பத்து வயது சிறுமியை மணந்த 22வயது இளைஞர்; வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

அடடே... அப்படியா? உலகம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

chiled marriag 1 - 2026

பத்து வயது சிறுமியை திருமணம் செய்த 22 வயது இளைஞர்

இந்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் 10 வயது சிறுமியை 22 வயது இளைஞர் திருமணம் செய்துகொண்டுள்ள காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானில், பெண்கள் 13 வயதில் பெற்றோரின் ஒப்புதலுடன் திருமணம் செய்து கொள்ளலாம். ஆயினும் அதை விட வயது குறைந்த பெண்கள் ஒரு நீதிபதியின் அனுமதியுடன் திருமணம் செய்து கொள்ளலாம்.என்பது நடைமுறையில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரிட்டன் நாட்டு மனித உரிமை அமைப்பான அம்னஸ்டி இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஈரானில் கிட்டத்தக்க 17 சதவீத பெண்கள் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொள்கின்றனர்.

ஈரானிய சட்டம் ஆண்கள் தங்கள் மனைவியுடன், அவளது வயதைப் பொருட்படுத்தாமல், அவளுடைய அனுமதியின்றி பாலியல் நடத்தைகளில் ஈடுபட உரிமை அளிப்பதாக கூறுகிறது.

ஆண்கள் தங்கள் குழந்தை மனைவிகளை பாலியல் பலாத்காரம் செய்ய அனுமதிக்கப்படுவதாகவும் அந்த சட்டம் சொல்கிறது”.

இந்த நிலையில் 10 வயது சிறுமியை 22 வயது இளைஞர் திருமணம் செய்துகொள்ளும் காணொளி காட்சி இணையதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த காணொளி காட்சியில் “பாத்திமா, மிலாட் ஜஷானியை திருமணம் பண்ணுவதற்கு நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?” என்று மதகுரு கேட்க, “என் பெற்றோரின் அனுமதியுடன், ஆம்.” என பதிலளிக்கிறார்.

மணமகனும் திருமணம் செய்துகொள்கிறேன் என பதில் அளிக்க , அவர்களது குடும்பத்தினர் பாராட்டுவதும், உற்சாகப்படுத்துவதும், புதுமணத் தம்பதிகள் சிரிப்பதும் அவர்கள் கணவன் மனைவியாக மாறுகிறார்கள்.

மேலும் இந்த திருமணம் ஈரான் குடும்பச் சட்டத்தின் 50 வது பிரிவை மீறியது,

இது சட்டபூர்வமான வயதை எட்டாத ஒரு பெண்ணை மணக்கும் மனிதனுக்கு ஆறு மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கிறது

இதனிடையே இந்த திருமணம் ரத்து செய்யப்படுவதாக உள்ளூர் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

மேற்கொண்டு , மணமகன் மற்றும் மதகுரு மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.