Home Blog Page 6010

கைதிகள் சிறைபிடித்த சிறை அதிகாரிகள் விடுவிப்பு?

சென்னை புழல் சிறையில் சிறை அதிகாரி குமார் மற்றும் வார்டன் மாரி ஆகியோரை கைதிகள் சிறைபிடித்து வைத்தனர்.

உயர் பாதுகாப்பு பகுதியில் இருந்த கைதிகள் தாக்குதல் நடத்தியதில் நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் உயர் அதிகாரிகள் நடத்தி பேச்சுவார்த்தையை அடுத்து கைதிகள் சிறை அதிகாரிகளை விடுவித்ததாக சிறை வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பள்ளி வளாகத்தில் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி

 

மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள பர்தாமான் என்ற இடத்தில் பள்ளி ஒன்றில் நாட்டு வெடிகுண்டு ஒன்று வெடித்தது. இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானார். 3 பள்ளிக்குழந்தைகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விரைவில் தி.மு.க., ஆட்சிக்கு வரும் என மக்கள் நம்பிக்கை : ஸ்டாலின்

திமுக பொருளாளர் ஸ்டாலின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மாநிலமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.இன்று மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பயணம் செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

உலக அளவில் பேசப்படும் மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதியான அலங்காநல்லூரில் மக்களை சந்தி்த்து குறைகளை
கேட்டபோது ஸ்டாலின் கூறுகையில் அப்பகுதி மக்களிடம் கூறுகையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு ஆபத்து வரும்போதெல்லாம் துணை நின்றது திமுக. ஜல்லிக்கட்டை முறைப்படுத் திமுக ஆட்சியில் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஜல்லிக்கட்டு முடங்கியதற்கு அதிமுக அரசே காரணம். திமுக ஆட்சி கொண்டு வந்தபடி சட்டப்படி ஜல்லிக்கட்டு நடத்தவில்லை.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும். தை மாதத்திற்குள் ஜல்லிக்கட்டு தடையை நீக்க வேண்டும். அமைச்சர்களாலேயே முதல்வரை பார்க்க முடியவில்லை. அதிமுக ஆட்சியில் நிர்வாகம் ஸ்தமபித்துள்ளது. சட்டசபையில் ஜெயலலிதா, அறிவித்தபடி பல நூறுகோடி திட்டங்களில் ஒனறாவது நடந்துள்ளதா என கேள்வி எழுப்பினார். திமுக ஆட்சிக்கு வரும் என மக்களிடம் நம்பிக்கை அதிகரித்துள்ளது என ஸ்டாலின் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

உளவு பார்த்த சோனியா,ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்

நேதாஜி சுபாஷ்சந்திர போசின் பேரன்களில் ஒருவரான சந்திரகுமார் போஸ் அவரின் உறவினர்களை சோனியா மற்றும் ராகுல் ஆகியோர் கூட்டு சேர்ந்து முன்னாள் பிரதமரை உளவு பார்க்க, நேரு உத்தரவிட்டதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

திரிணமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சில நாட்களுக்கு முன், நேதாஜி தொடர்பாக, மேற்கு வங்க அரசு வசமிருந்த, 64 ஆவணங்களை வெளியிட்டார். அப்போது அவர் கூறும் போது, ‘இந்த ஆவணங்களைப் பார்க்கும் போது, நேதாஜியின் உறவினர்களை, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, முன்னாள் பிரதமர் நேரு, பல ஆண்டுகளாக உளவு பார்க்க உத்தரவிட்டுள்ளது தெரிய வருகிறது’ என கூறினார்.

நேதாஜியின் பேரனான சந்திர குமார் போஸ், பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:

இந்திய அரசு கூறுவது போல, 1945 ஆகஸ்ட் 18ல், தைவானில் நடைபெற்ற விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை; அதன் பிறகு பல ஆண்டுகள் உயிருடன் வாழ்ந்து உள்ளார். எனினும், அவரால் இந்தியா வர முடியாத நிலை இருந்துள்ளது.

என் தந்தை அமியாநாத் போசை, அப்போதைய அரசு உளவு பார்த்து வந்துள்ளது. எங்கள் உறவினர்களின் கடிதப் போக்குவரத்துகள், வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. பல ஆண்டுகளுக்கு இது தொடர்ந்து
உள்ளது.அப்போதைய பிரதமர் நேரு உத்தரவின் படியே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுஉள்ளன.

செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த பெண்ணை நேதாஜி மணந்ததாகவும், அவர்களுக்கு, நிமா என்ற பெயரில் மகள் இருந்ததாகவும் வெளியாகும் செய்திகளில் உண்மைஇல்லை. மறுத்தால் இதற்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா, அவர் மகனும், துணைத் தலைவருமான ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும். மறுத்தால், அந்த சதிச் செயலுக்கு அவர்களும் ஆதரவு அளிக்கின்றனர் என்பது அர்த்தமாகும் என சந்திரகுமார் போஸ் கூறியுள்ளார்.

தமிழ்நாடு – புதுச்சேரி முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம்.

தமிழை வழக்காடு மொழியாக மாற்றக்கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் 15 வழக்கறிஞர்கள் செப்டம்பர் 16ம் தேதி போராட்டம் நடத்தினர்.

இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டுள்ள அகில் இந்திய பார் கவுன்சில், போராட்டத்தில் ஈடுபட்ட மதுரை வழக்கறிஞர்கள்சங்க தலைவர் தர்மராஜ், செயலாளர் ராமசாமி உள்ளிட்ட 15 வக்கீல் தொழில் செய்ய தடை அகில இந்திய பார்கவுன்சில் உத்தரவு. உள்ளிட்ட 15 பேர், வழக்கறிஞர்களாக பணியாற்ற இடைக்கால தடை விதித்துள்ளது.

இந்த நிலையில் வருகிற 28 ந்தேதி நீதி மன்றங்களை புறக்கணித்து தமிழ்நாடு – புதுச்சேரி முழுவதும் வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பு போராட்டம் நடத்த அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

புத்தன் இயேசு காந்திக்காக பைக் ஓட்டி அசத்திய வசுந்தரா

 

ப்ளசிங் எண்டர்டெயினர்ஸ் சார்பில், பிரபாதீஸ் சாமுவேல் தயாரித்து வரும் ‘புத்தன் இயேசு காந்தி’ படத்தில் புலனாய்வுப் பத்திரிகையாளராக வசுந்தரா நடித்து வருகிறார்.

அரசியல்வாதிகளின் ஊழலை ஆதாரங்களுடன் பத்திரிகையில் எழுதி அம்பலப்படுத்தும் கதாபாத்திரம் இவருக்கு.

இந்தப் படத்தில் சென்னை நகருக்குள் மிகவும் வேகமாக கார் ஓட்டும் காட்சியில் வசுந்தரா நடித்திருக்கிறார். மேலும், பரபரப்பான நிருபர் கதாபாத்திரத்துக்கு துணிச்சலாக பைக் ஓட்டும் காட்சிகளும் படத்தில் வருகிறது.

மிகச் சிறப்பாக கார் ஓட்டும் வசுந்தராவுக்கு உண்மையில் பைக் ஓட்டத் தெரியாதாம். இதற்காக அவருக்கென படக்குழுவினர் பல நாட்கள் பைக் ஓட்டக் கற்றுத் தந்துள்ளனர். தினமும் காலையில் அண்ணா நகரில் இருந்து கோயம்பேடு, வடபழனி, மதுரவாயல், பூந்தமல்லி என நகரில் பரபரப்பான சாலைகளில் பைக் ஓட்டக் கற்றுக் கொண்டார் வசுந்தரா. அதன்பின் பைக் ஓட்டும் காட்சியில் மிகவும் துணிச்சலாக வேகமாக பைக் ஓட்டி நடித்திருக்கிறார். பல நாட்களாக பைக் ஓட்டுபவர் போல மிகவும் லாவகமாக பைக் ஓட்டியிருக்கிறார். அவரது துணிச்சலை சற்றும் எதிர்பாராத படக்குழுவினர் அவரை பாராட்டினர்.

படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கிஷோர், அசோக், மதுமிதா, கயல் வின்சென்ட், கல்லூரி அகில் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
ஒளிப்பதிவு- விஜய் ஆம்ஸ்ட்ராங் .
இசை- வேத்சங்கர். ​( இவர் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ ‘மதுபானக்கடை’ ,’மூன்றாம் உலகப்போர்’படங்களின் இசையமைப்பாளர்)
பாடல்கள்- கவிபாஸ்கர்
படத்தொகுப்பு- ரமேஷ்பாரதி.
கலை -மூர்த்தி.
நடனம் -எஸ். சுரேஷ் ,
சண்டை -மிண்ட் கணேஷ்
இயக்கம் வே.வெற்றிவேல்சந்திரசேகர்.
இணை தயாரிப்பு கபிலன் சிவபாதம்
தயாரிப்பு பிரபாதீஸ் சாமுவேல்.
சென்னையைச் சுற்றியுள்ள பகுதியில் புத்தன் இயேசு காந்தி’ படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக வளர்ந்து வருகிறது.

 {gallery}gallery/buththan-yesu-ganthi:::0:0{/gallery}

 

எம்.எல்.ஏ. சோம்நாத் பாரதி-யின் நாயை கைது செய்த டெல்லி போலீஸ்

டில்லி ஆம்ஆத்மி கட்சி எம்.எல்.ஏ., சோம்நாத் பாரதிக்கு எதிராக அவரது மனைவி லிபிகா மித்ரா சமீபத்தில் போலீசிலும், பெண்கள் ஆணையத்திலும் குடும்ப வன்முறை புகார் அளித்தார்.

இதையடுத்து போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க விசாரணை கோர்ட்டில் சோம்நாத் பாரதி முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார்.அதன் பேரில் சோம்நாத் பாரதி மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கினார்கள்.
இந்த மனு தள்ளுபடியானதால் டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவும் நேற்று முன்தினம் தள்ளுபடியானது. எனவே எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படும் நிலை ஏற்பட்டது.

எனவே கைதேர்ந்த குற்றவாளியை போன்று தலைமறைவாக இருந்த டில்லி ஆம்ஆத்மி கட்சி எம்.எல்.ஏ., சோம்நாத் பாரதியை டில்லி போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆக்ரா அருகே அவர் தலைமறைவாக இருந்ததாகவும் நேற்று கூறப்பட்டது. அவரை கைது செய்ய ஆக்ரா அருகே பல இடங்களில் டெல்லி காவல் துறையினர் பிடியில் சிக்கவில்லை.

இந்த நிலையில் அவரை கைது செய்ய டெல்லி போலீசார் இன்று அவரது இல்லத்திற்கு சென்றனர். எம்.எல்.ஏ., சோம்நாத் பாரதி வீட்டில் இல்லாததால் அவருடைய செல்ல நாய் ‘டான்வா-னை அழைத்து சென்றனர்.

தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி வருவாயை தணிக்கை செய்ய ராமதாஸ் கோரிக்கை

சென்னை

தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளின் வருவாயை தணிக்கை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கை…

அரசு அங்கீகாரத்துடன் பகல் கொள்ளை அடிக்கப்படுவதற்கு சிறந்த உதாரணம் கூற வேண்டுமானால் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் நடக்கும் கட்டணக் கொள்ளையை குறிப்பிடலாம். அந்த அளவுக்கு எந்த சட்டத்தையும் மதிக்காமல் நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்களிடம் சுங்கக்கட்டணம் என்ற பெயரில் பகல் கொள்ளையை நடத்தி வருகின்றன தனியார் சுங்கச்சாவடிகள்.

விரைவான, பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்யும் நோக்குடன் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் தங்க நாற்கர சாலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்படி சென்னை & கன்னியாகுமரி, சென்னை & பெங்களூர் உள்ளிட்ட சாலைகள் 4 வழிச்சாலைகளாக மாற்றப்பட்டன. இந்த சாலைகளை பயன்படுத்துவதற்காக தமிழகத்தில் மொத்தம் 40 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைத்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தொடக்கத்தில் சுங்கக்கட்டணம் குறைவாக இருந்ததாலும், நெடுஞ்சாலைகளில் வேகமாக பயணம் செய்ய முடிவதால் பயண நேரம் குறைந்ததாலும் சுங்கக்கட்டணத்தை மகிழ்ச்சியுடன் செலுத்தினர். ஆனால், ‘‘சுமை கால் பணம்… சுமை கூலி முக்கால் பணம்’’ என்பதைப் போல கடந்த 10 ஆண்டுகளில் சுங்கக்கட்டணம் பல முறை உயர்த்தப்பட்டதால், பயணத்திற்கான செலவை விட, சுங்கக் கட்டணத்திற்கான செலவு அதிகரித்து விட்டது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள 40 சுங்கச்சாவடிகளிலும் அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு சென்னையை அடுத்த செங்கல்பட்டு பரணூரில் உள்ள சுங்கச்சாவடியை குறிப்பிடலாம். இந்த சுங்கச் சாவடி வழியாக நாள்தோறும் குறைந்தது 90 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வாகனங்கள் செல்கின்றன. ஒவ்வொரு வாகனத்திற்கும் அதன் தன்மையைப் பொறுத்து ரூ.30 முதல் ரூ.215 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சராசரியாக ஒரு வாகனத்திற்கு ரூ. 70 வசூலிக்கப்படுவதாக வைத்துக் கொண்டால் ஒரு நாளைக்கு ரூ. 63 லட்சம் வீதம் ஆண்டுக்கு ரூ.286.80 கோடி கிடைப்பதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் செங்கல்பட்டு பரணூர் சுங்கச்சாவடியை நிர்வகிக்கும் தனியார் நிறுவனத்திற்கு ரூ.2868 கோடி வருவாய் கிடைத்திருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற வகையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இச்சுங்கச்சாவடிக்குட்பட்ட சாலையின் நீளம் 90 கி.மீ. ஆகும். இச்சாலையை அமைக்க செய்யப்பட்ட முதலீடு ரூ.80 கோடி மட்டுமே. ஆனால், 10 ஆண்டுகளில் அதை விட 36 மடங்கு அதிக வருவாயை இந்த சாலையை அமைத்த நிறுவனம் ஈட்டியிருக்கிறது.

தனியார் சாலைகளில் சுங்கக்கட்டணம் வசூலிப்பதற்காக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வகுத்துள்ள விதிகளின்படி, ஒரு நெடுஞ்சாலையை அமைப்பதற்கான முதலீடு எடுக்கப்பட்டுவிட்டால், அதன்பின் பராமரிப்புக்காக 40% கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும். ஆனால், செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் முதலீட்டைவிட 36 மடங்கு லாபம் ஈட்டப்பட்ட பிறகும், வழக்கமான கட்டணம் தான் வசூலிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, ஆண்டுக்கு ஒருமுறை 10 முதல் 15 விழுக்காடு வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் மட்டும் தான் இப்படி நடக்கிறது என்று கூற முடியாது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல, இந்தியா முழுவதும் சுங்கச்சாவடிகளில் நடக்கும் பகல் கொள்ளைக்கு இது ஓர் உதாரணம் என்று தான் கூற வேண்டும்.

இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட அனைத்து நெடுஞ்சாலைகளிலும் முதலீடு எடுக்கப்பட்டு விட்டது. ஆனால், வருவாயைக் குறைத்துக் காட்டி, தொடர்ந்து முழுமையான சுங்கக் கட்டணத்தை தனியார் நிறுவனங்கள் வசூலித்து வருகின்றன. இந்த மோசடிக்கு மத்திய அரசும் உடந்தையாக உள்ளது. இந்தியாவில் அனைத்து வாகனங்களுக்கும், அவை வாங்கப்படும் போதே வாழ்நாள் முழுமைக்குமான சாலைவரி வசூலிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, டீசல், பெட்ரோல் ஆகியவற்றின் விலைகள் மீது சாலைப் பராமரிப்புக்காக ரூ.2 கூடுதல் வரியாக வசூலிக்கப்படுகிறது. இதற்குப் பிறகும் நெடுஞ்சாலைகளில் பயணிக்க தனியாக சுங்கக்கட்டணம் வசூலிப்பது சட்ட விரோதம் ஆகும். அந்த சட்ட விரோத செயலையே பகல் கொள்ளையாக மாற்றியிருப்பதை மன்னிக்க முடியாது.

தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் நடைபெறும் கட்டணக் கொள்ளைக்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டியது அவசியம் ஆகும். இதற்காக ஒவ்வொரு சுங்கச்சாவடிக்கும் தணிக்கையாளர்கள், மக்கள் அடங்கிய குழுவை அமைத்து சுங்கச்சாவடியின் வருவாயை பொதுத்தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும். முதலீடு திரும்ப எடுக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் பராமரிப்புக்காக 20% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று ஆணையிட வேண்டும். ஏதேனும் நெடுஞ்சாலையில் முதலீட்டை திரும்ப எடுத்த பிறகும் முழுமையான கட்டணம் வசூலிக்கப்படுவது தணிக்கையில் கண்டறியப்பட்டால், அந்த சாலைகளில் சுங்கக்கட்டணத்தை அடியோடு ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும்

புதுச்சேரியில் சாகச ஓட்டம் தொடக்கம்

புதுச்சேரி:
புதுச்சேரி சுற்றுலா துறை, ஹாஷ் ஹௌஸ் ஹாரியர்ஸ் என்ற அமைப்பு சார்பில் பான் ஏசியா பாண்டி-2015 சுற்றுலா சாகச ஓட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் முதன்முறையாக ஹாஷ் ஓட்டம் நடத்தப்படுகிறது. ஹாஷ் ரன் எனப்படும் ஓட்டம் கடந்த 1938-ம் ஆண்டு மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
தொடர்ச்சியாக பல்வேறு நாடுகளில நடத்தப்பட்டு தற்போது முதன்முறையாக புதுச்சேரியில் ஹாஷ் சுற்றுலா சாகச ஓட்டம் நடத்தப்படுகிறது. இதுகுறித்து சுறறுலா அமைச்சர் பெ.ராஜவேலு கூறியதாவது:
புதுவையில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையிலும், அதிக வெளிநாட்டவரை ஈர்க்கும் வகையிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதில் பர்வீன் ஹாலிடேஸ் நிறுவனத்தினருடன் இணைந்து சுற்றுலா துறை இதை நடத்துகிறது. இதற்காக மொத்தம் ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கப்ப்டுடள்ளது. அமெரிக்கா, கொரியா, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் குறைந்த மற்றும் நீண்ட தூர ஓட்டங்கள் என இதில் மொத்தம் 3000 பேர் பங்கேற்கின்றனர். இதன் நிறைவு நிகழ்ச்சி லேபாண்டி ஓட்டலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.
சென்னை ஹாஷ் அமைப்பு நிர்வாகி சசி சர்மா கூறியதாவது:
ஹாஷ் ஓட்டத்தில் மொத்தம் 6 வகைகளில் நடத்தப்படுகிறது. குறைந்த தூரமாக 3 முதல் 5 கி.மீ தூரமும், நீண்ட தூரமாக 26 கி.மீ தூரமும் சாகச ஓட்டமாக நடத்தப்படும்.

ஏகதின தீர்த்தவாரி

தட்சிண அகோபிலம் என்றழைக்கப்படும் கீழப்பாவூரில் சுமார் 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த 16 திருக்கரங்கள் கொண்ட அபூர்வ நரசிம்மர் கோவிலில்  புரட்டாசி திருவோண நட்சதித்திர நாளன்று ஏக தின தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது   ஸ்ரீ நரஸிம்ஹபுஷ்கரணியில்(தெப்பகுளத்தில் ) காலை பெருமாள் எழுந்தருளினார் பின்பு தெப்பகுளத்திற்க்கு வாஸ்து சாந்தி ,பிரவேச பலி ,சர்வதோஷநிவர்த்திக்காக புருஷ சூக்தஹோம ம் ,கலசத்தில் வருண ஜெபம் ,கும்பாபிஷேகம் பின்னர்  பெருமாளுக்கு தெப்பகுளத்தில் வைத்து விசேஷ அபிஷேகங்களும் உற்சவ மூர்த்தியுடன் தீர்த்தவாரி நடைபெற்றது  ,பெருமாள் சப்பரத்தில் திருக்கோவிலையும்,தெப்பக் குளத்தையும்தீர்த்த வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது பின்னர் பக்த்தர்களுக்கு பிராசதம் வழங்கப்பட்டது மாலை சுவாமி சிறப்பு அலங்காரத்தில் திருக்கோவிலையும்,தெப்பக் குளத்தையும்தீர்த்த வலம் வருதல் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது, பூஜையில் சித்தேஸ்வரி பீடம் மௌன சுவாமிகள் ,நெல்லை பாராளுமன்றஉறுப்பினர் கே.ஆர்.பி .பிரபாகரன் ஆகியோர் பூஜையில் கலந்துகொண்டனர்
பூஜைக்கான ஏற்பாடுகளை இந்து சமயஅறநிலையத்துறையினரும் ,ஸ்ரீ நரஸிம்ம சுவாமி கைங்கர்ய சபாவினரும் பக்தகோடிகளும் செய்திருந்தனர்