
இன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் நகரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக லோக் அதிகார் மஞ்ச், பாஜக , ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் இன்று பேரணியாக சென்றன.
பேரணியில் தங்கள் கைகளில் மூவர்ண கொடி மற்றும் தங்களுடைய அமைப்புகளின் கொடிகளை ஏந்தியும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக சென்றனர்.
நாட்டின் பல பகுதிகளிலும் வாழும் முஸ்லீம்கள் மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.
தலைநகர் டெல்லியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தீவிர போராட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர்.
பல இடங்களில் போராட்டங்கள் கலவரமாக மாறினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வாகனங்களுக்கு தீ வைத்தும், போலீசார் மீது கற்களை வீசியும் வன்முறையில் ஈடுபட்டனர்.
இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை வீசியும் போராட்டத்தை கலைத்தனர்.
இந்நிலையில் நேற்று அசாமில் அமைதியான முறையில் சில இடங்களில் ஊர்வலங்கள் நடைபெற்றன.
மேற்கு வங்காளத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பாஜக சார்பில் ஊர்வலங்கள் நடத்தப்பட்டன.
இதேபோன்று இன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் நகரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக லோக் அதிகார் மஞ்ச், பாஜக , ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் இன்று பேரணியாக சென்றன.
பேரணியாக சென்றவர்கள் தங்கள் கைகளில் மூவர்ண கொடி மற்றும் தங்களுடைய அமைப்புகளின் கொடிகளை ஏந்தியும் , ஆதரவு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கொண்டும் , கோஷங்கள் எழுப்பியபடியும் சென்றனர்.



