Home Blog Page 6011

இலங்கை போர்க்குற்ற விசாரணை தீர்மானம்: ஈழத் தமிழரை அமெரிக்கா ஏமாற்றி விட்டது- ராமதாஸ்

இலங்கை போர்க்குற்ற விசாரணை தீர்மான விவகாரத்தில் ஈழத் தமிழரை அமெரிக்கா ஏமாற்றி விட்டது என்று ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

இலங்கை மீதான போர்க்குற்றச்சாற்று தொடர்பாக எத்தகைய விசாரணை நடத்துவது என்பது குறித்த இரண்டாவது தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா தாக்கல் செய்திருக்கிறது. இத்தீர்மானம் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கிறது. இது தமிழர்களுக்கு நிச்சயம் நீதி பெற்றுத் தராது.

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்திய ஐ.நா. மனித உரிமை ஆணையம், அங்கு மனித உரிமை மீறல்களும், போர்க்குற்றங்களும் நடந்ததை உறுதி செய்திருக்கிறது. இலங்கை மீதான போர்க்குற்றச்சாற்றுகள் குறித்து பன்னாட்டு பிரதிநிதிகளும், இலங்கை நீதிபதிகளும் அடங்கிய கலப்பு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஆணைய அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. ஆனால், இது போதுமானதல்ல… இலங்கை மீதான போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு நீதிமன்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அமெரிக்கா தாக்கல் செய்த முதல் வரைவுத் தீர்மானத்தில் இலங்கைக்கு ஆதரவான அம்சங்களே இடம் பெற்றிருந்தன. அதற்கு தமிழர்களிடம் எதிர்ப்பு எழுந்த நிலையில், நேற்று தாக்கல் செய்யப்பட்ட தீர்மானமும் தமிழர்களுக்கு எதிராகவே அமைந்திருப்பது மிகுந்த வருத்தமும், வேதனையும் அளிக்கிறது.

போர்க்குற்றச்சாற்றுகள் குறித்து நம்பகத் தன்மையுடன் கூடிய உள்ளக விசாரணை நடத்த இலங்கை முன்வந்திருப்பதை வரவேற்றுள்ள அமெரிக்கா, இந்த விசாரணை அமைப்பில் காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் இடம் பெற வேண்டும் என்று மட்டும் அறிவுரை வழங்கியுள்ளது. அதாவது போர்க்குற்ற விசாரணையை இலங்கை அரசு அதன் விருப்பப்படி, அதற்கு ஒத்துவரக்கூடிய சில வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு நடத்தி முடித்துக் கொள்ள அமெரிக்கா அனுமதித்திருக்கிறது.
மேலும், இந்த தீர்மானத்தில் பத்திக்கு பத்தி இலங்கைக்கு அமெரிக்கா பாராட்டு மழை பொழிந்திருக்கிறது. இலங்கையில் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் அளிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், ஈழத்தமிழர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிலங்களை திரும்ப ஒப்படைத்தல், வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் சிவில் நிர்வாகங்களை மேம்படுத்த நடவடிக்கை உள்ளிட்ட இலங்கை அரசின் முயற்சிகள் வரவேற்கத்தக்கவை; பாராட்டத்தக்கவை என்று அமெரிக்காவின் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இலங்கையில் போர் முடிந்து 6 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில், வடக்கு மாநிலங்களில் உள்ள தமிழர்களால் இன்னும் நிம்மதியாக வாழ முடியவில்லை. 6 தமிழர்களுக்கு ஒருவர் வீதம் வடக்கு மாநிலத்தில் லட்சக்கணக்கான இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே வாழ வேண்டும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அவரது கூட்டணியில் இடம் பெற்றுள்ள முன்னாள் போர்ப்படைத் தளபதி பொன்சேகா உள்ளிட்ட தலைவர்கள் வெளிப்படையாக கூறியுள்ளனர். இத்தகைய சூழலில் வடக்கு மாவட்டத்தில் தமிழர்கள் அமைதியாக வாழவும், தமிழருக்கு அதிகாரம் அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்போவதாக இலங்கை கூறுவதை அமெரிக்கா நம்புவதும், வரவேற்பதும் மகிழ்ச்சியைத் தரவில்லை; மாறாக வேதனை கலந்த நகைப்பைத் தான் ஏற்படுத்துகிறது.

இலங்கை பிரச்சினை தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன் மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த தீர்மானங்களில் எந்த விஷயத்திலும் இலங்கை மீது நம்பிக்கையில்லை என்று அமெரிக்கா கூறியிருந்தது. ஆனால், இப்போது எல்லா விஷயத்திலும் இலங்கை மீது நம்பிக்கை இருப்பதாக கூறுகிறது. ஆட்சி மாற்றத்தின் காரணமாகத் தான் இந்த மாற்றம் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கையில் ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை என்பது தான் உண்மை. இலங்கையில் ஆட்சி நடத்துபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு தமிழர்களை ஒழிப்பது மட்டும் தான் ஒரே இலக்கு. ஆனால், இதையெல்லாம் மறந்துவிட்டு இலங்கைக்கு சாதகமாக செயல்படுவதன் மூலம் இன்னொரு இனப்படுகொலை நடப்பதற்கான அடித்தளத்தை அமெரிக்கா அமைத்து தருவதாகவே கருதவேண்டியுள்ளது.

ஈழத் தமிழர்களுக்கு அமெரிக்கா நீதி பெற்றுத் தராது என்பது உறுதியாகிவிட்ட நிலையில் அந்தக் கடமை மற்றும் பொறுப்பை இந்திய அரசு ஏற்க வேண்டும். உண்மையில் இலங்கை போர்க்குற்றச்சாற்றுகள் தொடர்பாக அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக இந்தியா தான் இருக்க வேண்டும். ஈழத்தமிழர்களுக்கு நீதி பெற்றுத் தருவதற்காக இந்தியா முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளில் பெரும்பாலானவை தயாராக உள்ளன. இச்சிக்கலில் இனியும் இந்தியா தயக்கத்துடன் செயல்படக்கூடாது. இலங்கை மீதான போர்க்குற்றச்சாற்றுகள் குறித்து பன்னாட்டு நீதிமன்ற விசாரணைக்கு ஆணையிடக் கோரும் தீர்மானத்தை மனித உரிமை பேரவையில் இந்திய அரசே கொண்டு வர வேண்டும்.

இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உண்டு. நான் ஏற்கனவே கூறியதைப் போல, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, அனைத்துக் கட்சித் தலைவர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தில்லி சென்று பிரதமரை சந்தித்து இது குறித்து வலியுறுத்த வேண்டும். தமிழக அரசும்,. மத்திய அரசும் தங்களின் கடமையை நிறைவேற்றாவிட்டால் இலங்கையில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்காது. இதை உணர்ந்து மத்திய, மாநில அரசுகள் தங்கள் கடமையை நிறைவேற்ற வேண்டும்.

தொடர் மிரட்டல்கள் : தமிழகத்தில் நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை

மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரி இருந்த இடத்தில், நரபலி நடந்ததாக கூறப்பட்டு, விசாரணை நடத்தியதில், எலும்பு கூடுகள் கிடைத்திருக்கின்றன. இது, அச்சத்தை வர வழைத்துள்ளது. டி.எஸ்.பி., விஷ்ணுபிரியாவின் மரண பின்னணியில், உயர் அதிகாரிகளின் மிரட்டல் இருந்துள்ளது தெரிகிறது.

முத்துக் குமாரசாமியை தொடர்ந்து, தற்போது, பல லட்சம் கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படும், ‘கிரானைட்’ முறைகேடு குறித்து, விசாரணை செய்து வரும் சகாயத்திற்கும், காவல் துறையினர் போதிய ஒத்துழைப்பு தரவில்லை. அவருக்கு, தொடர் மிரட்டல்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை. இந்த விவகாரங்களில், உண்மைகளை வெளிக்கொணர, அரசு நியாயமான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் இன்று மதுவிலக்கு மானிய கோரிக்கை : விவாதங்கள் என்ன நடக்க போகுதோ.?

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்’ என, எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அபலமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.’

இந்த சமுதாயத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதற்கு முக்கியக் காரணமே மதுதான். பெற்ற தகப்பனை நம்பி மகளை விட்டுவிட்டுச் செல்ல முடியவில்லை. பண்டிகை நாட்களில் இத்தனை கோடிக்கு மது வியாபாரம் நடந்ததாக அறிக்கை கொடுக்கும் அரசு, அதன் பின்னணியில் எத்தனை பெண்களின் கண்ணீர் இருக்கிறது என்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை.

தமிழ்நாட்டில் மது சிகரட் விற்பனைக்கு ஒரு தலை பட்சமாக எடுக்கபடுகிறது.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் மது சிகரட் விற்பனைக்கு தடை விதிக்க சட்டமன்றத்தில் இன்று வரையில் யாரும் பேசியது இல்லை.
மதுவிற்பனை முடிவு என்பது ஒருதலை பட்மாகாக எடுக்கப்பட்ட முடிவு என பொது மக்களால் கருதபடுகிறது.

மதுவை ஒழித்தால் அரசுக்கு வருவாய் குறைந்துவிடும் என்கிறார்கள்.இலவசங்களை நிறுத்தினாலே இந்த இழப்பை ஈடுசெய்ய முடியும் என பலர் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால் தமிழக அரசாங்கம் எதைப் பற்றியும் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருந்து வருகிறது.

பொது மக்கள் நலன் கருதி பொது நல வழக்கு போட்டால் நீதிமன்றம் அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது என கூறி மது விற்பனைக்கு தடை விதிக்க மறுக்கிறது .

தமிழகத்தில், ‘பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்’ என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.’சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தால், பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம்’ என, தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவித்து உள்ளார். தற்போதைய சட்டசபை கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன், தமிழகம் முழுவதும், மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, அ.தி.மு.க., தவிர்த்து, மற்ற கட்சிகள் சார்பில், தீவிர போராட்டம் நடந்தது.

மொபைல் போன் டவர் மீது ஏறி, போராட்டத்தில் ஈடுபட்ட, காந்தியவாதி சசிபெருமாள் மரணம், போராட்டத்தை தீவிரப்படுத்தியது.பிரதமர் மற்றும் முதல்வர் சந்திப்பு தொடர்பாக, காங்., தலைவர் இளங்கோவன் கூறிய, சர்ச்சைக்குரிய கருத்தை கண்டித்து, அ.தி.மு.க.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டதால், பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, நடந்து வந்த போராட்டத்தின் வீரியம் குறைந்தது.

இந்த நிலையில் இன்று காலை, 10:00 மணிக்கு, சட்டசபை கூடுகிறது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானிய கோரிக்கை மீது, விவாதம் நடைபெற உள்ளது.

கவன ஈர்ப்பு தீர்மானம்சட்டசபை கூடியதும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தியும், சசிபெருமாள் மரணம் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என, வலியுறுத்தியும், தி.மு.க., – மார்க்.கம்யூ., – இ.கம்யூ., – காங்., – புதிய தமிழகம் கட்சி சார்பில், கவனஈர்ப்பு தீர்மானம் கொடுக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, எதிர்க்கட்சிகள் பேச முற்பட்டபோது, ‘மானிய கோரிக்கையின் போது பேசுங்கள்’ என, சபாநாயகர் தெரிவித்தார். எனவே, அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானிய கோரிக்கை, இன்று நடைபெற உள்ளது.

என்ன முடிவுஇன்றைய கூட்டத்தில், அனல் பறக்கும் விவாதங்கள் நடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சியினர் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி, பேச உள்ளனர். அதற்கு பதிலளிக்க உள்ள, அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், மதுவிலக்கு பிரச்னையில், அரசு என்ன முடிவு எடுக்க போகிறது என்பதையும் தெரிவிப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டசபையில் இன்று மதுவிலக்கு மானிய கோரிக்கையில் விவாதங்கள் என்ன நடக்க போகுதோ.?

 

 

 

 

தீவிரவாதத்தை ஒழிக்க சிரியா அரசை ஆதரிப்பது ஒன்றே வழி: ரஷ்ய அதிபர் விளாடிமிர்

சிரியாவில் தற்போது நிலவிவரும் சூழ்நிலையை சீர்படுத்த ஆளும் அரசை பலப்படுத்த வேண்டுமானால், தீவிரவாதத்துக்கு எதிரான போரில் உதவியே தீர வேண்டியுள்ளது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கருத்து கூறியுள்ளார்.

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசை பதவியில் இருந்து இறக்கும் நோக்கத்தில் அவரது அதிருப்தியாளர்கள் தொடங்கிய போராட்டம், உள்நாட்டுப் போராக உருவெடுத்துள்ளது

கடந்த நான்காண்டுகளாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் இதுவரை சுமார் 12 ஆயிரம் குழந்தைகள் உள்பட இரண்டரை லட்சம் பேர் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதிபரின் படைகளுக்கு ஆதரவாக ரஷ்யாவில் இருந்து போர்க்கப்பல்களில் ஏராளமான ஆயுதங்களும், ரஷ்ய ராணுவ வீரர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிரியாவில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரை தீவிரப்படுத்தும் ரஷ்யாவின் முயற்சிக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஏற்கனவே கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

சிரியாவுக்கு போர் ஆலோசகர்களையும், ஆயுதங்களையும், வீரர்களையும் அனுப்பி வைத்திருக்கும் ரஷ்யாவின் நடவடிக்கையானது அங்கு அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக பாடுபட்டுவரும் உலக நாடுகளின் முயற்சிகளை சீர்குலைப்பதாக அமைந்துவிடும்.

இந்த நேரத்தில் அவர்கள் எடுக்கும் இந்த நடவடிக்கையால் ஏற்கனவே தோல்வியை சந்தித்துவரும் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சியை காப்பாற்றி விட முடியாது. ரஷ்யாவின் தற்போதைய நடவடிக்கையானது, சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிக்கும் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தி விடாது என ஒபாமா குறிப்பிட்டிருந்தார்.

அவரது கருத்துக்கு பதிலடி தரும் வகையில் சமீபத்தில் பேட்டியளித்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தீவிரவாதத்தை ஒழிக்கும் நோக்கத்தில்தான் சிரியா அரசுக்கு ஆயுதங்களை அளித்து, ஆதரித்து வருவதாக கூறியுள்ளார்.

அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள புதின், ‘அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவியில் இருந்து இறக்க வேண்டுமா?, எப்போது இறக்க வேண்டும்? என்பதை சிரியா நாட்டின் மக்கள் மட்டுமே முடிவு செய்ய வேண்டும்.

அதைவிடுத்து, சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சியை அழிக்க எடுக்கப்படும் எந்த முயற்சியாக இருந்தாலும், லிபியா உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்டது போன்ற மோசமான சூழ்நிலையை உண்டாக்கி விடும் என நான் நம்புகிறேன். அங்கு அரசின் அனைத்து துறைகளும் சீர்குலைந்துப்போய் உள்ளன. ஈராக்கிலும் இதேநிலை தான் நீடிக்கின்றது.

சிரியாவில் தற்போது நிலவிவரும் சூழ்நிலையை சீர்படுத்த ஆளும் அரசை பலப்படுத்த வேண்டுமானால், தீவிரவாதத்துக்கு எதிரான போரில் உதவியே தீர வேண்டியுள்ளது. அதேவேளையில், எதிர்ப்பாளர்களுடன் ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தி, சீர்திருத்தங்களை மேற்கொள்ளும்படியும் கேட்டுக்கொள்ள வேண்டியுள்ளது.’ என்று கூறினார்.

சிரியாவில் ரஷ்யப் படைகளின் தலையீடு அதிகமாக உள்ளதே,,? இது அதிபர் பஷர் அல் ஆசாத்தை மீட்பதற்காகவா? என்ற கேள்விக்கு பதிலளித்த புதின், ‘உங்கள் யூகம் சரிதான்’ என்று தெரிவித்தார்.

சொந்தநாட்டு மக்களை மிககொடூரமாக நடத்திய அதிபர் ஆசாத்தின் அணுகுமுறைதான், சிரியாவில் உள்நாட்டுப் போரையும், ஐ.எஸ். தீவிரவாதிகள் என்ற இயக்கத்தையும் உருவாக்கி விட்டது என அமெரிக்கா குற்றம்சாட்டிவரும் நிலையில் புதின் தற்போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கருத்து தெரிவித்துள்ளார்.

 

 

மத்திய அமைச்சர் பதவி கொடுங்கள்: சுப்ரமணியசாமி

டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை., துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ., தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியசாமி,

நான் விருப்பப்பட்டோ அல்லது என்னிடம் கேட்டோ அரசு இந்த பதவியை எனக்கு வழங்கவில்லை. நான் அரசியலில் இருக்கவும், அதுில் கவனம் செலுத்தவுமே விரும்புகிறேன்.

சாத்திய கூறு இருந்தால் எனக்கு எதாவது பதவி கொடுக்க வேண்டும் என விரும்பினால், எனக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுங்கள் என கூறியுள்ளார்.

மெக்காவில் 710 க்கும் மேற்பட்டோர் பலி : தமிழக சட்டசபையில் மவுன அஞ்சலி

சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் ஒரே நேரத்தில் லட்சகணக்கானவர்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்டநெரிசலில் சிக்கி 710க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 800 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 14 பேர் மற்றும் காயமடைந்த 13 பேர் இந்தியர்கள் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்து உயிரிழந்தவர்களின் விபரங்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டு ள்ளது.

உயிரிழந்த 14 பேர் ரின் பட்டியலை வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த துயர சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் இறந்துள்ளனர்.. அவர்களது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில், இந்த துயர சம்பவத்தில் பலியானவர்களுக்காக, 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த துயர சம்பவத்திற்கு, பல்வேறு தரப்பிலிருந்து இரங்கல் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

மெக்காவில் 710 க்கும் மேற்பட்டோர் பலி : தமிழக சட்டசபையில் மவுன அஞ்சலி

சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் ஒரே நேரத்தில் லட்சகணக்கானவர்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்டநெரிசலில் சிக்கி 710க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 800 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 14 பேர் மற்றும் காயமடைந்த 13 பேர் இந்தியர்கள் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்து உயிரிழந்தவர்களின் விபரங்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டு ள்ளது.

உயிரிழந்த 14 பேர் ரின் பட்டியலை வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த துயர சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் இறந்துள்ளனர்.. அவர்களது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில், இந்த துயர சம்பவத்தில் பலியானவர்களுக்காக, 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த துயர சம்பவத்திற்கு, பல்வேறு தரப்பிலிருந்து இரங்கல் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

இந்திய வீராங்கனை சாய்னா பேட்மிண்டன் தரவரிசையில் முதலிடத்தில் தொடருகிறார்

 பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார் பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசைப் பட்டியலை சர்வதேச பேட்மிண்டன் சங்கம் நேற்று வெளியிட்டது
இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 13-வது இடத்தில் உள்ளார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த் 5-வது இடத்தையும், காஷ்யப் 8-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

தென் கொரியா ஓபன் போட்டியில் இறுதி ஆட்டத்தில் தோல்வி கண்ட இந்திய வீரர் அஜய் ஜெயராம் 7 இடங்கள் முன்னேற்றம் கண்டு 25-வது இடத்தை பெற்றுள்ளார். இந்திய வீரர் பிரனாய் ஒரு இடம் பின்தங்கி 16-வது இடத்தை பிடித்துள்ளார்.

இந்தியாவின் ஜூவாலா கட்டா-அஸ்வினி பொன்னப்பா ஜோடி 11-வது இடத்தில் பெண்கள் இரட்டையர் பிரிவில் தொடருகிறது.

விமானத்தில் 1 கிலோ தங்கம் கடத்தல்: வாலிபர் கைது

சென்னை விமான நிலையத்துக்கு இன்று காலை இலங்கையில் இருந்து பயணிகள் விமானம் வந்தது. அதில் இருந்த பயணிகளின் உடமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இலங்கையை சேர்ந்த சுரேஷ் வைத்து இருந்த டீ தூள் பாக்கெட்டுகள் குறித்து கேட்ட போது முன்னுக்கு பின் முரணாக பேசினார்.

சந்தேகம் அடைந்த அதிகாரிகள் டீ தூள் பாக்கெட்டுகளை பிரித்து பார்த்தனர். அதில் தலா 100 கிராம் எடையுள்ள தங்க கட்டிகள் மறைத்து கடத்தி வந்திருப்பது தெரிந்தது.

மொத்தம் 1 கிலோ தங்கம் இருந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும். தங்கம் யாருக்கு கடத்திச் செல்லப்படுகிறது. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்று சுரேசை கைது செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

“விடுங்கோ மாமா!” (“அது என்ன விடக்கூடிய காலா! பின்னாலே இதனடியில் விழ மக்கள் க்யூவிலே நிற்கப்போகிறார்களே!” ) .

“விடுங்கோ மாமா!”

(“அது என்ன விடக்கூடிய காலா! பின்னாலே இதனடியில் விழ மக்கள் க்யூவிலே நிற்கப்போகிறார்களே!” )

.
[ஜாதகமும்,ரேகையும்]

கட்டுரையாளர்-கணேச சர்மா

தட்டச்சு-வரகூரான் நாராயணன்

திடீரென்று ஒரு நாள் காலை மகாலட்சுமி [பெரியவாளின் தாயார்] கண் விழித்தபோது, பக்கத்தில் சுவாமிநாதனைக் காணவில்லை. வீடெல்லாம் தேடியாகிவிட்டது. ஊர் மூலைகளெல்லாம் துழாவி வந்தாகிவிட்டது….காணோம். “ஒருவேளை சிநேகிதன் கிருஷ்ணஸ்வாமி வீட்டுக்குப் படிக்க சென்றுவிட்டானோ?” என்று போய்ப் பார்த்தால், முதலுக்கே மோசம்.நண்பனையும் காணோம்!.

இரண்டு குழந்தைகளையும் தேடி ஊரே அல்லோலகல்லோலப்பட்டது.அந்த சமயத்தில் மடத்திலிருந்து ஒரு ஆள் வந்து, குழந்தைகள் மடத்துக்கு வந்தார்கள்.பத்திரமாக இருக்கிறார்கள். சுவாமிகள் உங்களிடம் சொல்லிவிட்டு வரச் சொன்னார். நாலு
நாட்கள் வைத்திருந்து அப்புறம் குழந்தைகளை அனுப்புவதாகச் சொன்னார்!” என்றார். இதைக் கேட்ட பெற்றோருக்கு எதுவும்புரியவில்லை. “எதற்காக அத்தனை பெரிய குரு இத்தனை சின்னக் குழந்தைகளை விடாமல் வைத்துக் கொள்ள வேண்டும்?” என்பது புதிராக இருந்தது.

உண்மை இதுதான். ஒரு நாள் சுவாமிநாதன், ஜகத்குருவாக மலர்ந்து காமகோடி பீடத்தை அலங்கரிக்கப் போகிறார், தன்னுடைய முடிவும் நெருங்கிவிட்டது.பின்னால் இவனுடன் சில நாட்கள் சேர்ந்திருக்க வாய்ப்பு கிடைக்கப் போவதில்லையே?

அந்த ஆசையை நாலு நாளாவது வைத்துக்கொண்டு தீர்த்துக் கொள்ளலாம் என்று பரம குருவானவர், தீர்க்க திருஷ்டியுடன் முடிவு செய்திருக்க வேண்டும். சுவாமிநாதன் அவரை பெருமுக்கலில் பார்த்ததற்கு அடுத்து அவர் ஸாரம் என்ற இடத்துக்குப் போய்விட்டார். இந்தக் குழந்தைக்கோ அவரைப் பார்த்தது முதல் வீட்டில் இருப்பே கொள்ளவில்லை. உடனே, சொல்லாமல் கொள்ளாமல் துணைக்கு சிநேகிதனையும் அழைத்துக் கொண்டு அங்கே போய்விட்டான்.

ஆச்சார்யரோ, “முதலில் ஆத்திலே சொல்லிட்டு வந்தாயா?” என்று கேட்டார். “இல்லை ஸ்வாமி! உங்களைப் பாக்கணும்னு தோணித்து: உடனே கிளம்பி வந்துட்டேன்” என்கிறான் குழந்தை.

இதற்காக குரு சந்தோஷப்பட்டாராம். ஏனெனில், இப்படி வீட்டையும் வாசலையும் விட்டு வரவாதானே அவருக்கு வேணும்!

எல்லா தகப்பனாரையும் போல் தன் பிள்ளை டாக்டராக அல்லது இன்ஜினீயராக வர வேண்டுமென்று தந்தை சுப்ரமண்ய சாஸ்திரிகள் ஆசைப்பட்டார். இத்தனை சின்ன வயசில் இப்படி மடத்தை நோக்கி ஓடினால் எந்தத் தந்தைதான் கவலைப்படமாட்டார்?

“இது என்ன தேறுமா…தேறாதா? படிப்பு கிடிப்பு வருமா?”
என்ற பயம் அவரை உலுக்கியது. உடனே சிநேகிதன்
கிருஷ்ணஸ்வாமியின் அப்பா வெங்கட்ராமனைத் தேடிப் போனார். அவர் ஒரு சிறந்த ஜோதிடர்.மேலும் சுப்ரமண்ய ஐயருக்க நெருங்கிய நண்பர்.

“வெங்கட்ராமா! சுவாமிநாதன் ஜாதகத்தைக் கொஞ்சம் பாரு. இவனுக்கு ஜாதகம் எப்படி இருக்கு?” என்று காட்டினார்.அதைப் பார்த்ததும் ஜோசியருக்குப் பேச்சே வரவில்லை.சுவாமிநாதன் சாட்சாத் ஈஸ்வரன் என்று தெரிந்தது. ஆனால், ஆவலோடு பார்த்துக் கொண்டிருக்கும் நண்பனுக்கு ஏதாவது சொல்ல வேண்டும். அதனால், “சுப்ரமண்யா! நீ உன் பிள்ளையைப் பற்றிக் கவலையேபடாதே. நம்மைப் போன்றவர்கள் வீட்டில் பிறக்கும் குழந்தையாகத் தெரியவில்லை. இவன் ஜாதகத்தில் பெரிய ராஜாக்களுக்கு உண்டான யோகமெல்லாம் இருக்கு. சக்ரவர்த்தியாக உலகமே கொண்டாட வாழப் போகிறான்!” என்று பெசினார்.

வெறும் ராஜாவாகவா மாறினார்! உலகை உய்விக்க வந்த யதிராஜராக அல்லவா ஒளி வீசினார்!.

அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், ரேகைகளையும் பார்க்கஆவல்கொண்டஜோசியர்,அங்கிருந்த
சுவாமிநாதனிடம் ,”போய் கால் அலம்பிண்டு வா” என்று கட்டளையிட்டார். அலம்பிக்கொண்டு வந்தவனை,நாற்காலி ஒன்றில் அமர்த்தி அழுக்கு ஒட்டிக் கொண்டிருந்த காலில் தண்ணீர் விட்டுத் தன் கையாலேயே அலம்பினார்….துடைத்தார். சற்று தூக்கிப் பார்த்தார்.அப்படியே கெட்டியாய் பிடித்துக் கொண்டு அழுதார். காலை விடவேயில்லை.

“விடுங்கோ மாமா!” என்ற சிறுவனின் குரலோ,
“என்ன இது! குழந்தை காலை பிடிச்சுண்டு…விடு” என்ற சுப்ரமணிய சாஸ்திரியின் குரலோ ஜோசியர் காதில் விழவேயில்லை.

“அது என்ன விடக்கூடிய காலா! பின்னாலே இதனடியில் விழ மக்கள் க்யூவிலே நிற்கப்போகிறார்களே!” என்று நினைத்தார் போலும்.

காலில் உள்ள சங்கு சக்கர ரேகைகள், மகர ரேகை, தனுர் ரேகை, பத்ம ரேகை எத்தனை உண்டோ, அத்தனையும் ஒரு அவதார புருஷன் அவர் என்று கட்டியம் கூறிக் கொண்டு பளிச்சென்று அவர் கண்ணுக்குப் புலப்பட்டன.

முதன் முதலில் பெரியவாளுக்குப் பாத பூஜை பண்ணும் பாக்கியம் இந்த வெங்கட்ராமய்யருக்குத்தான் கிடைத்தது.நல்ல கைராசிதான்!

விஷ்ணுவுக்கும் கிடைக்காத பாதத்தை இவர் பார்த்துவிட்டார் என்றால், இவர் பாக்கியமே பாக்கியம்!.