Home Blog Page 6317

ஆஸ்திரேலிய ஓபன்: ஜொகோவிச் வெற்றி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டியில், நோவோக் ஜொகோவிச், ஆண்டி முரேயை வீழ்த்தினார். இதன் மூலம் அவர் தனது ஐந்தாவது பட்டத்தைப் பெற்றார்.  

ரயில்வேயில் முதலீடு செய்ய அமைச்சர் அழைப்பு

ரயில்வே துறையில் மிகப் பெரும் அளவில் முதலீடு செய்யவும், ரயில்வே திட்டங்கள் விரிவாக்கம் செய்யப் படவும் ரயில்வே அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.  

ஏமாற்றுதலுக்கு பேர் தொப்பி!: ‘தொப்பிக்கே தொப்பியா…? என ’ பவர்ஸ்டார் குமுறல்!

thoppi-audio-launch சென்னை : தொப்பிக்கே தொப்பியா என தொப்பி பட விழாவில் தயாரிப்பாளர்கள் குறித்து பவர்ஸ்டார் பேசிய கருத்துக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொப்பி பட ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்த சிவா, தேனப்பன், இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், சீனு ராமசாமி, நடிகர்கள் விஜய் சேதுபதி, விமல், பவர் ஸ்டார் சீனிவாசன், சிங்கம் புலி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பவர்ஸ்டார் சீனிவாசன் பேசியபோது… தொப்பி என இந்த படத்திற்கு பெயர் வைத்துள்ளனர். எல்லோரும் தொப்பி போடுகிறார்கள். ஒரு காலத்தில் நான் எல்லோருக்கும் தொப்பி போட்டேன் (காசோலை மோசடி). எனக்கே இப்போது எல்லோரும் தொப்பி போடுகிறார்கள். எனக்கே செக்கா… ஒரு படத்தில் நடிப்பதற்காக முதலில் செக் கொடுக்கிறார்கள். நானே செக் கொடுத்தவன். எனக்கே செக்கா என்று கேட்டால் செக் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள். கொடைக்கானல் போன்ற உயரமான மலையில் பலமுறை நடந்து கஷ்டப்பட்டு நடித்த பின் சம்பளம் கேட்டால் எனக்கு தொப்பி போடுகிறார்கள். என்னை திருந்தி வாழ விடமாட்டார்கள் போல் தெரிகிறது. நல்லதற்கு காலம் இல்லை. எனவே இந்த படத்திற்கு தொப்பி என்பது நல்ல தலைப்பு. இந்த விழாவில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். ஏராளமான தயாரிப்பாளர்கள் தற்போது படம் எடுக்கிறார்கள். அவர்கள் படம் எடுக்க வரும்போது சுமார் 5 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய சொல்ல வேண்டும். அப்பொழுதுதான் படத்தில் நடித்தவர்களுக்கு பின்னர் சம்பளம் கொடுக்க முடியும்’ என்றார்.

  • ஏமாற்றுதலுக்கு தொப்பி என்ற பொருள் பட பவர்ஸ்டார் பேசிய இந்தப் பேச்சால் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.

பேஸ்புக்கில் ’போர்ன்’ தூண்டில்: சிக்கிய 1,10,000 கணக்குகளில் ’மால்வேர்’ மூலம் தகவல் திருட்டு

facebook_2 இணையத்தில் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில், போர்னோக்ராபி எனப்படும் செக்ஸ் தொடர்பான தகவல் அளித்து அதன் மூலம் மால்வேர் பரப்பியதில், 1,10,000 பேஸ்புக் அக்கவுண்ட்கள் மூலம் கடந்த இரு நாட்களில் பலரின் முக்கியமாக தகவல்கள் திருடப் பட்டுள்ளதாம். டெய்லி ஸ்டார் பத்திரிகை மூலம் வெளியான தகவலின்படி… பேஸ்புக் பயனாளிகளின் தனிப்பட்ட பெட்டியில் சேரும் ஒரு செய்தியை வெறுமனே க்ளிக் செய்தால், அது, ப்ளாஷ் ப்ளேயர் அப்டேட்டை டவுன்லோட் செய்தால் இதனைப் பார்க்க முடியும், அதனை அப்டேட் செய்து பார்க்க என்று செய்தி வந்ததாம். அதனை க்ளிக்கிய பயனாளிகளின் கணினியில் இந்த மால்வேர் புகுந்து கொண்டு, முக்கியமான தகவல்களை திருடியதாம். மேலும், அது, அந்தப் பயனாளியின் 20 நட்பு கணக்குகளுக்கு தாமாகவே பார்வர்ட் ஆகி, அவர்களுக்கும் அதே மெசேஜை அளித்ததாம். இது, இதுவரை வந்த மால்வேர்களை விட மிகவும் அபாயகரமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தத் தகவல் தெரிந்தவுடன், பேஸ்புக் நிறுவனமே இந்த மால்வேர் பரவவிடாமல் தடுத்துநிற்க வழி செய்கிறோம் என்று தெரிவித்துள்ளது.

சீக்கியருக்கு எதிரான கலவரம் குறித்து எஸ்.ஐ.டி விசாரணை: பாதல்

1984ம் வருடம் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து ஏற்பட்ட சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை அமைக்கப்பட வேண்டும் என்று பிரகாஷ் சிங் பாதல் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு குழு அமைப்பார் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் பாதல் கூறியுள்ளார்.

விமான எரிபொருள் விலை குறைப்பு

புது தில்லி: விமான எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது. விமான எரிபொருள் விலையில் 11.3% குறைக்கப்பட்டுள்ளது. இது, டீசல் விலையை விடக் குறைவு என்பது குறிப்பிடத்  தக்கது .

C2H குறித்து இயக்குனர் சேரன் விளக்கம்

c2h வணக்கம்… எல்லோரின் நலன் கருதி ஆரம்பிக்கப்பட்டதே இந்த C2H நிறுவனம். எந்த காரணம் கொண்டும் இது திரையரங்கிற்கும், விநியோகஸ்தர்களுக்கும் எதிரானது என கருத வேண்டாம். கடந்த 10 வருடங்களாக திரைத்துறையின் வீழ்ச்சிகளும், நஷ்டங்களும் எத்தனை கோடிகள் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். அதேபோல் திரைத்துறையை சார்ந்து இயங்கும் திரையரங்கங்களும் எத்தனையோ சதவிகிதம் குறைந்து ஆயிரக்கணக்கில் இருந்து நூற்றுக்கணக்கில் மாறியுள்ளது. இது கடந்த பத்து வருடங்களில் காலம் நமக்கு தந்த தண்டனை… இந்த சூழலில்… வருடாவருடம் திரைப்படங்களின் தயாரிப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு சாதாரண மனிதனுக்குள்ளும் இயக்குநர் கனவும், ஒவ்வொரு வசதி படைத்தவருக்குள்ளும் தயாரிப்பாளர் கனவும் நம்முடைய திரையுலகை நோக்கி படையெடுக்க சொல்கிறது. வரும் அனைவரும் சரியான திட்டமிடல், சினிமாவை பற்றிய போதிய பார்வை இல்லாமல், முதலீடு செய்யும் பணத்தை இழந்து திரையுலகே வேண்டாம் என்ற நிலைக்கு தள்ளப்படுவது போல தான் நமது கட்டமைப்புகள் இயங்கி கொண்டிருக்கிறது. இவற்றை எல்லாம் ஆராய்ந்து பார்த்ததில் வருடாவருடம் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை வெற்றி பெற்ற படங்களின் எண்ணிக்கை, தோல்வியடைந்த முதலீடு கூட திரும்ப வராத படங்களின் எண்ணிக்கை, வாராவாரம் 4 படங்கள் என்ற நெருக்கடியில் நல்ல திரைப்படங்களுக்கு கூட கூட்டம் வராமல் யாராலும் கண்டுகொள்ளப்படாமல் போகும் நிலை, இவை எல்லாவற்றையும் பயன்படுத்தி திருட்டு DVDகாரர்களான, தயாரிப்பாளர்களின் முதலீட்டை, விநியோகஸ்தர்களின் பங்குத் தொகையை, திரையரங்கின் வருவாயை மொத்தமாக சூரையிடும் ஒரு கும்பலாக (திருட்டு DVD விற்பனை) நாம் நம்மையறியாமலேயே, நம் ஒற்றுமையின்மை காரணமாக வளர்த்து விட்டோம். இன்று இந்த கும்பல் திரைப்படம் வெளியான முதல் நாளே நமது திரையரங்கம் முன்பே வைத்து அப்படத்தின் திருட்டு DVDயை விற்கும் அளவுக்கு பிசாசு போல வாழ்ந்து தயாரிப்பாளர்களையும், விநியோகஸ்தர்களையும், திரையரங்க உரிமையாளர்களையும் சாகடிக்கிறது. பல கனவுகளோடு முதல் படம் இயக்கும் இயக்குநர்களின் வாழ்க்கை அதோடு நாசமாகி போகிறது. இப்படியே பொறுத்துக் கொண்டு எத்தனை நாள் தான் வாழ்வது. மாற்று வழி என்ற ஒன்றை நம் முன்னோர்கள் உருவாக்காமல் போனதின் விளைவு தான் இது. எல்லா இடங்களிலும் ஒவ்வொரு மாற்றமும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. நம் திரைத்துறையில்… பிலிம் – டிஜிட்டல் ஆனது. புரொஜெக்டர் – QUBE ஆனது பெரிய திரையரங்கம் – MALL ஆனது இவைகள் வியாபாரத்தை பொருத்து, வருவாயை பொருத்து, பிரச்சனைகளை பொருத்து மாற்றியமைக்கப்பட்டது. அது போலவே இப்போது நாம் இந்த மாற்றத்திற்கும் தயார் ஆக நினைக்கிறோம். இதை எல்லாம் நம் அனைவருக்கும் சாதகமாக மாற்றிக்கொள்வது என்ற பொது நோக்கில் யோசித்தால் மட்டுமே தீர்வு காண முடியும். தயாரிப்பாளர்களுக்கு உள்ள பிரச்சனைகள்

  1. படங்களின் உற்பத்தி அதிகம் என்பதால் வியாபாரம் செய்யும்

முறையில் உள்ள தடுமாற்றம். முன்பு போல எடுக்கும் திரைப்படங்களை சரியான விலைக்கு வாங்கவோ, MG, டெபாசிட் முறையில் வாங்கவோ போதிய டிஸ்ட்ரிபியூட்டர்கள் இல்லை.

  1. பெரிய பட்ஜெட் படங்கள் தவிர சமீப காலமாக எந்த விநியோகஸ்தரும்

சிறிய படங்களை அல்லது MEDIUM BUDGET படங்களை அவர்களின் பிரச்சனை கருதி வாங்க முன்வரவில்லை. எந்த முன்பணம் கொடுக்கவும் தயாராக இல்லை.

  1. முன்புபோல திரையரங்கங்கள் கூட எந்த படங்களுக்கும் டெபாசிட்

தொகையோ, MG தொகையோ கொடுக்க முடியாத நிலை.. அதற்கு முன்வரவும் இல்லை… மாறாக சில பெரிய படங்களுக்கு கொடுத்து நஷ்டமடைந்திருக்கிறார்கள்.

  1. முதலீடு செய்த படங்களை 2 கோடி, 3 கோடி என சிறிய படங்களும்,

4 கோடி, 8 கோடி என MEDIUM BUDGET படங்களும் எடுத்து அதை எந்த வியாபாரமும் செய்யாத நிலையில் எப்படி ஒரு திரைப்படத்தை வெளியிட முடியும் என்ற அபாயம்.. அதனால் 300க்கும் மேற்பட்ட படங்களின் தேக்கம்.

  1. இதிலும் சில தயாரிப்பாளர்கள் திரைப்படம் எடுத்து விட்டோமே என்ன

செய்யப் போகிறோம் என தெரியாத நிலையில் மீண்டும் விளம்பரங்கள், திரையரங்கங்கள் என எல்லாவற்றிற்கும் முதலீடு செய்து திரைப்படத்தை வெளியிட்டு கையை கடித்துக் கொண்டு நிற்கிறார்கள். இவர்களின் அறியாமையால் அவர்களின் குடும்பமும் கூட நடுத்தெருவில் நிற்கிறது.

  1. ஒரு திரைப்படத்தினை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு படம்

மிகப்பெரிய தோல்வி அடைந்ததும் பணத்தை திரும்பக் கேட்டு போராட வழி இருக்கிறது. அதைப் போல தயாரிப்பாளர்களுக்கு கதாநாயகர்களிடமோ, இயக்குநரிடமோ, தொழில்நுட்பக் கலைஞர்களிடமோ தான் முதலீடு செய்த பணத்தை திரும்ப கேட்கும் நிலை இல்லாததால் நஷ்டம் நஷ்டமே…

  1. அதையும் தாண்டி இவ்வாறான சிக்கல்களுக்கு இடையில் ஒரு

திரைப்படத்தை வெளியிடும் போது பாதுகாப்பற்ற நிலை…

  1. உடனடியாக திரையிட்ட முதல் நாளே திருட்டு DVD

வெளிவருகிறது.

  1. முதல் நாள் முதல் காட்சியே கூட்டம் வராமல் படம்

தூக்கப்படுகிறது.

  1. சில நல்ல படங்கள் ஒடுவதற்கான வாய்ப்பு இருந்தும், WORD OF

MOUTH பரவும் முன்பே திரையரங்கின் வாடகை, வசூல் கட்டுபடியாகாமல் அந்த திரைப்படம் திரையரங்கை விட்டு தூக்கப்படுகிறது.

  1. திரைப்படங்களின் உற்பத்தி அதிகம் என்பதால் திரையரங்கம் எல்லா

திரைப்படங்களுக்கும் வேண்டிய காட்சிகளை பிரித்து கொடுக்கும் போது, முக்கிய நகரங்களில் கூட மக்களுக்கு எந்த அரங்கில் என்ன படம் எந்த காட்சி ஓடுகிறது என்பது திட்டவட்டமாக தெரிய வாய்ப்பில்லாமல் போகிறது. அதனால் மக்கள் திரையரங்கம் வரும் போது எந்தபடம் ஓடுகிறதோ அதை பார்க்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்பதால் மக்கள் திரையரங்கம் வரும் வாய்ப்பு குறைகிறது.

  1. டிக்கெட் விலை அதிகம் என்பதை விட எந்த படத்திற்கு எவ்வளவு

விற்பார்கள் என்ற தெளிவான நிலை இல்லாததால் மக்கள் டிக்கெட் விலையையும், நேரத்தையும் கருத்தில் கொண்டு திரையரங்கம் வர யோசிக்கிறார்கள்.

  1. திரைப்படங்களுக்கு முன்பெல்லாம் SATELLITE RIGHTS என்று ஏதோ

ஒரு வகையில் வருமானம் இருந்தது. இப்போது அவர்களும் பெரிய அளவில் திரைப்படங்களை வாங்குவதில்லை, பெரிய படங்கள் தவிர… சரி… திரையரங்கில் ஓடினால் வாங்குவார்கள் என்ற நம்பிக்கையில் தயாரிப்பாளர்கள் மீண்டும் முதலீடு செய்து, மேலே சொன்ன பிரச்சனைகள் இருந்தபோதும் கஷ்டப்பட்டு ரிலீஸ் செய்து அங்கேயும் நஷ்டப்படும் போதும் மொத்தமும் இழப்பாகிறது. SATELLITE உரிமைகளையும் யாரும் வாங்க முன்வருவதில்லை.

  1. நல்ல படங்கள், தரமான படங்களை எல்லாம் ஒரு கட்டுக்குள்

கொண்டுவர முடியாத மேற்சொன்ன சூழல்கள் உள்ளபோது தயாரிப்பாளர்கள் வேறு வழியை நாடுவதை யாரும் தடுக்க முடியாது. அந்த இடத்துக்கு தள்ளப்படும்போதே அதற்கான மாற்று வழியும் உண்டாகிறது.

  1. அந்த மாற்று வழிகளை எப்படி எல்லாரும் தங்களுக்கு சாதகமாக

பயன்படுத்தி தயாரிப்பாளர்களை பயனடைய செய்யலாம் என தீர்மானித்ததே C2H உருவானதன் காரணம்.

  1. திரையரங்கங்களில் படம் பார்ப்பவர்கள் திரையரங்கில் பார்க்கத்தான்

செய்வார்கள். அதே நேரம் பெரிய திரைப்படமாக இருந்தாலும் படம் சரியில்லை என்றால் திரையரங்கிற்கு வரும் கூட்டம் நின்றுவிடுகிறது. ஆகவே பெரிய நடிகர், சிறிய நடிகர் என்றாலும், திருட்டு DVD வந்தாலும் திரையரங்க வசூலை யாரும் தடுத்து விடவோ, குறைத்து விடவோ முடியாது என்பதே சரியானது.

  1. PK என்ற இந்திப்படம் சென்னையில் திரையிட்ட MALLகளில் நிறைய

வசூல் செய்திருக்கிறது. திருட்டு DVD இருக்கும் போது இது எப்படி சாத்தியம் என யோசித்தால், நகரங்களில் மட்டுமே இது சாத்தியமாகிறது. எனவே திருட்டு DVDயால் திரையரங்கங்களின் வசூல் குறையும் என்ற காரணம் முற்றிலும் தவறானது.

  1. திருட்டு DVD மூலம் வரும் வருவாயை முறைப்படுத்தி C2H

வருமானம் மூலம் கிடைக்க வழி செய்யலாம் என்ற நல்ல சிந்தனையை DVDகளால் திரையரங்கம் அழிந்துவிடும் என்ற தவறான எண்ணங்களால் தயாரிப்பாளர்களை மேலும் நஷ்டப்படுத்த வேண்டாம்.

  1. வருத்தப்படாத வாலிபர் சங்கம், கத்தி, கும்கி, பிசாசு, PK (HINDI),

அரண்மனை, வெள்ளக்காரதுரை போன்ற பெரிய, சிறிய படங்கள் கூட திருட்டு DVD வந்தும் மிகப் பிரமாதமாக வசூலில் சாதனை செய்தது. அப்படியிருப்பின் DVDகளால் திரையரங்கங்களுக்கு வருமானம் வராது என்று கூறுவது பொய் தானே. திரைப்படங்கள் நன்றாக இருந்தால் திரையரங்கிற்கு மக்கள் வருவதை யாராலும் தடுக்க முடியாது என்பதே உண்மை.

  1. சமீபத்தில் வெளியான மிகப்பெரிய திரைப்படங்கள் அதிக

விலையாலும், படம் சரியில்லாமல் தோல்வியை தழுவியதும் எல்லோருக்கும் தெரியும். அதற்கு திருட்டு DVDயை மட்டுமே காரணம் காட்டிவிட முடியாது என்பதையும் நாம் அறிவோம்.

  1. எனவே விநியோகஸ்தர்களின் நிலைமையும் சரியாக இல்லாமல்,

வாங்குவதற்கு யோசிக்கும் நிலையில், திரையரங்கங்களும் டெபாசிட்டோ அல்லது MGயோ தர முடியாத சூழலில் திரைப்படங்களை எல்லா நிலையிலும் வெளியிட முன் வருவதும், தயாரிப்பாளர்கள் தங்கள் முதலீட்டை திரும்ப பெற நினைப்பதும் நியாயம் தானே. ஆகையால் தான், இந்த திரைத்துறை வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கும் திருட்டு DVD ஆதிக்கத்தின் ஒழிப்புக்காக கடந்த 10 வருடங்களில் எத்தனையோ முறை பேரணிகள், உண்ணா விரதங்கள் இருந்து அரசாங்கத்திடமும், காவல் துறையிடமும் மனுக்கள் பல கொடுத்து வருகிறோம். எந்தவித மாற்றங்களும், எந்தவித முன்னேற்றங்களும் ஏற்படாத நிலையில் நானும் ஒரு இயக்குநராக, என்னை திரைத்துறையில் தக்க வைத்துக்கொள்ளும் முயற்சிக்காக சினிமா எனக்கு கொடுத்த அடையாளத்தை (FACE VALUE) பயன்படுத்தி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் அலைந்து முறையான DVDகளை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதற்காக 156 விநியோகஸ்தர்களையும், 5000 டீலர்களையும் ஒருங்கிணைத்து CINEMA TO HOME என்ற நிறுவனத்தை துவங்கியுள்ளேன். அது இன்று எல்லோருக்கும் பரிட்சையப்பட்ட எல்லோருமே புதிய திரைப்படங்களை எதிர்பார்த்து காத்திருக்கும், மக்களுக்கு தெரிந்த ஒரு நல்ல நிறுவனமாக உருவாகியிருக்கிறது. இந்த C2H NETWORKஐ என்னை வளர்த்து உருவாக்கிய இந்த திரைத்துறைக்காக பயன்படுத்த நான் தயாராக இருக்கிறேன். இன்றைய முடிவுகளே நாளைய திரைத்துறையின் மறுமலர்ச்சிக்கான துவக்கம் என்பதை மனதில் கொண்டு முடிவு செய்யவும். நன்றியுடன் சேரன்.. [su_youtube url=”https://youtu.be/tIu2Cf_FWfg”]

தாய் மதம் திரும்புதலுக்கு ஏன் இந்த பதட்டம்?!: ராம.கோபாலன் கேள்வி

rama-gopalan சென்னை: தாய் மதம் திரும்புதலுக்கு ஏன் இந்த பதட்டம்? என்று இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் இந்துக்களை மதமாற்றம் செய்கிறார்கள். அப்போதெல்லாம் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை, வலியுறுத்தி கேட்டால், அவர்கள் விருப்பப்படி மதமாறுகிறார்கள் என்பதை உறுதி செய்து அனுப்பிவிடுகிறார்கள். அப்படி இருக்கும்போது முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் தாய் மதமான இந்து மதத்திற்கு திரும்புதல் என்பதிலும் சட்டம் அதே கண்ணோட்டம்தானே இருக்க முடியும்? அதனை தடுக்க காவல்துறைக்கு எந்த அதிகாரமோ, முகாந்திரமோ இல்லை. காவல்துறை தை வெள்ளிக்கிழமையான நேற்று சென்னை மேற்கு மாம்பலம் காமாட்சி அம்மன் கோயிலில் வழிபட பக்தர்களை அனுமதிக்கவில்லை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மசூதியிலோ, சர்ச்சிலோ இதுபோல காவல்துறை தன் இஷ்டத்திற்கு சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளுமா?! இந்துக்கள் என்றால் அலட்சியம், தான் வைத்தே சட்டம் என அரசு செயல்படுகிறது என்பதை இந்துக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மதமாற்றத் தடைச் சட்டத்தை கொண்டு வராதவரை மதமாற்றம் என்பதைத் தடுக்க முடியாது. இதற்கு அரசியல் கட்சிகள் தயாரில்லை எனில் தாய் மதம் திரும்புவதைக் கண்டு பதட்டம் அடைவது சந்தர்ப்பவாதம் மட்டுமல்ல, ஜனநாயக விரோதமானதும், சட்டவிரோதமானதும் கூட. கிறிஸ்தவர்களோ, முஸ்லீம்களோ இந்துக்களாகி தாய்மதம் திரும்புவதற்குக் காரணம் தன்மானமும், மற்றும் பாரம்பரிய எனும் வேர்களை நோக்கிய பயணம். இதனைத் தடுக்க முனைவதை இந்து முன்னணி கடுமையாக கண்டிக்கிறது. என்று கூறியுள்ளார்.

“அட அசடுகளா?! நாங்க ரெண்டு பேரும் பேசிண்டாச்சு; இப்பவும் பேசிண்டிருக்கோமேடா;!”

1969132_763012707087106_4352134091554339462_n “அட அசடுகளா?! நாங்க ரெண்டு பேரும் பேசிண்டாச்சு; இப்பவும் பேசிண்டிருக்கோமேடா;!”

(காஞ்சி மகானும் ஸ்ரீரமண பகவானும்)

காஞ்சி சங்கரமடத்துடனும் மகா பெரியவருடனும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த பட்டாபி சார், பெரியவர் பற்றிய மெய்சிலிர்க்கும் விஷயங்களைத் பகிர்ந்துகொள்கிறார். ஒருமுறை, பெரியவா திருவண்ணாமலை போயிருந்தப்போ, கிரிப் பிரதட்சிணம் பண்ணினார். அவரோடு இன்னும் நாலஞ்சு பேர் போனா. கொஞ்ச நேரத்துல, பகவான் ரமணரோட சீடர்கள் சில பேர், கையில் பிட்சைப் பாத்திரத்தோடு எதிரே வந்துண்டிருந்தா. பெரியவாளைப் பார்த்ததும் நமஸ்காரம் பண்ணிட்டு, ‘நாங்க பகவான் ரமணரோட சீடர்கள். பகவான் அங்கே ஆஸ்ரமத்துல இருக்கார்’னு சொன்னா. உடனே பெரியவா, ‘அப்படியா’ங்கிறாப்பல தலை அசைச்சுக் கேட்டுண்டுட்டு, புன்னகையோடு அவங்களை ஆசீர்வாதம் பண்ணிட்டு, மேலே நடக்க ஆரம்பிச்சார். ரமண பக்தர்கள் கொஞ்சம் தயங்கி நின்னுட்டுக் கிளம்பிப் போனாங்க. அவாளுக்கு வருத்தம்… ரமணரைப் பத்தி, அவரோட சௌக்கியம் பத்தி, பெரியவா ஒண்ணுமே விசாரிக்கலையே; தெரிஞ்ச மாதிரியே காட்டிக்கலையேன்னு! அந்த பக்தர்கள் மலையேறிப் போய், ஸ்ரீரமண பகவான்கிட்ட பிட்சையைக் கொடுத்துட்டு, வழியில காஞ்சிப் பெரியவாளைத் தரிசித்ததைச் சொல்லி, தங்களது வருத்தத்தையும் தெரிவிச்சாங்க. அதைக் கேட்டதும் வாய் விட்டுச் சிரிச்சாராம், ரமண பகவான்! ‘அட அசடுகளா?! நாங்க ரெண்டு பேரும் பேசிண்டாச்சு; இப்பவும் பேசிண்டிருக்கோமேடா; இதுக்கா வருத்தமா இருக்கேள்?!’ன்னாராம். திகைச்சுப் போய் நின்னாளாம், பக்தர்கள்! இதையெல்லாம் அப்போ நேர்ல இருந்து பார்த்த 87, 88 வயசு தாண்டின சுமங்கலி மாமி, எங்கிட்ட இதைச் சொன்னப்போ, அப்படியே நெகிழ்ந்துபோயிட்டேன். காஞ்சிப் பெரியவரும்,ஸ்ரீரமணரும் மகா ஞானிகள்; தபஸ்விகள். அவங்களுக்குள்ளே எப்பவும் சம்பாஷணைநடந்துண்டிருக்குன்னு தெரிஞ்சபோது ஏற்பட்ட நெகிழ்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை! பால் பிரன்ட்டன் என்பவர் ஆன்மிக விஷயமா பேசறதுக்கு மகா பெரியவாகிட்ட வந்தார். அப்ப பெரியவா, ‘அவர் ஞான மார்க்கத்துல போயிண்டிருக்கார். நான் கர்ம மார்க்கத்துலே போயிண்டிருக்கேன். உன்னோட கேள்விகளுக்கெல்லாம் பதில் தரக்கூடியவர், திருவண்ணாமலையில இருக்கார். உன் சந்தேகங்களையெல்லாம் அவராலதான் தீர்த்துவைக்க முடியும்’னு சொல்லி, பால் பிரன்ட்டனை ரமணர்கிட்டே அனுப்பி வைச்சார். பால் பிரன்ட்டனும் அதன்படியே ரமணரை வந்து சந்திச்சு, தன்னோட சந்தேகங்கள் எல்லாம் விலகி, அவரோட பக்தர் ஆகி, புஸ்தகமே எழுதினாரே! பெரியவாளுக்கும் பகவான் ரமணருக்கும் பரஸ்பரம் அன்பு இல்லேன்னா இது நடந்திருக்குமா? மொத்தத்துல, காஞ்சி மகானும் ஸ்ரீரமண பகவானும் நம் தேசத்துக்குக் கிடைச்சது மாபெரும் பாக்கியம்

அரசு ஊழியர்கள் மதப் பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது: தா.பாண்டியன்

கோவை: கோவையில் நடக்கவுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு தொடர்பாக ஆலோசனை நடத்த அக் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் கோவைக்கு வந்திருந்தார். அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, தமிழகத்தில் இலவச வேஷ்டி- சேலை மற்றும் பொங்கல் பரிசுகள் நிறுத்தப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு நிறுத்தப்பட்டிருப்பதற்கு காரணம் என்ன ? மானியத்தை நிறுத்துவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது, இதனைக் கருத்தில் கொண்டு முன்கூட்டியே செயல்படுத்த, தமிழக அரசு நடக்கிறதோ என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அண்மையில் அரசு ஊழியர்கள் சிலர் மத பிரசாரத்தில் ஈடுபடுவதாக கேள்விப்பட்டேன். இது தவறானது. அரசு ஊழியர்கள் யாரும் மத பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது என்று கூறினார்.