
இந்தியாவின் முதல் தனியார் ரயில் சேவையான தேஜஸ் எக்ஸ்பிரஸ், லக்னோ – புதுடில்லி இடையே இயக்கப்பட்டது.
இந்த ரயிலை, முதல்வர் யோகி ஆதித்யநாத் துவக்கி வைத்தார்.
முதல் நாளில் இந்த ரயிலில் 389 பயணிகள் பயணித்தனர். இன்று(அக்.,4) காலை 6.10 மணிக்கு கிளம்பிய இந்த ரயில், நண்பகல் 12.25 மணிக்கு டில்லி ரயில் நிலையத்தை அடைந்தது.

மறுமார்க்கத்தில், டில்லியில் இன்று மாலை 3.35 மணிக்கு கிளம்பி இரவு 10.05 மணிக்கு லக்னோவை வந்து அடையும்.
இந்த ரயில் நாளை(அக்.,5) முதல் வழக்கமாக டில்லியில் இருந்து இயக்கப்பட உள்ளது.
லக்னோவில் இருந்து நாளை மறுநாள் முதல் இயக்கப்படும். செவ்வாய் தவிர்த்து அனைத்து நாட்களிலும் இந்த ரயில் இயக்கப்படும்.
கான்பூர் மற்றும் காசியாபாத் நகரங்களில் மட்டுமே நின்று செல்லும். லக்னோவில் இருந்து டில்லிக்கு 6 மணி நேரம் 15 நிமிடங்களில் சென்றடையும்.



