புது தில்லி தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் பயன்படுத்தவுள்ள வாக்கு பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதாக அரவிந்த் கேஜ்ரிவால் புகார் தெரிவித்தார். தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேறு கட்சிகளுக்கு அளிக்கும் வாக்குகள், பாஜகவுக்கு சாதகமாக மாறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்த புகாரை தலைமைத் தேர்தல் ஆணையம் நிராகரித்தது. தில்லி கண்டோன்மண்ட் பகுதியில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஆம் ஆத்மி கட்சியினர் திங்கள்கிழமை சோதனை நடத்தியபோது, நான்கு இயந்திரங்களில் வேறு கட்சிக்கான பட்டனை அழுத்தினால், பாஜகவின் தாமரை சின்னத்துக்கு எதிரே உள்ள விளக்கு எரிவதாக கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் தலைமை தேர்தல் ஆணையர் எச்.எஸ்.பிரம்மாவிடம் புதன்கிழமை புகார் அளித்தனர். அப்புகாரைப் பரிசீலித்த தேர்தல் ஆணைய அதிகாரிகள், எவ்வித கோளாறுகளுக்கும் இடம் கொடுக்காத வகையில்தான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்றும் பல கட்ட சோதனைகள் நடத்திய பிறகே அவர் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்தனர். மேலும், வேறு கட்சிக்கு அளிக்கும் வாக்கு கூட பாஜகவுக்கு சாதகமாக விழுவதாக சுமத்திய புகாரை நேருக்கு நேராக நிரூபிக்கத் தயாரா? என்று அதிகாரிகள் கேட்டபோது, கேஜரிவால் குழுவினர் சரிவர பதில் அளிக்க வில்லை. இதையடுத்து, அவரது புகாரை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.
தில்லி தேர்தல்- மோடி அரசு மீதான வாக்கெடுப்பு அல்ல: வெங்கய்ய நாயுடு
புதுதில்லி: தில்லி சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள், நரேந்திர மோடி அரசின் செயல்பாடு மீதான வாக்கெடுப்பு என்று யாரும் கருதக் கூடாது என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார். தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தில்லியில் நடைபெறுவது மாநிலத் தேர்தல். அங்கு பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடவில்லை. தில்லி தேர்தலில் முதல்வர் யார் என்பதையே தில்லி மக்கள் முடிவு செய்யப் போகிறார்கள், அவர்கள் தேர்ந்தெடுக்கப் போவது பிரதமரை அல்ல. தில்லியில் பாஜகவுக்கும் மற்ற கட்சிகளுக்கும் இடையேயான போட்டிதான் நிலவுகிறது. பிரதமர் நரேந்திர மோடி அரசின் செயல்பாடுகள் குறித்து மக்கள் அளிக்கும் கருத்துகளின் வெளிப்பாடாக தில்லி பேரவைத் தேர்தல் முடிவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது. மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட், ஹரியாணா, ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற பேரவைத் தேர்தல்களில், மோடி அரசின் செயல்பாட்டை வைத்துதான் மக்கள் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பை அளித்தார்களா? அதுபோல், மத்திய அரசின் செயல்பாடு மீதான வாக்கெடுப்பாக தில்லி தேர்தல் முடிவுகளைக் கருத முடியாது… என்று கூறினார்,
“மேக் இன் இந்தியா” திட்டத்துக்காக இரு குழுக்களை அமைத்தது ஜம்மு-காஷ்மீர்
” மேக் இன் இந்தியா – இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தினை ஜம்மு-காஷமீர் மாநிலத்தில் நடைமுறைப்படுத்த வசதியாக, அந்த மாநிலத்தில் இரண்டு குழுக்களை அமைத்து அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி, மாநிலத் தலைமைச் செயலர் தலைமையில் உயர்நிலைக் குழுவும், நிதித் துறை ஆணையர் தலைமையிலான கண்காணிப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளன. தொழில் துறையில் உள்ள சிக்கல்களைக் களைவது, இந்த திட்டத்துக்காக, மாநிலத்தின் தொழில் முதலீடுகளை பெருக்குவது, திட்டம் தொடர்பாக கண்காணிப்புக் குழு தமது கவனத்துக்கு கொண்டு வரும் விவரங்கள் தொடர்பான நடவடிக்கை உள்ளிட்டவற்றை இந்த உயர்நிலைக் குழு மேற்கொள்ளும்.
எனக்கு எதிராக ஜெயந்தி நடராஜனைத் தூண்டிவிட்டவர் மோடி: ராகுல் குற்றச்சாட்டு
புதுதில்லி எனக்கு எதிராக மத்திய சுற்றுச்சூழல் துறை முன்னாள் அமைச்சர் ஜெயந்தி நடராஜனை பிரதமர் நரேந்திர மோடி தூண்டிவிட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் முடிவுகளில் ராகுல் காந்தி தலையிட்டதாக ஜெயந்தி நடராஜன் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு, பதிலளிக்கும் விதமாக அவர் இவ்வாறு கூறினா. தில்லி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து புதன்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியபோது…. ஒரு நாள், அவருக்கு (மோடி) எதிராக நான் ஏதோ கருத்து தெரிவித்தேன். அதற்கு அடுத்த நாளே, எனக்கு எதிராக ஜெயந்தி நடராஜனை அவர் தூண்டிவிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் தூண்டுதலாலேயே, காங்கிரஸில் இருந்து ஜெயந்தி நடராஜன் விலகியுள்ளார். காங்கிரஸ் கட்சியை குறிவைத்து, மோடியின் அரசு செயல்பட்டு வருகிறது. ஏழைகள், ஆதிவாசிகளின் நலன்களுக்காக நான் போராடி வருகிறேன். மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக ஜெயந்தி நடராஜன் இருந்தபோது, சுற்றுச்சூழல், ஏழைகள், ஆதிவாசிகளின் நலன்களை பாதுகாக்க வேண்டும் என்று அவரிடம் கேட்டுக் கொண்டேன். பிரதமர் நரேந்திர மோடி, தனது வர்த்தக நண்பர்களின் நலன்களுக்காக மட்டுமே பணியாற்றி வருகிறார். ஆனால் நானோ, ஏழைகள், சமூகத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு நன்மைகள் கிடைப்பதை உறுதி செய்யவே அரசியலுக்கு வந்துள்ளேன். சில பெருமுதலாளிகளுக்கு நன்மைகள் செய்வதற்காக அரசியலுக்கு வரவில்லை. ஏழைகளுக்காகவும், குடிசைவாசிகளுக்காகவும், சமூகத்தில் நலிவடைந்த பிரிவினருக்காகவும் தொடர்ந்து நான் போராடுவேன். ஊழல் குறித்து பிறர் பேச மட்டும்தான் செய்கின்றனர். ஆம் ஆத்மி தலைவர் (அரவிந்த் கேஜரிவால்) அதுகுறித்துப் பேசுகிறார். பிரதமரும் அதுகுறித்து பேசுகிறார். இதுகுறித்து அவர் தற்போது மட்டுமல்ல, இதற்கு முன்பும் பேசியுள்ளார். ஊழல்களில் பெரும்பாலானவை, நிலத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே உள்ளன. ஆகையால்தான், அந்தப் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தைக் கொண்டு வந்தது. ஊழலுக்கு எதிராக உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவிலும், ஒடிஸா மாநிலம் நியம்கிரியிலும் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தியது. இதற்கு முன்பு, பிரதமரும், முதல்வரும் யாருடைய நிலத்தை வேண்டுமானாலும் பறித்து, அவற்றை முதலாளிகளுக்கு வழங்க முடியும். நொய்டாவில், 2,000 ஏக்கர் நிலம் “பார்முலா ஒன்’ கார் பந்தயம் நடத்தும் அமைப்புக்கு வழங்கப்பட்டது. “பார்முலா ஒன்’ கார்பந்தயம் நிறுத்தப்பட்டு விட்டது. ஆனால், அதன் பெயரில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் பறிக்கப்பட்டுவிட்டது. விவசாயிகளை காங்கிரஸ் பாதுகாத்தது. விவசாயிகளின் நலனுக்காக நிலம் கையகப்படுத்துதல் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றியது. பாஜகவைச் சேர்ந்தவர்கள், அதை எதிர்த்தனர். ஆனால், அந்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் நிறைவேற்றியது. அது, எளிதான செயலாக இருக்கவில்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் 2ஆவது ஆட்சிக்காலத்தில் அதுதான் மிகவும் கடினமான பணியாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். இந்த விவகாரம்தான், ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு அரசியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தியது. நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தால் பாதிக்கப்பட்ட சக்திகள், காங்கிரஸூக்கு எதிராக செயல்பட்டன. மத்தியிலும், தில்லியிலும் காங்கிரஸ் கட்சி பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. மத்தியில் ஆட்சியிலிருந்தபோது, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தும் வகையில் தகவல் உரிமைச் சட்டம் உள்ளிட்டவற்றை கொண்டு வந்துள்ளது. தில்லியில் ஆட்சியில் இருந்தபோது, அதன் தோற்றத்தையே மாற்றிக் காட்டியது என்றார் ராகுல் காந்தி.
கிரிக்கெட் லீக் நிறைய தேவை: வெங்சர்க்கர்
கிரிக்கெட் வீரர்கள் நிறையப் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றால், கிரிக்கெட் லீக் போட்டிகள் நிறைய நடத்தப்பட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் திலிப் வெங்சர்க்கர் கூறியுள்ளார். மும்பை கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் டி20 கார்பரேட் டிராபி குறித்த எக்ஸலன்ஸ் இன் கிரிக்கெட் அறிமுகக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போது, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“நீ பாக்காட்டா என்ன? நான் ஒன்னைப் பாக்கறேன்.”
“நீ பாக்காட்டா என்ன? நான் ஒன்னைப் பாக்கறேன்.” (மஹான்களின் திருஷ்டி பிரபாவம்!) உத்தமமான குருவானவர், தன் சிஷ்யர்களை மட்டுமில்லை, சாமான்யமாக அவர்களுடைய திருஷ்டியில் படும், வஸ்துக்கள் அனைத்தையும் தன் பார்வையால் கடாக்ஷிப்பது. அந்த கடாக்ஷத்தை உள்வாங்கிக் கொள்ளும் பக்குவம் நமக்கு இருக்கிறதோ இல்லையோ, அந்த கடாக்ஷமே தன் வேலையை செய்ய ஆரம்பித்து விடும். மீன், தன் குஞ்சுகளை பார்வையாலேயே ரக்ஷிப்பது போன்றது மஹான்களின் திருஷ்டி . அதனால்தான் நம்… குழந்தைகளை மஹான்களின் சன்னிதானத்திற்கு அழைத்துப் போவது. அக்குழந்தைகளுக்கு மஹான்கள் யாரென்று கூட புரிந்து கொள்ளும் பக்குவம் இருக்கிறதோ இல்லையோ, அவர்களின் மேல் சூழ்ந்துள்ள தோஷங்களை நிவர்த்திக்கும் சக்தி அந்த திருஷ்டிக்கு உண்டு.
“பெரியவாளின் வாக்கு பலிதம்”
தொகுத்தவர்-அழகர் நம்பி. தட்டச்சு-வரகூரான் நாராயணன். சென்னையில் பெசன்ட் நகரில் அஷ்ட லக்ஷ்மி கோவில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த விஷயத்தை காஞ்சிப் பெரியவாளிடம் தெரிவிப்பதற்காகச் சென்றார் முக்கூர் நரசிம்மாச்சாரியார். பெரியவாளை தரிசித்தபின் “அஷ்ட லக்ஷ்மி கோவிலின் திருப்பணிகள் முடிவடைந்து விட்டன” என்று கூறினார் ஆச்சாரியார். “பெருமாளை பிரதிஷ்டை செய்தாயிற்றா?” என்று கேட்டார்கள் ஸ்வாமிகள். “இல்லையே பெருமாள் சிலை பிரதிஷ்டை செய்யவில்லையே” என்றார். பெருமாள் விக்கிரஹத்தை பிரதிஷ்டை செய்யும்படி உத்தரவு பிறப்பித்தார்கள் பெரியவா. ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படியே பெருமாள் சிலை வடிக்கப்பட்டது. அச்சிலையை பெரியவாளின் பார்வைக்காக எடுத்துச் சென்றார் நரசிம்மாச்சாரி. ஸ்வாமிகள் விக்கிரஹத்தைப் பார்த்துக் கொண்டிருந்த சமயம், ஜட்ஜ் கைலாசம் தன் மனைவியுடன் வந்து ஸ்வாமிகளை நமஸ்கரித்தார். “இவர் சீக்கிரமே சுப்ரீம் கோர்ட் ஜட்ஜாகப் போகிறார்” என்று நரசிம்மாச்சாரிக்கு அறிமுகம் செய்தார்கள். ஸ்வாமிகளின் வாக்கைக் கேட்ட ஜட்ஜ் தம்பதி அதனை அருள் வாக்காகவே கொண்டார்கள். பெரியவாளின் வாக்கு பலித்து விட்டது. ஒரே வாரத்தில் கைலாசம் சுப்ரீம் கோர்ட்டின் ஜட்ஜாக உத்தரவும் வந்தது. உற்ற பொருள் கொண்டு உறுபொருள் காண்பார் வரும் பொருள் உரைப்பார் இந்த மண்ணுயிர்க்கன்பர்!’
எளிய இயற்கை வைத்தியம் – 33 மருத்துவ குறிப்புகள்
எளிய இயற்கை வைத்தியம் – 50 மருத்துவ குறிப்புகள் நோய் வந்துவிட்டாலே உடனே மருத்துவரிடம் ஓடுவதை விட, வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே எளிதாக குணப்படுத்தலாம்.
- நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
- தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
- தொண்டை கரகரப்பு சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். www.puradsifm.com
தொடர் விக்கல் நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
அஜீரணம் ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும். சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.
வாயு தொல்லை வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
வயிற்று வலி வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
சரும நோய் கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
மூக்கடைப்பு ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
கண் எரிச்சல், உடல் சூடு வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
வயிற்றுக் கடுப்பு வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.
பற் கூச்சம் புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.
வாய்ப் புண் வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.
தலைவலி பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.
வயிற்றுப் பொருமல் வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
அஜீரணம் ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.
இடுப்புவலி சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.
வியர்வை நாற்றம் படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.
உடம்புவலி சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.
ஆறாத புண் விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.
கண் நோய்கள் பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.
மலச்சிக்கல் தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.
கபம் வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.
நினைவாற்றல் வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.
சீதபேதி சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.
ஏப்பம் அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.
பூச்சிக்கடிவலி எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.
உடல் மெலிய கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.
வயிற்றுப்புண் பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
வயிற்றுப் போக்கு கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.
வேனல் கட்டி வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.
வேர்க்குரு தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.
உடல் தளர்ச்சி முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.
நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.
தாய்ப்பால் சுரக்க அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
குழந்தை வெளுப்பாகப் பிறக்க கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.
எரிச்சல் கொப்பளம் நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.
பித்த நோய்கள் கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.
கபக்கட்டு நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.
நெற்றிப்புண் நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.
மூக்கடைப்பு இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.
ஞாபக சக்தி வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.
மாரடைப்பு சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்
ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.
கை சுளுக்கு கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.
நீரிழிவு அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.
மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.
கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன் புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்
உடல் வலுவலுப்பு ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.
பெரியவாளின் ஞாபக சக்தி)
பெரியவாளின் ஞாபக சக்தி) ஒருநாள் காலை தர்சனத்துக்கு ஒரு வயஸான தம்பதி வந்திருந்தனர். பெரியவா ஒரு வாதா மரத்தின் கீழ் அமர்ந்து தர்சனம் குடுத்துக் கொண்டிருந்தார். தம்பதிகள் பழங்களை சமர்ப்பித்துவிட்டு நமஸ்கரித்தனர். “இதே மாதிரி வாதா மரம் ஒங்காத்து வாசல்ல இருந்ததே!……இன்னும் இருக்கோ?….” “ஆமா…இன்னும் இருக்கு! பெரியவா பாத்து இருவது வர்ஷத்துக்கு மேலேயே இருக்கும்….இப்போ நன்னா பெருஸா வளந்திருக்கு; நெறைய காய்க்கறது; தெருப் பசங்க கல்லை விட்டெறிஞ்சு வாதம் பழத்தை பொறுக்கித் திங்கறதுகள்..” “கூடத்ல ஒரு பத்தாயம் இருந்துதே!….அதுல கரையான் அரிச்சு ரிப்பேர் பண்றா..போல ஆயிருந்துதே!..” “ஆமா….அத அப்போவே ரிப்பேர் பண்ணியாச்சு. அதுலதான் சாப்பாட்டு நெல்லைக் கொட்டி வெக்கறோம்….” “ஒரு சே…ப்பு பசுமாடு கன்னு போடாம இருந்துதே!…..” “அது ஆறு கன்னு போட்டுது பெரியவா…..இப்போ, சமீபத்லதான் தவறிப் போச்சு. எல்லாக் கன்னும் நன்னா இருக்கு…நல்ல வம்சம்….” “ஐயங்கார் கணக்குப்பிள்ளை இருந்தாரே! திருநக்ஷத்ரம் எம்பதுக்கு மேலே இருக்குமோ இப்போ?….” “சதாபிஷேகத்துக்கு ரெண்டு வர்ஷம் முன்னாடி, வைகுண்டம் போய்ட்டார் பெரியவா….” “எட்டுக்குடி முருகனுக்கு தைப்பூசம் காவடி எடுக்கற வழக்கமாச்சே! ஒங்க புத்ராள் யாராவுது வந்து காவடி எடுக்கறாளா?…” “பெரியவா க்ருபைல எட்டுக்குடி முருகன் கைங்கர்யம் நடந்துண்டிருக்கு..” “வடுவூர் துரைஸ்வாமி ஐயங்கார், வை.மு.கோதைநாயகி அம்மாள்,பம்மல் சம்மந்த முதலியார் நாவல்கள், மதனகாமராஜன், விக்ரமாதித்தன் புஸ்தகங்கள் எல்லாம் அலமாரி நெறைய இருந்துதே! இருக்கா? யாராவுது படிக்கறாளா?….” “எல்லாப் புஸ்தகமும் இருக்கு…ஆனா யாரும் படிக்கறதில்லே பெரியவா…..” “ராமாயண பாராயணம் பண்ணிண்டிருந்தியே! நடக்கறதா..?” “கண் செரியாத் தெரியறதில்லே, அதுனால ஒரு சர்க்கம் மட்டும் படிக்கிறேன்…” கேட்டுக்கொண்டிருந்த பாட்டிக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம்! பாட்டி சொன்னாள்….”எத்தனையோ வர்ஷத்துக்கு முன்னாடி பெரியவா எங்க க்ராமத்துக்கு வந்தப்போ, எங்காத்துக்கு வந்து, கொஞ்ச நேரம் இருந்திருப்பேள் …..ஆனா, எப்டி இத்தனை நுணுக்கமா எல்லாத்தையும் பாத்து, இத்தனை வர்ஷத்துக்கப்புறம் கூட எதையுமே மறக்காம, அவ்வளவு ஞாபகமாக் கேக்கறேளே!…பெரியவா கேட்டதுல பாதி விஷயங்கள், அந்தாத்துல இருக்கற நேக்கே நெனைவுல இல்லே!……” பெரியவா படாரென்று ஒரு பெரிய விஷயத்தை போட்டுடைத்தார்…….. “ஆமா……இதெல்லாம் என்ன ஞாபகசக்தி? ஈஸ்வரன் ஞாபகம் எப்பவுமே இருக்க மாட்டேங்கறதே!… ” ஸூர்யனுக்கு அக்னியின் நினைவு இல்லையாம்!! குறை என்று வரும்போது, பெரியவா மாதிரி மஹான்கள் தங்களை முன்னிறுத்தி சொல்லுவார்கள். நம்மை மாதிரி அல்பங்களோ, குறை என்றால் அடுத்தவர்களைத்தான் முன்னிறுத்திச் சொல்லுவோம்
உளவுபார்க்கும் செயற்கைக்கோள்: வெற்றிகரமாக செலுத்தியது ஜப்பான்
உளவு பார்க்கும் செயற்கைக்கோள் ஒன்றை புவியின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளது ஜப்பான். மின்னல் அச்சம் காரணமாக முன்னர் இவ்வாறான முயற்சி கைவிடப்பட்டிருந்தது. ஜப்பான் தனது அண்டை நாடான வட கொரியா, கண்டம் விட்டு கண்டம் பாயக் கூடிய ஏவுகணையை தன் பெருநிலப் பரப்புக்கு மேலாக செலுத்தியது முதல், இவ்வாறான முயற்சியில் ஈடுபட்டிருந்தது. சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பிருந்து உளவு பார்க்கும் செயற்கைகோள்களை ஜப்பான் அனுப்பி வருகின்றது. தெற்கு ஜப்பானில் உள்ள தனேகாஷிமா விண்வெளி நிலையத்திலிருந்து இந்தப் புதிய செயற்கைக்கோள் ஞாயிற்றுகிழமை இன்று ஏவப்பட்டது.

