Home Blog Page 6367

எலக்டிவ் அம்னீஷியா!

advani sushma - 2026
என்னங்க அத்வானிஜி… தமிழ்நாட்டு முதலமைச்சட்ட போன்ல பேசும்போது ரொம்ப ரொம்ப நன்றின்னு சொன்னீங்களாமே!
ஆமாம்… சரியான நேரத்துல சரியான நடவடிக்கை எடுத்தாங்களே… பாராட்டாம இருக்க முடியுமா?
ஆமாமா… செலக்டிவ் அம்னீஷியான்னு சொன்னவங்களாச்சே…
என்னது..? அப்படியா? யாரைப் பாத்து சொன்னாங்க…?!
ஆஹா… அவங்க சொன்னது நூறு சதவீதம் சரிதான்!

அன்றா சொன்னேன்? நன்றா செய்தேன்!?

mamta didi - 2026
பெட்ரோல் விலை குறித்து…
இதை அங்க போய் கேளுங்க!
இல்லை.. நீங்க… பெட்ரோல் விலை உயர்வை வாபஸ் வாங்கலைன்னா நாங்க அமைச்சரவையிலிருந்து வாபஸ் ஆகிடுவோம்னு சொன்னீங்களே!
ஆமாம்! இது மக்கள் விரோத நடவடிக்கை! அவங்க விலை வாபஸ் பத்தி யோசிச்சாகணும். இல்லைன்னா எங்க நிலை வாபஸ்தான்!
ஆனா பிரணாப் என்னமோ வித்தியாசமா பேசுறாரே…
இல்லை இல்லை… இது எங்க உறுதியான இறுதியான முடிவு. நாங்க எதில் இருந்தும் பின்வாக்கப் போவதில்லை…
உங்க எம்பிக்கள் கிட்டே பிரதமர் உறுதியா சொல்லியிருக்காறாமே!
என்ன…?! உறுதியாவா??? அவரு அப்படில்லாம் பேசமாட்டாரே! கொஞ்சம் இருங்க பிரதமர் என்ன டீலிங்ல அப்படி பேசினார்னு தெரிஞ்சுக்கறேன்…
……
……
ம்ம்ம்… எம்பிக்கள்ட்ட பேசிட்டேன். பெட்ரோல் விலையை ஏத்துறதை எங்களால அனுமதிக்க முடியாது. இருந்தாலும், இந்த முறை பிரதமரை நாங்க மன்னிக்கறோம். அடுத்த முறை ஏத்தினா… நிச்சயமா வாபஸ்தான்! அதுல நாங்க உறுதியா இருக்கோம்..!

(பெங்காலி மொழி புரியாததால, இவங்க என்ன பேசியிருப்பாங்கன்னு யோசிச்சதுல…. இப்பிடி!)

சாப்பிட வரட்டா?

rahul boy - 2026
என்னப்பா… தம்பி… உங்க வீட்டுக்கு இன்னிக்கி மத்தியானம் சாப்பிட வரட்டா…
என்னாது…. சாப்பிடவா? என்னயவே எங்கம்மா போடா டேய் ராத்திரி வீட்டுக்கு வந்தா போதும்டானு துரத்தி விட்டுட்டாங்க… இதுல நீங்க வேற?

வேலை (செயல்) திட்டம்?!

kirankumar - 2026
உங்க மாநிலத்துலயும் நீங்க ஒழுங்கா நூறுநாள் வேலைத்திட்டத்தை பின்பற்றலையாமே!
அய்யய்யோ அப்டி முறைச்சிப் பாக்காதீங்க… பயம்மா இருக்கு… இது எதிர்க்கட்சி ஆட்சி செய்யிற குஜராத், பீகார், உத்தரப் பிரதேசம் இல்லேங்க… நம்ம கட்சி ஆட்சி செய்யிற ஆந்திரமுங்க….
அது எனக்கு தெரியுது! ஆனா மாயாவதிக்கு அனுப்பினா மாதிரி உங்களுக்கும் கடிதம்லாம் போட்டாதான் சரியாவரும்னு நெனக்கிறேன்…
என்னங்க இப்படி சொல்றீங்க? இங்க ஒழுங்கா வேலையே செய்ய முடியலே… இதுல நீங்க வேற….
அதான் சொல்லுறேன்… நூறு நாள் வேலைத் திட்டத்தாலதான் கூலிக்கு ஆள் கிடைக்க மாட்டேங்கிறாங்கன்னு தமிழ்நாடு மாதிரி மாநிலங்கள்ல புகார் சொல்லுறாங்க… நீங்க மட்டும் இந்த திட்டத்தை சரியா செஞ்சிருந்தீங்கன்னா…. தெலங்கானா மாதிரி பிரச்னை வருமா? கொடி பிடிக்க கோஷம் போட சாலைமறியல் போராட்டத்துக்கு ஆள் தேறுமா? யோசிச்சிப் பாருங்க. அதான் சொல்றேன் நீங்களும் நூறு நாள் வேலைத்திட்டத்துல முறைகேடு செஞ்சிருக்கீங்க…

டீப் டிஸ்கஷன்தான்! நம்ம டூப் டிஸ்கஷன்தான்!!

pc pranab kurshid - 2026
என்னங்க இது… திக் திக் இப்படி திக்கு திக்குன்னு உளறிக்கொட்டுறாரு..?
ஏன் என்னாச்சு… கொடுத்த வேலையை நல்லாத்தானே செய்துக்கிட்டிருக்காரு?!
அதில்லே..! ப்ளான் 1, ப்ளான் 2,. ப்ளான் 3 அப்டின்னு ஏதேதோ சொல்லி எல்லாத்தையும் ஆர்.எஸ்.எஸ்தான் இயக்குதுங்கிறாரே!
ஆமா… எதுனா பிரச்சினைன்னா அப்படிச் சொல்லனும்னுதானே 1947லிருந்தே நம்ம கட்சிக்காரங்களை பழக்கப்படுத்தி வெச்சிருக்கோம்?!
ஆனா…. இப்போ அதுவே வினையா முடிஞ்சிடும்னு பயமாயிருக்கு!
ஏன் எல்லாம் சரியாத்தான் போயிட்டிருக்கு. நெனச்ச மாதிரியே அண்ணா ஹசாரே குழு பயந்து பிரிஞ்சிட்டாங்க… ஒருத்தர ஒருத்தரு அடிச்சிக்கிறாங்க… நாமதான் ஆர்.எஸ்.எஸ் அப்படிங்கிற தீண்டாமை அஸ்திரத்தை சரியா போட்டிருக்கமே!
ஆனா பாருங்க… பொதுமக்கள் பாபா ராம்தேவை நல்லவருங்கிறாங்க… அண்ணா ஹசாரேவை ரொம்ப நல்லவருங்கிறாங்க… ரவிசங்கர்ஜியை ரொம்ப ரொம்ப நல்லவருங்கிறாங்க… இப்படி எல்லாரும் நல்லவங்கன்னு நம்பிக்கிட்டிருக்கிற எல்லாரையும் ஆர்.எஸ்.எஸ் சொல்லித்தான் இயங்குறாங்கன்னு நம்ம திக்கு திக்கு சிங் சொல்லுறாரே… அதுனால, இதுவரை மோசமானவங்கன்னு மக்கள் நெனச்சிக்கிட்டிருக்கிற ஆர்.எஸ்.எஸ்.காரங்களை நல்லவங்கன்னு நினைக்கும்படியா செய்யிறாரோ? இவரு நல்லவரா கெட்டவரான்னே தெரியலியே?!

ஆர்ட் ஆஃப் லையிங்!?

digvijay pranab - 2026
சிறீ சிறீ ரவிசங்கர்ஜி என்னமோ ஆர்ட் ஆஃப் லையிங் அப்படின்னு அமைப்பு வெச்சிருக்கறதா சொன்னாரே! அதான்… எங்கிட்டயே போட்டி போடறாரேன்னு நெனச்சித்தான் இந்த டகால்டி வேலையெல்லாம் செஞ்சி பாக்குறேன்… மேட்டர் மசிய மாட்டேங்குதே!
உம்மை அப்படியே கடிச்சி முழுங்கிடப்போறேன்…அய்ய… அவரு வெச்சிருக்கிறது ஆர்ட் ஆஃப் லிவிங்… அதாவது வாழும் கலை..ன்னு பேரு! நீங்க நினைக்கிற மாதிரி ஆர்ட் ஆஃப் லையிங்… பொய் சொல்லுற கலை இல்லீங்க! எதையும் மொதல்ல சரியா காதுகொடுத்து கேளுங்க… ஓ… சரி சரி… இதுதான் உங்களுக்கு பிரச்னையா?!

செல்’ல’போன் மொழி!

karuna pm1 - 2026
செல்போன் மொழியில உங்க மொழியும் சேர்ந்துடுச்சாம் மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்!
என்ன சொல்லுறீங்க!
மீட்டிங் ஹாலுல பேசுற காமா சோமா பார்ட்டிங்கல்லாம் இப்ப மைக்க புடிச்ச உடனே இதைத்தான் சொல்லுறாங்க… அதுவும் உங்களுக்கு புகழாரம் சூட்டிக்கிட்டே!
அப்படி என்ன சொல்லுறாங்கஜி
உங்க செல்போனை எல்லாம் சைலண்ட் மோட்ல போடுக்குங்க… அப்படின்னு சொல்லிக்கிட்டிருந்தவங்க எல்லாம் இப்போ உங்க செல்போனை மன்மோகன்சிங் மோடுல போடுங்கன்னு தெனாவட்டா பேசுறானுங்க…
அடடே அப்படியா?
அட இதுக்காவது உங்க மௌனத்தை கலைச்சீங்களே… அப்படியே ஊழல் ஒழிப்புல தீவிரமா இருக்கோம்னு உலகத்துக்கு காட்ட, எங்க கட்சி ஒழிப்புல மட்டும் இறங்கிட்டீங்க போலிருக்கு…
அட… அதெல்லாம் ஒண்ணுமில்லே… எல்லாம் நியாயப்படிதானே நடக்குது!
ஆமா… ஆமா …. அந்த ஊழல் ஒளிப்பு நியாயத்தைத்தான் எங்க கட்சின்னும் பாக்காம  செய்யிறோம்னு மேடமும் சொன்னாங்க.!!!!