விரைவில் மனித உடல் ஸ்கேனர்! அகர்தலா விமான நிலையம்!

Published:

akardhala 1 - 2026

அகர்தலாவில் உள்ள மகாராஜ் வீர் விக்ரம் விமான நிலையத்தில் இந்தியாவின் முதல் மனித உடல் ஸ்கேனர் உள்ளிட்ட பெரும்பாலான நவீன வசதிகள் வரவிருக்கிறது.

ஒருங்கிணைந்த முனைய கட்டடத்தில் நிறுவப்படும், இது அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று விமான நிலைய நிர்வாக இயக்குனர் தெரிவித்தார்.

இந்திய விமான நிலைய ஆணையத்தின் (ஏஏஐ), வடகிழக்கு செயல் தலைவர் சஞ்சீவ் ஜிண்டால், நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்த பின்னர் பேசியதாவது, அனைத்தையும் முடித்து, சேவைகளை நிறுவிய பின், அதை செயல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

Airportakarthala - 2026

அந்த வகையில், “இந்த விமான நிலையம் நாட்டின் முதல் விமான நிலையமாக இருக்கும், இது விமான நிலையத்திற்குள் நுழையும் ஒவ்வொரு பயணிகளையும் முழு மனித உடல் ஸ்கேன் செய்யும் வகையில் அமையும் என்று தெரிவித்தார்.

அகர்தலாவின் புதிய முனைய கட்டடம் 1200 பேரை ஒரே நேரத்தில் சந்திக்கும் வகையிலும், அனைத்து நவீன வசதிகளுடன் ரூ.4338 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது என்று ஜிண்டால் கூறினார்.

ALSO READ:  காணாமல் போன நயா பைசா கணக்கு!

Related articles

Recent articles

spot_img