Home Blog Page 6013

மோடி பேச தடை கோரும் சீக்கியர்களுக்கான நீதி அமைப்பு திடீர் வழக்கு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உலகின் தகவல் தொழில்நுட்பத்துறை புரட்சியின் தலைமையிடமாக கருதப்படும் சிலிகான் வேல்லியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டுமென அமெரிக்காவில் உள்ள சீக்கியர்களுக்கான நீதி அமைப்பு கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

ஐக்கிய நாடுகளில் சபையின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா வந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நியூயார்க் நகரில் தங்கியுள்ளார். இந்த பயணத்தின்போது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் சில நாட்டு தலைவர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ள மோடி, அதையடுத்து, அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் உள்ள ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமையகத்துக்கு செல்லும் மோடி, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க்கை சந்தித்துப் பேசுகிறார். ஊழியர்களுடன் கேள்வி-பதில் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.

வரும் 27-ம் தேதி கலிபோர்னியாவுக்கு வரும் நரேந்திர மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க இங்குள்ள இந்தியர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் பேசவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் கலிபோர்னியாவில் மோடி உரையாற்றவுள்ள நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என இங்குள்ள சீக்கியர்களுக்கான நீதி என்ற அமைப்பு சார்பில் கலிபோர்னியா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொது வரவேற்பு, மோடியின் பேச்சு போன்றவை இங்கு மதமாற்றம் மற்றும் தேவையற்ற வன்முறைக்கு வித்திடும். எனவே, இங்குள்ள இந்திய-அமெரிக்க சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஏற்பாடு செய்துள்ள மோடியின் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ள மூன்று அமைப்புகளுக்கு கலிபோர்னியா கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மனுதாரர்களின் கோரிக்கை தொடர்பாக எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்குமாறு அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும், பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பஞ்சாப் முதல் மந்திரி பிரகாஷ் சிங் பாதல், நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்டவர்கள் மீது பல்வேறு காரணங்கள் தொடர்பாக இந்த அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடதக்கது.

இந்தோனேஷியா நாட்டில் நிலநடுக்கம் : 60 பேர் காயம்

இந்தோனேஷியா நாட்டின் பபுவா பகுதியை மையமாகக்கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகி இருந்தது.

இதில் சிக்கி 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 200 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1.84 லட்சம் நீதிமன்ற வழக்குகளை வாபஸ் பெற்ற மத்திய பிரதேச அரசு

‘மத்திய பிரதேச அரசு கோர்ட்டில், வழக்குகள் முடங்கிக் கிடக்கின்றன’ என, வெறுமனே சொல்லிக்கொண்டிருக்காமல், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, மாநில கோர்ட்டுகளில் முடங்கிக் கிடந்த வழக்குகளில், 1.84 லட்சம் வழக்குகளை வாபஸ் பெற்றுள்ளது, இதன்மூலம், நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதுடன்,நீதிபதிகளின் பணிச்சுமையும் குறைந்து உள்ளது.ம. பி அரசின் புது முடிவை தொடர்ந்து பிற மாநிலங்களும் இந்த நடைமுறையை பின்பற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான மத்திய பிரதேசத்தில், தாலுகா கோர்ட், மாவட்ட நீதிமன்றம், மாநில உயர் நீதிமன்றங்கள் என, அனைத்து கோர்ட்டுகளிலும், லட்சக்கணக்கான வழக்குகள் முடங்கிக் கிடக்கின்றன.

மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள், நீதிமன்ற பணியாளர்கள் பற்றாக்குறை போன்ற பல காரணங்களால், நீதிமன்றங்களில் வழக்குகள் அதிகளவில் தேங்கியுள்ளன. இதை குறைக்க, அவ்வப்போது சிறப்பு வழக்கு தீர்வு முகாம்கள் நடத்தியும் பலனின்றி போனதால், தேவையற்ற வழக்குகளை வாபஸ் பெறுவது தான், சரியான வழியாக இருக்கும் என, மாநில அரசு கருதியது.

அதையடுத்து, இந்திய தண்டனை சட்டப்படி, சாதாரண குற்றங்களுக்காக தொடரப்பட்டிருந்த, 10 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்குகள், பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தாத வழக்குகளை பட்டிய லிடுமாறு, நீதித் துறைக்கு உத்தரவிட்டது.

அதன்படி, அனைத்து மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்களில், முடங்கிக் கிடந்த வழக்குகள் பட்டியலிடப்பட்டன; அந்த பட்டியல், மாநில அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. மாநில உள்துறை அமைச்சர் பாபுலால் கவுர், 1.84 லட்சம் வழக்குகளை வாபஸ் பெறும் அறிவிப்பை, நேற்று வெளியிட்டார்.

பிறர் மீது, மாநில அரசு தொடர்ந்திருந்த அந்த வழக்குகளை வாபஸ் பெறுவதால், அரசுக்கு பெரியளவில் பாதிப்பு எதுவுமில்லை என, தெரிவித்த அமைச்சர் பாபுலால் கவுர்,, பிற முக்கிய வழக்குகளில், இதுபோல நடந்து கொள்ள மாட்டோம் என உறுதியளித்தார். மேலும் அவர் கூறியதாவது:கோர்ட்டுகளில், மலை போல தேங்கியுள்ள வழக்குகளை குறைப்பதற்கு இதுவும் ஒருவழி. ‘பெட்டி கேஸ்’ எனப்படும், சிறிய குற்றங்களுக்கான வழக்குகள் மட்டுமே, வாபஸ் பெறப்பட்டு உள்ளன. இதனால் கிடைக்கும் நேரத்தை, கோர்ட்டுகள், பிற முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளுக்கு செலவிடலாம். என அமைச்சர் கூறினார்.

மூன்று கோடிவழக்குகள் முடக்கம்

நாடு முழுவதும் உள்ள கோர்ட்டுகளில், மூன்று கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக, சமீபத்திய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது; அதில், 30 சதவீதத்திற்கும் மேற்பட்ட வழக்குகள், 20 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட வழக்குகளாக உள்ளன. மாநிலங்களின், 10 உயர் நீதிமன்றங்களில், 50 லட்சம் வழக்குகள் நிலுவை யில் உள்ளன.கீழ் கோர்ட்டுகளில், ஒரு கோடி வழக்குகளும்; அதற்கு மேலான கோர்ட்டுகளில், 20 லட்சம் வழக்குகளும் முடங்கியுள்ளன.

எந்தெந்த வழக்குகள் வாபஸ்?

இந்திய தண்டனை சட்டப்படி, சாதாரண குற்றங்களுக்காக தொடரப்பட்டிருந்த வழக்குகள், வாபஸ் பெறப்பட்டு உள்ளன. அவை:
* சாதாரண திருட்டு
* வேகமாக கார் ஓட்டி விபத்து
* அடிபிடி சண்டை
* பொதுச் சொத்துக்கு சேதம்
* அரசு ஊழியரை தடுத்தல்
* சத்தமாக பாட்டு கேட்டது
* ஆபாசமாக நடந்து கொண்டது
* தடை செய்யப்பட்ட பகுதியில் நடமாட்டம்
* அத்துமீறி நுழைதல்
* மோசடியாக கையெழுத்திட்டு முறைகேடு
* பிறரின் புகழுக்கு களங்கம் உச்ச நீதிமன்ற நீதிபதிஎச்.எல்.தத்து கவலைசில நாட்களுக்கு முன், செய்தியாளர்களிடம் பேசிய, தலைமை நீதிபதி எச்.எல்.தத்து கூறியதாவது:
நீதிபதிகள், ஓராண்டில், 190 நாட்கள் வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்குகின்றனர். இந்த நாட்களில், காலை முதல் இரவு வரை உழைக்கின்றனர். பணி நாட்களில் மனைவி, குழந்தை, குடும்பத்துடன் செலவழிக்க முடியவில்லை.
இப்போதுள்ள வேகத்தில், முடங்கிய வழக்குகளை விசாரிக்க துவங்கினால், அவற்றை தீர்க்க,20 ஆண்டுகள் ஆகும். என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறியது குறிப்பிடதக்கது.

சிறந்த விஞ்ஞானியாக நெல்லைக்காரர்

சிறந்த விஞ்ஞானி விருது
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த விஞ்ஞானிக்கு வழங்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே உள்ள கீழப்பாவூரைச் சேர்ந்த  லூர்துஅந்தோணி-செல்வபாக்கியம் தம்பதியினர்  இருவரும் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளனர். இவர்களுடைய மகன் ஞானமிக்கேல்பிரகாசம். இவர் கீழப்பாவூரில் உள்ள ஆர்.சி தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிபடிப்பை தமிழ்வழியிலும்,  பின்பு  பாவூர்சத்திரத்தில் உள்ள த.பி.சொ.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்வழியில் படித்துள்ளார். தனது பி.யூ.சி படிப்பை ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரியிலும், பி.இ படிப்பை மதுரை தியாகராஜர் எஞ்சீனியரிங் கல்லூரியிலும், எம்.டெக் படிப்பை சென்னையில் உள்ள ஐ.ஐ.டி-யிலும் எம்.பி.ஏ படிப்பை அண்ணாமலை பல்கலை கழகத்திலும் படித்து முடித்துள்ளார். இவர் பெங்களூரில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனதத்தில் (D.R.D.O)  எலக்ட்ரானிக்ஸ் ராடார் மேம்பாட்டு ஆராய்ச்சி ((L.R.D.E) ) அமைப்பில் மூத்தவிஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். 1987-ல் விஞ்ஞானி-“பி”(B)யாக பணியை துவக்கிய இவர் இப்போது விஞ்ஞானி”ஜி”(G) நிலைக்கு உயர்ந்து பணியாற்றி வருகிறார். இவருக்கு மத்திய அரசால் 2014-ம் ஆண்டிற்கான சிறந்த விஞ்ஞானி(Scientist of the Year-2014)  என்ற விருதினை மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர்பாரிக்கரிடம் இருந்து பெற்றுள்ளார்
ஞானமிக்கேல்பிரகாசம் National Science Award- 2003. Agni Award for self Reliance- 2007   உள்ளிட்ட பல விருதுகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கதாகும். ராடார்ஆராய்ச்சித்துறையில் 25க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளார். அதேபோல் “SystemGenerator” என்ற நூலை உருவாக்கியவர்களில் இவரும் ஒருவர் ஆவார் என்பது குறிப்பிடதக்கதாகும். இவரது மனைவி செல்வி பெங்களூரில் ஸ்டேட்பாங்ஆப் இந்தியாவிலும், மகன் ரூபஸ்மிக்கேல் ஆப்பிள் நிறுவனத்திலும், மற்றொறு மகன் அனூஸ் இன்டெல் நிறுவனத்திலும் பணியாற்றி வருகிறன்றனர். தமிழ்வழியில் கல்வி கற்ற இந்த சாதனை தமிழனை பாரட்டுவோம்

மெக்காவில் ஹஜ் பயணிகள் விபத்து: மூன்று இந்தியர்கள் பலி

சவுதி அரேபியாவின் மெக்காவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 500ஹஜ் பயணிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 717 பேர் படுகாயம் ஆக உயர்ந்துதுள்ளது.

இதில் மூன்று இந்தியர்களும் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆந்திரா, கேரளா மாநிலத்தை சேர்ந்த இருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் மற்றொருவரின் அடையாளம் காணப்பட்டு வருகிறது.

மேலும் ஈரான் நாட்டை சேர்ந்தவர்கள் 43 பேர் பலியாகியுள்ளனர் என சவுதியின் செய்தி நிறுவனம் இர்னா தெரிவித்துள்ளது

தலைமறைவாக இருந்த ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.,கைது?

டில்லி ஆம்ஆத்மி கட்சி எம்.எல்.ஏ., சோம்நாத் பாரதிக்கு எதிராக அவரது மனைவி லிபிகா மித்ரா சமீபத்தில் போலீசிலும், பெண்கள் ஆணையத்திலும் குடும்ப வன்முறை புகார் அளித்தார். புகாரில் தன்னை கணவர் கொடுமைப்படுத்துவதாகவும் கொலை செய்ய முயற்சிப்பதாகவும் கூறியிருந்தார்.

அதன் பேரில் சோம்நாத் பாரதி மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கினார்கள். இதையடுத்து போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க விசாரணை கோர்ட்டில் சோம்நாத் பாரதி முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார்.

இந்த மனு தள்ளுபடியானதால் டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவும் நேற்று முன்தினம் தள்ளுபடியானது. எனவே எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படும் நிலை ஏற்பட்டது.

எனவே கைதேர்ந்த குற்றவாளியை போன்று தலைமறைவாக இருந்த டில்லி ஆம்ஆத்மி கட்சி எம்.எல்.ஏ., சோம்நாத் பாரதியை டில்லி போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆக்ரா அருகே அவர் தலைமறைவாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

புதிய பஞ்சலோக தகடுகள் சபரிமலை 18 படிகளில் பதிக்கும் பணி தொடக்கம்!

சபரிமலை பயணத்தில் மிக புண்ணியமாக கருதப்படும் விஷயங்களில் 18 படிகளும் ஒன்று. காளைகட்டி, இஞ்சிப்பாறை மலை, புதுசேரிகானம்மலை, கரிமலை, நீலிமலை, சபரிமலை, பொன்னம்பலமேடு, சிற்றம்பலமேடு, மயிலாடும் மேடு, தலப்பாறை மலை, நிலக்கல்மலை, தேவர்மலை, ஸ்ரீபாதம்மலை, கர்கிமலை, மாதங்கமலை, சுந்தரமலை, நாகமலை, கருடன்மலை என 18 மலை தேவதைகள் குடிகொள்ளும் படியாக கருதப்படுகிறது.

விரதமிருந்து இருமுடி கட்டுடன் செல்லும் பக்தர்கள் மட்டுமே 18 படி வழியாக செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். லட்சக்கணக்கான பக்தர்கள் ஏறி செல்லும் படிகள் பழுதாகி விட்ட நிலையில் புதிதாக பஞ்சலோக தகடுகள் பதிக்க முடிவு செய்யப்பட்டது.புரட்டாசி மாத பூஜைகள் முடிந்த நிலையில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு படிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி கலசம் நிறைத்து அதை ஐயப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் கோயில் முன்புறம் தேவசம்அதிகாரிகளும், நன்கொடை தாரர் மற்றும் ஊழியர்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் பணியை முடிப்ப தாக உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.இதை தொடர்ந்து நேற்று முன்தினம் புதிய பஞ்சலோக தகடுகள் பதிக்கும் பணி தொடங்கியது. ஐப்பசி மாத பூஜைக்கு முன்னர் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.மொத்தம் நான்கு டன் எடை கொண்ட பஞ்சலோக தகடுகள் பதிக்கப்படும். பணிமுடிந்தால் பிரதிஷ்டை சடங்குகளுக்கு பின்னர் பக்தர்கள் படியேற அனுமதிக்கப்படுவர்.

ஏற்கெனவே பதிக்கப்பட்டிருந்த பஞ்சலோக தகடுகள் வெட்டி எடுத்து அப்புறப்படுத்திய பின்னர் புதிய தகடுகள் பொருத்தப்படும். ஐப்பசி மாத பூஜைக்காக நடை திறக்கும் போது புதுப்பொலிவு பெற்ற படிகளை பக்தர்கள் பார்க்க முடியும்.

 

 

 

தேர்தலில் பா.ஜ., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு? : கருத்துகணிப்பு

பீகார் சட்டசபைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. யார் ஆட்சியை பிடிப்பார் என்பதில் பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் தனியார் ஆங்கில டி.வி. சானல் வெளியிட்டுள்ள கருத்துகணிப்பில், பா.ஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 117 இடங்களும் ராஷ்டீரிய ஜனதாதள கூட்டணிக்கு 112 , பிற கட்சிகளுக்கு 14 இடங்களும் கிடைக்கும்.
அதே நேரத்தில் மீண்டும் முதல்வர் பதவிக்கு நிதிஷ்குமார் வரவேண்டும் என பெரும்பான்மையோர் கருத்துதாக உள்ளது
என அந்த கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

உலக சுற்றுலா தினம் கொண்டாட 32 மாவட்டங்களுக்கு தமிழக அரசு நிதி

இந்த ஆண்டு, உலக சுற்றுலா தின கருப்பொருளுக்கு, ‘ஒரு கோடி சுற்றுலா பயணிகள்; 1 கோடி வேலை வாய்ப்புகள்’ என, பெயரிடப்பட்டுள்ளது.

உலக சுற்றுலா தினத்தை, விமரிசையாக கொண்டாட, 32 மாவட்டங்களுக்கு தலா, 35 ஆயிரம் ரூபாயை, தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது என தமிழ்நாடு சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலில் திருவோண ஏகாதசி

கீழப்பாவூர்  ஸ்ரீ ருக்கமணி  சமேத ஸ்ரீ வேணு கோபால கிருஷ்ண சுவாமி திருக்கோவிலில் திருவோண நட்சத்திர ஏகாதசி திதியன்று விசேஷே திருமஞ்சனம் ,கும்பாபிஷேகம் ,தீபாராதனை ,பிராசதம் வழங்கல்  நடைபெற்றது ,மாலையில்  சாயரக்ஷை தீபாராதனை    சகஸ்ரநாம அர்ச்சனை ,தீபாராதனையுடன் பெருமாள் கருட வாகனத்தில் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது  பூஜைக்கான ஏற்பாடுகளை அர்ச்சகர்  ரவி பட்டாச்சாரி  தலைமையில் பக்தர்கள் செய்திருந்தனர்