Home Blog Page 6315

விதண்டாவாதியும் மஹாபெரியவாளும்”

விதண்டாவாதியும் மஹாபெரியவாளும்” (கோபப் புயலாய் இருந்த பெரியவா அருட் தென்றலாய் மாறிய நிகழ்ச்சி) 1969132_763012707087106_4352134091554339462_n ரா.கணபதி. சிவபெருமான் மீது பெரும் பக்தி கொண்டவர். சிவராத்திரி தினத்தில் (2012) சிவநாமம் கூறியபடி அவர் உயிர் பிரிந்தது ஆச்சரியம் என்றனர் உடன் இருந்த அன்பர்கள்.அவரைப் போற்றும் விதமாக வரும் சிவராத்திரி ஃபிப்ரவரி 17 வரை பெரியவா கட்டுரைகள் பழசு,புதுசு தினம் இரண்டு போஸ்டாகும். சொல்லின் செல்வர் ஸ்ரீகாஞ்சி முனிவர். ஆசிரியர்——ஸ்ரீ ரா. கணபதி. ஓர் இரவு பெரியவாளிடம், ஒரு வெளியூர் அடியார், மறுநாள் அதிகாலை ஊருக்குப் புறப்படவிருப்பதாகச் சொல்லிப் பிரஸாதம் கேட்டபோது, ” நாளைக்கு விடிகாலை ஊருக்குப் போறயா? ஸ்ரீராமநவமியாச்சே?, ஒண்ணு, வந்தது வந்தே, இங்கே மடத்துல ராமர் பூஜைக்கு இருக்கணும், இல்லாட்டா, இன்னி ஸாயங்காலம் ரயிலுக்கே போயாவது இருக்கணும். அப்ப ஊருக்குப் போய்ச்சேர்ந்து ஆத்துலயாவது பூஜை பண்ண முடிஞ்சிருக்கும். ஆத்தையும் கோட்டை விட்டுட்டு, இங்கேயும் இல்லாம, நாளை காலம்பர பஸ்ஸிலே போறேங்கறியே!” என்றார் ஸ்ரீசரணர். ‘அடியார்’ என்று மரியாதையை உத்தேசித்துச் சொல்லப்பட்ட அந்நபர் ஒரு விதண்டாவாதி. மரியாதை முறை பாராது ஜகத்குருவிடமும் விதண்டை செய்பவர். அதற்கேற்பவே இப்போது, ” நான் வேதத்துல ஸ்பஷ்டமா சொல்லியிருக்கிறதுகளைத்தான் பண்ணுகிறது. வேதந்தானே நமக்கு எல்லாம்? அதுல இல்லாதது எதுக்கு? வேதத்துல ராமனை, க்ருஷ்ணனைப் பத்தியெல்லாம் எங்கே இருக்கு? வேதம் ஏற்பட்டு, எத்தனையோ காலம் கழிச்சுப் பொறந்து அதைப் பின்பத்தினவாதானே அவாளும்? அதனால, ராமர், க்ருஷ்ணர் சமாசாரமெல்லம் எதுவும் நான் எடுத்துக்கிறதில்லே. ராமநவமியும் பண்றதில்லே. ராமர் படம் கூட ஆத்துல கிடையாது.” என்றார். அப்படியானால், அவர் வேதோக்த கர்மாக்கள் செய்வாரா என்றால் அதுவும் மாட்டார்! இது ஸ்ரீசரணாளுக்கா தெரியாது? ‘புரு, புரு, புரு’ என்று ஒரு வேகம் ஏறி, பெரியவர்தானா பேசுகிறாரென வியப்புறுமாறு பெரியவர் விளாச ஆரம்பித்தார்! “ஓ! வேதத்துல இல்லாத எந்த ஒண்ணும் ஒனக்குத் தள்ளுபடியாடாப்பா? ஸரி, அப்ப கார்த்தால எழுந்த ஒடனே டூத்பேஸ்ட், அப்புறம் காபி மூஞ்சில் முழிக்கறையே, டூத்பேஸ்டும் காபியும் வேதத்துல சொல்லியிருக்கோ? அப்புறம் சோப்புத்தேச்சுண்டு குளிக்கறயே, அந்த சோப்பு? ஒன் ஆம்படையா க்ரைண்டர்ல அறைச்சு, ப்ரெஸ்டீஜ்–ல சமைச்சதைச் சாப்படறயே, அந்த க்ரைண்டரும் குக்கரும் வேதத்துல சொன்னதுதானாடாப்பா? எல்லாத்தையும் விட, ‘ஆபீஸ்’னு, அதைத்தான் ஜீவனோபாயத்துக்கே வழியா வெச்சுண்டு போறியே, ஸூட் மாட்டிக்கிண்டு! ஸூட் வேதத்துல இல்லேங்கறது இருக்கட்டும். மொதலுக்கே மோசமா வேதத்துலே இப்படித்தான் ப்ராமண ஜாதிக்காரனை ஆஃபீஸ் உத்யோகம் பார்க்கச்சொல்லியிருக்கோ? ஆஃபீஸுக்கு ஸ்கூட்டரோ, பஸ்ஸோ, எலெக்ட்ரிக் ட்ரெயினோ எதுவோ ஒண்ணுல போறியே, அந்த வாஹனாதிகள் எந்த வேதத்துல இருக்கு?” என்றார். அதோடு விட்டரா? மேலும் மேலும், மின்விளக்கு, மின்விசிறி, ஸினிமா, கிரிக்கெட் என்பதாக அடியாரது அனுபவத்திற்கு உரிய பலவற்றை அடுக்கிக் கொண்டே போய், அது ஒவ்வொன்றும் ‘வேதத்தில் சொல்லியிருக்கா/” என்றோ, ‘எந்த வேதத்தில் சொல்லியிருக்கு’ என்றோ முத்தாய்ப்பு வைத்தார்! முடிவாக, ” வேதத்துல எங்கேயும் ‘டைரக்’டா இந்த மாதிரி ஒரு அத்வைத ஸன்யாஸி, மடம்னு வெச்சுண்டு ‘பப்ளிக்’ பூஜை பண்ணீண்டு, பூஜை ப்ரஸாதம் குடுக்கலாம்னு இருக்கறதா தெரியெல்லே–ன்னு கூட உன் மாதிரி மேதைகளோட ஆராய்ச்சியில ஏற்படலாம்! அதனால், நீ இப்ப எங்கிட்ட கேக்கற ப்ரஸாதமே வேதத்துல சொல்லாததுதான்–னு ஆகறது. போய்ட்டு வா!” என்றாரே பார்க்கலாம்! விதண்டாவாதி ஆடியே போய் விட்டார்! தடாலென்று தண்ட நமஸ்காரம் செய்து ஸ்ரீசரணரிடம் தம்மை க்ஷமித்து நல்லறிவு தர வேண்டினார்! கோபப்புயலாயிருந்த ஸ்ரீசரணாள் அக்கணமே அருட்தென்றலாகிக் கூறலானார். வேதகாலத்திற்குப் பிற்பட்டும் அதில் நேராக உள்ளவற்றை அநுஸரித்தே, அந்த விருக்ஷத்துடைய புதுப் புதுக் கிளை, இலை என்றெல்லாம் காலம் தோறும் அநேகம் ஏற்பட்டு வைதீக ஸம்ப்ரதாயத்தில் அங்கமாகக் கலந்து விட்டன. அதெல்லாமும் வேதமாகவே மதித்து, போற்றி, நாமெல்லாம் அநுஸரிக்க வேண்டியவைதான். மூலமாக ஒரு ‘தியரி’ இருந்து அதை அப்புறம் காலம் தோறும் ‘அடாப்ட்’ பண்ணிப் புதுப் புது ‘டிஸ்கவரி’ கள் செய்தால் அதெல்லாவற்றையும் கூட அந்தத்துறையைச் சேர்ந்ததாகவேதானே எடுத்துக் கொள்கிறோம்? அப்படியும் வேத தாத்பரியங்களை ப்ரயோஜனப்படுத்திப் பிற்காலங்களில் அநேகம் சேர்ந்து தற்போதுள்ள ஹிந்து மதம் என்கிறதை ரூபம் பண்ணீயிருக்கிறது—-என்பதை தீர்க்கமாக விளக்கி விட்டுத் தொடர்வார்: “இது ஒரு அம்சம். இன்னொரு அம்சம், வேதத்தில் என்னென்ன கார்யம் சொல்லியிருக்கோ, அநுமதிச்சிருக்கோ, அந்தக் கார்யங்களுக்காகவே, ஆனா வேதத்தில் சொல்லாத உபகரணங்கள் பிற்காலங்களீல் கண்டு பிடிச்சிண்டே வந்திருக்கா. அத்யயனம், யக்ஞம், பூஜை, ஜபம், த்யானம் முதலான அநுஷ்டானங்கள் பண்றதைப்பற்றி மட்டும் வேதத்தில் சொல்லி நிறுத்திடலை. எழுந்ததும் தந்த தாவனம்–னு பல் தேய்ச்சுக்கறது, அப்புறம் ஸ்நானம் பண்றது, சாப்படறது, பானம் பண்றது, ஸ்வதர்ம கர்மா பண்ணி ஸம்பாதிக்கறது, வாழ்க்கை–ன்னு ஏற்பட்டிருக்கிறதில அங்கே இங்கே ஓடறது, ப்ரயாணம் பண்றது, ‘ரிக்ரியேஷன்’ னு கொஞ்சம் உல்லாஸமாயிருக்கறது—எல்லாமே வேதத்துல சொன்ன, அநுமதிச்சிருக்கற கார்யந்தான். ஆனா அந்தக் கார்யம் நடத்திக்க அன்னிக்கு இருந்த உபகரணம் போய், இன்னிக்கு வேறே வந்திருக்கலாம். அன்னிக்குக் குதிரை மேலேயோ மாட்டு வண்டியிலேயோ ப்ரயாணம் பண்ணிணா–ன்னா இன்னிக்கு ஸ்கூட்டர், எலெக்ட்ரிக் ட்ரெயின் வந்திருக்கலாம். இதுகளை வேதத்தில சொன்னபடியே இருந்தாத்தான் ஏத்துக்கிறதுன்னு ஒரு ‘பாலிஸி’யா வெச்சுண்டு தள்ளுபடி பண்ண வேண்டியதில்லே! இந்த உபகரணங்களில் எது எது வேதத்தின் ‘ஸ்பிரிட்’ டுக்கு விருத்தமாயிருக்கோ[ விரோதமாகயிருக்கின்றனவோ] அநாசாரத்தை உண்டாக்கறதோ அதையெல்லாம்தான் தள்ளுபடி பண்ணணும். டூத்பேஸ்ட்லேந்து, காபிலேந்து ஆரம்பிச்சு, அநாசாரம் கலந்ததையெல்லாம்தான் நிஷேதிக்கணும் [ விலக்க வேண்டும் ] . சிலது ஸந்தர்ப்பக் கொடுமையால் சேந்த தவிர்க்க முடியாத அநாசாரமாயிருக்கு—ப்ராமணன் வைதீக வ்ருத்தியை [ தொழிலை ] விட்டுட்டு, ஆஃபீஸ், கம்பெனி–ன்னு உத்யோகம் பார்க்கறது இப்படி ஏற்பட்டு விட்டதுதான். இது பெரிய்ய அநாசாரந்தான், பெரிய அபசாரமே! ஆனாலும் என்ன பண்ணலாம்? தவிர்க்க முடியாததா ஆயிருக்கே? அதனாலே, பெருமை பெருமையா, ‘நாமாக்கும் பெரிய உத்யோகம் பண்ணி, வாரி வாரிக் குவிச்சுக்கிறோம்! இன்னும் பெரிசாப் பண்ணி ஜாஸ்தியா குவிச்சுக்கணும்’னு பறக்காம, பகவான் கிட்ட மன்னிப்பு கேட்டுண்டு, ‘இப்படி இருக்கே’ன்னு தாபப்பட்டுண்டுதான், வாழ்க்கையோட அத்யாவஸ்யத் தேவைக்கானதை மட்டும் உத்யோகம் பண்ணி ஸம்பாதிச்சுக்கணும். நெறைய ‘டயம்’ ஒழியும்படிப் பண்ணிண்டு அந்த டயத்துல வேதத்யயனாதிகள், அநுஷ்டானாதிகள் பண்ண ஆரம்பிக்கணும். ரிடயர் ஆன விட்டு, வேதத்துக்கே வாழ்க்கையை அர்ப்பணம் பண்ணணும். அப்படி இப்பவே ஸங்கல்பம் பண்ணிக்கணும். “ராமநவமி, கோகுலாஷ்டமி, இன்னும் இப்ப இருக்கிற ரூபத்துல ஹரிகதை, பஜனை–ன்னெல்லாம் வேதத்துல இல்லாததுகளும் வேத வழியில் நாம சேர்கிறதற்கு ரொம்ப ஒத்தாசை பண்றவைதான். வேதகாலத்துப் புருஷ ஸிம்ஹங்களா இல்லாமப் பூஞ்சையா வந்திருக்கிற பின்தலைமுறைக்காராளை அவா மனஸுக்கு ரஞ்சகமான மொறையிலேயே வேத வழிக்குக் கொண்டு சேர்த்துப் பரோபகாரம் பண்ணிண்டு வந்திருக்கிறது இதுகள்தான். ஸங்கீதக் கச்சேரியில பல்லவி பாடறதுன்னு சன்ன பின்னலாத் தாளத்தை வித்யாசப்படுத்தறதைத் தேர்ந்த வித்வான்கள்தான் ரொம்பவும் ரஸிச்சுத் தாங்களும் பங்கு எடுத்துப்பா. மத்தவாளுக்கு அது கடபுடாதான்! வைதீகாநுஷ்டானங்கள் பூஞ்சையான நமக்குக் கொஞ்சம் அப்படி இருக்கறதுதான்! பல்லவிக்கு முன்னாடி ஸர்வஜன ரஞ்சகமா அநேக கீர்த்தனைகள், பல்லவியிலேயே ராகமாலிகை ஸ்வரம், அப்பறம் துக்கடான்னு கச்சேரி பத்ததியில் நன்னா இளக்கிக் குடுத்து லேசு பண்ணி எல்லாரையும்˜ப்ளீஸ்™ பண்ணிட்டா, அதனாலேயே அவாளும் இந்தப் பல்லவி ஸமாசாரம் என்னன்னு நாமுந்தான் தெரிஞ்சுப்போமேன்னு ˜இன்ட்ரெஸ்ட்™ எடுத்துக்கறாளோல்லியோ? அந்த மாதிரிதான் ராமநவமியும், ஜன்மாஷ்டமியும், பஜனையுமே நமக்கெல்லாமும் ரஞ்சகமாயிருந்துண்டு, அதோட, இதுக்கெல்லாமும் வேதந்தானே மூலம்கிறா?

ராஜபக்ச சீசெல்ஸ் தீவை விலைக்கு வாங்கினார்?: இலங்கை அரசு விசாரணை

rajapaksha கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச சீசெல்ஸ் நாட்டில் தீவு ஒன்றை வாங்கியது தொடர்பாக அந்நாட்டு அரசு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இலங்கை அதிபராக மகிந்த ராஜபக்ச இருந்த போது சீசெல்ஸ் நாட்டில் இலங்கை வங்கியின் கிளையை நிறுவியதுடன் இரு நாடுகளுக்கும் இடையில் விமான சேவைகளையும் தொடங்கினார். சீசெல்ஸ் நாட்டில் மிகச் சொற்பமான அளவில்தான் இலங்கையர் வசித்து வந்த நிலையிலும் தமது அதிபர் ஆட்சிக் காலத்தில் அந்நாட்டுக்கு அதிக முக்கியத்துவத்தை ராஜபக்ச கொடுத்தது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியிருந்தது. இந்நிலையில் அதிபர் தேர்தலில் ராஜபக்ச தோல்வி அடைந்த நிலையில் அவரது ஆட்சிக் காலத்தில் வாங்கிக் குவிக்கப்பட்ட சொத்து விவரங்கள் குறித்து புதிய அரசு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. இலங்கையின் இந்த விசாரணைக்கு சீசெல்ஸ் நாடும் ஒத்துழைப்பு தர முன்வந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த சீசெல்ஸ் நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஜின் போல் எடம், இலங்கைக்கு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று கூறியிருக்கிறார். மேலும் சீசெல்ஸ் நாட்டில் இலங்கை செய்துள்ள அனைத்து முதலீடுகள் பற்றியும் தகவல் வழங்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதனால் மகிந்த ராஜபக்சவுக்கு பெரும் நெருக்கடி உருவாகியுள்ளது.

இந்தியாவில் இப்போதுள்ள மத சகிப்புத்தன்மையை அறிந்தால் மகாத்மா காந்தி அதிர்ச்சி அடைவார்: பராக் ஒபாமா

obamaவாஷிங்டன்: இந்தியாவில் தற்போதுள்ள மத சகிப்புத் தன்மை நடவடிக்கைகள் குறித்து அறிந்தால், மகாத்மா காந்தி அதிர்ச்சி அடைவார் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வியாழக்கிழமை தெரிவித்தார். அண்மையில் பராக் ஒபாமா இந்தியா வந்திருந்தபோது, தில்லியில் நடந்த நிகழ்ச்சியில் மத சகிப்புத் தன்மை குறித்து ஓரிரு வார்த்தைகள் பேசியிருந்தார். இது இந்தியாவில் எதிர்க்கட்சியினர் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டது. ஆளும் பாஜகவைக் குறிவைத்து, ஒபாமா இப்படிப் பேசியதாகக் கூறப்பட்டது. இது குறித்து விளக்கம் அளிக்கும் விதமாக வெள்ளை மாளிகை அதனை மறுத்திருந்தது. ஒபாமா, இந்தியா மற்றும் அமெரிக்கா இரண்டுக்கும் பொதுவான ஜனநாயக மதிப்பு மற்றும் கொள்கைகள் குறித்தே பேசினார் என்று  விளக்கம் அளித்தது. இந்நிலையில், ஒபாமா ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது…. ”மிகவும் அழகான செழுமையான நாடான இந்தியாவில் இருந்து நானும் மிச்செலும் இப்போதுதான் திரும்பியிருக்கிறோம். முற்றிலும் வேறுபாடுகளைக் கொண்ட ஒரு நாடு. ஆனால்,  பல்வேறு மத நம்பிக்கைகள் கொண்ட ஒரு இடமான அங்கு கடந்த சில வருடங்களாக, சில நேரங்களில் வேறு சில மத நம்பிக்கைகள் கொண்டவர்கள் மற்றவர்கள் தாக்கப்படுவது நடந்துள்ளது. தங்கள் பழைமையையும் கலாசாரத்தையும் நம்பிக்கைகளையும் தக்க வைக்க அவ்வாறு நடந்து கொண்டிருக்கின்றனர். இந்த மத சகிப்புத் தன்மையின் நிலை குறித்து அறிந்தால், அந்த தேசத்தின் விடுதலைக்கு உதவிய மகாத்மா காந்தி அதிர்ச்சி அடைவார்” என்று கூறியுள்ளார். வியாழக்கிழமை நேற்று அமெரிக்க அதிபர் மாளிகையில் மூவாயிரத்துக்கும் அதிகமான சர்வதேசப் பிரமுகர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் அதிபர் ஒபாமா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். முன்னதாக கடந்த மாதம் 26ம் தேதியை ஒட்டி, மூன்று நாள் பயணமாக இந்தியா வந்தார் ஒபாமா. குடியரச தின விழாவில் பங்கேற்ற பின்னர் 27-ம் தேதி தில்லியில் ஒரு நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அனைவரும் தங்களின் மத நம்பிக்கைகளை தடையின்றி தொடரவும், அவற்றை விரிவாக்கவும் இந்திய அரசியல் சட்டம் சுதந்திரம் அளிக்கிறது. இந்தியா – அமெரிக்கா மட்டுமின்றி, அனைத்து நாடுகளுக்கும் மத சுதந்திரத்தை பேணிக் காக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. அது ஒவ்வொருவரின் கடமையும்கூட!” என்றார். இந்நிலையில், நேற்று அதிபர் மாளிகையில் நடந்த  நிகழ்ச்சியில் இவ்வாறு பேசியுள்ளார் ஒபாமா. ஆனால், குறிப்பிட்ட எந்த மதத்தைக் குறித்தும் அவர் கூறவில்லை; வன்முறை என்பது குறிப்பிட்டக் குழுவுக்குமோ, ஒரு மதத்துக்குமோ உரியது அல்ல என்றும் கூறியுள்ளார். மேலும், சிலுவையின் பெயரால் நடைபெற்ற கொடூரச் செயல்கள் குறித்தும் அவர் தன் பேச்சில் சுட்டிக் காட்டியுள்ளார். மத சகிப்புத் தன்மை இன்றி, வெறுப்பை வளர்க்கும் குழுக்கள் தங்களுக்கென்று டிவிட்டர் முதலிய சமூக வலைத்தளங்கள் மூலம் உலகெங்கும் தொடர்பு கொண்டு வெறுப்பினை இணையதளங்களில் விதைக்கின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார் ஒபாமா.

பிப்.15-இல் இந்தியா வருகிறார் இலங்கை அதிபர் சிறீசேனா

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா, நான்கு நாள் அரசு முறைப் பயணமாக வரும் 15-ஆம் தேதி இந்தியா வருகிறார். இலங்கை அதிபராக பொறுப்பேற்ற பிறகு, சிறீசேனா மேற்கொள்ளும் முதல் அரசு முறை வெளிநாட்டுப் பயணம் இது. இதுதொடர்பாக இலங்கை அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பிப்ரவரி 15 முதல் 18-ஆம் தேதி வரை அதிபர் சிறீசேனா இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பிகாரில் உள்ள புத்த கயா, திருப்பதி கோயில் ஆகிய இடங்களுக்கும் அவர் செல்கிறார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தை முன்னேற்றுவதில் மோடியைப் பின்பற்றுங்கள்: அர்னால்டு

arnoldமாநிலத்தை முன்னேற்றுவதில், குஜராத் முதல்வராக நரேந்திர மோடி மேற்கொண்ட நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று ஹாலிவுட் நடிகரும், அமெரிக்க கலிஃபோர்னியா மாகாண முன்னாள் ஆளுநருமான அர்னால்டு ஸ்வாஷ்னேகர் கூறியுள்ளார். புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியபோது… குஜராத் மாநிலம், இந்தியாவின் கலிஃபோர்னியாவாக உள்ளது. மோடி இந்த மாநிலத்துக்கு நற்பணிகளைச் செய்துள்ளார். பருவநிலை மாறுபாடு தொடர்பாக குஜராத் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளைப் பாராட்டுகிறேன். இந்த ஆண்டு இறுதியில் பாரீஸ் நகரத்தில் நடக்கவிருக்கும் ஐ.நா. பருவநிலை மாறுபாடு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் மோடி தலைமையிலான இந்திய அரசு முக்கியப் பங்காற்றும் என்று நம்புகிறேன். அடுத்த 5 ஆண்டுகளில் 100 ஜிகாவாட் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்ய இந்தியா இலக்கு நிர்ணயம் செய்திருப்பது பாராட்டுக்குரியது என்றார்.

மன உளைச்சலில் ராஜபக்ச: வீட்டை விட்டும் வெளியேறுவதில்லை

rajapaksha இலங்கை அதிபர் தேர்தலில் தமிழீழ மக்களாலேயே தோற்கடிக்கப்பட்டு படு தோல்வி அடைந்து, அதிபர் பதவியை இழந்த ராஜபட்ச, மன உளைச்சலில் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை என இலங்கை ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்று கூறிக் கொண்டு இனப் படுகொலையை நடத்தி முடித்த ராஜபட்ச, அவசர அவசரமாக அதிபர் தேர்தலை நடத்தினார். அவரது அதிபர் பதவி இன்னும் 3 ஆண்டுகள் இருந்த நிலையில், விரைவிலேயே தனக்கான வினையை அவர் தேடிக் கொண்டார். அதிபர் பதவியில் ராஜபட்ச தோல்வி அடைந்ததால், அவருக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்தில் தற்போது வசித்து வரும் ராஜபட்ச, வெளியில் தலைகாட்டுவதில்லையாம். மன அழுத்தம் காரணமாக ராஜபக்சவுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையும் பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இன்று வானில் முழு நிலவாய் வியாழன் கிரகத்தைக் காணலாம்

thanikai சென்னை: இன்று (6.2.2015) சூரியன் – பூமி – குரு கிரகம் நேர்கோட்டில் வருவதால், சூரியனுக்கு எதிர்நிலையில் குரு இருக்கும் பட்சத்தில் பூமியின் நிலவு எப்படி பவுர்னமி அன்று தோன்றுகிறதோ அதுபோல் குருகிரகம் முழுவிட்டத்துடன் தெளிவுடன் தோன்றும். தமிழகத்தில் இரவு முதல் விடியற்காலை வரை இதனைக் கண்டு ரசிக்கலாம். குரு கிரகத்தை வெறும் கண்களால் காணலாம். அதன் அழகிய தோற்றம் மற்றும் சந்திரன்களை தொலைநோக்கி அல்லது தரமான பைனாக்குலர் மூலம் காணலாம். வானில் அன்று குரு-நிலவு-மகம் நட்சத்திரம் நேர்கோட்டில் தோன்றும். இதை உலகம் முழுவதும் காணலாம். – இவ்வாறு தாம்பரம் வானவியல் கழகத்தின் பாலு சரவண சர்மா தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை வென்றதும் உணர்ச்சிவசத்தில் அழுதது ஏன்?: தோனி விளக்கம்

dhoni புதுதில்லி: ‘‘கடந்த 2011ல் உலக கோப்பை வென்ற ஆனந்தத்தில் இந்திய அணியின் 15 வீரர்களும் கண்ணீர் விட்டு அழுதோம்,’’ என, கேப்டன் தோனி தெரிவித்தார். கடந்த 1983ல் கபில்தேவ் தலைமையில் இந்திய அணி முதன் முறையாக உலக கோப்பை வென்றது. பின், 2003ல் கங்குலி தலைமையில் பைனலுக்கு முன்னேறியது தான் அதிகபட்சம். 2011ல் எழுச்சி பெற்ற இந்திய அணி, 28 ஆண்டுகளுக்குப் பின், தோனி தலைமையில் உலக கோப்பை வென்றது. இந்த நினைவுகள் குறித்து தோனி கூறியது: கடந்த 2011ல் நடந்த உலக கோப்பை தொடரின் போது ரசிகர்கள் எங்கள் மீது வைத்த அதீத நம்பிக்கை பெரும் நெருக்கடி தந்தது. லீக் சுற்றில் தொடர்ந்து வெற்றி பெற, இது இன்னும் அதிகரித்தது. எது பெரியது: முதலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காலிறுதி, பெரிய போட்டி, என்றனர். இதில் வெற்றி பெற்றதும், பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி தான் மிகப்பெரியது என்றும், இது தான் உண்மையான பைனல் எனவும் கூறினர்.பாகிஸ்தானை வென்றதும், ரசிகர்கள் அனைவரும் கோப்பை வெல்ல வேண்டும் என எதிர்பார்த்தனர். சாப்பிட மனமில்லை: பைனலில் (2011, ஏப்., 2) வெற்றி பெற வேண்டுமே என்ற கவலையில், சாப்பிடக் கூட தோன்றவில்லை. ஏனெனில், இந்தியர்கள் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். உலக கோப்பை வென்ற பிறகு தான், நாட்டு மக்கள் திருப்தி அடைந்தனர். பணம் முக்கியமல்ல: இந்திய கிரிக்கெட்டில் பணம் கொட்டுகிறது, வீரர்களுக்கு பெரியளவில் ஒப்பந்தங்கள் உள்ளன என, கூறுகின்றனர். ஆனால், என்ன தான் பணம் இருந்தாலும், உலக கோப்பை வெல்வது போன்ற ஒரு மகத்தான மகிழ்ச்சியை, ஒருபோதும் கொண்டு வர முடியாது. எல்லோரும் அழுதோம்: அந்த தருணத்தில் அனைவரும் உற்சாகத்தில் மிதந்தோம். கோப்பை வென்ற ஆனந்தத்தில் அழுதே விட்டேன். இப்படி அழுவேன் என நான், ஒருபோதும் நினைத்தது கிடையாது. நான் மட்டுமல்ல, 15 வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் என, ‘டிரசிங் ரூமில்’ இருந்த அனைவரும் அழுதனர். வீரர்களிடம் இருந்து வெளிப்பட்ட அந்த உணர்வை, இந்த உலகம் பார்த்திருக்காது. ஏனெனில், இதற்கான ‘வீடியோ’ பதிவு, ‘போட்டோ’ என, எதுவும் இல்லை. இவ்வாறு தோனி கூறினார்.

ஸ்ரீ பெரியவாள் தன் முந்தைய குரு பற்றியும்,தன்னைப்பற்றியும் சொன்ன ஸ்வாரஸ்ய நிகழ்வு-பெரியவாள் ரா.கணபதியிடம்”

1969132_763012707087106_4352134091554339462_n ஸ்ரீ பெரியவாள் தன் முந்தைய குரு பற்றியும்,தன்னைப்பற்றியும் சொன்ன ஸ்வாரஸ்ய நிகழ்வு-பெரியவாள் ரா.கணபதியிடம்” ரா.கணபதி நேரில் கேட்ட அற்புத நிகழ்வு. ஸ்ரீசரணாள் அந்த அண்ணாவைப் பற்றிப் பல கூறியதிலிருந்து: “நாங்கள்ளாம் கொட்டம் அடிப்போம். அண்ணா ஸாதுவா இருந்துண்டு இருப்பார். அவர் மௌன பார்க்கவ கோத்ரம். அதைச் சொல்லி, ‘அதுக்கேத்த மாதிரி மௌனி, மௌனி’ன்னு தமாஷ் பண்றது” என்றார். மாதாமஹர் வேதவித்வான் என்பது மட்டுமன்றி கந்தனின் பிதா நரஸிம்ஹ சாஸ்திரியும் அத்யயனம் செய்து வைதிக வாழ்க்கை நடத்தியவர். அதனால் அவர் எட்டு வயஸிலேயே பிள்ளைக்கு உபநயனம் செய்து வேதப் பயிற்சி தொடங்கிவிட்டார். “அவருக்கு முழு வித்யாஸமா, இங்கே எங்காத்திலேயானா அப்பா ஸர்க்கார் உத்யோகம். அதுபோக பாக்கி வேளையெல்லாம் ஆத்துல ஸங்கீதக் கச்சேரிதான். நானா ஸ்கூல், ஸ்கூலாத் திண்டாடிட்டு, கடைசில அமெரிக்கன் மிஷன் ஸ்கூல்ல படிச்சிண்டிருந்தேன். அண்ணாதான் பூர்ண வைதிகம், அண்ணாதான் பூர்ணவைதிகம்” என்று நெஞ்சார்ந்த மரியாதைத் தழதழப்புடன் கூறினார், உணர்ச்சிகளை வெகுவாகக் கட்டுப்படுத்தும் ஸ்ரீசரணர். “அவர் இங்க்லீஷ் படிப்பே படிச்சதில்லே. நாங்கள்ளாம் போட்டுப் பொளப்போம். அவருக்கு இங்க்லீஷ் தெரியலைனு சிரிச்சுக்கிண்டு சாந்தமாகவே இருந்துடுவார். “நாங்க ட்ராயர், ஷர்ட், கோட்டுக்கூட, காப் எல்லாம் போட்டுக்கொண்டு அமக்களப்படுத்தினாலும் அவருக்குக் கொஞ்சங்கூட அந்த ட்ரெஸ்ல சபலம் கெடயாது. பால்யத்திலேயே அப்டியொரு மனஸுக் கட்டுப்பாடு. சாந்தி, தாந்தி 2 ரெண்டுமே ஸ்வாபாவிகமா அவருக்கு இருந்தது. “பரங்கிப்பேட்டை ஸாயபுமார்கள்ளேருந்து நம்மாத்துல அப்பாவுக்கு ஸகல விதமான ஜனங்களும் friends. இந்த நாள் ஃபாஷனுக்கு நாங்க இருந்அ தினுஸு ரொம்ப தூரந்தான்; அதுவும் அம்ம வெறும் நாள்லயே ஏறக்கொறய தெவச மடி பார்க்கரவதான்-னாலும் அந்தக் கால தசைக்கு அப்பா இந்த மாதிரி விஷயத்துல கொஞ்சம் கொஞ்சம் ‘முற்போக்கு’ன்னு சொல்றேளே, அந்த மாதிரி(2. இப்டி இருக்கற எடங்கள்-ல நெருப்பாட்டம் ஆசாரமாயிருக்கறவாளுக்கு ரொம்ப ச்ரமமும் எரிச்சலுமாத்தானே இருக்கும்? அண்ணா செறு வயஸானாலும் நெருப்பாட்டம் மடி! ஆனாலும் எங்காத்துல எல்லாத்துக்கும் சாந்தமா நெகிழ்ந்து குடுத்துண்டு அவர் பாட்டுக்கு ஒதுங்கியிருப்பார்.” பிறிதொரு ஸமயம் சொன்னார். ” ஆசார்யளோட பீடத்துல ஒக்காரணும்னா எவ்வளவு வைதிக பரிசுத்தி வேணுமோ அவ்வளவும் எனக்கு முன்னாடி இருந்தாரே அவருக்குத்தான் இருந்தது. ஏன் பின்னே அத்தனை சுருக்க அவரை ஆசார்யாள் தங்கிட்டயே எடுத்துண்டுட்டார்னு யோஜிச்சு, யோசிச்சுப் பாத்திருக்கேன். முடிவா, என்ன தோணித்துன்னா, வரப்போற அவைதிக ப்ரளய ஸமுதாயத்துக்கு அத்தனை சுத்தரை ஆசார்யராப் பெற லாயக்கில்லை-னுதான் அவரை எடுத்துண்டு, என்னை அங்கே இழுத்து ஒக்காத்தி வெச்சிருக்கார் போலேயிருக்குன்னு!” அவர் சிரித்துக்கொண்டுதான் சொன்னார். கேட்டவர்களுக்குத்தான் நெஞ்சு தழுதழுத்தது

‘ஸபா ஜன’ப் பத்திரிகையை ‘ஸ பாஜன’ப் பத்திரிகையாக க்ஷண நேரத்தில் மாற்றி,

‘ஸபா ஜன’ப் பத்திரிகையை ‘ஸ பாஜன’ப் பத்திரிகையாக

க்ஷண நேரத்தில் மாற்றி, ‘மஹா பெரியவாள் விருந்து’ என்ற புத்தகம் கட்டுரையாளர்-ரா.கணபதி. தட்டச்சு-வரகூரான் நாராயணன்

37061_10151356031212617_107367148_n_zpsb19955ed
சென்னையில் பெரியவா ஒருவித்வன் மகாசபைக்கு
எழுந்தருளினார். பலர் பேசினார்கள்.அவர்கள் எக்காரணத்தாலோ முதலில் ஸ்ரீ பெரியவாளுக்கு
அளித்திருக்க வேண்டிய வரவேற்புரையை வாசித்து
அர்ப்பணம் செய்யாமலிருந்து விட்டார்கள்.
 
விழா மத்தியில்தான், முதலில் செய்ய வேண்டியதை
மறந்தோமே என்று நிர்வாகிகள் வெட்கமும் வருத்தமும்
அடைந்தார்கள். ஒருவர் கூசிக் குறுகிக்கொண்டு,
“ஸபா ஜனப் பத்திரிகை வாசித்துத் தரணும்”
என்று பெரியவர்களிடம் ஈன ஸ்வரத்தில் கூறினார்.
 
அவர்களது கலக்கத்தைப் புரிந்து கொண்டார் அருளாளர்.
 
பலத்த களிப்புச் சிரிப்புடன், “ஸ பாஜனப் பத்திரிகைதானே?
எப்போது தந்தால் என்ன?” என்ற இரண்டே வாக்கியங்களைப்
பெரியவாள் சொன்னதுதான் தாமதம், கூடியிருந்தவரெல்லாம்
புலவர்களானதால் புளகாங்கிதமாகிக் ‘கொல்’லென்று
சிரித்து விட்டார்கள். பாஜனம் என்றால் பக்தி செய்வது என்றும், பங்கு
போட்டுக் கொள்வது என்றும் அர்த்தம். பக்தியோடு
தரும் பத்திரிகை ‘ஸ பாஜன’ப் பத்திரிகை.பக்திக்கு முன்பின்
என்ற காலநிர்ணயம் எதற்கு? இன்னும் ஒரு படி மேலே
போனால்,பெரியவாள் சபையோரை பக்தர் என்றும்
தம்மை பக்திக்குரியவர் என்றும் பிரித்து எண்ணவில்லை.
எல்லோருமே ஒன்றுகூடி ஆனந்தத்தைப் பங்கு போட்டுக்
கொள்பவர்கள் என்றே எண்ணினார். அப்படி பங்குதாரர்களாக
ஒட்டி நிற்கின்றபோது சம்பிரதாய விதிகளுக்கு
அங்கு ஏது இடம்.
 
‘ஸபா ஜன’ப் பத்திரிகையை ‘ஸ பாஜன’ப் பத்திரிகையாக
க்ஷண நேரத்தில் மாற்றி, ஒரு கூட்டத்தின் கூம்பிய
மனத்தையே சடேரென மலர்வித்து மாற்றிய அருமையே அருமை