அதிர்ச்சி… சாமி கும்பிடுற மாதிரி… அனுமன் விக்கிரகத்தை பெயர்த்து எடுத்துட்டுப் போயிட்டானுங்க..!

அடடே... அப்படியா? கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம் திருச்சி லைஃப் ஸ்டைல்
hanuman horz - 2026

குடந்தை அருகே சுவாமி சந்நிதியில் இருந்து ஆஞ்சநேயர் சிலையை காரில் வந்த 5 பேர் கும்பல் திருடிச் சென்றது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரத்தில் தேனுபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு உள்ள துர்க்கை அம்மன் சந்நிதி மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்தக் கோயிலின் மூலவரின் வலது புறத்தில் உள்ள சுவாமி சன்னதி கோஷ்டத்தில் ஒரு அடி உயரமுள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஆஞ்சநேயர் சிலை ஒன்று பாதிக்கப்பட்டிருக்கிறது. நேற்று முன் தினம் விடுமுறை என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்தது.

இரவு 8 மணிக்கு கோவில் அர்ச்சகர் கணேசன் சந்நிதியை சுற்றி வந்தபோது கோஷ்டத்தில் இருந்த ஆஞ்சநேயர் சிலை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கோவில் அதிகாரிகள் அங்கு உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்

hanuman - 2026

அப்போது இரவு 7 மணிக்கு ஒரு இண்டிகா காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் மூலவர் சன்னதி அருகில் வந்து வெகு நேரமாக பயபக்தியுடன் சாமி கும்பிடுவது போல நடித்துக் கொண்டிருந்தார்கள்

அதன்பிறகு 5 பேரில் மூவர் மட்டும் சுவரை மறைத்துக்கொண்டு நின்றிருக்க இருவர் ஆஞ்சநேயர் விக்கிரகத்தை கைகளால் ஆட்டி ஆட்டி பெயர்த்து எடுத்துக்கொண்டு வெளியே எடுத்துச் செல்கின்றனர்

இந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தன இந்த கொள்ளை 30 நிமிடங்கள் நடந் துள்ளது பட்டீஸ்வரர் கோயில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.