
திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தியாதல் ஆத்திரத்தில் அந்த பெண்ணை கல்குவாரியில் தள்ளிவிட்டு கொலை செய்த ஆட்டோ டிரைவர்.
வேலூர் அடுத்து அரியூர் குப்பம் என்ற பகுதியில் 17 வயது இளம்பெண் பிளஸ் டூ முடித்து விட்டு அங்குள்ள சிஎம்சி உணவகத்தில் அவர் பகுதிநேர வேலை பார்த்து வந்துள்ளார்.
வழக்கம் போல் அவரது பையில் பள்ளிச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் ஆகியவற்றையும் கொண்டு வேலைக்கு சென்ற பெண் பிற்பகல் வீட்டுக்கு செல்வதாக உணவகத்திலிருந்து வெளியே வந்துள்ளார்.
அதன் பிறகு அந்த பெண் கல்குவாரியில் சடலமாக மீட்கப்பட்டு, அந்த இடத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் அவரது செல்போனை போலீசார் கண்டெடுத்தனர்.

இளம்பெண்ணின் செல்போனில் கடைசியாகப் பேசியது, வேலூர் ரங்காபுரம் மூலக்கொல்லையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் 23 வயதான பிரகாஷ் என்பவர் என தெரியவந்தது.
இந்நிலையில், அவரைப் பிடித்து விசாரித்தபோது நான்தான் இளம்பெண்ணை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
பின்னர் ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷுடன் கடந்த 2 மாதங்களாக பழகி காதலித்து வந்துள்ள அந்த பெண் தன்னைத் திருமணம் செய்யும்படியும் பிரகாஷை வலியுறுத்தி வந்துள்ளார்.
ஆனால் அந்த பெண்ணுக்கு பல நபர்களுடன் பழக்கம் இருப்பதை பிரகாஷ் அறிந்துகொண்டு ஒதிங்கியுள்ளார்.

சம்பவம் நடந்த அன்று வேலுார் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தனது ஆட்டோவில் பெருமுகை கல்குவாரிக்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு பேசிக் கொண்டிருந்த போது தன்னை திருமணம் செயும்படி வலியுறுத்தியதாகவும், அதனை பிரகாஷ் ஏற்க மறுத்ததால் கடும் வாக்குவாதம் நடந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ், அந்த பெண்ணை மேலிருந்து கல்குவாரியில் தள்ளி விட்டுள்ளார்,
கீழே விழுந்த வேகத்திலேயே அந்த பெண் உயிரிழந்துள்ளார்.

பிறகு பிரகாஷ் அவரது நண்பர் நவீனை அழைத்து நடந்ததைத் கூறியுள்ளார்
பின்னர் அவர் அளித்த ஆலோசனையின்படி, கல்க்குவாரி அருகிலேயே தனது உடைகளை எரித்தவிட்டு குளித்து விட்டு வேறொரு உடையில் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.
இந்தக் கொலை வழக்கில் பிரகாஷுடன், குற்றத்தை மறைத்ததாக அவரது நண்பர் நவீனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இளம்பெண் கொண்டு சென்ற பையை மூலக்கொல்லையில் இருந்து போலீசார் கண்டெடுத்தனர்.
2 மாதக் காதல் இறுதியில் கொலையில் முடிந்த சம்பவம், வேலுாரில் அதிர்ச்சியை தந்தது.



