கரூர் மாவட்டத்தில் தற்போது அடுத்தடுத்து சாகுபடியில் கடும் சரிவை கண்டுவருவதால் விவசாயிகள் கடும் அதிர்ப்தியில் ஆழ்ந்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, ஈசநத்தம், பள்ளபட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் முருங்கைக்காய் வரத்து அதிகரித்து இருப்பதால் முருங்கைக்காய் கிலோ ரூ 10 முதல் 25 வரை தான் விலை போகிறது. இந்நிலையில் வாழையும் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த பிரச்சினை விவசாயிகளிடம் நிகழும் பச்சத்தில் பச்சை மிளகாய் உற்பத்தி அதிகரித்தும் போதிய விலை கிடைக்கவில்லை என்று கரூர் விவசாயிகள் கவலை தெரிவித்தனர். கரூர் அருகேயுள்ள பெரியதாதம்பாளையம், ஏமூர், முத்துலாடம்பட்டி, கணபதிபாளையம், போன்ற பகுதிகளில் கிணற்றுப் பாசனத்தில் பரவலாக மிளகாய் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பொதுவாக 6 மாதங்களில் மிளகாய் அறுவடை செய்யப்படும். மிளகாய் விதைத்ததில் இருந்து 75 நாட்களில் பச்சைக்காய்களை பறிக்கலாம். பொதுவாக பச்சை மிளகாய் எக்டேருக்கு 10முதல் 15டன் வரை மகசூல் கிடைக்கும். வத்தல் மிளகாய் எக்டேருக்கு 2முதல் 3டன் வரை மகசூல் பெறலாம். தற்போது பச்சை மிளகாய் கொள்முதல் விலை குறைந்துள்ளது. தற்போது விவசாயிகளிடமிருந்து ரகத்திற்கேற்ப கிலோ ரூ. 15 முதல் ரூ.20 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். வியாபாரிகளுக்கு கிடைக்கும் லாபம் விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை என்று விவசாயிகள் புலம்புகின்றனர். இதுகுறித்து விவசாயி ராமசாமி என்பவர் கூறுகையில்,
தோட்டக்கலைத்துறையினர் மிளகாய் சாகுபடிக்கு அடிக்கடி ஆலோசனை வழங்க வேண்டும். மானியம் அளிக்க வேண்டும். மிளகாய் விதையை ஒரு கிலோ ரூ.600க்கு வெளிமார்க்கெட்டில் வாங்கி விதைக்கிறோம். அறுவடை செய்யும் வரையில் பல்வேறு செலவுகளை செய்து பயிரைக் காப்பாற்ற வேண்டியதிருக்கிறது. நல்ல மகசூல் இருக்கும் பட்சத்தில் 50 சென்ட் நிலத்தில் 20 மூட்டை விளைச்சல் மகசூல் கிடைக்கும். ஒருமூட்டையில் 100கிலோ வீதம் 2 ஆயிரம் கிலோ மிளகாய் எடுக்கலாம். முன்பு மார்க்கெட் விலை கிலோ ரூ.50வரை இருக்கும். நல்ல விளைச்சல் இருந்தும் தற்போது கொள்முதல் விலை குறைந்துவிட்டது. இதனால் விவசாயிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை என்றார். இதற்கு ஒரே தீர்வு குளிர்பதன கிட்டங்கிகளை அரசு உருவாக்கி பாதிப்புக்குள்ளான விவசாய பொருட்களை அரசே வாங்கி அந்த குளிர்பான கிட்டங்கியில் சேமித்து பதப்படுத்தி உரிய தொகை வரும் பட்சத்தில் அரசே அதை விற்றால் மட்டுமே முடியும் என விவசாயிகளும், விவசாயிகள் சங்கங்களை சார்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மிளகாய் காரம்தான்; விலையும் காரம் ஆனதில் விவசாயிகள் கவலை
தமிழர் நீதிப் பேரணியில் தலைநகர் குலுங்கட்டும் ! – வைகோ அறிக்கை
ஏப்ரல் 28 ஆம் தேதி தமிழர் நீதிப் பேரணிக்கு தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.இது குறித்து ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, ஆந்திரத்தில் 20 தமிழர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட கோர நிகழ்ச்சி, தமிழர் இதயங்களைக் கோடரி கொண்டு பிளந்து இருக்கின்றது. செம்மரக் கொள்ளையும் கடத்தல் வணிகமும் மாபியாக்களின் கண் அசைவில்தான் நடக்கின்றது. ஆனால், ஒரு பாவமும் அறியாத தமிழகத்தைச் சேர்ந்த 20 ஏழைத் தமிழர்கள், ஏப்ரல் 6 ஆம் தேதி பேருந்தில் பயணித்துக் கொண்டு இருந்தபோது அவர்களைக் கைது செய்து, காவல்துறை வாகனங்களில் ஏற்றிக் கொண்டு சென்று, எங்கோ ஓரிடத்தில் கொடூரமாகச் சித்திரவதை செய்து சுட்டுக் கொன்று, அவர்களின் உடல்களைக் காட்டு வழியில் வீசி எறிந்து உள்ளனர். அந்த இடத்தில் செம்மரங்கள் கிடையாது. எனவே, முன்பு எப்போதோ வெட்டப்பட்ட பழைய மரங்களைத் தமிழர்களின் உடல்களுக்கு அருகில் போட்டுப் பொய்யான காட்சியைக் காவல்துறையினர் புனைந்து இருக்கின்றனர். காவல்துறையினரோடு மோதல் என்பது அப்பட்டமான கட்டுக்கதை என்பது உறுதியாகி விட்டது. காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவர்களுடன் பேருந்தில் பயணித்துப் பின்னர் தப்பி வந்தவர்கள், இந்திய மனித உரிமைகள் ஆணையத்திடம் தெரிவித்த தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. இறந்து போன ஆடு மாடுகளை கம்புகளில் கட்டித் தூக்கி வருவது போல 20 தமிழர்களின் உடல்கள் கொண்டு வரப்பட்டன. காட்டில் உலவும் விலங்குகளையும், மரக்கிளைகளில் அமரும் பறவைகளையும் சுட்டுக் கொல்லத் தடை உண்டு. ஆனால், விலங்குகள் பறவைகளை விட தமிழர்களின் உயிர்கள் மலிவாகக் கருதப்பட்டு, ஆந்திர அரசின் கொலைவெறியால் பறிக்கப்பட்டு இருக்கின்றன. ‘செம்மரக் காட்டுக்குள் வந்தால் சுட்டுக் கொல்லுவோம்’ என்று ஆந்திர வனத்துறை அமைச்சர் கோபாலகிருஷ்ண ரெட்டி இரத்த வெறியோடு கூச்சலிடுகிறார். ஆந்திரத்தின் முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடுவோ, கொல்லப்பட்ட தமிழர்களுக்காகத் துளி அளவு அனுதாபத்தையும் தெரிவிக்காதது, அவர் மனிதாபிமானத்தைக் குழிதோண்டிப் புதைத்து விட்டார் என்பதைக் காட்டுகிறது. காவல்துறை அதிகாரி காந்தாராவ் உள்ளிட்ட, இந்தப் படுகொலையில் தொடர்புடைய அனைவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்; அவர்களைக் கைது செய்ய வேண்டும். ஆனால், ஆந்திர அரசு எள் முனை அளவு கூட அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது, ஈவு இரக்கம் அற்ற கிராதகப் போக்கு ஆகும். காவல்துறை வனத்துறை அதிகாரிகள் மட்டும் அல்ல, இந்தக் கொடுங் குற்றத்தின் பின்னணியில் உள்ளவர்கள் எவராக இருப்பினும், அவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். நடைபெற்ற அனைத்து உண்மைகளும் வெளிச்சத்திற்கு வர வேண்டுமானால், உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வேண்டும். நடுவண் புலனாய்வு நிறுவனம் இந்த வழக்கின் புலனாய்வை மேற்கொள்ள வேண்டும். ஆந்திரச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். படுகொலைக்குள்ளான ஒவ்வொரு தமிழரின் குடும்பத்திற்கும், ஆந்திர அரசு ஒரு கோடி ரூபாய் உதவித் தொகை வழங்க வேண்டும். அக்குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்குத் தமிழக அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். இந்தப் படுகொலைகளைக் கண்டுகொள்ளாமல் வாய்மூடிக் கிடக்கும் மத்திய அரசின் போக்கும், தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறிய தமிழக அரசின் போக்கும் கண்டனத்திற்கு உரியதாகும். தமிழர்களின் இதயத்தில் கொந்தளிக்கும் வேதனையை மத்திய மாநில அரசுகளுக்கும், ஆந்திர அரசுக்கும் உணர்த்திடும் வகையில், தலைநகர் சென்னையில் ஏப்ரல் 28 – செவ்வாய்க்கிழமை மாலையில் தமிழக ஆளுநர் மாளிகை நோக்கி தமிழர் நீதிப் பேரணி நடத்துவது என, ஏப்ரல் 11 ஆம் தேதியன்று, தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பினர் ஏற்பாடு செய்த அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள் கலந்து கொண்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அப்பேரணியை தமிழர்களின் எழுச்சிப் பிரளயமாக நடத்திட வேண்டும். நீதி கேட்கும் முழக்கம் விண்ணைப் பிளக்கட்டும். தமிழர் பேரணியால் தலைநகர் குலுங்கட்டும். அலையலையாய் அணியணியாய்ப் பங்கேற்குமாறு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகக் கண்மணிகளையும், தமிழ் இன உணர்வாளர்களையும் வேண்டுகிறேன். என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ கேட்டுக் கொண்டுள்ளார்.
கற்பனை மேடைப் பேச்சு: தாலி… நூலு…. அறுப்பு….
நாமும் ஒரு இயக்கம் தொடங்கி…
அதுக்கு நாமே ஒருங்கிணைப்பாள தலைவனா இருந்து…
அதுக்கும் நாமே காசு கொடுத்து கூட்டம் சேத்து…. இவங்கள மாதிரியே மேடையில பேசினா….
எப்டி இருக்கும்…?????
நாமே எடிட் செய்து,
நாமே ஒரு பேப்பர் நடத்தி,
நாமே அதை வெளியிட்டு..
நாமே (நாம் மட்டுமே ) அதைப் படித்துப் பார்த்தா எப்படியிருக்கும்….???
அரசியலை அவர்கள் கேலிக் கூத்து ஆக்கி விட்டார்கள் என்பதால்… நாமும் ஒரு கேலிக் கூத்து ஆடுவோமே…..
முடிஞ்சா நீங்களும் படிச்சி உங்க மேடைப்பேச்சையும் இங்க நீட்டி முழக்குங்க…
இதோ நம்ம ரிப்போர்ட்டிங்:
*****
தாலி, பூணூல் அறுத்து திருமண பந்தத்தை அடிமை எனும் தி.க. தொண்டர், தம் அடிமைக் கயிற்றை அறுத்து தி.க. தலைவர் ஆக முடியுமா? : செந்தமிழன் சீராமன் கேள்வி
ஆணுக்கும் பூணூல் கல்யாணமானதைக் காட்டிக் கொடுக்கும் அடிமைச் சின்னம் என்று எண்ணி அறுத்து எறிகிறார்கள்.
நான் கேட்கிறேன். கல்யாணம் ஆனவன் அல்லது ஆனவள் என்பதை உலகுக்குத் தெரியப் படுத்தும் ஒரு சின்னத்தை அறுத்து அறிவதில் அப்படி என்ன குரூர புத்தி உங்களுக்கு? இதை செய்து நீங்கள் என்ன சாதிக்கப் போகிறீர்கள்? கல்யாணம் ஆகாதவள் அல்லது ஆகாதவன் என்று உங்கள் மனசுக்கும் வெளியிலும் காட்டுவதால் எப்படிப்பட்ட காட்டுமிராண்டித் தனங்களை இந்த சமுதாயம் சந்திக்கும் என்பதை நீங்கள் அறிவீர்களா?
என்று பேசினார் செந்தமிழன் சீராமன்.
விவசாயிகள் தற்கொலையைத் தடுக்க சிறப்புத் திட்டம்தேவை: ராமதாஸ்
நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியினர் தில்லியில் நேற்று நடத்திய உழவர்கள் பேரணியில் கலந்து கொண்ட ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டத்தைச் சேர்ந்த கஜேந்திர சிங் என்ற விவசாயி போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு அருகிலுள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். காவல்துறையினர் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் முன்னிலையில் நிகழ்ந்த இந்த தற்கொலை எனது இதயத்தை துளைத்து காயப்படுத்தி விட்டது. நாட்டிற்கே உணவு படைக்கும் உழவர்களின் வாழ்க்கையை உறுதி செய்ய முடியாதது இந்தியாவுக்கு பெரும் அவலமாகும். தற்கொலை செய்து கொண்ட உழவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேடைப்பேச்சு: கற்பனையில் இதுவும் ஒரு வகை
இப்ப நடக்கற கூத்தையெல்லாம் வெச்சி… நாமும் ஒரு இயக்கம் தொடங்கி… அதுக்கு நாமே ஒருங்கிணைப்பாள தலைவனா இருந்து… அதுக்கும் நாமே காசு கொடுத்து கூட்டம் சேத்து…. இவங்கள மாதிரியே மேடையில பேசினா…. எப்டி இருக்கும்…????? அந்தப் பேச்சையும் நாமே ரிப்போர்ட் எடுத்து, நாமே எடிட் செய்து, நாமே ஒரு பேப்பர் நடத்தி, நாமே அதை வெளியிட்டு.. நாமே (நாம் மட்டுமே ) அதைப் படித்துப் பார்த்தா எப்படியிருக்கும்….??? கற்பனைக்கு எல்லை இருக்கா என்ன??? அரசியலை அவர்கள் கேலிக் கூத்து ஆக்கி விட்டார்கள் என்பதால்… நாமும் ஒரு கேலிக் கூத்து ஆடுவோமே….. இப்படியாக… குதிரையைத் தட்டி விட்டோமா… தட தடன்னு அது ஓடுச்சா…அப்படியே அது கொட்டுச்சா….. முடிஞ்சா நீங்களும் படிச்சி உங்க மேடைப்பேச்சையும் இங்க நீட்டி முழக்குங்க… ***** இதோ நம்ம ரிப்போர்ட்டிங்: ***** தாலி, பூணூல் அறுத்து திருமண பந்தத்தை அடிமை எனும் தி.க. தொண்டர், தம் அடிமைக் கயிற்றை அறுத்து தி.க. தலைவர் ஆக முடியுமா? : செந்தமிழன் சீராமன் கேள்வி சென்னை: அண்மையில் தி.க.வினர் சித்திரை தமிழ்ப் புத்தாண்டு நாளில் மேடையில் தாலியறுப்பு நிகழ்ச்சி நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இரு தினங்களுக்கு முன்னர் மயிலாப்பூர், மே. மாம்பலத்தில் வயதான இரு பூசாரிகளின் பூணூல் அறுக்கப்பட்டதைக் கண்டித்தும், தெய்வத்தமிழ் இயக்கம் சார்பில் மயிலாப்பூர் மாங்கொல்லையில் கண்டனக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீராமன் தலைமை தாங்கிப் பேசினார். அப்போது, தாலி, பூணூல் அறுத்து, திருமண பந்தத்தை அடிமை என்று கூறும் தி.க. வைச் சேர்ந்த தொண்டர், நெடு நாட்களாக தாமும் தம் வாரிசுகளும் கொத்தடிமைகளாக ஒரு தலைக்கும் குடும்பத்துக்கும் அடிமைப் பட்டுக் கிடக்கும் நிலையை உணர்ந்து, அடிமை விலங்கை உடைத்து, கயிற்றை அறுத்து வெளியில் வந்து தாமே அதற்கு தலைவன் ஆகிக் காட்ட முடியுமா என்று கேள்வி எழுப்பினார். அவர் மேலும் பேசியது…. தாலி என்பது பெண்ணுக்கு வேலி என்றார்கள். ஆனால் காலிப் பயல்கள் அதை போலி என்கிறார்கள். ஒரு பெண்ணின் நெற்றி வகிடையும் கழுத்தில் தாலிக் கயிறையும் பார்த்தால், இவள் வேறொருவன் மனைவி என்று கருதி, எந்த ஓர் ஆடவனும் அவளை மரியாதையாகப் பார்த்து விலகிச் செல்வான். இது தமிழர் நாகரிகம். ஆனால்… நடந்தது என்ன? இந்தியா முழுதும் பரந்து விரிந்த ராமாயணக் கதையில், ராவணனின் கதாபாத்திரத்தை இவர்கள் தமிழன் என்றார்கள். பிறன் மனை நோக்கி தன் குடியைக் கெடுத்துக் கொண்ட அரக்கன் ராவணன் தமிழன் என்று தூக்கிக் கொண்டாடுபவர்கள், அவனது செயலையே மேற்கொள்ள எண்ணம் கொண்டார்கள் என்றே தோன்றுகிறது. பிறன் மனை நோக்கல் தீதென்ற பரம்பரையில் வந்தவர்களிடம், பிறன் மனை நயத்தலாக, மாற்றான் தோட்டத்து மல்லிகை என்று சிறுமைப் படுத்திய கயமைக் கூட்டத்தில் வந்தவர்கள் பிரசாரம் செய்கிறார்கள் என்று சொல்லும்போது, அவர்களுக்கும் அப்படி ஒரு தனி நாகரிகத்தை ஏற்படுத்திக் கொடுத்த தலைவர்கள், தங்கள் முன்னோரை நனி நாகரிகர் என்று விளித்ததை விளங்கிக் கொள்ளாமல் போனார்களோ என்று வெட்கப் படுகிறேன், வேதனைப் படுகிறேன். துக்கப் படுகிறேன், துயரப் படுகிறேன்… இவ்வகையில், தாலி கட்டியிருந்தால் அடுத்தவன் மனைவி என்று தன் அறிவுக்கு எட்டி, ஏதோ ஒரு மூலையில் இருக்கும் தன் முன்னோரான நனி நாகரிகரின் நற்பண்பு தனக்கும் வந்து விடுமே என்ற எண்ணத்தில்தான், தாலியை தன் கண்ணுக்குத் தெரியாமல் செய்வதற்காக, தாலி ஒரு அடிமைச் சின்னம் என்றுகூறி பெண்களின் மூளையை மழுங்கடித்து, தன் சுய இச்சையைத் தீர்த்துக் கொள்ள வழி செய்து கொள்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது….. பெண்ணாக இருந்தால் சரி… கழுத்தில் தொங்கும் கயிறு அடிமைச் சின்னம். அட.. ஆணுக்கு என்னய்யா வந்தது? பூணூல் அணிபவன் பார்ப்பனன் மட்டுமா? எத்தனையோ சாதிக்காரர்களும் தான் அணிகிறார்கள். ஆனால் இதிலும் ஒரு சூட்சுமம் உள்ளது என்பதை எண்ணிப் பார்க்கும் போது உடலெல்லாம் அப்படியே சிலிர்க்கிறது. மயிர்க் கூசுகிறது. உள்ளம் பூரித்துப் போகிறது. பெண்ணுக்கு மட்டும்தான் திருமணம் ஆன அடையாளம் இருக்க வேண்டுமா? ஆணுக்கு கிடையாதா என்று அந்தக் காலத்தில் நம் முன்னோர் யோசித்துதான் இப்படி ஒரு பழக்கத்தை கொண்டு வந்தார்கள். வயசில் சின்ன பையன்களுக்கு பூணூல் கிடையாது. படிக்கும் வயது எட்டியதும், ஒரு முடிச்சு பூணூலை போடுவார்கள். அவன் படிக்கும் மாணாக்கன் என்பதாக. அவனே திருமண வயது வந்ததும், இரண்டு முடிச்சுகளாக… அதாவது ஒரு முடிச்சு கொண்ட தலா இரு பூணூலை அணிவிப்பார்கள். இந்த சடங்கு, அந்த ஆடவன் திருமணமானவன் என்பதை உலகுக்கு தெரியப்படுத்தும். அவனே ஒரு குழந்தைக்கு தந்தையாகும் போது, அவன் குழந்தை பெற்றவன் என்பதை வெளிப்படுத்த மூணு பூணூலை அணிவிப்பார்கள். அதைக் கண்டு கொள்ளும் உடன் இருப்போர், உறவினர், அல்லது அறிமுகமற்ற நபர்கள், அந்த நபர் திருமணமானவன் என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு, ஏமாற்றாமலோ, ஏமாறாமலோ தடுத்தார்கள். ஆனால், இப்போது நடப்பது….. திருமணம் ஆனதையே மறைத்து எத்தனை திருமணமும் செய்து கொள்ளலாம், யாரை வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் நோக்கலாம், பாக்கலாம், தூக்கலாம் என்ற காட்டுமிரான்டித் தனமான நிலையை ஒரு நாகரிக சமுதாயத்தில் ஏற்படுத்த முனைகிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கும் போது, ஐயஹோ.. இதை நோக்கியா இந்த சமுதாயம் செல்ல வேண்டும் என்று ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு கணமும், கடிகார முள் டிக் டிக் என்று அடிக்கும் ஒவ்வொரு சத்தத்தின் போதும் என் இருதயமும் டக் டக் என்று அடிக்கிறது. பெண்ணுக்கு தாலி , கல்யாணமானதைக் காட்டிக் கொடுக்கும் அடிமைச் சின்னம் என்று கூறி அறுத்து எறிகிறார்கள். ஆணுக்கும் பூணூல் கல்யாணமானதைக் காட்டிக் கொடுக்கும் அடிமைச் சின்னம் என்று எண்ணி அறுத்து எறிகிறார்கள். நான் கேட்கிறேன். கல்யாணம் ஆனவன் அல்லது ஆனவள் என்பதை உலகுக்குத் தெரியப் படுத்தும் ஒரு சின்னத்தை அறுத்து அறிவதில் அப்படி என்ன குரூர புத்தி உங்களுக்கு? இதை செய்து நீங்கள் என்ன சாதிக்கப் போகிறீர்கள்? கல்யாணம் ஆகாதவள் அல்லது ஆகாதவன் என்று உங்கள் மனசுக்கும் வெளியிலும் காட்டுவதால் எப்படிப்பட்ட காட்டுமிராண்டித் தனங்களை இந்த சமுதாயம் சந்திக்கும் என்பதை நீங்கள் அறிவீர்களா? அது சரி… நான் கேட்கிறேன்… இவற்றை எல்லாம் அடிமைக் கயிறு என்கிறீர்களே… நீங்கள் எத்தனைக் காலமாக இவர்களின் சுய இச்சைக் கொள்கைகளுக்கு அடிமைப் பட்டு, உங்கள் சுயத்தைத் தொலைத்து, சுய மரியாதையைத் தொலைத்து, அடிமை வாழ்க்கை வாழ்ந்து, உங்கள் பிள்ளை, பேரன் என கொத்தடிமைகளாக்கி… அடிமை, கொத்தடிமை, சொத்தடிமை, சோத்து அடிமை என அடிமைகளாக இருக்கிறீர்களே… என்றாவது நீங்கள் சிந்தித்துப் பார்த்ததுண்டா..? கேட்கிறேன்…. எத்தனை நாட்களுக்கு நீங்கள் கொடி பிடிப்பீர்கள், கோஷம் போடுவீர்கள்? சமத்துவம் சகோதரத்துவம் என்றெல்லாம் பேசுகிறீர்களே… அந்த சமத்துவப் படி, பெரியார் சொத்து உங்களுக்கு கிடைத்ததா? அட… அந்த புத்தகமாச்சும் பொதுச் சொத்தாகி, உங்களுக்கு ஒரு பாகமாவது கிடைத்ததா? என்றாவது ஒரு நாள் நீங்களும் தலைவன் ஆக வேண்டும் என்று யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? அவ்வளவு அடிமைப் புத்தியை வைத்துக் கொண்டு, நீங்கள் அடுத்தவரின் அடிமைத் தனத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியது தான்? வெளங்கும் இந்த நாடு. வெளங்கும் உங்கள் கொள்கை… இன்னும் பேச நிறைய இருக்கிறது. ஆனாலும், மணி பத்தைத் தாண்டி, பத்து மணி ஒரு நிமிடம் ஆகி, நொடிகள் கடந்து உங்கள் மூளை எல்லாம் வாட்டத்தைச் சந்திப்பதை என் உள்ளம் உணர்ந்து கொண்ட காரணத்தால், இத்துடன் என் சுய ஊக்க சிந்தனையை உங்களிடம் விதைத்துக் கொண்டேன் என்ற மன திருப்தியோடு என் பேச்சை நிறைவு செய்கிறேன். வாழ்க தமிழ். வெல்க தமிழ். திராவிடத்தை ஒழித்து, தமிழைத் தூக்கிப் பிடிப்போம் என்று கூறி அமைகிறேன். நன்றி வணக்கம். ” என்று பேசினார் செந்தமிழன் சீராமன். தெய்வத் தமிழ் இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஏராளமானோர் முக்காடு போட்டு முழங்காலிட்டு அமர்ந்தபடி கலந்து கொண்டனர்.
மீண்டும் இரு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் – மதுரையில்
மதுரை: மீண்டும் இரு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படும் என மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது மதுரை மாநகராட்சியில் செய்திக் குறிப்பில், ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் மீண்டும் இரு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்

மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள் ………. “எவ்வளவோ உழைக்கிறேன், கஷ்டப்படுறேன், கோவிலுக்கு போறேன், சாமி கும்பிடுறேன் அப்படியிருந்தும் என்னோட பொருளாதார நிலமையில எந்த முன்னேற்றமும் இல்ல.
குறிப்பாக பணமே என்கிட்டே தங்கமாட்டேங்குது… முன்னை விட மோசமா இருக்கு! வீட்ல எல்லாருக்கும் அடுத்தடுத்து விபத்து, நோய் இப்படி ஏதாவது ஒன்னு வருது. நிம்மதியே இல்லை…” என்று நினைப்பவர்கள் கீழ்க்காண்பவற்றை அவசியம் தெரிந்துகொண்டு அவற்றை விலக்கவேண்டும்.
மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள் .. 1. தன்னம்பிக்கையற்றவர்கள் 2. கடமையைச் செய்யாதவர்கள், 3. குலதர்மம் தவறியவர்கள், 4. செய்ந்நன்றி மறந்தவர்கள், 5. புலனடக்கம் இல்லாதவர்கள், 6. பொறாமை கொண்டவர்கள், 7. பேராசை கொண்டவர்கள், 8. கோபம் கொள்பவர்கள், 9. சான்றோரை மதிக்காதவர்கள், 10. பெற்றோரை உதாசீனம் செய்பவர்கள். 11. குரு நிந்தனை செய்பவர்கள், 12. கால்நடைகளுக்கு ஊறு செய்பவர்கள், 13. இறைச்சி உண்பவர்கள், 14. விருந்தினரை உபசரிக்காதவர்கள், 15. பொய் பேசுபவர்கள், 16. உண்மைக்குப் புறம்பாக நடப்பவர்கள், 17. பிறர்மனை விரும்புகிறவர்கள், 18. மனத்துணிவு அற்றவர்கள், 19. அகத் தூய்மை அற்றவர்கள், 20. புறத்தூய்மை அற்றவர்கள். 21. கொடுஞ்சொல் பேசுகிறவர்கள், 22. ஆணவம் கொண்டவர்கள், 23. சோம்பேறியாய் இருப்பவர்கள், 24. அழுக்கு ஆடை அணிபவர்கள், 25. பகலில் உறங்குபவர்கள், 26. பகலில் உடல் உறவு கொள்பவர்கள், 27. பசுக்களை வதை செய்பவர்கள், 28. விரதங்கள் மேற்கொள்ளாதவர்கள், 29. நம்பிக்கை துரோகம் செய்பவர்கள், 30. நகத்தால் புல்லைக் கிள்ளுபவர்கள். 31. நீரில் கோலம் போடுபவர்கள், 32. நிலத்தில் நகத்தால் கீறுபவர்கள், 33. சந்தியா வந்தனங்கள் உள்ளிட்ட அவரவர் கடமைகளை செய்யாதவர்கள் 34. நித்திய அனுஷ்டானங்களைப் புறக்கணிப்பவர்கள், 35. தெய்வத்தை நிந்தனை செய்பவர்கள், 36. கல்வி கற்காதவர்கள், 37. கற்றவழி நிற்காதவர்கள், 38. வீண் சண்டை விரும்புகிறவர்கள், 39. விவேகம் இல்லாதவர்கள், 40. இரக்கம் அற்றவர்கள். 41. பிறர் பொருளைக் களவாடுபவர்கள், 42. தந்திரமாக ஏமாற்றுபவர்கள், 43. உழைப்புக்கேற்ற ஊதியம் தராதவர்கள், 44. திருமணத்தைத் தடை செய்பவர்கள், 45. நீதி சாஸ்திரங்களைக் கற்க மறுப்பவர்கள், 46. தற்புகழ்ச்சி கொள்பவர்கள், 47. பிறரை ஏளனம் செய்பவர்கள், 48. காலைக் கழுவாமல் வீட்டிற்குள் நுழைபவர்கள், 49. ஈரக் காலோடு படுக்கையை மிதிப்பவர்கள், 50. ஆடையின்றி நீராடுபவர்கள். 51. எண்ணெய்க் குளியலன்று பகலில் உறங்குபவர்கள், 52. வேத மந்திரங்களைத் தவறாக உச்சரிப்பவர்கள், 53. அந்தியில் தீபம் ஏற்றாதவர்கள், 54. அந்திம வேளையில் உணவு உண்பவர்கள், 55. தெய்வப் பிரசாதங்களைப் புறக்கணிப்பவர்கள், 56. அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்பவர்கள், 57. கோள் மூட்டுபவர்கள், 58. தீய பழக்க வழக்கங்களில் மூழ்கிக் கிடப்பவர்கள். 59. வீட்டை அசுத்தமாக வைத்திருப்பவர்கள் 60. மது அருந்துபவர்கள் இவை அனைத்தும் விலக்கப்பட வேண்டியவைகள்.

இவற்றை நீங்கள் மறந்தும் செய்யாதீர்கள்.
இவைகளை செய்தால் திருமகள் உங்கள் கிரகத்தில் தங்கமாட்டாள் என்பதுடன் இவை பாவச் செயல்களும் கூட. நம்மால் நிச்சயம் இவைகளை நிச் மகாலட்சுமி வாசம் என்றால் ஏதோ காசு பணத்தோடு மட்டும் முடிச்சு போட்டு பார்க்காதீர்கள்.
அது எல்லாவற்றுக்கும் மேலான ஒன்று. மேற்கூறிய பாவச்செயல்களை கூசாமல் செய்துகொண்டு உலாவரும் எத்தனையோ பணக்காரர்களை நான் பார்க்கிறேனே என்று நீங்கள் சொன்னால்… அது உங்கள் அறியாமையே அன்றி வேறில்ல.
காரணம்… செல்வம் என்பது வேறு… லக்ஷ்மி கடாக்ஷம் என்பது வேறு. ஒருவன் செல்வந்தனாக இருப்பது அவன் பிராரப்த கர்மாக்களில் ஒன்று. அவ்வளவு தான்.
ஆனால் லக்ஷ்மி கடாக்ஷம் என்பது இறைவன் தரும் பரிசு. வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது. (குறள் 377) என்பது வள்ளுவர் வாக்கு.
கோடிப்பொருள் சேர்ந்திருந்தாலும் , இறைவன் விதித்த விதிப்படிதான் நாம் அதை அனுபவிக்க முடியுமே தவிர, நம் விருப்பப்படி அனுபவிப்பது கடினம்.செல்வந்தர்களால் நிம்மதியாக ஒரு வேளை கூட சாப்பிட முடியாத அளவிற்கு உடலில் நோய்களின் ராஜ்ஜியம் இருக்கும்.
ஆனால் லக்ஷ்மி கடாக்ஷம் உள்ளவர்கள் செல்வத்தோடு நோய்நொடியின்றி ஆரோக்கியமாக இருப்பார்கள். ஒருவேளை செல்வந்தர்கள் உடல் ஆரோக்கியமாக இருந்தால் புத்திரர்கள் நன்றாக இருக்கமாட்டாகள். பெற்றோர் பெயரை கெடுக்கும் பிள்ளைகளாக இருப்பார்கள். ஆனால் லக்ஷ்மி கடாக்ஷம் உள்ளவர்களின் பிள்ளைகள் பெற்றோரில் பெயரை காப்பாற்றி அவர்கள் குடும்பத்திற்கே பெருமை சேர்ப்பார்கள். செல்வந்தர்கள் இல்லம் பெரிதாக இருந்தாலும் அதில் நிறைவு இருக்காது.
லக்ஷ்மி கடாக்ஷம் உள்ளவர்களின் இல்லம் உண்மையில் திருமகளின் வீடு போல இருக்கும். லக்ஷ்மி கடாக்ஷம் என்பது பரந்து விரிந்த பொருளை கொண்டது.
புகழ், கல்வி, வலிமை, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்வினை, நுகர்ச்சி, அறிவு, அழகு, பொறுமை, இளமை, துணிவு, ஆரோக்கியம், நீண்ட ஆயுள் போன்ற 16 பேறுகளை குறிப்பது லக்ஷ்மி கடாக்ஷம்.
‘அதிர்ஷ்டம்’ யாருக்கு வேண்டுமானாலும் அடிக்கலாம். ஆனால் ‘லக்ஷ்மி கடாக்ஷம்’ எல்லாருக்கும் கிடைக்காது.
தரங்கிணி தந்த தீர்த்தர்
நாராயண தீர்த்தர் ஒரு கர்நாடக இசை வல்லுனர். ஆந்திர மாநிலமான குண்டூர் மாவட்டம் வில்லத்தூர் என்ற கிராமத்தில் பிறந்தார். மங்களகிரிக்கு அருகாமையில் உள்ள காஜா என்ற இடத்தில் வாழ்ந்து வந்தார். தள்ளவஜ்ஹுல என்ற குடும்பத்தைச் சேர்ந்தவர். கோவிந்த சாஸ்த்ருலு என்பது அவரின் இயற்பெயர். பின்னர் அவர்கள் தமிழ் நாட்டில் உள்ள தஞ்சாவூர் நோக்கி இடம்பெயர்ந்தனர். சரஸ்வதி மஹால் நூலகத்தில் உள்ள சான்றுகளின் படி அவருடைய காலம் 1650-1745 எனக் கொள்ளலாம். அவர் நீண்ட காலம் வாழ்ந்திருந்தார். இசையை இளவயதிலேயே நன்றாக கற்றார். பாகவத புராணம், மற்ற புராணங்களை நன்றாகக் கற்றறிந்து இருந்தார். சம்ஸ்கிருத மொழி நன்கு கற்றிருந்தார். மிக இளவயதிலேயே வாழ்க்கையைத் துறந்து ஆன்மிக வாழ்வில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அவர் தத்துவங்களை போதிக்க காசிக்குச் சென்றார். நாட்டியக்கலை மற்றும் இசையில் அதிக ஈடுபாடு இருந்தமையால், அவருக்கு 34 வெவ்வேறு வகையான ராகங்கள் தெரியும். மிக அதிகமாக, த்ரிபுட, ஆதி, ரூபக, சாபு, சம்பா, மத்ய, விளம்ப, ஏகா மற்றும் அட தாளங்களைப் பயன்படுத்தினார். நிர்த்ய மற்றும் நாட்டிய பதங்களுக்கு எளிதான நேரான பாடல்களைப் பயன்படுத்தினார். கடினமான பதங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தார். அவருடைய கத்யங்கள் மிக அழகானவை. அனுஷ்டுப், ஆர்யா, இந்த்ரவஜ்ரா, புஜங்கப்ரயடம், சர்துலவிக்ரீட்தம்,வசந்த திலக ப்ரித்வி போன்ற 17 வகையான சந்தஸ்களைப் பயன்படுத்தினார். 15 புத்தகங்களை எழுதியுள்ளார். அவை சரஸ்வதி மஹால் தஞ்சாவூர் மற்றும் காசி பல்கலைக்கழக நூலகங்களில் கிடைக்கின்றன. பாரிஜாத அபஹர்ணம் மற்றும் ஹரிபக்தி சுன்டர்ணவம் என்று இரு நாடகங்களையும் இயற்றியுள்ளார். நாராயண தீர்த்தர் 1745 ல் குடமுருட்டி ஆற்றின் கரையில் அமைந்துள்ள திருப்புந்துருத்தி என்ற கிராமத்தில் ஒரு பெரிய மாமரத்தின் அடியில்.மாசி மாதம் கார்த்திகை நட்சத்திரம் சுக்ல அஷ்டமி நாளில் இறந்தார். அவர் உயிருடனே என்று சொல்லப்படும் “ஜீவ” சமாதி அடைந்தார் என்று சொல்லுபவர்களும் உள்ளனர். அவரைப் பற்றி மற்றோர் தகவல். குருவின் ஆணைக்கு இணங்க போதேந்திர சுவாமிகளைப் சந்திக்க கோவிந்தபுரம் பயணிக்கிறார். ஆனால் இவர் செல்வதற்கு சில மாதங்கள் முன்பாகவே அவர் சமாதி அடைந்து விட்டார் என்பதைக் கேள்விபட்டு கோவிந்தபுரத்திலேயே சில நாட்கள் தங்கிவிட்டு, தாங்க முடியாத வயிற்று வலியுடன், காவிரிக்கரையின் ஓரமாக உள்ள பல ஊர்களையும் பார்த்துவிட்டு திருவையாறு வந்தடைகிறார். நடுக்காவிரி என்ற கிராமத்தை அடையும்போது வயிற்றுவலி அதிகமாகி அருகில் உள்ள விநாயகர் கோயிலில் தூங்குகிறார். ஆழ்ந்த உறக்கத்தில் கனவில் கிருஷ்ணன் வந்து, “காலையில் நீ விழித்தெழும் போத ஒரு மிருகத்தைப் பார்ப்பாய், அதைத் தொடர்ந்து சென்றால் உன்னுடைய வயிற்று வலி காணாமல் போகும்” என்று கூறுகிறார். அதே போல, காலையில் விழித்தெழும் போது, ஒரு பன்றியைப் பார்க்கிறார். கிருஷ்ணன் கனவில் சொன்னது ஞாபகம் வர, அதே சமயத்தில் பன்றியைப் பார்ப்பது நல்ல சகுனம் இல்லை என நினைத்து, சிறிது நேரம் தயங்கிடுகிறார். ஆனால் கிருஷ்ணன் ஆணையை மீறமுடியாமல், பன்றியைத் தொடர்ந்து சுமார் 4 கிலோமீட்டர் தொடர்ந்து சென்று களைத்து விடுகிறார். திடிரென்று அந்தப் பன்றியும் அருகில் உள்ள கோயிலின் உள்ளே சென்று மறைந்து விடுகிறது அதே நேரத்தில் நாராயண தீர்த்தர் வானில் இருந்து, “நான் தான் உன்னை அழைத்து வந்துள்ளேன்,” என்று ஒரு சத்தம் கேட்கிறார். அதைக் கேட்ட நாராயண தீர்த்தரும் மிக்க மகிழ்ச்சி டைகிறார். அவருக்கும் வயிற்றி வலி திடிரென்று மறைந்து விடுகிறது. அதுவரை “பூபதிராஜபுரம்” என்று பெயர் கொண்ட ஊர், “வரகூர்” என்று பெயர் பெறுகிறது, ஏனெனில் சமஸ்கிருதத்தில்,”வரஹா” என்றால் பன்றி எனப்படும். நாராயண தீர்த்தர் வரகூர் கிராமத்தில் பல காலம் தங்கி,பல சம்ஸ்கிருத மொழியில் பல பாடல்களை இயற்றியுள்ளார். அவற்றில் முக்கியமாது “தரங்கிணி” ஆகும். அதனைப் பாடும்போது ருக்மிணி, ராதா இவர்களுடன் கிருஷ்ணன் நடனம் ஆடுவதும், அதற்கான சதங்கை ஒலி நாராயண தீர்த்தருக்கு கேட்டாதாகவும் சொல்லுவார்கள். விசவருப தரிசனம் கண்ட நாராயண தீர்த்தர் தேவ சமாதி அடைத்தார் என்று சொல்வார்கள்.
பெரிய இடத்துப் பிள்ளை
தெய்வத்தின் குரல் நான்காம் பகுதி : ரா. கணபதி. மங்களாரம்பம் – பெரிய இடத்துப் பிள்ளை குழந்தை வழியே உலகப் பெற்றோரிடம் ஒரு சின்னக் குழந்தையானால் கூட, அது ரொம்பவும் பெரிய மநுஷ்யாள் விட்டுக் குழந்தையாயிருந்து விட்டால் அதனிடம் எல்லோரும் அன்பு காட்டிக் கொஞ்சுவார்கள். அதற்குப் பயப்படக்கூடச் செய்வார்கள். பழைய நாளில் ‘ராஜாப்பயல்’ என்று அன்போடும் பயத்தோடும் சொன்னார்கள் . அப்புறம் ‘கலெக்டர் அகத்துப் பிள்ளையாக்கும்’ என்று சொல்லி வந்தார்கள். இப்போது ‘மந்திரி-எம். எல். ஏ. வீட்டுப் பிள்ளை’ என்று சொல்கிறார்களோ என்னவோ? பெரிய மநுஷ்யாள் குழந்தை என்றால் அது ஏதாவது சண்டித்தனம் பண்ணினால்கூட, மற்ற குழந்தைகளை அதட்டுகிற மாதிரி அதட்டாமல் அது கேட்பதைக் கொடுத்து விடுவார்கள். ஏன் என்றால், இந்தக் குழந்தை போய், ரொம்பவும் செல்வாக்குள்ள அதன் தகப்பனாரிடம் ஒருத்தரைப் பற்றி ஏதாவது புகார் பண்ணிவிட்டால், அவ்வளவுதான், அந்த ஆசாமிக்கு இந்தத் தகப்பனர்காரரிடமிருந்து பெரிய உபத்ரவங்கள் வந்து சேரும் எவரும் தங்களையே திட்டினால் கூடப் பொறுத்துக் கொள்ள கூடும் போனால் போகிறதென்று விட்டுவிடலாம். ஆனால், காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்கிறார்களே, அப்படி ரொம்பவும் அருமையாக இருக்கப்பட்ட தங்கள் குழந்தையை யாராவது ஏதாவது சொல்லிவிட்டார்களானால் கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடும். இப்படி ஒரு பெரிய மநுஷ்யர் கோபித்துக்கொண்டு கிளம்பினால் ரொம்ப ஆபத்து அல்லவா? அதனால்தான் “இது பெரிய இடத்துப் பிள்ளை அப்பா இதனிடம் வம்புக்குப் போகப்படாது” என்று சொல்வது. இதற்கு நேர் எதிராக, ஒரு குழந்தையை மெச்சி விட்டால் அதன் தகப்பனாருக்கு அவரையே மெச்சுவதைவிட ஸந்தோஷமாய்விடும் உச்சி குளிர்ந்துவிடும். இப்படி ஒரு பெரிய மநுஷ்யரை ப்ரீதி செய்து விட்டால் ஸுலபமாக அவரிடமிருந்து பெரிய பெரிய லாபங்களைப் பெற்றுவிடலாம். பெரியவர்களை நேராக த்ருப்தி செய்வது கஷ்டம். குழந்தைகளையோ ரொம்பவும் எளிதில் த்ருப்தி படுத்தி விடலாம். ஓரு சின்னச் சொப்பையோ சாக்லேட்டையோ காட்டிவிட்டால் போதும். இல்லாவிட்டால் ஏதோ கொஞ்சம் கோணங்கி விளையாட்டுக் காட்டினால் அதிலேயே ஒரு குழந்தைக்குக் குஷி பிறந்துவிடும். அந்தக் குழந்தையின் ஸந்தோத்தில் அதன் அப்பாவுக்கும் ஏக ஸந்தோஷம் உண்டாகிவிடும். தன் குழந்தையை ஸந்தோஷப்படுத்தினவருக்குத் தன்னாலன எல்லா நன்மையும் பண்ணிவிடுவார். அதாவது, ஸுலபத்தில் திருப்திப்படுத்த முடியாத ஓரு பெரியவரால் நமக்கு ஓரு காரியம் ஆகவேண்டுமானால் அதற்கு வழி ஈஸியாக த்ருப்தியாகிவிடும். அவருடைய குழந்தையை ஸந்தோஷப்படுத்துவதுதான். இதனால் என்ன ஏற்படுகிறது? நமக்கு எல்லாவிதமான நன்மைகளையும் ஒன்றுகூடப் பாக்கியில்லாமல் செய்வதற்கு சக்தி படைத்த பெரிய மநுஷ்யராக ஒருத்தர் இருந்து, அவருக்கு ஒரு குழந்தையும் இருந்து விட்டதானல் போதும், நமக்கு ஒரு கஷ்டமே இல்லை. அந்த குழந்தையைப் பிடித்து நாம் ஸுலபத்திலே குஷிப்படுத்தி விட்டாலே போதும், அந்த மஹா பெரிய மநுஷ்யரிடமிருந்து நாம் கொஞ்சங்கூட ச்ரமமேயில்லாமல் பெரிய பெரிய லாபங்களைப் பெற்றுவிடலாமென்று ஏற்படுகிறது. இப்படியிருக்கூடிய மஹா பெரிய இடத்துப் பிள்ளையார் என்று பார்த்துக் கொண்டே போனால் ஊர்ப் பெரிய மநுஷ்யருக்கு மேலே ஜில்லாவின் பெரிய மநுஷ்யர், அவருக்கு மேலே மாகாணத்தின் (மாநிலத்தின்) பெரிய மநுஷ்யர் என்று போய்க் கொண்டேயிருக்கும். முடிவாக ஸமஸ்த லோகத்துக்கும் எவன் ராஜாவோ அந்தப் பரமேச்வரனிடம் போய் நிற்கும். ராஜராஜேச்வரி என்றே பெயரிருக்கிற அம்பாள் – ஈஸ்வரன் என்ற தம்பதிதான் எல்லாருக்கும் உச்சியில் இருப்பார்கள். அப்போது நாம் முடிவாக நிற்கும் ” பெரிய இடத்துப் பிள்ளை “யார் என்று பார்த்தால், பிள்ளையார்தான் என்று தெரியும். பயத்தோடு, ப்ரியத்தோடு ராஜாக்கள் ப்ரஸிடென்ட்கள் எல்லோருக்கும் மேலே த்ரிலோகங்களுக்கும் ராஜாவாக இருக்கப்பட்ட ஈசனுடைய குழந்தை அவர். மூத்த குழந்தை. மூத்தது ஸாது என்று வசனம். அதனால் இவரை த்ருப்தி செய்வது ரொம்பவும் ஸுலபம். அதற்காக இஷ்டப்படி இருந்துவிட முடியாது. நமக்கு ரொம்பவும் இடம் கொடுத்துப் போய்விடப் போகிறதேயென்றுதான் கம்பிரமான யானை ஸ்வருபமாயிருக்கிறர் அதனால் கொஞ்சம் ஜாக்கிரதையாகவுந்தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் விக்னங்கள் பண்ணுவார் இவருடைய மஹா பெரிய தகப்பனார், தாயார் சொன்னேனே, அவர்களுக்கே விக்னம் பண்ணி, “உம் ஜாக்ரதை” என்று அதன் மூலம் நமக்கும் ‘வார்ன்’ பண்ணுகிறர். ‘சின்ன எசமான்’ என்று ப்ருயத்தோடேயே கொஞ்சம் பயமும் சேர்த்து இவரைப் பூஜை பண்ணிவிட்டால் அப்படியே ப்ரீதியாகி விடுவார். அதிலேயே பார்வதி பரமேச்வராளும் உச்சி குளிர்ந்து விடுவார்கள். இவருடைய மாதா பிதாக்களான அந்த அம்பிகையும் ஈச்வரனுந்தானே இத்தனை லோகங்களையும் , அவற்றில் உள்ள நம் போன்ற ஸமஸ்த ப்ராணிகளையும் ஸ்ருஷ்டித்து, ரக்ஷித்து வருகிற ஸர்வ சக்தர்கள்? அவர்களுடைய அநுக்ரஹத்தைப் பெற்று விட்டால் நாம் இஹம் பரம் இரண்டிலும் எந்த நன்மையும் பெற்றுவிடாலாம். ஆனால் அநேக நியமங்கள் உண்டு. அதையெல்லாம் நாம் க்ரமமாக அநுஸரிப்பது ச்ரமம். ‘ஆசுதோஷி’ , ‘ க்ஷப்ர ப்ரஸாதினி என்றெல்லாம் (‘எளிதில் த்ருப்தியாகி அநுக்ரஹிக்கிறவர்கள்’ என்று அர்த்தம் கொடுக்கும்) பெயர்கள் அவர்களுக்கு இருக்கிறதென்றாலும் சிவன் கோயில், அம்பாள் கோயில் என்று போனால், இங்கேதான் நிற்கணும், இங்கேதான் நமஸ்காரம் பண்ணணும், இன்ன புஷ்பம், இன்ன நைவேத்யம்தான் அர்ப்பணம் பண்ணணும் என்றெல்லாம் எத்தனை கட்டுப்பாடு இருக்கிறது? ஸ்ரீ சக்ர பூஜையில் கொஞ்சம் தப்பு ஏற்பட்டுவிட்டால்கூட என்னென்வோ (கெடுதல்) ஏற்பட்டுவிடுகிறது என்கிறார்கள் சிவ ஸொத்து குல நாசம் என்கிற மாதிரி வசனங்களை கேட்டாலே பயமாயிருக்கிறது.
இறந்தவரை அடக்கம் செய்ய உதவுவது அஸ்வமேத யாகம் செய்ததற்கு சமம்
( இறந்தவரை அடக்கம் செய்ய உதவுவது அஸ்வமேத யாகம் செய்ததற்கு சமம்) ஏப்ரல் 21,2015,-தினமலர். அட்சய திரிதியை நாளில் செய்யும் தானம் பன்மடங்கு புண்ணியம் தரும். இந்த நன்னாளில், காஞ்சிப் பெரியவரின் பக்தர் வாழ்வில் நடந்ததைக் கேளுங்கள். தினமும் பிடி அரிசி தானமளித்தல், முடிந்த சேவையைச் செய்தல், அனாதையாக இறந்தவரை அடக்கம் செய்வதற்கு உதவுதல் ஆகியவற்றைக் காஞ்சிப் பெரியவர் வலியுறுத்தி வந்தார். இறந்தவரை அடக்கம் செய்ய உதவுவது அஸ்வமேத யாகம் செய்ததற்கு சமம் என்பார் அவர். பெரியவரின் இந்தக் கொள்கைகளை டில்லியில் வசித்த பெரியவர் பக்தர் ஒருவர் கடைபிடித்து வந்தார். ஒருநாள், கரோல் பாக் பகுதிக்குச் சென்றார். நடைபாதையில் வசித்த ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி இறந்ததை அறிந்தார். உடலை அடக்கம் செய்ய பணமின்றி, அவரது மனைவி, குழந்தைகள் செய்வதறியாமல் நின்றனர். அந்த பக்தர் அவர்களுக்கு உதவியதோடு, அவர்களுக்கு தேவையான கோதுமை மாவை தினமும் வழங்க ஏற்பாடு செய்தார். வீட்டு வேலை செய்து சம்பாதிக்கவும் வழிகாட்டினார். பிள்ளைகள் வளர்ந்து ஆளாகி விட்டனர். ஒருநாள் தொழிலாளியின் மனைவி பக்தரைச் சந்தித்து, “”ஐயா! இவ்வளவு காலம் உதவி செய்தீர்கள். இப்போது நல்ல நிலைமைக்கு வந்து விட்டோம். ஆதரவின்றி வாடும் ஏழைகளுக்கு நானும் உதவ விரும்புகிறேன்,” என்றார். பக்தரும், “”காஞ்சிப்பெரியவர் அருளால் உங்கள் தர்மச்செயல்கள் நல்லபடியாக அமையட்டும்,” என்று வாழ்த்தி அனுப்பினார். அந்த அம்மையாரும் தன்னால் முடிந்த உதவிகளை வாழ்நாள் முழுக்க செய்தார். பக்தர் வாழ்வில் நடந்த இன்னொரு சம்பவமும் உண்டு. ஒருநாள் காலை 3 மணிக்கு யாரோ ஒருவர் கதவைத் தட்டும் சத்தம் கேட்டு எழுந்தார். வந்தவர், தன் உறவினர் ஒருவர் மருத்துவமனையில் இறந்து விட்டதாகவும், அவர் உடலை சென்னைக்கு அனுப்ப உதவுமாறும் வேண்டினார். பக்தரும் உடலை விமானம் மூலமாக அனுப்பும் பணியில் ஈடுபட்டார். இதைக் கவனித்த டாக்சி டிரைவர் ஒருவர் வலிய உதவி செய்ய வந்தார். சவப்பெட்டி ஒன்றைத் தன் செலவில் தயார் செய்து, அதை விமானத்தில் ஏற்றும் வரை பக்தருக்கு உதவியாக உடனிருந்தார். டிரைவருக்கு பணம் கொடுக்க முன் வந்தார் பக்தர். அவர் மறுத்ததோடு, “”ஐயா! உங்களை எனக்குத் தெரியும். சாலை விபத்தில் சிக்கிய நான் மருத்துவமனையில் இருந்த போது, நீங்கள் நோயாளிகளுக்கு காஞ்சிப் பெரியவரின் பிரசாதம் அளித்ததோடு, விரைவில் உடல்நலம் பெறவும் பிரார்த்திக் கொண்டீர்கள். வாழ்நாளில் ஒருமுறையாவது தங்களைச் சந்திக்க எண்ணியிருந்தேன். அந்த எண்ணம் இன்று நிறைவேறியது,” என்று சொல்லி கண் கலங்கினார். “பெரியவர் திருவருளால் நன்மை உண்டாகும்’ என்று பக்தர் அவருக்கு நன்றி கூறினார். அட்சய திரிதியை என்றாலே தானத்திருநாள் தான். அவரவர் சக்திக்கேற்ப ஆதரவற்றோருக்கு உதவி செய்ய இந்நாளில் உறுதியெடுப்போம். காஞ்சிப்பெரியவரின் நல்லருள் பெறுவோம்

