Home Blog Page 6014

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் உடன் சந்திப்பு இல்லை: ஒபாமாவை மட்டும் சந்திக்கிறார் மோடி

பிரதமர் அமெரிக்க நிகழ்ச்சிகள் குறித்த கால அட்டவணையை மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விகாஸ் ஸ்வரூப் வெளியிட்டார்.

அதில் அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்திக்க மாட்டார் என தெரிவித்துள்ளார்.

இந்திய நேரப்படி இன்று (செப்.,24) அதிகாலை அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்றார். அங்கு விமான நிலையத்தில் கூடி இருந்த இந்திய வம்சாவளியினர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிரதமராக பதவியேற்ற பிறகு மோடி இரண்டாவது முறையாக தற்போது அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்கா வந்துள்ள மோடிக்கு எதிராக போராட்டம் நடத்த அமெரிக்க வாழ் பட்டேல் சமூகத்தின் ஒரு பிரிவினர் திட்டமிட்டுள்ளனர்.

அதே சமயம், மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க பட்டேல் சமூகத்தினரின் மற்றொரு பிரிவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விகாஸ் ஸ்வரக்ஷப் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது : பிரதமர் மோடி கலிபோர்னியாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். கடந்த 30 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் கலிபோர்னியாவுக்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.

மோடி, கூகுள் நிறுவன அலுவலகத்திற்கு சென்று, பல்வேறு துறைகளில் அவர்கள் மேற்கொண்டு வரும் கண்டுபிடிப்புக்களை பார்வையிட உள்ளார். அது டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு உதவிகரமாக இருக்கும் என அவர் கருதுகிறார். 2004ம் ஆண்டிற்கு பிறகு இப்போது தான் அமெரிக்காவில் ஜி4 மாநாடு நடக்கிறது. செப்டம்பர் 26ம் தேதி நடக்கும் இந்த மாநாட்டில் மோடி கலந்து கொள்ள உள்ளார். முன்னதாக செப்டம்பர் 25ம் தேதி (வெள்ளிக்கிழமை) வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஐ.நா., கூட்டத்தில் மோடி பேச உள்ளார். இதில் இந்தியாவின் நீண்டநாள் கனவான ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு நிரந்தர இடம் வேண்டும் என்பதை அவர் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

செப்டம்பர் 26ம் தேதி ஜி4 மாநாட்டு தலைவர்களை சந்திக்கிறார். பின்னர் இந்திய வம்சாவளியினருடன் பகல் உணவு சாப்பிட உள்ளார். டெல்சா மோட்டார்ஸ் தலைமையகத்திற்கும் அவர் செல்ல உள்ளார். தொடர்ந்து ஆப்பிள் நிறுவன சிஇஓ.,க்கள் மற்றும் இந்திய வம்சாவளி சிஇஓ.,க்களையும் சந்திப்பதுடன், அவர்களுடன் இரவு உணவருந்த உள்ளார்.

செப்டம்பர் 27ம் தேதி சான் ஜோஸ் நகரின் இந்திய வம்சாவளியினரிடையே இந்தியா-அமெரிக்க தொடர்பு குறித்து பேச உள்ளார். அங்கு ஸ்டான்ட்போர்ட் பல்கலைகழகத்தில் புதுப்பிக்கதக்க ஆற்றல் குறித்த வட்டமேடை மாநாட்டிலும் அவர் கலந்து கொள்கிறார். பின்னர் பேஸ்புக் தலைமை அலுவலகத்திற்கு சென்று அதன் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க்கை சந்திக்க உள்ளார்.

செப்டம்பர் 28ம் தேதி ஐ.நா., அமைதி மாநாட்டில் பேசும் மோடி, அன்றைய தினம் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்திக்க உள்ளார். அதேசமயம் இந்த பயணத்தின் போது பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்திக்கும் திட்டமில்லை. மோடியும், ஷெரீப்பும் ஒரே ஹோட்டலில் தங்கினாலும் இருதரப்பு பிரதமர்கள் சந்திப்பு குறித்த திட்டம் இல்லை என விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.

காங். கூட்டணி அரசின் அழுத்தம் காரணமாகவே மோடிக்கு விசா வழங்க மறுத்தது அமெரிக்கா – ஜெகதீஷ் பகவதி

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் அழுத்தமான கோரிக்கையை ஏற்றுத்தான் பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்பு அமெரிக்கா விசா வழங்க மறுத்தது என்று பிரபல பொருளாதார நிபுணர் ஜெகதீஷ் பகவதி குற்றம் சாட்டியுள்ளார்.

முன்பு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி மத்தியில் இருந்தபோது மோடிக்கு அமெரிக்க அரசு விசா வழங்க மறுத்து வந்தது. இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதற்கு பல தரப்பிலும் கண்டனங்கள் எழுந்தன. ஆனால் இதற்கு தாங்கள் பொறுப்பல்ல, அமெரிக்க அரசின் முடிவு இது என்று அப்போதைய மத்திய அரசு கூறி வந்தது.

தற்போது பிரதமராக 2வது முறையாக அமெரிக்கா வந்துள்ளார் நரேந்திர மோடி. இந்த நிலையில், முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது 10 வருடமாக அவருக்கு அமெரிக்க விசா கிடைக்காமல் போனதற்குக் காரணம் முந்தைய அரசுதான் என்று பகவதி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது, அனைவருக்கும் இது தெரிந்ததுதான். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் வேண்டுகோளின் பேரிலேயே மோடிக்கு விசா வழங்க மறுத்தது அமெரிக்க அரசு. இது மோடிக்குமே கூட தெரியும். ஆனால் அதை அவர் பெரிதுபடுத்த விரும்பவில்லை. அவர் மிகவும் எதார்த்தமான மனிதர். பிராக்டிகலான மனிதர். மோடிக்கு விசா வழங்க மறுத்த அமெரிக்காவுக்கு மன்மோகன் சிங் தலைமையிலான அரசு வலிக்காத மாதிரியே கண்டனம் தெரிவித்தது. சீரியஸான கண்டனமாக அவர்கள் தெரிவிக்கவில்லை. ஒப்புக்கு கண்டனம் தெரிவித்து நிறுத்திக் கொண்டனர். இந்திய அரசு கேட்டுக் கொண்டதற்கு அமெரிக்க அரசு சம்மதம் தெரிவித்தது, அவ்வளவுதான் என்றார் பகவதி கூறியுள்ளார்.

 

மெக்கா விபத்து இந்தியர்களுக்கு உதவ சவுதி அரேபியா தொலை பேசி எண்அறிவிப்பு

சவுதி அரேபியாவின் மெக்காவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 500ஹஜ் பயணிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 717 பேர் படுகாயம் ஆக உயர்ந்துதுள்ளது.

பலியானவர்களின் விவரம் குறித்த கேட்டறிவதற்காக தொலை பேசி எண்கள் தரப்பட்டுள்ளது. 00966125458000 மற்றும் 00966254960000 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை கலெக்டர் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மாலை 6 மணி முதல் ஞாயிறு காலை 6 மணி வரை 144 தடை விதித்து மாவட்ட கலெக்டர் ரவிக்குமார் உத்தரவிட்டுள்ளார். மாவட்டத்தில் வெங்கடேஷ பண்ணையாரின் நினைவு தினத்தை முன்னிட்டு இந்த உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது .

பனை மரம் உள்ள 108 நாடுகளில் கள் தடை செய்யப்பட்ட ஒரே மாநிலம் தமிழகம் தான் ..!

உலகளவில் 108 நாடுகளில் பனை மரங்கள் உள்ளன. எந்த நாட்டிலும் கள் இறக்குவதற்கோ, குடிப்பதற்கோ தடை இல்லை. தமிழகத்தில் மட்டும் தடை உள்ளது. அழிவின் விழும்பில் பனை மரங்கள் தமிழகத்தில்  உள்ளது என்பதே இயற்கை ஆர்வலர்களின் குற்றச்சாட்டு.!

கள் இறக்குவதற்கான அனுமதி இருந்த வரை, அதனால் வருமானம் கிடைத்தவரை பனை மரங்களை காப்பாற்ற வேண்டும் என்ற கவலை விவசாயிக்கு இருந்தது. அதன்பிறகு, பனை மரங்களை கைவிட்டு விட்டனர் விவசாயிகள். வறட்சி காரணமாக பனை மரங்களை காப்பாற்ற முடியாமல் செங்கல் சூளைக்கும், சுண்ணாம்பு காளவாய்க்கும் எரிபொருளாக வெறும் ரூ.50க்கு விற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் 30 கோடி பனை மரங்கள் இருந்தன. தற்போது வெறும் 5 கோடிதான் உள்ளன. இவையும் தற்போது அழிக்கப்பட்டு வருகின்றன. பனையில் ஆண், பெண் என 2 வகை உள்ளன. பெண் பனையை பருவப் பனை என்றும், ஆண் பனையை அழகுப் பனை எனக் குறிப்பிடுவது வழக்கம். பனை 10 ஆண்டுகளுக்குப் பின்னர் 15 அடி உயரம் வரை வளர்க்கிறது. இந்த 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் பூ பூக்கும். அப்போது தான் ஆண் பனை, பெண் பனை எது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

கார்த்திகைத் திருநாளில் ஆண் பனையிலிருந்து பாலைகளை வெட்டி குழி தோண்டி தீ வைத்து மூட்டம் போட்டு கரியாக எடுத்து உரலில் இடித்து துணிப்பையில் வைத்து மாவலி சுற்றுவது இளைஞர்களின் வழக்கமாகும். பனை ஓலை குருத்துகளைப் பிரித்தெடுத்து, பகலில் வெயிலிலும், இரவில் பனியிலும் பதப்படுத்தும் முன்பாக ஓலையின் நடுப்பகுதியில் உள்ள ஈக்கியுடன் ஓலையைப் பிரித்தெடுத்தும் ஈக்கியில்லாத ஓலையைத் தனியாக பிரித்து எடுத்து நுட்பமாகப் பயன்படுத்தி உள்ளனர்.

அரைப்படி முதல் 5 படி வரை கொள்ளவு கொண்டவை கொட்டான்கள் எனவும், 7 படியிலிருந்து 11 படி வரை கொள்ளளவு உள்ள பெட்டி வகைகள் சீர்வரிசைப் பெட்டிகள் எனவும், 20 படியிலிருந்து 30 படிகள் வரை கொள்ளளவு கொண்ட நார்பெட்டிகள் அரைப்பெட்டிகள் என்றும், 5 மரக்கால் அளவுள்ள பெரிய நேர்த்தியான நார்பெட்டிகள் கடகம் என்றும், நெல் இதர தானியங்களை காற்றில் தூற்றி தரம் பிரிக்கப் பயன்படுத்துபவை தூற்றுப் பெட்டிகள் என்றும், தானியங்களை புடைத்து எடுக்க சொழகு அல்லது முறம் என்றும் சரக்குகளை கட்டி அனுப்ப பனைப் பாய்கள் என அழைத்து அதனைப் பயன்படுத்தி வந்தனர்.

இதைத் தவிர, மட்டையிலிருந்து நார் எடுத்து மெத்தைகள், பிரஷ்கள், ஆடைகள், கால்மிதிகள், வீட்டு அழகு சாதனப் பொருள்களும் பனையிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. பதனீர் குடிப்பதால் ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் விருத்தியாகும், நோய் உண்டாக்கும் கிருமி தொற்றுகளைத் தடுக்கும் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளன.

பனை விவசாய அழிவுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், சொந்த மரமில்லாததால் பனைமரம் ஏறியவர்கள் வேறு தொழிலுக்குச் சென்று விட்டனர். சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பூமியின் வறட்சி காரணமாகவும், சீமைக் கருவேல் மரங்களின் எல்லையில்லா வளர்ச்சி காரணமாக பனை மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த நிலையில், எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி பனைமரங்கள் வெட்டப்பட்டு, செங்கல் சூளைக்கு எரிபொருளாக லாரிகளில் அனுப்பப்பட்டு வருகின்றன என்றார்.

திணைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாகக் கொள்வர் பயன் தெரிவார் -என்ற குறளின்படி எந்தவித செலவுமின்றி வளர்ந்து நிற்கும் சில கோடி மனை மரங்களையாவது பாதுகாக்க வேண்டும். பனையின் பயனைப் பெற புதிய வழிகளை உருவாக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தமிழர்களின் அடையாளமாக உள்ள பனை மரத்தை அழிவின் விளிம்பிலிருந்து மீட்க வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் விருப்பமாகும்.

மெக்காவில் ஹஜ் பயணிகள் 717 பேர் பலி 500 படுகாயம் ஆக உயர்வு

சவுதி அரேபியாவின் மெக்காவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 500ஹஜ் பயணிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 717 பேர் படுகாயம் ஆக உயர்ந்துதுள்ளது.

மெக்காவில் ஹஜ் பயணிகள் 717 பேர் பலி 500 படுகாயம் ஆக உயர்வு

சவுதி அரேபியாவின் மெக்காவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 500ஹஜ் பயணிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 717 பேர் படுகாயம் ஆக உயர்ந்துதுள்ளது.

மெக்காவில் ஹஜ் பயணிகள் 717 பேர் பலி 500 படுகாயம் ஆக உயர்வு

சவுதி அரேபியாவின் மெக்காவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 500ஹஜ் பயணிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 717 பேர் படுகாயம் ஆக உயர்ந்துதுள்ளது. 

ஜெயலலிதா மோடியை நேரில் சந்திக்க வேண்டும்: விஜயகாந்த்

புதுக்கோட்டையில் தே.மு.தி.க.,சார்பில் நடந்த பக்ரீத் விழாவில் கலந்துகொண்டு தே.மு.தி.க.,தலைவர் விஜயகாந்த் நிருபர்களிடம் கூறும்போது, காவிரி, முல்லை பெரியார் நதி நீர் பிரச்னையில் இரு மாநில அரசுகளும் நாடகமாடி வருகின்றன. இந்த பிரச்சனையில் முதல்வர் உட்கார்ந்து கொண்டு பிரதமருக்கு கடிதம் எழுதுவதை விட, பிரச்னையை தீர்க்க பிரதமரை நேரில் சந்தித்து பேசி தீர்வுகாண நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தமிழகத்தில் மின்வெட்டு இருந்து வருகிறது. இந்த விழாவில் கூட 1 மணி நேரம் மின் நிறுத்தம் செய்யப்பட்டது. ஏன், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது கூட மின்வெட்டு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு மாநில அரசின் அமைச்சரவை கூட்டத்தை கூட்டி தீர்மானிக்க வேண்டும். டி.எஸ்.பி., விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்ற மத்திய அரசுதான் வழி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

தமிழை வழக்காடு மொழியாக மாற்றக்கோரி போராட்டம் நடத்திய 15 வக்கீல்கள் பணியாற்ற தடை : அகில இந்திய பார் கவுன்சில்

தமிழை வழக்காடு மொழியாக மாற்றக்கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் 15 வழக்கறிஞர்கள் செப்டம்பர் 16ம் தேதி போராட்டம் நடத்தினர்.

இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டுள்ள அகில் இந்திய பார் கவுன்சில், போராட்டத்தில் ஈடுபட்ட மதுரை வழக்கறிஞர்கள்சங்க தலைவர் தர்மராஜ், செயலாளர் ராமசாமி உள்ளிட்ட 15 வக்கீல் தொழில் செய்ய தடை அகில இந்திய பார்கவுன்சில் உத்தரவு. உள்ளிட்ட 15 பேர், வழக்கறிஞர்களாக பணியாற்ற இடைக்கால தடை விதித்துள்ளது.