சந்திரயான்-2 திட்டம் வெற்றிதான்!

Published:

chandrayaan lander - 2026

சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவப் பகுதியின் தரையில் இருந்து 2.1 கிமீ உயரத்தில் இருந்து போது, இஸ்ரோ தரைக் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது.

2.1 கிமீ உயரம் வரையிலும் விக்ரம் லேண்டர் முழுக் கட்டுப்பாட்டில் இருந்தது.அனைத்து சாதனங்களும் நன்றாக இயங்கின. விக்ரம் லேண்டரை நிலவின் தென் துருவப் பகுதியில் தரை இறங்கச் செய்யும் அந்த கடைசி 3 நிமிடங்களில் மட்டுமே சிக்கல் ஏற்பட்டு இஸ்ரோவிற்கும் விக்ரம் லேண்டருக்குமான தொடர்பு அறுந்தது அவ்வளவு தான். இதனால் இந்த திட்டம் தோல்வி அடையவே இல்லை.

நிலவின் தென் துருவப் பகுதியில் விக்ரம் லேண்டர் கருவியை அப்படியே மோதச் செய்து தரை இறக்காமல் ஒரு ஏரோபிளேன் தரை இறங்குவது போல ஸ்மூத்தாக தரை இறக்க திட்டம் செய்யப்பட்டது.இதன் பெயர் Soft Landing.

chandrayaan2 tweet jeffbezo - 2026

இப்போது விக்ரம் லேண்டருக்கும் இஸ்ரோவிற்கும் இடையிலான சிக்னல் துண்டிக்கப்பட்டு இருப்பதால் Soft Landing மட்டுமே தான் நடக்காது.ஆனால் நிலவின் ஈர்ப்பு விசை விக்ரம் லேண்டரை பிடித்து கீழே இழுத்து விடும்.நிலவின் தென் துருவப் பகுதியின் தரையை விக்ரம் லேண்டர் கட்டாயம் தொட்டு விடும்.

பூமியின் ஈர்ப்பு விசையை விட நிலவின் ஈர்ப்பு விசை 6 மடங்கு குறைவு.இதனால் விக்ரம் லேண்டர் எடை நிலவில் மிக குறைவாகத்தான் இருக்கும்.எனவே 2.1 கிமீ உயரத்தில் இருந்து கீழே விழுந்தாலும் அதற்குப் பெரிதாக பாதிப்பு இருக்க வாய்ப்பு இல்லை என்றே கணிக்கப்படுகிறது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

விக்ரம் லேண்டர் உள்ளே இருக்கும் பிரக்யான் ரோவர் உயிரோடு இருப்பதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம். இதற்கு எல்லாம் மேலாக சந்திரயான் 2 விண்கலத்தில் இருக்கும் ஆர்பிட்டர் நிலவை தொடர்ந்து சுற்றி வரும்.95% பணிகளை இந்த ஆர்பிட்டர் செய்யும்.விக்ரம் லேண்டர் ஆயுட்காலம் 14 நாட்கள் தான்.ஆனால் ஆர்பிட்டர் ஆயுட்காலம் 1 வருடத்திற்கும் மேல். ஆக எப்படி பார்த்தாலும் திட்டம் வெற்றி தான்.

நிலவின் தென் துருவப் பகுதியின் தரையை சந்திரயான் 2 விண்கலம் தொட்டு விட்டது. ஒரே ஒரு வித்தியாசம் அது இஸ்ரோவின் திட்டத்தில் இல்லாமல் இயற்கையின் திட்டத்தில் நடந்துள்ளது.

-: துரை மோகன்ராஜூலு

Related articles

Recent articles

spot_img