Home Blog Page 77

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நவக்கிரக சந்நிதி பிரதிஷ்டை கோலாகலம்!

sabarimala navagraha kumbabishekam - 2026

உலக பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலில் நவகிரக சன்னதி கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை ஜூலை 13ல் கோலாகலமாக நடைபெற்றது. கும்பாபிஷேக பூஜைகள் பிரதிஷ்டை சபரிமலை தந்திரி பிரம்மஶ்ரீ கண்டரரு ராஜீவரரு தலைமையில் இன்று நடைபெற்றது

சபரிமலையில் சுவாமி ஐயப்பன் கோயில் அருகே உள்ள மாளிகைபுரம் மஞ்சமாதா கோயிலின் இடது புறம் உள்ள நவக்கிரக மண்டபத்தை வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என்று தேவப்பிரசன்னத்தில் கூறப்பட்டது. இதை தொடர்ந்து புதிய கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கான பிரதிஷ்டை ஜூலை 13- ம் தேதி இன்று நடைபெற்றது. இதற்காக சபரிமலை நடை ஜூலை 11-ம் தேதி மாலை 5:00 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரரு தலைமையில் சுத்திக்கிரியைகள் நடைபெற்றது .

ஜூலை 12- ம் தேதி பிரதிஷ்டைக்கு முன்னோடியான பூஜைகள் நடைபெற்றன .ஜூலை 13 -அதிகாலை கணபதி ஹோமம், உஷ பூஜை, மரப்பாணி ஆகிய சடங்குகளுக்கு பின்னர் இன்று காலை 11:00 முதல் 12:00 மணிக்குள் நவக்கிரக கோயில் பிரதிஷ்டை நடைபெற்றது.

இன்று இரவு சபரிமலை நடை அடைக்கப்படும்.அதன் பின் ஜூலை 16- மாலை ஆடி பூஜை களுக்காக நடை திறக்கப்படுகிறது. ஜூலை 11 முதல் 13- வரை சபரிமலையில் தரிசனத்திற்கு ஆன்லைன்முன்பதிவு தொடங்கியது.

தமிழகத்தில் வெயில் கொளுத்தி வரும் நிலையில் சபரிமலையில் மிதமான மழை பெய்து வருகிறது.பம்பை நதியில் தூய நீரில் பக்தர்கள் நீராடி சென்றனர்.

ஜுடோ போட்டி: தொடர்ந்து 13வது முறையாக சாம்பியன்ஷிப் வென்ற கரூர் பள்ளி!

karuru barani park school in judo competition - 2026
தென்னிந்திய சிபிஎஸ்இ ஜூடோ போட்டியில் சாம்பியன்ஷிப் கோப்பையை தொடர்ந்து 13வது முறையாகப் வென்று கரூருக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த கரூர் பரணி வித்யாலயா பள்ளி மாணவர்கள், சாதனைக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாடு ஜூடோ சங்க மாநில துணைத் தலைவரும் பரணி வித்யாலயா முதன்மை முதல்வருமான ராமசுப்பிரமணியன், பரணி வித்யாலயா முதல்வர் சுதாதேவி, துணை முதல்வர் பிரியா, ஜூடோ பயிற்சியாளர்கள் மற்றும் வீரர், வீராங்கனைகளைப் பாராட்டி வாழ்த்தும் பரணி பார்க் கல்வி குழும தாளாளர் மோகனரெங்கன், சிபிஎஸ்இ தென் மணடல துணை செயலாளர் பரமசிவம், கரூர் ஸ்ரீ சங்கர வித்யாலயா பள்ளி தாளாளர் அசோக் சங்கர், பள்ளி அறங்காவலர் சுபாஷினி, தமிழக உடற்கல்வி தலைமை ஆய்வாளர் ஜெயலட்சுமி ஆகியோர்.

தென்னிந்திய சிபிஎஸ்இ ஜுடோ போட்டி: தொடர்ந்து 13வது முறையாக சாம்பியன்ஷிப் வென்றது கரூர் பரணி வித்யாலயா!

இந்திய அரசின் மத்திய கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) பள்ளிகள் தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, புதுச்சேரி, அந்தமான் நிகோபார் ஆகிய தென் மண்டல மாநிலங்களில் இருந்து 138 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் ஆயிரம் மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட தென்னிந்திய ஜூடோ விளையாட்டுப் போட்டி 11.07.2025 முதல் இன்று 13.07.2025 வரை கரூர் பரணி வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது. இதில் 11, 14, 17, 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவுகளில் ஆண் பெண் இருபாலரும் சேர்த்து மொத்தம் 63 எடை பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

மூன்று நாட்கள் நடைபெற்ற போட்டிகளின் முடிவில் கரூர் பரணி வித்யாலயா பள்ளி 21 தங்கம், 12 வெள்ளி, 14 வெண்கலம் வென்று 155 புள்ளிகள் பெற்று பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்து தென் மண்டல சிபிஎஸ்இ ஜூடோ சாம்பியன்ஷிப் கோப்பையை தொடர்ந்து 13-வது முறையாக வென்று தமிழகத்துக்குப் பெருமை சேர்த்துள்ளனர். தொடர்ந்து வேளாங்கண்ணி பள்ளி 4 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் வென்று 26 புள்ளிகள் பெற்று இரண்டாமிடத்தையும், வேலம்மாள் நெக்ஸஸ் பள்ளி 4 தங்கம், 1 வெண்கலம் வென்று 21 புள்ளிகள் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.

தென்னிந்திய சிபிஎஸ்இ ஜூடோ போட்டி பரிசளிப்பு விழாவிற்கு பரணி பார்க் கல்வி குழும தாளாளர் மோகனரெங்கன், செயலர் பத்மாவதி தலைமை தாங்கினர். சிபிஎஸ்இ தென் மணடல துணை செயலாளர் பரமசிவன், கரூர் ஸ்ரீ சங்கர வித்யாலயா பள்ளி தாளாளர் அசோக் சங்கர், பள்ளி அறங்காவலர் சுபாஷினி, தமிழக உடற்கல்வி தலைமை ஆய்வாளர் ஜெயலட்சுமி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சாதனை மாணவர்களையும் சாதனைக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாடு ஜூடோ சங்க மாநில துணைத் தலைவரும் பரணி வித்யாலயா முதன்மை முதல்வருமான ராமசுப்பிரமணியன், பரணி வித்யாலயா முதல்வர் சுதாதேவி, துணை முதல்வர் பிரியா, ஜூடோ பயிற்சியாளர்கள் துரை, முத்துலட்சுமி, கார்த்திக், பார்த்திபன், சங்கீதா ஆகியோரைப் பாராட்டி வாழ்த்தினர். விழாவில் பரணி பார்க் முதல்வர் சேகர், எம்.குமாராசாமி கல்வியியல் கல்லூரி முதல்வர் சாந்தி, ஆசிரியர்கள், பெற்றோர் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

மொத்தம் 63 எடை பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்ற 136 வீரர், வீராங்கனைகள் செப்டம்பர் மாதம் இராஜஸ்தானில் நடைபெற உள்ள தேசிய சிபிஎஸ்இ ஜூடோ போட்டிகளில் ‘தென் மண்டலம்’ சார்பாக கலந்து கொள்ள உள்ளார்கள்.

சபரிமலை நவக்கிரக சந்நிதி கும்பாபிஷேகம்… நாளை!

IMG 20250712 WA0027 - 2026

சபரிமலை நவகிரக கோயில் கும்பாபிஷேகம் நாளை ஞாயிற்றுக்கிழமை ஜூலை 13ல் நடைபெற உள்ள நிலையில் இன்று கும்பாபிஷேக பூஜைகள் சபரிமலை தந்திரி பிரம்மஶ்ரீ கண்டரரு ராஜீவரரு தலைமையில் இன்று துவங்கியது.

சபரிமலை மாளிகைபுரம் கோயிலின் இடது புறம் உள்ள நவக்கிரக மண்டபத்தை வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என்று தேவப்பிரசன்னத்தில் கூறப்பட்டது. இதை தொடர்ந்து புதிய கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கான பிரதிஷ்டை ஜூலை 13- ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக சபரிமலை நடை ஜூலை 11-ம் தேதி மாலை 5:00 மணிக்கு திறக்கப்பட்டது.

தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரரு தலைமையில் சுத்திக்கிரியைகள் நடைபெற்றது .ஜூலை 12- ம் தேதி பிரதிஷ்டைக்கு முன்னோடியான பூஜைகள் நடைபெற்றன .ஜூலை 13 -அதிகாலை கணபதி ஹோமம், உஷ பூஜை, மரப்பாணி ஆகிய சடங்குகளுக்கு பின்னர் காலை 11:00 முதல் 12:00 மணிக்குள் நவக்கிரக கோயில் பிரதிஷ்டை நடைபெறும்.

அன்று இரவு சபரிமலை நடை அடைக்கப்படும்.அதன் பின் ஜூலை 16- மாலை ஆடி பூஜை களுக்காக நடை திறக்கப்படுகிறது.

ஜூலை 11 முதல் 13- வரை சபரிமலையில் தரிசனத்திற்கு ஆன்லைன்முன்பதிவு தொடங்கியது.

தமிழகத்தில் வெயில் கொளுத்தி வரும் நிலையில் சபரிமலையில் மிதமான மழை பெய்து வருகிறது.

களைகட்டத் தொடங்கிய திருப்பரங்குன்றம்! 14ல் கும்பாபிஷேகம்!

IMG 20250712 WA0023 - 2026
  • என். ரவிச்சந்திரன்.

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மகா குடமுழுக்குக்கு இன்னும் ஒரே நாள் மட்டும் உள்ள நிலையில் திருப்பரங்குன்றம் களைகட்ட தொடங்கி இருக்கிறது- முன்னேற்பாடுகள் தீவிரம்:

ஆறுபடை வீடுகளில் தமிழ் கடவுள் முருகனின் முதல் படை வீடான
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவில் மகா குடமுழுக்கு நடைபெற இன்னும் ஒரே நாளில் உள்ளது.


இந் நிலையில், திருப்பரங்குன்றம் கோவில் பகுதி களைக்கட்ட தொடங்கி உள்ளது.  வருகிற 14-ஆம் தேதி காலை 5:10 மணி முதல் 6:20 மணிக்குள் குடமுழுக்கு நடைபெற உள்ளது.
கும்பாபிஷேகத்திற்காக 2 கோடியே 37 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் முதல் அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.


ராஜகோபுரம் திருவாச்சி மண்டபம், கோவர்த்தன அம்பிகை கோவில், கணபதி மண்டபம் ஆகிய பகுதிகளில் வர்ணம் பூசும் பணிகள், கோவில் முன்பு பந்தல் மற்றும் மின்விளக்குகள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது.


தொடர்ந்து, குடமுழுக்கிந்கான சுமார் 5 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலரத வீதி, .சன்னதி தெரு, கீழ ரத வீதிகளில் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகிறது.


பக்தர்களுக்கு, தற்காலிகமாக 20 க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் பக்தர்கள் குடமுழுக்கினைக் காணும் வகையில் எல் இ டி திரைகள் வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மாநகர காவல் ஆணையர் முனைவர் லோகநாதன் தலைமையில் பாதுகாப்பு பணிக்காக 3000க்கும் மேற்பட்ட காவல்
துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.


கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு , மாவட்ட நிர்வாகம் சார்பில் திருப்பரங்குன்றம் வட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், 14 மண்டபங்களில் 5 லட்சம் பக்தர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


மேலும், அவசர மற்றும் மீட்பு பணிகளுக்காக தீயணைப்பு வாகனங்கள் பேரன்களில் உள்ளது.
சுகாதாரத் துறை சார்பில் ஐந்திற்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் முதலுதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

75 வயதானதும் ஓய்வு; என்ன சொன்னார் ஆர்எஸ்எஸ் தலைவர்?

mohan bhagavat rss leader - 2026

நாக்பூர், ஜூலை 9, 2025 அன்று ஆர்.எஸ்.எஸ். சர்சங்கசாலக் மோகன் பாகவத், சங்கத்தின் முக்கிய நிர்வாகியாக இருந்த மோரோபந்த் பிங்கிளே வாழ்க்கையை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள Moropant Pingle: The Architect of Hindu Resurgence புத்தகத்தை வெளியிட்டார்.

மோரோபந்த் பிங்கிளேயின் அவரது அசாதாரண வாழ்க்கையையும் பங்களிப்பையும் பற்றி இந்த புத்தகம் விவரிக்கிறது.

சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மூத்த ஸ்வயம்சேவகர்கள் மத்தியில் புத்தகத்தை வெளியிட்டு பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர், திரு பிங்கிளே அவரது வாழ்க்கையில் இருந்து சுவாரசியமான நிகழ்வுகளைப் பகிர்ந்தார்.

பிங்கிளேயின் வாழ்க்கையில் இருந்து பரவலாக அறியப்படாத சம்பவங்களை பகிர்ந்து கொண்டார். இந்த சம்பவங்கள், கடுமையாக உழைத்த ஒரு நிர்வாகியாக மட்டுமில்லாமல், புகழை புன்னகையுடன் தவிர்த்த ஒரு மிகவும் பணிவான மனிதராகவும் அவரை அடையாளப்படுத்தின.

ஒருமுறை விருந்தாவனத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் நடைபெற்ற ஒரு நிகழ்வை நினைவு கூர்ந்த ஸ்ரீ மோகன் பாகவத், பிங்கிளே 75 வயதை எட்டிய நாளைப் பற்றி பேசினார். சங்கத்தின் மற்றொரு முக்கிய அதிகாரியான திரு. எச்.வி. ஷேஷாத்ரி, 75 வயதை எட்டியதை கௌரவிக்கும் வகையில் மோரோபந்த் அவர்களுக்கு ஒரு பாரம்பரிய சால்வையை போர்த்தினார். பின்னர் பேசிய பிங்கிளே ஜி, தனது தனித்துவமான நகைச்சுவையுடன் தொடங்கினார்.

அவர் கூறினார், ‘நான் பேசத் தொடங்குவதற்கு முன்பே மக்கள் சிரிக்கிறார்கள். அவர்கள் என்னை தீவிரமாக எடுத்துக் கொள்வதில்லை என்று அடிக்கடி உணர்கிறேன். நான் வேடிக்கையாக எதுவும் சொல்லாவிட்டாலும், அவர்கள் சிரிக்கிறார்கள்’” என்று கூறியவுடன் அரங்கம் சிரிப்பொலியால் நிரம்பியது. மேலும் பிங்களே அவர்கள் தொடர்கையில் “நான் இறந்தால், மக்கள் முதலில் ஒரு கல்லை எறிந்து நான் உண்மையில் இறந்துவிட்டேனா என்று சோதிப்பார்கள் என்று நினைக்கிறேன்”.

“75 வயதானதற்கு சால்வை பொருத்துவதன் அர்த்தம் என்னவென்று எனக்குத் தெரியும். இது பெரும்பாலும் ஒருவருக்கு அவர்களது நேரம் முடிந்துவிட்டது, இப்போது ஒதுங்க வேண்டும் என்று மரியாதையாகச் சொல்லும் ஒரு வழியாகும்.” என்று கூறி சிரித்தார், என்று மோரோபந்த் பிங்கிளே பற்றி குறிப்பிட்டார் ஸ்ரீ மோகன் பாகவத்.

தொடர்ந்து பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர், ”பிங்களே அவர்களின் இந்த நகைச்சுவைக்கு பின்னால், பணிவு மற்றும் பற்றின்மை பற்றிய ஆழமான செய்தி இருந்தது. எந்த ஒரு புகழ்ச்சியின் மீதும் உணர்ச்சிப்பூர்வமாக பற்றுதல் கொள்ளாமல் எச்சரிக்கையாக இருந்தார்.

வரலாற்றாசிரியர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அறிஞர்களால் எழுதப்பட்ட இந்தப் புத்தகம், மோரோபந்த் பிங்கிளே சுதந்திர இந்தியாவில் இந்து கலாச்சார சிந்தனையின் மறுமலர்ச்சியில் எவ்வாறு முக்கிய பங்கு வகித்தார் என்பதை ஆராய்கிறது. திட்ட நிபுணராக அறியப்பட்ட பிங்கிளே, சங்கத்தின் நீண்டகால தொலைநோக்கு மற்றும் விரிவாக்கத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார், இருப்பினும் அவர் எப்போதும் தன்னை முன்னிலைப்படுத்தியதில்லை” என்று பேசினார் மோகன் பாகவத்.

“பின்களேவின் வாழ்க்கை அமைதியான தலைமைத்துவத்திற்கு ஒரு பாடமாகும்,” அவர் ஒருபோதும் புகழைத் தேடவில்லை, ஆனால் அவரது செல்வாக்கு இன்னும் சங்கத்தின் திசையை வடிவமைக்கிறது.” என்று உரையை முடித்தார் ஸ்ரீ மோகன் பாகவத்.

டாக்டர் மோகன் பாகவத்தின் பேச்சானது பல தலைமுறை ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கு வழிகாட்டியாக இருந்த மோரோபந்த் பிங்கிளே என்ற ஒரு மனிதரின் தனிப்பட்ட தத்துவத்தைப் பற்றிய அரிய கண்ணோட்டங்களை வழங்கின. இந்த நிகழ்வில், பிங்கிளேயின் தொலைநோக்கு சிந்தனை மற்றும் சுதந்திர இந்தியாவில், பல்வேறு சித்தாந்தங்கள் மற்றும் சமுதாய பணிகளை ஒருங்கிணைப்பதில் அவர் ஆற்றிய பங்கு குறித்தும் பேசப்பட்டன.இந்த வாழ்க்கை வரலாறு புத்தகம் தற்போது ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது. வரவிருக்கும் மாதங்களில் பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் சில ஊடகங்கள், ஸ்ரீ மோகன் பாகவத் அவர்கள், மோர்பந்த் பிங்களே அவர்களின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை பற்றி பேசியதில் இருந்து, குறிப்பிட்ட சில வரிகளை மட்டும் வெளியிட்டு, தற்கால அரசியல் கண்ணோட்டத்துடன் ஒப்பிட்டு, தற்போது அரசியல் பொறுப்பில் உள்ளவர்களின் வயதுடன் ஒப்பிட்டு, தவறாக செய்திகள் வெளியிட்டு வருகின்றன.

விமான கருப்புப் பெட்டியில் வெளிவந்த உண்மைகள்; எழும் கேள்விகள்!

air india flight collapsed in ahmedabad - 2026

ஏன் அணைத்தீர்கள்.?

காக்பிட் உரையாடலில் விமானி கேட்பது பதிவாகி இருக்கிறது.கடந்த மாதம் இதே 12 ஆம் தேதியன்று ஏர் இந்தியாவின் AI-171 விமான விபத்தின் இந்திய புலனாய்வு குழு AAIB யின் அறிக்கை இன்று காலை வெளியாகி பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

விமான இஞ்சின்களுக்கான எரிபொருள் செல்லும் சுவிட்ச் அணைத்து வைக்கப்பட்டது குறித்து கொல்லப்பட்டிருந்தது. இன்றைய தினம் அதிகாரப்பூர்வமாக வெளியாக அறிக்கையில்……. கருப்பு பெட்டியில் பதிவான காக்பிட் அறையின் பதிவான குரலில் தலைமை விமானி அதாவது பஸ்ட் ஆபிசர் இப்படி கேட்பது தெள்ளத்தெளிவாக பதிவாகி இருக்கிறது.

அதற்கு துணை விமானி நான் ஏதும் அணைக்கவில்லை என்கிறார். அதுவும் பதிவாகியுள்ளது…. இந்த உரையாடகளை எல்லாம் நேர நிமிட விநாடிகள் வாரியாக வெளியிட்டு இருக்கிறார்கள்.

அந்த விமானம் புதுடெல்லியில் இருந்து AI-423 என்கிற அடையாளத்துடன் அகமதாபாத்திற்கு காலை 10:17 மணிக்கு வந்திருக்கிறது என்பதில் இருந்து நீள்கிறது அவர்களுடைய அறிக்கை.

அங்கு இருந்து லண்டன் செல்ல இந்த விமானத்தை டாக்ஸி வே இடத்தில் கொண்டு சென்றது மதியம் 1:18:38.அது AI 171 எனும் தட இலக்கத்தோடு ரன் வேயில் ஓடி டேக் ஆஃப் ஆன சமயம் மதியம் 1:37.வானில் பறக்க உயர்ந்த சமயம் இந்த சுவிட்ச் ஆப் ஆனது 1:38:48.மீண்டும் அந்த சுவிட்ச் ஆன் செய்யப்பட்டது 1:38:58.விமானி மே டே அறிவிப்பு ATC க்கு கொடுத்தது 1::39:05.விமான விபத்து நடந்திருப்பது 1:39:11.அத்தனையும் துல்லியமாக தங்கள் நான்கு பக்க அறிக்கையில் தெளிவாக வெளியிட்டு இருக்கிறார்கள்.

இதன்படி பார்த்தால் அந்த புறப்பட்ட 2 நிமிடம் 11 விநாடிகளில் மொத்தமும் முடிந்துவிட்டது. விமானங்களின் மொத்த மாதிரியும் சேகரித்து அகமதாபாத்தில் உள்ள விமான நிலைய ஹேங்கரில் பத்திரப் படுத்தி வைத்து இருக்கும் படி போயிங் நிறுவனம் மற்றும் அமெரிக்க அரசாங்கத்தின் FAA கேட்டு கொண்டு இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விமானத்திற்கு பயன்படுத்தப்பட்ட எரிபொருளில் எந்த ஒரு தவறுகளும் இல்லை என்பதை ஊர்ஜிதம் செய்தவர்கள்…. அது மொத்தமும் கைப்பற்றி மாதிரிகளை உலகின் பல தொழில்நுட்ப ஆய்வுகளுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

இங்கு மற்றோர் விஷயமும் நேற்றைய தினம் அமெரிக்க FAA வில் விவாதித்து இருக்கிறார்கள். அது இந்த சுவிட்ச் குறித்து கேள்வி ஒன்றை 2018 ஆம் ஆண்டிலேயே எழுப்பி போயிங் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அது பதிவாகியுள்ளது.

அதுவும் தற்சமயம் விசாரிக்கப்பட்டு வருகிறது.ஏற்கனவே இதேபோலான சம்பவம் நடைபெற்று இருப்பதும் தற்சமயம் வெளியாகியுள்ளது. அப்போது அந்த விமானம் வானில் 36,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்ததால் மீண்டும் உடனடியாக சுவிட்ச் சரி செய்யப்பட்டதாக பதிவுகள் இருப்பதாலேயே இந்த சுவிட்ச் குறித்த கேள்வி FAA எழுப்பி இருந்ததாக சொல்கிறார்கள்.கூடவே இந்த விமானம் கடல் மட்டத்திலிருந்து வெறும் 480 உயரம் மட்டுமே முழுவேகத்தில் எழும்பி இருக்கிறது என்பதையும் விமானத்தின் கருப்பு பெட்டி தரவுகள் சொல்லியிருப்பதையும் நேற்றைய அவர்களின் தகவலில் இடம் பெற்றுள்ளது.வட மாநில ஊடகங்களில் இன்று இது தான் பேச்சு பொருள்.

ஏதோவொரு அமானுஷ்யம் இதில் பொதிந்து கிடக்கிறது. வெளிவர பல மாதங்களும் பிடிக்கலாம் போலிருக்கிறது. அதுவரையில் யாருடைய…. எந்த நிறுவனத்துடைய கனவு கோடும் (dream liner). கலைந்து விடாமல் இருந்தால் சரி. பார்க்கலாம்.

  • ஜெய் ஹிந்த ஸ்ரீராம்

நவக்ரஹ சந்நிதி பிரதிஷ்டை க்காக சபரிமலை நடை திறப்பு!

IMG 20250711 WA0037 - 2026

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயில் நவக்கிரக சன்னதி பிரதிஷ்டை க்காக இன்று மாலை நடை திறக்கப்பட்டது.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்கள் தவிர, மாதாந்திர வழிபாட்டுக்காக ஒவ்வொரு மாதமும் திறக்கப்படுவது வழக்கம். இது தவிர ஓணம், விஷு, பிரதிஷ்டை உள்ளிட்ட சிறப்பு தினங்களிலும் நடை திறக்கப்படும்.

தற்போது
சபரிமலை மஞ்சமாதா கோயில் அருகே புதிய நவக்கிரக சன்னதி கட்டப்பட்டது.
பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்பட்டது. முன்னதாக தந்திரி கண்டரரு ராஜீவரரு, பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபமேற்றி பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.

அதன்பின் கற்பூர ஆழியில் தீ மூட்டப்பட்டது. நாளை சனிக்கிழமை நவக்கிரக சன்னதி பிரதிஷ்டை முன்னோடி பூஜைகள் நடத்தி ஜூலை13 காலை வேதபாராயண முறைப்படி நவக்கிரக சன்னதியில் நவக்கிரகங்களுக்கு கும்பாபிஷேகம் செய்து அலங்காரம் பூஜைகள் நடத்தி பிரதிஷ்டை சடங்கு வழிபாடுகள் நடைபெறும்.இரவு நடை அடைக்கப்படும்.

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு
இந்த மாதம் ஜுலை -2025 ல் மூன்று முறை திறக்கப்பட்டு பூஜை வழிபாடுகள் நடைபெறும்.
.
நவகிரகங்கள் பிரதிஷ்டைக்காக
11.7.2025 இன்று மாலை 5 மணி திருநடை திறக்கப்பட்ட்டது. 13.7.2025 இரவு 10 மணிக்கு திருநடை சாத்தப்படும்.

மீண்டும் ஆடி கற்கடகம் மாத பூஜைக்காக 16.7.2025 மாலை 5 மணிக்கு திருநடை திறக்கப்படும் 21.7.2025 இரவு 10 மணிக்கு திருநடை சாத்தப்படும்.

மீண்டும் நிறைபுத்தரி பூஜைக்காக
29.7.2025 மாலை 5 மணிக்கு திருநடை திறக்கப்படும் 30.7.2025 இரவு 10 மணிக்கு திருநடை சாத்தப்படும்

அந்த விமான விபத்தின் முதல் காரணம்!

air india flight collapsed in ahmedabad - 2026

விமானம் கீழே சரிந்த கொண்டு இருக்கிறது இரண்டு இஞ்சின்களும் செயல் இழந்து விட்டது….
இந்த தகவல் தான் கடந்த ஜூன் மாதம் 12 ஆம் தேதி மதியம் ATC க்கு வந்தது.

இது அகமதாபாத்தில் இருந்து லண்டன் செல்ல அப்போது தான் டேக் ஆஃப் ஆன AI 171 இல் வந்திருந்தது. மீண்டும் இவர்கள் தொடர்பு கொள்ள விமானம் அங்கு இல்லை. இவர்கள் ATC, அதாவது ஏர் ட்ராஃபிக் கன்ட்ரோல் டவரில் இருந்து பார்க்க விமானம் அருகில் மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருந்த மருத்துவ கல்லூரி விடுதியில் விழுந்து வெடித்து தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்தது.

அதிர்ச்சியில் உறைந்து போனார்கள் அங்கிருந்தவர்கள்.

உலக நாடுகளிலும் ஒரு கனம் ஆடித் தான் போனார்கள்.

காரணம்…… அமெரிக்க போயிங் நிறுவனத்தின் தயாரிப்பான மிகவும் நம்பகமான விமானமாக அதுவரை கருதப்பட்ட போயிங் 787 டீரீம் லைனர் முதல் முறையாக முற்றிலும் எரிந்து சேதமடைந்ததிருந்தது‌.

இந்த AI 171 விமான விபத்தின் காரணம் இன்று வெளியிட்டுள்ளது.

அதில் விமானத்திற்கான எரிபொருள் அணைக்கப்பட்டு இருந்ததாக…. ஊர்ஜிதம் செய்து இருக்கிறார்கள்.

இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இதனை கைகளால் மட்டுமே…. அதாவது விமானிகளால் மட்டுமே இயக்க…, அணைக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்ட ஓர் பொறிமுறை என்பதால் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

விமான இஞ்சினில் தீ ஏற்பட்டால் விமானியால் அணைக்க இந்த பொறிமுறை அங்கு வைக்கப்பட்டிருக்கிறது‌. தவிர இது டெக்னிக்கல் டூல்… அதாவது கம்ப்யூட்டரால் இயங்கும் ஸ்வீட்ச் இல்லை…. ஹேக் செய்துவிட்டதாக சொல்வதற்கு…. அப்படி என்றால் விமானம் டேக் ஆஃப் ஆன பிறகு தான் இஞ்சின்களுக்கான எரிபொருளை நிறுத்தி வைக்க அவசியம் என்ன வந்தது என்கிற கேள்வியும் வருகிறது.

விமான இஞ்சின் இரண்டுமே இரண்டு வெவ்வேறான எரிபொருள் குழாய் மூலம் சப்ளை செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டு இருந்தாலும் அந்த இரண்டு குழாய்களுக்கென்று இரண்டு தனித்தனி குமிழ் சுவிட்ச் கொடுக்கப்பட்டு ஏதேச்சையாக கை பட்டு அது இயங்கி விடக்கூடாது என்பதற்காக அழுத்தி கீழே இறக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டு இருந்திருக்கின்றது. இந்த விமானத்திலும் அப்படி இருக்க….. ஏன் இதை இயக்கினார்கள் என்பது தெரியவில்லை.

இரண்டு சுவிட்ச்களை தனித் தனியே… அதேசமயம் இரண்டையும் அணைத்து வைத்து இருக்கிறார்கள்.

ஏன்……. தெரியவில்லை..,

இந்த விபத்தில் உயிர் பிழைத்த ஒரேயொரு பயணி… 11A சீட்டில் இருந்த பயணி மீது பலரது கவனமும் திசை திரும்பி இருந்தது விபத்து நடந்த வாரத்தில்….. கதவு திறந்து வந்ததாக அவர் சொன்னதாக சமூக வலைத்தளங்களில் வெளிவந்தது தான் அதற்கு காரணம். ஆனால் அவர் விமானம் விழுந்த சமயம் விமானத்தின் இடது புற இறக்கை ஓரம் முதலில் கட்டிடத்தில் தட்டி… தூக்கி வீசப்பட்டு மணல் குவியலில் விழுந்தது ஊர்ஜிதம் ஆனதால் விட்டுவிட்டார்கள்.

அடுத்ததாக விமானத்தின் கருப்பு பெட்டி புதுடெல்லிக்கு கொண்டு வருவதில் சிக்கல் எழுந்தது. வேறு ஒரு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல உத்தேசித்து கடைசி நேர மாறுதலாக டெல்லியிலேயே வைத்து ஆராய்ந்து வருகிறார்கள். இதனையொட்டி அமெரிக்க புலனாய்வு குழுவினர் இதிலிருந்து வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுவும் ஓர் வகையாக சர்ச்சையை கிளப்பி விட்டு இருக்கிறது.

விமான விபத்தில்….. ஏற்படுத்தப்பட்ட காரணங்களால் விபத்து நிகழ்ந்தால் இழப்பீட்டு தொகை கூடும். தனி நபர் இன்ஷூரன்ஸ் அது தனி.

மேற்சொன்ன விபத்தில் இழப்பீட்டு தொகை கூடும் என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்….

புற காரணிகள் காரணமாக விபத்து நடந்திருப்பதாக…. விமான கோளாறு காரணமாக விபத்து நடக்கும் வாய்ப்பு மிக மிக குறைவான இருந்திருக்கின்றது என்பதாக… விசாரணை சென்று கொண்டு இருக்கிறது.

விமான விபத்து நடைபெற்றால்..
இது விமானத்தை தயாரித்த நிறுவனம்… அந்த நிறுவனம் இருக்கும் நாடு… அதை வாங்கிய நாடு….. அதை இயக்கிய நிறுவனம்.. என பலரும்…. பலருக்கும் சிக்கலை உண்டாக்கும்.

இது இந்த விபத்து உண்டாக்கும் போலிருக்கிறது.

ஒரு வேளை இதில் சதிச்செயல் இருக்கக் கூடுமோ என்பது போலவும் புலனாய்வு குழு ஒன்று விசாரணை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எது எப்படி இருப்பினும் நம் இந்திய தேசத்தில் நடைபெற்ற முதல் தனியார் நிறுவன விமான விபத்தாக இதை அணுகி…. அதை சரியான விதத்தில் கொண்டு சென்று இருக்கிறார்கள் என்பதாக உலகளவில் பேச ஆரம்பித்து இருக்கிறார்கள். காரணம் இதேபோல் வேறோர் விபத்து நடந்திருப்பின் அவற்றை குறைந்த பட்சம்…… இழப்பீட்டு தொகை கூடி விடக்கூடாது என்பதற்காகவாவது மறைத்து விடும் சாத்தியம் இருந்திருக்கும்‌. ஆனால் இந்திய அரசு அப்படி ஏதும் செய்யவில்லை என்பது இந்த சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததை பொது வெளியில் கொண்டு வந்து வெளிப்படுத்தி இருக்கிறார்கள்…. என்பதை சுட்டிக் காட்டுகிறார்கள் அவர்கள்.

விமானத்தை இயக்கிய மூத்த விமானி குறைந்தது பத்தாயிரம் மணிநேர பறத்தல் அனுபவத்தை கொண்டு இருக்கிறார் நிச்சயமாக இந்த பொறிமுறை வசதி குறித்து நன்கு அறிந்தவராகவே இருக்கும் பட்சத்தில் ஏன் அணைத்து வைக்கப்பட்டது என்பதே இதில் பிரதான கேள்வியாக இருக்கிறது.
காக்பிட் உரையாடலை முழுமையாக ஆராய்ந்து அறிக்கையாக வெளிவர குறைந்தது பத்து மாதங்கள் பிடிக்கும் என்கிறார்கள் இத்துறை சார் வல்லுனர்கள். தற்சமயம் புகைப்பட ஆதாரங்கள் மட்டுமே வெளிவந்திருக்கிறது.அவற்றையும் நன்கு அலசி ஆராய்ந்து ஊர்ஜிதம் செய்து இன்று வெளியிட்டு இருக்கிறார்கள்.இது, இதில் பயணம் செய்த பயணிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்க போதுமான அடிப்படை ஆதாரங்கள் ஆகும்.

விபத்து நடந்த சமயத்தில் போயிங் நிறுவனத்தின் பங்குகள் மற்றும் டாட்டா குழுமத்தின் பங்குகள் சரிந்தன. ஏர் இந்தியாவை இயக்கும் டாட்டா குழுமத்திற்கு இது போதாத வேளை போலிருக்கிறது. போயிங் நிறுவனம் சமாளித்து விடும் போலிருக்கிறது மேற்சொன்ன விவகாரங்களால்…… பார்க்கலாம்.

  • ஜெய் ஹிந்த் ஸ்ரீராம்

இந்தியாவின் ராஜதந்திர செயல்பாடுகள் – வெறும் முணுமுணுப்பு அல்ல முழக்கம்!

pm modi in rajastan pikaneer - 2026

தமிழில்: திருநின்றவூர் ரவிக்குமார்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஹிந்து நாளிதழில் எழுதிய கட்டுரைக்கு பதிலடியாக இதை எழுதியதாக எழுத்தாளர் பிரியம் காந்திமோடி தன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவின் ராஜதந்திர செயல்பாடுகள் – முணுமுணுப்பல்ல முழக்கம்!

பிரியம் காந்திமோடி

ஹமாசுக்கு எதிரான போரை இஸ்ரேல் நடத்திக் கொண்டிருக்கும்போதே, ஜூன் 13 தேதி, அது ஈரானை தாக்கியது. ஏற்கனவே கொத்தளிப்பில் உள்ள மேற்கு ஆசியாவில் இஸ்ரேல் – ஈரான் மோதல் 12 நாட்கள் நீடித்தது.

இஸ்ரேல் – ஈரான் மோதல் பற்றிய இந்தியாவின் எதிர்வினை முன்னெச்சரிக்கையுடனே இருந்தது. போராக மாறக் கூடாது. மோதல் தவிர்க்கப்பட வேண்டும். அந்த பிராந்தியத்தில் அமைதி ஏற்பட வேண்டும், என்று இந்தியா கூறியது.

மனித குலத்திற்கு ஏற்படும் அழிவு பற்றி கவலை தெரிவித்த பிரதமர் மோடி இது போருக்கான யுகம் அல்ல என்று மீண்டும் கூறினார். அவரது தலைமையிலான இந்திய அரசு தேவைப்படும் போதெல்லாம் மிக விரைவாக மனிதநேய உதவிகளை செய்தது. ஐநா மன்றத்தில் காசா பகுதியில் நிரந்தர சண்டை நிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தது.

மோதல் பகுதிகளில் இருந்து தனது குடிமக்களை பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தது. இப்பொழுது, மிக அண்மையில், இஸ்ரேல் – ஈரான் பகுதிகளில் இருந்து சிந்து நடவடிக்கை என்ற பெயரில் தன் குடிமக்களை, பலரும் மருத்துவ மாணவர்கள், பத்திரமாக மீட்டது.

வலிமையின் அடையாளம்

இந்தியாவின் நம்பகத் தன்மையையும் அதன் ராஜதந்திர வல்லமையும் உலகம் அங்கீகரித்து வருகிறது. இந்தியாவின் அமைதியான ராஜதந்திர செயல்பாடுகள் அதன் உயர்வை காட்டுகின்றன. இந்தியா அவசியமென்றால் பேசுகிறது. தேவைப்படும்போது செயல்படுகிறது. கேட்டுக் கொண்டால் முயற்சிகளை முன்னெடுக்கிறது.

இஸ்ரேலுடன் இராணுவ ஒத்துழைப்பு, ஈரானுடன் எண்ணெய் மற்றும் வர்த்தக உறவு, வளைகுடா நாடுகள் பலவற்றிலும் பரவி உள்ள தன் குடிமக்களின் நலன் என மேற்கு ஆசிய பகுதியில் இந்தியாவின் ஈடுபாடுகளும் செயல்பாடுகளும் அதிகம்.

அரபு நாடுகள் பலவற்றுடன் பிரதமர் மோடி வளர்த்துள்ள நல்லுறவால் அந்நாடுகளில் சில இந்தியாவில் பெருமளவு முதலீடு செய்துள்ளன. இணைந்து வர்த்தகம் செய்ய முன்வந்துள்ளன. இது அவரது ராஜதந்திர வெற்றியாக பார்க்கப்படுகிறது. உலகில் நான்காவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா இருப்பதால் பொருளாதார ஒப்பந்தங்களும் ஒத்துழைப்பும் ராஜதந்திர நடவடிக்கைகளின் மையமாக இருக்கின்றன.

ஒரு போரில் தேவையில்லாமல் தலையிடுவது, அதுவும் நமக்கு தொடர்பில்லாத போரில், நம்முடைய தேச நலனுக்கு எதிரானதும் அவசியமற்றதும் ஆகும். எந்த சாய்வும் இல்லாமல் தன்னிச்சையான நிலைப்பாட்டை மேற்கொள்வது என்பது இந்திய பண்புகளுக்கும் மதிப்பீடுகளுக்கும் துரோகம் செய்வது என்றாகாது. மாறாக எல்லா தரப்பினருடனும் உறவாடவும் தன்னுடைய நலன்களை உறுதியாக பாதுகாப்பதும் ஆகும்.

சிந்தூர் நடவடிக்கையும் அதன் பிறகும்

இன்றைய சர்வதேச ராஜதந்திர நடவடிக்கைகள் தங்கள் தங்கள் தேசிய நலனை பாதுகாப்பதற்கு முன்னுரிமை கொடுப்பதாக உள்ளன. அண்மையில் பெகல்காமில் பாகிஸ்தானிய பயங்கரவாத தாக்குதலும் அதற்கு சிந்தூர் நடவடிக்கை என்ற பெயரில் இந்தியா கொடுத்த பதிலடியும் அதன் பிறகு இந்திய – பாகிஸ்தான் மோதல் குறித்து உலக நாடுகளின் நிலைப்பாடும் நாம் வாழும் காலத்தில் புவி அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை சுட்டிக் காட்டுகின்றன.

அம்பலமானது பிற்போக்குதனம்

முன்பெல்லாம் பல நாடுகள், குறிப்பாக மேற்கத்திய நாடுகளும் பன்னாட்டு அமைப்புகளும், பயங்கரவாதத்திற்கு எதிராக இருப்பதாக காட்டிக் கொண்டே பாகிஸ்தானுக்கு நிதி உதவியும் ஆயுதங்களையும் தந்து வந்தன. இதனால் பயங்கரவாதிகளின் புகலிடமாக இருந்த பாகிஸ்தான் தெம்பாக இருந்தது.

மேற்கத்திய நாடுகள், அதில் பல இந்தியாவுடன் வர்த்தக உறவை வலுப்படுத்த விரும்பி முயற்சிகளை மேற்கொள்பவை, இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒரே தரத்தில் வைத்து பார்த்தன. கடந்த இரண்டு முறை ஆட்சியில் இருந்தவர்கள் (மோடி அரசு) இதை தவறென்ன நிரூபித்தபடியே இருந்தனர் .

பல நாடுகள் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் பயங்கரவாத செயல்பாடுகளை கண்டும் காணாமல் இருந்தன. அதன் மூலம் பாகிஸ்தானில் உள்ள துறைமுகங்கள், விமான தளங்களை பயன்படுத்திக் கொள்ள அவற்றிற்கு வாய்ப்பு கிடைத்தது. இதனால் அந்த நாடுகள் சீனா, ஈரானுடனான மோதலின் போது தங்களுக்கு சாதகமான நிலை ஏற்படும் என்று கருதின.

பாகிஸ்தான் தன் விசுவாசத்தை அதிக விலை கொடுப்பவர்களுக்கு என்றதால் சர்வதேச நிதி நிறுவனத்தின் கடன், நவீன ஆயுதங்கள், தலைவர்களுடன் விருந்து என்று அதன் விசுவாசம் விலைக்கு வாங்கப்பட்டது. இதில் முரண்நகை என்னவென்றால் ஜனநாயகத்தைப் பற்றி உரை நிகழ்த்தும் நாடுகள், ‘ஜனநாயக மதிப்பீடு’களை காப்பதாக சொல்லி மற்ற நாட்டின் மீது படையெடுத்த நாடுகள், பாகிஸ்தான் ராணுவ ஆட்சி தலைமையுடன் உறவாட முனைந்ததுதான். இதற்கு காரணம் அது அவர்களது நலனுக்கு வசதியாக இருந்தது என்பதுதான்.

இந்தியாவுடன் உறவை வளர்த்துக் கொண்டாலும் அரபு நாடுகள் வேகமாக பாகிஸ்தானை ஆதரித்தன. மத ரீதியான சகோதரத்துவம் இதற்கு காரணம். இந்திய அயலுறவு கொள்கையானது இந்த நுட்பங்களை எல்லாம் கருத்தில் கொண்டு செயல்படுகிறது. இந்தியாவின் ராஜதந்திர நிலைப்பாடுகள் தன் நாட்டின் நலன்கள், பாதுகாப்பு, மதிப்பீடுகள் , வளர்ச்சி ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுப்பதாக உள்ளன.

மேற்கு ஆசியா

உலகில், அரசியல் ரீதியாக, மிகவும் நிலையற்ற தன்மை கொண்ட பகுதி மேற்கு ஆசியா. அங்குள்ள நாடுகள் இடையே பல மோதல்களும், தொடர் சண்டைகளும், அரசு அல்லாத சக்திகளும் மோதலில் ஈடுபடுவதும் நடந்து வருகின்றன. நிலையற்ற, அடிக்கடி வெடித்து பீறிடும் சூழ்நிலையில் அணு ஆயுதம் வைத்திருப்பது ஆபத்தை மிகவும் அதிகரிப்பதாகவும், பொறுப்பற்று பயன்படுத்தப்படலாம் என்ற அச்சத்தை அளிப்பதாகவும் உள்ளது.

அணு ஆயுதங்கள் நீண்ட மோதல்களையும் வெகு ஜனங்கள் மீது மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தும். எனவே அணு ஆயுத பரவல் தடை சட்டம் பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. அணு ஆயுதம் கொண்ட மேற்கு ஆசியாவால் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா நாடுகளில் உள்ள மோதல்கள் வலு பெறும். அத்துடன் அணு ஆயுத தயாரிப்பு திட்டத்தில் அவையும் தீவிரமாக ஈடுபடும். மேற்கு ஆசியா சீராக இருக்க வேண்டுமானால் ஆயுத கட்டுப்பாடு, மோதல்களை தவிர்த்தல், பரஸ்பர ஒத்துழைப்பு ஆகியவை தேவை.

தேர்ந்தெடுத்த ஆவேசமும் வசை பாடுவதும்

பொதுவான புரிதல் கூட இல்லாத போதனைகள், பல நேரங்களில் அரசியல் உள்நோக்கம் கொண்டு சொல்லப்படும் ஆலோசனைகள், இவையெல்லாம் இன்று பரிணமித்து வரும் உலக விசைகளைப் பற்றிய போதிய புரிதல் இன்மையையே வெளிப்படுத்துகின்றன.

மேற்கு ஆசியாவின் நிலையற்ற தன்மைக்கு ஈரானும் காரணம் என்பதை இந்தியா அலட்சியப்படுத்த முடியாது. ஹமாஸ் 2023 அக்டோபர் 7 தேதி இஸ்ரேல் மீது நடத்திய கொடூர தாக்குதலை இந்திய அயலகத்துறை அதிகாரிகள் புறந்தள்ள முடியாது. பாலஸ்தீனிய பொது ஜன கட்டமைப்பை ஹமாஸ் தனது கேடயமாக பயன்படுத்தி கொண்டதை கண்டு கொள்ளாமல் அறிக்கை விடவோ நிலைப்பாட்டை மேற்கொள்ளவோ முடியாது.

தேர்ந்தெடுத்த குறிப்பிட்ட விஷயங்களில் மட்டும் ஆவேசத்தை வெளிப்படுத்துவது, தார்மீகத்தின் அடிப்படையில் பேசுவதாக திரையிட்டுக் கொண்டு வெப்பமாக பேசுவதெல்லாம், தேச நலனுக்கு எதிரானதாகவே இருக்கின்றன.

பலரும் உணர்ச்சிகரமான கண்ணோட்டத்தை கொண்டுள்ளனர். அவை சரியான தகவல் இன்மையை அடிப்படையாகக் கொண்டுள்ளன. இந்தியா அவற்றை தீவிரமாக கருத்தில் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொண்டால் ராஜதந்திர ரீதியான பின் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும். இந்தியாவின் வலுவான, தொடர்ச்சியான பொருளாதார முன்னேற்றம் தடைப்படும்.

இந்தியாவின் பக்க சார்பற்ற, சுதந்திரமான ராஜதந்திர நிலைப்பாடுகள் அதன் தெளிவையும் தைரியத்தையும் உறுதியையும் வெளிப்படுத்துகின்றன. தன் வளர்ச்சி பாதையில் நம்பிக்கையுடன் முன்னேறும் இந்தியாவில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இப்போதுள்ள இந்தியா, அரசியல் பொதுவெளியில் வெளியிடப்படும் அறிக்கைகளால் உந்தப்பட்டு உலக மோதல்களில் ஒரு பக்க சாய்வை மேற்கொள்ளாமல் , தனக்கென சுயமான கருத்துக்களை உருவாக்கிக் கொண்டு, இருதரப்பினருடன் உறவாடும் வல்லமை கொண்டதாக இருக்கிறது.

நன்றி : தி ஹிந்து ஆங்கிலம்
7 ஜூலை 2025

வியாச பூஜை – குரு பூர்ணிமாவின் சிறப்பு

gurupoornima vyasa poojai - 2026
  • கே.ஜி.ராமலிங்கம்

வியாச பூஜை என்பதும், சாதுர் மாஸ்ய விரதம் (திங்கட்கிழமை (7.7.25)அன்று இந்த விரதம் ஆரம்பமானது) சாந்திரமானப்படி ஆஷாட பவுர்ணமி (இந்த வருடம்: 10.7.2025) வருகிறது. இதையே ‘குரு பவுர்ணமி’ என்றும் சொல்வர். எல்லோருக்குமே இந்த பவுர்ணமி உயர்ந்தது.

ஆஷாட பெளர்ணமியும் மூல நட்சத்திரம் சேர்ந்து வருவது விஷேசமான ஒரு நிகழ்வாக ஜோதிட சாஸ்திரத்தில் பார்க்கப்படுகிறது, அடுத்த ஆஷாட பெளர்ணமி மூல நட்சத்திரம் அறுபத்து நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தான் வருகிறது.

குருப்ரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஷ்வரா, குரு சாட்சாத் பரப்ரம்ஹ தஸ்மை ஸ்ரீ குரவே நம:

தேஹிமே குரு ஸ்மரணம்
தேஹிமே குரு கீர்த்தனம்
தேஹிமே குரு தர்ஷணம்
தேஹிமே குரு ஸாமீப்யம்
தேஹிமே குரு பதஸேவனம்
தேஹிமே குரு உபதேசம்
தேஹிமே குரு ஸாயுஜ்யம்

குரு பூர்ணிமா, ஒவ்வொரு வருடமும் ஆஷாட (ஆடி) மாத பௌர்ணமி அன்று கொண்டாடப்படுகிறது. நமக்கு கல்விக் கண் திறந்து, நாம் வாழ்வில் உயர வழி வகுத்த குருமார்களை, ஆசிரியர்களை இந்த நன்னாளில் வணங்குதல் சிறந்தது.

இந்த வியாச பூஜையை முதன் முதலில், துவக்கியவர், வேதவியாச மஹரிஷி அவர்களின் புதல்வரும், ஸ்ரீமத் பாகவதத்தை மன்னர் பரீக்ஷித் மஹாராஜாவுக்கு உபதேசித்தவருமான,
ஸ்ரீ சுகப்பிரம்ம ரிஷியாவார்.

அவரை அடுத்து, ஸ்ரீ சூதமுனிவர்,
ஸ்ரீசுகப்பிரம்மரிஷிக்கு ‘வியாச பூஜை’யை, த‌ம் குருவை ஆராதிக்கும் முகமாகச் செய்தார். இது இரண்டாவது வியாச பூஜையாகச் சொல்லப்படுகிறது. அதற்குப் பிறகு, வியாச பூஜை, குருவை ஆராதிக்கும் முகமாக, வழிவழியாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

பகவான் உறங்க ஆரம்பித்தது முதல் எழுந்திருக்கும் வரை ஆற்ற வேண்டிய விரதம் சாதுர்மாஸ்ய விரதம்.

ஒவ்வொரு ஆண்டும் வரும் ஆஷாட பவுர்ணமி – வியாச பவுர்ணமி என்ற நாளில் இந்த விரதம் அனுஷ்டிக்கப்பட்டு ‘வியாஸ பூஜை’ நடத்துவது துறவிகளின் பணி.

பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா, ‘நான் ரிஷிகளில் வியாசராக இருக்கிறேன்’ என்று கூறியிருப்பதால், அந்த அடிப்படையில் கிருஷ்ண பரமாத்மாவை மத்தியில் வைத்து சாதுர்மாஸ்ய வியாஸ பூஜை நடத்துவது ஆதிசங்கர பகவத்பாதாள் தொடங்கி குரு பரம்பரையில் அவரால் ஸ்தாபிக்கப்பட்ட மடங்களில் வழக்கமாக கடைப்பிடித்து வருகிறார்கள். .

இந்த பூஜை கிருஷ்ண பஞ்சகம், வியாச பஞ்சகம், பகவத்பாத பஞ்சகம், ஸனச பஞ்சகம், திரவிட பஞ்சகம் என்று 5 பஞ்சகங்களை அமைத்து பக்கங்களில் 24 குருமார்களை ஆவாஹனம் செய்து 30 பேர் பூஜை செய்வது, இறுதியில் துறவிகள் சாதுர்மாஸ்ய விரத சங்கல்பம் செய்துகொள்வார்கள். உலகநலனுக்காக அனைத்து தேவதைகளுக்கும் பிரீதி செய்வதே வியாஸ பூஜையின் நோக்கம்.

இந்து மதத்திற்கு மூல புருஷராக விளங்கும் வியாச பகவானுக்கு ஆண்டு தோறும் சாதுர்மாஸ்ய விரதத்தின் முதலில் சிறப்பு வழிபாடு வியாச பூஜை என்ற பெயரில் நடைபெறுகிறது.

பராசரா முனிவரின் புதல்வரும், ஞானியருள் சிறந்தவருமான வேத வியாசருடைய இயற்பெயர் ‘கிருஷ்ண த்வைபாயனர்’ என்பதாகும். வேதம், மகாபாரதம் மற்றும் பதினெண் புராணங்களை அருளியவரும், வேதாந்த சூத்திரத்தைத் தொகுத்தவர் இவர்தான்.

இந்து மதத்திற்கு ஆணிவேராக இவர் போற்றப்படுவதால் குரு பரம்பரை பல இருப்பினும், வேத வியாசர் பெயர் இதில் முக்கியமாகச் சொல்லப்படுகிறது.

இந்த வியாச பூஜையில் வியாசர் அவரது நான்கு சீடர்களான பைலர், ஜைமினி, வைசம்பாயனர், சுமந்து ஆகியோரும், ஆதிசங்கரர் அவரது சீடர்களான பத்மபாதர், ஸுரேச்வர், ஹஸ்தாமலகர், தோடகர் ஆகியோரும், மவுனகுருவின் சீடர்களான சனகர், சனந்தனர், ஸநாதனர், ஸநத்குமார் ஆகியோரும் நாரதர், சுகர், கவுடபாதர், கோவிந்த பகவத் பாதர் ஆகிய குருமார்களும், கடைசியாக சுத்த சைதன்யம் என்ற பெயரில் சாளக்ராமமும் பூஜிக்கப் படுகின்றன.

துறவிகளாலேயே செய்யப்படும் இந்த பூஜையானது முளையில்லாத அட்சதையைப் பரப்பி நடுவில் கிருஷ்ண விக்ரகமும் சாளக்ராமமும் வைத்து எலுமிச்சம் பழத்தை ஆங்காங்கு வைத்து முறைப்படி ‘குருபரம்பரை ’ பூஜையாக நடத்தப்பெறுகிறது.

எப்போதும் யாத்திரையாகச் சென்று கொண்டேயிருக்கும் துறவிகளுக்கு – சன்னியாசிகளுக்கு ‘பரிவ்ராஜகர்’ என்று பெயர். இவர்கள் ஆனி பவுர்ணமி தொடங்கிக் கடைப்பிடிக்கும் சாதுர்மாஸ்ய விரதகாலம் மட்டுமே ஓரிடத்தில் தங்கியிருப்பர். மற்ற காலங்களில் பல பகுதிகளிலும் எப்போதும் யாத்திரையிலேயே இருந்து வருவர்.

மழைக்காலத்தில் ஜீவராசிகள் பெருகி அலையும் மேலும் தங்கள் நடமாட்டத்தால் அவற்றுக்கு இம்சை நேராதவாறு ஒரே இடத்தில் தங்கியிருப்பர். நான்கு மாதங்கள் இவ்வாறு தங்கியிருக்கும் ‘சாதுர் மாஸ்ய விரத காலத்தில் வேத, வேதாந்த, உபநிஷத விஷயங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வசிப்பார்கள்.

வியாச பூஜை தினத்தன்று, ஆதி குருவான ஸ்ரீமந் நாராயணருக்கும்,
ஸ்ரீ வேத வியாசருக்கும், பூஜை செய்து விரதம் துவங்கப்படும். இவ்விரதத்தை நான்கு மாதங்கள் அல்லது நான்கு பட்சங்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்பது சாஸ்திரம். ஆகவே, அம்மாதிரி ஒரே இடத்தில் தங்கி இருப்பதாகச் சங்கல்பம் செய்து கொள்வார்கள்.

இவ்வாறு அவர்கள் ஒரே இடத்தில் தங்கியிருக்கும் போது, புராணத் தத்துவங்களையும், வேதாந்த ரஹஸ்யங்களையும் அவர்கள் உபதேசிப்பார்கள். அவர்கள் விரதத்தால் அவர்கள் இருக்கும் இடமே புனிதப்பட்டு, நன்மை விளையும். அந்த இடத்தில் வசிக்கும் கிருஹஸ்தர்கள், சன்யாசிகளுக்கு பூஜைக்குத் தேவையான பொருட்களை அளித்தல், பிக்ஷாவந்தனம் செய்தல் போன்ற புண்ணியச் செயல்களைச் செய்வதால், அவர்கள் தலைமுறையே நலமடையும்.

இவ்வாறு இந்த சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்ட சன்யாசிகளுக்குச் சேவை செய்த சிறுவன் மறு பிறவியில் நாரத மஹரிஷியாகப் பிறந்தார். இவ்வாறு விரதம் இருக்கும் சன்யாசிகளுக்கு உதவுவதும், அவர்களது உபதேச மொழிகளைக் கேட்பது மிக்க நலம் பயக்கும்.

குருவை வணங்கி வாழ்வில் உயர்ந்தோர் பலர். தன் அவையில் நுழைந்த வியாழ பகவானை வணங்கி, ஆசனமளிக்காமல் நிந்தனை செய்ததன் பலனாக, தேவேந்திரன் தன் செல்வம் முழுவதையும் இழந்து துன்புற்று, பின் அவர் கருணையை மீண்டும் பெற்று, தன் செல்வம் முழுவதையும் அடைந்து மகிழ்ந்தான்.

சாதுர் மாஸ்ய விரதம் தனிப்பட்ட உணவு நியமங்களைக் கொண்டது. முதல் மாதம், காய், கிழங்கு வகைகள் தவிர்க்கப்பட வேண்டும். இரண்டாவது மாதம், தயிர், மூன்றாவது மாதம் பால், நான்காவது மாதம் பருப்பு வகைகள் தவிர்க்கப் படுவது வழக்கம். சன்யாசிகள் மட்டுமல்லாமல், சில வயது முதிர்ந்த பெரியோர்களும் இன்றளவும் இவ்விரதத்தை கடைபிடிக்கின்றனர்.

இந்த நன்னாளில், ஆச்சாரியப் பெருமக்களுக்கு, இயன்ற பொருட்களை சமர்ப்பித்து ஆசி பெறுதல் சிறந்தது. பொருட்களோடு, ‘தான்’ எனும் ஆணவம் இல்லாமல், பணிவு, குருபக்தி எனும் மிகவுயர்ந்த பொருட்களை குருவுக்குச் சமர்ப்பித்தலே உண்மையான சமர்ப்பணமாகும். வியாச பூஜையின் தத்துவம் இதுவே.

அன்றைய தினம் அவரவரது ஆசிரியர், குரு ஸ்தானங்களில் உள்ளோரை வணங்குவது மிகச் சிறந்த நற்பலன் தரும். கல்வி, கலை, ஞானம் வளரும்.

குருவும் தெய்வமும் ஒருவரே ஆவர். ஆகவே, நமது குல ஆச்சாரியர்களை, நமக்குக் கல்வி கற்பித்த குருமார்களை, நேரில் செல்ல முடியாவிட்டாலும், மனதால் வணங்கி வழிபடுவது சிறந்தது.

மாணவர்கள் இந்த நாளில் தமது ஆசிரியப் பெருமக்களை வணங்குதல் அவர்கள் கல்வியில் மேன்மேலும் சிறக்க வழி செய்யும்.

மேலும், தக்ஷிணாமூர்த்தி வழிபாடு, ஆசாரியர்களின் பிருந்தாவனங்களில் சென்று வழிபாடு செய்தல் சிறந்தது.

ஆகவே, வியாச பூஜை தினத்தன்று, குருமார்களை வணங்கி நலம் பல பெறுவோம்!!!!!

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர