சமையல் எரிவாயு விலை உயர்ந்தது!

Published:

gas 1 1 - 2026

மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 76 ரூபாய் உயர்ந்து, 696 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை அடிப்படையில் இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாதத்துக்கு ஒருமுறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அவ்வகையில் இந்த மாதத்துக்கான சமையல் எரிவாயு விலை நேற்று அறிவிக்கப்பட்டது.

அதில், கடந்த மாதத்தைக் காட்டிலும் கணிசமாக விலை உயர்ந்துள்ளது. சென்னையில் கடந்த மாதம் மானியமில்லா சிலிண்டரின் விலை 620 ரூபாயாக இருந்தது. இந்த மாதம் 76 ரூபாய் உயர்ந்து, 696 ரூபாக்கு விற்பனை செய்யப்படுகிறது.

டெல்லியில் ரூ.681.50, கொல்கத்தாவில் ரூ.706, மும்பையில் ரூ.651 என்ற அளவில் மானியமில்லா சிலிண்டரின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தொடர்ந்து மூன்றாவது மாதமாக மானியமில்லா எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன.

இதேபோல் சென்னையில் வர்த்தகத்துக்கு பயன்படுத்தப்படும் 19 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை கடந்த மாதம் ரூ.1199-ஆக இருந்தது. தற்போது ரூ.120 அதிகரித்து, ரூ.1319 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

Related articles

Recent articles

spot_img