
பேய்கள் உள்ளது நிரூபிப்பவர்களுக்கு ரூ.50,000 ரொக்கப்பரிசு – ஒடிசா மாநிலத்தின் கஞ்சாம் கலெக்டர் அறிவிப்பு !!
இந்திய மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் பேய், பிசாசு குறித்த நம்பிக்கைகள் கால காலமாக இருந்து வரும் ஒன்றுதான்.
மேலும் இதை மூடநம்பிக்கைகள் என ஒரு பிரிவினா் கருத்து தெரிவித்து வருகின்றனா்.
இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகளால் பாதிக்கப்படும் மக்களை அதிலிருந்து மீட்க ஒடிசாவில் உள்ள கஞ்சாம் மாவட்ட ஆட்சியாளர்,” அநேக மக்கள் மாந்திரீகம், பில்லி சூனியம், ஆவிகள் போன்றவற்றில் நம்பிக்கை உடையவர்களாக உள்ளனர்.
உடல்நலக்குறைவு ஏற்பட்டால், மருத்துவமனைக்கு செல்லாமல் மந்திரவாதிகளிடம் செல்கின்றனர்.
அவர்களும் மக்களிடம் பணம் பறிக்கின்றனர்
. இது மூடநம்பிக்கையாகும். என்னைக் கேட்டால் ஆவிகள், பேய்கள் என எதுவும் இல்லை.
மூட நம்பிக்கைகள் தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் நடைபெற்றாலும், இன்னும் பல கிராமங்களில் மந்திரவாதிகளை நம்பி மக்கள் ஏமாறுகின்றனர்.
எனவே ஆவிகள், பேய்கள் உள்ளன என நிரூபிப்பவர்களுக்கு ரூ.50,000 ரொக்கப்பரிசு அளிக்கப்படும் ” என்று தெரிவித்துள்ளார்.



