Home Blog Page 6009

துக்ளக்ஆசிரியரும்,அரசியல் விமர்சகருமான சோ ராமசாமிக்கு அறுவை சிகிச்சை

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் துக்ளக்’ ஆசிரியரும், நடிகரும், அரசியல் விமர்சகருமான சோ மூச்சு திணறல் மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்ந்து டாக்டர்கள் கண்காணிப்பில் இருந்த சோவின் உடல் நிலை நேற்று திடீர் என்று மோசம் அடைந்து கவலைக்கிடமாகவும் உள்ளது.

மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் இந்த நிலையில் மூச்சுவிடுவதில் சிரமம் உள்ளதால் இன்று மதியம் அவக்கு சிறிய அறுவை சிகிச்சை நடக்க உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக நம்ப தகுந்த வட்டார தகவல்கள் கூறுகிறது.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த முடியாது : அ.தி.மு.க அரசு திட்டவட்ட அறிவிப்பு

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த முடியாது என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சட்டசபையில் நேற்று திட்டவட்டமாக அறிவித்தார்.

பூரண மதுவிலக்கு கேட்டு, எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கைக்கு, அரசு அளித்துள்ள விளக்கமாவது :-

சட்டசபையில் மதுவிலக்கு தொடர்பாக நடைபெற்றவிவாதம்:

மார்க்சிஸ்ட் கம்யூ., – பாலபாரதி: தமிழகத்தில் மது பழக்கம் அதிகரித்துள்ளது; குழந்தைகள், இளம்பெண்கள் எல்லாம் மது அருந்தும், புதிய கலாசாரம் பரவி வருகிறது. தினமும், 38 சதவீதம் பேர், மது குடிக்கின்றனர் என, மது தொடர்பான ஆராய்ச்சிகள் கூறுகின்றன.’குடி கெட்ட பழக்கம்’ என்ற நிலை மாறி, ‘அரசே மதுக் கடைகளை திறந்துள்ளதால் குடிக்கிறோம்’ என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்: மது தீமை தான். ஆனால், பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால், தவறு செய்வோர் அதிகரிப்பர்; கள்ளச் சாராய சாவு அதிகரிக்கும்; மிகப்பெரிய தீங்கு ஏற்படும். பூரண மதுவிலக்கை அமல்படுத்திய நாடுகளாலும், அதை முழுமையாகச் செயல்படுத்த முடியவில்லை. இஸ்லாம், மதுவிற்கு எதிரானது. ஆனால், இஸ்லாமிய நாடுகள் சிலவற்றிலும், மதுவிலக்கு அமல்படுத்தப்படவில்லை. உங்கள் கட்சி, மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் ஆட்சியில் இருந்த போது, மதுவிலக்கை அமல்படுத்தவில்லை. நீங்கள் ஆட்சிக்கு வரும் வாய்ப்பு உள்ள மாநிலங்களில், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்துவதில்லை. ஆட்சிக்கு வர வாய்ப்பில்லாத மாநிலங்களில் வலியுறுத்திபேசுகிறீர்கள். தனி நபர் மது நுகர்வு தமிழகத்தில் குறைவாகவே உள்ளது. புதுச்சேரியில் தனி நபர் மது நுகர்வு, வாரத்திற்கு, 144 மில்லியாக உள்ளது. இது, கோவாவில், 108; ஆந்திராவில், 104; கேரளா மற்றும் கர்நாடகாவில், 102 மி.லி.,யாக உள்ளது. தமிழகத்தில், 85 மி.லி.,யாக உள்ளது.எதில் எல்லாம், முதலிடத்திற்கு வர வேண்டுமோ, அதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. எதில் எல்லாம் கடைசியாக இருக்க வேண்டுமோ, அதில், தமிழகம் கடைசியாக உள்ளது. மதுவை ஒழிக்க, விழிப்புணர்வு பிரசாரம் செய்ய, அனைத்துகட்சியினரையும் அழைக்கிறேன்; அனைவரும் சேர்ந்து, விழிப்புணர்வு பிரசாரம் செய்வோம். சட்டத்தின் மூலம் இதை செய்ய முடியாது; விழிப்புணர்வு மூலம் செய்வோம்.

பழங்காலத்தில், மது குடித்த மன்னரை பாராட்டி, பெண் புலவர் பாடி உள்ளார். திருவள்ளூவர் மது அருந்துவதை கண்டித்துள்ளார். தமிழகத்தில், 2,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, மது அருந்துவோரும், மது அருந்துவோரை கண்டிப்போரும் இருந்துள்ளனர்; அது, இன்றும் தொடர்கிறது.

பாலபாரதி: காந்தியவாதி சசி பெருமாள் மரணம் ?

அமைச்சர் விஸ்வநாதன்: சசி பெருமாள் இறப்பு வருத்தத்திற்குரியது; ஆனால், அவரது போராட்ட வழிமுறை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. காந்தியவாதிக்கு வீரம் தேவையில்லை; அகிம்சை மட்டுமே தேவை.
மனிதநேய மக்கள் கட்சி – ஜவாஹிருல்லா: எங்கள் கட்சியில், மது அருந்துவோரை, உறுப்பினராகச் சேர்ப்பதில்லை. இஸ்லாமிய நாடுகளில், சவுதி அரேபியா, குவைத் போன்ற நாடுகளில், மது விற்பனை இல்லை. லாட்டரி, கந்து வட்டி, பான்பராக் போன்றவற்றுக்கு முடிவு கட்டிய முதல்வர், மதுவிற்கும் முடிவு கட்ட வேண்டும்.
பா.ம.க., – கணேஷ்குமார்: பூரண மதுவிலக்கை அமல்படுத்துங்கள்.புதிய தமிழகம் – கிருஷ்ணசாமி: படிப்படியாகவாவது பூரண மதுவிலக்கை அமல்படுத்துங்கள்.
அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்: நாங்கள் மதுவை ஆதரிக்கவில்லை. மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கொள்கையை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், நடைமுறையில் சாத்தியமில்லை.மதுவிலக்கை அமல்படுத்தினால், ரவுடியிசம் வளரும்; அரசு கஜானா காலியாகும். நாடு முழுவதும், மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால், தமிழகத்திலும் அமலாகும். குறைந்தது, பக்கத்து மாநிலங்கள், ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு:

* டாஸ்மாக் கடைகளில், 7,152 மேற்பார்வையாளர்; 15,530 விற்பனையாளர்; 3,734 உதவி விற்பனையாளர்கள், தொகுப்பு ஊதிய முறையில், பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு முறையே, 500, 400, 300 ரூபாய் என, ஊதியம் உயர்த்தி வழங்கப்படும்; இந்த ஊதிய உயர்வு, இம்மாதம் முதல் நடைமுறைக்கு வரும். இதற்காக, ஆண்டுக்கு, 13 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கப்படும்
* மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள ஒதுக்கப்படும் நிதி, ஒரு கோடி ரூபாயில் இருந்து, மூன்று கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்
* கள்ளச் சாராய தொழிலில் ஈடுபட்டு, மனம் திருந்தியவர்களுக்கு, மறுவாழ்வு நிதி வழங்க, ஐந்து கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படும்.

ரூ.6,000 கோடி மது வருவாய் உயர்வு :

தமிழக அரசின், ‘டாஸ்மாக்’ நிறுவனத்திற்கு, 6,800 மதுபானக் கடைகள் உள்ளன. இவற்றில், அரசு நிர்ணயம் செய்துள்ள விலையில், பீர் மற்றும் மது வகைகள் விற்கப்படுகின்றன. இவற்றில், ஆயத்தீர்வை மற்றும் விற்பனை வரி மூலம், தமிழக அரசுக்கு வருவாய் கிடைக்கிறது.

அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற, 2011 – 12ல், 18 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. 2012 – 13ல், 22 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய்; 2013 – 14ல், ஆறு கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் குறைந்தது. அதற்கு காரணம், போலி மது வகைகள் விற்பனை.
கடந்த ஆண்டு, மதுபான விலை உயர்த்தப்பட்டது. அதனால், அரசுக்கு, 2014 – 15ம் நிதியாண்டில், 24 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து, ஆண்டுதோறும் மது விற்பனை அதிகரித்து வருவதால், நான்கு ஆண்டுகளில், 6,000 கோடி ரூபாய் அளவுக்கு கூடுதலாக வருவாய் கிடைத்துள்ளது.

 

வெள்ளப்பெருக்கு : அருவியில் குளிக்க தடை

தொடர் மழை காரணமாக தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.,வில் ஐக்கியமாகும் மாற்றுக் கட்சியினர்

கடலுார் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ம.புடையூரில் பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளிலிருந்து விலகியவர்கள் அ.தி. மு.க.,வில் இணைந்தனர்.

திட்டக்குடி அடுத்த ம.புடையூரில் பா.ம.க., வைச் சேர்ந்த சேகர் தலைமையில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கடலுார் தொகுதி அருண்மொழிதேவன் எம்.பி., முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.

கட்சியில் இணைந்தவர்களுக்கு சால்வை அணிவிக்கப்பட்டது. திட்டக்குடி பேரூராட்சி சேர்மன் நீதிமன்னன், மாவட்ட பிரதிநிதி சுப்ரமணியன், சத்தியராஜ், மங்களூர் ஒன்றிய துணைச் சேர்மன் அன்னக்கிளி குணசேகர், சிறுமுளை முத்துராமன், ஒன்றிய ஜெ., பேரவை இணைச் செயலர் விஜயமகேந்திரன், கிளை நிர்வாகிகள் பெருமாள், பொன்னுசாமி, கண்ணன் உட்பட பலர் உடனிருந்தனர்.

அ.தி.மு.க.,வில் மாற்றுக் கட்சியினர் பலர் ஐக்கியமாவதால் அந்த மாவட்டத்தில் பல்வேறு கட்சியின் உறுப்பினர்கள் இன்னும் பலர் அ.தி.மு.க.,வில் விரைவில் இணைய கூடும் என பேசப்படுகிறது.

நடைபயிற்சி செல்வோரிடம் குறைகளை கேட்ட ஸ்டாலின்

நமக்கு நாமே” சுற்றுப்பயண திட்டத்தில், நேற்று மதுரை மாவட்டம்  வந்த, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், வண்டியூரில் உள்ள பூங்காவில் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது நடைபயிற்சி செல்வோர் சங்கத்தினருடன் கலந்துரையாடி குறைகளை கேட்டார்.

நடைபயிற்சி செல்வோரிடம் குறைகளை கேட்ட ஸ்டாலின்

நமக்கு நாமே” சுற்றுப்பயண திட்டத்தில், நேற்று மதுரை மாவட்டம்  வந்த, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், வண்டியூரில் உள்ள பூங்காவில் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது நடைபயிற்சி செல்வோர் சங்கத்தினருடன் கலந்துரையாடி குறைகளை கேட்டார்.

நன்றி மறந்த எம்.எல்.ஏ., துரைமுருகன் : நடிகர் ராமராஜன்

வேலூர் மாவட்டம் காட்பாடி வடக்கு பகுதி, அ.தி.மு.க., சார்பில், அண்ணாதுரை பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம், பெருமாள் கோவில் எதிரே நடந்தது. 4வது வட்ட செயலாளர் சுப்பிரமணி தலைமை வகித்தார்.

அந்த கூட்டத்தில் நடிகர் ராமராஜன் பேசியதாவது: இந்த தொகுதி எம்.எல்.ஏ., துரைமுருகனுக்கு படிக்க உதவியது எம்.ஜி.ஆர்., தான். எம்.ஜி.ஆர்., உதவி செய்யாமல் இருந்திருந்தால், துரைமுருகன் படித்து இருக்க மாட்டார். ஆனால், துரைமுருகன் நன்றி மறந்தவர். கடந்த தேர்தலில் காட்பாடி தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட, அப்புவிடம் ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில்தான் துரைமுருகன் வெற்றி பெற்றார்.

அடுத்த முறை அவருக்கு மக்கள் பெரிய தோல்வியை வழங்க வேண்டும். அ.தி.மு.க., ஆட்சிக்கு மக்களிடம் ஆதரவு அதிகரித்து வருகிறது. பல சாதனைகள் செய்யப்படுகிறது. அதை எப்படியாவது சீர்குலைக்க வேண்டும் என, ஸ்டாலின் நடை பயணம் ஆரம்பித்துள்ளார். அவர்கள் என்ன செய்தாலும், அ.தி.மு.க.,வை ஒன்றும் செய்ய முடியாது. 2011 முதல் ஆட்சி நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் வளர்ச்சி தான். இனி தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி தான் இருக்கும். என நடிகர் ராமராஜன் பேசினார்.

தந்தையின் சந்தேகத்தால் கல்லூரி மாணவி தற்கொலை

தர்மபுரி மாவட்டம் அருகே, கல்லூரி சிறப்பு வகுப்பு குறித்து, தந்தை சந்தேகம் அடைந்ததால், ஒரு தனியார் கல்லூரியில், பி.எஸ்சி படித்து வந்த மாணவி, தற்கொலை செய்து கொண்டார்.

தர்மபுரியை அடுத்த, அதியமான்கோட்டை நேரு நகரை சேர்ந்த துரை மகள் ஷோபனாதேவி, 18. இவர், நேற்று முன்தினம் பக்ரீத் விடுமுறை அன்று, கல்லூரியில் சிறப்பு வகுப்புக்கு செல்வதாக துரையிடம், ஷோபனாதேவி தெரிவித்துள்ளார். அப்போது, அவரது தந்தை துரை கல்லூரி அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு கல்லூரியில் நடக்கும் சிறப்பு வகுப்பு குறித்து கேட்டு தெரிந்துள்ளார்.

தனது தந்தை தன் மீது சந்தேகம் அடைந்ததால், சிறப்பு வகுப்புக்கு செல்லாமல், மனவருத்தத்தில் இருந்துள்ளார். வழக்கம் போல், நேற்று முன்தினம் இரவு ஷோபனாதேவி தனது அறைக்கு தூங்க சென்றார்.
நேற்று காலை அவரது அறைக்கு சென்ற பெற்றோர், ஷோபனாதேவி தூக்கில் இறந்த நிலையில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதியமான்கோட்டை போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

மெக்காவில் ஹஜ் பயணிகள் விபத்து: 18 இந்தியர்கள் பலி

சவுதி அரேபியாவின் மெக்காவில் ஏற்பட்ட ஹஜ் புனித யாத்திரையில் இரு தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 717க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

அதில் இந்தியர்கள் பலி எண்ணிக்கை 14 ஆக இருந்தது.
இந்நிலையில் இன்று மேலும் 4 இந்தியர்கள் உயிரிழந்தது தெரியவந்ததை அடுத்து எண்ணிக்கை 18 ஆக ஆனது என சவுதியின் செய்தி நிறுவனம் இர்னா தெரிவித்துள்ளது

வேலைவாய்ப்பு தகவல்கள்

நிறுவனம்: Tamilnadu Postal Circle,
Department of Posts, India
காலியிடங்கள்: 143
பணிகள்: Postman – 142, Main Guard
– 1
விண்ணப்பிக்க கடைசி தேதி:
04.10.2015
பணியைப் பற்றிய மேலும் தகவல்கள்
அறிய:
https://goo.gl/cIoCy3
———————————————
——————————————–
———————————————
——————————————–
நிறுவனம்: National Highway
Authority of India (NHAI)
காலியிடங்கள்: 35
பணிகள்: Deputy General Manager
(Tech) – 35
விண்ணப்பிக்க கடைசி தேதி:
28.09.2015
பணியை பற்றிய மேலும் தகவல்கள் அறிய:
https://goo.gl/KZ6wof
———————————————
——————————————–
நிறுவனம்: Bharat Heavy Electricals
Limited (BHEL), Trichy
காலியிடங்கள்: 200
பணிகள்: Fitter – 150, Welder – 50
விண்ணப்பிக்க கடைசி தேதி:
30.09.2015
பணியைப் பற்றிய மேலும் தகவல்கள்
அறிய:
https://goo.gl/LiLCVU
———————————————
——————————————–
நிறுவனம்: CENTRAL INDUSTRIAL
SECURITY FORCE
காலியிடங்கள்: 156
பணிகள்: Constable / DCPO(Driver for
Fire Services) – Direct – 156 (Male
Only)
விண்ணப்பிக்க கடைசி தேதி:
03.10.2015
பணியைப் பற்றிய மேலும் தகவல்கள்
அறிய:
https://goo.gl/GSNHQm
———————————————
——————————————–
நிறுவனம்: Airports Authority of India
(AAI)
காலியிடங்கள்: 598
பணிகள்: Junior Executive (Air Traffic
Control) – 400, Junior Executive
(Electronics) – 198
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி
நிலை-1:
Junior Executive (Electronics)-
03.10.2015
Junior Executive (Air Traffic Control) –
06.10.2015
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி
நிலை-2:
Junior Executive (Electronics)-
09.10.2015
Junior Executive (Air Traffic Control) –
13.10.2015
பணியைப் பற்றிய மேலும் தகவல்கள்
அறிய:
https://goo.gl/4MPQ1I
———————————————
——————————————–
நிறுவனம்: National Institute of Solar
Energy
காலியிடங்கள்: 40
பணிகள்: Scientific / Technical,
Administrative / Support Staff Posts
விண்ணப்பிக்க கடைசி தேதி: 6 (six)
weeks from the date of publication of
the advertisement in the
Employment News. (i.e. Last Date .
will be 09/10/2015).
பணியை பற்றிய மேலும் தகவல்கள் அறிய:
https://goo.gl/cqrACM
NLC Recruitment 2015 – Apply Online for 390 Technician & Graduate Apprentice Posts: Neyveli Lignite Corporation Limited (NLC) has released notification for the recruitment of 390 Technician Apprentice, Graduate Apprentice vacancies. Eligible candidates belonging to the States of Andhra Pradesh, Kerala, Karnataka, Tamil Nadu and the Union Territories of Puducherry and Laksha Deep may apply online from 01-10-2015 at 10:00 hrs to 10-10-2015 by 17:00 hrs & send hard copy of applications on or before 15-10-2015 by 17:00 hrs. Other details like age limit, educational qualification, how to apply are given below…

NLC Vacancy details:
Total No of posts: 390
Name of the posts:
I. Technician Apprentice: 210 Posts
1. Mechanical Engineering: 70 Posts
2. Electrical Engineering: 60 Posts
3. Civil Engineering: 20 Posts
4. Instrumentation: 10 Posts
5. Chemical Engineering: 10 Posts
6. Mining Engineering: 10 Posts
7. Computer Science & Engg: 10 Posts
8. Electronics & Communication: 10 Posts
9. Commercial Practice: 10 Posts
II. Graduate Apprentice: 180 Posts
1. Mechanical Engineering: 50 Posts
2. Electrical Engineering: 50 Posts
3. Civil Engineering: 15 Posts
4. Instrumentation: 10 Posts
5. Chemical Engineering: 10 Posts
6. Mining Engineering: 10 Posts
7. Computer Science & Engg: 10 Posts
8. Electronics & Communication: 10 Posts
9. Transportation Engineering: 15 Posts

Educational Qualification: Candidates should possess Diploma in Engineering in the respective Discipline with 55% marks for post I-1 to 8, Diploma in Commercial Practice with 55% marks for post I-9, Degree in Engineering in the respective Discipline with 55% marks for post II.

Selection Process: Candidates will be selected based on academic merit.

How to Apply: Eligible candidates may apply online through the website www.nlcindia.com from 01-10-2015 at 10:00 hrs to 10-10-2015 by 17:00 hrs & send hard copy of online application along with attested copies of relevant documents to The Deputy General Manager, Learning & Development Centre, Neyveli Lignite Corporation Limited, Block:20, Neyveli-607803 15-10-2015 by 17:00 hrs.

Important Dates:
Starting Date to Apply Online: 01-10-2015 at 10:00 hrs.
Last Date to Apply Online: 10-10-2015 by 17:00 hrs.
Last Date for Submission of Hard copy of Application: 15-10-2015 by 17:00 hrs.
Tentative Date for Display of short listed Candidates for Certificate Verification: 23-10-2015.
Tentative Date for Call of short listed Candidates for Certificate Verification: From 28-10-2015 to 31-10-2015.
Tentative Date for Display of Selected list of Candidates: 07-11-2015.
Tentative Date for Joining of Selected Candidates: 16-11-2015.