Home Blog Page 6012

முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் மது விற்று ஆட்சி நடத்துகிறார் : அன்புமணி குற்றச்சாட்டு

தமிழகத்தில் மது விற்று முதல்வர் ஜெயலலிதா ஆட்சி நடத்துவதாக ஈரோட்டில் நேற்று நடந்த, மது ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் பேசிய பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி குற்றச்சாட்டியுள்ளார்.

தமிழகத்தை ஆளும் அம்மா மட்டும், குடி மூலம் வருவாயை பெருக்கி ஆட்சி நடத்துகிறார். தமிழக வருவாயில், 37 சதவீதம், மதுவால் கிடைக்கிறது. இதனால், நான்கு வயது குழந்தையும் குடிக்க வைக்கப்படுகிறது.எந்த அம்மாவும், தன் குழந்தைகள் மது குடிக்கக்கூடாது என்று தான் விரும்புவார்.

மதுக் குடிப்பதால், 200 வகையான நோய் நம்மை தாக்குகிறது என்பதை, மருத்துவர் என்ற முறையில் நானும், ராமதாசும் அறிவோம்.அடுத்த ஆண்டுக்கு பின், தமிழகத்தில் மது, சாராயம்
இருக்கக்கூடாது. அதற்கு, பா.ம.க., ஆட்சிக்கு வரவேண்டும் என அன்புமணி தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது :பா.ஜ., கூட்டணியில் இல்லை: காவிரி நீர் பிரச்னைக்காக, பிரதமருக்கு கடிதம் எழுதுவதாலோ; சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவதாலோ பலனில்லை. எம்.பி.,- – எம்.எல்.ஏ.,க்களை அழைத்து சென்று, பிரதமரை சுற்றி அமர்ந்து பேசி, தீர்வு காண வேண்டும்; அல்லது லோக்சபாவை முற்றுகையிட வேண்டும். அரசியலுக்காக, காவிரி பிரச்னையில், மத்திய அரசு அமைதி காக்கிறது. பா.ஜ.,
கூட்டணியில், பா.ம.க., இல்லை. அப்படி பா.ஜ.,வினர் கூறினால், அது அவர்கள் விருப்பம். இவ்வாறு என அன்புமணி தெரிவித்தார்.

 

சுங்கத்துறை அலுவலக இணையதளம் முடக்கம் : தீவிரவாதிகள் கைவரிசை?

சென்னையில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்துக்கு சொந்தமான இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஜனவரி மாதம் மீனாட்சி அம்மன் கோவிலின் இணையதளம் தீவிரவாதிகளால் ஹேக் செய்து முடக்கப்பட்டது. இதனால் உலக அளவில் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இணையதள சேவையும் பாதிப்படைந்தது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து,அரசு துறைகளுக்கு சொந்தமான இணையதளங்களை முடக்கும் முயற்சிகளில் மும்முரமாக ஈடுபட்டுவந்த சில தீவிரவாதிகள் இன்று சென்னையில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்துக்கு சொந்தமான இணையதளத்தை முடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர் மிரட்டல்கள் : தமிழகத்தில் நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை

மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரி இருந்த இடத்தில், நரபலி நடந்ததாக கூறப்பட்டு, விசாரணை நடத்தியதில், எலும்பு கூடுகள் கிடைத்திருக்கின்றன. இது, அச்சத்தை வர வழைத்துள்ளது. டி.எஸ்.பி., விஷ்ணுபிரியாவின் மரண பின்னணியில், உயர் அதிகாரிகளின் மிரட்டல் இருந்துள்ளது தெரிகிறது.

முத்துக் குமாரசாமியை தொடர்ந்து, தற்போது, பல லட்சம் கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படும், ‘கிரானைட்’ முறைகேடு குறித்து, விசாரணை செய்து வரும் சகாயத்திற்கும், காவல் துறையினர் போதிய ஒத்துழைப்பு தரவில்லை. அவருக்கு, தொடர் மிரட்டல்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை. இந்த விவகாரங்களில், உண்மைகளை வெளிக்கொணர, அரசு நியாயமான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

டி.எஸ்.பி விஷ்ணுப்பிரியா காதல் தோல்வியால் தற்கொலை?

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுப்பிரியா தற்கொலை குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விஷ்ணுப்பிரியா ஒரு வாலிபரை காதலித்து வந்து உள்ளார். அந்த வாலிபர் இரவு 10 மணிக்கு மேல் அவரிடம் போனில் பேசி உள்ளார். சில நேரம் ஒரு மணி நேரம் கூட அவர்கள் போனில் பேசி உள்ளனர். 2 நாள் விடுப்பில் ஊருக்கு சென்ற விஷ்ணுபிரியாவுக்கு மாப்பிள்ளை பார்க்க இருப்பதாக அவரது தந்தை ரவி, தாயார் கலைச்செல்வி ஆகியோர் கூறினர்.

அவர் ஒரு வாலிபரை காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்ய இருப்பதாகவும் அவர் கூறியதை பெற்றோர் ஏற்கவில்லை. இதனால் மன வேதனையில் இருந்த அவருக்கு போலீஸ் பணியிலும் அடுத்தடுத்து மன உளைச்சல் ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர் தற்கொலை செய்து இருப்பது சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்து உள்ளது.

நேற்று கடலூர் சென்ற சி.பி.சி.ஐ.டி. போலீசார் விஷ்ணுபிரியாவின் தாயார் கலைச்செல்வியிடம் காதல் விவகாரம் குறித்து விசாரணை நடத்திய போது அவர் மயங்கி விழுந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

காதல் தோல்வி மற்றும் பணியின் போது சரியாக செயல்பட முடியாத மனநிலை ஆகியவை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.காதலன் தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீஸ் பிடியில் சிக்கி உள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

தற்போது சி.பி.சி.ஐ.டி. விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதால் இன்னும் ஒரு வாரத்திற்குள் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அறிக்கை தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காதல் தோல்வியால் தற்கொலை என்பதை மறைத்து நாமக்கல் எஸ்.பி மற்றும் சேலம் சரக டி.ஐ.ஜி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் கொடுத்த தொல்லையால் அவர் தற்கொலை செய்ததாக வதந்தி பரப்பி போலீஸ் மீது களங்கத்தை உருவாக்க முயற்சி செய்ததும் விசாரணையில் தெரிய வந்து உள்ளது.

போலீஸ் துறை மீது களங்கத்தை உருவாக்கிய அதிகாரி உள்ளிட்ட சிலர் மீது அடுத்த கட்டமாக ஒழுங்கு நடவடிக்கை பாய உள்ளதாகவும் நாமக்கல் மாவட்ட காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் மது விற்று ஆட்சி நடத்துகிறார் : அன்புமணி குற்றச்சாட்டு

தமிழகத்தில் மது விற்று முதல்வர் ஜெயலலிதா ஆட்சி நடத்துவதாக ஈரோட்டில் நேற்று நடந்த, மது ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் பேசிய பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி குற்றச்சாட்டியுள்ளார்.

தமிழகத்தை ஆளும் அம்மா மட்டும், குடி மூலம் வருவாயை பெருக்கி ஆட்சி நடத்துகிறார். தமிழக வருவாயில், 37 சதவீதம், மதுவால் கிடைக்கிறது. இதனால், நான்கு வயது குழந்தையும் குடிக்க வைக்கப்படுகிறது.எந்த அம்மாவும், தன் குழந்தைகள் மது குடிக்கக்கூடாது என்று தான் விரும்புவார்.

மதுக் குடிப்பதால், 200 வகையான நோய் நம்மை தாக்குகிறது என்பதை, மருத்துவர் என்ற முறையில் நானும், ராமதாசும் அறிவோம்.அடுத்த ஆண்டுக்கு பின், தமிழகத்தில் மது, சாராயம்
இருக்கக்கூடாது. அதற்கு, பா.ம.க., ஆட்சிக்கு வரவேண்டும் என அன்புமணி தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது :பா.ஜ., கூட்டணியில் இல்லை: காவிரி நீர் பிரச்னைக்காக, பிரதமருக்கு கடிதம் எழுதுவதாலோ; சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவதாலோ பலனில்லை. எம்.பி.,- – எம்.எல்.ஏ.,க்களை அழைத்து சென்று, பிரதமரை சுற்றி அமர்ந்து பேசி, தீர்வு காண வேண்டும்; அல்லது லோக்சபாவை முற்றுகையிட வேண்டும். அரசியலுக்காக, காவிரி பிரச்னையில், மத்திய அரசு அமைதி காக்கிறது. பா.ஜ.,
கூட்டணியில், பா.ம.க., இல்லை. அப்படி பா.ஜ.,வினர் கூறினால், அது அவர்கள் விருப்பம். இவ்வாறு என அன்புமணி தெரிவித்தார்.

 

 

துக்ளக்ஆசிரியரும்,அரசியல் விமர்சகருமான சோ உடல் நிலை கவலைக்கிடம்

சென்னை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் துக்ளக்’ ஆசிரியரும், நடிகரும், அரசியல் விமர்சகருமான சோ மூச்சு திணறல் மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்.

சமீபத்தில் சென்னையில் வந்த பிரதமர் நரேந்திர மோடி, சோவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். முதல்வர் ஜெயலலிதாவும் மருத்துவமனைக்கு சென்று சோவின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.

தொடர்ந்து டாக்டர்கள் கண்காணிப்பில் இருந்த சோவின் உடல் நிலை நேற்று திடீர் என்று மோசம் அடைந்தது அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்திய கொடியில் ஒபாமாவுக்கு பரிசளிப்பதற்காக மோடி கையொப்பம் இட்டாரா?: கிளம்பும் புதிய சர்ச்சை

ஐக்கிய நாடுகள் சபை பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, நியூயார்க் நகரில் உள்ள வால்ட்ரோப் அஸ்டோரியா ஓட்டலில் தங்கியுள்ள பிரதமர் மோடி அமெரிக்காவின் தலைசிறந்த நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்து பேசினார், அவர்களுக்கு அந்த ஓட்டலில் விருந்தும் அளித்தார்.

இந்த விருந்தை அமெரிக்காவில் பிரபல இந்திய உணவு வகைகளை சமைப்பதில் கைதேர்ந்த கலைஞரான விகாஸ் கண்ணா என்ற இந்தியர் தயாரித்திருந்தார். விருந்தின்போது, விகாஸ் கண்ணாவை சந்தித்த பிரதமர் மோடி, அவரது சமையலின் ருசியை பாராட்டினார்.

மேலும், அமெரிக்க அதிபருக்கு பரிசளிக்கும் நோக்கத்தில் இந்திய தேசிய கொடியில் கையொப்பமிட்ட மோடி, அதனை ஒபாமாவிடம் சேர்ப்பிக்கும்படி விகாஸ் கண்ணா மூலமாக தந்தனுப்பியுள்ளதாக புகைப்படத்துடன் கூடிய அதிகாரபூர்வமற்ற செய்தியை சில ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படாத தகவலாக இருந்தபோதும், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு பரிசளிப்பதற்காக இந்திய நாட்டின் தேசிய கொடியில் பிரதமர் நரேந்திர மோடி கையொப்பமிட்டு, அதனை ஒபாமாவின் மனைவியின் நன்மதிப்பை பெற்ற சமையற்கலைஞரிடம் ஒப்படைத்துள்ள செய்தி, சில ஊடகங்கள் வழியாக கசியத் தொடங்கியுள்ளன.

இந்த புகைப்படத்தை தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதிவு செய்துள்ள மும்பையை சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி முன்னணி தலைவர்களில் ஒருவரான ஆஷிஷ் மேத்தா என்பவர், தேசிய கொடியை அவமதித்த குற்றத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.டுவிட்டர் மூலம் பரவிய செய்தி தற்போது சமூக ஊடகங்களில்
படுவேகமாக பரவி வருகிறது.

6 வழிச்சாலைக்கு ரூ.120 கோடி: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

முதல்–அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் 110–வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்பதாவது:–

திருவண்ணாமலை நகரில் கோயிலைச் சுற்றி அமையப் பெற்றுள்ள கிரிவலப் பாதையில் செல்லும் பக்தர்களின் வசதிக்காக முதற்கட்டமாக, 7 மீட்டர் முதல் 10 மீட்டர் அகலமுள்ள நடைபாதை மற்றும் வடிகால் வசதி ஏற்படுத்தப்படும். மேலும், ஓய்வு அறை வசதிகள் செய்து தரப்படும். இவை 65 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும்.

விரிவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலைத் துறையின் சாலைகளில், விளிம்பு வரை அகலப்படுத்தும் பணிகளை உள்ளடக்கிய, நடைபாதை ஒருங்கிணைந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் நிதிநிலைக் கூட்டத்தொடரின் போது அறிவித்தவாறு முதற்கட்டமாக 250 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை தொடர்ந்து, 2015–2016–ல் இரண்டாம் கட்டமாக 150 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நடப்பாண்டில் மேற்கொள்ளப்படும்.

ரயில்வே கடவுகளுக்கு பதிலாக மேம்பாலங்கள் மற்றும் கீழ்பாலங்கள் அமைக்கும் திட்டத்தின்கீழ், நடப்பாண்டில், சேலம் மாவட்டத்தில் 5 பணிகள், வேலூர் மாவட்டத்தில் 2 பணிகள், கோயம்புத்தூர், கடலூர், மதுரை, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு பணி என 7 மாவட்டங்களில் 12 பணிகள் 665 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு திட்டம், பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம் கோட்டங்களில் செயல்படுத்தப்படுவதை தொடர்ந்து, நடப்பாண்டில் திருவள்ளூர் கோட்டத்தில் செயல்படுத்தப்படும். 485 கிலோ மீட்டர் நீள மாநில நெடுஞ்சாலைகளும், 278 கிலோ மீட்டர் நீள மாவட்ட முக்கிய சாலைகளும்; 680 கோடி ரூபாய் மதிப்பில் செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு மேற்கொள்ளப்படும்.

ஓரகடம் தொழிற் பூங்கா பகுதியில் சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்சிங்கபெருமாள் கோயில்–திருப்பெரும்புதூர் மாநில நெடுஞ்சாலையில், சிங்கபெருமாள் கோயில் முதல் ஓரகடம் வரை ஆறு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகள் 120 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டதின்படி இப்பணி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், இதன் தொடர்ச்சியாக வண்டலூர் முதல் ஓரகடம் வரையிலான நான்கு வழிச்சாலை ஆறு வழிச் சாலையாக மேம்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இப்பணியில் 3.8 கிலோ மீட்டர் நீள படப்பை புறவழிச் சாலை உள்ளிட்ட 20 கிலோ மீட்டர் நீளச்சாலை அமைக்கப்படும். இவை 200 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரிய தெற்கத்தியச் சாலையில் கிலோ மீட்டர் 32/4ல் வண்டலூர் – மாம்பாக்கம் – கேளம்பாக்கம் சாலை சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக ஓர் உயர்மட்டப் பாலம் 60 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை பெரு நகர பகுதிகளில், உள்வட்ட சாலையில் கொளத்தூர் பகுதியில் இரட்டை ஏரி அருகில், பெரம்பூர் – செங்குன்றம் சாலை சந்திப்பில் 52 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பில் இடது புற சாலையில் மேம்பாலப் பணி முதற் கட்டமாக நடைபெற்று வருகின்றது. இரண்டாம் கட்டமாக, வலதுபுறச் சாலையில் மேம்பாலப் பணி நடப்பாண்டில் 2015–16–ல் 35 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என ஜெயலலிதா வாசித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

ரூ.5 கோடியில் மதுரையில் விளையாட்டு அறிவியல் மையம் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் 110–வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் கூறியதாவது:–

இந்தியாவிலேயே மலை மேலிட பயிற்சி முகாம் இமாச்சல பிரதேசத்தில் ஷில்லாரு மற்றும் கேரளாவில் மூணாறு ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே உள்ளது. பெரும்பாலான சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் குளிர் பிரதேசங்களில் நடைபெறுவதால் நமது விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கும் அங்கு நிலவும் தட்பவெப்ப நிலையை சமாளிக்கும் வகையில் பயிற்சி அளிக்கப்பட வேண்டியது அவசியம் ஆகும். எனவே நமது விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் செயல் திறனை மேம்படுத்த ஏதுவாக, உதகமண்டலத்தில் மலை மேலிட பயிற்சி மையம் ஒன்று 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில், 1992 ஆம் ஆண்டு எனது உத்தரவின் பேரில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் சிறப்பு நிலை பளு தூக்கும் பயிற்சி மையம் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் இப்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற சதீஷ்குமார் சிவலிங்கம் என்பவர் 2014 ஆம் ஆண்டு கிளாஸ் கோவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

எனவே, மேலும் பல வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், பதக்கம் வெல்ல ஏதுவாக, இப்பயிற்சி மையம் 2 கோடியே 45 லட்சம் ரூபாய் செலவில் முதன்மை நிலை பயிற்சி மையமாக தரம் உயர்த்தப்படும்.

தேசிய மற்றும் சர்வதேச அளவில் நம் மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் திறம்பட செயலாற்ற அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பொருட்டு அறிவியல் உபகரணங்கள் மற்றும் விளையாட்டு மருத்துவ வசதியுடன் கூடிய அறிவியல் விளையாட்டு மையம் ஒன்று அமைக்கப்படும்.

விளையாட்டு மருத்துவம், விளையாட்டு உளவியல், விளையாட்டு உடற் கூறியல், உயிர் இயந்திரவியல் சத்துணவியல், மறு சீரமைப்பியல் மற்றும் ஊக்க மருந்து எதிர்ப்பு ஆகிய வசதிகளுடன் கூடிய விளையாட்டு அறிவியல் மையம் ஒன்று மதுரையில் 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

தேசிய மாணவர் படை, என்.சி.சி. மாணவர்கள் பல்வேறு திறன்கள் பெறுவது ஊக்குவிக்கப்பட வேண்டும். எனவே, அவர்கள் தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ள ஏதுவாக ஓட்டுநர் பாவிப்பு, வானூர்தி பாவிப்பு மற்றும் ஆயுதபாவிப்பு ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படும்.

இதன் மூலம் தேசியமாணவர் படை மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு, வாகனம் ஓட்டும் திறமை, வானூர்தி பயிற்சி பெற்ற உணர்வு மற்றும் அசல் துப்பாக்கியால் சுடும் உணர்வுகளை பெறும் வாய்ப்பு கிட்டும். மதுரை இடையபட்டியில் அமைக்கப்பட்டு வரும் தேசிய மாணவர் படை பயிற்சி அகாடமியில் வாகன ஓட்டுதல் பாவிப்பு, வானூர்தி பாவிப்பு, மற்றும் ஆயுத பாவிப்பு ஆகிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்படும். இது போன்ற பயிற்சி இந்தியாவிலேயே முதன் முறையாக இங்கு தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்படும் என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், இளைஞர்கள் தங்களது வேலை வாய்ப்பினை அதிகரித்துக்கொள்ள, தகவல் தொடர்புத் திறனை மேம்படுத்திக்கொள்வது அவசியமானதாகும். எனவே, தேசிய மாணவர் படை பயிற்சி அகாடமியில் மொழி ஆய்வுக் கூடம் ஒன்றும் அமைக்கப்படும். இவை 1 கோடி ரூபாய் செலவில்அமைக்கப்படும் என ஜெயலலிதா வாசித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சைக்கிள் ஓட்டி குறைகளை கேட்கும் ஸ்டாலின்

திமுக பொருளாளர் ஸ்டாலின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மாநிலமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதியில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட , அவர் உசிலம்பட்டி பகுதியில் சைக்கிளில் பயணம் செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செல்லும் ஸ்டாலின் ஆட்டோவில் தொங்கிக்கொண்டும், மற்றும் டூவீலர் ஓட்டி மக்களை சந்தி்த்து குறைகளை கேட்டு வருகிறார். நாளை மதுரை மாநகராட்சி பகுதியில், சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.