கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட
ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .
அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால் ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.
அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .
அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.
மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.
அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட
ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .
அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால் ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.
அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .
அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.
மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.
அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு மேற்கொண்ட பயணத்தை முடித்துக் கொண்டு, இந்திய விமானப்படை வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட 4 பேர், டிராகன் விண்கலம் மூலம் பத்திரமாக கடலில் தரையிறங்கினர்.
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணம் மேற்கொண்ட இந்திய விமானப்படை வீரர் சுபான்ஷூ சுக்லா குழுவினர் இன்று, பத்திரமாக பூமிக்குத் திரும்பினர். 22 மணி நேர பயணத்திற்குப் பின், அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்பரப்பில் இன்று மாலை 3 மணிக்கு, ‘ஸ்ப்லாஷ் டவுன்’ முறையில் விண்கலம் பத்திரமாக தரையிறங்கியது. அதை அடுத்து, சுக்லா உள்ளிட்டோர் வெளியே அழைத்து வரப்பட்டனர். சுபான்ஷூ சுக்லாவுக்கு பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ ஆகியவை இணைந்து அமெரிக்காவின் ‘ஆக்சியம் ஸ்பேஸ்’ என்ற தனியார் நிறுவனத்தின் மூலம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான பயண திட்டத்தில் ஈடுபட்டது. இத்திட்டத்தின்படி, இந்திய விமானப் படையின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவைச் சேர்ந்த மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு மற்றும் போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த மாதம் 25ம் தேதி, ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின், ‘பால்கன் 9’ ராக்கெட் வாயிலாக பூமியில் இருந்து புறப்பட்டனர். அவர்களைச் சுமந்து சென்ற ‘டிராகன்’ விண்கலம், 28 மணி நேர பயணத்திற்குப் பின் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது.
அவர்கள் நால்வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். சர்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள் தங்கியிருந்த இவர்கள், விண்வெளியில் பல்வேறு ஆய்வுகளைச் செய்தனர். பின்னர் தங்கள் பயணத்தை நிறைவுசெய்து திட்டமிட்டபடி டிராகன் விண்கலம் வாயிலாக நேற்று பூமியை நோக்கி புறப்பட்டனர். 22 மணி நேர பயணத்திற்குப் பின், அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்பரப்பில் இன்று மாலை 3 மணிக்கு, ‘ஸ்ப்லாஷ் டவுன்’ முறையில் டிராகன் விண்கலம் கடலில் இறங்கியது.
தொடர்ந்து அந்த விண்கலம் கப்பலுக்குக் கொண்டு வரப்பட்டு, கதவு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் திறக்கப்பட்டது. விண்கலத்தில் இருந்து முதலாவதாக நாசாவின் பெக்கி விட்சன் வெளியே அழைத்து வரப்பட்டார். இரண்டாவது நபராக சுபான்ஷூ சுக்லா விண்கலத்தில் இருந்து வெளியே வந்தார். மற்றவர்களும் அடுத்தடுத்து வெளியே அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அனைவரும் 7 நாட்கள் தனிமையில் இருப்பார்கள்.
சுபான்ஷூ சுக்லா பூமிக்கு திரும்பியதை இஸ்ரோ விஞ்ஞானிகள் நேரலையில் பார்த்தனர். லக்னோவில் உள்ள சிட்டி மான்டெசரி பள்ளியில் சுக்லாவின் குடும்பத்தினர் நேரலையில் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். பின் கேக் வெட்டி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர். சுபான்ஷு சுக்லாவின் தாயார் ஆஷா சுக்லா செய்தியாளர்களிடம் பேசிய போது, என் மகன் பாதுகாப்பாக திரும்பியுள்ளார். இறைவனுக்கு நன்றி. இந்த நிகழ்வை வெளியில் நின்று, தகவல்களை பகிர்ந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் நன்றி. நான் உணர்ச்சிவசப்பட்டேன்.எப்படியிருந்தாலும், என் மகன் பல நாட்களுக்குப் பிறகு திரும்பியுள்ளார் என்று கூறினார்.
பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது: விண்வெளிக்கான வரலாற்று சிறப்பு மிக்க பயணத்தை முடித்துக் கொண்டு பூமிக்கு திரும்பும் சுபான்ஷூ சுக்லாவை, நாட்டு மக்களுடன் இணைந்து வரவேற்கிறேன். சர்வதேச விண்வெளி நிலையணத்தை பார்வையிட்ட இந்தியாவின் முதல் விண்வெளி வீரராக, தன அர்ப்பணிப்பு, தைரியம் மூலம் 100 கோடி மக்களின் கனவுகளுக்கு முன்மாதிரியாக உள்ளார். இது, நமது சொந்த விண்வெளி பயணமான ககன்யானை ககன்யானை நோக்கிய மற்றொரு மைல்கல் ஆகும் எனத் தெரித்துள்ளார்.
இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவுக்கு அடுத்தபடியாக விண்வெளி பயணம் மேற்கொண்ட இரண்டாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் சுபான்ஷு சுக்லா.
திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்தை முனையமாகக் (Terminus) கொண்டு இயக்கப்படும் அனைத்து புறநகர பேருந்துகள் மற்றும் நகர பேருந்துகள் பஞ்சப்பூர் பேருந்து முனையத்திற்கு 16.07.2025 அன்று முதல் மாற்றம் செய்யப்படுகிறது.
திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் வெளியிட்ட அறிவிப்பில் கண்ட தகவல்…
பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் பயணிகள் பயன்படுத்தும் வகையில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதைத் தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்தை முனையமாகக் (Terminus) கொண்டு இயக்கப்பட்ட அனைத்து புறநகர பேருந்துகள் மற்றும் நகர பேருந்துகள் பஞ்சப்பூர் பேருந்து முனையத்திற்கு 16.07.2025 அன்று முதல் மாற்றம் செய்யப்படுகிறது.
செய்தியாளர் சந்திப்பின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தெரிவித்ததாவது:
திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்தை முனையமாகக் கொண்டு இயக்கப்படும் அனைத்து புறநகர பேருந்துகள் மற்றும் நகர பேருந்துகளும் பஞ்சப்பூர் பேருந்து முனையத்திற்கு 16.07.2025 அன்று முதல் மாற்றம் செய்யப்படுகிறது.
மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும் அனைத்து பேருந்துகளும் நெ.1 டோல்கேட், பழைய பால்பண்ணை, தேசிய நெடுஞ்சாலை வழியாக பஞ்சப்பூர் பேருந்து முனையத்திற்கு செல்ல வேண்டும். பஞ்சப்பூர் பேருந்து முனையத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக திரும்பச் செல்ல வேண்டும்.
மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும் அனைத்து பேருந்துகளும் துவாக்குடி, திருவெறும்பூர், பழைய பால்பண்ணை, டிவிஎஸ் டோல்கேட் மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் முனையத்திற்கு செல்லவேண்டும். பஞ்சப்பூர் பேருந்து முனையத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை, டிவிஎஸ் டோல்கேட், பழைய பால்பண்ணை வழியாக திரும்பச் செல்ல வேண்டும்.
நாமக்கல்/சேலம் /பெங்களுரு மார்க்கம்
மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும் பேருந்துகளும் நெ.1 டோல்கேட், பழைய பால்பண்ணை, டிவிஎஸ் டோல்கேட், அனைத்து மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு செல்ல வேண்டும். பஞ்சப்பூர் பேருந்து முனையத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை, டிவிஎஸ் டோல்கேட், நெ.1 டோல்கேட் வழியாக திரும்பச் செல்லவேண்டும்.
புதுக்கோட்டை/அறந்தாங்கி/ராமேஸ்வரம் மார்க்கம்
மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும் அனைத்து பேருந்துகளும் விமான நிலையம், டிவிஎஸ் டோல்கேட், மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் பேருந்து முனையம் வரை செல்ல வேண்டும். பஞ்சப்பூர் பேருந்து முனையத்திலிருந்து இதே வழித்தடத்தில் திரும்பச் செல்ல வேண்டும்.
கரூர்/ஈரோடு/திருப்பூர்/கோயம்புத்தூர் மார்க்கம்
மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும் அனைத்து பேருந்துகளும் சத்திரம் பேருந்து நிலையம், கரூர் புறவழிச்சாலை, சாஸ்திரி சாலை, மாவட்ட நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வ.உ.சிசாலை, மத்திய பேருந்து நிலையம், மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் பேருந்து முனையம் வரை செல்ல வேண்டும். பஞ்சப்பூர் பேருந்து முனையத்திலிருந்து இதே வழித்தடத்தில் திரும்பச் செல்லவேண்டும்.
மணப்பாறை/திண்டுக்கல்/பழனி/குமுளி மார்க்கம்
மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும் அனைத்து பேருந்துகளும் கருமண்டபம், மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் பேருந்து முனையத்திற்கு செல்ல வேண்டும். இவை பஞ்சப்பூர் பேருந்து முனையத்திலிருந்து இதே வழிதடத்தில் திரும்பச் செல்ல வேண்டும்.
மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும் அனைத்து பேருந்துகளும் தேசிய நெடுஞ்சாலை வழியாக பஞ்சப்பூர் பேருந்து முனையம் வரை செல்ல வேண்டும். இவைபஞ்சப்பூர் முனையத்திலிருந்து இதே வழிதடத்தில் திரும்பச் செல்ல வேண்டும்.
நகரப் பேருந்துகள்
மத்திய பேருந்து நிலையத்தை முனையமாகக் (Terminus) கொண்டு இயங்கும் அனைத்து நகரப் பேருந்துகளும் மத்திய பேருந்து நிலையம், மன்னார்புரம் வழியாக பஞ்சப்பூர் பேருந்து முனையத்திற்கு செல்ல வேண்டும். இவை பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து இதே வழிதடத்தில் திரும்பச் செல்லவேண்டும்.
ஆம்னி பேருந்துகள்
மத்திய பேருந்து நிலையத்தின் சுற்றுப்பகுதிகளில் ஒப்பந்த ஊர்தி ஆம்னி பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றக்கூடாது. இவை பஞ்சப்பூர் பேருந்து முனையத்திற்கு அருகில் தற்காலிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள காலி இடத்தில் பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும்.
உள் வருகை மற்றும் வெளிச்செல்கை (Entry and Exit)
அனைத்து பேருந்துகளும் பேருந்து முனையத்திற்கு உள்வரும்போது (Entry) காவல் சோதனை சாவடி எண்.2 (CP-2) வழியாக சென்று பேருந்து முனையத்தின் பின்வழியாக உள்ளே வரவேண்டும். பேருந்து முனையத்திலிருந்து வெளிச்செல்லும் (Exit) அனைத்து பேருந்துகளும் (மதுரை மார்க்கம் தவிர்த்து) தேசிய நெடுஞ்சாலை வழியாக பஞ்சப்பூர் சந்திப்பு வரை சென்று திரும்பி (U Turn) செல்ல வேண்டும்.
பயணிகளுக்கான வசதிகள்
திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையத்திற்கு வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு தேவையான உணவு, சிற்றுண்டி, தேநீர், காபி மற்றும் குளிர்பானங்கள் போன்ற உணவு பொருட்கள் விற்பனைக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பஞ்சப்பூர் பேருந்து முனையத்தை ஒவ்வொரு மணி நேரமும் சுத்தம் செய்து தூய்மையாக பராமரிக்க 228 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு தொடர்ந்து தூய்மை செய்யும் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.
பயணிகள் மற்றும் அவர்தம் உடைமைகளின் பாதுகாப்பிற்கு காவல் துறையினர் 52 பேர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர்.
பயணிகளின் தேவைக்கேற்ப ஆட்டோ, டாக்ஸி மற்றும் இ-டாக்ஸி சேவைகள் வழங்குவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு உதவி செய்ய தன்னார்வலர்கள் 30 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பேருந்து முனையத்திற்குள் நடந்து செல்ல சிரமப்படும் நோயாளிகள் முதியவர்கள் பயன்பாட்டிற்காக 3 எண்ணிக்கையிலான பேட்டரி வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது.
பயணிகளின் அவசரத் தேவைக்காக அழைப்பின் பேரில் (On call) மருத்துவர் குழு (Health Desk) தயார் நிலையில் உள்ளது
உசிலம்பட்டியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா வை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் அரசியல் கட்சியினர் கொண்டாட்டம்!
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி தொடக்கப் பள்ளியில், முன்னாள் முதல்வரும் மறைந்த காங்கிரஸ் கட்சியின் தலைவருமான பெருந் தலைவர் காமராஜரின் 123 -வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் காமராஜர் வேடமணிந்து ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி பிறந்த நாளை கொண்டாடினர் .
இந்த ஊர்வலம் நாடார் சரஸ்வதி தொடக்கப் பள்ளியில், தொடங்கி கவணம்பட்டி சாலை, பேரையூர் சாலை என உசிலம்பட்டியின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பள்ளியில் நிறைவு செய்தனர்.
இதனை, திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் அஜித் பாண்டி தலைமையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மதன் பிரபு முன்னிலையில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
இதேபோன்று, காங்கிரஸ் கட்சியின் சார்பில் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இதேபோன்று, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முருகன் கோவில் அருகில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் மற்றும் விசிக கட்சி தலைவர் திருமாவளவன் தந்தை தொல்காப்பியர் நினைவு தினத்தை முன்னிட்டு, திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி பிறந்தநாள் மற்றும் வீரவணக்கம் செலுத்தினர்.
ஈரோடு செங்கோட்டை ரயில் பராமரிப்பு பணிகள் காரணமாக பகுதியாக ரத்து செய்யப்படுவதால் பயணிகளின் வசதிக்காக மதுரை-செங்கோட்டை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. சிறப்பு ரெயிலில் 10 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என மதுரை கோட்ட ரயில்வே அறிவித்துள்ளது.
மதுரை கோட்ட ரெயில்வேயில் நடக்கும் தண்டவாள பராமரிப்பு பணிகளுக்காக தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஈரோடு-செங்கோட்டை ரெயில் (வ.எண்.16845/16846) திண்டுக்கல்லுடன் நிறுத்தப்படுவதால், பயணிகளின் வசதிக்காக மதுரை-செங்கோட்டை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
அதன்படி, இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.06846) வருகிற 18-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை செங்கோட்டையில் இருந்து அதிகாலை 5.10 மணிக்கு புறப்பட்டு காலை 9.30 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுமார்க்கத்தில் இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.06845) வருகிற 17-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை மதுரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு செங்கோட்டை ரெயில் நிலையம் சென்றடைகிறது.
இந்த சிறப்பு ரெயிலில் 10 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரயில் எண் 16845 ஈரோடு – செங்கோட்டை எக்ஸ்பிரஸ், ஜூலை 22 தவிர, ஜூலை 17 முதல் 26 வரை திண்டுக்கல் – செங்கோட்டை இடையே பகுதியளவு ரத்து செய்யப்படும். இந்த ஒன்பது நாட்களிலும், ஈரோடு சந்திப்பு – திண்டுக்கல் சந்திப்பு இடையே மட்டுமே ரயில் இயங்கும். திண்டுக்கல் சந்திப்பு – செங்கோட்டை இடையே இயக்கப்படாது.
இதேபோல், செங்கோட்டையில் இருந்து காலை 5.10 மணிக்கு புறப்படும் ரயில் எண் 16846 செங்கோட்டை – ஈரோடு எக்ஸ்பிரஸ், ஜூலை 23 (ஒன்பது நாட்கள்) தவிர, ஜூலை 18 முதல் 27 வரை செங்கோட்டை – திண்டுக்கல் இடையே பகுதியளவு ரத்து செய்யப்படும். இந்த நாட்களில், செங்கோட்டை – திண்டுக்கல் சந்திப்பு இடையே ரயில் இயங்காது, ஆனால் திண்டுக்கல் சந்திப்பிலிருந்து ஈரோடு சந்திப்பு வரை இயக்கப்படும்
கல்வான் பள்ளத்தாக்கில் சீனா வாலாட்டி வாலறுத்ததோடு சீனா நாட்டுக்குச் செல்லவில்லை நம் வெளியுறவுத் துறை அமைச்சர்.
கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குப் பின் நேற்று சீனா விஜயம் செய்திருக்கிறார் டாக்டர் ஜெய்ஷங்கர்.
அவரைச் சந்தித்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, “சீனாவும் இந்தியாவும் நல்ல அண்டை நாடுகளாக இருந்து நட்புறவை கடைப்பிடிக்க வேண்டும். பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கை, அமைதியான சகவாழ்வு, வளர்ச்சி மற்றும் பரஸ்பர வெற்றிக்கான ஒத்துழைப்பு ஆகியவற்றை முன்னெடுக்க வேண்டும்” என்ற ரீதியில் அறிக்கை விட்டிருக்கிறார்.
டாக்டர் ஜெய்ஷங்கர் இந்த வழ வழ அறிக்கை விடவில்லை. தெளிவாக, “பாரத எல்லையில் பிரச்சினை செய்வதை நிறுத்த வேண்டும் சீனா. பாரதத்துக்கு எதிரான வர்த்தக முடக்கங்களைச் செய்வதை சீனா நிறுத்த வேண்டும். சீனா mutual respect, mutual interest and mutual sensitivity ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டும்.” என்றும், “உலகம் (அமெரிக்காவின்) ஒருமுகத் தன்மையிலிருந்து பன்முகத் தனமையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. உலகின் பழைய ஒழுங்கு முறை போய்க் கொண்டிருக்கிறது, புதிய ஒழுங்குமுறை வந்து கொண்டிருக்கிறது (changing global order and the emergence of multipolarity.).” என்பதையும் அறிவுறுத்தியிருக்கிறார்.
Good to meet IDCPC Minister Liu Jianchao in Beijing.
Discussed the changing global order and the emergence of multipolarity. Spoke about a constructive India-China relationship in that context. pic.twitter.com/g8BplRMcrc
1, பாரத எல்லையில் சீனா இன்னும் சில்மிஷம் செய்வதை நிறுத்த வேண்டும்.
2, பாரதத்தை அடிமையைப் போல நடத்துவதை நிறுத்தி, mutual respect, mutual interest and mutual sensitivityயை கருத்தில் கொள்ள வேண்டும். (இல்லாவிட்டால் விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும்).
3, அதோடு, ‘changing global order and the emergence of multipolarity’ பற்றிக் குறிப்பிட்டிருப்பது சிறப்பு. காரணம்: இன்றைய தேதியில், அமெரிக்கா சொல்வதை எவரும் கேட்பதில்லை. காலம் மாறிவிட்டது. இன்னமும் அமெரிக்காவோடு சேர்ந்து கொண்டு சீனா ஆட்டம் போடலாம் என்று நினைத்தால், பல்பு தான் கிடைக்கும் சீனாவுக்கு. சீனா ஆதிக்கம் செலுத்திய ஆப்பிரிக்காவை குளோபல் சவுத் என்ற பெயரில் அமைப்பை உருவாக்கி அதன் தலைவராக மோதி ஜி அமர்ந்து விட்டார். அதோடு, ஜி20இல் அந்த ஆப்பிரிக்காவையும் சேர்த்து அதை பெருமைப் படுத்தியிருக்கிறார். மேலும், பிரேசில் ரஷ்யா இந்தியா சீனா தென் ஆப்பிரிக்கா என்றிருந்த பிரிக்ஸ் அமைப்பில் மேலும் பல நாடுகளைச் சேர்த்து – குறிப்பாக ஆப்பிரிக்கவைச் சேர்த்து – இப்போது பிரிக்ஸுக்கு புதிய விளக்கம் கொடுத்திருக்கிறார் மோதி ஜி: “Building Resilience and Innovation for Cooperation and Sustainability”. இனி அது Brasil Russia India China South Africa கிடையாது. !! இதையெல்லாம் குறிப்பிடும் விதமாக டாக்டர் ஜெய்ஷங்கர் changing global order and the emergence of multipolarity’ என்று குறிபிட்டிருக்கிறார்.
On July 14, Member of the Political Bureau of the CPC Central Committee and Foreign Minister Wang Yi held talks with Indian External Affairs Minister Subrahmanyam Jaishankar in Beijing. Wang Yi said that China-India relations have sustained a momentum of improvement and… pic.twitter.com/pe1czGINmg
*** இத்தனையையும் குறிப்பிட்ட அவர், பஹல்காம் தாக்குதல் & ஆப் சிந்தூர் விவகாரத்தில் பாக்ஸ்டானை பின்னிருந்து இயக்கியது சீனா தான் என்பதைக் கூறவில்லை. அதை பின்னொரு நாளுக்கு வைத்திருப்பாரோ???
*** ‘விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்’ என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார் டாக்டர் ஜெய்ஷங்கர். சீனா திருந்துமா? வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.
*** அமெரிக்காவுக்கு எதிராக தண்டத்தை கையிலெடுத்து விட்டார் மோதி ஜி, ‘நீ அடித்தால் பதிலுக்கு நான் அடிப்பேன்’ என்று! அதே நிலை சீனாவுக்கு என்று வருமோ தெரியாது.
பேரம் பேசுவதில் கெட்டிக்காரர்
வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் சிரித்த முகத்துடன் சொல்கிறார், “அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தை நல்ல முறையில் போய்க் கொண்டிருக்கிறது. இரு தரப்புக்கும் லாபமான வகையில் அந்த ஒப்பந்தம் அமையும்” என்று.
வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்ஷங்கர் மீது ஏற்கனவே கடுப்பாக இருக்கிறது அமெரிக்கா, “டாக்டர் ஜெய்ஷங்கர் தான் பாரதத்துக்கு எதிராக வெள்ளைக்காரர்கள் போடும் முட்டுக் கட்டைகளை உடைத்தெறிகிறார்” என்று.
இப்போது வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் மீது அதிக கடுப்பில் இருக்கிறது டிரம்ப் அட்மின், “ரொம்ப tough negotiator இந்த கோயல். கொஞ்சமும் இடம் கொடுக்க மாட்டேனென்கிறார் எங்களுக்கு” என்று.
பாரத அமெரிக்க வர்த்த பேச்சுவார்த்தைகளில் பிரச்சினை எங்கே வருகிறது என்றால் ‘அமெரிக்க விவசாய பொருட்களில்’. அத்தனையும் genetically modified! அமெரிக்கா உற்பத்தி செய்யும் சோளத்தை அமெரிக்க கால்நடைகள் கூட உண்ண மறுக்கின்றன என செய்திகள் உலவுகின்றன. அந்த சோளத்தை நம்மிடம் விற்கப் பார்க்கிறது அமெரிக்கா. நம்மிடம் மட்டுமல்லாமல் ஜப்பான், ஐரோப்பா என அத்தனை நாடுகளிடம் முயற்சித்து வருகிறது டிரம்ப் அட்மின். என்றாலும், அத்தனை பேரும் ஒதுக்கி விட்டார்கள் அமெரிக்க விவசாய உற்பத்தியை.
டிரம்ப்புக்கு – ரிபப்ளிகன்களுக்கு – இது கடுப்பை ஏற்றியிருக்கிறது. காரணம்: அமெரிக்க விவசாயிகள் தான் ரிபப்ளிகன்களின் வாக்குவங்கி! அவர்களுக்கு சாதகமாக அவர்கள் உற்பத்தியை ஏற்றுமதி செய்யாவிட்டால், அந்நாட்டு விவசாயிகளுக்கு நட்டம்! எப்படியாவது அவற்றை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று துடிக்கிறது டிரம்ப் அட்மின்.
கோயல் அணி, ‘genetically modified விதைகளையோ, விவசாய உற்பத்திகளையோ ஏற்க மாட்டோம்’ என்று ஒரேயடியாகப் போட்டிருக்கிறது. அவனிடமிருந்து genetically modified விதைகளை வாங்கினால், நம் விதைகள் அழிவதோடு, ஆயுள் பூராவும் அவனிடமே விதைகளுக்கு கையேந்த வேண்டும்…
தன் வாக்குவங்கியை திருப்திப் படுத்த டிரம்ப் அட்மின் உருண்டு புரண்டு கொண்டிருக்கிறது. இதில் இன்னொரு வேடிக்கை – சட்டவிரோத குடியேறிகளுக்கு குடியுரிமை கொடுக்க முடிவெடுத்திருக்கிறது டிரம்ப் கூட்டம். ஏனென்றால், அந்த சட்டவிரோத குடியேறிகள் தான் அமெரிக்க விவசாயிகளிடம் வேலை பார்க்கிறார்கள். வெள்ளைக்காரர்கள் களத்தில் இறங்கி வேலை பார்ப்பதில்லை. எனவே, அவர்களை திருப்பி அனுப்பிவிட்டால் விவசாயிகள் நிலை கவலைக்கிடமாகிவிடும். எனவே… சட்ட விரோத குடியேறிகளுக்கு குடியுரிமை கொடுக்க முயற்சி நடந்து வருகிறது.
இதே டிரம்ப் தேர்தல் பரப்புரையின் போது, ‘சட்ட விரோத குடியேறிகளால் நாட்டில் சட்ட ஒழுங்கு கெட்டு விட்டது. அவர்களைத் திருப்பி அனுப்புவேன்’ என்றார். இப்போது அவரே, ‘சட்டவிரோத குடியேறிகள் தான் எங்கள் விவசாயிகளின் நண்பர்கள். அவர்களுக்கு குடியுரிமை கொடுக்கப் போகிறேன்’ என்று கிளம்பியிருக்கிறார். கழுவின கையாலேயே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் டிரம்ப்!
டியர் டிரம்ப், ‘டாக்டர் ஜெய்ஷங்கரும் பியூஷ் கோயலும் மோதி ஜி உத்தரவில்லாமல் தன்னிச்சையாக இயங்குகிறார்கள்’ என்று நீங்கள் நினைத்தால், உங்களைப் போல முட்டாள் உலகில் இல்லை!
Delhi: On being asked about India–US trade negotiations, Union Minister of Commerce and Industry Piyush Goyal says, “Negotiations are going on at a very fast pace and in the spirit of mutual cooperation so that we can come out with a win-win trade complementing agreement with the United States.”
#WATCH | Delhi: On being asked about India–US trade negotiations, Union Minister of Commerce and Industry Piyush Goyal says, "Negotiations are going on at a very fast pace and in the spirit of mutual cooperation so that we can come out with a win-win trade complementing agreement… pic.twitter.com/FzSihOz32q
இந்திய அமெரிக்க டாரிஃப் சம்பந்தப்பட்ட பேச்சுக்கள் நடைபெற்றுவருகிறது. அது நீண்டுகொண்டே செல்கிறது. சீனாவிற்கு 50% வரி விதித்து கடைசியில் 10% வரிக்கு ஒத்துக்கொண்டது அமெரிக்கா.
காரணம் 50% வரி விதித்தால் அமெரிக்காவில் பல அன்றாட அத்யாவசிய தேவைகளை பூர்த்தி செய்வது சீனா, கடுமையான வரி விதித்தால் அந்த விலை உயர்வு பொருட்களில் விலை அதிகரித்து அது இன்ஃப்ளேஷனில் போய் அமெரிக்கர்களுக்கு பெரும் சுமையாக முடியும், அது அமெரிகாவிற்கும் பெரிய சிக்கலை ஏற்படுத்தி விடும்..
அதுபோல இந்தியாவிற்கும் வரியை குறைத்துதான் ஆக வேண்டும். ஆனால் இந்தியாவிடம் இருந்து வாங்கும் பொருட்கள் சீனப்பொருட்கள் அளவிற்கு நேரடியாக அன்றாட வாழ்வின் விலை உயர்வுக்கு காரணமாகாது என்பதால் சீனாவின் வரியை விட அதிகமாக இருக்கவே வாய்ப்புண்டு.
குறிப்பாக மருந்து பொருட்கள், மற்றும் IT Related Services என்பது மிக முக்கியமானது. அமெரிக்காவின் வரி விதிப்பில் இவை இரண்டும் தவிர்க்கப்படலாம் என்றால் மற்றவைகளுக்கு வரியை உயர்த்த வாய்ப்புகள் உண்டு
அது சீனாவின் வரியை விட அதிகமாக இருக்கலாம். அதற்கு காரணம் என்ன? கொஞ்சம் வரலாறு தேவை!?
சீனா ஆரம்பத்தில் கம்யூனிஷ்ட் நாடாகவும், ரஷ்யாவின் தோழராகவும் இருந்தது. பின்பு அது ரஷ்ய எதிர்ப்பு நிலை காரணமாக அமெரிக்க நண்பரானது. அதன் பின்னர் அமெரிக்காவின் பல உதவிகள் சீனாவின் பொருளாதாரத்தை பெருமளவில் உயர்த்தியது. அதே சமயம் ஜப்பானின் ஆதிக்கத்தை குறைக்க சீனா உதவியது.
சீனாவின் பொருளாதாரம் புதிய, பெரிய உயரம் தொட்டபின்னர் அதற்கு வல்லரசு ஆகும் ஆசை வந்தது, அதனால் ஜிங்பின் வந்த பின்னர், அதற்கான முன்னெடுப்புகளால் அமெரிகாவிற்கு எதிராக கம்பி கட்ட, அதற்கு ரஷ்யாவின் ஆதரவு தேவைப்பட்டது. அதன் விளைவாக சீனா ரஷ்யாவின் தோழராகி, மீண்டும் அமெரிக்காவின் எதிரியாக மாறியது.
சீனாவின் சார்பு நிலை கோவிட் சமயத்தில் பெரிய தட்டுப்பாட்டை ஏற்படுத்தியதும், அதன் வல்லரசு கனவுக்கு முடிவுகட்ட அதன் சார்பை குறைக்க இந்தியா உற்பட மாற்று நாடுகளில் உற்பதேதி, மற்றும் இறக்குமதியை அமெரிக்கா அதிகரித்தது.
அதே சமயம் சீனாவின் ராணுவ வலிமையால் அதை சமன் செய்ய இந்தியாவின் ஆதரவு தேவைப்பட்டது. அதனால் இந்தியாவிடம் நெருங்கிய அமெரிக்கா பல சலுகைகளை கொடுத்தது. மேலும் சீனாவுடன் ஒரு போரை இந்தியா மீதி திணிக்க அமெரிக்க செய்த முயற்சித்தது.
காரணம் சீன நவீன ஆயுதங்கள் இதுவரை போரில் பயன்படுத்தாதால் அதுபற்றிய ஒரு மதிப்பீட்டிற்குகும், இரண்டு நாடுகளும் அடுத்த வல்லரசுக்கான பொட்டென்ஷியல் இருப்பதால், இந்திய-சீனப்போர் இரு நாடுகளின் பொருளாதாரற்றை வீழ்த்திவிடும் என்பதால் அதற்கான வல்லரசு போட்டி கனவாவிவிடும் என்ற அமெரிக்க கனவு பலிக்கவில்லை.
இந்த நிலையில் இந்தியாவின் ரஷ்ய ஆதரவு என்பது சீனாவின் ஆதரவை விட அதற்கு போரில் பாதிக்கப்பட்ட அதன் பொருளாதாரத்திற்கு உறுதுணையாக இருக்கிறது என்பதால் இப்பொழுது இந்தியாவின் மீது அதன் கோபம் திரும்பியது. ஆனாலும் சீனாவின் நெருக்கடியால் இந்தியாவை சார்ந்திருக்க வேண்டுய சூழல் தொடர்ந்தது.
இந்த நிலையில் இந்திய – பாகிஸ்தானின் 88 மணி நேர போரில், பாகிஸ்தான் என்பது கருவியே, அதில் பயன்படுத்தப்பட்ட 81% ஆயுதங்கள் சீனாவின் ஆயுதங்களே. அமெரிகக போல சீனாவும் இந்தியாவிடம் நேரடியாக் போர் செய்யாமால் அனைத்து ஆயுத உதவிகளை செய்து பாகிஸ்தான் மூலம் இந்தியாவிடன் போர் செய்தது.
சீனாவின் சேட்டிலைட் இமேஜ் முதல், ஹை-ஸ்பீட் நெட்வொர்க் மூலம் சீனா பாகிஸ்தானுக்காக தென்மேற்கு எல்லையில், இந்தியாவுடன் போர் செய்தது. அதனுடன் துருக்கியும் சேர்ந்து செய்த போர் எல்லாவற்றையும் இந்தியா தவிடுபொடி ஆக்கிவிட்டது.
அதன் பின்னால் அமெரிக்காவும் பாகிஸ்தானுக்கு வேறு விதமாக உதவி வந்த நிலையில், நூர்ஹானில் அமெரிக்காவின் பாதுகாப்பில் இருந்த அணு ஆயுதங்களை இந்தியா தாக்கியதால் பாகிஸ்தான் சரணடைய வேண்டிவந்தது.
இதில் சீனாவின் ஆயுதங்கள் மீண்டும் தரமில்லாதவை என்று நிரூபிக்கப்பட்டதால், அதன் பிரஸிடெண்ட் ஜிங்பின் தலைமை ஆட்டம் கண்டுவிட்டது. ஜிண்டா அவர் இடத்திற்கு முன்னேறியதால் இப்போது சீனா, தனது பெரிய பொருளாதார வீழ்ச்சியை தற்காத்துக்கொள்ள மீண்டும் அமெரிக்க சார்பு நிலையை நோக்கி நகர்கிறது.
அதன் விளைவாகவே சீனா மீதான வரி விதிப்புகள் 10% ஆக குறைந்துவிட்டது. அதாவது சீனா மீண்டும் அமெரிக்காவின் நட்பு நாடாகிவிட்டதா என்றால், அமெரிக்காவிற்கு அப்போதைய தேவைக்கு ( Need basis) யார் உதவுகிறார்களோ அவர்கள் நண்பர்கள், அது முடிந்ததும் டீலும் முடிந்துவிடும்.
ஐரோப்பிய யூனியனும், நேட்டோ நாடுஜளும் அப்பட்டிப்பட்ட தேவையை அடிப்படையாக கொண்டவையே. இருந்தாலும் அமெரிக்காவின் சுய நலம் என்று வரும்போது யாரையும் பலிகொடுக்க அமெரிக்கா தயங்காது.
இந்த நிலையில் ட்ரம்பின் இந்தியாவில் முதலீட்டை செய்ய வேண்டாம் என்ற எச்சரிக்கைகளை ஆப்பிள் நிறுவனமோ, மற்ற சில நிறுவனங்கள் கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் விற்பனையை தொடங்கி, அதன் உற்பத்தியை தொடங்கும் வாய்ப்புண்டு. அது ட்ரம், எலன் ம்ஃஸ்க் அவர்களுக்கி இடையே உள்ள சண்டையில் யார் பெரியவர் என்ற யுத்தத்தில், ட்ரம்பை வீழ்த்த எலன் மஸ்க் எதிர் திசையில் பயணிக்கலாம்.
ட்ரம்பின் வினேச கால விபரீத புத்தி என்பது அமெரிக்க தொழில்களின் நீண்டகால திட்டமிடலுக்கு எதிராக இருப்பதாலும், BRICS மூலம் அதன் வல்லரசு ஆளுமை வீழ்வதாலும், அமெரிக்காவில் இருக்கும் பல நிறுவனங்களுக்கு, தொழில் செய்ய இந்தியா உகந்த நாடாக இப்போது பார்க்கப்படுகிறது. அதன் விளைவிளைவாக அவை இந்தியாவில் உற்பத்தியை ஆரம்பிக்கும் வாய்ப்புகள் உள்ளது.
குறிப்பாக இந்தியாவின் தேஜஸ் விமானத்தின் டிமாண்டை அதிகரிப்பதை கட்டுப்படுத்த. GE நிறுவனத்தின் எஞ்சின் ஏற்றுமதியை நிறுத்தியது பைடன் அரசு. அது ட்ரம்ப் ஆட்சியில் மாறும் என்ற எதிர்பார்ப்பும் பொய்த்ததால், அதன் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டது. அதனால் தேஜஸ் விமானங்களை வாங்க முன்வந்த நாடுகள் பின்வாங்கியது.
அது G& E க்கும் நீண்ட்கால விற்பனை ஒப்பந்தத்தை பாழாக்கியதால் அதன் எதிர்காலம் அமெரிக்காவின் கட்டுப்பாடுகளால் கை நழுவுகிறது. முன்பு தேஜசின் எல்லா விமானங்களுக்கும் எஞ்சின் தர செய்த ஒப்பந்தம் சரி வராததால், இப்போது இந்தியா தனது போர் விமான உற்பத்திக்கு மாற்று எஞ்சின்களை பார்க்க துவங்கிவிட்டது.
இந்தியா 850 போயிங் விமான ஆர்டரை கொடுத்துள்ளது. அதில் இந்தியாவில் உற்பத்தி செய்யும் ஒப்பந்தம் டாடாவுடன் இணைந்து செய்ய திட்டமிடல்கள் உள்ளது. தற்போது ஏர் இந்தியா விமான விபத்து ஏற்கனவே நலிந்த நிலையில் இருக்கும் போயிங்கை மேலும் பலவீனப்படுதியதால், அதை மறைக்க அமெரிக்கா பைலட் மீது தவறு என்று திசைதிருப்ப முயற்சிக்கிறது, அதை இந்தியா ஏற்கவில்லை. அது தவறு என்று நிரூபிக்கப்பட்டால் போயிங்கின் எதிர்காலம் மேலும் கவலைக்குரியதாகிவிடும்.
இந்த நிலையில் அமெரிக்காவின் ஆயுத வலிமை கூட கேள்விக்குரியாகி வருகிறது. அதன் மிகப்பெரிய பாதுகாப்பு, பாகிஸ்தானில் அதன் அணு ஆயுதங்களை இந்தியாவிடம் இருந்து பாதுகாக்க முடியவில்லை என்றால், அதன்ப்ளாகசிஃப் F-16 ஐ இந்தியா அடித்து நொறுக்கியதால் அதன் புதிய ஆர்டர்கள் பெருமளவில் சரிந்துள்ளது.
மேலும் அமெரிக்காவின் எந்த நாடுகள் BRICS ல் சேர்ந்தாலும் 500% வரி விதிப்போம் என்ற எச்சரிக்கையை மீறி 5 நாடுகள் BRICS ல் சேர்ந்துள்ளது. இப்பொழுது மேலும் 10 பார்ட்னர்கள் சேர்ந்து அமெரிகாவின் சட்டாம்பிள்ளைத்தனத்தை கண்டுகொள்ளவில்லை.
அதில் அமெரிக்காவின் மிக முக்கிய பார்ட்னரான மெக்ஸிகோவும் உண்டு என்பது அமெரிக்க ஆதிக்கம் முடிவுக்கு வருவதையே காட்டுகிறது! அதன் விளைவாக அமெரிக்க டாலரின் ஆதிக்கம் வேகமாக வீழ்ச்சியை சந்திக்கும் நேரம் வந்துள்ளது.
இப்படி பல விஷயங்கள் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்து கைநழுவி போவதால், அமெரிக்கா தற்போது சீனாவை மீண்டும் நண்பனாக்கி, இந்தியாவின் மீது வ்ரி விதிப்பு மூலம் அதன் வளர்ச்சியை தடுக்க நினைக்கும். அது உடனே நடக்காவிட்டாலும், அடுத்தடுத்த புதிய காரணங்களை காட்டி இந்தியா மீது மரி விதிக்கக்கூடும்.
ஆனால் அதன் வரி விதிப்புகள் இந்தியாவிற்கு தற்காலிக தொய்வுகளை கொடுத்தாலும், நீண்டகால நோக்கில் அமெரிக்காவிற்கு மிகப்பெரிய பிரச்சினையாகலாம். பல அமெரிக்க நிறுவனங்கள் பாதிக்கப்படும், அவற்றில் சில எதிர்கால வல்லரசு மற்றும் மிக முக்கிய சந்தை என்ற எதிர்பார்ப்பில் இந்தியாவிற்கு அதன் தொழிற்சாலைகளை நகர்த்தலாம் இல்லாவிஇல் அங்கேயே போயிங் போல வீழலாம்.
அதற்கு மிக முக்கிய காரணம் ட்ரம்பாகவும் இருக்க வாய்ப்புகள் கண்முன்னே தெரிகிறது. தேர்தலுக்கு முன்பு இருந்த அவரின் நிலைப்பாடுகள் அவரின் அவசர புத்தியாலும், டீஃப் ஸ்டேட் ஆஃப் அமெரிக்காவாலும் மீண்டும் குழப்பத்தில் நிறுத்தி, அமெரிக்க பொருளாதாரத்தில் பெரும் வீழ்ச்சியைக்கூட கொடுக்க வாய்ப்புண்டு.
குறிப்பாக இந்தியர்களுக்கு விசா மற்றும், குடியுரிமை சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஒரு நிலையில்லாத போக்கை ஏற்படுத்தி வருவதால், இந்தியர்களின் அமெரிக்க முதலீடுகள் வெகுவாக குறைய வாய்ப்புண்டு.
குறிப்பாக சமீபத்தில் போட்டிருக்கும் வெளிநாட்டவர்கள் மீது போடப்பட்ட புதிய வரிவிதிப்பால், இந்தியர்கள் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிட்டது. அதன் முதல் பாதிப்பு ரியல் முதலீடுகளை நம்மவர்கள் குறைப்பதால் எஸ்டேட்டை பெரியளவில் பாதிக்கலாம்.
இதில் இன்னொரு சிக்கல், சீனா நீண்டகால நோக்கில் BRICS இருந்து விலகி தற்காலிக சர்வைவலுக்கு மீண்டும் அமெரிக்காவிடம் செல்வதால் அதற்கு மேலும் சிக்கல்கள் எழக்கூடும்.
இந்த பார்வையில் பல Its & buts இருக்கிறது. அமெரிக்காவிடம் பல இயற்கை வளங்கள் இருந்தாலும், அதன் எதேச்சிகார போக்கால், அது தனிமைப்படுவதை உணர்கிறோம். அதற்கு மாறாக ஐரோப்பிய நாடுகள் உற்பட பல நாடுகளுடன் இந்தியா செய்து வரும் ஒப்பந்தம், இந்தியாவின் தற்காலிக வீழ்ச்சையை குறைக்கவும், அமெரிக்காவின் வீழ்ச்சியை துரிதப்படுத்தவும் செய்யலாம்.
எனவே உலகில் மூன்றாம் உலகப்போருக்கான ஆயுதப்போரைவிட பொருளாதார போர் பெருமளசில் உலக நாடுகளை பாதிகும்.
ஏற்கனவே AI போன்ற வளர்ச்சியால் பாதிக்கப்ப IT துறை பெருமளவில் வேலை வேய்ப்பு இழப்புகளை சந்திக்க நேரிடும். அவை நிறுவனங்களுக்கு இழப்பை கொடுக்க வாய்ப்புகள் குறைவு. ஆனால் வேலை வாய்ப்புகள் சரிவை சந்திக்கும்.
அவற்றை சமன் செய்ய, அவர்களை எப்படி இந்தியா சாதிக்கப்போகிறது என்பது மில்லியன் டாலர் கேள்வி!
இந்தியா-இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட் ஜூலை 10 முதல் 14 முடிய – லார்ட்ஸ் மைதானம் – வெற்றிக்கு அருகில் வந்து இந்திய அணி தோல்வி
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இங்கிலாந்து முதல் இன்னிங்க்ஸ் (112.3 ஓவர்களில் 387 ஆல் அவுட், ஜோ ரூட் 104, ப்ரைடன் கார்சே 56, ஜேமி ஸ்மித் 51, பென் ஸ்டோக்ஸ் 44, ஓலி போப் 44, பும்ரா 5/74, சிராஜ் 2/85, நிதீஷ் குமார் ரெட்டி 2/62, ஜதேஜா 1/29; இரண்டாவது இன்னிங்க்ஸ் 62.1 ஓவர்களில் 192, ஜோ ரூட் 40, பென் ஸ்டோக்ஸ் 33, ஹாரி ப்ரூக் 23, க்ராவ்லி 22, வாஷிங்க்டன் சுந்தர் 4/22, பும்ரா 2/38, சிராஜ் 2/31, நிதீஷ் குமார் ரெட்டி 1/20, ஆகாஷ் தீப் 1/30) இந்தியா முதல் இன்னிங்க்ஸ் (119.2 ஓவர்களில் 387, கே.எல். ராகுல் 100, ரிஷப் பந்த் 74, ஜதேஜா 72, கருண் நாயர் 40, நிதீஷ் குமார் ரெட்டி 30, வாஷிங்க்டன் சுந்தர் 23, கிரிஸ் வோக்ஸ் 3/84, ஆர்ச்சர் 2/52, பென் ஸ்டோக்ஸ் 2/63, கார்சே 1/88, பஷீர் 1/59) இரண்டாவது இன்னிங்க்ஸ் (கே.எல். ராகுல் 39, ஜதேஜா ஆடமிழக்காமல் 61, கருண் நாயர் 14, நிதீஷ் குமார் ரெட்டி 13, ஆர்ச்சர் 3/41, பென் ஸ்டோக்ஸ் 3/48, கார்சே 2/30, பஷீர் 1/5) இங்கிலாந்து அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் மேட்ச் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 10இல் தொடங்கியது. இந்த லார்ட்ஸ் மைதானம் கிரிக்கெட்டின் தாயகமாகக் கருதப்படுகிறது. இங்கே ஒரு மேட்சாவது விளையாடவேண்டும் என அனைத்து நாட்டு கிரிக்கெட் வீரர்களும் நினைக்கிறார்கள். இரண்டு அணிகளும் தலா ஒரு மேட்ச் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் மூன்றாவது மேட்ச் நடக்கிறது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலாவதாக மட்டையாட முடிவு செய்தது. முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 83 ஓவர்களைச் சந்தித்து, நாலு விக்கட் இழப்பிற்கு 251 ரன் எடுத்திருந்தது. ஜோ ரூட் 99 ரன் களுடனும் பென் ஸ்டோக்ஸ் 39 ரன் களுடனும் ஆடிக்கொண்டிருந்தனர்.
14ஆவது ஓவரில் நிதீஷ் குமார் ரெட்டி இரண்டு விக்கட்டுகளை எடுத்தார். அதன் பின்னர் ஜதேஜா மற்றும் பும்ராவும் தலா ஒரு விக்கட் எடுத்தனர். முதல் ஆட்டத்தின் போது ரிஷப் பந்த் கையில் அடிபட்டுக்கொண்டார். அதனால் துருவ் ஜுரல் விக்கட் கீப்பிங் செய்தார்.
இரண்டாம் நாளில் ஜோரூட் தன்னுடைய சதத்தை பூர்த்தி செய்தார். உணவு இடைவேளைக்குப் பின்னர் இங்கிலாந்து அணி 387 ரன்னுக்கு அனைத்துவிக்கட்டுகளையும் இழந்தது. பும்ரா ஐந்து விக்கட்டுகள் வீழ்த்தினார். இதன் பின்னர் இந்திய அணி தனது முதல் இன்னிங்க்ஸைத் தொடங்கினர். இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி 43 ஓவர்களைச் சந்தித்து (அன்றைய தினம் மொத்தம் 65 ஓவர்கள் மட்டும் வீசப்பட்டது) மூன்று விக்கட் இழப்பிற்கு 145 ரன் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் சரியாக விளையாட வில்லை. கருண் நாயர் பெரிய இன்னிங்க்ஸ் விளையாடவில்லை. ராகுல் 53 ரன்களுடனும் ரிஷப் பந்த் 19 ரன்களுடனும் ஆடிக்கொண்டிருந்தனர்.
மூன்றாம் நாளில் உணவு இடைவேளையின்போது இந்திய அணி நாலு விக்கட் இழப்பிற்கு 284 ரன் எடுத்திருந்தது. நன்றாக விளையாடிக்கொண்டிருந்த பந்த் 74 ரன்களில் ஆட்டமிழந்துவிட்டார். ராகுல் 98 ரன்களில் ஆடிக்கொண்டிருந்தார். அன்றைய ஆட்டத்தின் கடைசி ஓவருக்கு முதல் ஓவரில் 119.3 ஓவர்களில் 387 ரன்னுக்கு இந்திய அணி ஆட்டமிழந்தது. இரண்டு அணிகளுமே சரிசமமான ஸ்கோரில் இருந்தன. இங்கிலாந்து அணி ஒரு ஓவர் விளையாடி 2 ரன் எடுத்திருந்தது.
நாலாம் நாளில் தேநீர் இடைவேளைக்குப் பின்னர் பத்து ஓவர்களுக்குப் பின்னர், இங்கிலாந்து அணி 192 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணிக்கு நாலாம் நாளில் ஏறத்தாழ 20 ஓவர்களும் ஐந்தாம் நாள் முழுவதும் 193 ரன்கள் எடுத்து வெற்றி பெற இருந்தது. ஆனால் நாலாம் நாளில், இந்திய அணி 17.4 ஓவர்களில் நாலு விக்கட்டுகளை இழந்து 58 ரன்கள் எடுத்தது. ஜெய்ஸ்வால் இந்த இன்னிங்க்ஸிலும் சரியாக ஆடவில்லை. கருண் நாயர் மற்றும் ஷுப்மன் கில் இருவரும் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். இரவுக் காப்பாளராக வந்த ஆகாஷ்தீப் ஆட்டமிழந்ததும் ஆட்டத்தை நிறுத்திக்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
ஐந்தாம் நாளான இன்று வெற்றிக்கு இந்திய அணி 135 ரன் எடுக்க வேண்டும்; இங்கிலாந்து அணி 6 விக்கட்டுகள் எடுக்க வேண்டியிருந்தது. ஏற்கனவே ஜெய்ஸ்வால், கருண் நாயர், ஷுப்மன் கில் ஆகியோர் ஆட்டமிழந்திருந்ததால், ஆட்டமிழக்காமல் இருந்த ராகுல், அதிரடி ஆட்டக்காரர் (அதே சமயம் காயம் காரணமாக கீப்பிங் செய்யாமல் இருந்த) பந்தும் 135 ரன்னை அநாயசமாக அடித்து இந்திய அணி வெற்றி பெற்றுவிடும் என எண்ணியிருந்த நிலையில், பந்த் (9 ரன்), ராகுல் (39 ரன்), வாஷிங்க்டன் சுந்தர் (பூஜ்யம் ரன்), நிதீஷ் குமார் ரெட்டி (13 ரன்) ஆகியோர் அவர்களுக்குக் கிடைத்த வாய்ப்பை வீணடித்தனர்.
ரவீந்தர் ஜதேஜா கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆடி 61 ரன்கள் எடுத்தார். அவரொடு பும்ரா 54 பந்துகள் மற்றும் சிராஜ் 30 பந்துகள் விளையாடி இந்திய அணிக்கு வெற்றிதரப் பாடுபட்டனர். இருப்பினும் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினர்.
இறுதியில் இந்திய அணி 74.5 ஓவர்களில் 170 ரன் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. கடைசி நேர வெற்றி பேறும் உணர்வு ஆங்கிலத்தில் கில்லிங் இன்ஸ்டிங்க்ட் இந்திய அணியிடம் இல்லாமல் போனது.
“மணல் கொள்ளையைத் தடுத்தால் கொலை செய்வோம் என்று பொதுமக்களுக்கு விடப்பட்ட நேரடி மிரட்டல் இது. ” – என்று கு. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட சமூகத் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது…
கரூரில், மணல் கொள்ளையைத் தடுக்க முயற்சித்த திரு. மணிவாசகம் என்பவர், வாங்கல் வெங்கடேஷ் என்பவரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு பெண்கள் உட்பட, நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்ததும், அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஆற்றில் மணல் அள்ளலாம், அதனைத் தடுப்பவர்கள் இருக்க மாட்டார்கள் என்று, தேர்தல் பிரசாரத்தின்போது முன்னாள் அமைச்சர் திரு. செந்தில் பாலாஜி பேசியது, அனைவருக்கும் நினைவிருக்கும். இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட வாங்கல் வெங்கடேஷ் என்ற நபர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர் என்று தெரியவருகிறது.
கனிம வளக் கொள்ளையைத் தடுக்க முயற்சித்த அரசு அதிகாரிகளை, அவர்கள் அலுவலகத்திலேயே வைத்து வெட்டிக் கொலை செய்ததும் இதே திமுக ஆட்சியில்தான். தற்போது, இன்னொரு கொலை. மணல் கொள்ளையைத் தடுத்தால் கொலை செய்வோம் என்று பொதுமக்களுக்கு விடப்பட்ட நேரடி மிரட்டல் இது.
சட்டத்தைக் குறித்துச் சிறிதும் பயமின்றி, கொலை செய்யும் அளவுக்கு மணல் கொள்ளையர்களின் அராஜகம் அத்துமீறியிருக்கிறது என்றால், அவர்கள் பின்னணியில் கரூர் கேங் இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் முதலமைச்சர் திரு @mkstalin ?
திரு. மணிவாசகம் அவர்கள் இறப்பிற்கு நீதி வேண்டும். இந்தக் கொலையில் தொடர்புடையவர்கள், மணல் கொள்ளையின் பின்னணியில் இருப்பவர்கள் என அனைவரும், சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு, கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். இல்லையேல், கரூர் பொதுமக்களின் கடும் எதிர்ப்பினை திமுக அரசு சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துக் கொள்கிறேன்.
கரூரில், மணல் கொள்ளையைத் தடுக்க முயற்சித்த திரு. மணிவாசகம் என்பவர், வாங்கல் வெங்கடேஷ் என்பவரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு பெண்கள் உட்பட, நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்ததும், அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஆற்றில் மணல் அள்ளலாம், அதனைத்… pic.twitter.com/Jp5O8UsSkA
திருவள்ளுவரும் திருக்குறளும் தங்களுக்கே சொந்தம் என்பது போன்ற மனோபாவம் திமுகவினரிடம் உள்ளது.
அதிலும், முதல்வர் எதைச் சொன்னாலும் யோசிக்காமல் கை தட்டும் ஒரு கூட்டம் இருப்பதால், மனம் போனபடி பேசுகிறார் அவர்.
‘ ஆரியத்தில் சொந்தம் கொண்டாட யாரும் இல்லாததால், வள்ளுவருக்கு காவியடித்து திருடப் பார்க்கிறார்கள், ஏமாற்றுகிறார்கள் ‘ என்பது அவரது இன்றைய பேச்சு. அதாவது, பாஜகவினர் திருவள்ளுவரை திராவிடத்திடமிருந்து அபகரிக்கிறார்கள் என்பது அவர் கருத்து.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த திருவள்ளுவர் என்ன உடை அணிந்தார் என்று யாருக்கும் தெரியாது.
ஆனால், திருக்குறள் முற்றிலுமாக அவரது ஆன்மீக சிந்தனையை பிரதிபலிக்கிறது. அதிலும் ஹிந்து மதக் கருத்துகளைப் பிரதிபலிக்கும் வகையில் நூற்றுக்கணக்கான திருக்குறள்கள் உள்ளன.
இவ்வுலகம், அவ்வுலகம், மண்ணுலகம், விண்ணுலகம் என்று பல குறள்களில் இடம் பெற்றுள்ளது. சனாதனத்தின் பெருமையையும் பல குறள்கள் உணர்த்துகின்றன.
துறவு மனப்பான்மை உடைய ஒரு ஹிந்து முனிவரைப் போன்ற தெய்வீக சிந்தனைகளை அவர் பல இடங்களில் வெளிப்படுத்தியுள்ளதால், அவரை ஹிந்து துறவியாக நினைப்பதில் ஒரு தவறும் இல்லை.
திருக்குறளுக்கு மதம் இல்லை.திருவள்ளுவருக்கு மதம் உண்டு.
காவி என்பது பாஜகவின் நிறம் அல்ல. அது துறவு மனப்பான்மையை பிரதிபலிக்கும் நிறம். எனவே, காவி உடையை அவருக்கு அணிவித்து மகிழ்வது ஆன்மீகவாதிகளின் உரிமை. உடையின் நிறத்தால் அவரது பெருமை குறைந்து விடாது.
சொந்தம் கொண்டாட யாரும் இல்லாததால் திருவள்ளுவரை நாம் போற்றவில்லை . ஆன்மீகத்தை போதித்த ஆரியர்கள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும், அவர்களில் திருவள்ளுவர் முன் வரிசையில் இருப்பவர் என்பதால்தான் அவர் அதிகம் போற்றப்படுகிறார்.
இதைத்தான்
‘ திருவள்ளுவரைத் திருடப் பார்க்கிறது ஆரியக் கூட்டம்’ என்கிறார் திமுக தலைவர்.
‘ திருவள்ளுவர் ஆரியக் கைக்கூலி. திருக்குறள் மூட நம்பிக்கைக் களஞ்சியம்’ என்று பிதற்றிய ஈ.வெ.ரா.வின் வழியில் நடக்கும் திமுகவினரை விட மற்றவர்களுக்கு திருக்குறளையும் திருவள்ளுவரையும் சொந்தம் கொண்டாட அதிக உரிமை இருக்கிறது.
திருவள்ளுவரும், திருக்குறளும் பொதுச் சொத்து. உரை எழுதியவர்கள் என்பதாலேயே சொத்தின் உரிமையாளராக முடியாது. யாரும் யாரிடமிருந்தும் இச்சொத்தைத் திருட முடியாது.
தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாளை ஜூலை 14 மகா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது
இதற்காக மதுரை மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் இன்று திருப்பரங்குன்றம் புறப்பாடாகி சென்றனர். திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதால் மதுரை திருப்பரங்குன்றம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் விழாக்கோலம் பூண்டுள்ளது.
முருகப்பெருமான் அருளாட்சி புரியும் அறுபடை வீடுகளில் முதல்படை வீடு கொண்ட திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு நாளை திங்கட்கிழமை மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.இக் கோயிலில் ரூ.2 கோடியே 36 லட்சத்தில் 20 திருப்பணிகள் நடந்துள்ளது.
அதில் ரூ.90 லட்சத்தில் கோவிலின் கம்பீரமான சுமார் 125 அடி உயரம் கொண்ட ராஜகோபுரத்தில் பஞ்சவர்ணம் பூசப்பட்டு தயார்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கோவிலின் பிரதானமான கருவறையில் மின் விளக்குகள் பொருத்தல், பக்தர்கள் தரிசன வரிசையில் பித்தளை கம்பி பொருத்தல் உள்ளிட்ட சில பணிகள் நடந்துள்ளது.
இந்த நிலையில் ‘கல்கம்’ என்ற 55 வகையான மூலிகையை கொண்டு மருந்து சாத்தப்பட்டு தயார்படுத்தப்பட்டுள்ளது. கோவிலின் வெளிப்பிரகாரத்தில் உள்ள சஷ்டி மண்டபம் மற்றும் வள்ளி தேவஸ்தான மண்டபம் வளாகத்தில் 75 குண்டங்கள் அமைத்து கடந்த 10-ந் தேதி யாக சாலை அமைக்கப்பட்டு முதல் கால வேள்விகள் நடந்தது.
கடந்த 11-ந் தேதி காலை மற்றும் மாலையில் 2-ம் கால, 3-ம் கால யாகவேள்விகள் நடந்தது. நேற்று காலையிலும், மாலையிலுமாக 4-ம் கால மற்றும் 5-ம் கால யாகவேள்வி நடந்தது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) 6-ம் கால மற்றும் 7-ம் கால யாக வேள்விகள் நடந்தது. நாளை திங்கட்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு 8-ம் கால யாக வேள்விகள் நிறைவு பெறுகிறது.
தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் இருந்து வந்துள்ள 150 சிவாச்சாரியர்கள் யாகசாலை பூஜை செய்து வருகின்றனர். 85 ஒதுவார்கள் மூலம் தமிழ் வேத பாராயணம் நடந்து வருகிறது.
நாளை அதிகாலை 4.30 மணியளவில் யாகசாலையில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க ராஜகோபுரத்திற்கு தங்கம், வெள்ளி கடம் புறப்பாடு நடக்கிறது. அங்கு அதிகாலை 5.25 மணிக்கு ராஜகோபுரத்தில் கும்பாபிஷேகம் நடைபெறம்.
திருப்பரங்குன்றத்தில் நாளை மகா கும்பாபிஷேகம் நடை பெறுவதை பார்க்க மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் இன்று திருப்பரங்குன்றம் புறப்பட்டு சென்றனர்
நாளை அதிகாலை 4.30 மணியளவில் யாகசாலையில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க ராஜகோபுரத்திற்கு தங்கம், வெள்ளி கடம் புறப்பாடு நடக்கிறது. அங்கு அதிகாலை 5.25 மணிக்கு ராஜகோபுரத்தின் 7 கலசங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டு கோலாகலமாக கும்பாபிஷேகம் நடக்கிறது.
இதே போல கோவிலுக்குள் உள்ள கோவர்த்தனாம்பிகையின் விமானம், விநாயகரின் விமானம் மற்றும் பசுபதி ஈசுவரர் விமானத்திற்கு மேள தாளங்கள் முழங்க கடம் புறப்பாடாகி புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது. ராஜகோபுரம் மற்றும் விமானங்களுக்கு கும்பாபிஷேகம் முடிந்ததும் காலை 6.10 மணியளவில் கோவிலின் கருவறையில் முருகப்பெருமானின் திருக்கரத்தில் மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது.
இந்த நிகழ்வில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்கிறார்கள். கும்பாபிஷேக ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் ப.சத்யபிரியா பாலாஜி, அறங்காவலர்கள் வ.சண்முகசுந்தரம், நா.மணிச்செல்வன், கோவில் துணை கமிஷனர் சூரியநாராயணன், சிவாச்சாரியர்கள், கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை (திங்கட்கிழமை) கும்பாபிஷேகம் நடக்க இருப்பதை முன்னிட்டு மீனாட்சி, சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு கோவில் இருந்து புறப்பாடாகி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் எழுந்தருளுகிறார்கள்.
எனவே இன்று மாலை 6 மணி வரை மட்டுமே மீனாட்சி கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். பின்னர் கோவிலில் பூஜைகள் நடைபெற்று அன்று இரவு 10 மணிக்கு மீனாட்சி, சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி நள்ளிரவு திருப்பரங்குன்றம் கோவிலை சென்றடைவர்.
அங்கு நாளை கும்பாபிஷேக விழாவில் எழுந்தருளி மீண்டும் இரவு திருப்பரங்குன்றம் கோவிலில் இருந்து புறப்பாடாகி நள்ளிரவு மதுரை மீனாட்சி, சுந்தரேசுவரர் கோவிலில் வந்து சேர்த்தியாவார்கள். எனவே நாளை முழுவதும் மீனாட்சி அம்மன் கோவில் நடைசாத்தப்பட்டிருக்கும். இன்று மாலை 6 மணி முதல் மறுநாள் 14-ந் தேதி முழுவதும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
மேலும் பக்தர்களின் வசதிக்காக இன்று மாலை 6 மணி முதல் மற்றும் நாளை (14-ந் தேதி) முழுவதும் தற்போது வழக்கத்தில் உள்ளபடி கலைக்கூடத்திற்கும் (ஆயிரங்கால் மண்டபம்) மற்றும் அன்னதானத்திற்கும் அத்துடன் அன்றைய தினம் நடைபெறும் திருமணங்களுக்கு வன்னிமரத்தடி விநாயகர் கோவிலுக்கும் பக்தர்களை ஆடிவீதிகளில் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் 15-ந் தேதி வழக்கம் போல் அதிகாலை முதல் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் கலசங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டு கோலாகலமாக கும்பாபிஷேகம் நடக்கிறது.
இதே போல கோவிலுக்குள் உள்ள கோவர்த்தனாம்பிகையின் விமானம், விநாயகரின் விமானம் மற்றும் பசுபதி ஈசுவரர் விமானத்திற்கு மேள தாளங்கள் முழங்க கடம் புறப்பாடாகி புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது. ராஜகோபுரம் மற்றும் விமானங்களுக்கு கும்பாபிஷேகம் முடிந்ததும் காலை 6.10 மணியளவில் கோவிலின் கருவறையில் முருகப்பெருமானின் திருக்கரத்தில் மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது.