Home Blog Page 6321

கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..?

10015163_763958673653914_8212014582525214033_n கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..? கியாரண்ட்டி’ என்றால் ‘உத்திரவாதம்’ என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ‘வாரண்ட்டி’ என்பதும் கிட்டத்தட்ட அதே பொருளைக் குறிக்கும் சொல்தான். ஆனால் சட்டத்தின் பார்வையில் ‘கியாரண்டி’ என்றால் ‘பொருளை மாற்றிக் கொடுப்பது,’ வாரண்டி என்றால் ‘சர்வீஸை’க் குறிப்பது. அதாவது, ஒரு பொருள் வாங்கிய பின்னர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அது சரியாக வேலை செய்யாவிட்டால், மாற்றிக் கொடுப்பார்கள். ஆனால் தற்போது, பொருளை மாற்றிக் கொடுப்பதில்லை. ரிப்பேர்தான் செய்து கொடுக்கிறார்கள். சமீபத்தில் ‘லாப்டாப்’ தொடர்பான ஒரு வழக்கு நடந்தது. ஒரு ‘சயன்டிஸ்ட்’ தன்னுடைய புதிய கண்டுபிடிப்பை, ஒரு செமினாரில், ‘லாப்டாப்’ மூலமாக விளக்கிகொண்டிருக்கும் போது, மானிட்டர் வெறுமையாகிவிட்டது. மேற்கொண்டு எப்படி தொடர்வது என்று தெரியாமல், தவித்து, எப்படியோ சமாளித்திருக்கிறார். உடனே, ‘லாப்டாப் வாங்கிய நிறுவனத்தைக் கேட்டதில்’ அவர்கள் கூலாக, ‘நீங்கள் ‘லாப்டாப்பை’ சரியாக ‘பிளக்கில்’ செருகவில்லை. அதனால் அது எங்கள் தவறு இல்லை. இதற்கு நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது’ என்று தட்டிக்கழித்து விட்டார்கள். மேலும் வற்புறுத்தி, ‘கியாரண்ட்டி’ கொடுத்திருப்பதால், மாற்றிக் கொடுக்க வேண்டும் என்றவுடன், நாங்கள் கியாரண்ட்டி கொடுக்கவில்லை. வாரண்ட்டி என்றுதான் ‘கார்டு’ கொடுத்திருக்கிறோம். அதனால் மாற்றிக் கொடுக்க முடியாது. வேண்டுமானால் ரிப்பேர் செய்து கொடுக்கிறோம்’ என்றார்கள் ஆனால் ரிப்பேர் செய்ய முடியாமல், ‘லாப்டாப்’ உபயோகமில்லாமல் போய்விட்டது. ‘கியாரண்ட்டி_வாரண்ட்டியை’ வைத்துக் கொண்டு எப்படி விளையாடிவிட்டார்கள் பாருங்கள்! பொருட்களை விற்பனை செய்யும்போது, உபயோகிக்கும் முறையை விளக்க ‘இன்ஸ்ட்ரக்ஷன் மேனுவல்’ கொடுக்கிறார்கள். ஆனால் அதிலிருந்து நம்மால் எதுவும் புரிந்து கொள்ள முடிவதில்லை. மேலே சொன்ன ‘லாப்டாப்’ விஷயம் போல் ‘மைக்ரோவேவ் அவன்’ பற்றிய ஒரு செய்தி. பெரும்பாலான ‘மைக்ரோ வேவ் அவன்’கள், 15 ஆம்பியர், கரண்டைத் தாங்கும் சுவிட்சுகளில்தான் வேலை செய்யும். பல வீடுகளில் இந்த வசதி இருக்காது. இதனால், சிலர், ‘அவன் வேலை செய்யவில்லையென்று’ பதட்டப்படுவார்கள். வேறு சிலர், ஆர்வக் கோளாறு காரணமாக இயங்கவைக்க வேண்டுமென்று ஏதாவது செய்து, ‘மைக்ரோவேவ் அவனை’ ரிப்பேர் செய்து விடுவார்கள். அப்படி ரிப்பேரானால், இந்த ‘கியாரண்ட்டி வாரண்ட்டி’ வார்த்தைகளைப் போட்டு நம்மைக் குழப்பி, ஏமாற்றிவிடுவார்கள். ‘15 ஆம்ஸ் சுவிட்ச்’ இல்லாதவர்கள், ஒரு ‘சுவிட்ச் கன்வெர்டர்’ வாங்கி பிளக்கில் செருகினால், ‘அவன்’ வேலை செய்யும். இதை அவர்கள் எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதைத் தெளிவாகப் போடுவதில்லை. நுகர்வோர் பாதிப்படையும்போது பாதிப்பு ஏற்படுத்தியது, அரசாங்கமாக இருந்தாலும்கூட நஷ்டஈடு கொடுக்க வேண்டும். ஒரு முறை, ‘டிமாண்ட் டிராஃப்ட்’ சாதாரண தபாலில் ஒருவருக்கு அனுப்பப்பட்டது. பெறுநர், அனுப்புனர் முகவரிகள் மிகச் சரியாக இருந்தும். அனுப்பியவருக்கே திரும்பி வந்துவிட்டது. போஸ்டல் டிபார்ட்மெண்டில் அனுப்புவரின் முகவரியை, பெறுபவரின் முகவரியைவிட பெரிதாக எழுதி இருந்ததால் இந்தத் தவறு நடந்ததாக, நுகர்வோர் நீதிமன்றத்தில், பதில் மனு தாக்கல் செய்தார்கள். ஆனால் இந்தப் பதிலை ஏற்றுக் கொள்ளாத நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்க்கு நஷ்ட ஈடு கொடுக்க உத்தரவிட்டது. ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!’ யார் நுகர்வோர்? தனி ஒருவர் பொருள் வாங்கினால், நுகர்வோராகக் கருதப்பட்டு, அவருக்கான உரிமைகளை, நுகர்வோர் நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்று தீர்வுபெற முடியும். ஆனால் வாங்கும் பொருள் வியாபார நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டால், நுகர்வோர் நீதி மன்றத்தில் தீர்வு பெற முடியாது

உலகின் மிகப் பெரிய இந்து ஆலயம் கம்போடியா நாட்டில் உள்ள “அங்கோர் வாட்” ஆகும்.

உலகின் மிகப் பெரிய இந்து ஆலயம் கம்போடியா நாட்டில் உள்ள “அங்கோர் வாட்” ஆகும். தகவல் –தமிழும் சித்தர்களும் உலகின் மிகப் பெரிய இந்து ஆலயம் கம்போடியா நாட்டில் உள்ள “அங்கோர் வாட்” ஆகும். உலகில் உள்ள வழிபாட்டுத் தலங்களிலேயே மிகப் பெரியதும் இது தான். இதை கட்டியது ஒரு தமிழ் மன்னன் என்பது தான் ஒரு ஆச்சர்யமான தகவல். ஆம் அவர்தான் இரண்டாம் “சூரியவர்மன்”. ஒரு போரின் மூலம் இந்த இடத்தை கைப்பற்றிய சூரியவர்மன் ”இந்த ஆலயத்தை கட்டினார். இந்த கோவிலானது சுமார் 200 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் அகழியால் சூழப்பெற்றாது. இந்த ஆலயத்தின் ஒரு பக்க சுற்று சுவரே சுமார் 3.6 கிலோமீட்டர் நீளம் கொண்டது என்றால் அதன் பிரமாண்டத்தை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். இது வரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றி நான் தெரிவித்திருந்த தகவல்களிலேயே மிக சிறந்த ஒன்று இது! இந்த அதிசயத்தைப் நம் மக்களுடன் பகிர்ந்துக்கொள்ள நான் பெருமையடைகிறேன். ஆம் உலகிலேயே மிகப்பெரிய வழிப்பாட்டு தளம் “கம்போடியா” நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய “அங்கோர் வாட்” கோயில். பன்னிரெண்டாம் நூற்றாண்டில் சூரியவர்மனால் துவங்கப்பட்ட இதன் கட்டிட பணிகளானது 27 வருடங்களில் நிறைவு பெற்றது. கட்டி முடித்த சிறிது காலத்திலேயே இரண்டாம் சூரியவர்மன் இறந்தார். பின்பு ஆறாம் “ஜெயவர்மன்” ஆட்சிக்கு வந்த பிறகு “புத்த” கோயிலாக மாறிய இந்த ஆலயம் இன்று வரை புத்த ஆலயமாகவே விளங்கிவருகிறது. அடர்ந்த காட்டிற்கு நடுவே இந்த கோவில் அமைந்திருப்பதினால் பதினாறாம் நூற்றாண்டுகளில் மக்களால் புறக்கணிக்கப்பட்டு சிதிலமடைந்தது. பிறகு ஒரு போர்சுகீசிய துறவியினால் மீண்டும் வெளியுலகிற்கு வந்தது. இந்த ஆலயத்தை சிறப்பிக்கும் வகையில் கம்போடிய நாட்டு அரசு கம்போடிய தேயக்கொடியில் தேசிய சின்னமாக “அங்கோர் வாட்” ஐ பொறித்துள்ளது. எந்த ஒரு காமிராவிலும் இந்த ஆலயத்தை முழுமையாக படம் பிடிக்க முடியாது. மேலே உள்ள புகைப்படமானது பூமியில் இருந்து 1000 அடி மேலே வானத்தில் இருந்து எடுக்கப்பட்டது. இரண்டாம் “சூர்யவர்மன்” இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது. ஒரு பெருமையான விஷயம் சொல்லாட்டுமா?, வைணவத் தளமான இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே பெரியது!! இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), இதன் சுற்றி சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள் !!! இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட “சூர்யவர்மன்” இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது .இதன் பின்னர் ஆறாம் “ஜெயவர்மன்” கைக்கு மாறியது .பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக “புத்த” வழிபாடு தளமாக மாற்றப்பட்டு. இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது!. பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது , அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதலமடயத் தொடங்கியது. பின்னர் 1586 ஆம் ஆண்டு “António da Madalena” என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது, அதை அவர் “is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of.” என்று கூறியுள்ளார். பின்னர் Henri Mouhot என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெளியிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது. அவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged என்று குறிப்பிட்டுள்ளார்!! பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது!! இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார். ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இதில் இன்னொரு சிறப்பு “கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் “தேசிய சின்னமாக”ஆட்சிப் பொறுப்பு பொறிக்கப்பட்டுள்ளது!. இதை பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம், கடைசியாக ஒன்று இந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை!! வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்தில் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது!! இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை! குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே!! இன்றும் தாய்லாந்தில் மன்னர், ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்கு முன் நமது திருப்பாவையை தாம் பாராயணம் செய்து பின்னர் பதவி ஏற்பதுதான் வழக்கத்தில் உள்ளது. தகவல் –தமிழும் சித்தர்களும்

பாட்டி வைத்தியம்.

சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

  • அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

  • விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

  • கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

  • சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

  • நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

  • வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

  • பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

  • புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.

  • பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

தேனின் பல்வேறு மருத்துவ குணங்கள் :-

தேனின் பல்வேறு மருத்துவ குணங்கள் :- 01 உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும், தேனும் வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல், மெலியும், ஊளைச் சதை குறையும் உடல் உறுதி அடையும். 02 தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல் ஜலதோஷம், தலை வலி குணமாகும். 03 தேனுடன் வெங்காயச்சாறு கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசம் அடையும். 04 தேனும், முட்டையும், பாலும் கலந்து சாப்பிட்டுவந்தால் ஆஸ்துமா உபாதையிலிருந்து தப்பலாம். 05 இருமல், சளித் தொல்லை நுரையீரல் தொடர்பான நோய் எது இருந்தாலும் பார்லிக் கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்து சாப்பிட, இருமல் மட்டுப்படும். சளித் தொல்லை குறையும். 06 தேனையும் மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும். 07 உடம்பில் இரத்தக் குறைவு அல்லது சோகை நோய் இருந்தால் தேனும், பாலும் சாப்பிட்டு வந்தால் சோகை நோய் நீங்கும். 08 தேனுடன் சுண்ணாம்பைக் கலந்து, நன்றாகக் குழைத்து பழுக்காத கட்டிகள் மேல் பூச கட்டிகள் பழுக்கும். 09 மீன் எண்ணெயோடு தேனைக் கலந்து உண்டு வந்தால், ஆறாத புண்கள் ஆறிவிடும். 10 கருஞ்சீரகத்தை நீர் விட்டுக்காய்ச்சி அதில் தேன் கலந்து சாப்பிட, கீழ் வாதம் போகும். 11 வயிற்றுவலி ஏற்பட்டவர்களுக்குத் தொப்புளைச் சுற்றிலும் தேன் தடவினால் வலி நீங்கும். 12 தேனோடு பாலோ, எலுமிச்சம் பழச்சாறோ கலந்து சாப்பிட பித்த நீர்த் தொந்தரவுகள் குறையும். கல்லீரல் வலுவடையும். 13 அரை அவுன்ஸ் தேனுடன், அரை அவுன்ஸ் இஞ்சிச்சாறு கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வர, இரத்த சுத்தியும், இரத்த விருத்தியும் ஏற்படும். நரம்புத் தளர்ச்சிகளும் நீங்கும். 14 அல்சர் நோய்க்கு சாப்பாட்டிற்கு முன் இரண்டு கரண்டித் தேனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர, குணமாகும். 15 முருங்கைக்காய்ச் சாறுடன் சமளவு தேன் கலந்து பருகினால் நீர்க்கோவை நீங்கும். 16 தேன் மிகச் சிறந்த உணவுப் பொருளாகும். தேன் மூலம் எல்லாப் பிணிகளையும் நீக்கமுடியும். அதிகாலையில் வெறும் வயிற்றில் தேனை நாவால் தொட்டுச் சாப்பிட்டு வந்தால் எந்த வியாதியும் நமக்கு வராது. ஆனால், தேன் சுத்தமான தேனாக இருக்கவேண்டும். 17 ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து, பின்பு அதில் அரை எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும். நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண் காணாத இடத்திற்கு ஓடிவிடும். குடல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கிவிடும். குளிர்ச்சியால் ஏற்படும் எல்லா வியாதிகளையும் உடல் எதிர்த்து நின்று தடுத்துவிடும். இதய பாதிப்புகள் நீங்கி இதயம் பலம் பெறும். புதிய இரத்தம் உடம்பில் பாய்ந்தோடும். 18 அதிகாலையிலும், படுக்கச் செல்வதற்கு முன்பும் பருகவேண்டும். 19 நெல்லிக்காய்களைத் துண்டு துண்டாக்கி தேன், ஏலக்காய், ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்கவேண்டும். பின்பு ஒரு ஸ்பூன் வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகிவிடும். 20 என்றும் இளமையுடன் இருக்க வேண்டு-மென விரும்புவோர் தினமும் தேனை அருந்தவேண்டும். நாற்பது வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தினமும் தேனை அருந்திவர வேண்டும்

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு

Fever Visit photos.2(1) திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 9 குழந்தைகள் உள்ளிட்ட 65 நோயாளிகள்; அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் ஒருங்கிணைந்த அவசர கால தாய்சேய் சிகிச்சை பிரிவு உள்ளிட்ட வார்டுகளை அமைச்சர் பார்வையிட்டு அங்கு நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார். மருத்துவ மனை வளாகத்தில் ரூபாய் 7.15 கோடி மதிப்பில் செவிலியர் தங்கும் விடுதிக்கான கட்டிடப்பணிகளை அமைச்சர் பார்வையிட்டார். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் காய்சலுக்கு என்று தனி சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். அமைச்சர் ஆய்வின் போது சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் கருணாகரன், தமிழ்நாடு மருத்துவ பணிகள் இயக்குநர் சந்திரநாதன், மருத்துவ கல்வி இயக்குநர் கீதாலெட்சுமி, ஆரம்ப சுகாதார நிலைய இயக்குநர் குழந்தைசாமி, மருத்துவ கல்லூரி முதல்வர் துளசிராம் உடன் இருந்தனர்.

‘‘இந்து, இஸ்லாமியர் மத்தியிலும் மதப் பிரசங்கம் செய்வேன்’’: ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர்

uma-shankar-iasசென்னை: அரசின் உத்தரவுப் படி மதப் பிரசங்கங்களை ரத்து செய்துவிட்டேன்; ஆனால் இது என் தனிப்பட்ட உரிமை, இனி இந்துக்கள், இஸ்லாமியர்கள் மத்தியிலும் மதப் பிரசங்கங்கள் செய்வேன் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் கூறியுள்ளார். அங்கீகரிக்கப்படாத கிறிஸ்துவ சபைகளில் சென்று மத பிரசாரம் செய்து வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி உமா சங்கருக்கு தடை விதித்து தமிழக தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்தார். அதில், ‘‘நீங்கள் மத பிரசாரம் செய்த இடத்தில், போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்படும் அளவுக்கு அமைதி குலைவு ஏற்பட்டது. எனவே நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஜனவரி 24, 25, 26-ந் தேதிகளில் பிரசாரம் செய்வதற்கு நீங்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அங்கு பிரசாரம் அல்லது பிரசங்கத்தை நீங்கள் மேற்கொள்ளக்கூடாது என்று உத்தரவிடுகிறேன்’’ என்று கூறியிருந்தார். இதை அடுத்து, தாம் அந்த பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை என்றும், ரத்து செய்துவிட்டதாகவும் உமாசங்கர் கூறியுள்ளார். இது குறித்து உமா சங்கர் கூறிய கருத்து வருமாறு:- இறைப்பணி குறித்து இயேசு பிறப்பித்துள்ள கட்டளை, இந்த அரசு பிறப்பித்துள்ள எல்லா உத்தரவுகளுக்கும் மேலானது. எனவே இறைப்பணியை செய்துதான் ஆக வேண்டும். ஆனால் சட்டத்துக்கு புறம்பாக அவர்கள் உத்தரவு பிறப்பித்திருந்தாலும், இப்போதைக்கு அரசு உத்தரவுக்கு மரியாதை கொடுத்து எனது பிரசங்கங்களை ரத்து செய்திருக்கிறேன். அதுவும் அரசு உத்தரவுகளுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்று இயேசு கூறியுள்ள கட்டளையின் அடிப்படையில் இதை செய்துள்ளேன். வரும் மாதங்களில் எனக்கு கூட்டங்களில் பேச அழைப்புகள் உள்ளன. தனிப்பட்ட நபர் என்ற முறையில், சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் நான் எங்கு செல்கிறேன், ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு மேல் நான் என்ன செய்கிறேன் என்பதெல்லாம் எனக்கு இருக்கும் தனிப்பட்ட உரிமை. எனது உயிரை போக்கும் சூழ்நிலை வந்தபோது என்னை ‘வா மகனே’ என்று அழைத்தவர் இயேசு. எனவே அவரை நான் எனது கடவுளாக ஏற்றுக்கொண்டேன். என்னை யாரும் மதம் மாற்றவில்லை. எனவே மத மாற்றம் என்ற குற்றச்சாட்டு போலியானதுதான். நான் மதத்தை பற்றி பிரசாரம் செய்யவில்லை. எனக்கு மறுவாழ்வு கொடுத்த இயேசு பற்றித்தான் பேசுகிறேன். அப்படி நான் கூறும்போது மக்கள் பலருக்கு வியாதிகள் குணமாகின்றன. எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள், ஆஸ்துமா இழுப்பு நோய் மேஜிக் போல குணமாகின்றன. பிள்ளையற்றவர்களுக்கு பிள்ளை கிடைக்கிறது. இதற்கு வீடியோ ஆதாரங்கள் உள்ளன. கோ-ஆப்டெக்சில் 3 ஆண்டுகளுக்கு முன்பு கண் தெரியாமல் இருந்த ஒருவருக்கு ஜெபித்த போது உடனே அது குணமாகிவிட்டது. நான் மத மாற்றம் செய்யவில்லை, மத பிரசாரமும் செய்யவில்லை. நான் இயேசுவை பற்றி மட்டுமே பேசுகிறேன். 99.99 சதவீதம் கிறிஸ்தவர்கள் மத்தியில்தான் நான் பேசுகிறேன். நான் இனிமேல் இந்துக்கள், இஸ்லாமியர்களிடம் பேசுவேன். அதுவும் எனது உரிமை. ஒருவர்கூட கேள்வி கேட்க முடியாது. -என்று அவர் கூறினார்.

காதல் என்றால் என்ன? கல்யாணம் என்றால் என்ன?

காதல் என்றால் என்ன? கல்யாணம் என்றால் என்ன? ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான். அதற்கு அந்த ஞானி, “அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது.” என்றார். கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, “எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? ” என்று கேட்டார். சீடன் சொன்னான், “குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது.” புன்முறுவலோடு ஞானி சொன்னார், “இது தான் காதல்!”. பின்னர் ஞானி, “சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது.” சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், “இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா? “சீடன் சொன்னான், “இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை”. இப்போது ஞானி சொன்னார், “இது தான் திருமணம்!”

காஞ்சி மகாசுவாமிகள் பற்றி சுத்தானந்த பாரதியார்

காஞ்சி மகாசுவாமிகள் பற்றி சுத்தானந்த பாரதியார்734324_514749501889171_935875765_n காஞ்சி மகான் பற்றி இவர் எழுதியதைப் பார்ப்போம். ‘இவர் துறவுலகத்துக்கே தூய ஒளியாகத் துலங்குகிறார். அவரை நான் ஐந்து முறை தரிசித்துள்ளேன். 1922இல் அவர் சிவகங்கைக்கு வந்தபோது ராஜா சத்திரத்தில் தங்கியிருந்தார். நானும் என் தமயனாரும் சென்று தரிசித்தோம். எப்போதும் அவர் மகா தேஜஸ்வியாகத் துலங்கினார். அவர் பேச்சு மிக இனியது. அவர் குறித்து நான் பாடினேன். “தேனினும் இனிய சொல்லான், தீச்சுடர் மேனிகொண்டான் ஊனுயிர்க்குயிரதான ஒன்றினைக் கலந்து நின்றான் ஏனினிக் கவலை நெஞ்சே; இன்றுனக் கருள்செய் தானிஞ் ஞானவான் – காமகோடி நாதனை நம்புவோமே” அவருடைய திருக்கரத்தால் தேங்காயும் கனிகளும் திருநீறும் அளித்தார். மறுமுறை நான் திருப்பெருந்துறைக் கோயில் குறுந்தமரத்தடியே நிஷ்டைகூடி மாணிக்கப்பாட்டு எழுதிக் கொண்டிருந்தேன். அப்போது அடியார் சூழ ஆசாரியார் வந்தார். ஒரு பாட்டுப் படித்தேன். என்னை ஆசீர்வதித்தார். ஒரு வாரம் அவருடனே இருந்தேன். பிறகு காஞ்சி, சென்னை, திருப்பதி மூன்றிடங்களுக்குத் தலைமை வகித்து அவரைப் பற்றிப் பேசினேன்.

“பெரியவா இன்னும் வரலியே!”

“பெரியவா இன்னும் வரலியே!” (இது ஒரு மறுபதிவு)10516784_868010533244113_998432334767873536_n மிகவும் வயஸான ஒரு பாட்டிக்கு, தன் வீட்டிலும் ஹோமம் செய்ய வேண்டும் என்று மிகுந்த ஆசை. பெரியவாளிடம் அளவு கடந்த பக்தி. அப்போதெல்லாம் யாராவது தங்கள் க்ருஹத்திற்கு பெரியவாளை அழைத்தால், பெரியவாளின் திருவடிகள் அவ்வீடுகளில் கட்டாயம் பதியும். இந்தப் பாட்டியும் ஹோமத்துக்கு பெரியவாளை அழைக்க வேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்டாள். பெரியவாளிடம் வேண்டிக்கொண்டதும், “அதுக்கென்ன? வரேனே” என்று சொல்லிவிட்டார். பாட்டிக்கோ பரம சந்தோஷம்! ஹோமத்துக்கு பார்த்துப் பார்த்து ஏற்பாடு பண்ணினாள். ஆயிற்று. ஹோமம் ஆரம்பித்தாகிவிட்டது. “பெரியவா இன்னும் வரலியே!..” பாட்டி வாசலுக்கும் உள்ளுக்கும் நடையாய் நடந்து கொண்டிருந்தாள். பூர்ணாஹுதியைக் கூட கொஞ்சம் பொறுத்திருந்து பார்த்துவிட்டு செய்யலாம் என்று வேத ப்ராஹ்மணர்கள் சொன்னார்கள். அப்போதும் கூட பூர்ணாஹுதி குடுக்கும் வரை பெரியவா வரவேயில்லை. பாட்டிக்கு ஒரே சோகம். ஹோமப்ரஸாதம் எடுத்துக் கொண்டு பெரியவாளை தர்சனம் பண்ணச் சென்றாள். “பெரியவா ஹோமத்துக்கு வர்றதா சொன்னேள். ஆனா, வராம இருந்துட்டேளே!” தன் ஆதங்கத்தை பெரியவாளிடம் புலம்பினாள். அழகாக சிரித்துக் கொண்டே அவள் சொல்வதைக் கேட்டார். “நா, ஹோமத்துக்கு வரலேன்னு யார் சொன்னா? வந்தேனே!..” பாட்டிக்கு ஒண்ணும் புரியவில்லை…………………. வந்தாரா? “என்னது? பெரியவா வந்தேளா? நேக்கு ஒண்ணும் புரியலே…” “ஹோமத்தை போட்டோ எடுத்தியா?” “எடுத்தா…..” “அதை ப்ரிண்ட் போட்டுப் பாரு” பாட்டி உடனேயே போட்டோ எடுத்தவனை அதை ப்ரிண்ட் போடத் துரத்தினாள். வந்ததும் அவைகளைப் பார்த்தபோது, அதில் ஒன்று பூர்ணாஹுதி நடந்தபோது எடுக்கப்பட்ட படம்.. …. அந்த அக்னி ஜ்வாலை ஒரு ஆள் உயரத்திற்கு எழும்பி எரிகிறது…..அந்த ஜ்வாலை ஸாக்ஷாத் பெரியவா தண்டத்துடன் நிற்பது போலவே எரிந்து கொண்டிருந்தது! அந்த போட்டோ இன்றும் சேலத்தில் உள்ள ஸ்ரீ பெரியவா க்ருஹத்தில் உள்ளது. “நா, ஹோமத்துக்கு வரலேன்னு யார் சொன்னா? வந்தேனே!..” பெரியவா சொன்னது எத்தனை சத்யம்!! பஞ்ச பூதங்களையும் படைத்தவன் எவனோ, அவனே இங்கே அக்னி ஸ்வரூபமாக ப்ரத்யக்ஷமாக நிற்கிறான்!! இதில் நம்முடைய பக்தியை விட, மஹான்களின் பரம கருணை, அவ்யாஜ கருணை ஒன்றினால் மட்டுமே இம்மாதிரி நடக்கும்

ஓடும் ரயில் முன் செல்ஃபி எடுக்க முயன்ற 3 மாணவர்கள் ரயில் மோதி பலி

ஆக்ரா: உத்தரப் பிரதேசத்தில் ஓடும் ரயில் முன் நின்றபடி செல்ஃபி புகைப்படம் எடுக்க முயன்ற 3 கல்லூரி மாணவர்கள் ரயில் மோதி பலியாயினர். தில்லியை அடுத்த மொராதாபாத், பரீதாபாத் ஆகிய பகுதிகளில் இருந்து குடியரசு தின விடுமுறையையொட்டி தாஜ்மஹாலை சுற்றிப் பார்ப்பதற்காக கல்லூரி மாணவர்கள் யாகூப், இக்பால், அப்சல் ஆகியோர் சென்றனர். மதுரா அருகே கோசிகாலா என்ற இடத்தில் ரயில்வே லைனில் ஓடும் ரயிலின் முன்பாக நின்று கொண்டு செல்ஃபி படம் எடுக்க விரும்பியுள்ளனர். அப்போது, காலை 9.30 மணி அளவில் 3 பேர் மீதும் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து கோசி போலீசார் கூறுகையில், 4 இளைஞர்கள் ஓடும் ரயிலின் முன்பாக நின்று செல்ஃபி எடுக்க முயன்றுள்ளனர். இதில் 3 பேர் ரயில் மோதி உயிரிழந்தனர். அனீஸ் என்ற வாலிபர் உயிர் தப்பினார் என்று தெரிவித்தனர்.