Home Blog Page 6320

தில்லியில் பத்திரிகையாளர் சந்திப்பை கண்காணிக்கிறது தேர்தல் ஆணையம்

புது தில்லி: தில்லி சட்டப் பேரவைக்கான தேர்தல் பிப்., 7ல் நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு தில்லியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பல்வேறு கட்சித் தலைவர்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் தில்லி பகுதியில் நடத்தப்படும் பத்திரிகையாளர்கள் சந்திப்பை கண்காணிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. பத்திரிகையாளர் சந்திப்புகளில் பங்கேற்கும் தேர்தல் ஆணைய அலுவலர்கள், அங்கே ஏதேனும் விதிமுறைகள் மீறப்படுகிறதா என்பதை கண்காணிக்க உத்தரவிடப் பட்டுள்ளது.. தில்லியில் நடைபெற்று வரும் தேர்தல் பொதுக்கூட்டங்கள், பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தேர்தலைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஆணைய அதிகாரிகள் ஏற்கெனவே உன்னிப்பாக இருந்து வருகின்றனர். அங்கே ஏதும் விதிமீறல் இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணைய முடிவு செய்துள்ளது. இந்நிலையில், தில்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த காங்., கட்சியின் பொதுச் செயலாளர் அஜய் மக்கான் மேற்குறிப்பிட்ட தகவல்களை தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தம்மிடம் சொன்னதாக தெரிவித்தார்.

ஆண்களுக்கு ஜீவனாம்சம்

முன்பு அத்தனை சதவீத தம்பதியர்களிலும் ஆண் பொருள் ஈட்டுவதும் பெண் பிள்ளை பெற்று வளர்ப்பதும் குடும்பப்பொறுப்புகளை ஏற்பதும் என இருந்தது. திருமண விலக்கு பெற்ற ஒரு பெண் மறு திருமணம் என்பது இல்லவே இல்லாதிருந்தது. இந்நிலையில் விவாகரத்து என வந்தால், அதன் பின் ஒருவர் புதிதாக ஒரு தொழிலை ஆரம்பிப்பதும் அதில் முன்பு இருந்த பொருளாதாரத் தரத்தில் குடும்ப வாழ்வை தொடர்வது இயலாத காரியம். ஏனெனில், பிள்ளை பெறுதல் வளர்த்தல் என இருந்த காலத்தில் அவளது வெளி வேலை/அனுபவம் என்பது “இல்லை”எனும் கட்டத்தில் தேங்கி நிற்கிறது. அது போக, கைக்குழந்தை இருந்தால் அவர்களை வைத்துக் கொண்டு வெளி வேலைக்குப் போவதும் இயலாது. ஆகவேதான் விவாகரத்தின் போது பெண்ணுக்கு ஆண் ஜீவனாம்சம் தருவது எனும் நிலைப்பாடு தோன்றியது. அதுவும் அந்தப் பெண் மறுவிவாகம் செய்து கொண்டால் அப்படிச் செய்யும் வரை மட்டுமே ஜீவனாம்சம் கிடைக்கும். இதனை சட்டம் மறுவிவாகத்தைத் தடுப்பது போலத் தோன்றினாலும், ஜீவனாம்சத்தின் தேவை பெண்ணின் மறு விவாகத்தோடு முடிவடைந்து விடுவதால் அதன் பின் ஜீவனாம்சம் கொடுக்கத் தேவை இல்லை. இதே நிலைதான் ஆண் ஜிவனாம்சம் பெறும் நிலையிலும். ஜிவனாம்சம் பெறுபவர் மறு விவாகம் செய்து கொண்ட பிறகும் ஜிவனாம்சம் பெற முடியாது. ஏனெனில் அதன் தேவை முடிவடைந்து விடுகிறது. சமீப காலங்களாக வீட்டுப்பொறுப்பை ஏற்று குழந்தைகளைப் பார்த்துக் கொண்டு வீட்டில் இருக்கும் ஆண்கள் வர ஆரம்பித்திருப்பதால், அதே போல அந்த காலகட்டங்களில் அந்த ஆணுக்கு அவனது வெளி வேலையில் கிடைத்திருக்கக்கூடிய எக்ஸ்பீரியன்ஸ் பீரியட் இல்லாமல் ஆகிவிடுகிறது. அதனால் பெண் பொருளீட்டி, ஆண் குடும்பப்பொறுப்ப்பை ஏற்றிருக்கும் தம்பதியரிடையே விவாகரத்து என வருமேயானால், அந்தப் பெண், அந்த ஆணுக்கு ஜீவனாம்சம் தர வேண்டும். அதே போல, ஆண் வேலைக்குப் போகிறான். பெண் குடும்பப்பொறுப்பில் இருந்திருக்கிறாள். இநிநிலையில் ஜிவனாம்சம் பெண்ணுக்கு அளிக்கப்பட்டு வந்தாலும், எதோ ஒரு கட்டத்தில் பெண்ணும் நிறையவே சம்பாதிக்க ஆரம்பிக்கிறாள். இந்த கட்டத்தில் ஆண் அதை நிரூபித்து ஜீவனாம்சம் தருவதை நிறுத்திக் கொள்ளலாம். அதே போல, பெண் சுமாராகவே சம்பாதித்துக் கொண்டிருந்தாலும், அந்த ஆண் விபத்து, நோய் போன்ற காரணங்களால் முன்பைப் போல பொருள் ஈட்ட இயலாமல் போனால் அவன் பெண்ணிடமிருந்து ஜிவனாம்சம் பெறத் தகுதியானவனாகிறான். குழந்தை எவரிடம் இருக்கிறதோ அவர் அனேக சமயங்களில் பொருளீட்ட இயலாதவராக ஆகும்பட்சத்தில் நீதிமன்றமும் அவருக்கே முன்னுரிமை வழங்குமல்லவா? அதனாலும் கூட குழந்தைகள் தன்னிடம் இருக்க வேண்டும் எனச் சொல்வதும், அடுத்தவருக்கு ஜிவனாம்சம் தர விரும்பாததால், தன் வேலையை விட்டுவிடுவதும், அல்லது வியாபாரம்படுத்துவிட்டது எனப் பொய்க்கணக்குக் காட்டுவதும். மொத்த சொத்துக்களை வேறு உறவினர் பெயரில் மாற்றுவதும் நடக்கிறது. அதனாலேயே நீதிமன்றங்கள் ஜிவனாம்ஸ வழக்குகளில் ஜிவனாம்சம் தர வேண்டியவர்/பெறவேண்டியவர் சமீபத்தில் சொத்து மாற்றம் ஏதும் செய்திருக்கிறாரா என்பதையும் கவனத்தில் கொள்கிறது. பெண் ஜீவனாம்சம் தருவதைப் பற்றி முதன்முதலில் பேசியதே (women’s charter) பெண்களின் உரிமைகளுக்கான சட்டதிட்டங்களிப் பரிந்துறைக்கும் ஒரு அமைப்பு சமீபத்தில் இது பற்றிப் பேசி இருந்தது. ஆணுக்கும் அவன் பொருளீட்ட இயலா நிலையில் இருந்தால் மனைவி தரச்சொல்லுதல் சரி என்றாலும், இது வரை குடும்பம் என்பதில் ஆண் பெண் இருவரின் சம பங்கு பற்றி இதுவரை எவரும் பேசியதாகத் தெரியவில்லை. ஒரு தம்பதிக்குக் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தை இருவருடையதும்தான். ஆணின் குழந்தையும்தான் பெண்ணின் குழந்தையும்தான். விவாகரத்து என வந்தால் அவர்களில் இருவரில் ஒருவர் பொறுப்பில் குழந்தை ஒப்படைக்கப்படும். நீதிமன்றம் இருவரில் எவர் குழந்தையைப் பொறுப்போடு பார்த்துக்கொள்வார்கள் என கணித்தே குழந்தையை ஒப்ப்படைக்கும். இங்கே குழந்தையின் நன்மை மட்டுமே நீதிமன்றத்தால் கவனத்தில் கொள்ளப்படும். அது போலவே அந்தக் குடும்பம் சம்பாதிக்கும் தொகை முழுமையுமே அவர்கள் இருவருடையதும் ஆகும். பெண் சம்பாதித்தாலும் சரி ஆண் சம்பாதித்தாலும் சரி. அவர்கள் இருவரின் மொத்த வருமானமும் சொத்துக்களும் ஒன்றாகக் கணக்கிடப்பட்டு, அவை அதன் பின் இரண்டாக்கப்பட்டு, பின் இருவராலும் பகிரப்பட வேண்டும். உதாரணமாக, ஒருவர் 8000 சம்பாத்தியமும், மற்றவர் 12000 சம்பாத்தியமும் சம்பாதித்தாலும் அது பொதுவாக்கப்பட்டு ஆளுக்குப் 10000 என்றாக்கப்பட வேண்டும். அதன் பின், அந்தத் தொகையிலிருந்து குழந்தைக்கு ஆகும் தொகை இருவராலும் சரி பாதியாகப் பகிரப்பட வேண்டும். இது முதல் கட்டம் மட்டுமே.. இவை எல்லாம் குழந்தைகள் இருக்கும்பட்சத்தில்.. ஆனால் குழந்தைபெறுவதற்கு முன்னமே விவாகரத்தானால், பொருளாதாரத்தில் உயர்வில் இருப்பவர் தாழ்வில் இருப்ப்பவருக்கு ஜிவனாம்ஸம் தர வேண்டும் என இருந்தாலும், இன்றைய சமூகத்தில் விவாகரத்தான பெண் சமூகத்தில் விவாகரத்தான ஆணைப் போலவே சம அந்தஸ்தைப் பெற வேண்டும் என்பதற்கான சமூக மாற்றம் வரும் வரை பெண்ணின் ஜீவனாம்சம் இருக்கும். இப்போது மாறிவரும் கால்ச்சூழலில் ஆணும், குடும்பப்பொறுப்பு காரணமாக வெளி வேலைக்குச் செல்லாமல் இருக்கும் வாழ்வு முறையைத் தேர்ந்தெடுப்பதும் அதிகரித்துவருவதால், பெண் தர வேண்டிய ஜீவனாம்சக்கணக்கில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும். ஹன்ஸா (தினமலர் நாளிதழில் வெளியானது…)

மதச் சார்பின்மை, சோசலிசம் குறித்த விவாதம் தேவையற்றது: ராமதாஸ்

சென்னை: மதச் சார்பின்மை, சோசலிசம் குறித்த விவாதம் தேவையற்றது என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் இன்று அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: ramadossகுடியரசு நாளையொட்டி மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட விளம்பரத்தின் பின்னணியில் இடம் பெற்றிருந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சோசலிச, மதச்சார்பற்ற என்ற வார்த்தைகள் விடுபட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையில் இந்த இரு வார்த்தைகளும் 1976 ஆம் ஆண்டில் தான் சேர்க்கப்பட்டன என்பதால், அந்த விளம்பரத்தைத் தயாரித்தவர் தவறுதலாக பழைய முகவுரையை பயன்படுத்தியிருக்கலாம் என்ற ஐயம் தான் முதலில் ஏற்பட்டது. ஆனால், சோசலிசம், மதச்சார்பின்மை ஆகிய இரு வார்த்தைகளையும் இந்திய அரசியலமைப்பு சட்டத்திலிருந்து அடியோடு நீக்க வேண்டும் என்று சிவசேனாக் கட்சி வலியுறுத்தியிருப்பதும், இது குறித்து தேசிய அளவில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று தொலைத்தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூயிருப்பதும் அதிர்ச்சி அளிக்கிறது. அதுமட்டுமின்றி, இனிவரும் காலங்களில் அலுவலகப் பயன்பாட்டிற்காக இந்த இரு வார்த்தைகளும் இல்லாத அரசியலமைப்புச் சட்டத்தின் பழைய முகவுரையே பயன்படுத்தப்படும்; இதுதான் மத்திய அரசின் இப்போதையத் திட்டம் என்றும் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியிருப்பதும் சரியல்ல. இவற்றையெல்லாம் பார்க்கும்போது இப்படி ஒரு சர்ச்சை எழ வேண்டும் என்பதற்காக திட்டமிட்டே குடியரசு நாளில் இப்படி ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டதோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. மதச் சார்பின்மையும், சோசலிசமும் இந்தியாவின் அடையாளங்களாக திகழ்கின்றன; இனியும் அவ்வாறே திகழ வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையில் இந்த இரு வார்த்தைகளும் இப்போது எப்படி இடம் பெற்றுள்ளனவோ, அதேபோல் தொடர்ந்து நீடிக்க வேண்டும். அதை மாற்ற வேண்டும் என்ற எண்ணமே இந்தியாவில் யாருக்கும் எழக்கூடாது; இதுகுறித்த விவாதங்களும் தேவையற்றவை. மக்களவைத் தேர்தலின் போது நரேந்திர மோடியை வளர்ச்சியின் அடையாளமாகத் தான் மக்கள் பார்த்தார்கள். அதனால் தான் பாரதிய ஜனதாக் கட்சியை தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்த்தினார்கள். எனவே, இதுபோன்ற தேவையற்ற சர்ச்சைகள் எழுவதை தவிர்த்து வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

நெப்போலியன் முன்னிலையில் பாஜகவில் இணைந்த திமுக, காங்கிரஸ் கட்சியினர்

சென்னை: நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியன் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் மற்றும் திமுகவினர் இன்று பாஜகவில் இணைந்தனர். வட சென்னை முன்னாள் மாவட்ட தலைவர் நிர்மலா வெங்கடேசன் தலைமையில் அவர்கள் இணைந்தனர். nepoleon_bjp2 முன்னாள் மத்திய அமைச்சரான நெப்போலியன் கடந்த டிசம்பர் 21-ம் தேதி திமுகவிலிருந்து விலகி, பாஜக தலைவர் அமிதா ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். கட்சியில் சேர்ந்த பிறகு, தமிழகத்தில் அக்கட்சியை வலுவாக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கினார். தனது ரசிகர் மன்றங்களைச் சேர்ந்த அனைத்து நிர்வாகிகளையும் வரவழைத்து, ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். தன் ரசிகர்கள் அனைவரையும் பாஜகவில் இணைய வைத்தார். அத்துடன் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் உறுப்பினர்களை உடனடியாகச் சேர்க்கும் பணியில் தீவிரமாக இறங்கினார். அவரது இந்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது. ஆயிரக்கணக்கான பிற கட்சித் தொண்டர்கள் நெப்போலியனைச் சந்தித்து பாஜகவில் இணைந்து வருகின்றனர். இன்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 100-க்கும் அதிகமான பெண் தொண்டர்கள் நெப்போலியன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். வட சென்னை மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவரும், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் இணைச் செயலருமான நிர்மலா வெங்கடேசன் தலைமையில் அவர்கள் இன்று கட்சியில் இணைந்தனர். இவர்களைத் தவிர சென்னை முகப்பேர் 89வது வட்ட திமுக அவைத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் 25 திமுக தொண்டர்கள் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். nepoleon_bjp தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை பேச்சாளர் கவிஞர் பூவை ரவி பாரதியும் நெப்போலியன் முன்னிலையில் பாஜகவில் இன்று இணைந்தார். இந்த நிகழ்ச்சியின் போது தமிழக பாஜக பொதுச் செயலாளர் மோகன் ராஜுலு, மாநில அமைப்பு சாரா அணி தலைவர் எம்என் ராஜா, வட சென்னை மாவட்டத் தலைவர் ஆர் பிரகா், வட சென்னை மாவட்ட அமைப்புச் செயலாளர் எஸ் செல்வநாதன், ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

திருவரங்கம் இடைத் தேர்தல்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி புறக்கணிக்கிறது!

thol_thirumavalavan திருவரங்கம் இடைத் தேர்தலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி புறக்கணிக்கிறது என்றும், இடைத் தேர்தலுக்கென புதிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வரையறுக்க வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொல்.திருமாவளவன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், திருவரங்கம் சட்டப் பேரவை இடைத் தேர்தல் சனநாயக முறையில் நடைபெறுவதற்கு வாய்ப்பில்லை. பொதுவாக, இடைத் தேர்தல்களில் ஆளும் கட்சியின் ஆக்கிரமிப்பும் ஆதிக்கமும் மேலோங்குவதால் வாக்காளர்கள் வந்து சுதந்திரமாக வாக்களிக்க இயலாத நிலை உருவாகிறது. இடைத் தேர்தல் என்றாலே ஆளும் கட்சியின் வெளிப்படையான அதிகார துஷ்பிரயோகங்களை எதிர்கொள்ள முடியாத அளவுக்கு எதிர்க்கட்சியினர் அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அண்மையில், ஓய்வு பெற்ற தலைமை தேர்தல் அதிகாரி சம்பத் அவர்கள், தமிழகத்தில் நடைபெறும் தேர்தல் முறைகேடுகள் குறித்த தமது வேதனையை வெளிப்படுத்தினார். அதாவது, இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழகத்தில் மட்டும் தேர்தல் காலத்தில் நிலவும் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்த இயலவில்லை என்று வருந்தி இருக்கிறார். வாக்காளர்களைச் சுதந்திரமாக வாக்களிக்க விடாமல் அவர்களை மொத்தமாக விலைபேசும் அவலம் தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது என்று அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். இது சனநாயகத்திற்கும் தமிழ்நாட்டுக்கும் நேர்ந்துள்ள பெரும் தலைகுனிவாகும். இந்நிலையில், திருவரங்கம் தொகுதி சட்டப்பேரவை இடைத் தேர்தலை ஒரு முன்மாதிரியாகக் கொண்டு அகில இந்திய அளவில் இடைத் தேர்தல்களுக்கு என புதிய விதிமுறைகளை வகுத்திட வேண்டுமென தேர்தல் ஆணைத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. குறிப்பாக, இடைத் தேர்தலின்போது அமைச்சர்கள் பரப்புரை செய்வதைத் தடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும். ஆளும் கட்சி எதுவாக இருந்தாலும் இடைத் தேர்தலில் வெற்றி வெற்றே தீர வேண்டும் என்னும் அடிப்படையில், அரசு எந்திரங்களை முழு வேகத்தில் ஈடுபடுத்துவது தமிழகத்தில் வழக்கமான நடைமுறையாக இருக்கிறது. இந்நிலையில், சனநாயக்தைக் கேலிக் கூத்தாக்கும் வகையில் நடைபெறும் இடைத் தேர்தலில் பங்கேற்பது பொருளற்றதாகும். எனவே, இடைத் தேர்தலுக்கென புதிய விதிமுறைகளை வரையறுக்க வலியுறுத்திடும் வகையிலும், இடைத் தேர்தலின்போது ஆளும் கட்சியினர் மேற்கொள்ளும் மேலாதிக்கப் போக்குகளை அம்பலப்படுத்தும் வகையிலும் திருவரங்கம் தொகுதி சட்டப் பேரவை இடைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்கேற்காமல் புறக்கணிப்பது என முடிவு செய்கிறது.

  • என்று தெரிவித்துள்ளார்.

ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல்: யாருக்கும் ஆதரவில்லை என மமக அறிவிப்பு

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என மனித நேய மக்கள் கட்சி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் திருவரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் எத்தகைய நிலைப்பாடு எடுப்பது என்பது குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலைக்குழு கூடி விவாதித்தது. இந்த இடைத்தேர்தல் என்பது தமிழக அரசியலில் எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்தாது என உயர்நிலைக்குழு கருதுவதால், தற்போதைய அரசியல் சூழலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவளிப்பது இல்லை என்று முடிவு செய்யப்பட்டது. -என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரண் பேடியிடம் 2 வாக்காளர் அடையாள அட்டை!

புதுதில்லி பா.ஜ.க.,சார்பில் புது தில்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முதல்வர் வேட்பாளர் கிரண் பேடியிடம் இரண்டு வாக்காளர் அட்டை இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து தேர்தல் தேர்தல் ஆணையம் தெரிவித்த தகவல்: பா.ஜ, சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கிரண் பேடி பெயரில் உதய் பார்க் மற்றும் தல்கட்டோரா லேன் ஆகிய பகுதிகளில் வசிப்பவராக அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்படும். மேலும் வேட்பு மனு தாக்கலின் போது எந்த முகவரியில் உள்ள அடையாள அட்டையை பயன்படுத்தினரோ அதை தவிர்த்து பிற அடையாள அட்டை செல்லாதது என ஆக்கப்படும் என தெரிவி்த்துள்ளது.

பக்தர்களின் ‘காவலர்’

37061_10151356031212617_107367148_n_zpsb19955ed பக்தர்களின் ‘காவலர்’ ஜனவரி 27,2015,தினமலர். ஒரு சமயம் காஞ்சிபுரத்தில் வரதராஜப் பெருமாள் கோயிலில் கருடசேவை நிகழ்ந்து கொண்டிருந்தது. சென்னையை சேர்ந்த கணவன், மனைவி விழா காண வந்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்ததால், சமூக விரோதிகள் உள்ளே புகுந்து விட்டனர். ஒருவன், அந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த ஆறு பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு கூட்டத்தில் மறைந்து விட்டான். பெருமாளைத் தரிசிக்க வந்த இடத்தில், இப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டதை எண்ணி அந்த தம்பதியரின் மனம் மிகவும் நொந்தது. அவர்கள் காஞ்சி மடத்திற்கு வந்து மகாபெரியவரைத் தரிசித்தால், தங்களுக்கு தீர்வு கிடைக்குமென நம்பி வந்தனர். பெரியவரைத் தரிசிக்க பெரிய கூட்டம் வரிசையில் நின்றது. தம்பதிகளும் வரிசையில் இணைந்து கொண்டனர். அந்த பெண்ணின் கண்களில் நீர் கோர்த்திருந்தது. வரிசையில் வந்தவர்கள் சுவாமியை வணங்கி விட்டு, நகர்ந்து கொண்டே இருக்க, அந்தப் பெண்ணைக் கவனித்த பெரியவர் அவரை அழைத்து, “”ஏன் அழுகிறாய்?” என்று ஏதும் அறியாதவர் போல் கேட்டார். முக்காலமும் உணர்ந்த அந்த நடமாடும் தெய்வத்திற்கா இந்த சம்பவம் தெரியாமல் போயிருக்கும்! இருப்பினும், பெண்ணிடம் அந்தக் கேள்வியைக் கேட்டு வைத்தார்கள். அந்தப் பெண் நடந்த விபரங்களை ஒன்று விடாமல் சொன்னார். உடனே பெரியவர் அவரிடம்,””மடத்துக்கு எதிரே இருக்கிற கங்கைகொண்டான் மண்டபத்தில் தெற்கு நோக்கி ஒரு ஆஞ்சநேயரும், ஏகாம்பரநாதர் கோயில் மண்டபத்தில் மேற்கு நோக்கி தூணில் எழுந்தருளியிருக்கும் இரண்டு ஆஞ்சநேயர்களையும் தரிசிக்கச் செல். அந்த ஆஞ்சநேயர்களை 21 தடவை பிரதட்சணம்(வலம்) செய். பிறகு வீட்டிற்கு போ,” என்றார். அந்தப் பெண்,””போலீசில் புகார் கொடுக்க வேண்டாமா?” என்று கேட்டார். “”வேண்டாம்…வேண்டாம்…நீ பிரார்த்தனை முடிச்சுட்டு வீட்டுக்குப் போ,” என்றார் பெரியவர். பெரியவர் சொன்னபடி, அந்த அம்மையாரும் அவரது கணவரும் ஆஞ்சநேயர்களைத் தரிசித்த பிறகு பஸ்ஸ்டாண்ட் சென்றனர். அப்போது இவர்களுடன் சென்னையில் இருந்து வந்தவர்கள், “”மாமி..மாமி…உங்களைத் தான் தேடிக் கொண்டு இருந்தோம். உங்கள் செயினைப் பறித்தவனை போலீஸ் பிடிச்சு நகையை கைப்பற்றிட்டாங்க. நீங்க ஸ்டேஷனுக்குப் போய் அடையாளம் சொல்லி வாங்கிக்கலாம்,” என்றனர். அவர்களும் ஸ்டேஷனுக்குச் சென்று பொருளைப் பெற்ற பிறகு, மிகுந்த மகிழ்ச்சியுடன் ஊர் திரும்பினார்கள். கடவுளின் அருள் வேண்டுமானால், குரு பாதை காட்ட வேண்டும். காஞ்சி மகாபெரியவரை நமது குருவாக ஏற்று வேண்டுதல்களை வைத்து விட்டால் போதும்! நமது கோரிக்கைகள் உரிய தெய்வங்களின் உதவியுடன் நிறைவேறி விடும். காஞ்சிபுரம் சென்றால், இனி நீங்களும் இந்த ஆஞ்சநேயர்களிடம் உங்கள் வேண்டுதலை வைத்து வரலாம்

‘கை கொடுக்கும் வளையல்’

246400_479182102136836_1433845875_n “உனக்கு விழுகிற அடியைத் தடுப்பதற்கில்லை. ஆனாலும் அதிகம் வலிக்காதபடி நான் பார்த்துக் கொள்வேன்” ‘கை கொடுக்கும் வளையல்’ தொகுத்தவர்-அழகர் நம்பி. தட்டச்சு-வரகூரான் நாராயணன். பெரியவாளை தரிசிப்பதற்காக நடிகர் ஜெமினி கணேசனின் மனைவி வந்திருந்தார். அந்த சமயம் பிராமணர் ஒரூவர் தன் மகளின் திருமணத்திற்கு ஏதானும் உதவி செய்யும்படி கேட்டு வந்திருந்தார். “நீ ஏதாவது உதவி செய்யேன் இவருக்கு” என்றார்கள் ஸ்வாமிகள். அம்மையாரும் மன சந்துஷ்டியுடன் தன் கையில் அணிந்திருந்த ஒரு ஜதை வளையல்களை கழற்றிக் கொடுத்தார். “இப்போதே கொடுக்கணும் என்றில்லை, கல்யாணத்திற்கு முன்னதாகவே கொடுத்தால் போறும்” என்றார்கள். அதே சமயம் அருகிலிருந்த உள்ளூர் வங்கி மேலாளரிடம், “வளையலை பாங்க் லாக்கரில் வைத்திரு” என்றும் கூறினார்கள். இரண்டே நாளில் மீண்டும் அந்த பிராமணர் ஸ்வாமிகளைத் தேடி வந்தார்.பெரியவாளின் பாதக் கமலங்களில் விழுந்து அழுதபடியே கூறினார். “என் பொருட்கள் எல்லாம் திருடுபோய் விட்டது” என்று. அப்போது அவரின் உடமையாக இருந்தது லாக்கரில் உள்ள வளையல் மட்டுமே. ஸ்வாமிகளின் ஞானதிருஷ்டியினால் தான் அவரின் வளையல் திருடு போகாமல் தப்பித்தது. வளையலின் மதிப்பு அன்று இருபது ஆயிரம் ரூபாய். “உன் நல்ல வேளை வளையல் தப்பிச்சது” என்று கூறி அவரை ஆசிர்வதித்தார். எது உனக்கென்று விதிக்கப்பட்டதோ அது உனக்குரியது ஆகும்! எது உன்னுடையதில்லையோ அது உன்னை விட்டுப் போகும்! உனக்கு விழுகிற அடியைத் தடுப்பதற்கில்லை. ஆனாலும் அதிகம் வலிக்காதபடி நான் பார்த்துக் கொள்வேன்.

நெல்லையில் “சேவா பாரதி” நிர்வாகி வெட்டிக் கொலை

திருநெல்வேலி: நெல்லை அருகே சேவாபாரதி அமைப்பின் மூலம் சமூக சேவையில் ஈடுபட்டு வந்த சமூக சேவகர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். நெல்லை அருகே மேலப்பாளையம் – குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன்(55). திருமணமாகாத இவர் சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வந்தார். விவசாய சங்க தலைவராகவும் இருந்த இவர், சேவா பாரதி இயக்கத்தி்ன் மூலம் பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் இவர் தனது வீட்டின் அருகே மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து மேலப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகி்னறனர்.