Home Blog Page 6015

டி.எஸ்.பி. மகேஸ்வரிக்கு இடையூறு ஏற்படுத்தினால் நாடு தழுவிய பிரச்சனையை ஏற்படுத்துவோம் – வைகோ

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுபிரியா கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். கடலூர் கோண்டூரில் உள்ள அவரது வீட்டுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று வந்தார். விஷ்ணுபிரியாவின் தாய்– தந்தையருக்கு ஆறுதல் கூறினார். விஷ்ணுபிரியா உருவ படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதை தொடர்ந்து நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

துணை போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுபிரியா ஒரு நேர்மையான அதிகாரி. என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் சம்பந்தமில்லாத இரண்டு பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அதிகாரிகள் நிர்பந்தம் செய்ததால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என தெரிய வருகிறது. குற்றச்சாட்டுகள் வந்த பிறகும், சம்பந்தப்பட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் ஏன் சஸ்பெண்டு செய்யப்படவில்லை. குறைந்தபட்சம் இடமாற்றமாவது செய்து இருக்கலாம்.

காவல்துறை தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா வசம் உள்ளது. துணை போலீஸ் சூப்பிரண்டு இறந்ததற்கு அனுதாபம் கூட அவர் தெரிவிக்காதது ஏன்? விஷ்ணுபிரியாவின் மரணம் குறித்து தற்போது விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி. காவல் துறையில் உள்ள ஒரு பிரிவு என்பதால் போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரை அவர்கள் பாதுகாக்கத்தான் செய்வார்கள். எனவே தான் இந்த வழக்குக்கு சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்கிறோம்.

அதேபோல் கீழக்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரிக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தக்கூடாது. அப்படி இடையூறு ஏற்படுத்தினால் நாடு தழுவிய பிரச்சனையை ஏற்படுத்துவோம். நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இந்த சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது குறித்து சட்ட வல்லுனர்களிடம் கலந்தாலோசித்து அதன் அடிப்படையில் முடிவு எடுப்போம் என அவர் கூறினார்

காதலுக்கு எதிர்ப்பு: இளம்பெண் தற்கொலை – அதிர்ச்சியில் தாயும் பலி

திருவண்ணாமலை  மாவட்டம் ஆரணி அடுத்த ரகுநாதபுரம் கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் மதியழகன். இவரது மனைவி வள்ளி. இவர்கள் 2 பேரும் அங்குள்ள பஞ்சு மில் தொழிலாளிகள். இவர்களுக்கு மீரா (வயது 18) என்ற மகள் இருந்தார்.

மீரா சமீபத்தில் பிளஸ்–2 முடித்தார். எனவே அவரது பெற்றோர் கல்லூரியில் சேர்க்கும் நடவடிக்கையில் இறங்கினர். அப்போது மீராவுக்கும் ஒரு வாலிபருக்கும் இடையே காதல் இருந்தது. மீராவின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் மீராவின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

எனவே மீராவை திருவண்ணாமலையில் உள்ள மீராவின் சித்தி மீனாட்சி வீட்டில் கொண்டு விட்டனர். அங்கு மீரா இருந்தார். சமீபத்தில் ஆரணியில் மீரா படித்த பள்ளியில் அவருக்கு விலையில்லா மடி கணிணி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் மீரா கலந்து கொண்டு மடிகணினி பெற்றார். அதை தனது பெற்றோரிடம் கொடுத்து விட்டு மீண்டும் தனது சித்தி வீட்டுக்கு மீரா சென்றார்.

சித்தி வீட்டில் இருந்த மீரா தனது காதலுக்கு சம்மதம் கிடைக்காததால் சோகத்தில் இருந்ததாக தெரிகிறது. விரக்தியில் இருந்த அவர் நேற்று முன்தினம் இரவு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றிய தகவல் கிடைத்ததும் மீராவின் பெற்றோர் கதறி துடித்தபடி திருவண்ணாமலைக்கு சென்றனர். அங்கு மீராவின் உடலை பார்த்து அவர்கள் கண்ணீர் விட்டனர். தற்கொலை செய்த மீராவின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை முடிந்து மீராவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மீராவின் உடல் அவரது சொந்த ஊரான ரகுநாதபுரத்துக்கு நேற்று மாலை கொண்டு வரப்பட்டது. அப்போது மீராவின் தாய் வள்ளியும் உடன் வந்தார். பின்னர் மீராவின் உடல் ஊர் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது மகளின் உடலை பார்த்து பார்த்து வள்ளி அழுதபடி மிகவும் சோகத்தில் இருந்தார். இதனால் அவரது உடல் மிகவும் சோர்வடைந்தாக தெரிகிறது. இதனால் அவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. எனவே அவரை உடனடியாக அக்ராபாளையத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

சிகிச்சை பெற்று பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்தார். அதன் பின்னரும் மகளின் உடலை பார்த்து கண்ணீர் விட்டபடி இருந்தார். திடீரென அவர் மீண்டும் உடல் நிலை பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தார். இதனால் அங்கு நின்ற உறவினர்களும், ஊர் மக்களும் அதிர்ச்சி அடைந்தனர். வள்ளியை பரிசோதித்த போது அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. ஒரே நேரத்தில் மனைவியையும், மகளையும் பறிகொடுத்த மதியழகன் அவர்களது உடலை பார்த்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மகளின் பிணத்தின் அருகே தாயும் இறந்த சம்பவம் அந்த கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. மீரா, வள்ளி ஆகிய 2 பேரின் பிணத்தையும் அருகருகே வைத்து ஊர் மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

அதுவரை மீராவை நினைத்து கண்ணீர் விட்ட உறவினர்கள் வள்ளியை நினைத்தும் கண்ணீர் விட்டு அழுதனர். மீரா, வள்ளி ஆகியோரின் இறுதி சடங்கு நடந்தது.

எருமை மாடுகள் எம்.எல்.ஏ. வீட்டில் திருட்டு: திருடன் கைது

உத்தர பிரதேச மாநில பா.ஜனதா கட்சி எம்.எல்.ஏ.வின் வீட்டில் எருமை மாடுகளைத் திருடிய ஆசாமி, மூன்று மாதங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளான்.

மந்திரி ஆசம் கானின் ஒரு எருமை மாடு திருட்டு போனபோது, ஒட்டுமொத்த அரசு நிர்வாகமே நடவடிக்கையில் இறங்கியதாக கூறிய சிங், தனது புகாரை காவல்துறை கவனிக்கவில்லை என குற்றம் சாட்டினார்.

ஆவோன்லா தொகுதியின் பா.ஜனதா எம்.எல்.ஏ.வான தரம்பால் சிங்கின் பண்ணை வீட்டில் வளர்க்கப்பட்ட 9 எருமை மாடுகள் கடந்த ஜூன் 22-ம் தேதி இரவில் திருட்டு போனது. இதுபற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாடு திருடனை தேடி வந்தனர்.

இந்நிலையில், எம்.எல்.ஏ.வின் மாடுகளைத் திருடிய அக்ரம் என்ற நபரை பரேலியின் சிராவுலி பகுதியில் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், அந்த மாடுகளை இறைச்சி வெட்டும் கூடத்தில் ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டதாகவும் கூறியுள்ளான். அவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவில் 350 பேர் பலி; 500 பேர் காயம்

சவுதி அரேபியாவின் மெக்காவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 350 ஹஜ் பயணிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 500 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மெக்கா மசூதிக்கு வெளியே இச்சம்பவம் நடைபெற்றதாக சவுதி அரேபிய டிவி உறுதி செய்துள்ளது.

இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவிற்கு உலகம் முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கானவர்கள் ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். இன்று (செப்.,24) பக்ரீத் என்பதால் அதிகமானவர்கள் வழிபாடு நடத்த மெக்கா நகரில் குவிந்தனர். அதிகமானவர்கள் ஒரே நேரத்தில் மினாவில் சாத்தான் மீது கல் எறியும் நிகழ்வில் பங்கேற்றனர். இந்நேரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி சுமார் 350 பேர் உயிரிழந்துள்ளனர்.500 க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. மீட்பு பணியில் 4 ஆயிரம் பேரும், பல வாகனங்களும் ஈடுபட்டுள்ளன .

இந்தியாவில் இருந்து இந்த ஆண்டு மட்டும் இதுவரை 1,36,000 பேர் ஹஜ் யாத்திரை சென்றுள்ளனர். இவர்களின் நிலை குறித்த தகவல் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை என மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா தெரிவித்துள்ளார்.

படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளதால் சவுதி அரேபியாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளில் அவசர நிலை சிகிச்சைகள் அளிக்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மொபைல் மருத்துவமனைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மலேசியா, இந்தோனேஷியா நாடுகளைச் சேர்ந்தவர்கள் என சர்வதேச ஹஜ் கமிட்டி தலைவர் தெரிவித்துள்ளார்.

மெக்கா நகரில் இம்மாதத்தில் நடைபெறும் இரண்டாவது பயங்கர விபத்து இது. கடந்த சில நாட்களுக்கு முன் மெக்கா மசூதியில் கிரேன் விழுந்த சம்பவத்தில் 105 பேர் பலியாகியது குறிப்பிடத்தக்கது.

விளம்பர கட்டண விவரம்

ADVERTISEMENT TARIFF

விளம்பரக் கட்டண விவரம்

www.dhinasari.com

Position

Size

Home page

Other pages

Top Banner

728 X 90 pixels

Rs.5,000

Rs. 5,000

Right Top

300 X 250 pixels

Rs.4,000

Rs. 3,000

Right  Side

300 X 600 pixels

Rs.  6,000

Rs. 4,000

Left Side

120 X 600 pixels
160 x 600 pixels

Rs.  4,000

Rs. 3,000

Top / Footer

468 X 60 pixels

Rs.2,000

Rs. 1,000

* All the rates are per Month only.

* Inclusive of Taxes.

* Designing charges Extra.

* Image format : JPG / GIF / PNG / FLASH / Texts

***

Contact:

SSS Media Work,
47/83, Nattu Subburayan Street,
Mylapore, Chennai – 600 004

Cell No., : +91 94448 09108

e-mail : dhinasarinews@gmail.com

Area wise Contacts:

Madurai : 98421 97421 (Mr. S.Venkatesh)

Tirunelveli : 97897 10999 / 93615 29918 (Mr. A. Muthuraman)

Coimbatore : 81248 32277 (Mr. Venkatesan)

Tiruchirappalli : 92452 08335 (Mr. Adhimoolam)

Thiruvannamalai: 94432 03849 (S.R.V. Balaji)

Tenkasi: 98944 31910 (SMS Sankar)

மெக்கா மசூதி அருகே கூட்ட நெரிசல்: 220 பேர் உயிரிழப்பு

ரியாத்:

மெக்கா மசூதி அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 220க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் பக்ரீத் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் ‘ஹஜ்’ புனித பயணம் செல்கின்றனர். இந்த ஆண்டுக்கான ‘ஹஜ்’ இன்று தொடங்கியது. இருந்த போதும் முன்னதாகவே, பல நாடுகளில் இருந்து முஸ்லிம்கள் மெக்கா நகருக்குச் சென்றனர். அவர்களின் வருகையை ஒட்டி, மசூதியில் கட்டடத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்தது. மேலும், பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று மெக்கா மசூதி அருகே மக்கள் மொத்தமாகக் குவிந்ததால், கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மினாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நெரிசலில் சிக்கி 450 பேர் காயம் அடைந்ததாக சவுதி அரேபியா தொலைக்காட்சி தகவல் வெளியிட்டு உள்ளது. காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மினாவில் சாத்தான் சுவர் மீது கல்லெறியும் நிகழ்ச்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

டி.எஸ்.பி விஷ்ணுப்பிரியா தற்கொலைக்கு காரணமான போலீஸ் உயர் அதிகாரி கைது.?

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தற்கொலை குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

உயர் அதிகாரி கொடுத்த தொல்லை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவருடைய தோழியும், கீழக்கரை டி.எஸ்.பி.யுமான மகேஸ்வரி கூறி இருந்தார். தற்போது மருத்துவ விடுப்பில் சென்று புதுச்சேரியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

விஷ்ணுப்பிரியா தன்னுடன் போனில் பேசிக்கொண்டு இருக்கும் போது உயர் அதிகாரி லைனில் வருவதாகவும், பிறகு தன்னுடன் பேசுவதாகவும் விஷ்ணுப்பிரியா கூறியதாக மகேஸ்வரி கூறி இருந்தார்.

இது குறித்தும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் மகேஸ்வரி– விஷ்ணுப்பிரியா உரையாடல் தொடர்பான ஆடியோ விவரங்களை சி.பி. சி.ஐ.டி. போலீசார் சேகரித்து வருகிறார்கள். மேலும் விஷ்ணுபிரியாவின் செல்போன், அவர் பயன்படுத்திய கம்ப்யூட்டர், டேப் ஆகியவை தற்போது சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்தில் வைத்து சி.பி.சி.ஐ.டி. சைபர் கிரைம் போலீசாரால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இன்று கடலூர் மாவட்டம் கோண்டூரில் உள்ள விஷ்ணு பிரியா வீட்டிற்கு சென்று அவரது தந்தை ரவியிடம் சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. நாக ஜோதி, டி.எஸ்.பி. ராஜன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் விஷ்ணு பிரியா தற்கொலைக்கு உயர் அதிகாரி மிரட்டல் தான் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்து உள்ளது.இதற்கான ஆதாரங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேகரித்து உள்ளனர். இதனால் அந்த அதிகாரி விரைவில் கைது செய்யப்படுவார் என்று போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

பேய், பிசாசு விற்பனை: சத்தீஸ்கரில் நடந்த நூதன மோசடி

சத்தீஸ்கர் மாநிலம் ஜஸ்பூர் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களில் பெரும்பாலானவர்கள் இன்னமும் மிக, மிக ஏழ்மையான நிலையில் வாழ்ந்து வருகிறார்கள்.படிப்பறிவு அதிகம் இல்லாத அவர்கள் மத்தியில் மூட நம்பிக்கை பழக்க– வழக்கங்கள் அதிகம் உள்ளது. அந்த மூட நம்பிக்கையை பயன்படுத்தி அவர்களிடம் 3 பேர் மிகவும் நூதனமான முறையில் மோசடியில் ஈடுபட்டனர்.

ஜஸ்பூர் மாவட்டத்தில் மலை வாழ் கிராமத்துக்கு மோசடி பேர்வழிகள் 3 பேர் சென்றனர். ரோட்டோரத்தில் கூடி தங்களது மோசடி வேலையை அரங்கேற்றினர். பில்லி, சூனியம், மற்றும் கண் திருஷ்டி நீங்கி வீட்டில் செல்வம் கொழிக்க வேண்டுமா? எங்களிடம் வாருங்கள் வேதாளம், பேய், பிசாசு உள்ளிட்ட ஆவிகள் மூலம் நன்மைகளை வாரி வழங்குகிறோம் என நம்பும்படி கூறியுள்ளனர்.

அதை நம்பி ஏராளமானவர்கள் கூடினார்கள். அவர்களிடம் மூடி முத்திரையிடப்பட்ட அதாவது சீலிடப்பட்ட பாக்சை காட்டி, ‘இந்தப் பெட்டிக்குள் நன்மை தரக்கூடிய ஆவி உள்ளது. இதன் விலை ரூ.5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை தான்.

அதை வாங்கி சென்று வீட்டில் வைத்து விடுங்கள். உடனே அதை திறந்து பார்க்கக்கூடாது. இரவில் திறந்து பணம், நகை, பொருள் போன்ற ஐஸ்வர்யங்களை கேட்டால் உடனே அவற்றை அந்த ஆவி வழங்கும்’ என கதை விட்டனர்.அதை நம்பி ஏராளமானவர்கள் பணம் கொடுத்து அந்த பாக்சை வாங்கி சென்றனர். அவர்கள் கூறியது போன்று அந்த பெட்டியை திறந்து தாங்கள் விரும்பியதை கேட்டனர். ஆனால் ஒரு அதிசயமும் நடக்கவில்லை.

இதுகுறித்து பாகிசா நகர போலீசில் புகார் செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜி.எஸ். துபே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். மோசடி பேர் வழிகள் 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

ஊழல்: 40 இடங்களில் சிபிஐ ரெய்டு

மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற வியாபம் ஊழல் தொடர்பான உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று (செப் 24) சிபிஐ அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதிலும் 40 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

முன்னாள் மத்திய அமைச்சருக்கு கொலை மிரட்டல்

மேற்குவங்கத்தைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.,யும், முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சருமான முகுல் ராய்க்கு மாவோயிஸ்டுகள் கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். முகுல் ராயின் குடும்பத்தினர்களையும் கொலை செய்யப் போவதாக அவர்கள் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.