முகநூலில் பாதுகாப்பு குறைபாடு!பயனிட்டாளரின் தகவல்கள் இணையத்தில் கசிந்தது!

Published:

03 July11 Facebook - 2026

உலகம் முழுவதிலும் சுமார் 40 கோடிக்கும் அதிகமானோர் பேஸ்புக் பயனிட்டாளர்களாக உள்ளனர்.

இந்நிலையில், பேஸ்புக்கில் உள்ள பாதுகாப்பு குறைபாடு காரணமாக அதை பயன்படுத்தும் 41 கோடி பேரின் தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த TechCrunch நிறுவனம் கூறியுள்ளது. பயனாளர்களின் சுய விவரங்களுடன் அவர்களது செல்போன் எண்களும் இணையத்தில் வருவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த 11 கோடி பேர் மற்றும் இங்கிலாந்து நாட்டின் 1 கோடியே 80 லட்சம் பேர் மற்றும் வியட்நாமைச் சேர்ந்த 5 கோடி பயனாளர்களின் தகவல்கள் இணையத்தில் கசியவிடப்பட்டுள்ளது.

மேலும், சில பயனாளிகளின் ஐ.டி. பெயர்கள் தொலைப் பேசி எண்ணுடன் வெளியிடப்பட்டுள்ளன. சில தொலைப்பேசி எண், இருக்கும் இடம் உள்ளிட்டவைகளுடன், சில முக்கியமான தகவல்களுடன் வெளியிடப்பட்டுள்ளன. செல்போன் எண்கள் இணையத்தில் கசிந்துள்ளதால் பயனாளர்கள் தேவையற்ற அழைப்பின் தொல்லைகளுக்கு ஆளாகி உள்ளனர்.

பயனாளிகளின் மொபைல் எண்களை அறிந்து கொண்டு தேவையற்ற ஸ்பாம் கால்கள், வர்த்தக அழைப்புகள் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியும். பாதுகாப்பு குறைப்பாடுகளால் தகவல்கள் திருடப்பட்டுவிட்டதாக விளக்கம் அளித்துள்ள பேஸ்புக் நிறுவனம், அவை அனைத்தும் பழைய தகவல்கள் என்றும் கூறியுள்ளது

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

Related articles

Recent articles

spot_img