
டி20 ஆட்டங்களில் வெற்றிகரமாக அதிக முறை இலக்கை சேஸ் செய்து விரட்டியதில் புதிய சாதனை படைத்துள்ளது இந்திய அணி.
ராஜ்கோட்டில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா சிக்ஸர்கள், பவுண்டரிகளாக விளாசி 85 ரன்களை எடுத்தார்.
முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், இரண்டாவது போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் ஆடியது இந்தியா. இதில், முதலில் ஆடிய வங்கதேசம் 153/6 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 154/2 ரன்களை எடுத்து வென்றது.
இந்த வெற்றி, டி20 ஆட்டத்தில் இலக்கை விரட்டி சேஸ் செய்த போது, இந்திய அணி பெற்ற 41-அது வெற்றி!
இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி டி20 போட்டிகளில் இலக்கை விரட்டிய போது பெற்ற 40 வெற்றிகளைக் கடந்து இந்திய அணி சாதித்துள்ளது. இதன் மூலம் சேஸ் செய்து வெற்றி பெற்ற அணிகள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
டி20: இலக்கை விரட்டியபோது அதிக வெற்றிகள்:
இந்தியா 41 வெற்றி (61 ஆட்டங்கள்)
ஆஸ்திரேலியா 40 வெற்றி (69)
பாகிஸ்தான் 36 வெற்றி (67)
தென் ஆப்பிரிக்கா 28 வெற்றி (48)
இங்கிலாந்து 28 வெற்றி (59)
High-fives all round as India restrict Bangladesh to 153/6 in the second T20I.
— ICC (@ICC) November 7, 2019
Will India’s batsmen see them to victory today?#INDvBAN ➡️ https://t.co/VUXjxhtXaN pic.twitter.com/bBSg1ZEvjD
???? T20I appearances
— ICC (@ICC) November 7, 2019
1️⃣8️⃣ T20I half-centuries
Rohit Sharma is flying for India today ???? pic.twitter.com/HJjunk8oVb
A Rohit masterclass in Rajkot ????
— ICC (@ICC) November 7, 2019
He’s currently 81* from just 38 balls ???? pic.twitter.com/3Lf3mzxe4w