Home Blog Page 6190

நிலம் கையகபடுத்தும் மசோதாவை சுயலாபத்திற்காக ஆதரித்தார் ஜெயலலிதா: கே.என்.நேரு

சுயலாபத்திற்காக நிலம் கையகப்படுத்தும் மசோதாவை ஆதரித்தார் ஜெயலலிதா என்று திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு கூறியுள்ளார். திருச்சி மாவட்டம் லால்குடியில் திமுக பொருளாளர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கே.என். நேரு பேசினார். அந்தத் கூட்டத்தில் கே.என். நேரு பேசுகையில், சுயலாபத்திற்காக நிலம் கையகபடுத்தும் மசோதாவை ஜெயலலிதா ஆதரித்தார். மேலும் அரசு அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட முடியாத சூழ்நிலை உள்ளது என பேசினார். அதனை தொடர்ந்து தலைமை கழக பேச்சாளர் உத்ராபதி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

நாளை இந்திய சர்வதேச குறும்பட விழா

இந்திய சர்வதேச குறும்பட விழா 2015 மார்ச் 25, 26 (புதன், வியாழன்) தேதிகளில் சென்னை அபிராமி மெகா மாலில் உள்ள அன்னை திரையரங்கில் நடைபெறுகிறது. 66 நாடுகளில் இருந்து வந்து சேர்ந்த 1150 குறும்படங்களில் இருந்து 66 குறும்படங்கள் தேர்வு செய்யப்பட்டு, மார்ச் 25, 26 புதன், வியாழன் இரு தினங்களும் காலை 9 மணியில் இருந்து 6 மணி வரை திரையிடப்படுகிறது. இந்த குறும்படங்களை பார்க்க இலவச அனுமதிச் வீட்டு பெற  -95661 02806. எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

இறுதிப் போட்டிக்கு தகுதியான அணி நியூசிலாந்து: டி.வில்லியர்ஸ்

ஆக்லாந்து: உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குச் செல்ல தகுதியான அணி நியூசிலாந்து என்று தென் ஆப்பிரிக்க கேப்டன் டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியது நியூசிலாந்து அணி. விறுவிறுப்பான போட்டியில்,, கடைசி வரை துடிப்புடன் செயல்பட்டு, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இந்தப் போட்டி குறித்து நிறைவு நிகழ்ச்சியில் பேசிய டி வில்லியர்ஸ், “ இது அற்புதமான போட்டியாக அமைந்தது. சிறந்த அணி வெற்றி பெற்றதாக நான் நினைக்கிறேன். எங்கள் வீரர்களிடம் இருந்து இதைவிட சிறப்பான ஆட்டத்தை நான் கோர முடியாது. சிறப்பான ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்தினோம். தோல்வி அடைந்தது காயப்படுத்தியுள்ளது. தென்ஆப்பிரிக்க நாட்டு மக்களுக்காக நாங்கள் விளையாடினோம். எங்களது விளையாட்டால் அவர்கள் பெருமைப் படுவார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

இந்தியா உலகக் கோப்பையை வெல்லுமா?: சச்சின் சொன்ன பதில்!

sachin-tendulkar துபை இந்தியா இந்த உலகக் கோப்பையை வெல்லுமா என்று சச்சினிடம் கேள்வி கேட்கப் பட்டது. ஏற்கெனவே உலகக் கோப்பை குறித்த சச்சினின் வீடியோ ஒன்று இணையத்தில் யுடியூபில் உலா வருகிறது. இந்நிலையில், யுஏஇ.யின் அபு தாபியில் 150வது ஏச்டர் பார்மஸியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, சச்சின் மீது இந்தக் கோப்பையை இந்தியா தக்கவைத்துக் கொள்ளுமா என்ற கேள்வியைக் கேட்டு ஒரு பவுன்சர் வீசப்பட்டது. நான் இந்த உலகக் கோப்பையின் ஐசிசி கிரிக்கெட் தூதுவராக உள்ளேன். அதனால், இந்தக் குறிப்பிட்ட அணிதான் வரும் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ஆனால், நடப்பு சாம்பியன்கள் நடப்பு சாம்பியன்களாகத் தொடரவே உள்ளனர் என்றார்.   https://youtu.be/4NAWQbDohbk https://www.youtube.com/watch?v=bBvrZLD0frA

7 வயது சிறுமி கொலை: பூசாரிக்கு 10 ஆண்டு சிறை

வேலூர்: வேலூரில் 7 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் பூசாரிக்கு 10 ஆண்டு சிறை விதிக்கப்பட்டது. வேலூர், குடியாத்தம் பிச்சனூரைச் சேர்ந்த குமார் (50) என்பவர் அங்குள்ள கோயிலில் பூசாரியாக வேலை செய்து வந்தார். கடந்த 2011ம் ஆண்டு, சாமி கும்பிட வந்த ஏழு வயதுச் சிறுமியை பலாத்காரம் செய்து, கொலை செய்துள்ளார். இதை அடுத்து, குடியாத்தம் போலீசார் குமாரை கைது செய்தனர். அவர் மீதான வழக்கு, வேலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்துது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறிய நீதிபதி நசீர் அகமது, குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும் 5 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

மோடி பொய்யான தகவலைக் கூறுகிறார்: இ.கம்யூ. குற்றச்சாட்டு

புதுச்சேரி: நிலம் கையகப்படுத்தும் சட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பொய்யான தகவல் கூறிவருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 22வது அகில இந்திய மாநாடு நாளை தொடங்குகிறது. இதில் பங்கேற்க வந்துள்ள கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது மக்கள் நலனே முக்கியம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த மோடி அரசு, பெருநிறுவனங்களின் நலனுக்காக செயல்படுகிறது. நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் மூலம் வேளாண் நிலங்களை பறித்து பெருநிறுவனங்களுக்கு அளிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. விவசாயிகள் நலனுக்கு எதிரான சட்டத்தைத் தடுத்து நிறுத்தும் பொறுப்பு இடதுசாரிகளுக்கு உள்ளது என சுதாகர் ரெட்டி தெரிவித்தார்.

வெறுப்பு அடைந்தால் அமைச்சர் வி.கே.சிங் ராஜிநாமா செய்யட்டும்: காங்கிரஸ்

புது தில்லி: தில்லியில் நடைபெற்ற பாகிஸ்தான் தேசிய தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் வி.கே. சிங் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அவர் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் திவாரி, தனது டிவிட்டர் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பாகிஸ்தான் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு முந்தைய மத்திய அமைச்சர்கள் மறுத்து விட்டனர். ஆனால், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் வெறுப்புற்றதாக் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் தொடர்பான அரசின் இரட்டை நிலைப்பாட்டைக் கண்டு வெறுப்பு அடைவீர்கள் என்றால் அவர் பதவி விலகட்டும் என மணீஷ் திவாரி கூறியுள்ளார்.

ஜானகி அம்மா பேத்தி என்று பாராட்டப்பட்ட ஸ்ருதி!

sruthi யூடிபில் மட்டும் 10 இலட்சத்திற்கும் அதிகமானவர்களால் பார்த்து ரசிக்கப்பட்டுள்ள “திக்கித் தெணறுது தேவதை” பாடல் மூலமாக அறிமுகமான ஸ்ருதி, இப்போது ஸ்ரீஹரிணி பிக்சர்ஸ், U.P.மருது இயக்கத்தில் வெளியாகியுள்ள “அகத்திணை” படத்தில் கவிஞர் வைரமுத்து வரிகளில் மரியா மனோகர் இசையில் உருவாகியுள்ள “தந்தையும் நீயே, தாய்மடி நீயே” என்ற பாடலை பாடியுள்ளார். தாய் இல்லாமல் தந்தையால் வளர்க்கப்படும் ஒரு பெண் குழந்தை, தன் தந்தையை பற்றி புகழ்ந்து பாடுவதாக அமைந்துள்ளது இந்த பாடல். மரியா மனோகரின் இசைக்கூடத்திற்கு இந்த பாடலை பாடுவதற்காக சென்ற ஸ்ருதியிடம், இந்தப்பாட்டு ஒரு பத்து வயது குழந்தை பாடுற பாட்டு, நீ பெரிய பொண்ணா இருக்கம்மா, உன்னோட குரல் செட்டாகுது, அடுத்த படத்தில் நீ பாடு என்றாராம், இசையமைப்பாளர் மரியா மனோகர். ஆனால், நான் பாடுறேன் சார் என்று சொன்ன ஸ்ருதி, பத்து வயது குழந்தை குரலில் பாடி அசத்தினாராம். பாடலைக்கேட்டவர்கள் அனைவரும் பாடலைப்பாடிய அந்த சிறுபெண் யாரெனக் கேட்க, தற்போது +2 படித்துக்கொண்டிருக்கும் ஸ்ருதி தான் இந்த பாட்டை பாடினாள் என்று கூறியுள்ளார் இசையமைப்பாளர். பாடலையும் இந்த தகவலையும் கேட்ட அனைவரும் ஆச்சர்யம் அடைந்ததோடு ஸ்ருதியை வெகுவாகப்பாராட்டியுள்ளனர். அதோடு தமிழ் சினிமாவில் குழந்தை குரலில் ஜானகி அம்மா தான் பாடி அசத்துவாங்க. அப்டி பாத்தா உன்னை ஜானகி அம்மா பேத்தின்னு சொன்னாலும் தப்பில்ல என்று சிலர் பாராட்டியதைக் கேட்டு மிகுந்த சந்தோசத்தில் இருக்கிறார் ஸ்ருதி. ஜானகி அம்மா பெரிய லெஜண்ட், அவங்களுக்கு இணை அவங்க மட்டும் தான்… நான் இப்போ தான் சினிமாவுக்கே வந்திருக்கேன். அவங்களோடு சேர்ந்து என் பெயர் சொல்லப்படுவதை என் பாக்கியமாக சிரம் தாழ்ந்து ஏத்துக்கிறேன், என்கிறார் ஸ்ருதி. இந்த வாய்ப்பை எனக்கு தந்த மரியா மனோகர் சாருக்கும் எழுதிய வைரமுத்து சாருக்கும் மற்றும் படக்குழுவினருக்கும் என் நன்றிகள். மதுரை மாவட்டம், தேசிய செய்திகள், பள்ளிசாலை, சயனம், சாந்தம், ரணம் உள்பட பல படங்களில் ஸ்ருதி குரலில் பாடல்கள் பதிவாகி உள்ளன. [su_youtube url=”https://www.youtube.com/watch?v=TryKxMghwSI&feature=share”]

மீண்டும் தேசிய விருது: நா.முத்துக்குமார் மகிழ்ச்சி

na-muthukumarசென்னை: தனக்கு மீண்டும் தேசிய விருது கிடைத்துள்ளது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக பாடலாசிரியர் நா.முத்துக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியபோது, ‘சைவம்’ திரைப்படத்தில் நான் எழுதிய ‘அழகே அழகு’ பாடலுக்காக 2014ஆம் ஆண்டின் தேசிய விருது எனக்குக் கிடைத்துள்ளது. அன்பையும், மனிதநேயத்தையும் குழைத்து எழுதிய இந்தப் பாடலுக்கு தேசிய விருது பெறுவது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இரண்டாவது முறையாக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது எனக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சி. இந்நேரத்தில் சைவம் படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் விஜய், இசையமைப்பாளர் தம்பி ஜி.வி.பிரகாஷ் குமார் பாடலைப் பாடிய உத்ரா உன்னிகிருஷ்ணன், தேர்வுக்குழுத் தலைவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய விருது பெற்ற சக கலைஞர்களுக்கும் வாழ்த்துகள்… என்றார்.

ஆப்கானிஸ்தானில் அப்பாவி பஸ் பயணிகள் 13 பேர் சுட்டுக் கொலை

காபுல்: தெற்கு ஆப்கானிஸ்தானில் பஸ் பயணிகள் 13 பேரை பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை இன்று காலை சுட்டுக் கொன்றனர். நாட்டின் அப்பாவி மக்களைக் குறிபார்த்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். தலைநகர் காபூலுக்கு அருகே வார்தாக் மாகாணத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி, வாஷிங்டனுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நிலையில் இந்தத் தாக்குதல் காபூலுக்கு அருகிலேயே நடந்துள்ளது, அதன் பாதுகாப்பு குறித்த கவலையினை ஏற்படுத்தியுள்ளது. வரும் 2016க்குள் ஆப்கனில் உள்ள 10 ஆயிரம் அமெரிக்க ராணுவத் துருப்புகளை திருப்பி அனுப்பும் முயற்சியில் முட்டுக்கட்டை போடுவதாக இது அமையக்கூடும் என்று கருதப் படுகிறது. இருப்பினும் இந்த வருட டிசம்பருக்குள் 10 ஆயிரம் துருப்புகளை 5,500ஆகக் குறைக்க அமெரிக்கா முயற்சி எடுத்துள்ளது. இதுகுறித்து வார்தாக் மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் அடாவுல்லா கோக்யானி கூறியபோது, காந்தஹார் நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ் மீது அதிகாலை 1 மணியளவில் பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அதில் ஒரு பெண் உள்பட 13 பேர் உயிரிழந்தனர் என்றார். கஜினி மாகாண துணை ஆளுநரோ, பஸ்ஸில் இருந்து பயணிகளை கீழே இறக்கிவிட்டு, அவர்களை ஒவ்வொருவராக பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர் என்று கூறியுள்ளார்.