
அரியானாவின் சிர்சா பகுதியை சேர்ந்த ஜானக்ராஜ் , அக்.,19 அன்று அவர் மனைவியும், மருமகளும் தங்களின் தங்க நகைகளை கழற்றி அருகில் ஒரு பாத்திரத்தில் வைத்து விட்டு, காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தனர். அப்போது காய்கறி கழிவுகளுடன் சேர்த்து தவறுதலாக நகைகளையும் குப்பையில் போட்டுள்ளனர்.
நகையை அங்குமிங்கும் தேடி கடைசியில் குப்பைத் தொட்டியில் கொட்டப்பட்ட குப்பையில் இருந்த காய்கறி கழிவுகளுடன் சேர்த்து மாடு ஒன்று, நகைகளையும் விழுங்கியதை சிசிடிவி கேமிரா மூலம் கண்டறிந்தனர்
உடனடியாக அந்த மாட்டை கண்டுபிடித்து கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். மாட்டை பரிசோதித்த டாக்டர், கழிவுகளின் வழியாக நகைகளை மாடு வெளியேற்றும் என தெரிவித்துள்ளார். இதனால் வீட்டிற்கு அருகில் உள்ள இடத்தில் மாட்டை கட்டி வைத்து, பராமரித்து வருகிறார்கள்.
இது குறித்து அவர் கூறுகையில் கழிவுகள் வழியாக எங்களின் நகைகளை வெளியேற்றும் என காத்திருக்கிறோம். ஒருவேளை அப்படி வெளியேற்றாவிட்டால் இந்த மாட்டை நாங்கள் கோசாலையில் ஒப்படைத்து விடுவோம் என்கிறார்.