுவைகள் தமிழ்நாட்டில் உள்ளன.  இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் ஏழாவது சிலுவை வரை கேரள போலீஸ் பாதுகாப்பு பணியில் இருக்கும். எல்லோரும் மலையாளத்தில பேசிக் கொண்டிருப்பார்கள். 7வது சிலுவையில் இருந்து தமிழக போலீஸ் தமிழ் உரையாடல் என்று சூழலே மாறுவது ஒரு ரம்மியமான அனுபவம்.

4.bp.blogspot.com YEIQwDnMIA0 VRvrQWz24BI AAAAAAAADk0 MG4iKIpcX98 s1600 IMG 1700 - 2026
பாறையில் ‘லாஸ்ட் ஸப்பர்’  ஓவியம்

பாறையில் வரையப்பட்டிருக்கும் ‘லாஸ்ட் ஸப்பர்’  என்ற ஏசுவின் கடைசி உணவு விருந்து சித்திரமாக தீட்டப்பட்டிருக்கிறது. அதையும் கடந்து உயரத்துக்குப் போனால் மலைமுகட்டில்தான் சிலுவை உள்ளது.  ஜான் பாப்பிஸ்ட் செய்துதந்த மர சிலுவை இப்போது இல்லை.  மோசமான தட்பவெப்பத்தினால் அது சிதைவுற்றது.  அதன்பின் தற்போது உள்ள கான்கிரீட்டால் ஆன சிலுவையை வைத்துள்ளார்கள். இதன் உயரம் 25 அடி.
இந்த சிலுவை முன் சிறிய மண்டபம் உள்ளது.  சிலுவை இருப்பது தமிழ்நாட்டில்தான் என்றாலும், இது நெய்யாற்றின்கரை கிறிஸ்துவ சபைக்கு கட்டுப்பட்டது.  அதனால் தமிழ்நாட்டில் இருந்தாலும் ஆராதனை வழிபாடுகள் எல்லாம் மலையாள மொழியிலே நடக்கிறது.

1.bp.blogspot.com - 2026
மலை முகட்டில் உள்ள சிலுவை

இங்கிருந்த 500 மீட்டர் தொலைவில் காளிக்கோயில் உள்ளது. இந்த இடத்தை ‘காளிமலை’என்கிறார்கள். இங்கு துர்க்காதேவி, தர்ம சாஸ்தா, நாகயட்சி, சப்த கன்னியர் என்ற தெய்வங்களின் சன்னதிகள் உள்ளன.  மிக அழகான இடம். மலையின் ஒரு பக்கம் கேரளாவின் அழகை மேலிருந்து பார்க்கலாம்.  மறுபக்கம் தமிழகத்தின் இயற்கை அழகை பார்க்கலாம். மிக வசீகரமான இடம் இது.

2.bp.blogspot.com iX2j9UWMa I VRvrcDcoK3I AAAAAAAADk8 qkB33FYAhDE s1600 IMG 1743 - 2026
சப்த கன்னியர்

இங்கிருக்கும் காளி தீர்த்தம் கோடையிலும் வற்றாதது. இது பல நோய்களை தீர்க்கும் மூலிகைத் தீர்த்தம் என்று கூறுகிறார்கள். சித்திராப்  பெளர்ணமிதான் இங்கு விசேஷம். அப்போது நிறைய பெண்கள் பொங்கலிட்டு காளிதேவியை வழிபடுகிறார்கள்.

3.bp.blogspot.com VTJCc BMYo VRvrm2w jzI AAAAAAAADlE EOqrIFjf6PU s1600 IMG 1749 - 2026
மலை உச்சியில் இருக்கும் காளிதேவி கோயில்

இந்தக் கோவிலில் இருந்து கீழே போவதற்கு மோசமான மண் ரோடு ஒன்று உள்ளது.  ஜீப்பைத் தவிர எந்த வாகனமும் இந்த வழுக்கும் ரோட்டில் போகமுடியாது. குருசு மலை ஏறமுடியாதவர்கள் தமிழ்நாட்டில் உள்ள ஆறுகாணியில் இருந்து ஜீப் மூலம் மலை உச்சிவரை செல்லலாம். ஆனாலும் நடந்து போவதில் கிடைக்கும் மன திருப்தியும் உடல் ஆரோக்கியமும் இப்படி வாகனத்தில்  போகும்போது கிடைக்காது.

குருசு மலை சாகஸம் செய்பவர்களுக்கும் அற்புதமான இடம். இந்த மலையேற்றமே நல்ல ஒரு டிரக்கிங் அனுபவத்தைத் தரும்.

ஆவிகள் நகரில் உலாவ ஆசையா..!

 

 
ஆவிகள் உலகில் இருக்கிறதா..? இல்லையா..? என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. ஆனால் நகரம் முழுவதும் ஆவிகள் உலாவுவதாக பரவிய புரளியால் சில நகரங்கள் ‘ஆவிகளின் நகரம்’ என்றே பெயரெடுத்திருக்கின்றன. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. அதே வேளையில் பகுத்தரிவாலார்கல்ளும்  ஆவிகள் குறித்து ஆராய்ச்சி செய்பவர்களும் தொடர்ந்து குவியும் இடமாக இது இருக்கிறது. இப்படி ஆவிகள் பிடித்தாட்டும் நகரங்களின் பட்டியல் இதோ..

1. எடின்பர்க்

2.bp.blogspot.com BiELT jsfc4 VSAp2BsejhI AAAAAAAADnc k9XEIN4Nd5M s1600 75672 004 24C13BAA - 2026

எடின்பர்க் ஸ்காட்லாந்த் நாட்டின் தலைநகரம். பழமையான இந்த நகரம் பிளேக் நோயாலும், நெருக்கடியான அரசியல் சூழ்நிலைகளாலும் லட்சக்கணக்கான மக்களின் உயிரை இழக்க வைத்திருக்கிறது. அவர்களின் ஆவிகள் இன்னமும் வீதிகளில் அலைவதாக நம்பிக்கை.

4.bp.blogspot.com xgGXrnPPVk4 VSAp00ukK0I AAAAAAAADnU x DjI3EH6z8 s1600 maid forth bridge - 2026

 நம்மூரைப் போல தலையில்லா முண்டம், கொள்ளிவாய்ப் பிசாசு போன்ற நம்பிக்கைகள் ஏராளமாய் உள்ளன. இங்கு பிசாசுகள் போக ஹோலிரூட், பேலஸ், தேசிய அருங்காட்சியகம், கேஸில் போன்ற இடங்கள் சுற்றிப் பார்க்க ஏற்றவை.

2. ஸ்வானா

1.bp.blogspot.com 4Qqmh9pEXIE VSCJ iW3a9I AAAAAAAADnw jBcd13TtGvE s1600 JS48291375 - 2026

 

அமெரிக்காவில் உள்ள ஜியார்ஜியா மாகாணத்தில் இருக்கும் ஒரு நகரம்தான் ஸ்வானா. இங்கிருக்கும் எமர்சன் வில்லியம்ஸ் ஹவுஸ், போனோவேன்ச்சர் சிமிட்டிரி என்ற இரண்டு இடங்களும் ஆவிகளுக்கு பிடித்த இடங்கள் என்று கூறுகிறார்கள். ஊரில் இருக்கும் ஆவிகள் எல்லாம் இங்குதான் கூடி கும்மி அடிப்பதாக  ஒரு நாவலில் பிரபலமான எழுத்தாளர் எழுதிவிட, அதை அப்படியே நம்புகிறது இந்த ஊர்.

1.bp.blogspot.com 8w9OYXHOb E VSCKA XJvI AAAAAAAADn4 rlcYSuNM5ns s1600 swansea castle 522019086 - 2026

ஆனாலும் ஸ்வானாவில் சுற்றுலவாசிகளைக் கவரும் இடங்கள் உள்ளன. போர்சித் பார்க், செயின்ட் ஜான்சன் கதிட்ரல், போனோவேன்ட் கல்லறை, ஆப்பிரிக்கா பாப்பிஸ்ட் தேவாலயம் ஆகியவை பார்க்கக்கூடிய இடங்கள்.

3. நீயூ ஆர்லியன்ஸ்

1.bp.blogspot.com YEp34hnuPV0 VSCLc11P6dI AAAAAAAADoM h9Qpjg1lPfw s1600 new orleans - 2026

கடுமையான பஞ்சம் ஏற்பட்டதால் ஏராளமான மக்கள் மாண்ட நகரம் இது. அவர்களின் ஆவி நூற்றாண்டுகள் கடந்தும் இங்கு உலாவுவதாக நம்பிக்கை. அந்த நம்பிக்கை போய்விடக்கூடாது என்பதற்காக நாள்தோறும் புதிது புதிதாக கதைகளை கட்டவிழ்த்து விடுவார்கள்.

4.bp.blogspot.com jnc7f1Jn2ks VSCLbZsHpTI AAAAAAAADoE 5WuuFgsdJdg s1600 city sightseeing neworleans lafayette square - 2026

 அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் இந்த நகரம் உள்ளது. பிரஞ்ச் குவார்டர், ஜாக்சன் ஸ்கொயர், சிட்டி பார்க், அடுபோன் மிருகக்காட்சி சாலை என்று சுற்றுலாப் பயணிகளுக்கு தீனிப் போடும் இடங்கள் இங்கு ஏராளம்.

4. கால்வெஸ்டன்

2.bp.blogspot.com 2ffiLpnjXyg VSCNMxiYcFI AAAAAAAADoY 6wcLg3BvEeA s1600 ashton villa visitors center - 2026

 

இதுவும் அமெரிக்க நகரம்தான். 1900-ல் வீசிய பெரும்புயல் நகரின் பாதி மக்கள் தொகையை காணாமல் செய்து விட்டது. மழைக்கும் புயலுக்கும் பயந்து பெரிய கட்டடத்தில் தஞ்சமடைந்த மக்கள் மீது கூரை இடிந்து விழுந்து நூற்றுகணக்கானவர்களை பலி கொண்டது. இப்படி ஒரே ஒரு புயல் மொத்த நகரையும் சின்னா பின்னப்படுத்தியதால் இங்கு ஆவிகள் நடமாட்டம் அதிகம் உள்ளதாக நம்புகிறார்கள்.

1.bp.blogspot.com ZLddrB0nbKY VSCNPCajztI AAAAAAAADog d55QcDHmtw8 s1600 CadillacRanch Cars1 longhorndave 500%2B%281%29 - 2026

 விமான அருங்காட்சியகம், ரயில் மியூசியம், மோடி கார்டன்ஸ், வரலாற்று நினைவு சின்னம் ஆகியவை சுற்றுலாவுக்கு ஏற்ற இடங்கள்.

5. சான் பிரான்சிஸ்கோ

1.bp.blogspot.com kXsCeGrayRY VSCO DWX7qI AAAAAAAADos CLnHzDYlDS0 s1600 san francisco - 2026

 

இந்த அமெரிக்க நகரில் மிக மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் தரைமட்டமாயின. இதன் தாக்கம் இன்னமும் குறையவில்லை. புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான கோல்டன் பாலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆவிகள் குடியிருப்பதாகவும், அது காரில் போவோர்களை போலீஸ் வேடத்தில் வந்து வழிமறிப்பதாகவும், அதனால் உண்மையான போலீஸ் இந்த பாலத்தில் நின்றால் கூட ஆவிதான் என்று பயந்து ஓடுகிறார்கள். கலிபோர்னியாவில் இருக்கும் இந்த நகரம் சுற்றுலாவுக்கு பெயர்பெற்றது. கோல்டன் பாலம், கோல்டன் கேட் பார்க், சைனா டவுன், அல்கட்ராஸ் தீவு, தீ யங் போன்ற இடங்கள் ரசனை மிக்கவை.

4.bp.blogspot.com yPSy QrUvQY VSCPAEiqDiI AAAAAAAADo0 Gkhl33Y9A4U s1600 6a00d834515c6d69e200e54f6f008d8834 640wi - 2026

இதை படித்ததும் வளர்ந்த நாடுகளின் மீது  இருக்கும் இமேஜ் சரிகிறதா..! நமது நாட்டில் கூட புயல்கள் அடித்திருக்கின்றன, நிலங்கள் நடுங்கியிருக்கின்றன, மழைகள் பொழிந்திருக்கின்றன, நோய்கள் வந்திருக்கின்றன மக்கள் லட்சம் லட்சமாக இறந்திருக்கிறார்கள். அதற்காக அவற்றை பேய் நகரம் என்று நாம் ஒதுக்கி வைக்கவில்லை. ஆனால், அவர்கள் அப்படியில்லை.

பக்தைக்காக பாலகனாக மாறிய சிவபெருமான்

 

 
விக்ரம பாண்டியன் மதுரையை ஆண்டு வந்த போது விரூபாட்சகன் என்ற வேதியன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு அழகும் குணமும் நிறைந்த சுபவிரதை என்ற மனைவி இருந்தாள். மனமொத்த தம்பதிகளாக வாழ்ந்து வந்த அவர்களுக்கு ஒரேயொரு மனக்குறை இருந்தது. வருடங்கள் பல கடந்தும் அவர்களுக்கு ஒரு மழைலச் செல்வம் இல்லை.

ஒரு குழந்தைக்காக பல சிவதர்மங்களையும், விரதங்களையும் மேற்கொண்டு வந்தனர். இப்படி அருந்தவம் புரிந்ததாலே அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையொன்று அழகே உருவாகப் பிறந்தது. அந்த குழந்தைக்கு கௌரி என்று பெயர் வைத்தனர்.

    கௌரிக்கு ஐந்து வயது முடிவதற்குள்ளே அவளின் மனம் இறைவன்பால் சென்றது. பிறவிப்பயனைப் போக்குவதற்கான வழிகளைப்பற்றி ஆராயத் தொடங்கினாள். தனது தந்தையிடம் பிறவியை ஒழிக்கும் திவ்ய மந்திரத்தை கற்றுத் தரும்படி கேட்டாள்.

    இதனைக் கேட்டு வியப்படைந்த விரூபாட்சகன் மிக்க மகிழ்ச்சியோடு தனது மகளுக்கு பராசக்தி மகாமந்திரத்தை உபதேசித்தார். இதை கேட்டுணர்ந்த கௌரி தினமும் பயபக்தியுடன் ஜபம் செய்து வந்தாள்.

1.bp.blogspot.com 1gammn5at0E VS3KvHWkEuI AAAAAAAADuo FjFRdhNm1FM s1600 3581209357 be37ceb1fe o 2483 - 2026

    வயது ஏறஏற பெண்மையின் இலக்கணங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கௌரியை எழில் மிகுந்த பருவ மங்கையாக பூரிக்க வைத்தன. திருமண வயதும் நெருங்கிவிட்டது. அவளுக்கு பொருத்தமான ஒரு மணமகளைத் தேடினான் விரூபாட்சகன்.

    அப்போது வெளியூர் பிரம்மச்சாரி ஒருவன் பிச்சை எடுத்துக் கொண்டுவந்தான். அவன் ஒரு வைணவப் பிரம்மசாரி. அவனுக்கு தனது மகளைக் கொடுக்க விரும்பினான். அவன் எப்படிப்பட்டவன்? அவன் குடும்பம் எப்படிப்பட்டது? என்று ஆராயாமல் கன்னிகாதானம் கொடுக்க முன்வந்ததை பற்றி சுபவிரதையின் உறவினர்கள் மிகவும் கவலைக் கொண்டனர்.

    பின்னர் விசாரித்ததில் மணமகனின் குலம், கோத்திரம் எல்லாவற்றையும் பார்த்ததில் எல்லாம் ஒத்து வந்திருந்தது. மதம் மட்டும்தான் வைணவமாக இருந்தது. அனைவரும் ஒப்புக் கொண்டனர். வேதங்கள் கூறிய நெறிபிறழாமல் திருமணம் நடந்தது. பல வகையான சீர்வரிசைகளோடு தன் மகள் கௌரியை மணவாளனோடு அனுப்பி வைத்தனர்.

    வைணவப் பிராமணன் தனது புது மனைவியுடன் அவன் இல்லம் சென்றான். அவனது பெற்றோர்களால் மகனின் செயலை எற்க முடியவில்லை. வைணவப் பாரம்பரியம் கொண்ட ஒரு குடும்பத்தில் சிவக்கோலம் கொண்டு சிவ சிந்தனையுடன் இருக்கும் பெண்ணை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் அவள் மீது வெறுப்பு கொண்டனர். அவளை ஒதுக்கி வைத்தனர்.

    ஒரு நாள் அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பக்கத்து ஊரில் நடைபெறும் ஒரு திருமணத்திற்கு செல்ல முடிவு செய்தனர். தங்களுடன் கௌரியை அழைத்துச் செல்ல அவர்கள் விரும்பவில்லை. அதனால் அவளை தனியே வீட்டில் விட்டுவிட்டு பூட்டுப்போட்டு பூட்டி சென்றுவிட்டனர்.

    தனியாக வீட்டில் இருந்த கௌரிக்கு பலவிதமான சிந்தனைகள் மனதை ஆக்ரமித்தன. சிவனடியார்களைப் பார்த்து எத்தனை நாட்கள் ஆகிவிட்டது? எனது குற்றம் நீங்கும் வண்ணம் ஒரு சிவனடியாரையும் காண முடியவில்லையே! என்று ஏக்கம் கொண்டாள். அதுவே அவளை பெருங்கவலையாக ஆட்கொண்டது.

    பக்தர்களின் கவலையைப் போக்குவதுதான் சிவபெருமானின் வேலை. தனது பக்தைக்காக சைவக் கிழவர் உருவில் சிவனின் அடையாளங்கள் சிறந்து விளங்க கௌரியின் வீட்டுக்குள் வந்தார். கௌரி அவரைக் கண்டதும் மனம் மகிழ்ச்சிக் கொண்டாள்.

    அந்தண முதியவரை வரவேற்று உபசரித்தாள். வேதியர் தான் பசியோடு இருப்பதை தெரியப்படுத்தினார். கௌரிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. வீடு பூட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் எப்படி சிவனடியார் பசியை தன்னால் போக்க முடியும் என்று கவலைக் கொண்டாள்.

    “பெண்ணே! பூட்டு போட்டு பூட்டப்பட்டிருக்கிறது என்று தயங்காதே! நீ தொட்டால் பூட்டு திறந்து கொள்ளும்” என்றார் சைவ முதியவர்.

    சொன்னபடியே நடந்தது. கௌரியும் சுவையான உணவு சமைத்து அந்த முதியவருக்கு அமுது படைத்தாள். அவர் மனம் இறங்கும் வண்ணம் உபசரணை செய்தாள். வேதியர் அமுதுண்டு முடிந்தவுடனே அவர் தனது வயோதிகம் மறைந்து, இளமையம் அழகும் கொண்ட வாலிபனாக மாறினார்.

    மன்மதனனையே மிஞ்சும் பேரழகுடன் கட்டுடலுடனும் காட்சியளித்தார். ஏற்கனவே உடலில் பூசியிருந்த திருநீறு சந்தனமாக மாறியது. உருத்திராட்ச மாலை நல் பொன் நகையாக மாறியது. பொக்கைவாய் சிரிப்பு போய் வசீகர சிரிப்பு வந்தது.

    எந்தப் பெண்ணும் கண்டவுடன் காதல் கொள்ளும் அழகுடன் காட்சி தந்தார் வேதியர். முதியவரின் இளமை வடிவம் கண்டு மனம் பதைத்தாள் கௌரி. கற்பிலும் ஒழுக்கத்திலும் சிறந்த அந்தப்பெண், உடல் வியர்த்துக் கொட்ட, பயத்துடன் நடுநடுங்கிப் போய்வீட்டின் ஒருபக்கமாக ஒதுங்கி ஒடுங்கி நின்றாள்.

    யாராவது தனது வீட்டை பார்த்தாலே பெரிய பூகம்பமே ஏற்படுமே என்று பயந்தாள். ஆள் இல்லாத வீட்டில் ஒரு வாலிபனுடன் புது மணப்பெண் இருப்பது தெரிந்தால் எத்தகைய பழி சொல்லுக்கு ஆளாவோமோ என்று மனம் கலங்கி இருந்த வேளையில், வெளியூர் திருமணத்துக்குப் போயிருந்த கௌரியின் உறவினர்கள் அனைவரும் வீடு திரும்பினர்.

    இன்றுடன் தன் வாழ்வு முடிந்தது! என்ற எண்ணத்துடன் வாசற்கதவை திறந்தாள். அதற்குள் வாலிபனாக இருந்த அந்தணப் பெருமான் பச்சைக் குழந்தையாக மாறிவிட்டார். அந்த சிவக்குழந்தை அழத்தொடங்கியது.

    வீட்டுக்குள் நுழைந்த கௌரியின் மாமியார் திடீரென்று வீட்டுக்குள் இருக்கும் குழந்தையை திகைப்புடன் பார்த்தாள். ஆச்சரியம் கொண்டாள். மருமகளை எரித்துவிடும் கோபப் பார்வை பார்த்தாள்.

    “இந்தக் குழந்தை எப்படி வந்தது? யாருடைய குழந்தை இது?” என்று கேட்டாள்.

    அதற்கு கௌரி பயத்துடன் நடுங்கியவாறு, “தேவதத்தன் என்றொரு அந்தணன் தனது மனைவியோடு இங்கு வந்தான். அவன்தான் இந்தக் குழந்தையைப் பார்த்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டுப் போனான்” என்றாள்.

    இதனைக் கேட்டதும் வைணவர்களாகிய கௌரியின் மாமியும் மாமனும் கடுங்கோபம் கொண்டனர். பொறுமையும் கருணையும் ஒரு சேர இழந்தனர். “அடியேய் வைணவர்களாகிய நாம் சைவர்கள் மீது அன்புக்காட்டக் கூடாது, சைவக் குலத்தில் நீ பிறந்திருந்தாலும் மணமானப் பின் கணவனின் வழிமுறைகளைப் பின்பற்றுவதுதான் நல்ல பொண்ணுக்கு அழகு. நீயோ கணவனின் வீட்டாரை மதிப்பதில்லை. சைவக் குழந்தையின் மேல் மாறா அன்பு கொண்டிருக்கிறாய். நீ எங்களுக்கு வேண்டாதவள். இந்த குழந்தையையும் எடுத்துக் கொண்டு இந்த வீட்டைவிட்டு வெளியே போ!” என்று கோபத்துடன் கர்ஜித்தாள். கௌரியையும் குழந்தையையும் வீட்டைவிட்டே வெளியேற்றினாள்.

    கைக்குழந்தையுடன் செய்வதறியாது கலங்கிநின்றாள் கௌரி. எதுவும் அறியாதவளாக சோமசுந்தர பெருமானை இடைவிடாது தியானம் செய்து கொண்டே இருந்தாள். உமா தேவியின் மகாமந்திரத்தை உச்சரித்தாள். மகாமந்திரம் சொன்ன மாத்திரத்தில் கையில் இருந்த குழந்தை காணாமல் போனது. உடனே ஆகாய மார்க்கமாக சிவபெருமான் உமா தேவியுடன் ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார். இந்த தேவக் காட்சியை கண்ட கௌரி சிவானந்தக் கடலில் மூழ்கி ஆனந்த வெள்ளத்தில் நீந்தினால்.

    உமாதேவியின் திருமந்திரத்தை தொடர்ந்து உச்சரித்ததால் கௌரியை சிவபெருமான் உமையின் திருவடியாக மாற்றி தன்னிடம் ஐக்கியமாக்கிக் கொண்டார். சிவன் உமாதேவியின் ரிஷப வாகனம் கௌரியையும் தாங்கிக் கொண்டு சிவலோகம் சென்றது.

எம்.ஜி.ஆர்.-யை மட்டும் அறிமுகப்படுத்தவில்லை எல்லீஸ் டங்கன்

 

 

தமிழ் சினிமாவில் ஒதுக்கி புறம்தள்ள முடியாத மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் எல்லீஸ் ஆர்.டங்கன். இவர் ஒரு அமெரிக்கர். ஆனால், அமெரிக்காவில் ஒரு படம் கூட எடுத்ததில்லை. இவர் தனது சினிமா தாகத்தை தீர்த்துக்கொள்ள தேர்ந்தெடுத்த இடம் இந்தியா, அதிலும் தமிழ்நாடு.

4.bp.blogspot.com - 2026
எல்லீஸ் ஆர்.டங்கன்

 அமெரிக்காவில் இவர் படம் எடுக்காமல் இந்தியா வந்ததற்கு காரணம் இருக்கிறது. ஆரம்பக் கால தமிழ் சினிமாவில் பிராமணர்கள் ஆதிக்கம் இருந்ததுபோல், அமெரிக்காவின் பல துறைகளிலும் யூதர்களின் கையே ஓங்கியிருந்தது. சினிமாவிலும் அவர்களே முழு ஆதிக்கம் செலுத்தினர். அவர்களுடன் போட்டிபோடுவது சாதாரணமான விஷயமில்லை. இன்றைக்கும் கூட புகழ்பெற்று விளங்கும் பல ஹாலிவுட் இயக்குநர்கள் யூதர்களே. ஸ்டீபன் ஸ்பீல்பர்க், ஜேம்ஸ் கேமரூன் போன்றவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

1.bp.blogspot.com g7R tbaa3TU VS6oTzLRwuI AAAAAAAADvQ CfmVkKm8N6I s1600 Sathi leelavathi 1936film - 2026
‘சதிலீலாவதி’யில் எம்.ஜி.ஆர்.

எல்லீஸ் ஆர்.டங்கனின் முதல் படம் 1936-ல் வெளிவந்த ‘சதிலீலாவதி’. ஆனந்த விகடனில் எஸ்.எஸ்.வாசன் தொடராக எழுதிய கதையே அது. அந்த படத்தில்தான் எம்.ஜி.ஆர்.ஒரு துணை கதாபத்திரத்தில் அறிமுகப்படுத்தப் பட்டார்.

இந்தியாவின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் விட்டு விலகாதவர்களாகவே அன்றைய பெண்கள் இருந்தார்கள். அதைதான் தமிழ் படங்களும் சித்தரித்து வந்தன. இதை மாற்றி மதுக் கோப்பைகளை கையில் ஏந்திய மங்கையர்கள் கவர்ச்சி நடனம் ஆடும் கிளப் டான்ஸ் பாடல்களை தனது முதல் படத்திலேயே அறிமுகம் செய்தார். படம் மாபெரும் வெற்றியைக் கொண்டாடியது.

2.bp.blogspot.com - 2026
‘அம்பிகாபதி’ படப்பிடிப்பில்

டங்கனின் இரண்டாவது படம் 1937-ல் வெளிவந்தது. அன்றைய சூப்பர் ஸ்டாரான தியாகராஜாபாகவதர் நடித்த ‘அம்பிகாவதி’ படம்தான் அது. எந்த சூழ்நிலையிலும் தான் நடிக்கும் படத்தில் எந்த நடிகையுடனும் நெருங்கி நடிப்பதில்லை என்ற கொள்கையை தீவிரமாக கடைபிடித்து வந்தார். ஆனால், அப்படிப்பட்ட  பாகவதரையே அந்த படத்தின் கதாநாயகியுடன் நெருக்கமாக நடிக்க வைத்தார் டங்கன். அதனால், திரையுலகின் முதல் ‘காதல் மன்னன்’ என்ற பட்டம் பாகவதரை வந்து சேர்ந்தது.

2.bp.blogspot.com qx9LCpPjEcs VS6oZ2GMirI AAAAAAAADvc 6mDVkCHD 1Y s1600 ponmudi - 2026

அதன்பின், 1940-ல் இவர் இயக்கிய ‘சகுந்தலை’ படத்திலும், 1945-ல் வெளியான ‘மீரா’ படத்திலும் எம்.எஸ்.சுப்புலட்சுமியை முக்கியமான வேடத்தில் நடிக்க வைத்தார். இந்த படத்தில்தான் முதன்முதலாக  குளோஸ்-அப் காட்சி அறிமுகப்படுத்தப்பட்டது. திரை முழுவதும் தெரிந்த சுப்புலட்சுமியின் முகத்தைப் பார்த்து பார்த்து பரவசமடைந்தார்கள் ரசிகர்கள்.

2.bp.blogspot.com 3PibwciGpSE VS6oTe3eWkI AAAAAAAADvM ZqxHx UvdEI s1600 meeramain apr22 - 2026
‘மீரா’வில் எம்.எஸ்.சுப்புலட்சுமி 

1950-ல் இவர் இயக்கி வெளிவந்த ‘மந்திரகுமாரி’ படத்தில் முதன்முதலாக டிராலி ஷாட்டை அறிமுகபப்டுத்தினார். டிராக் அமைத்து அதன் மீது டிராலியில் கேமராவை வைத்து காட்சிகள் படமாக்கப்பட்டன.

1.bp.blogspot.com 1h0fr9 9eI8 VS6tMK8lJnI AAAAAAAADvs P 3O0nzM6X4 s1600 03mpdungan G8S7 03 1672415g - 2026
‘மந்திரிகுமாரி’யில்  எம்.ஜி.ஆர்.

காரின் மீது பிளாட்பாரம் போன்ற அமைப்பை உருவாக்கி, கேமராவை அதன் மீது வைத்து நடிகர்கள் குதிரைகளின் மீது வேகமாக பாய்ந்துவரும் காட்சியை அற்புதமாக படமாக்கி காண்பித்தார். அதன் பின்னர்தான் இந்த தொழில் நுட்பங்கள் எல்லாம் தமிழ் படங்களில் பயன்படுத்தப்பட்டன.

ஹாலிவுட் டெக்னிக்கை தமிழில் முதலில் அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர், எல்லீஸ் ஆர்.டங்கன் தான். தமிழ் சினிமா புதிய உயரங்களை தொடுவதற்கு அஸ்திவாரம் அமைத்தவர், டங்கன் என்பதை மறுக்க முடியாது.

சிக்னலில் காத்திருக்கும் தவிப்பான நேரம்

 

 

போக்குவரத்து சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும் போது ஏற்படும் எரிச்சல் சொல்லிமாளாது. சில நேரங்களில் நிமிடக்கணக்கில் நேரம் ஓடிக்கொண்டே இருக்கும். யார் இந்த நேரத்தை ‘செட்’ செய்தது என்று நொந்து கொள்ள வைக்கும். இந்த நேர நிர்ணயத்திற்குப் பின்னால் ஒரு ‘சயின்ஸ்’ இருக்கிறது.

பெருநகரங்களில் போக்குவரத்தை கட்டுப்படுத்துவது மிகப் பெரிய சவால். பல இடங்களில் சிக்னல்கள், ஆங்காங்கே போலீஸ் நின்றாலும், போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியதாகிவருகிறது.

குறிப்பாக டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா போன்ற நகரங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்குவோம்.என்று கணக்கிட்டு முன்னதாகவே புறப்பட வேண்டியுள்ளது.

1.bp.blogspot.com GvQgKDBiebQ VTB VlnKtNI AAAAAAAADwY tEXagfIu1wU s1600 Copy of CDT1 - 2026

 

பெருநகரங்களில் இயங்கும் சிக்னல்கள் அனைத்திலும் நேரம் குறிக்கப்பட்டிருக்கும். அந்த வழித்தடத்தில் ஒவ்வொரு திசையிலும் ஒரு குறிப்பிட்ட வினாடிகள் காத்திருக்க வேண்டியிருக்கும்.

காலை முதல் மாலை வரை எல்லா நேரத்திலும் அந்த சிக்னல்கள் ஒரே மாதிரி காத்திருக்கும் நேரத்தை காண்பிப்பதில்லை. நேரத்திற்கு ஏற்ப அங்கு காத்திருக்கும் நேரமும் மாறும்.

உதாரணமாக ஒரு முக்கிய சாலை சந்திப்பில் கிழக்கில் இருந்து மேற்காக செல்ல வாகனங்கள் ‘பீக் ஹவர்’ நேரங்களில் 180 வினாடிகள் காத்திருக்கிறது என்றால், பிற நேரங்களில் அது 150, 120, 80, 60 வினாடிகள் என மாறிக்கொண்டே இருக்கும்.

1.bp.blogspot.com VTpeWeK16Ng VTB bSz0MmI AAAAAAAADwg Czisgl9azFo s1600 traffic signal countdown - 2026

சரி, இந்த போக்குவரத்து சிக்னல்களுக்கு எப்படி நேரத்தை நிர்ணயிக்கிறார்கள்? அங்குதான், தண்ணீர் ஒப்பீடு வருகிறது. அந்த சிக்னலை ஒவ்வொரு வினாடியும் கடந்து செல்லும் வாகனங்களை வைத்து அதை தண்ணீருடன் ஒப்பிட்டு இந்த விநாடிகளை நிர்ணயிக்கிறார்கள்.

சாதாரணமாக, நீரோட்டம் தடையில்லாமல் செல்லும் போது அந்த இடத்தை அது வேகமாக ஓடி கடந்து விடும். இதில் நீர் தேங்கி நிற்பதில்லை. இதை தடையற்ற நீரோட்டக் காலம் என்கிறார்கள். இது நெரிசலின்றி போக்குவரத்து செல்லும் நேரத்தை குறிக்கும். இதனை ‘ரன்னிங் ஸ்டேடஸ்’ என்று குறிப்பிடுகிறார்கள். அந்த நேரங்களில் சிக்னல்களில் மிக குறைந்த வினாடிகளே காத்திருக்கும் நேரத்தை  நிர்ணயிக்கிறார்கள்.

அடுத்தது ‘ஸ்லோரன்னிங் ஸ்டேடஸ்’. போதுமான சரிவு இல்லாத இடத்தில் செல்லும் நீர் மிக மெதுவாக செல்லும். இதை போக்குவரத்தோடு ஒப்பிடும்போது நெரிசல் இருக்கும். ஆனால், தேங்காத நிலையில் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்று கொண்டிருக்கும். இது காலை 8 மணிக்கு முன்பும் மாலை 7 மணிக்கு பின்பும் உள்ள நிலை. இந்த நேரத்தில் ‘பீக் ஹவர்’ காலத்தை விட பாதியாக சிக்னல் நேரத்தை நிர்ணயம் செய்வார்கள்.

4.bp.blogspot.com kiGoc2f5bY8 VTB - 2026

அடுத்ததாக ‘ஸ்லோவாக்கிங் ஸ்டேடஸ்’. இது தேங்கி இருக்கும் நிலை. தண்ணீர் செல்லமுடியாமல் ஆங்காங்கே ஏற்பட்ட தடைகளால் தேங்கி நிற்பது. அதுபோன்று ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் பல பகுதிகளில் இருந்தும் வருவதால் போக்குவரத்து தேக்க நிலையை அடைவதை குறிக்கும்.

அந்த நேரத்தில் ஒவ்வொரு திசையிலும் இருந்து ஒரு வினாடிக்கு வரும் வாகன எண்ணிக்கையை கணக்கிட்டு அதன் அடிப்படையில் நேரம் நிர்ணயிக்கப்படுகிறது. இதுதான் ‘பீக் ஹவர்’ எனப்படும் காலை மாலை நேர பகுதி. இந்த நேரத்தில் மிக அதிக வினாடிகள் சிக்னலில் காத்திருக்க வேண்டி வரும்.

எனவே, சிக்னலில் டிஜிட்டல் மீட்டர் காட்டுவது ஒரு தனி மனிதன் நிர்ணயிக்கும் நேரம் அல்ல. தண்ணீரின் ஓட்டத்துடன் வாகனங்கள் ஓட்டத்தை ஒப்பிட்டு பல ஆய்வுகளை நடத்தித்தான் காத்திருக்கும் நேரத்தை நிர்ணயிக்கிறார்கள்.

இனி சிக்னலில் காத்திருக்கும் போது, “இவர்கள் இஷ்டத்துக்கு நேரத்தை வைத்துவிடுகிறார்கள்” என புலம்ப மாட்டீர்கள்தானே.!

மூவாயிரம் ஆண்டுகளாக தொடரும் பெண்ணுறுப்பு சிதைவு

 

 
அந்த வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. உறவினர்கள் வந்து கொண்டிருந்தார்கள். ஐந்து வயது சிறுமி நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல் விளையாடிக் கொண்டிருந்தாள். இன்று அவளுக்கு ‘புனித சடங்கு’. இந்த சடங்கு அங்கு வாழும் 98% பெண்களுக்கு செய்யப்படுள்ளது. இது ஒரு கொடூரமான சடங்கு.

கேட்கவே மனம் பதைபதைக்கும் கொடூரம்! உலகம் எப்படி மூடநம்பிக்கையில் திளைத்திருக்கிறது என்பதற்கான நிகழ்கால உதாரணம்! இந்த வன்கொடுமை மூவாயிரம் வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

பிரமிடுகளில் புதைந்திருந்த மம்மிகளில் கூட இந்த அடையாளம் காணப்படுகிறது. அதுதான் இந்த சடங்கு 3,000 ஆண்டுகள் பழமை  மிக்கது என்று உலகுக்கு காட்டுகிறது.

தற்போதும் கூட 28 ஆப்பிரிக்கா  நாடுகளில் இந்த பழக்கம் தலைமுறை தலைமுறையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எகிப்து, எத்தியோப்பியா, சோமாலியா, சூடான் போன்ற நாடுகளில் 98% பெண்களுக்கு இந்த சடங்கு பெருமையோடு நடத்தப் பட்டிருக்கிறது.

இங்கு பெண்ணாகப் பிறந்த எல்லோருக்குமே கட்டாயமாக இதை செய்கிறார்கள். அப்படி செய்யாத பெண்கள் தீட்டு கழியாத புனிதமற்ற பெண்களாக கருதி வெறுத்து ஒதுக்குகிறார்கள். அந்த சடங்கின் பெயர் ‘பெண் சுன்னத்’. உலக சுகாதார மையம் இதை‘பெண்ணுறுப்பு சிதைவு’ என்கிறது.

அந்த நாடுகளில் எல்லாம் இந்தக் கொடுமை போற்றுதலுக்குரிய புனிதமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாடுகளில் வாழும் 13 கோடி பெண்களின் பெண்ணுறுப்பு சிதைக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் 6,000 பெண்களுக்கு இது  நடத்தப்படுகிறது.

எதனால் இப்படி..?

அவர்கள் புனிதமாக கருதும் கலாச்சார விதி, ‘பெண்கள் சைத்தானின் வடிவங்கள். அவர்களைப் பார்த்தால் பாலுணர்வு மட்டுமே தோன்றும். அவர்கள் பாலுணர்வு மிக்கவர்கள். ஆகவே அவர்களின் பாலுணர்வை சிதைப்பதன் மூலம் அவர்கள் ஒழுக்கத்தோடு வாழ்ந்து கணவனுக்கு யோக்கியமாய் இருப்பார்கள்.’ என்கிறது.

மேலும்  யோனி வெட்டும் முறையும் அதில் கூறப்படுகிறது. இதனாலே இது பெண்களின் மறுக்க முடியாதா சம்பிரதாயமாக முக்கியத்துவம் பெறுகிறது.

3.bp.blogspot.com iR9EoNs6kJo VTFzDz2ZF1I AAAAAAAADxg 6DxkHWrrnyU s1600 Female genital mutilation - 2026

பெண்களின் 4 வயது முதல் 10 வயதுக்குள் இதை செய்து விடுகிறார்கள். இதை செய்த பின் பெண்ணின் செக்ஸ் ஆர்வம் முற்றிலுமாக அழிந்துவிடும். மிக சொற்பமாக மனதளவில் மட்டுமே பாலியல் எண்ணம் தோன்றும்.

இயல்பாக பெண்களுக்கு பெண்ணுறுப்பில் ஏற்படக்கூடிய கிளர்ச்சியும், எழுச்சியும் இந்த சடங்குக்குப் பிறகு ஏற்படுவதில்லை. இதனால் இந்தப் பெண்கள் தவறான வழியில் போகமாட்டார்கள். வேறு ஆண்களுடன் தொடர்பு கொள்ள மாட்டார்கள். செக்ஸ் உணர்வு இல்லாததால் காலம் முழுக்க கற்போடு இருப்பார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையும் ஆணாதிக்கம் திணித்த பெண் அடிமைத்தனமும் இதன் பின்னே இருக்கிறது.

 

சரி, அப்படி என்னதான் நடக்கிறது இந்த சடங்கில்…???

இதை ஆங்கிலத்தில் ‘பீமேல் ஜெனிடல் மியுட்டிலேஷன்’ என்பார்கள். தமிழில் பெண்ணுறுப்பு சிதைவு. பெண்ணுறுப்பில் ‘க்ளிட்டோரியஸ்’ என்ற பகுதிதான் உணர்ச்சி மிகுந்தது. ஆணுக்கு உடலில் எந்த இடத்தில் ஆணுறுப்பு இருக்குமோ, அதே இடத்தில் பெண்ணுக்கு இருக்கும் ஆணுறுப்பின் எச்சம்தான் ‘க்ளிட்டோரியஸ்’.

 

ஆணுறுப்பில் எந்தளவுக்கு உணர்ச்சி இருக்குமோ அதே அளவு உணர்ச்சி சிறியதாக மொட்டுப் போல் இருக்கும் க்ளிட்டோரியசிலும் அப்படியே இருக்கும். உணர்வு ததும்பும் இந்த பாகத்தை வெட்டி எடுப்பதுதான், பெண்ணுறுப்பு சிதைவின் முதல் பகுதி.

4.bp.blogspot.com JfIUIEBQ2sI VTFzDuiex2I AAAAAAAADxc 4TQ UKi10 M s1600 EndFGM campaign video 017 - 2026

இந்த வெட்டும் வேலையை செய்வது டாக்டர்களோ அறுவை சிகிச்சை நிபுணர்களோ இல்லை. வயது முதிர்ந்த கிழவியோ அல்லது பெண்ணின் தாயோ தான். எந்த மயக்க மருந்தும் கொடுக்காமல் கதற கதற ரண வேதனையோடு அறுத்தெரிவதுதான் முதல் நிலை. மருத்துவத்தில் இதற்கு ‘க்ளிட்டோரிடேக்டமி’ என்று பெயர்.

சடங்கின் இரண்டாம் நிலை, யோனியின் பக்கவாட்டில் இருக்கும் உதடுகளை வெட்டி எடுப்பது. இந்தப் பகுதிதான் உறவின்போது பெண்ணுக்கு இன்பத்தை அதிகப்படுத்துவது. அதையும் பிளேடால் அறுத்து எடுத்துவிடுவார்கள். இதனை ‘லேபியாபிளாஸ்டி’ என்று மருத்துவம் சொல்கிறது.

 

அதன்பின் மூன்றாம் நிலை, பெண்ணுறுப்பின் நுழைவு வாசலை ஊசி நூல் கொண்டு தைத்து மூடிவிடுவது. சிறுநீர், மாதவிலக்கு திரவம் வெளியேற சின்னதாக இரண்டு துளை மட்டும் ஏற்படுத்தி விடுவார்கள். இதற்கு ‘வெஜைனாபிளாஸ்டி’ என்ற மருத்துவப் பெயரும் உண்டு.

 இதை செய்வதற்கு வீட்டில் உள்ள கத்தி, பிளேடு, கண்ணாடி துண்டு, கத்திரி, சாதாரண ஊசி நூலையே பயன்படுத்துகிறார்கள்.

4.bp.blogspot.com - 2026

மூன்று நிலையும் முடிந்த பின்னே பெண்ணின் தாய் உறவினர்களிடம் வந்து ‘என் மகள் பெண்ணாக மலர்ந்துவிட்டாள்’ என்று மகிழ்ச்சியோடு சொல்வார். உடனே மதுவோடு விருந்து டாம்பீகமாக நடக்கும். உள்ளே வீட்டின் பின்புறத்தில் ஒரு மூலையில் இரண்டு காலையும் சேர்த்துக் கட்டிய நிலையில் தாங்கமுடியாத வேதனையோடு பெண்ணாக மலர்ந்த சிறுமி கதறி அழுது கொண்டிருப்பாள். இனி அந்தப் பெண் உணர்ச்சியற்ற ஜடம்.

1.bp.blogspot.com tuJImJWc1b0 VTFym9qaDaI AAAAAAAADw4 2DocK2l5CDk s1600 3 types of fgm - 2026

காயங்கள் ஆறுவதற்காக 40 நாட்கள் கால்களை சேர்த்தே கட்டிப்போட்டு விடுவார்கள். கொடுமைகள் நிறைந்த இந்த சடங்கு உருவாக்கும் வலி, வேதனை, அதிர்ச்சி, பலவிதமான உடல் சார்ந்த நோய்களை பெண்ணுக்கு கொண்டு வருகிறது. லட்சக்கணக்கான பெண்கள் இதற்கு பின் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள்.

1.bp.blogspot.com FnGq69GyKIM VTFzncHk1mI AAAAAAAADyQ AvuDPS2vDsY s1600 somaliconstitution - 2026

இவ்வளவு பாதிப்புகள் இருந்தும் இதை பெண்கள் தொடர்ந்து செய்து கொள்வதற்கு காரணம் அசைக்க முடியாத மத மற்றும் மூட நம்பிக்கைதான். இந்த சடங்கு பெண்ணுக்குரிய தீட்டை மறைத்துவிடும். உடலில் உள்ள துர்நாற்றத்தை நீக்கிவிடும். முகம் அழகு பெறும், பெண்மை அதிகரிக்கும் என்று ஏகப்பட்ட நம்பிக்கைகள் போதிக்கப்படுகின்றன.

பெண்ணுக்கு திருமணமானவுடன் கணவன்தான் பெண்ணுறுப்பின் தையலைப் பிரிப்பான். அவள் இன்னும் கன்னிதான் என்பதற்கான சாட்சி அந்த தையல்தான்.

பெண்ணுறுப்பின் வாசலை குறுக்கி தையல் போடுவது உடலுறவின் போதும் குழந்தை பிறப்பின் போதும் தாங்க முடியாத வலியையும் சிக்கலையும் உருவாக்குகிறது. இதனால் பிரசவத்தின் போது குழந்தை இறப்பதோ தாய் இறந்து போவதோ அதிகமாக நடக்கிறது. எல்லாவற்றுக்கும் காரணம் முட்டாள்தனமான சடங்குதான் என்று உலக சுகாதார மையம் கூறுகிறது.

எகிப்து நாட்டில் ஒரு 12 வயது சிறுமிக்கு இந்த சடங்கு செய்யும் போது வலி தாங்க முடியாமலும் அதிக உதிரம் வெளியேறியதாலும் இறந்துவிட்டாள். அது அங்கு பெரிய போராட்டமாக வெடித்தது. அதை தொடர்ந்து 2007-ம் ஆண்டு இந்த சடங்கை எகிப்து அரசு தடை செய்தது. ஆனாலும் மற்ற நாடுகளில் இந்த கொடூரம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

2.bp.blogspot.com fshqh IDXYk VTFy3bJU3BI AAAAAAAADxM OVhS CJVmAw s1600 Campaign road sign against female genital mutilation %28cropped%29 2 - 2026

சிறு வயதில் இந்த சடங்கை செய்து கொண்டு பின்னாளில் மிகப் பெரும் மாடலாக வலம் வந்த வாரிஸ் டேரி என்ற சோமாலியப் பெண் இதை ‘தொடைகளுக்கு நடுவே ஒளிந்திருக்கும் நரகம்’ என்கிறார்.

சிறுவயதில் அவருக்கு நடந்த சடங்கை இப்படி சொல்கிறார்,

“நான் கீழ குனிந்து என் கால்களுக்கு நடுவில் பார்த்தேன். பழைய கைப்பை ஒன்றை வைத்துக்கொண்டு அந்த மருத்துவச்சி உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவள் கண்ணில் அப்படியொரு பேய்த்தனம்.

பைக்குள், தன் விரல்களைவிட்டு அரக்கப் பரக்க எதையோ தேடினாள். இறுதியாக ஒரு ரேசர் பிளேடு வந்தது. ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்பது மட்டும் புரிந்தது.

பிளேடின் ஓரங்கள் காய்ந்துபோய், ரத்தக்கறை படிந்திருந்தன.

‘த்துப்..’

பிளேடின் மீது எச்சில் துப்பினாள் மருத்துவச்சி. அதை, தன் துணியில் துடைத்தாள். அவள் துடைத்துக்கொண்டிருக்கும்போதே, அம்மா தன் கைகளை எடுத்து என் கண்களை மூடினாள்.

நான், உலகமே இருண்டதுபோல் உணர்ந்தேன்.

அடுத்த நொடி…

‘பர்ர்க்’ என்று ஒரு சத்தம்.

படக்கூடாத இடத்தில் பிளேடு பட்டு, என் சதை கிழிவது நன்றாகத் தெரிந்தது. எந்த காலத்து பிளேடோ? துருபிடித்து, பற்களோடு இருந்திருக்கவேண்டும். நரநரவென்று மேற்கொண்டு முன்னும் பின்னுமாக இழுத்தாள் அந்தக் கிழவி.

1.bp.blogspot.com 0PiXh5ennBQ VTIk2YBr5yI AAAAAAAADzE L 4F1yQyvvI s1600 a mutilacao genital feminina em preto e branco 81944 - 2026


‘அய்யோ…!’ -நரக வேதனை.

அசையக்கூடாது. அசைந்தால், வலி இன்னும் கொடூரமாகும். பற்களைக் கடித்துக்கொண்டு படுத்துக்கிடந்தேன். என் தொடைகள் நடுங்கின.

‘கடவுளே! இந்த நரகத்திலிருந்து என்னைக் காப்பாற்ற மாட்டாயா?’

ஒரு வழியாக அம்மா என் கண்களை விடுவித்தாள். வெளிச்சத்துக்கு பழகியதும் பார்க்கிறேன். அந்த கிழவியின் அருகில் அக்கேசியா மரத்தின் முட்கள். குவியல் குவியலாகக் கிடந்தன. அவள் கைகள் முழுக்க ரத்தம். அக்கேசியா முட்களைத்தான் ஒவ்வொன்றாக என் பிறப்புறுப்பில் குத்தியிருக்கிறாள். பிறகு கடினமாக வெள்ளை நூல் கொண்டு உறுப்பை தைத்திருக்கிறாள்.

சிறுநீர் கழிக்க ஒரே ஒரு துவாரம் வைத்துவிட்டு மீதி உறுப்பு மூடப்பட்டுவிட்டது. என் கன்னித் தன்மையும், ஒரு இனத்தில் கவுரவமும் காப்பாற்றப்பட்டுவிட்டது. இதற்கு, நான் செத்துப்போய் இருக்கலாம்.

தையல் முடிந்ததும் கிழவி போய்விட்டாள். நான் எழுந்திருக்க முயன்றேன். என்னால் அசையக்கூட முடியவில்லை. என் இரண்டு கால்களும் துணிப்பட்டையால சுற்றப்பட்டிருந்தன. அம்மா என்னை நகர்த்தியதும் பாறையைத் திரும்பிப் பார்த்தேன்.

ஒரு கோழியை வெட்டி, மீதியை விட்டிருந்தால் எப்படி இருக்குமோ அப்படி ரத்தச் சகதியோடு இருந்தது பாறை. என் பிறப்புறுப்பின் உணர்ச்சிமிக்க பாகங்கள் வெயிலில் காய்ந்துகொண்டிருந்தன.”

2.bp.blogspot.com xIqjQqf7Fk VTFztJ1GB2I AAAAAAAADyY 38Lscz72Msc s1600 waris dirie - 2026
வாரிஸ் டேரி

என்ன கொடூரம்..! அதோடு நிறுத்தவில்லை வாரிஸ், இந்த சடங்கால் தனது செக்ஸ் உணர்வு முற்றிலும் காணமல் போனதை இப்படி சொல்கிறார்.

“செக்ஸ் என்றால் என்ன? இன்றுவரை எனக்குத் தெரியாது. என் வாழ்நாளில் ஒருபோதும் நான் செக்ஸ் இன்பத்தை அனுபவித்ததில்லை. அனுபவிக்கவும் முடியாது. நாங்கள் ஆண்களுக்காக, அவர்களின் தேவைக்காக மட்டுமே படைக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு கன்னிப் பெண் வேண்டும் என்பதற்காக ஐந்து வயதுக்குள்ளாகவே எங்கள் உறுப்பை அறுத்து, க்ளிட்டோரியஸை வெட்டி எறிந்துவிடுகிறார்கள். மீண்டும் எப்போது அவர்களுக்குத் தேவையோ, அதாவது முதலிரவுக்கு முன்பு வெட்டித் திறந்துவிடுகிறார்கள்.

1.bp.blogspot.com IqBleLQ2IlU VTFzifBNooI AAAAAAAADyI qdJM6N NRAE s1600 news graphics 2008 658625a - 2026
வாரிஸ் டேரி

3,000 ஆண்டுகளாக வெட்டவெளியில், எந்தவித மருத்தவ உபகரணங்களும் இன்றி, மயக்கமருந்துகூட இல்லாமல் இந்த அறுவை நடக்கிறது. சிலருக்கு கத்தி, கத்தரிக்கோல்கூட கிடைக்காது. கூர்மையான பாறைக் கற்கள்தான்.

நான் பிழைத்துவிட்டேன். ஆனால், லட்சக் கணக்கான என் சகோதரிகள்? அறுவையின்போது சிலர், அறுவைக்குப் பின் நோய்த் தொற்று ஏற்பட்டு சிலர், அப்படியே உயிர் பிழைத்தாலும் குழந்தைப் பேற்றின்போது சிலர் என அடுக்கடுக்காய் செத்துப் போகிறார்களே! அவர்களை யார் காப்பாற்றுவது?

மத அடிப்படைவாதிகளால், என் உயிருக்கு ஆபத்து என்று நண்பர்கள் அஞ்சுகிறார்கள். இருக்கட்டும் அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. பெண்களின் பிறப்புறுப்பை சிதைக்கவேண்டும் என்று குரானில் எங்காவது கூறப்பட்டிருக்கிறதா? சொல்லுங்கள்!’’ என்று நடைபெறும் அயோக்கியத்தனத்தை தட்டிக் கேட்கிறார்.

பெண்ணுறுப்பு சிதைவுக்கு எதிரான இயக்கத்துக்கு இவரைத்தான் தூதுவராக உலக சுகாதார அமைப்பு நியமித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 6-ம் நாளை உலக பெண்ணுறுப்பு சிதைவு எதிர்ப்பு நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

2.bp.blogspot.com - 2026
வாரிஸ் டேரி வாழ்க்கையை சொல்லும் புத்தகம்

மனிதன் காட்டுமிராண்டியாக வாழ்ந்த காலம் வரை எந்த பிரச்சனையும் இல்லை. அவனே ஓரிடத்தில் நிலையாக தங்கி சொத்து சுகங்களை சேர்த்தப் பின் தனது வாரிசில் கலப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவன் பெண்ணை படுத்திய பாடு இருக்கிறதே..

உலகம் உள்ள வரை ஆணிணத்துக்கு பெண்ணிடம் இருந்து மன்னிப்பு கிடைக்காது. இத்தனை பாவம் செய்த ஆண் என்ன பரிகாரம் செய்து அந்த பாவங்களை கழுவப் போகிறானோ தெரியவில்லை.

இதை எதிர்க்கும் அளவுக்கு அங்குள்ள பெண்களுக்கு கல்வியறிவோ பொருளாதார சுதந்திரமோ இல்லை. அதனால் இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

 

இன்னமும் இந்த சடங்கு செய்த பெண்ணைத்தான் திருமணம் செய்வேன் என்று சொல்லும் அந்த நாட்டு ஆண்களை என்ன செய்வது..??!!

ஐ.நா. சபை இதை மனித உரிமை மீறல் என்று சொல்லியும் குறைந்த பாடில்லை..

 
 
4.bp.blogspot.com - 20262.bp.blogspot.com hOZszdoAieY VTHCHHU5B3I AAAAAAAADy4 QVuNKNqmk k s1600 female genital mutilation6 - 2026

மீன்பிடித்து விளையாட ஒரு சுற்றுலா

 

 
 
கலிபோரே
தூண்டிற்காரனின் சொர்க்கம்
 
வெயில் சுட்டேரிக்கிறதா… குளுமையான இடம் தேடி போக மனம் துடிதுடிக்கிறதா… ஊட்டியும் கொடைக்கானாலும் போரடிக்கிறதா.. அப்படியென்றால் உங்களுக்கு ஏற்ற இடம்‘கலிபோரே’ தான்.
 
கர்நாடகாவின் தலைநகர் பெங்களூரில் இருந்து 95 கி.மீ. தூரம் பயணித்தால் கலிபோரே வந்துவிடுகிறது.
 
அடர்ந்த காடு, அச்சத்தை தோற்றுவிக்கும் அமைதி, இடைவிடாமல் எங்கோ ரீங்காரமிடும் தேனீக்களின் ஓசை, சலசலத்து ஓடும் காவேரி ஆறு, சூரிய ஒளிக்கு தடைபோட்டு நிற்கும் உயர்ந்த அர்ஜுனா மரங்கள், கால்களுக்கு வலிமை  சேர்க்கும் கரடு முரடான பாதைகள் இவை போதாதா சொர்க்கத்தை மண்ணுக்கு கொண்டு வர… போதும்தான்.!
 
1.bp.blogspot.com 3 dn GzZYvg VTdRezlfljI AAAAAAAAD0M 3KTIKmLbX2g s1600 The Valnoor Fishing Camp1 - 2026
‘தூண்டிற்காரனின் சொர்க்கம்’
அதனால்தான் இந்த இடத்திற்கு ‘தூண்டிற்காரனின் சொர்க்கம்’ என்று காரணப் பெயரும் வைத்துவிட்டார்கள் சுற்றுலாவாசிகள்.
 
1980-ல் பொழுதுபோகாதா இரண்டு வெள்ளையர்கள் இங்கு வந்து மீன்பிடித்து பொழுதுபோக்கினார்கள். அவர்கள் பெயர் மார்டின் கிளார்க், ராபார்ட் ஹிவிட். ஒருநாள் அவர்கள் தூண்டிலில் 41.76 கிலோ எடையும், 1.70 மீட்டர் நீளமும், ஒரு மீட்டர் சுற்றளவும் கொண்ட மகாசீர் மீன் கிடைத்தது. தினமும் இப்படி மீன்கள் தூண்டிலில் சிக்கின. ஒரு மாதத்துக்குள் 40 மீன்கள்..!  இந்த இடம் அடர்ந்த வனம் என்ற நிலை மாறி  மீன்பிடி முகாமாக மறுவடிவம் கொள்ள இததான் காரணம்.
 
2.bp.blogspot.com c HY749ukYs VTdRyaJDdlI AAAAAAAAD0U 4vnvdQXOz10 s1600 India 2011 053 - 2026
மகாசீர் மீன்
இங்கு இப்படி மீன்பிடித்து இயற்கையோடு இணைந்து விளையாடும் சுகமே தனிதான். மீன்களை மனிதன் பிடிப்பதே உணவுக்காகத்தான். ஆனால், கலிபோரேவின் கதையே வேறு. இங்கு மீன்கள் உணவுக்காக பிடிக்கப்படுவதில்லை. மகிழ்ச்சிக்காகவும் விளையாட்டுக்காகவும் பிடிக்கப்படுகிறது. இப்படி பிடித்த மீன்களை மீண்டும் ஆற்றிலே விட்டுவிடுவார்கள். இதுதான் மீன்பிடித்து விளையாடும் சுற்றுலா.
 
மகாராஜாக்கள், கவர்னர்கள், மந்திரிகள் வேட்டையாடி திரிந்த இந்த காடுகளில் இன்று எதையும் வேட்டையாடக் கூடாது என்று சட்டம் தடைப் போட்டு நிற்பதால் மீன் பிடித்து பின் விடும் விளையாட்டு நடந்து கொண்டிருக்கிறது.
 
இந்த இடத்துக்கருகில் பீமேஸ்வரி, தொட்டம்கலி, காவேரி மீன்பிடி முகாம் என்று மேலும் மூன்று மீன்பிடித்து விளையாடும் மையங்கள் இருக்கிறன்றன. ஒவ்வொன்றும் காட்டுக்குள்ளே நதியின் கரையோரத்திலே நடந்து போக வழிகள் உண்டு. அதுவே ஒரு நல்ல ட்ரெக்கிங் அனுபவத்தை தரும். 
 
2.bp.blogspot.com gzDX2Ru07UQ VTdSGckOFWI AAAAAAAAD0c 0ncNKIcn9vE s1600 hqdefault - 2026
 
இங்கு மீன்களைப் பிடிப்பதற்காக ‘ஆங்லிங்’ என்ற தூண்டிலை வாடகைக்கு விடுகிறார்கள். இந்த தூண்டிலின் விஷேசம் என்னவென்றால், தூண்டிலில் மீன்கள் மாட்டிக்கொன்டப் பின் சிறிது நேரத்தில் தானகவே விடுபட்டுவிடும். ஒவ்வொருவரும் எத்தனை மீன்களை பிடித்தார்கள் என்று  கணக்கு வைத்து எண்ணி விளையாடலாம். 
 
இங்கு மகாசீர் என்ற பெரிய மீன்களை தவிர கெளுத்தி, கெண்டை போன்ற பல வகை மீன்களும் கிடைக்கின்றன. பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாமல் தொழில் முறையில் மீன்களை பிடித்து விற்பனை செய்யும் மீனவர்களும் இங்குண்டு. 
 
1.bp.blogspot.com cn8h7KPPUto VTdSbTwaf3I AAAAAAAAD0k e MQde8M9UM s1600 3000179835073ed561ce9d - 2026
மலபார் ராட்சஸ அணில்
காவிரிக் கரையோரத்தில் அமைந்த இந்த வனப்பகுதியில் காட்டுப்பன்றி, சாம்பார் மான், புள்ளி மான், ராட்சஸ அணில், சிறுத்தை, யானை, மலபார் ராட்சஸ அணில், குள்ள நரி, முதலைகள், ஆமைகள், பச்சோந்திகள், நாகப்பாம்புகள், மலைப்பாம்புகள் போன்ற அனைத்துவகையான உயிரினங்களையும் பார்க்கலாம். 
 
3.bp.blogspot.com - 2026
 
இதுபோக 230 வகைப் பறவைகளையும், பலவித மூலிகைச் செடிகளையும் இங்கு சாதரணமாக தரிசிக்கலாம். அடர்ந்த வனப் பகுதி என்பதால் இயற்கையின் அழகு முழுவதும் இங்கு கொட்டி கிடக்கிறது. மீன் பிடிப்பதற்கென்றே குடில்கள் அமைத்திருக்கிறார்கள். இந்த குடில்களுக்கு போகும் பாதைகள் தான் கரடு முரடாக இருக்குமே தவிர குடில்கள் பட்ஜெட் ஹோட்டல்களை ஞாபகப்படுத்தும் அளவிற்கு தரமாகவே இருக்கின்றன.
 
2.bp.blogspot.com Z7h2RJqQ Fc VTdS9gOVbnI AAAAAAAAD00 ZTRUcY2ESr8 s1600 bheemeshwari - 2026
 
இங்கு பரிசலில் போய்வருவதும் படகில் பயணம் செய்வதும் மறக்கமுடியாத அனுபவத்தை தரும். ‘தில்’ இருப்பவர்கள் அகன்று ஓடும் காவேரி ஆற்றை நீந்திக் கடந்து அக்கரையில் இருந்து ‘டாட்டா’ காட்டலாம். இன்னும் கொஞ்சம் ‘தில்’ இருந்தால் மலை முகட்டில் தைரியமாக பைக் ஓட்டலாம், இல்லையென்றால் காலார நடக்கலாம், பாறையில் கயிற்றைப் பிடித்து ஏறலாம். 
 
1.bp.blogspot.com tr7oHiB1nJc VTdTN0W9zrI AAAAAAAAD08 pOvj gh v3Q s1600 Coorg 1189 - 2026
 
இப்படி ஏகப்பட்ட  சாகசங்களும் இங்கு குவிந்திருக்கின்றன. இயற்கை அழகும், பறவைகளின் ஓசையும் வாழ்நாள் முழுவதும் நினைவை விட்டு நீங்காத இடம் இது. மின்சாரம் இல்லாத காடு என்பதால் குடில்களுக்குள் லாந்தர் விளக்குதான்.  மொபைல் போன்ற நவீன சாதனங்கள் எதுவும் இங்கு வேலை செய்யாததால் இயற்கையை முழுமையாக கொண்டாடலாம்.
 
இதெல்லாம் சரி, ஊட்டி, கொடைக்காணல் போல் குளிருமா என்று கேட்கலாம். குளிருக்கும் குளுமைக்கும் வித்தியாசம் இருக்கிறது. குளிர் கொஞ்சம் கொடுமையானது. குளுமை எப்போதும் இனிமையானது. கலிபோரேவில் நிலவுவது குளுமை. அதுவும் ரசிக்கும்படியான குளுமை. 
 
1.bp.blogspot.com mR8yDD1XnvU VTdTc1VhhUI AAAAAAAAD1E UmjZM z eIY s1600 galiborefishingandnaturecampgaliboreinnerview - 2026
ஜங்கிள் லாட்ஜஸ் ரிசார்ட்ஸ்
உடனே பெட்டிப் படுக்கையோடு கிளம்புகிறவர்களுக்கு ஒரு டிப்ஸ். முதலில் ‘ஜங்கிள் லாட்ஜஸ் ரிசார்ட்ஸ்’ (080-40554055) என்ற குடில் அமைப்பளர்களுக்கு ஒரு போன் போடுங்கள். முன்பதிவு செய்து கொள்ளுங்கள். இப்போதைய நிலவரப்படி ஒருவர் ஒரு இரவு தங்க கட்டணம் உணவுடன் சேர்த்து ரூ.4,400/- வசூலிக்கிறார்கள். 
 
மீன் பிடிப்பதற்கான ‘ஆங்லிங்’ தூண்டிலுக்கான ஒரு நாள் வாடகை ரூ.2,000/- 
 
சீசன் காலம்: செப்டம்பர் – ஏப்ரல்.
படங்கள் : கூகுல் இமேஜ் 

‘கிளாப்’ அடித்தலில் இத்தனை விஷயமா..!

 

 
 
2.bp.blogspot.com vH8SOEUgfFM VTm3E m3tOI AAAAAAAAD2A yTXAnaoDemk s1600 mass.chennaiclips - 2026
சினிமா துறையில் நீண்ட காலமாய் இருக்கும் நண்பர் ஒருவரை சந்தித்தேன். பரஸ்பர நல விசாரிப்புக்கு பிறகு பேச்சு சினிமாவை நோக்கி திரும்பியது. நடிகர் நடிகைளில் தொடங்கி தொழில்நுட்பத்தில் வந்து முடிந்தது.
 
நமக்கெல்லாம் சினிமா ஷூட்டிங் என்றாலே நடிகர்கள் மற்றும் கேமரா தான் நினைவுக்கு வரும். அதற்கு அடுத்தபடியாக நமது நினைவுக்கு வருவது ‘கிளாப்’ அடிப்பதுதான். இது எதற்காக என்ற கேள்வி அடிக்கடி தோன்றும். அதையே அவரிடம் கேட்டேன். அதில் ஸீன் மற்றும் டேக் நம்பர் இருக்கும் என்பது மட்டும்தான் எனக்கு தெரியும். ஆனால், இந்த கிளாப் போர்ட் இல்லாமல் ஒரு சினிமா படத்தை உருவாக்கவே முடியாது என்று நண்பர் கூறினார். இதனால் தான் பட பூஜையின் போது கிளாப் போர்ட், ஸ்கிரிப்ட் வைத்து பூஜை போடுகிறார்கள் என்றார்.
 
3.bp.blogspot.com MLJSac 1a0E VTm2ibO7prI AAAAAAAAD1w uKoQwVqxb0Q s1600 IMG 9472 e1426444180785 - 2026
 
பொதுவாக சினிமா நாம் திரையில் பார்ப்பது போல் வரிசையாக கிரமமாக எடுக்கப்படுவதில்லை. மாறி மாறி காட்சிகளை எடுப்பார்கள். இவற்றையெல்லாம் எடிட்டிங்கில் ஒன்றாக தொடுப்பார்கள். இதற்கு உதவுவதுதான் ‘கிளாப் போர்ட்’ என்றார்.
 
மேலும் அவர், “இப்போது டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் காட்சியும் ஒலியும் ஒரே இடத்தில் பதிவாகிறது. இந்த வசதியெல்லாம் ஆரம்பக் கால சினிமாவில் இல்லை. ஷூட்டிங்கில் கேமரா மூலம் பிலிமில் காட்சி பதிவாகும். வசனம் என்பது கேமராவுக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத ஒலிப்பதிவு நாடாவில் பதிவாகும். இந்த இரண்டையும் ஒன்றாக இணைக்கும் மந்திரக் கோல் இந்த கிளாப் போர்ட்.
 
 
1.bp.blogspot.com tuL KjaGx2A VTm09NaJEpI AAAAAAAAD1k RIfPHOjvsqc s1600 Balakrishna Kalki Movie Launch Stills%2B%284%29 - 2026
 
ஒரு கிளாப் போர்டில் பல விஷயங்கள் குறிப்பிடப் பட்டிருக்கும். எடுக்கப் போகும் ஷாட், ஸீன் நம்பர், டேக் நம்பர், இன்டோர், அவுட்டோர் போன்ற எல்லா விவரங்களும் அதில் இருக்கும். இந்த விவரங்களை எல்லாம் சத்தமாக சொல்லித்தான் கிளாப் போர்டை ‘டொக்’ என்று அடிப்பார்கள்.  அந்த ‘டொக்’தான் பிலிம் காட்சிக்கும் ஒலிநாடா ஆடியோவுக்குமான இணைப்பு பாயிண்ட்.
 
ஷூட்டிங் முடிந்த பின்பு லேப்பில் பிலிமை பிரிண்ட் போட்டு முடிந்ததும், கிளாப் அடிக்கும் இடத்தையும், ஆடியோ டேப்பில் பதிந்திருக்கும் ‘டொக்’ சத்தத்தையும் சரியாக பொருத்தினால் வசனமும் வாயசைப்பும் கச்சிதமாக பொருந்திகொள்ளும். 
 
 
3.bp.blogspot.com - 2026
 
இந்த ‘கிளாப்’ அடித்தலை ‘சவுண்ட் கிளாப்’, ‘சைலண்ட் கிளாப்’, ‘எண்டு கிளாப்’ என்று மூன்று வகையாக பிரிக்கிறார்கள். பொதுவாக கிளாப் போர்டில் படப்பிடிப்பு நடக்கும் தேதி, காட்சியின் இரவு-பகல் அம்சம் குறித்த விவரம், வசனம் உள்ளதா இல்லையா என்ற விவரம், காட்சி எண், ஷாட் எண் மற்றும் டேக் எண் ஆகியவை இருக்கும். 
 
வசனம் இல்லாத காட்சி என்றால் கிளாப் அடிக்க மாட்டார்கள். ஏனென்றால், அந்தக் காட்சியில் ஒலிப்பதிவு கருவியே இருக்காது. பிறகு எதற்கு தேவையில்லாமல் ‘டொக்’ சத்தம். கேமரா ஓட ஆரம்பித்ததும் கிளாப் போர்டை மட்டும் கேமரா முன் சில நொடிகள் காண்பித்து எடுத்துக் கொள்வார்கள். அதில் அந்த காட்சியின் எண், ஷாட் எண் மற்றும் டேக் எண்  போன்ற விவரங்கள் இருக்கும். இதைத்தான் ‘சைலண்ட் கிளாப்’ என்கிறார்கள்.
 
‘சவுண்ட் கிளாப்’பில் படபிடிப்பை போலவே சத்தமும் முக்கியத்துவம் பெறுகிறது. கேமராவில் வெறும் காட்சிகளும் உருவமும் மட்டுமே பதிவாகும் வசனமோ சத்தமோ பதிவாகாது என்பதால் தனியாக ‘நாகரா’ என்ற ஒரு ஸ்பூல் டேப் ரிக்கார்டரில் ஒலிப்பதிவு செய்வார்கள். இந்த இரண்டையும் ஒன்றாக்குவதுதான் சவுண்டு கிளாப்பின் வேலை. கேமரா ஓடத்தொடங்கியதும் கிளாப் அடிக்கப் படுகிறது. அது படமாக பதிவாகிறது. அதே சமயம் கிளாப் அடிக்கும் சத்தம் நாகர டேப்பில் பதிவும் ஆகிறது. 
 
‘எண்டு கிளாப்’ என்பது லாங் ஷாட்டாக வரும் காட்சிகளிலும் சில கஷ்டமான காட்சிகளை படமாகும் போதும் இதை பயன்படுத்துகிறார்கள். இந்த மாதிரி காட்சிகளை படமாக்கும் போது சிலவற்றில் காட்சி தொடங்கும் நேரத்தில் கிளாப் அடிக்க முடியாது. இதனால் இத்தகைய காட்சிகளை முதலில் எடுத்து விடுவார்கள். 
 
ஷாட் முடிந்த பிறகும் கேமரா ஓடிக்கொண்டே இருக்கும். அப்போது பிரேமிற்குள் ஓடிச்சென்று கிளாப் போர்டை தலைகீழாக பிடித்துக் கொண்டு அடிப்பதுதான் எண்டு கிளாப். படத்தொகுப்பின் போது தலைகீழாக கிளாப் போர்ட் வந்தால் அதற்கு முன்புதான் காட்சி எடுக்கப் பட்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். 
2.bp.blogspot.com ttJvXtcIgQk VTm4WAnCOwI AAAAAAAAD2Q fQi8zzjqQkc s1600 Director s Alarm Clock 1pc Novelty LED Electronic calendar wall clock Movie Film font b Clapboard - 2026
 
தற்போது டிஜிட்டல் கிளாப் போர்ட், அக்ரிலிக் கிளாப் போர்ட், எல்.இ.டி. கிளாப் போர்ட் என்று கிளாப் போர்டுகள்  நவீன வடிவம்  பெற்றுள்ளது.” என்று முடித்தார் அவர். 
 
அம்மாடி, கிளாப் அடித்தலில் இத்தனை விஷயங்கள் இருக்கிறதா..!

ரசிக்க சில ரயில் நிலையங்கள்

 

 
1.bp.blogspot.com 8hvV 5ABdLg VTvaFA5eNpI AAAAAAAAD2k 5icir1b80u8 s1600 indi39117 - 2026

ரயிலில் பயணம் செய்வதே ஒரு அலாதியான அனுபவம். ரசனைமிக்க இந்த அனுபவம் ரயில் பயணத்தில் மட்டுமல்ல, அவை நின்று செல்லும் ரயில் நிலையங்களிலும் உண்டு. அதிலும் சில ரயில் நிலையங்கள் ரசிக்கத்தக்க கட்டடக்கலையில் மிளிர்கின்றன. பாரம்பரியம், பிரமாண்டம், நவீனம் என்ற மூன்று வகையிலும் முதன்மையாக விளங்கும் இந்த ரயில் நிலையங்கள் சுற்றுலாவிலும் சிறந்து விளங்குகின்றன.

 
பாரம்பரியம்
 
பாரம்பாரியத்தில் இந்தியாவை அடித்துக் கொள்ளமுடியாது. உலகில் பல நாடுகளை ஆங்கிலேயர்கள் அடிமைப்படுத்தி வைத்திருந்தாலும், இயற்கை வளம் நிறைந்த இந்தியாவிற்கு எல்லாமே விரைவாக கிடைத்தன. அப்படி கிடைத்தவற்றில் ரயில்வேயும் ஒன்று.
 
2.bp.blogspot.com 1xSPWAMp2uc VTvaXlN6SiI AAAAAAAAD2s FJG TVCF4g s1600 Chatrapati Shivaji Terminus - 2026
சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ்
அவர்கள் உருவாக்கிய இந்திய ரயில் நிலையம் ஒன்று யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னம் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. அதன் பெயர் ‘சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ்’. இது மும்பை ரயில் நிலையத்தின் பெயர். 1887-ல் கோத்திக் மற்றும் மொஹல் கட்டடக்கலையை இணைந்து உருவாக்கிய அழகின் உச்சம் இது. பெடரிக் வில்லியம் ஸ்டீபன் என்பவர்தான் இந்த பொக்கிஷத்தை வடிவமைத்தவர். 
 
4.bp.blogspot.com rw9cRjD4wdo VTvakhCTa5I AAAAAAAAD20 Re7FtYKcdgM s1600 7149029123 9d194fc923 - 2026
 
முதலில் விக்டோரியா டெர்மினல் என்று பிரிட்டிஷ் மகாராணியின் பெயரைத்தான் வைத்தார்கள். 1996 வரை அதே பெயர்தான் நீடித்தது. அதன்பின்தான் மராட்டிய மாமன்னர் சத்ரபதி சிவாஜியின் பெயரை இதற்கு வைத்தார்கள். 
 
3.bp.blogspot.com - 2026
 
இந்தியாவின் மிக பிஸியான ரயில் நிலையங்களில் இதுவும் ஒன்று. 18 நடைமேடைகளை கொண்ட நிலையம். மும்பைக்கு சுற்றுலா செல்பவர்கள் இந்த ரயில் நிலையத்தை ரசிக்காமல் திரும்புவதில்லை. 
 
 
 
பிரமாண்டம் 
 
 
3.bp.blogspot.com XPRHgUSftMM VTvdnMVsmJI AAAAAAAAD3Q XNt wvKdz1A s1600 article 0 0F1EBF1700000578 - 2026
‘கிராண்ட் சென்ட்ரல் டெர்மினஸ்’
இந்தியாவிற்கு சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் என்றால், அமெரிக்காவிற்கு ‘கிராண்ட் சென்ட்ரல் டெர்மினஸ்’ தான். நியூயார்க்கின் பெருமைமிகு அடையாளங்களுள் ஒன்று இந்த சுரங்க ரயில் நிலையம். அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து போகும் இடங்களில் இது ஆறாவது இடத்தில் இருக்கிறது.
 
2.bp.blogspot.com RIXhXyS9zcY VTvdYiImyII AAAAAAAAD3I iJCLczlOTnE s1600 20GRAND2 articleLarge v2 - 2026
 
வருடத்திற்கு 2.6 கோடி பயணிகள் இந்த ரயில் நிலையத்தின் மூலம் பயணிக்கிறார்கள். உலகத்திலேயே அதிகமான பிளாட்பாரங்கள் கொண்ட ரயில் நிலையமும் இதுதான். மொத்தம் 44 பிளாட்பாரங்கள். அமெரிக்க சுற்றுலா பட்டியலில் கிராண்ட் சென்ட்ரல் டெர்மினஸ் முதன்மையாக இருக்கிறது.

3.bp.blogspot.com hNe7xrW3o5s VTxu8Q5Z0HI AAAAAAAAD4A 9pCtzZ7 4vY s1600 depositphotos 30561855 Grand Central New York - 2026

 
 
நவீனம்
 
நவீனத்தின் உச்சம் என்று சொன்னால் அது பெல்ஜியம் நாட்டில் உள்ள ‘லீஜ்-கெலமைன்ஸ்’ரயில் நிலையம்தான். உலகில் உள்ள பெரும்பாலான ரயில் நிலையங்கள் விக்டோரியா காலத்திலும் எட்வர்ட் ஆட்சியிலும் கட்டப்பட்டவையாகவே இருக்கின்றன. 
 
1.bp.blogspot.com TfARWjt6Io8 VTvgNdUiwAI AAAAAAAAD3c H9xmeX2 GaA s1600 16357 l - 2026
‘லீஜ்-கெலமைன்ஸ்’ ரயில் நிலையம்
நவீன ரயில் நிலையங்கள் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்தால் நம் கண் முன் வந்து நிற்பது லீஜ்-கெலமைன்ஸ் தான். 2009-ல் திறக்கப்பட்ட இந்த நிலையம் அதற்குள் உலக சுற்றுலா பயணிகளின் செல்லமாக மாறி இருக்கிறது. 
 
1.bp.blogspot.com T7s8VaCHGLw VTvgdlbMq2I AAAAAAAAD3k yph96eFhf4M s1600 52fb4231e8e44eac79000122 video elegance in motion at calatrava s li ge guillemins railway station in belgium - 2026
 
ஸ்டீல், கண்ணாடி, வெள்ளை காங்கிரிட் கொண்டு அமைக்கப்பட்ட 105 அடி உயர எலிவேஷன், அனைவரையும் வசீகரித்து இழுக்கிறது. பெல்ஜியத்தின் நம்பர் ஒன் சுற்றுலா மையமாக இது திகழ்கிறது. 
 
3.bp.blogspot.com bcL6J4rxrto VTvgqTtKvTI AAAAAAAAD3s 5uxTCDG51DY s1600 The renovated railway sta 001 - 2026
ஸ்டீல் கண்ணாடி கூரை 
 
படங்கள்: கூகுள் இமேஜ்

சிக்கிம் – கஞ்சன் ஜங்கா

 

 

வைரச் சிகரம்

2.bp.blogspot.com MvPJ01YstNY VT8372nyAOI AAAAAAAAD4Y 36ByWc6Zezo s1600 472080210 c815b3c90f - 2026

உலகின் மூன்றாவது மிக உயர்ந்த சிகரமான கஞ்சன் ஜங்காவை வைரச் சிகரம் என்றுதான் அழைக்கிறார்கள். பனி மூடிய இந்த சிகரத்தில் பட்டுத் தெறிக்கும் சூரியக் கதிர்களால் ஏற்படும் ஜொலிப்பு வைரம் மின்னுவது போலவே இருக்கும் என்கிறார்கள். அந்த சிகரத்தை சிக்கிம் மாநிலத்திலிருந்து பார்க்கலாம். கஞ்சன் ஜங்கா சிகரத்தில் ஏறி சாகஸம் புரிபவர்களும் சிக்கிம் வழியாகத் தான் மேலே ஏற முடியும்.

2.bp.blogspot.com 0XTij09r9vM VT84Q5ISJWI AAAAAAAAD4g Bba HlrdVM0 s1600 kanjan junga - 2026

மலையேறுபவர்களுக்காக கோச்சாலா என்ற பகுதியை அரசு திறந்து விட்டிருக்கிறது. இதனால் இந்தியப் பகுதியில் இருந்து கஞ்சன் ஜங்கா சிகரம் ஏறுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக கூடியுள்ளது.

4.bp.blogspot.com VyGKJWd62 A VT84hTlLCHI AAAAAAAAD4o ai 9gUsvUs s1600 img5 - 2026

கஞ்சன் ஜங்காதான் உலகின் அழகான சிகரம் என்று பெயர் பெற்றது. காலையில் சூரியன் உதிக்கும் போது சிகரத்தின் உச்சியில் மட்டுமே சூரிய ஒளி படும்போது கீழே இருக்கம் இடங்கள் எல்லாம் மறைந்து விடும். சிகரம் அந்தரத்தில் தொங்குவது போல் காட்சியளிப்பது வாழ்நாளில் காணக்கிடைக்காத அற்புதக் காட்சி.

4.bp.blogspot.com DOrY07xwoG4 VT84tu1lb I AAAAAAAAD4w rhEwdStfE8w s1600 Kangchenjunga 4 - 2026

அருகில் உள்ள ரயில் நிலையம் நியூ ஜல்பைகுரி, (221 கி.மீ.) சிலிகுரி (137 கி.மீ.), அருகில் இருக்கும் நகரம் சிக்கிம் தலைநகர் காங்டாக். ஏப்ரல், மே மாதங்கள் சீஸன் காலமாகும்.

காங்டாக் நகரில் உள்ள ஹோட்டல் சகோரிகா (03592 206958) தங்குவதற்கு ஏற்ற 2 ஸ்டார் ஹோட்டல். இருவர் ஓர் இரவு தங்க கட்டணம் ரூ.1,926.
===

படங்கள் : கூகுள் இமேஜ்