
இது சினிமாவிற்கும் பொருந்தும் என்று நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் பொருமி தள்ளி இருக்கிறார்.
சென்னை பள்ளிக்கரணையில் சுபஸ்ரீ என்ற இளம் பெண் சாலையில் கட்டப்பட்டிருந்த பேனர் விழுந்ததால் நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து லாரி மோதி உயிரிழந்தார் இந்த சம்பவத்துக்கு பலரும் வருத்தமும் பேனர் கலாச்சாரத்துக்கு கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்
அரசியல் கட்சியினர் பலரும் தாங்கள் கட்டியிருந்த பேனர்களை அகற்றி வருகின்றனர் நீதிமன்றம் அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஒரு கட்டளையும் பிறப்பித்தது அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் தொண்டர்களுக்கு பேனர்களை வைக்கக்கூடாது என்று அறிவுறுத்த வேண்டும் என்று கூறியிருந்தது

இந்நிலையில் நடிகர் விவேக்: இந்த உத்தரவு அரசியல் கட்சியினருக்கு மட்டும் அல்ல சினிமா துறையினருக்கும் பொருந்தும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்
கண்ட இடங்களில் பேனர், போஸ்டர் வைப்பது முறைப்படுத்தப்பட வேண்டும், இது சினிமாவிற்கும் பொருந்தும் என – நடிகர் விவேக் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்



