December 5, 2025, 10:38 PM
26.6 C
Chennai

நாளை தவறவிடாதீர்கள்! உங்களை குபேரனாக மாற்றக் கூடிய முகூர்த்தம்!

maithra mukurtham 1 - 2025

நாளை உங்களை குபேரனாக மாற்ற கூடிய மைத்ர் முகூர்த்தம்

17.9.2019 செவ்வாய் இரவு 8.04 முதல் 10.04 வரை;

மைத்ர முகூர்த்தம்…..

(ஜோதிட சாஸ்திரத்தில் நம்முடைய அனைத்து கடன்களும் தீர , நம்மை மாபெரும் குபேரனாக மாற்ற கூடிய அபூர்வ நேரத்தை மைத்ர முகூர்த்தம் என கூறுவர். அதை பற்றி என்னுடைய திருமந்திர வகுப்பில் பகிர்ந்து கொண்ட அபூர்வ குபேர ரகசியத்தை இன்று விரிவாக பகிர்கிறேன். அவசியம் அனைவரும் படித்து அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்….)

உலகில் பிறந்த ஒவ்வொருவரும் அவரவர் கர்மவினைகளை அனுபவிக்கவே பிறந்திருக்கின்றோம்; இதில் இருந்து மீள்வதற்கும் வழிமுறைகள் இருக்கத்தான் செய்கின்றன; நமது முன்னோர்களாகிய பித்ருக்கள் இங்கே வசிக்கும் போது அவர்கள் செய்த கருமவினைகளில் 8 இல் ஒரு பங்கை மட்டும் தான் நாம் அனுபவிக்கின்றோம்;மீதி அனைத்தும் நமது கடந்த ஐந்து முற்பிறவிகளில் செய்தவைகளைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்;

கடன் அல்லது நோய் அல்லது எதிரி அல்லது துயரங்கள் அல்லது மன உளைச்சல் என்று அனைத்தும் அல்லது ஏதாவது ஒன்று இரண்டை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்; கடன் என்பதும் கர்மவினையே!

இந்தக் காலத்தில் கடன் இல்லாத மனிதரே இல்லை எனலாம். கொஞ்சம் கொஞ்சம் என்று ஆரம்பிக்கும் இந்த பழக்கம் கடைசியில் ஒரு மனிதரின் ஒட்டு மொத்த நிம்மதியை குலைத்து , சமயங்களில் குடும்பத்தை பிரித்து.. ஏன் ஒரு சிலரின் உயிரையே எடுத்து இருக்கிறது… ஒரு சிலரது அனுபவத்தில், சில கடன்கள் எத்தனை பிரயாசைப் பட்டும் அடைவது இல்லை. அந்த மாதிரி தீராத கடன்களுக்கு ஜோதிடம் கூறும் வழி தான் இது…

பெருங்கடன் தீர்ந்திட இன்னும் ஒரு ரகசியத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
நமக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட 24 மணிநேரங்களில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில்,கடனில் ஒரு சிறு தொகையைத் தனியே எடுத்து வைத்தால், அதிசயமாகக் கடன் தீர்கிறது.

மனிதனை வாட்டி எடுக்கின்ற கடன் தொல்லையைத் தீர்க்க மைத்ர முகூர்த்தம் என்ற ஒன்று ஜோதிடத்தில் இருக்கிறது.ஒரு தமிழ் மாதத்தில் அதிகபட்சமாக மூன்று நாட்களுக்கு வரும்.அந்த மூன்று நாட்களில் ஒவ்வொரு நாளும் அதிகபட்சமாக இரண்டு மணிநேரம் வரும்.இந்த நேரத்தைப் பயன்படுத்தி,நமது கடன் எத்தனை கோடி ரூபாய்களாக இருந்தாலும்,அதை முழுமையாக அடைத்துவிட முடியும்.

வாங்கிய கடனில் சிறு தொகையை, கடன் கொடுத்தவர் கணக்கில் போட, விரைவில் கடன் முற்றிலுமாக அடைந்து விடும். மூழ்கடிக்கக்கூடிய கடன் வெள்ளத்தையும் வற்றச் செய்யும்.

செவ்வாய்க்கிழமையும் அசுவனி நட்சத்திரமும் சேருகின்ற நாளில் மேஷ லக்கினம் அமைந்துள்ள நேரம் மைத்ர முகூர்த்தம் எனப்படும். செவ்வாய்க்கிழமையும், அனுஷ நட்சத்திரமும் சேருகின்ற நாளில் விருச்சிக லக்கினம் அமைந்துள்ள நேரமும் மைத்ர முகூர்த்தமாகின்றது.

மேற்படி காலங்களில் லக்கினமும் நட்சத்திரமும் அமைந்து செவ்வாய்க்கிழமை அமையாது போனாலும் 75 % பலன்களை பெறலாம்.

செவ்வாய்க்கிழமை அமைந்தால் நிச்சயமாக 100 % பலன்களை பெறுவது திண்ணம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள மைத்ர முகூர்த்த நேரம் ஒன்றில் வாங்கிய கடனில் அசலில் ஒரு சிறு பகுதியை திருப்பித் தர வேண்டும்.அப்படி ஒரே ஒரு முறை திருப்பித் தந்தாலே,அதன்பிறகு,அந்தக் கடன் அடியோடு,முழுமையாக தீர்ந்துவிடும் என்பது அனுபவ உண்மை.

இந்தியாவில் தென் மாநிலங்கள் மற்றும் இலங்கை,மாலத்தீவு இவைகளுக்கு மட்டும் தான் பொருந்தும்;

உங்கள் கடன்களைத் தீர்க்க உதவும் மைத்ர முகூர்த்தம் நாட்கள் 2019 – 2020


இந்த விகாரி வருடத்தின் வரும் அடுத்த மைத்ர முகூர்த்த நாட்கள்:

17.9.2019 செவ்வாய் இரவு 8.04 முதல் 10.04 வரை;

3.10.2019 வியாழன் காலை 9 முதல் 11 வரை;

14.10.2019 திங்கள் மாலை 6.16 முதல் இரவு 8.16 வரை;

30.10.2019 புதன் காலை 8.48 முதல் 10.48 வரை;

9.11.2019 சனி காலை 6.04 முதல் 6.36 வரை;

மாலை 4.36 முதல் 6.36 வரை;

காலை & இரவு 10.36 முதல் 12.36 வரை;

11.11.2019 திங்கள் மாலை 4.28 முதல் 6.28 வரை;

27.11.2019 புதன் காலை 6.51 முதல் 8.51 வரை;

8.12.2019 ஞாயிறு மதியம் 2.47 முதல் மாலை 4.47 வரை;

24.12.2019 செவ்வாய் காலை 4.40 முதல் 6.40 வரை;

4.1.2020 சனி மதியம் 1.10 முதல் 3.10 வரை;

1.2.2020 சனி காலை 11.52 முதல் மதியம் 1.52 வரை;

16.2.2020 ஞாயிறு இரவு 12.08 முதல் நள்ளிரவு 2.08 வரை;

28.2.2020 வெள்ளி காலை 9 முதல் 11 வரை;

8.3.2020 சனி காலை & இரவு 8.53 முதல் 10.53 வரை;
மதியம் & நள்ளிரவு 2.53 முதல் 4.53 வரை;

14.3.2020 வெள்ளி இரவு 10.04 முதல் 12.04 வரை;

21.3.2020 சனி காலை & இரவு 8.39 முதல் 10.39 வரை;
மதியம் & நள்ளிரவு 2.39 முதல் 4.39 வரை;

26.3.2020 வியாழன் காலை 6.52 முதல் 8.52 வரை;

27.3.2020 வெள்ளி காலை 6.56 முதல் 8.56 வரை;

11.4.2020 சனி இரவு 8.12 முதல் 10.12 வரை;

இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் நேரத்தின் மையபாகத்தை பயன்படுத்துவது நன்று;

பெரிய அளவு கடனை அடைக்க விரும்புவோர்,இந்த நேரங்களை தொடர்ந்து பயன்படுத்துவது விரைவில் கடன் தீர வழிவகுக்கும்.

குறையில்லாதவர் என்று எவரும் இல்லை;அந்தக் குறைகளை மட்டும் பார்த்தால் நம்மால் அனைவரோடும் அனுசரித்து வாழ இயலாது;

கடன் தொல்லையால் மீளமுடியாமல் தவிக்கும் அன்பர்கள், இந்த மைத்ர முகூர்த்த நேரத்தைக் கணித்து, அந்தத் தருணத்தில் கடனில் சிறு பகுதியையாவது அடைக்க முயற்சிப்பது சிறப்பு. கடன் கொடுத்தவர், இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக வாங்க மறுக்கிறார் எனில், சிறு சிறு தொகையாக நமது வங்கிக் கணக்கில் சேர்த்து சேமித்து, பிறகு மொத்தமாக அடைக்கலாம். அப்படி, மாதந்தோறும் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் நேரமானது மைத்ர முகூர்த்தமாக இருக்கும்பட்சத்தில் வெகு சீக்கிரத்தில் பணம் சேர்ந்து, மொத்த கடனும் அடைபடும்.

ராசிப்படி கடன் தொல்லை தீரவைக்கும் மைத்ர முகூர்த்தம்
மேஷம்: வியாழன் காலை 9 – 10½ ;
ரிஷபம்: வெள்ளி காலை 8 – 10½;
மிதுனம்: புதன் காலை 7½ – 9;
கடகம்: திங்கள் மாலை 4½ – 6;
சிம்மம்: ஞாயிறு காலை 11 – 12½;
கன்னி: வெள்ளி மாலை 5 – 6½;
துலாம்: சனி காலை 10½ – 12½;
விருச்சிகம்: வியாழன் மாலை 3 – 5½;
தனுசு: செவ்வாய் 10½ – 12½;
மகரம்: சனி காலை 9 – 10½;
கும்பம்: திங்கள் மாலை 3 – 5½;
மீனம்: வியாழன் காலை 9 – 10½ வரை.

மைத்ர நேரம் என்பதற்கு நண்பன்போல கடன் அடைய உதவும் நல்ல நேரம் என்று பொருள். பயன்படுத்திப் பலன் பெறலாம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories