தௌஹித் ஜமாத் உறுப்பினர்கள் பயிற்சி செய்த வீட்டில் சுரங்கம்! போலிஸ் சோதனை!

அடடே... அப்படியா? இந்தியா பொது தகவல்கள்
surangam - 2026

புத்தளம் – வனாத்தவில்லுவில் அமைந்துள்ள லெக்டோ தோட்டம் அரச பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

தேசிய தௌஹித் ஜமாத் உறுப்பினர்கள் முன்னர் பயிற்சி பெற்றதாக கூறப்படும் வீடு ஒன்றில் சுரங்கம் தோண்டப்பட்டதாக தெரிவித்து காவலர்கள் இந்த விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

அரச பகுப்பாய்வு திணைக்களத்தின் மூத்த உதவியாளர் ருக்ஷான் பெர்ணான்டோ மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் உயர் அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர்.

புத்தளம் – வனாத்தவில்லுவில் அமைந்துள்ள இந்த தோட்டத்தில் இருந்து கடந்த ஜனவரி மாதம் 16ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் பாரிய வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டன.

மாவனெல்லையில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள தரப்பினரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களால் இந்த வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.