
மதுரை கோயில்களில் ஆடிப்பூரம்: அம்மன்களுக்கு வளையல் காப்பு: அன்னதானம்!
மதுரை பகுதி கோயில்களில் திருவாடிப்பூரத்தை ஒட்டி, கோயில்களில் அம்மனுக்கு, பக்தர்களால் வளையல் காப்பு அணிவிக்கப்பட்டது. இதையொட்டி, மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர், சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில் ரவி பட்டர், வராஹி, துர்க்கை, மீனாட்சி,, மகாலட்சுமிக்கு சிறப்பு அபிஷேகங்களை செய்து, அம்மனுக்கு வளையல் காப்பு அணிவித்தார். கோயில் நிர்வாகிகள் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம், வளையல்கள், திருமாங்கல்ய கயிறு வழங்கப்பட்டது.
மதுரை வைகை காலனி கிழக்கு பகுதியில் உள்ள சக்தி மாரியம்மன் ஆலயத்தில், பட்டர் கோபாலகிருஷ்ணன், அம்மனுக்கு சிறப்பு பூஜைகளை செய்தார்.
மதுரை யாரணைக்குழாய் முத்து மாரியம்மன் ஆலயத்தில், அர்ச்சகர் மணிகண்டன், பூஜைகளை செய்து வளையல்களை அம்மனுக்கு அணிவித்தார். கோயில் தலைவர் முருகன், செயலர் சிவா, பொருளாளர் சந்திரன் ஆகியோர்கள் பல வகை உணவுகளை பிரசாதமாக வழங்கினர்.
மதுரை தாசில்தார் நகர் சித்தி விநாயகர் ஆலயத்தில், அம்பாள், துர்க்கை ஆகியோருக்கு சிறப்பு பூஜைகளை, கோயில் நிர்வாகிகள் செய்தனர். தலைவர் சுதர்சன, நிர்வாகிகள் இந்திரா, கல்யாணி, திலகம், மீனாட்சி, சிகாமணி ஆகியோர்கள், பக்தர்களுக்கு பிரசாதங்களை வழங்கினர்.

சோழவந்தான் – நாச்சிகுளம் காளியம்மன் கோவில் ஆடிப்பூரம்; அம்மன் மற்றும் கர்ப்பிணி பெண்கள் வளைகாப்பு அணிந்து கொண்டாட்டம்!
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாச்சிகுளம் காளியம்மன் கோவில் தெருவில் உள்ள காளியம்மன் , பகவதி அம்மன் விநாயகர், நாகம்மாள் கோவில்களில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மன்களுக்கு பால் தயிர் வெண்ணெய் உள்ளிட்ட அபிஷேகங்கள் செய்து வளையல் அணிவித்து வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து கிராமத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணிவித்து வளைகாப்பு நடத்தப்பட்டது நெகிழ்ச்சியாக இருந்தது .
இதில் நாச்சிகுளம் மற்றும் சுற்று வட்டார பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது ஏற்பாடுகளை நாச்சிகுளம் கிராமத்தினர் மற்றும் இளைஞர் எழுச்சி மன்றத்தினர் செய்திருந்தனர்.

காரியாபட்டி கபால காளீஸ்வரி ஆலயத்தில் ஆடிப்பூரம் சிறப்பு பூஜை!
காரியாபட்டி அருகே, அம்மன் ஆலயங்களில் ஆடி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கரியப்பட்டி கபால காளியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரம் முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக, காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் பிரசாதம் வளையல்கள் வழங்கப்பட்டது. முடுக்கன் குளம் சிவகாம சுந்தரி ஸமேத அம்பலவாணர் கோவிலில் ஆடிப்பூரம் சிறப்பு பூஜை நடை பெற்றது. அம்மனுக்கு, வளையல் அலங்காரம் செய்யப் பட்டு பூஜை நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு
அன்னதானம் வழங்கப் பட்டது.
ஸ்ரீ வியாச பூஜா குரு வியாச பூஜை மகோத்ஸவம் 2025
வியாச பூஜை மஹோத்சவ விழா சோழவந்தான் ஒற்றை அக்ரஹாரத்தில் உள்ள ஸ்ரீ மலையாளம் கிருஷ்ணய்யர் வேத சாஸ்திர பாடசாலையில், பாடசாலை, அத்யாபகர் வரதராஜ பண்டிட் தலைமையில் பல வேத விற்பன்னர்கள் மற்றும் பாடசாலை மாணவர் களாலும் அதி விமர்சையாக நடைபெற்றது.
அன்று காலை 09.00 மணிக்கு குரு வந்தனம், விக்னேஷ்வர பூஜை, புண்ணியாகவாசனம், வேத வியாசர் ஆவாஹன அர்ச்சனைகள், வேத பாராயணங்கள், விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணங்கள் , அதனை தொடர்ந்து மஹா கணபதி ஹோமம், விஷ்ணு சஹஸ்ர நாம ஹோமம், புருஷ சுக்த ஹோமம், ஸ்ரீ சுக்த ஹோமம், வியாச காயத்ரி ஹோமம், தன்வந்திரி ஹோமம் ,மஹா பூர்ணாஹுதி, புணர் அர்ச்சணை, மஹா தீபாராதனை, மந்த்ர புஷ்பம், சதுர் வேத பாராயணம், நாத கீத வாத்திய உபச்சாரங்கள் , தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.





