
இந்த தேசம் இந்திய தேசம் பெருமை கொள்கிறது: உதயம் ராம் உரத்த சிந்தனை
இன்று அதிகாலை சந்திராயன்2 நிலாவில் தரையிறங்க வேண்டும், கொஞ்சம் சிக்கலான சவாலான விஷயம்தான். அதை விஞ்ஞானிகள் செய்யும் பொழுது மோடியும் அவர்கள் நடுவில் இருந்து பார்க்க வேண்டும் என்பதற்காக தனது நீண்ட வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு பெங்களுருக்கு வருகிறார் .
இது விஞ்ஞானிகளின் கடமையும் வேலையுமாகும். வேலை .அவர்களிடம் ஒப்படைக்கப் பட்டிருகின்றது. அவர்கள் செய்வார்கள் இவர் உள்ளே புகுந்து பார்க்கும் அவசியம் இல்லை எனினும் சென்றார் .
நிலவில் இறங்கும் முயற்சியில் இறுதி நிமிடங்களில் பின்னடவு ஏற்பட்டது.
விஞ்ஞானிகள் அதிர்ந்தனர். பலர் அழுதனர். நம் பிரதமர் மோடியோ கலங்காமல் இஸ்ரோ தலைமை விஞ்ஞானிகளின் தோளில் தட்டி தைரியமூட்டுகிறார்.
அத்துடன் இன்று காலை நாட்டு மக்களிடம் நேரடியாக காணொளியில் பேசினார்.
விஞ்ஞானிகளின் மத்தியில் அவர் பேசிய பேச்சு தன்னம்பிக்கையின் உச்சம். இது தோல்வியல்ல. முயற்சி. இது தோல்வியல்ல.. பெருமை. உங்கள் முயற்சிக்கு நானும் இந்த தேசமும் பின்நிற்போம் என்று முகத்தில் புன்னகையுடன் பெருமிதத்துடன் சொன்னபோது ஒரு பெண் விஞ்ஞானி தன் கண் ஓரத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டதைப் பார்த்த போது சிலிர்த்தது.
சோகமே உருவாக உட்கார்ந்திருந்த விஞ்ஞானிகள் முகத்தில் நம்பிக்கை ஒளி மெல்ல பரவியது. தோல்வியடைந்து விட்டோமே என்று கூனிக்குறுகிய அவர்களின் உடல்கள் நிமிர்ந்தன. கூடவே நிமிர்ந்தது நம் தேசமுந்தான்!

எத்தனைப் பிரதமரை இப்படி இந்த தேசம் இதுவரைப் பார்த்திருக்கிறது.?
எத்தனைப் பிரதமருக்கு இந்த அளவுக்கு ஆர்வம் ஈடுபாடு தெளிவு உரத்த சிந்தனை இருந்தது? நிகழ்ச்சி முடிந்ததும் அத்தனை விஞ்ஞானிகளிடம் தேடித் தேடிப் சென்று கைகுலுக்கிய பண்பை நாம் என்று எந்த பிரதமரிடம் கண்டிருக்கிறோம்.?
.
மோடி என்பவரை பாஜக கட்சி நபராக … மோடி என்பவரை ஏதோ ஒரு மதத்துக்கு மட்டுமே உரிய மனிதராக … மோடி என்பவரை சர்வாதிகாரியாக., பார்க்காமல் நம் தேசத்தின் பிரதமராக பார்த்தால்.. இங்கிவனை யாம் பெற வே என்ன தவம் செய்திருப்போம் என்ற பாடல் வரிகளே நினைவுக் கு வரும்.
பண்பாளர் பாரத பிரதமர் மோடியின் ஆதரவுடன் நிலவுக்கு நாம் போவோம் என்பது உறுதி.

பேச வேண்டிய நேரத்தில் பேச வேண்டியதைப் பேசி.. தேசத்தின் பின்னடவையும் வெற்றியின் விலாசமாக்கிய பாரத பிரதமரையும் . மெய் வருத்தம் பாராது … முழு மூச் சுடன் .. திட்டமிட்ட இலக்குடன் இயங்கிக் கொண்டிருக்கும் இந்திய விஞ்ஞானிகள் ஒவ்வொருவருக்கும் உரத்த சிந்தனை எழுத்தாளர்கள் சங்கமும், நம் உரத்த சிந்தனை மாத இதழும் பாராட்டுகளை தெரிவித்துப்பெருமைக் கொள்கிறது.
தமிழனா இருந்தா ஷேர் செய் என்று மிரட்டப் போவதில்லை. தேசப்பற்றுள்ள இந்திய ராக இருந்தால் ..இதை மற்றவர்களும் படிக்க வாய்ப்பளியுங்கள்.
வாழ்க பாரதம்! வளர்க அதன் பெருமை!




Today we are proud of our scientists of ISRO as well as our Honourable PM whose speech was truly inspirational! His words and gesture have convinced us that he is a peerless leader! NaMo NaMah!