Home Blog Page 6069

கற்பனை மேடைப் பேச்சு: தாலி… நூலு…. அறுப்பு….

- 2026
இப்ப நடக்கற கூத்தையெல்லாம் வெச்சி…
நாமும் ஒரு இயக்கம் தொடங்கி…
அதுக்கு நாமே ஒருங்கிணைப்பாள தலைவனா இருந்து…
அதுக்கும் நாமே காசு கொடுத்து கூட்டம் சேத்து…. இவங்கள மாதிரியே மேடையில பேசினா….
எப்டி இருக்கும்…?????
அந்தப் பேச்சையும் நாமே ரிப்போர்ட் எடுத்து,
நாமே எடிட் செய்து,
நாமே ஒரு பேப்பர் நடத்தி,
நாமே அதை வெளியிட்டு..
நாமே (நாம் மட்டுமே ) அதைப் படித்துப் பார்த்தா எப்படியிருக்கும்….???
கற்பனைக்கு எல்லை இருக்கா என்ன???
அரசியலை அவர்கள் கேலிக் கூத்து ஆக்கி விட்டார்கள் என்பதால்… நாமும் ஒரு கேலிக் கூத்து ஆடுவோமே…..
இப்படியாக… குதிரையைத் தட்டி விட்டோமா… தட தடன்னு அது ஓடுச்சா…அப்படியே அது கொட்டுச்சா…..
முடிஞ்சா நீங்களும் படிச்சி உங்க மேடைப்பேச்சையும் இங்க நீட்டி முழக்குங்க…
*****
இதோ நம்ம ரிப்போர்ட்டிங்:
*****
தாலி, பூணூல் அறுத்து திருமண பந்தத்தை அடிமை எனும் தி.க. தொண்டர், தம் அடிமைக் கயிற்றை அறுத்து தி.க. தலைவர் ஆக முடியுமா? : செந்தமிழன் சீராமன் கேள்வி
சென்னை:
அண்மையில் தி.க.வினர் சித்திரை தமிழ்ப் புத்தாண்டு நாளில் மேடையில் தாலியறுப்பு நிகழ்ச்சி நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இரு தினங்களுக்கு முன்னர் மயிலாப்பூர், மே. மாம்பலத்தில் வயதான இரு பூசாரிகளின் பூணூல் அறுக்கப்பட்டதைக் கண்டித்தும், தெய்வத்தமிழ் இயக்கம் சார்பில் மயிலாப்பூர் மாங்கொல்லையில் கண்டனக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீராமன் தலைமை தாங்கிப் பேசினார். அப்போது, தாலி, பூணூல் அறுத்து, திருமண பந்தத்தை அடிமை என்று கூறும் தி.க. வைச் சேர்ந்த தொண்டர், நெடு நாட்களாக தாமும் தம் வாரிசுகளும் கொத்தடிமைகளாக ஒரு தலைக்கும் குடும்பத்துக்கும் அடிமைப் பட்டுக் கிடக்கும் நிலையை உணர்ந்து, அடிமை விலங்கை உடைத்து, கயிற்றை அறுத்து வெளியில் வந்து தாமே அதற்கு தலைவன் ஆகிக் காட்ட முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.
அவர் மேலும் பேசியது….
தாலி என்பது பெண்ணுக்கு வேலி என்றார்கள். ஆனால் காலிப் பயல்கள் அதை போலி என்கிறார்கள். ஒரு பெண்ணின் நெற்றி வகிடையும் கழுத்தில் தாலிக் கயிறையும் பார்த்தால், இவள் வேறொருவன் மனைவி என்று கருதி, எந்த ஓர் ஆடவனும் அவளை மரியாதையாகப் பார்த்து விலகிச் செல்வான். இது தமிழர் நாகரிகம்.
ஆனால்… நடந்தது என்ன? இந்தியா முழுதும் பரந்து விரிந்த ராமாயணக் கதையில், ராவணனின் கதாபாத்திரத்தை இவர்கள் தமிழன் என்றார்கள். பிறன் மனை நோக்கி தன் குடியைக் கெடுத்துக் கொண்ட அரக்கன் ராவணன் தமிழன் என்று தூக்கிக் கொண்டாடுபவர்கள், அவனது செயலையே மேற்கொள்ள எண்ணம் கொண்டார்கள் என்றே தோன்றுகிறது. பிறன் மனை நோக்கல் தீதென்ற பரம்பரையில் வந்தவர்களிடம், பிறன் மனை நயத்தலாக, மாற்றான் தோட்டத்து மல்லிகை என்று சிறுமைப் படுத்திய கயமைக் கூட்டத்தில் வந்தவர்கள் பிரசாரம் செய்கிறார்கள் என்று சொல்லும்போது, அவர்களுக்கும் அப்படி ஒரு தனி நாகரிகத்தை ஏற்படுத்திக் கொடுத்த தலைவர்கள், தங்கள் முன்னோரை நனி நாகரிகர் என்று விளித்ததை விளங்கிக் கொள்ளாமல் போனார்களோ என்று வெட்கப் படுகிறேன், வேதனைப் படுகிறேன். துக்கப் படுகிறேன், துயரப் படுகிறேன்…
இவ்வகையில், தாலி கட்டியிருந்தால் அடுத்தவன் மனைவி என்று தன் அறிவுக்கு எட்டி, ஏதோ ஒரு மூலையில் இருக்கும் தன் முன்னோரான நனி நாகரிகரின் நற்பண்பு தனக்கும் வந்து விடுமே என்ற எண்ணத்தில்தான், தாலியை தன் கண்ணுக்குத் தெரியாமல் செய்வதற்காக, தாலி ஒரு அடிமைச் சின்னம் என்றுகூறி பெண்களின் மூளையை மழுங்கடித்து, தன் சுய இச்சையைத் தீர்த்துக் கொள்ள வழி செய்து கொள்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது…..
பெண்ணாக இருந்தால் சரி… கழுத்தில் தொங்கும் கயிறு அடிமைச் சின்னம். அட.. ஆணுக்கு என்னய்யா வந்தது?
பூணூல் அணிபவன் பார்ப்பனன் மட்டுமா? எத்தனையோ சாதிக்காரர்களும் தான் அணிகிறார்கள். ஆனால் இதிலும் ஒரு சூட்சுமம் உள்ளது என்பதை எண்ணிப் பார்க்கும் போது உடலெல்லாம் அப்படியே சிலிர்க்கிறது. மயிர்க் கூசுகிறது. உள்ளம் பூரித்துப் போகிறது.
பெண்ணுக்கு மட்டும்தான் திருமணம் ஆன அடையாளம் இருக்க வேண்டுமா? ஆணுக்கு கிடையாதா என்று அந்தக் காலத்தில் நம் முன்னோர் யோசித்துதான் இப்படி ஒரு பழக்கத்தை கொண்டு வந்தார்கள்.
வயசில் சின்ன பையன்களுக்கு பூணூல் கிடையாது. படிக்கும் வயது எட்டியதும், ஒரு முடிச்சு பூணூலை போடுவார்கள். அவன் படிக்கும் மாணாக்கன் என்பதாக. அவனே திருமண வயது வந்ததும், இரண்டு முடிச்சுகளாக… அதாவது ஒரு முடிச்சு கொண்ட தலா இரு பூணூலை அணிவிப்பார்கள். இந்த சடங்கு, அந்த ஆடவன் திருமணமானவன் என்பதை உலகுக்கு தெரியப்படுத்தும். அவனே ஒரு குழந்தைக்கு தந்தையாகும் போது, அவன் குழந்தை பெற்றவன் என்பதை வெளிப்படுத்த மூணு பூணூலை அணிவிப்பார்கள். அதைக் கண்டு கொள்ளும் உடன் இருப்போர், உறவினர், அல்லது அறிமுகமற்ற நபர்கள், அந்த நபர் திருமணமானவன் என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு, ஏமாற்றாமலோ, ஏமாறாமலோ தடுத்தார்கள்.
ஆனால், இப்போது நடப்பது….. திருமணம் ஆனதையே மறைத்து எத்தனை திருமணமும் செய்து கொள்ளலாம், யாரை வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் நோக்கலாம், பாக்கலாம், தூக்கலாம் என்ற காட்டுமிரான்டித் தனமான நிலையை ஒரு நாகரிக சமுதாயத்தில் ஏற்படுத்த முனைகிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கும் போது, ஐயஹோ.. இதை நோக்கியா இந்த சமுதாயம் செல்ல வேண்டும் என்று ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு கணமும், கடிகார முள் டிக் டிக் என்று அடிக்கும் ஒவ்வொரு சத்தத்தின் போதும் என் இருதயமும் டக் டக் என்று அடிக்கிறது.
பெண்ணுக்கு தாலி , கல்யாணமானதைக் காட்டிக் கொடுக்கும் அடிமைச் சின்னம் என்று கூறி அறுத்து எறிகிறார்கள்.
ஆணுக்கும் பூணூல் கல்யாணமானதைக் காட்டிக் கொடுக்கும் அடிமைச் சின்னம் என்று எண்ணி அறுத்து எறிகிறார்கள்.
நான் கேட்கிறேன். கல்யாணம் ஆனவன் அல்லது ஆனவள் என்பதை உலகுக்குத் தெரியப் படுத்தும் ஒரு சின்னத்தை அறுத்து அறிவதில் அப்படி என்ன குரூர புத்தி உங்களுக்கு? இதை செய்து நீங்கள் என்ன சாதிக்கப் போகிறீர்கள்? கல்யாணம் ஆகாதவள் அல்லது ஆகாதவன் என்று உங்கள் மனசுக்கும் வெளியிலும் காட்டுவதால் எப்படிப்பட்ட காட்டுமிராண்டித் தனங்களை இந்த சமுதாயம் சந்திக்கும் என்பதை நீங்கள் அறிவீர்களா?
அது சரி… நான் கேட்கிறேன்… இவற்றை எல்லாம் அடிமைக் கயிறு என்கிறீர்களே… நீங்கள் எத்தனைக் காலமாக இவர்களின் சுய இச்சைக் கொள்கைகளுக்கு அடிமைப் பட்டு, உங்கள் சுயத்தைத் தொலைத்து, சுய மரியாதையைத் தொலைத்து, அடிமை வாழ்க்கை வாழ்ந்து, உங்கள் பிள்ளை, பேரன் என கொத்தடிமைகளாக்கி… அடிமை, கொத்தடிமை, சொத்தடிமை, சோத்து அடிமை என அடிமைகளாக இருக்கிறீர்களே… என்றாவது நீங்கள் சிந்தித்துப் பார்த்ததுண்டா..? கேட்கிறேன்…. எத்தனை நாட்களுக்கு நீங்கள் கொடி பிடிப்பீர்கள், கோஷம் போடுவீர்கள்? சமத்துவம் சகோதரத்துவம் என்றெல்லாம் பேசுகிறீர்களே… அந்த சமத்துவப் படி, பெரியார் சொத்து உங்களுக்கு கிடைத்ததா? அட… அந்த புத்தகமாச்சும் பொதுச் சொத்தாகி, உங்களுக்கு ஒரு பாகமாவது கிடைத்ததா? என்றாவது ஒரு நாள் நீங்களும் தலைவன் ஆக வேண்டும் என்று யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?
அவ்வளவு அடிமைப் புத்தியை வைத்துக் கொண்டு, நீங்கள் அடுத்தவரின் அடிமைத் தனத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியது தான்? வெளங்கும் இந்த நாடு. வெளங்கும் உங்கள் கொள்கை… இன்னும் பேச நிறைய இருக்கிறது. ஆனாலும், மணி பத்தைத் தாண்டி, பத்து மணி ஒரு நிமிடம் ஆகி, நொடிகள் கடந்து உங்கள் மூளை எல்லாம் வாட்டத்தைச் சந்திப்பதை என் உள்ளம் உணர்ந்து கொண்ட காரணத்தால், இத்துடன் என் சுய ஊக்க சிந்தனையை உங்களிடம் விதைத்துக் கொண்டேன் என்ற மன திருப்தியோடு என் பேச்சை நிறைவு செய்கிறேன். வாழ்க தமிழ். வெல்க தமிழ். திராவிடத்தை ஒழித்து, தமிழைத் தூக்கிப் பிடிப்போம் என்று கூறி அமைகிறேன். நன்றி வணக்கம். “
என்று பேசினார் செந்தமிழன் சீராமன்.
தெய்வத் தமிழ் இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஏராளமானோர் முக்காடு போட்டு முழங்காலிட்டு அமர்ந்தபடி கலந்து கொண்டனர்.

பட்டையை கிளப்ப தயாராகிவிட்டது- ஐஸ்வர்யா தனுஷின் “வை ராஜா வை”

aishwarya-dhanushதரமான படங்களை மிகவும் பிரம்மாண்டமான முறையில் தயாரித்து சரியான நேரத்தில்மக்களை சென்றடைவதில் கைதேர்ந்த தயாரிப்பு நிறுவனம் கல்பாத்தி எஸ் அகோரம்அவர்களின் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட். தற்போது இவர்கள் மிகவும் பிரம்மாண்டமான முறையில் தயாரித்து, ஐஸ்வர்யா ஆர் தனுஷ் அவர்களின் நுட்பமான இயக்கத்தில் உருவான“வை ராஜா வை” விரைவில் திரைக்குவரவிருக்கிறது. இப்படத்தில் நவரசத்துடனும் இளமை துள்ளளுடனும் “இளமை நாயகன்” கவுதம் கார்த்திக்கதாநாயகனாகவும், “அழகிய தமிழ் மகள்” பிரியா ஆனந்த் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்,டானியல் பாலாஜி வில்லன் கதாபத்திரத்திலும், விவேக் மாறுபட்ட கதாபத்திரத்திலும் நடித்துள்ளனர். இவர்களுருடன் சேர்ந்து சதீஷ், மனோ பாலா, M.S.பாஸ்கர், மயில் சாமி காமடியில் கலக்க்கியிருக்கிறார்கள். முதல் முறையாக இயக்குனர் வசந்த் சாய் கவுதம் கார்த்திக்கின் அப்பாவாக நடித்துஇருக்கிறார், டாப்சி மிக சிறப்பான கதாபத்திரம் ஏற்று நடித்து இருக்கிறார், மேலும் சண்டை கட்சியில் தூள் கிளப்பி இருக்கிறார். இயக்குனர் ஐஸ்வர்யா ஆர் தனுஷ் இயக்கிய முதல் படம் “3”. தனுஷ்’ஐ வைத்து அழுத்தமான காதல் கதையில் bipolar disorder என்ற மன நோயையின் தாக்கத்தையும் அதன்பாதிப்பையும் உணர்த்தும் வகையில் இயக்கியிருந்தார். அதில் வரும் “why this kolaveri di”  பாடல் உலகம் முழுவதும் அனைவரையும் வசிகரித்து இன்று வரை அசைபோட்டு வருவதும் அனைவரும் அறிந்ததே. மிகுந்த எதிப்பார்பிக்கிற்கு இடையே அவரின் தனது இரண்டாவது படைப்பான “வை ராஜா வை” படத்தை இயக்குகிறார். முதல் படத்தில் அனிருத்துடன் பணியாற்றிய ஐஸ்வர்யா இப்படத்தில் யுவன் சங்கர்ராஜாவுடன் பணியாற்றியுள்ளார். படத்தின் பாடல்கள் அனைவராலும் வரவேற்க்கப்பட்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில்  intuition எனற special power’ஐ மய்யமாக வைத்து காதல், காமெடி, திரில்லர் என கதையை அனைவரும் ரசிக்கும் வண்ணம் ஜனரஞ்சகமான முறையில் ஒரு கமர்சியல்எண்டர்டெயினராக திரைக்கதை அமைத்திருக்கிறார் ஐஸ்வர்யா ஆர் தனுஷ். சமிபத்தில் வெளியான  இப்படத்தின் முன்னோட்டம் (முதல் டிரைலர் 7.7 லட்சங்கள் மற்றும் இரண்டாவது டிரைலர் 2 லட்சங்கள்) அனைவரின் பாராட்டையும் பெற்றது. இதில் கொக்கி குமாராக வரும் தனுஷின் சிறப்பு தோற்றம் அனைவராலும் ரசிக்கப்படும் வகையில் அமைக்கபட்டிருக்கிறது. அதனால்  படத்தின் எதிர்ப்பார்ப்பு மேலும் அதிகப்படுத்தி உள்ளது. இப்படத்தை பார்த்த தணிக்கைகுழுவினர் ‘U’ சான்றிதழ் வழங்கி படக்குழுவனரையும்இயக்குனர் ஐஸ்வர்யா ஆர் தனுஷையும் பாராட்டினர். தணிக்கை குழுவினரின் பாராட்டு தனக்கு கிடைத்த முதல் வெற்றியாக கருதினார் இயக்குனர். ருலேட் என்ற கேம் தமிழ் சினிமாவிற்கு புதுசு, அது அனைத்து மக்களுக்கும் புரியும் படி கதை சொல்லும் விதத்திலும் காட்சி படுத்தும் விதத்திலும் திறம்பட செயல் பட்டுள்ளனர் படக்குழு. சிங்கப்பூரில் உள்ள பிரமாண்டமான  ராயல் கரோபியன் கப்பலில் படபிடிப்பை நடத்த திட்டமிட்டு, படக்குழு அனைவரும் சிங்கப்பூருக்கு சென்று ராயல் கரோபியன் கப்பலில் பயணித்தபடியே பாங்காக் மற்றும் வியட்நாம் வழியாக படபிடிப்பை நடத்தினார்கள்.அந்த பிரமாண்ட கப்பலின் காட்சி அமைப்பு படம் பார்பவரின் கண்களுக்கு விருந்தாக அமைய ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் திறம்பட பணியாற்றியுள்ளார். “பச்சை வண்ண பூவே”   பாடல் காட்சிக்காக ஜப்பான் சென்று அந்த ரம்மியமான சுழலைபாடலுக்கு தகுந்தார் போல் காட்சி பிடித்துள்ளனர். கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்தின் காதல் காட்சிகள் ரசிக்கும் படியாக இளமை துள்ளலுடன் படமாக்க பட்டிருக்கிறது!!! பொதுவாக ஒரு படத்தின் எதிர்பார்ப்பு, ரசிகர்கள் படம்பார்க்க டிக்கேட்களை முன்பதிவுசெய்யும் எண்ணிக்கை வைத்து கணிப்பார்கள். ஆனால் வை ராஜா வை படத்திற்குதிரையரங்கு உரிமையாளர்கள் படத்தை திரையிட முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டிய விதம் படத்தின் எதிர்ப்பார்ப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் அமைந்தது. மக்கள் எதிர்ப்பார்க்கும் வகையில் ஜனரஞ்சகமான படங்களையும், பெரும் வெற்றிபெற்றபடங்களையும் உருவாக்குவதிலும் வெளியீடுவதிலும் கைதேர்ந்த தயாரிப்புநிறுவனமான கே ஈ ஞானவேல் ராஜாவின் “ஸ்டுடியோ க்ரீன்” நிறுவனம், “வை ராஜா வை”படத்தை தமிழக்மெங்கும் வெளியிடுகிறது. இவர்கள் சமீபத்தில் வெளியீட்ட மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த “ஒ காதல் கண்மனி” பெரும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடதக்கது. உலகமெங்கும் வா ராஜா வா என்று ரசிகர்களை அழைக்க, வரும் மே 1ல் வெளியாகிறது வை ராஜா வை.

பசில் ராஜபட்ச உள்பட மூவர் கைது

கொழும்பு: இலங்கையின் முன்னாள் பொருளாதார வளர்ச்சி அமைச்சர் பசில் ராஜபட்ச இன்று பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நிதி மோசடி தொடர்பான வழக்கு ஒன்றில் விசாரணைpacil-rajapaksha மேற்கொள்வதற்காக அவர் இன்று பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று முற்பகல் 11 மணி முதல் மாலை 5 மணி வரை விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவரை, கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸார் அழைத்துச் சென்றனர். பசில் ராஜபட்சவுடன் பொருளாதார வளர்ச்சி அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் நிஹால் ஜயதிலக்க, திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணியாளர் நாயகம்ரக் ரணவக்க ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக, கடுவலை நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு ஏற்ப அவரிடம் இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இலங்கையில் அண்மையில் நடந்த அதிபர் தேர்தலுக்குப் பின்னர் இலங்கையில் இருந்து சென்ற பசில் ராஜபட்ச சுமார் மூன்று மாதங்களுக்கு மேல் அமெரிக்காவில் தங்கியிருந்தார். பின்னர் நேற்றுதான் நாடு திரும்பினார்.

தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை ஓட்டம் : போலீசில் புகார் அளித்த பெண் வீட்டார்

திருவண்ணாமலை: செங்கத்தில் தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை ஒருவர் ஓட்டம் பிடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் வீட்டார் போலீசில் புகார் அளித்தனர். செங்கம் துக்கா பேட்டையைச் சேர்ந்த முனுசாமியின் மகன் செந்தில்குமார்(26) மின்வாரிய இளநிலைப் பொறியாளராகப் பணியில் உள்ளார். செந்தில்குமாருக்கும் ஆற்காட்டைச் சேர்ந்த முதுநிலைப் பட்டதாரிப் பெண் ஒருவருக்கும் பெற்றோரால் திருமணத்துக்கு நிச்சயிக்கப்பட்டு, ஏற்பாடு நடைபெற்றது. புதன் இன்று காலை 6–7.30 மணி அளவில் முகூர்த்தம் நிச்சயிக்கப்பட்டு பத்திரிக்கை அடித்து உறவினர்கள், நண்பர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதை அடுத்து, நேற்று இரவு துக்காப்பேட்டையில் தனியார் திருமண மண்டபத்தில் மணமக்கள் அழைப்பு நடந்தது. இதில் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். இதன் பின்னர், இன்று காலை 4 மணி அளவில் மணமகன் செந்தில்குமார், புரோகிதரை போன் மூலம் தொடர்பு கொண்டு வெளியில் சென்றுவிட்டு வருவதாகக் கூறி வெளியில் சென்றார். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் அவர் மண்டபத்துக்குத் திரும்பவில்லை. முகூர்த்த நேரம் நெருங்கிய நிலையில், மாப்பிள்ளையை பல இடங்களில் தேடியும் போனில் தொடர்பு கொண்டும், அவர் அகப்படவில்லை. முகூர்த்த நேரம் கடந்த நிலையில், மணமகன் மண்டபத்துக்கு வராததால், அந்தத் திருமணம் நின்று போனது. இதனால் மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பெண் வீட்டார், செங்கம் போலீசில் புகார் அளித்தனர். அவர்களது புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பூபதி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். திருமணம் பிடிக்காமல் செந்தில்குமார் ஓடி விட்டாரா அல்லது அவரை யாரேனும் கடத்திவிட்டார்களா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

ஆம் ஆத்மி கஜேந்திராவைத் தொடர்ந்து மேலும் ஒரு விவசாயி தற்கொலை

delhi-farmer-suicide புது தில்லி: நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியினர் கூட்டிய பொதுக்கூட்டம் பேரணியில் கலந்து கொள்ள வந்திருந்த ராஜஸ்தானைச் சேர்ந்த கஜேந்திர சிங் என்ற விவசாயி, தில்லி ஜந்தர் மந்தரில் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சிறிது நேரத்தில் ஆல்வாரில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை செய்துகொண்டார். ஆல்வார் மாவட்டத்தில், புதன்கிழமை இன்று 55 வயது மதிக்கத்தக்க விவசாயி ரய்ல்வே தண்டவாளத்தில் தலையைக் கொடுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். ஆல்வார் – மதுரா ரயில் பாதையில், கண்டெடுக்கப்பட்ட விவசாயி ஹர்ஷ் சுக்வால் உடல் பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவர் தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது, தண்டவாளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தாரா என்ற கோணத்தில் பொலீஸார் விசாரித்து வருகின்றனர். இவரது மகன் போலீஸாரிடம் தெரிவித்தபோது, நேற்று இரவு வயலுக்குச் சென்றவர் வீட்டுக்குத் திரும்பவில்லை என்றும், அவரது உடல் ரயில் தண்டவாளத்தில் கிடந்தது தெரியவந்ததாகவும் கூறியிருக்கிறார். அதேநேரம், மாநிலத்தில் பருவம் தவறிப் பெய்த மழையால், பயிர்கள் பெருமளவு நாசமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் மாநிலத்தில் பெரும் மன உளைச்சலில் உள்ளனர் என்று கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் சிவ்குமார் தெரிவித்துள்ளார். எனவே மன உளைச்சலால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

புதிதாக தொழில் தொடங்கிய தமன்னா: வாழ்த்து சொன்ன தனுஷ்

dhanush thamannaசினிமாவில் வாய்ப்புகள் குறைந்து கொண்டே வருவதால் சினிமாவை தவிர சொந்தமாக நகைகளை வடிவமைக்கும் தொழிலை ஆரம்பித்து விட்டார் தமன்னா.

இதை விற்பனை செய்வதற்காக https://www.witengold.com/ என்ற இணையதளம் ஒன்றையும் ஆரம்பித்துள்ளார். தமன்னாவின் இந்த முயற்சிக்கு பல்வேறு நடிகர் நடிகைகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தனுஷும் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ட்விட்டரில் தனுஷ் கூறியிருப்பதாவது, தமன்னா என்னுடைய நல்ல தோழி. மனிதநேயம் மிக்கவர். அவருடைய இந்த புதிய தொழில் வெற்றியடைய வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்களின் கனவை சுக்குநூறாக்கிய கமல்!

rajini kamal4

ரஜினி, கமல் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் நீண்ட கால ஆசை. ஆனால் அந்த ஆசை இதுவரை நிறைவேறாமலே இருக்கிறது.

80களில் இருவரும் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளனர். ஆனால் இப்போது இருவரும் ஒரே படத்தில் இணைவதும் சாத்தியமில்லாததாக மாறிவிட்டது. இந்நிலையில் ஷங்கர் இயக்கும் அடுத்த படத்தில் ரஜினி ஹீரோவாகவும் கமல் வில்லனாக நடிப்பார் என்று கூறப்பட்டது.

ஆனால் கமல் தன்னுடைய அடுத்த படத்தில் பிஸியாக இருப்பதால் ரஜினியின் படத்திற்கு நோ சொல்லி விட்டார் என்று கமல் தரப்பில் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதோடு கமல், ஷங்கரை நேரில் சந்தித்து இதில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம்.

இதன்காரணமாக, சூப்பர் ஸ்டார், உலக நாயகன் இருவரையும் ஒரே படத்தில் காணலாம் என்று காத்திருந்த ரசிகர்களின் கனவை கமல் சுக்குநூறாக்கியிருக்கிறார்.

கோலிவுட்டையே நடுநடுங்க வைத்த விஷால்!

vishal11ரசிகர் மன்றமாக செயல்பட்டு வந்த மன்றங்களை “அகில இந்திய புரட்சி தளபதி விஷால் ரசிகர்கள் நற்பணி இயக்கம்” என்று மாற்றி இயக்கத்திற்கு புதிய கொடி அறிமுகப்படுத்தி, பெண் கல்வி என்கிற கோஷத்தை முன் வைத்து, புதிய தலைவராக ஜெயசீலனை அறிவித்துள்ளார் விஷால்.

அப்போது அவர் அளித்த பேட்டி வருமாறு… நடிகர் சங்க பிரச்சனையில் தலையிடுவது, திருட்டு விசிடிகளை தேடி அலைவது எதற்காக? நடிகர் சங்க நிர்வாகிகளின் செயல்பாடுகளை எதிர்க்க காரணம் நானும் அதில் ஒரு உறுப்பினர்தானே. என் பணமும் சங்கத்தில் இருக்கிறது. சங்கம் பாராபட்சமில்லாமல் நேர்மையாக நடக்க வேண்டும். என் கருத்தை சொல்லவும் தேவைப்பட்டால் போராடவும் எனக்கு முழு உரிமை உண்டு”.

திருட்டு விசிடி ரெய்டில் நானே ஒரு தயாரிப்பாளராகவும் நடிகராகவும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். ஆயிரக்கணக்கானவர்கள் உழைத்து ஒரு படத்தை உருவாக்கி கோடிக்கணக்கில் பணம் போட்டு எடுத்த படத்தை எவனோ ஒருவன் திருட்டு விசிடி போடுவான். இன்னொருத்தன் கேபிள் டி.வி.யில் போட்டு காசு சம்பாதிப்பான்…  இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு நான் விரல் சூப்பனுமா? என்றார்.

ராதாரவி உடனான பிரச்சனை குறித்து கேட்டதற்கு, “என்னை நாய் என்றும் கடன்காரன் என்றும் சொன்னார். பின்னர் நடிக்கத் தெரியாதவன் என்றும் சொல்லியிருக்கிறார். இதையெல்லாம் சரிப்படுத்திட்டு சங்கத்துக்கு வர சொல்கிறார். அவர் சொல்றபடியே நான் இருந்து விட்டுப் போகிறேன். ஆனால் நான் சரிப்படுத்தி விட்டு திரும்பி வருவதற்குள் இவர்கள் முழுமையாக சங்கத்தை துடைத்து விட்டு சென்று விடுவார்கள். எனவேதான் நான் இப்போதே கேள்வி கேட்கிறேன்” என்று காரசாரமாக பேட்டி கொடுத்துள்ளார் விஷால்.

தில்லியில் 3 மாடிக் கட்டட விபத்து: சிலிண்டர் வெடித்ததே காரணமாம்

delhi-building-collapsed-cylinderபுது தில்லி: புது தில்லியில் மோடிநகர் பகுதியில் 3 மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் ஒருவர் பலியானார். 9 பேர் காயமடைந்தனர். சிலிண்டர் வெடித்ததால்தான் கட்டடம் இடிந்து விழுந்துள்ளது என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இடிபாடுகளுக்கு இடையே மேலும் சிலர் சிக்கியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

விவசாயி தற்கொலை: விசாரணைக்கு ராஜ்நாத் சிங் உத்தரவு

புது தில்லி: மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆம் ஆத்மி கட்சியினர் நடத்திய பொதுக்கூட்டத்தில், விவசாயி கஜேந்திரா தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தில்லி நகர காவல் துறை ஆணையர் பஸ்சியைத் தொடர்பு கொண்டு பேசினார். சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டார். இதன்படி, புது தில்லி சரக காவல் துறை இணை ஆணையர் தலைமையில் விசாரணை நடத்த ஆணையர் பஸ்சி உத்தரவிட்டார். அதேநேரம், போலீசாரின் அலட்சியப் போக்கே விவசாயியின் உயிரிழப்புக்குக் காரணம் என்று அரவிந்த் கேஜ்ரிவாலும், ஆம் ஆத்மி கட்சியினரும் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் இந்த விவகாரம் பெரிதாக வெடிக்கும் என்று தெரிகிறது.