மெக்கா மசூதி அருகே கூட்ட நெரிசல்: 220 பேர் உயிரிழப்பு

சற்றுமுன்

ரியாத்:

மெக்கா மசூதி அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 220க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் பக்ரீத் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் ‘ஹஜ்’ புனித பயணம் செல்கின்றனர். இந்த ஆண்டுக்கான ‘ஹஜ்’ இன்று தொடங்கியது. இருந்த போதும் முன்னதாகவே, பல நாடுகளில் இருந்து முஸ்லிம்கள் மெக்கா நகருக்குச் சென்றனர். அவர்களின் வருகையை ஒட்டி, மசூதியில் கட்டடத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்தது. மேலும், பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று மெக்கா மசூதி அருகே மக்கள் மொத்தமாகக் குவிந்ததால், கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மினாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நெரிசலில் சிக்கி 450 பேர் காயம் அடைந்ததாக சவுதி அரேபியா தொலைக்காட்சி தகவல் வெளியிட்டு உள்ளது. காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மினாவில் சாத்தான் சுவர் மீது கல்லெறியும் நிகழ்ச்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.