களிமண் பிள்ளையாரை வணங்குவோம். சுற்றுச்சூழலை பாதுகாப்போம்….!
விநாயக சதுர்த்தியை முன்னிட்டு மூன்று நாட்களாக ஹைதராபாத் நகரின் பல இடங்களில் களிமண் பிள்ளையாரை மொபைல் வாகனங்களில் எடுத்து வந்து நேராக வீடுவீடாக அளித்து வருகிறார்கள். ஹைதராபாத் மெட்ரோபாலிடன் டெவலப்மெண்ட் அதாரிட்டி மேற்பார்வையில் நடந்து வரும் இந்த மண் பிள்ளையார் விநியோகத்திற்கு பொதுமக்களிடம் சிறப்பான வரவேற்பு உள்ளது. ஹெச்எம்டிஎ கமிஷனர் அரவிந்த் குமார் இந்த வேலைகளை மேற்பார்வையிட்டு வருகிறார்.
ஹை கோர்ட் நீதிபதி ஜஸ்டிஸ் ராகவேந்திரசிங் களிமண் கணபதி சிலைகளை கோர்ட் சிப்பந்திகளுக்கும் வழக்கறிஞர்களுக்கும் விநியோகித்தார்.
மேலும் தெலுங்காணா மாநில பொல்யூஷன் கண்ட்ரோல் போர்டு டிஎஸ்பிசிபி இயற்கை நிறங்கள் பூசிய களிமண் பிள்ளையார் சிலைகளை கிரேடர் ஹைதராபாத் முனிசிபல் கார்பொரேஷன் ஜிஹெச்எம்சி மூலம் பொதுமக்களுக்கு விநியோகிக்கத் தொடங்கியுள்ளது. சுமார் 80,000 பிள்ளையார் சிலைகளை 31 மாவட்டங்களில் போர்டின் ரீஜனல் அலுவலகங்கள் மூலம் மாவட்ட அதிகாரிகளை கொண்டு பொதுமக்களுக்கு இலவசமாக இன்று அளித்துள்ளது. அதோடுகூட டிஎஸ்பிசிபி பல ஆயிரக்கணக்கான களிமண் கணபதி சிலைகளை ஹைதராபாத் நகரின் பல இடங்களுக்கும் விநியோகத்திற்கு அனுப்பியுள்ளது.
பொதுமக்களிடம் களிமண் சிலைகள் உபயோகிப்பதால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவது பற்றிய விழிப்பு உணர்வு வரவேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கம்.
பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளை செயர்க்கை வண்ணங்களோடு தயாரிப்பதால் ஏற்படும் நீர்நிலை சீரழிவு பற்றியும் பொது மக்களிடம் விளக்கப்படுகிறது. பல தன்னார்வுத் தொண்டு நிறுவனங்களும் இதில் உற்சாகத்தோடு ஈடுபட்டு வருகின்றன.



